• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

காலத்தில் செய்த உதவி

New member
Joined
Feb 19, 2026
Messages
2
மும்பையிலிருந்து பெங்களூருக்கு செல்லும்
ஒரு ரயிலில்,
ஒரு இருக்கையின் கீழ் ஒளிந்திருந்த
13 அல்லது 14 வயதுடைய
ஒரு பெண் குழந்தையை
டிக்கெட் பரிசோதகர் கண்டுபிடித்து கேட்டார்:

“டிக்கெட் எங்கே?”

அந்தப் பெண் நடுங்கியபடி சொன்னாள்:
“இல்லை சார்…”

“டிக்கெட் இல்லையென்றால் ரயிலிலிருந்து இறங்க வேண்டும்.
இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும்”
என்று பரிசோதகரின் குரல் கடுமையானது.

அதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த
மற்றொரு பயணியான
உஷா பட்டாச்சார்யா பின்னால் இருந்து கூறினார்:

“இந்தக் குழந்தைக்கான பணத்தை நான் செலுத்துகிறேன்.”

பின்னர் உஷா அந்தப் பெண்ணிடம் கேட்டார்:
“நீ எங்கு செல்ல வேண்டும்?”

பெண்: “மேடம், தெரியவில்லை!”

உஷா:
“அப்படியென்றால் நீ என்னுடன் பெங்களூருக்கு வா.
உன் பெயர் என்ன?”

பெண்: “சித்ரா.”

பெங்களூரை அடைந்ததும்,
உஷா பட்டாச்சார்யா
சித்ராவை ஒரு சன்னத அமைப்பிடம் (NGO) ஒப்படைத்தார்.

அவர்கள் அவளை
ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தார்கள்.

சில காலத்திலேயே
உஷா டெல்லிக்கு இடம்பெயர்ந்ததால்
சித்ராவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மிக அரிதாக
தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்கள்…
சில காலத்திற்குப் பிறகு
அதுவும் நின்றுவிட்டது.

சுமார் இருபது ஆண்டுகள் கழித்து,
உஷா பட்டாச்சார்யாவை
அமெரிக்காவின்
சான் பிரான்சிஸ்கோவிற்கு
ஒரு உரைக்காக அழைத்திருந்தனர்.

உரை முடிந்தபின்,
தங்கியிருந்த ஹோட்டலின்
பில் செலுத்த ரிசெப்ஷனுக்கு சென்றபோது,
அருகில் நின்றிருந்த ஒரு தம்பதியை
ஹோட்டல் ஊழியர்கள் காட்டி கூறினர்:

“மேடம்,
உங்கள் பில்லை அவர்கள் தான் செலுத்திவிட்டார்கள்…
இதோ அந்த பில்லின் நகல்!”

அதிர்ச்சியுடன் உஷா
அவர்களிடம் சென்று கேட்டார்:

“எதற்காக நீங்கள் என் பில்லை செலுத்தினீர்கள்?”

அதற்கு அவர்கள் சொன்ன பதில்:

“மேடம்,
இது மும்பையிலிருந்து பெங்களூருக்கான
ஒரு ரயில் டிக்கெட்டுக்கு முன் ஒன்றுமே இல்லை!”

உஷா:
“நீ… ஏய்… சித்ரா!!!”

ஆமாம்…
அந்த சித்ரா வேறு யாருமல்ல…

இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் தலைவர்
சுதா மூர்த்தி!!!

இன்ஃபோசிஸ் நிறுவனர்
திரு நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி தான்
அந்த சித்ரா என்கிற சுதா மூர்த்தி!

இந்த சம்பவம்,
அவரது
“The Day I Stopped Drinking Milk”
என்ற புத்தகத்தில்
அவர் சொன்ன
உண்மையான வாழ்க்கை நிகழ்வு.

👉 சில நேரங்களில் நாம் வழங்கும் ஒரு சிறிய உதவி,
மற்றொருவரின் முழு வாழ்க்கையையே மாற்றிவிடும்!

அதனால் தான் சொல்வார்கள்:

“மனிதர்கள் எல்லா வீட்டிலும் பிறக்கிறார்கள்;
ஆனால் மனிதத்துவம்
எல்லா மனிதர்களிலும் இருக்காது!”

இன்று சொத்து, பணம், பதவி ஆகியவற்றுக்காக
நண்பர்களையோ,
உடன் பிறந்தவர்களையோ
ஏமாற்றவும்,
துரோகப்படுத்தவும்,
பறித்துக்கொள்ளவும்
பலரும் தயங்குவதில்லை.

தங்களது தவறுகளை மறைக்க
மற்றவர்கள்மீது பழி சுமத்தவும்
ஒரு தயக்கமும் இல்லாமல் இருக்கிறார்கள்.

நமது தெருக்களிலும்
பாதையோரங்களிலும் வாழும் மக்களின்
பசியை தீர்க்க…
அவர்களுக்கு உதவ…
நம்மில் ஒவ்வொருவருக்கும் முடியும்…

ஆனால்
முன்னேறி செயலில் இறங்கும் மனம்தான்
பெரிய குறை!

“அன்னதானம் மகாதானம்!”
பசியின் அழைப்புக்கு
இணையானது வேறெதுவும் இல்லை…

பசியில் துடிக்கும்
மனிதர்களின் கண்ணீரை துடைக்க
நமக்கு வாய்ப்பளிக்கட்டும்…!

👉 ஜாதி, மதம், சமூகம், அரசியல் எதையும் பார்க்காமல்
ஒருவரை ஒருவர்
அன்புடன் நேசித்து, உதவி செய்யுங்கள்… 💕🙏💕

நன்றி...
(படித்ததில் பிடித்தது)

இது உண்மையா🤔🤔🤔
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top