Member
- Joined
- May 20, 2025
- Messages
- 39
- Thread Author
- #1
மறுநாள் சென்னை வந்து சேர்ந்ததும் இருவருக்குமே அலுவலக வேலை நிரம்பவே இருக்க, மதிய உணவு இடைவேளையின் போதும் சந்தித்துக் கொள்ளவில்லை இருவரும்.
மாலை தான் கிளம்பத் தாமதமாகும் என்றவனாய் வள்ளியை வாடகை மகிழுந்தை எடுத்துக் கொண்டு கிளம்பச் சொன்ன போதும் அவனுடனே செல்வதாக உரைத்து காத்திருந்தாள் வள்ளி.
இரவு எட்டு மணியளவில் வீட்டிற்கு வந்தவர்கள் குளித்து முடித்து உண்ண அமர்ந்தனர்.
ஊரில் நடந்தவைகளைக் கார்த்திகேயன் தனது பெற்றோரிடம் உரைத்தவாறு உண்டு கொண்டிருக்க, அமைதியாகக் கேட்டிருந்தனர்.
"மல்லிகா மேல தான் சந்தேகமா இருக்கு கார்த்தி" என்ற தாமோதரன்,
"இங்க வந்த பிறகு உங்க அப்பா அம்மாக்கிட்ட பேசுனியாமா வள்ளி?" எனக் கேட்டார்.
அவள் இல்லையெனத் தலையசைக்க, "அவங்ககிட்ட பேசுமா! இப்பவும் உங்கப்பா உன்னை உதயாக்கு கட்டி வைக்க நினைக்கிறாங்கனு மல்லிகா சொன்னது சிண்டு முடிஞ்சி விடுற வேலையா தான் எனக்குத் தோணுது. அவ டபுள் கேம் ஆடுறா! அதனால நீ எப்பவும் போல உங்கப்பா அம்மாகிட்ட பேசிட்டு இருமா. இதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு அவங்களைத் தப்பா நினைக்காத" என்று அறிவுரைக் கூறினார்.
மாமனாரின் வார்த்தையைக் கேட்டப் பிறகு தந்தையைக் குறித்து அவளின் அடி மனத்தில் இருந்த கோபமும் அழுத்தமும் இப்பொழுது மட்டுப்பட, மனம் லேசானதைப் போல் உணர்ந்தாள்.
"தேங்க்ஸ் மாமா" கண்களை நிறைத்த நீருடன் உரைத்தாள்.
"ஏன்மா?" என்று வாஞ்சையுடன் அவர் உரைக்க,
மூக்கை உறிஞ்சி கண்ணீரை உள்ளிழுத்தவளாய் தொண்டையைச் சரி செய்தவள், "அப்பாவை அப்படித் தப்பானவரா நினைக்கக் கூட முடியாம ரொம்பக் கஷ்டப்பட்டேன் மாமா" என்றவள் குரல் தழுதழுக்க உரைக்கவும் அருகில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த கார்த்திகேயன் அவளின் கையைப் பிடித்தழுத்தினான்.
அவளுக்குப் பரிமாறிக் கொண்டிருந்த பார்வதியும் ஆறுதலாய் அவளின் தலையைக் கோதி விட்டார்.
அவளின் கண்ணீரைப் பார்த்ததும் இவருக்கு மனம் கலங்கிப் போனது.
தன் வீட்டுப் பெண் இவ்வாறு கலங்கி நிற்கிறாளே என்ற எண்ணம் அவரை வருத்த, ஒரு முடிவெடுத்தவராய், "எனக்குக் கொஞ்சம் டைம் கொடுமா. அங்கே உண்மையா என்ன தான் நடக்குதுங்கிறதை நான் கண்டுபிடிச்சி சொல்றேன். என்னோட ஃப்ரண்ட் டிடெக்டிவ் ஆபிஸ் வச்சிருக்கான். இதைச் சுலபமா கண்டுபிடிச்சிடலாம்" என்று அவளுக்கு ஆறுதல் மொழிந்தார்.
அவளின் கண்கள் நன்றியுணர்வில் பெருக்கெடுத்தன. 'இனி இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். மாமா பார்த்துக் கொள்வார்' என்கின்ற தெம்பு அவளுக்குள் உருவாகியிருந்தது.
அனைவரும் உண்டு எழுந்த பிறகு தனது அறைக்குள் போனவள் தாய் தந்தையருக்கு அழைத்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்தாள்.
மனத்தை அழுத்தியிருந்த பாரம் நீங்கி இலேசானதாய் உணர்ந்தவள் மிகுந்த மகிழ்வுடன் இருந்தாள்.
வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன்தான்.
என்ற பாடலை விசிலடித்தவாறு அறைக்குள் நுழைந்தவனைக் கண்களில் சிரிப்புடன் பார்த்திருந்தாள் வள்ளி.
"ரொம்ப நாள் கழிச்சு என் பொண்டாட்டி மனசு விட்டு சிரிக்கிறா மாதிரி தெரியுதே" அவளின் நெற்றியோடு முட்டியவனாய் அருகில் அமர்ந்தான்.
வரமாக வந்த வள்ளியே
வருவேன் என்றும்
வழித்துணையாக
வாழ்நாள் முழுவதும்
இவன் என்றும்
வள்ளி மணவாளன்.
ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்துணர்ந்து பூரிப்புடன் அழுத்தம் திருத்தமாக உரைத்திருந்த மனைவியை இன்ப அதிர்வுடன் பார்த்தான் கார்த்திகேயன்.
"ஹே அந்தக் கவிதையைப் படிச்சியா நீ? ஒரு ஹார்டீன் கொடுக்கலை இன்ஸ்டால" எனக் கேட்டான்.
"நீங்க என்கிட்ட பேசாம அங்கே விட்டுட்டு போய்ட்டீங்களேனு கவலைல இருக்கும் போது இந்தக் கவிதையைப் பார்த்தப்ப ஹார்டீன்லாம் கொடுக்கத் தோணலை. இப்படி உங்களைக் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுக்கத் தான் தோணுச்சு" என்றவள் சொல்லியவாறே அவனை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவளின் இடை வளைத்துக் கண்கள் சுருங்க அவளைப் பார்த்தவனாய், "முத்தத்தை இப்படியா கொடுப்பாங்க? உனக்கு நான் எப்படிக் கொடுக்கனும்னு சொல்லிக் கொடுத்தேன்?" பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் போல் அவன் அதட்டலாய் கேட்கவும் வாய்விட்டுச் சிரித்தவள் அவன் சொல்லிக் கொடுத்த பாடத்தைக் கற்பித்தாள்.
அவளின் இதழ் முத்தத்தைத் தனதாக்கி புதைந்து மீண்டவன்,
"இப்ப ஒரு கவிதை மண்டைக்குள்ள ஓடுது சொல்லவா?" குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.
"சொல்லுங்க" ஆர்வமாய்க் கேட்டாள்.
அல்லி மலரே
மல்லி மங்கையே
சொல்லிக் கொடுக்கவா
கள்ளி எந்தன் நெஞ்சில்
அள்ளி அணைக்க வா...
கிள்ளி எடுத்து உனை
வள்ளி எனக் கொஞ்சி
பள்ளி கொள்ள வா...
என்று அவன் சொல்லி முடிக்கவும் கண்ணில் நீர் வரும் வரை வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் வள்ளி.
அவளின் சிரிப்பை நெகிழ்ச்சியுடன் பார்த்திருந்தான் கார்த்திகேயன்.
கணவனின் பார்வையில் நெகிழ்ந்தவளாய், ஆசையுடன் அவனின் கழுத்தைச் சுற்றி மாலையாகக் கைகளைக்கோர்த்தவள்,
அள்ளி அணைக்கவும்
பள்ளி கொள்ளவும்
வள்ளியின் காதல் மனம்
துள்ளலுடன் காத்திருக்கிறதாம்
வள்ளி மணவாளனே!
என்று உரைத்து விட்டு கைகளை விரித்தாள்.
அவளை இறுக அணைத்து உச்சியில் அவன் முத்தமிட, அவன் காதினோரம் முத்தமிட்டவளாய் நாணத்துடன் ஹஸ்கி குரலில், "நீங்க வேணும் எனக்கு" என்றாள்.
மனைவியின் சிவந்த முகத்திலும் பேச்சிலும் கணவனின் கரங்களும் பார்வையும் தடம் மாற, "ஐம் ஆல் யுவர்ஸ் வள்ளி" என்றவனாய் அவளின் மீது படர்ந்திருந்தான்.
இன்ப மொட்டுகள் மெட்டுகளாய் இன்னிசை மீட்டி அவளைத் தீண்டிச் சென்றிருந்த காதல் பொழுதினில் இவ்வுலகம் மறந்து பறந்து தரையிறங்கிய நொடியினில், "லவ் யூ கார்த்தி" என்று தனது காதலை மொழிந்திருந்தாள் வள்ளி.
அப்படியொரு சந்தோஷம் அவனுக்கு. கணவனாய் எதையோ சாதித்த உணர்வு.
"லவ் யூ டா வைரக்கட்டி" நிறைவின் மகிழ்வில் அவளிதழில் முத்தமிட்டு உரைத்தவன் தன்னோடு அணைத்தவனாய்ப் படுத்திருந்தான்.
இருவரின் மனங்களும் அதீத மகிழ்வில் ஒருவித நிறைவில் தளும்பி நிற்க, "உங்களுக்கு எத்தனை குழந்தைங்க பெத்துக்கனும்னு ஆசை கார்த்தி" எனக் கேட்டாள் வள்ளி.
"உன்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ போதும்டா வள்ளி" என்று விட்டான்.
"சோ ஸ்வீட் கார்த்தி" என்று அவன் கன்னத்தில் அவள் இதழ் பதிக்க,
"ஏன் இந்தக் கன்னம் மட்டும் தான் ஸ்வீட்டா இருக்கா? இந்தக் கன்னம் இல்லையா?" என்று மறுகன்னத்தையும் அவன் காட்ட, அங்கேயும் முத்தமிட்டாள்.
"இந்த நெத்தி ஸ்வீட்டா இல்லையா?"
"இந்த மூக்கு ஸ்வீட்டா இல்லையா?
"இந்த உதடு ஸ்வீட்டா இல்லையா?"
"இந்தத் தாடை ஸ்வீட்டா இல்லையா?"
என ஒவ்வொன்றாய் கேட்டுக் கேட்டுச் சிரிக்கச் சிரிக்க அவளிடம் முத்தம் வாங்கியவன் அவளுள் மீண்டுமாய் மூழ்கிப் போனான்.
அன்றிரவு விடியா இரவாகிப் போகட்டுமென வேண்டிடும் வண்ணம் கொண்டாடி மகிழ்ந்தனர் இருவரும்.
அடுத்து வந்த நாள்களில் எல்லாம், 'ரொம்பப் பேசாத என்னோட இன்ட்ரோவெர்ட் பொண்டாட்டியா இது?' என்று கார்த்திகேயன் கேலிச் செய்யும் வண்ணம் அவனிடம் மட்டும் முழுதாய் மனம் திறந்து பேசும் வகையில் மாறியிருந்தாள் வள்ளி.
முழு மனதாய் அவனைத் தன்னவனாய் ஏற்றப் பிறகு அவனிடத்தில் ஏதும் தயக்கமில்லை அவளுக்கு.
அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தையும் அவனிடம் கொட்டித் தீர்த்திடுவாள் வள்ளி. ஆனால் மற்றவரிடத்தில் எப்பொழுதுமே அந்த இன்ட்ரோவெர்ட் வள்ளி தான்.
இப்படி அவள் தன்னிடம் இருக்க வேண்டுமென்று தானே ஆசைக் கொண்டான் அவனும். அதனால் அவளின் இந்த மாறுதல்கள் அவனை அத்தனை மகிழ்வுக்குள்ளாக்கி இருந்தது.
வள்ளியும் கார்த்திகேயனும் சென்னைக்கு வந்து இரு மாதங்கள் கடந்திருந்தன.
தூத்துக்குடியிலிருந்து வந்த பிறகு அவ்வப்போது தனது தாய் தந்தையரிடம் நலம் விசாரித்துப் பேசிக் கொண்டாள் வள்ளி.
முன்பை விட வள்ளி கார்த்திகேயனுக்கு இடையிலான பிணைப்பு அதிகரித்திருந்தது.
அன்று மதியம் பொழுதில் அலுவலகத்தில் கார்த்திகேயன் முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது, வள்ளி அழைத்திருந்தாள்.
"I'm in a meeting. Will talk to you later" என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டான்.
அதன் பிறகு மீட்டிங் முடிந்ததும் அலுவலகத் தோழமைகளிடம் மீட்டிங் குறித்துப் பேசியவாறு தேநீர் அருந்திவிட்டு வந்தவன் அலுவல் வேலைக் குறித்த சிந்தனையிலேயே இருந்ததால் அவளிடம் பேச வேண்டுமென்பதையே மறந்திருந்தான்.
மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது அவளின் முகவாட்டத்தைக் கண்ட கார்த்திகேயனுக்கு அப்பொழுது தான் அவள் அழைத்ததே நினைவிற்கு வந்தது.
'அய்யோ கோவிச்சிக்கிட்டாளோ?' என்று எண்ணியவனாய் மகிழுந்தில் அமர்ந்து ஓட்டத் தொடங்கியதும், "சாரி வள்ளி! நீ போன் செய்யும் போது மீட்டிங்ல இருந்தேன். அப்புறம் செய்ய மறந்துட்டேன்" என்றான்.
அவன் முகத்தைத் திரும்பியும் பார்க்காது, கண்ணாடி ஜன்னல் பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வள்ளி.
அவளின் இந்த முகத்திருப்பலில் அவனுக்குக் கோபம் தான் வந்தது.
"எல்லாத்துக்கும் இப்படிக் கோவிச்சிக்கிட்டா, நான் என்ன தான் பண்றது? என்னோட சூழ்நிலையையும் நீ புரிஞ்சிக்கனும் வள்ளி" கோபத்துடன் உரைத்திருந்தான்.
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, இவனும் அமைதியாக வண்டியை ஓட்டினான்.
இருவரும் வீட்டை அடைந்ததும் அமைதியாக அவரவர் வேலையைப் பார்த்திருந்தனர்.
இரவுணவை உண்டு விட்டு அவன் படுத்துக் கொள்ள, அவன் முதுகோடு ஒண்டியவாறு படுத்துக் கொண்டாள் இவள்.
அவன் அமைதியாகவே இருக்க, இவள் பேசத் தொடங்கினாள்.
"இன்னிக்கு ஆபிஸ்ல ரொம்ப அசிங்கமா போச்சு கார்த்தி" எனும் போதே அவளின் குரல் தழுதழுக்க, சட்டென அவளின் புறம் திரும்பிப் படுத்தவனாய், "என்னடா?" எனக் கேட்டான்.
தேம்பித் தேம்பி அழுதவளாய் எழுந்து அம்ர்ந்தவள், "எனக்கு ஆபிஸ்க்கு போகனும்னாலே மனசுல ஒருவிதமான பயம் வந்துடும் கார்த்தி. ஐடி ஆபிஸ்க்கு நான் தகுதியில்லாதவங்கிற மாதிரி ஒரு நினைப்பு. எனக்குக் கோடிங்-னாலே அலர்ஜி தெரியுமா. கொடுக்கிற வேலையை சரியா செஞ்சிடனும்ங்கிற பயம் பதட்டம் எப்பவும் இருக்கும். உங்களைக் கல்யாணம் செஞ்ச பிறகு, உங்கக்கூட ஆபிஸ்க்கு போக ஆரம்பிச்ச பிறகு அந்தப் பயம் பதட்டம்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சி சுத்தமா இல்லாமலே ஆகிடுச்சு. எனக்கு அங்கே எந்தப் பிரச்சனைனாலும் உங்ககிட்ட சொல்லலாம். நீங்க கைட் பண்ணுவீங்கன்ற நம்பிக்கையும் உங்ககிட்ட இருக்கப் பாசிட்டிவிட்டியும் தான் அதுக்கு முக்கியக் காரணம்" என்று நிறுத்தினாள்.
அவள் கூற வருவது அவனுக்குத் தெளிவாக விளங்கியது. அவளின் பலவீனமான சூழலில் தன்னுடைய அருகண்மையைத் தேடியிருக்கிறாள் என்று புரிந்தது.
அவன் அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, அவள் மேலும் தொடர்ந்து பேசினாள்.
"எனக்கு மீட்டிங்ல பேசனும்னாலே ரொம்பப் பயம் கார்த்தி. மீட்டிங் இருக்க நாள் ஆபிஸ்க்கு போகவே பயமா இருக்கும். அந்த மீட்டிங் முடியுற வரைக்கும் அந்த நாள் முழுக்க ஒரு மாதிரி ஸ்டெரஸ்லயே இருப்பேன். அப்படி இருக்க என்கிட்ட போய் ஒரு க்ளைண்ட் பிரசன்டேஷன் திடீர்னு மேனேஜர் வந்து என்னைச் செய்யச் சொல்லிட்டாரு கார்த்தி. இது வரைக்கும் கிளைண்ட்குலாம் நான் பிரசண்ட் செஞ்சதே இல்லை. இன்னிக்கு நான் பிரிப்பேர்டாவும் (prepared) இல்லை. அவர் திடீர்னு சொல்லவும் பயமும் பதட்டமும் அதிகமாகி சொல்ல வந்ததை மறந்து சொதப்பிட்டேன். கிளைண்ட் என் மேனேஜருக்கு இன்னிக்கு பிரசன்டேஷன் சேடிஸ்ஃபைடா இல்லைனு மெயில் போட்டுட்டாரு" என்று சொல்லும் போதே அவளது கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
"அந்த மெயில் பார்த்துட்டு தான் எனக்குப் போன் செஞ்சியா?" எனக் கேட்டான்.
கண்ணீருடன் ஆமெனத் தலையசைத்தாள்.
அவளின் கைகளைப் பற்றித் தன்னருகில் இழுத்தவனாய், "சாரிடா வைரக்கட்டி" என்று அணைத்துக் கொண்டவனுக்கு, இது அவளின் ஆங்சைட்டி (anxiety) பிரச்சினையால் உண்டாகியிருக்கிறது என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
இவளின் இப்பிரச்சினையை எப்படிச் சரி செய்வது என்று சிந்திக்கலானான் கார்த்திகேயன்.

Last edited: