Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 13
பொதுவாக கொடைக்கானலின் மலைப்பாதைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் ஒருவழிப் பாதை ஆக்கப்படும்..
உள்ளூர்வாசிகளுக்கு அந்த காலம் எப்போது என்பது தெரியும். ஆனால் புதிதாக வருவோருக்கு எச்சரிக்க, பலகைகளும், அவர்களுக்கு அறிவுறுத்த காவலுக்கு ஆட்களும் இருப்பார்கள்..
நித்யாவின் ஒன்பதாம் மாத பரிசோதனைக்கு மலையில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த காரில் இருந்த வித்யா,
"ஹைய்யா!.. அக்கா!!.. எனக்கு ரொம்ப எக்சைட்டிங்ஆ இருக்கு!.. இன்னும் கொஞ்ச நாள்ல ரோஜாப்பூ மாதிரி ஒரு குட்டிப் பையன் வந்துடுவான்!!.." என்று ஆசையில் கண்கள் விரிய சொல்லிக் கொண்டிருக்க..
"அதென்ன பையன்!?.. எனக்கு பாப்பா தான் வேணும்!.. நித்திம்மா உனக்கும் பொண்ணு தானே வேணும்!.." என்று தனது தரப்புக்கு வலுவேற்ற ஷக்தி தன் மனைவியிடம் கேட்டான்..
"எனக்கு பையன் தான் வேணும்!.." என்று அடமாக சொன்ன வித்யா, பின்னர் மெதுவாக,
"பொண்ணு எல்லாம் வேண்டாம்!.. இந்த பொல்லாத உலகத்துல சிக்கி ரொம்ப கஷ்டப்படுவா!.." என்று தன் நிலையை மனதில் கொண்டு வேதனையுடன் சொன்னாள்..
அவளது மனதை என்ன தான் இயல்புக்கு கொண்டு வந்தாலும் சில வேளைகளில் அந்த சம்பவத்தின் தாக்கம் இம்மாதிரி அவளது வார்த்தைகளில் வெளிப்பட்டு விடும்..
அவளை அதனுள் மூழ்க விடாமல், உடனே விளையாட்டாக பேசி அதனை மாற்றி வெளி கொணர்ந்தனர் தம்பதியினர்.. அது போலவே இப்போதும் நித்யா,
"பார்த்தீங்களா!?.. எப்படி சொல்றா பாருங்க!.. நாம இவளை கஷ்டப்படுத்துறோமாம்!.." என்று கணவனிடம் கூற,
"அதானே!.. ஆசையா கேட்குறப்ப எல்லாம் வாங்கிக் கொடுத்த ஐஸ்க்ரீம், பிரியாணினு, நல்லா சாப்பிட்டு குந்தாணி மாதிரி ஆகிட்டு வசனத்தை பாரேன்!.." என்று மனைவியின் வழியிலேயே பேசினான்..
"எதேஏஏ!!.. குந்தாணி யா!!!.. இருங்க என் மகன் வரட்டும்.. உங்கள ஒரு வழி பண்ண சொல்றேன்!.."
"டைய்ப்பர் மாத்த விட்டே உங்கள பழி வாங்க போறான் பாருங்க அத்திம்பேர்!.." என்று அவனை பழி வாங்கும் விதத்தை அவள் கூறியதில், கணவனும், மனைவியும் ஒரு சேர நகைத்தனர்..
ஒரு வழிப்பாதை தானே என்று சற்று இலகுவாக இறக்கத்தில் ஷக்தி ஓட்டி வந்த அவர்களது கார், அந்த திருப்பத்தில், வளைக்கும் போது,
எச்சரிக்கை பலகையை மரக்கிளை மறைத்ததாலும், காவல் அதிகாரி இல்லாமல் போனதாலும் தெரியாமல், அந்த பாதையில் எதிர்த் திசையில் ஏறி வந்து கொண்டிருந்த காரின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது..
காரிலிருந்த வித்யா, எதிரே வந்த வாகனத்தை கண்டு அதிர்ச்சியான அந்த நொடிகளில் அனைத்தும் முடிந்திருக்க..மீண்டும் அவள் கண் விழித்த போது மருத்துவமனையில் இருந்தாள்..
***************
கொடும் வெயிலின் நடுவே, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணற்பரப்பு மட்டுமே தெரிய.. நா வறண்டு நெஞ்சம் வரை காய்ந்து போக, தண்ணீருக்காக தவித்த அவள்..
சற்று தொலைவில் தெரிந்த நீரை கண்டு சிரமத்துடன் அங்கே செல்ல.. அவளுக்கு கைகளில் எதுவும் அகப்படாமல் தாகத்தால் மாண்டு கொண்டிருக்கும் போது..
நெஞ்சம் மேலேறி இறங்க, மூச்சுக்கு திணறிக் கொண்டிருந்த அந்த உயிர் போகும் தருணத்தில்..
"சின்ன குட்டி!!..அம்மாடி திவ்யா!!.. கண் விழிச்சு பாரு டா கண்ணம்மா!.." என்று அவளது கன்னங்களை தட்டி எழுப்பிய குரலில்,
மெதுவாக கண் விழித்துப் பார்த்த திவ்யா, தனது அருகில் நின்ற பங்கஜம் மாமியை கண்டு குழம்பினாள்..
பின்பு, மெதுவாக நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் அவளது நினைவில் ஓடியது..
எதிரே வந்த கார் இவர்களது வண்டியில் இடித்ததும், முன்நோக்கி சென்ற ஷக்தியின் தலை காரின் ஸ்ட்ரீயரிங் வீலில் இடிக்க..
அவள் அருகே இருந்த நித்யா முன்னிருக்கையில் எகிறி மோத, இவளது தலையும் ஜன்னலில் இடிக்கும் முன் தமக்கை,
அவளை தன்னை நோக்கி இழுத்து கண்ணாடியில் இடிக்காமல் காப்பாற்ற, மெதுமெதுவாக கண்களை மூடி மயக்கத்தில் ஆழ்ந்தாள் வித்யா..
நடந்த கோரம் நினைவில் வந்ததும் வேகமாக கண் விழித்த வித்யா, அருகிலிருந்த மாமியிடம், மிகவும் சிரமத்துடன், "அக்..கா!!.... எ...ன்..னா..ச்சு!.." என்று நெஞ்சம் பதற வினவினாள்..
வாயைப் பொத்திக் கொண்டு கண்ணீரை கட்டுப்படுத்திய மாமி, 'இல்லை' எனும் விதமாக தலையாட்ட.. அதிர்ந்த வித்யா, "பாப்..பா!!.... அத்..திம்..பே..ர்!.." என்று சிறு நம்பிக்கையுடன் கேட்க..
பங்கஜம் மாமி இப்போது நன்றாகவே அழ தொடங்கி, "பகவானே!!..நோக்கு கருணையே இல்லையா!!?.." என்று கூறி அவளை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தார்..
இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்த வித்யா, மீண்டும் கண்களை மூடி மயக்கத்தில் ஆழ்ந்தாள்..
அவளது ஆழ்ந்த மயக்கம் கண்டு பயந்த மாமியும், தாரிணியும், மருத்துவரை அணுக,
அதிர்ச்சியின் மயக்கம் தான் ஆனால் இதுவே தொடர்ந்தால் கோமா க்கு செல்வதற்கு கூட வாய்ப்புண்டு என எச்சரித்தனர்..
பின்பு தம்பதியினர் மற்றும் உலகம் காணா அந்த சிசுவுக்காக கண்ணீர் வடித்த அவர்கள், அவர்களது இறுதி சடங்குகளை எடுத்துச் செய்து முடித்தனர்..
இவளது நிலையை எண்ணி அவர்கள் பீதியில் ஆழ்ந்திருக்க, நான்கு நாட்களுக்கு பின், ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு, மீண்டும் வித்யா கண் விழித்தாள்..
தாரிணியின் மனம் கனத்தாலும் தன் கடமை அழைக்க , ஊருக்கு திரும்பியிருக்க, மாமி மட்டும் மகளது வீட்டில் இருப்பதாக கணவனிடம் உரைத்து விட்டு, வித்யாவுடன் இருந்தார்..
வித்யா கண் விழித்த போது, மாமி தேவையான பொருட்களை வாங்கச் சென்றிருக்க,
மெதுவாக படுக்கையை விட்டு இறங்கி வந்த வித்யா, குழந்தையின் ஓலமிட்ட அழுகுரல் கேட்ட திசை நோக்கி சென்றாள்..
அந்த குழந்தையின் அழுகையை சமாதானப்படுத்த, அந்த செவிலியர் பாடுபட்டுக் கொண்டிருக்க,
அவர்களை நெருங்கி, அந்த குழந்தையை தன் கைகளில் வாங்கியதும் அதன் அழுகை மெதுவாக மட்டுப்பட்டது..
"பாரேன் அதிசயத்தை!!!.. இத்தனை நேரம் என்ன பாடுபடுத்திட்டு இப்ப அமைதி ஆகிடுச்சு!.." என்று அவர் அதிசயிக்க..
"இது யாரோட குழந்தை சிஸ்டர்!?.. ஏன் இப்படி அழுதுட்டு இருக்கா?!.." என்று அவரிடம் வினவினாள் வித்யா..
"அதை ஏன்ம்மா கேட்கறீங்க!?.. இவங்க வந்த கார் கூட தான் உங்க கார் ஆக்சிடென்ட் ஆச்சு!.. இதோட பெத்தவங்க ஸ்பாட் அவுட்!.."
"அவங்க டீடெய்ல் எடுக்கறதுக்கு ஃபோன் டேமேஜ் ஆகிடுச்சு!..போலீஸ்ல சொல்லி அதுல இருந்து ஏதோ நம்பர் க்கு கால் பண்ணி இருக்காங்க.."
"ஆனா இதுவரை யாரும் வரக் காணோம்!.. இன்னிக்கும் வரலைனா எதாவது ஹோம் ல சேர்த்துடுங்க னுட்டாங்க!.." என்று அந்த செவிலியர் கவலையுடன் சொல்ல..
அந்த ஆறு மாத ரோஜா மொட்டை கண்ணிமைக்காமல் பார்த்த வித்யா, "இன்னிக்கும் யாரும் வரலை னா நான் இந்த குழந்தையை கூட்டிட்டு போகட்டா ம்மா!?.." என்றாள்..
"இதுல எனக்கென்ன மா இருக்கு!? எங்கேயோ ஒரு பக்கம் இந்த புள்ள நல்லா இருந்தா சரிதான்!.. ஆனா அதெல்லாம் டாக்டர் கிட்ட கேட்டுக்கோங்க மா!.." என்று விட்டு சென்றார்..
அதன்பின் வித்யா மருத்துவமனையில் இருந்த அந்த நாட்களில், அக்குட்டி மொட்டு அவளிடம் மட்டுமே அமைதி காத்தாள்..
ஷக்தியின் மறைவிற்கு பின், அந்த வீட்டில் தங்குவதற்கு முடியாமலும், அவ்வீட்டில் இருந்தாலும் அவர்கள் நினைவுகளின் அழுத்தம் தாளாமலும்..
மருத்துவரிடம் பேசி அனைத்தும் சரி செய்து விட்டு, அந்த குழந்தையோடு சென்னையில் உள்ள தாரிணியின் வீட்டிற்கு பயணமானாள் வித்யரூபிணி!!..

அவனது பதிலில் 'ஞே' என்று விழித்த இருவரில், முதலில் சுதாரித்த அமுதா,
"முதல்ல நீங்க என்னனு சொல்லுங்க!.. அதை பைல எடுத்துக்கறதா?.. இல்ல பாத்திரத்துல எடுத்துக்கறதா?..னுட்டு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்!.." என்று அவனை கலாய்க்க,
அவளை முறைத்த கார்த்திக், பின் மெதுவாக, "எங்கப்பா ஒரு தீவிர முருக பக்தர்!.." என்றான்..
அதை கேட்ட இருவருக்கும், இப்போது 'இவனது நதிமூலம் ரிஷிமூலம் நமக்கெதற்கு?' என்று புரியாமல் விழித்து ஒருவரையொருவர் பார்த்து விட்டு அவனை நோக்க..
"உங்க லுக்கு புரியுது!.. நான் சொல்ல வர்றதை முழுசா கேளுங்க!.." என்றான் அவன்..
"நாங்க தான் எதுவுமே சொல்லலையே!!?.." என்று அமுதா சொல்ல, அவளது கையை பிடித்து அமைதிப்படுத்திய ரூபிணி,' நீ மேலே சொல்!' என்பது போல் அவனை பார்த்திருந்தாள்..
"அவரோட முருக பக்தி எப்படி னா அவரை மாதிரியே இரண்டு கல்யாணம் கூட கட்டிக்கிட்டாரு!.." அவன் கூறியதைக் கேட்டதும்..
"ஷ்ஷ்ஷப்பா!!!." என்று வாய்விட்டே அமுதா அலுத்துக் கொள்ள, ரூபிணி மட்டும் விடை வேண்டி அமைதி காத்தாள்..
"ஏன் சார் உங்கள்ட்ட கேட்ட கேள்வி என்ன?!.. நீங்க சொல்ற பதில் என்ன?!.. இப்ப உங்கப்பாவோட வீர தீர செயல்கள் பற்றி தெரிஞ்சு நாங்க என்ன பண்ணப் போறோம்!!?.." அமுதா அலுப்புடன் கேட்கவும்..
"நீங்க இப்படி கோபப்பட்டா எனக்கு கோர்வையா சொல்ல வராது!.." என்ற கார்த்திக்கின் பதிலில்,
"எதேய்!!.. கோர்வையா சொல்றதா!!?.. அப்ப ரீல் விட்டுட்டு இருக்கீங்களா?!.." என்று அமுதா படபடக்கவும்..
"பார்த்தீங்களா இப்பவே நம்ப மாட்டீன்றீங்க!!.. அப்றம் பதில் சொன்ன அப்றமும் எப்படி என்னை நம்புவீங்க!!?.." என்று அவன் பிளந்த நியாயத்தில் 'ஷப்பா!..இப்பவே கண்ணை கட்டுதே!..' என்றானது அவர்களுக்கு..
"சார் ஒரு சிம்பிளான கேள்வி 'ஏன் அப்படி சொல்ல சொன்னீங்க?'னு.. இதுக்கு போய் உங்க வரலாறு, பூகோளம் எல்லாமா கேட்டோம்!!?.." அமுதா பொரிய,
அவளை கையமர்த்திய ரூபிணி, 'அப்படி அவன் என்ன தான் காரணம் சொல்ல போகிறான்?! 'என்று அறிய அவனது பேச்சை தொடரும்படி சொன்னாள்..
"நான் எங்க விட்டேன்!!?.." என்று யோசிக்கும் பாவனை செய்துவிட்டு,
"ஹான்!!.. ஞாபகம் வந்துடுச்சு!.. எங்கப்பா முருக பக்தர் னு சொன்னேன் இல்லையா!!.." அவன் மீண்டும் தொடங்க,
அமுதாவின் பொறுமை பறக்க தயாராகி, பேச வாய் திறக்கும் முன், அவளை நிறுத்தினாள் ரூபிணி.. கார்த்திக் தொடர்ந்தான்..
"அதனால எங்க எல்லாருக்கும் முருகனோட பேரையே வைச்சு அவரோட பக்தியின் தீவிரத்தை காட்டிட்டார்!.." என்று சற்று சோகமாக அவன் கூறவும்..
"அதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சார் சம்மந்தம்!!?.." அவனை ஆழமாகப் பார்த்து புரியாமல் ரூபிணி கேட்டாள்.
"இருக்கே ரூபிணி!!.. என்னோட முழுப் பெயர் கார்த்திகைபாலன்!.." அவன் உரைத்ததும்..
'என்னடா இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி இருக்கே இவன் பேசறது!!!..' என்றானது இருவருக்கும்.. ரூபிணி அவனை நம்பாத பார்வை பார்க்க,
"நீங்க வேணும்னா ஆபிஸ் ரெக்கார்ட்ல கூட செக் பண்ணி பார்த்துக்கங்க ரூபிணி!.. நான் பொய் சொல்லல!.." அவசரமான அவன் பதிலில்,
"சார் நீங்க இன்னும் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லல!!..வேற என்னென்னவோ தான் சொல்லிட்டு இருக்கீங்க!.." நினைவூட்டினாள் அமுதா.
"அட!.. அதைத் தான் சொல்லிட்டு இருக்கேன் ங்க.. என்னோட பேர் கொஞ்சம் கேர்ளிஷ்ஆ இருக்கு னு யார்கிட்டவும் முழுசா சொல்ல மாட்டேன்!.." அவன் விளக்கம் இன்னும் நீள,
இவன் எப்போது தான் தனக்கான விடையை சொல்வான் என்று சலிப்புடன், உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தாள் ரூபிணி.
"பாப்பா கிட்ட பொய் சொல்ல கூடாது இல்லைங்களா?!அதனால பாப்பா கேட்டதும் என்னோட முழு பேரான கார்த்திகைபாலன் னு சொல்லிட்டேன்!"
"ஆனா பாருங்க! பாப்பா வாய்ல அது முழுசா வராம காத்திப்பா னு வந்துடுச்சு! அதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்!!." எனக் கூறி பாவமாக முகத்தை வைத்தான் கார்த்திக்.