Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
நீலகிரி...
மருது சவுதிக்கு போய் விட்டதை பற்றி பவியிடம் அவளின் தாத்தா சொல்ல, ஹா ஹா ஹா, அந்த கோழைப்பயல் எங்கே வேண்டுமானாலும் போகட்டும், என்றைக்கா இருந்தாலும்,நாய் போல நம்மை தேடி வருவான் தாத்தா.
தேவையில்லாமல் அவனை நினைத்து நான் ஏன் கவலையாகனுமென்றவள், தனது வேலையை பார்க்க சென்றாள்.
போகும் பேத்தியை பார்த்த முதியவர்கள் இருவரும், கடவுளே இவளுக்கு நல்ல புத்தியை கொடுத்து, குடும்பமாக வாழ வைப்பா என்று வேண்டிக்கொண்டனர்.
சீமக்கரை-தேவி வீடு:
அப்பா மதிச்சி உங்களை கல்யாணத்திற்கு கூப்பிட்டுருக்காங்க, போய்ட்டு வாங்களென்றாள் தேவி.
அம்மாடி எந்த முகத்தை வைத்து நான் அங்கு போகனு கண்ணன் கேட்க, மாமா வீட்டில் எல்லாரும் மேன்மை குணம் கொண்டவர்கள்பா.உங்களை காயப்படுத்துவது போல பண்ணமாட்டார்களென்று கதிரின் கல்யாணத்திற்கு தனது அப்பாவை அனுப்பி வைத்தாள்.
உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்வோடு கல்யாண பந்தலுக்கு வந்த கண்ணனை, வழக்கம் போல அன்பாய் பேசி, கவனிக்க, தான் செய்த தவறுக்கு அங்கையே கண்ணன் மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினார்.
வசந்தியும், தேவும் வீட்டை விட்டு சென்றதிலேயே தேவிக்கும், அவள் அப்பாவிற்கும் பேரதிர்ச்சி தான்.
அதற்கு பிறகு வந்த நாட்களில் இருவரிடமும் நல்ல மாற்றம் வந்தது.
வசந்தி எதிர்பார்த்த போலவே தேவியும் மாறத்தொடங்கினாள்....
கல்யாண பந்தல்:
அப்பொழுது,அங்கு வந்த பெருமாள் ஊர்ல இருக்கிற எல்லா பஞ்சாயத்தையு தீர்க்க முடிஞ்சது. ஆனால் உங்க ரெண்டு பேர் பஞ்சாயத்தை ,இத்தனை வருஷம் ஆகியும் என்னால சத்தியமா தீர்க்க முடியலடா.
உலகத்தில் இருக்கிற எல்லா பொண்டாட்டிங்களும் இப்படித்தானென்று வெற்றிவேல் சொல்லவும்,ஓ அப்படியா சங்கதி என்றபடி திலகாவும் அங்கு வந்து நிற்க, ஒரு பேச்சுக்கு சொன்னேன் மா..
இவர்கள் எல்லாரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த நவீனும் என்ன நடக்குது திலோ என்றவாறு அங்கு வந்தான்.
ம்ம் இந்த ஐயாவுக்கு உலகத்தில் இருக்கிற எல்லா பொண்டாட்டியால தான் பிரச்சனை வருகிறதாம்.
தெரிஞ்சி நான், தெரியாமல் இன்னும் எத்தனை பொண்டாட்டினு கேளு கண்ணானு திலகா சொல்ல, அடியே நான் ஏகப்பத்மினி விரதன் டி என்றார் வெற்றிவேல்.
என்னா சொன்னீங்கனு கணவரை திலகா முறைத்து பார்த்தார்.
பாத்தியா அவரு வாயாலே உண்மை வந்துடுச்சு.என் காலேஜ் ப்ரபோசர் பத்மினி மேடத்தை சைட் அடிக்கிறாருனு நான் அப்பவே சொன்னேன்.
எங்கையாவது என் பேச்சை நீ கேட்டியா?
என்ன கண்ணா சொல்லுற என்று திலகா அதிர,மனசை தேத்திக்கோ என்று பீடிகை போட்டவன்,இன்னொரு விஷயம் உனக்கு தெரியாது சொல்றேன் கேட்டுக்க, அந்த பத்மினி மேடமிருக்கும் தொகுதியில தான், இவருக்கு ஓட்டு நிறைய வந்திருக்கு.
நீ மனசு கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தான், இத்தனை வருஷம் உன்கிட்ட இந்த விஷயத்தை நான் சொல்லலைனு வருத்தப்படுவது போல் நவீன் பண்ண,ஓஓஓஓ அப்படியா சங்கதி என்றவாறு கணவரை முறைத்து பார்த்தார்.
அடப்பாவி,எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுக்காமல் விடமாட்ட போல என்றவர், ஏய் திலகா அப்படிலாம் எதுவும் இல்லைடி, என்னை நம்புவென்று மனைவியை வெற்றிவேல் சமாதானப் படுத்திக்கொண்டிருக்க, மாப்பிள்ளை நீங்க நல்லா வருவீங்க என்றனர் லாரன்ஸும், பெருமாளும்.
கல்யாணமென்றால் கலாட்டா இருக்கனும் மாமா என்றவனோ அங்கிருந்து சென்று நண்பர்களுடன் இணைந்து கொண்டான்.
டேய் எனக்கு ஒரு யோசனைடானு பக்கத்திலிருக்கும் பெருமாளிடம் லாரன்ஸ் சொல்ல, சொல்லுடா என்றார்.
கதிருக்கு நல்லபடியாக கல்யாணம் முடிஞ்சிட்டு, அடுத்து இவனுங்க ரெண்டு பேருக்கும்தானென்று வேலுவையும், ஜானையும் காட்டியவர், வேலுக்கு செல்வினு முன்னவே முடிவானது தான். இவனுக்கு அல்லிய பார்க்கலானு தோனுதுடா.
ம்ம் நல்ல யோசனை தான்.மீண்டும் ஒரு முத்து, வேதா இந்த வீட்டில் உருவாகக்கூடாதுடானு பெருமாள் சொல்ல,நீ சொல்றது சரிதான், வாயேன் கையோடே இதைப்பற்றி மச்சான்கிட்டயும், தங்கச்சிகிட்டயும் பேசிடலாமென்றார் லாரன்ஸ்.
சரி வா என்றவாறு பெருமாளும் லாரன்ஸும், சற்று தள்ளி செல்வத்திடம் பேசிக்கொண்டிருந்த அன்புவிடம் வந்தனர்.
இருவரையும் பார்த்த அன்புவிடம், ஒரு விஷயமா பேசனுமென்று லாரன்ஸ் சொல்ல,சொல்லுடா என்றார்.
ஜானுக்கு அல்லிய பொண்ணு கேட்குறேனென்கவும்,ஓஓ என்றபடி திரும்பி பார்க்க, அங்கே பார்வதி பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
அண்ணி என்று பார்வதியை கூப்பிட, அன்புவின் குரலைக் கேட்டு அங்கு வந்தவரோ சொல்லுங்க கொழுந்தனாரே என்க,உங்க தங்கச்சிய கொஞ்சம் கூப்பிட்டு வாங்கண்ணி.
அதேபோல் சிறிது நிமிடத்தில் பார்வதியோடு அங்கு வந்த கவிதா, என்னங்கனு கணவரிடம் கேட்க,உன் அண்ணன் மகன் ஜானுக்கு அல்லிய பொண்ணு கேக்குறாங்களென்க,ஒரு நொடி திகைத்தவர், ரெண்டு பேருக்கும் புடிச்சிருந்தா தாராளமா பண்ணி வைக்கலாங்களென்றார்.
நல்லதுமா என்ற லாரன்ஸ்,எதுக்கும் அல்லிய முதல்ல கேட்டுக்கலாமா என்க, போய் அல்லியை கூப்பிட்டுவா கவிதானு அன்பு சொல்லவும், ஸ்டேஜில் தாமரைக்கு பக்கத்தில் நின்றிருந்தவளை கூப்பிட்டு வந்தார்.
அம்மாடி மாமன் வீட்ல ஜானுக்கு உன்னை பொண்ணு கேட்குறாங்க, நீ என்ன சொல்லுறனு அல்லியிடம் செல்வம் கேட்க,இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது, அவள் முகத்தில் தெரிந்த அதிர்விலே மற்றவர்களுக்கு புரிந்தது.
எதா இருந்தாலும் சொல்லு சின்ன குட்டி, யாரும் உன்னை தப்பா நினைக்கலைனு பார்வதி சொல்ல, உங்க எல்லாருக்கும் சம்மதமென்றால், மாமாவை நான் கட்டிக்கிறேன்.
ஆனால் என்னோட படிப்பென்று அல்லி இழுக்க,நீ ஆசைப்பட்டதை படிடா. கல்யாணம் இப்போயில்லைனு லாரன்ஸ் சொல்ல, சரிங்க மாமா என்றவள், முதல்ல மாமாக்கு இதில் விருப்பமானு கேளுங்க?.
வெளிநாட்டுல படிச்சவரு, அவங்க விருப்பமும் தெரியனுமே என்கவும், அல்லி சொல்றது வாஸ்தவமென்று செல்வமும் சொன்னார்.
அதையும் கையோடு கேட்கலாமென்ற பெருமாள்,ஜானு, எலே ஜானுனு சத்தமாக கூப்பிட, அங்கு வந்தவனோ என்ன இங்கு ஒரு வட்டமாநாடு நடக்குதென்றான்.
கண்ணா, உனக்கு பொண்ணு பார்த்திருக்கோமென்று பார்வதி சொல்ல,என்னாஆஆ என்று அதிர்ந்தவன், பின்னர் தனது தந்தையின் முகத்தை பார்க்க,ஒருவித ஆர்வத்தோடு லாரன்ஸ் இருப்பது தெரிந்தது.
சரியத்தை, எந்த கழுதையை காட்டியாவது கட்டுடானு சொல்லு, உடனே நான் தாலி கட்டுறேனென்று ஜான் சொல்ல,யோவ் வளர்ந்த மாடு, யாரை பார்த்து கழுதைனு சொல்லுறீங்க.
வளரத்தெரியாம பனைமரத்தில் பாதியளவு வளர்ந்திட்டு, கழுதை கிழுதையென்று சொல்லுறீங்களே என்றபடி அல்லி சண்டைக்கு வர, பார்வதியிடம் திரும்பியவன் அத்தை உன் மகள் எதுக்கு, இப்படி எண்ணெயில் போட்ட கடுகு போல பொரியுறாள்?.
அதற்கு பெருமாளோ, அல்லி தான் பொண்ணு என்கவும்,எதேஏஏஏஏ இவளானு அதிர்ந்தான்.
அவன் அதிர்வை கண்டவள், ஏன் எனக்கு என்ன குறைச்சல்?, ஓஓஓஓ தொரை வெள்ளக்காரி கூட திரிஞ்சிக்கிட்டு இருந்தீங்களோனு சண்டைக்கு வர, இதையெல்லாம் பார்த்தவர்களுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.