• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
May 20, 2025
Messages
67
"உங்கப்பா அம்மாவை கண்டுபிடிச்சி உன் கூடச் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. அதுக்குப் பிறகு என் கூட இருக்கிறதும் இல்லாம போறதும் உன் முடிவு தான் வள்ளி"

அன்று சண்டையிட்டப் போது கார்த்திகேயன் உரைத்தது இவளின் காதில் ரீங்காரமிட, தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நிற்க வைத்திருக்கும் கணவரைக் கலக்கத்துடன் பார்த்திருந்தாள் வள்ளி.

அவளின் தாயும் தந்தையும் தூத்துக்குடியில் இருப்பதாகத் தான் அவர்களின் கடையை வாடகைக்கு எடுத்திருப்பவர் உரைத்திருந்தார்.

அதனால் கார்த்திகேயன் தன்னைத் தனது பெற்றோரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகவே அழைத்து வந்திருக்கிறோனோ என்று எண்ணி பதட்டம் கொண்டது அவளுள்ளம்.

தூரமாய் யாரோ ஒருவருக்குக் கைக்காட்டிய கார்த்திகேயன், அவர் தன்னருகில் வருவதற்குள், "நான் பெங்களூர்ல இருந்தப்ப இவர் கூடத் தான் ரூம் ஷேரிங்ல தங்கியிருந்தேன் வள்ளி. பேசும் போது தான் இவருக்கும் தூத்துக்குடித் தான் சொந்த ஊருனு தெரிஞ்சிது. இப்ப அவர் வீட்டுக்குத் தான் போகப் போறோம்" என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்து நின்ற நண்பரிடம் வள்ளியை அறிமுகம் செய்து வைத்த கார்த்திகேயன், "இவர் பேரு முத்துப்பேச்சு" என்று வள்ளிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

முத்துப்பேச்சுக் கொண்டு வந்த மகிழுந்தில் பயணித்து ஊரை நெருங்கும் போதே, 'இவர் என்ன? அப்பாவோட ஊருக்குள்ள போறாரு?' எண்ணியவாறு பதைபதைப்புடன் பார்த்திருந்தாள் வள்ளி.

அவரது இல்லத்தை அடைந்திருந்த போது, 'அய்யய்யோ அப்பாவோட பாரம்பரிய வீடு இங்கே பக்கத்துல சில தெரு தள்ளித் தானே இருக்கு! அப்ப நிஜமாவே என்னை இங்கே விட்டுட்டுப் போகத் தான் கூட்டிட்டு வந்திருக்காரா?' மனத்தோடு எண்ணியவளின் உள்ளங்கை பயத்திலும் பதட்டத்திலும் சில்லிட்டுப் போயின.

மகிழுந்தில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றவுடன், "இவங்க என் மனைவி காமாட்சி. இவ என் பொண்ணு எழிலரசி" முத்துப்பேச்சு தனது மனைவியையும் நான்கு வயது மகளையும் அறிமுகம் செய்து வைத்து விட்டு இவர்கள் தங்குவதற்கான அறையைக் காண்பித்தார்.

பெங்களூரில் முத்துப்பேச்சிடம் பேசும் போது வள்ளியின் சொந்த ஊர் தான் அவருக்கும் என்று அறிந்த கார்த்திகேயன், வள்ளியின் தந்தைப் பெயரையும் உதயனின் பெயரையும் அவனது வியாபாரத்தையும் வைத்து விசாரித்தப் போது தான் வள்ளியின் தந்தையும் தாயும் இங்கே இருப்பதை அறிந்து கொண்டான்.

கார்த்திகேயன் முத்துப்பேச்சுவிடம் ஏதோ பேசியவாறு நின்றிருக்க, அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்த வள்ளியின் மனசாட்சியோ, 'அப்படி விட்டுட்டு போறவன் தான் பஸ்ல உன்னைக் கைக்குள்ளயே வச்சி தூங்க வச்சானா? பாதுகாப்பா பார்த்துக்கிட்டானா? அவ்ளோ பாசம் காட்டுறவனால எப்டி உன்னை விட்டுட்டு போக முடியும். அவனோட உசுரே நீதான்' என்று தேற்றிய நொடி,

உசுரே நீதானே நீதானே
நிழலா உன் கூட நானே

அறைக்குள் நுழைந்த கார்த்திகேயனின் அலைபேசி ஒலித்தது.

'இவர் எப்ப இந்த ரிங்டோனை மாத்தினாரு? எனக்காக மாத்திருப்பாரோ?' என்று யோசித்தவாறு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளைப் பார்த்து,

"குளிச்சிட்டு வா வள்ளி! ஒரு முக்கியமான இடத்துக்குப் போறோம் இன்னிக்கு" என்றவன் கைப்பேசியில் பேசியவாறே அறையை விட்டு வெளியே வந்தான்.

'ஹ்ம்ம் அப்பா அம்மாவைப் பார்க்க மட்டும் வேணா கூட்டிட்டுப் போவாரா இருக்கும். என்னை அப்படி ஒன்னும் விட்டுட்டுலாம் வந்துட மாட்டாரு' என்று மனத்தைத் தேற்றியவளாய் என்ன உடை உடுக்கலாம் என்று பெட்டியைப் பார்த்தவாறு நின்றிருந்த போது உள்ளே வந்த கார்த்திகேயன், "நீ இன்னும் குளிக்கப் போகலையா?" எனக் கேட்டான்.

"என்ன டிரெஸ் போடுறதுனு பார்த்துட்டு இருக்கேன்" என்றவள் உரைத்ததைக் கேட்டு பெட்டியைப் பார்த்தவன், தான் அவளுக்கு முன்பு வாங்கிக் கொடுத்திருந்த காட்டன் புடவையை எடுத்துக் கொடுத்து அதை உடுத்தக் கூறினான்.

அவன் தன்னிடம் இயல்பாய் பேசியதில் கண்கள் மின்ன சரியென்றவளாய் மகிழ்வுடன் கிளம்ப ஆயத்தமானாள் வள்ளி.

நைட்டியை அணிந்தவளாய் குளியலறையில் இருந்து வெளியே வந்த வள்ளி, அறையில் கார்த்திகேயன் இல்லாது இருப்பதைப் பார்த்து விட்டு கதவைப் பூட்டிவிட்டு புடவை உடுத்தத் தொடங்கினாள்.

கார்த்திகேயன் கதவைத் தட்டவும், முந்தானையைப் பின் செய்து கீழே மடிப்பு வைத்துக் கொண்டிருந்தவள் கைகளில் அதனை அள்ளிக் கொண்டு நடந்தவளாய் சென்று கதவைத் திறந்தாள்.

அறைக்குள் நுழைந்தவன் அவள் குனிந்து மடிப்பை இழுத்து விடச் சிரமப்படுவதைப் பார்த்து, அவள் அருகில் சென்று அவளின் கால் கீழே முட்டியிட்டு, "இரு நான் சரி செய்றேன்" என்றவனாய் அழகாய் நேர்த்தியாய் இழுத்து விட்டான்.

கணவனின் இந்தச் செயலில் அவளின் உள்ளம் நெகிழ்ந்து போக, "இப்ப எப்படி இருக்கு?" மண்டியிட்டவாறே நிமிர்ந்து அவள் முகம் பார்த்துக் கேட்ட கணவனின் முன் நெற்றியில் தன்னை மீறி முத்தமிட்டாள் வள்ளி.

சட்டென அவன் கண்களில் நீர் பொங்கி வர, அவளிடம் அதைக் காட்ட விரும்பாதவனாய் விறுவிறுவெனக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான் கார்த்திகேயன்.

'இவக்கிட்ட மட்டும் நான் ஏன் இப்படி உடஞ்சி போறேன்' என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவனாய் குளியலறையில் இருந்தவாறு கட்டுக்குள் வர இவன் முயன்று கொண்டிருக்க,

இவளோ, தான் முத்தமிட்டதும் அவன் இவ்வாறு சென்றதில், தான் முத்தம் கொடுத்தது பிடிக்காமல் தான் இப்படிச் சென்று விட்டான் என்று எண்ணி வருந்தினாள்.

'நான் ஹனிமூன்ல அவரைத் தொட வேண்டாம்னு சொன்ன கோபம் இன்னும் போகலையா அவருக்கு? அதுக்குப் பிறகு அவர் என் பக்கமே வரவே இல்லையே' சட்டென அவளின் உற்சாகம் அனைத்தும் வடிந்து போன உணர்வில் பாரமான மனத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

குளித்து முடித்து வெளியே வந்த பிறகும் அவளிடம் ஏதும் பேசவில்லை அவன். அவளோ தனது உடையையும் அலங்காரத்தையும் பார்த்து அவன் ஏதேனும் சொல்வான் என்று ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தவாறே கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

அவளின் எதிர்பார்ப்பு புரிந்தும் அவனோ சிரத்தையுடன் தான் கிளம்புவதில் முனைப்பாய் இருப்பது போல் காண்பித்துக் கொண்டான். அதில் மேலும் மனம் சுணங்கிப் போனது அவளுக்கு.

அடுத்தச் சில மணி நேரத்தில் இருவரும் தயாராகி வெளியே வர, முத்துப்பேச்சுவின் மனைவி காமாட்சி இருவருக்கும் காலை உணவினைப் பரிமாறினார். முத்துப்பேச்சு வெளி வேலையாகச் சென்றிருந்தார்.

"அக்கா உங்களுக்கு இந்த ஊரு தானா?" எனக் கேட்டான் கார்த்திகேயன்.

"இல்லங்க தம்பி. திருநெல்வேலி தான் நான் பொறந்த ஊரு. வாக்கப்பட்ட பொறவு இங்கே வந்தாச்சு" என்றவர் சொன்னதைக் கேட்டவன்,

"என் பொண்டாட்டிக்கு இது தான் பொறந்த ஊரு" என்றான்.

சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் வள்ளி.

'அப்ப தெரிஞ்சி தான் கூட்டிட்டு வந்திருக்காரா?' எண்ணியவாறே உண்டு கொண்டிருந்தாள்.

"அப்படியா! அப்பனா நீங்க எங்களுக்குச் சொக்காரவியலா வருவியளோ? இங்கன எந்த ஊரு வள்ளி?" என்று ஆவலுடன் அவர் கேட்க,

வள்ளி அந்த ஊர் பெயரைச் சொன்னதும் ஆச்சரியப்பட்டுப் போனவராய், "இந்த ஊர் தானா உனக்கு? இங்கன எந்த வீட்டு ஆளுங்க பிள்ளை நீயி?" எனக் கேட்டார்.

"திரவியம் குடும்பம். அவங்க பையன் தான் என் அப்பா. அவங்க பொண்ணோட பையன் உதயா தான் இப்ப எங்க பாரம்பரிய வீட்டுல இருக்கான்" என்றவள் சொன்னதும் அவரின் முகத்தில் அதிருப்தியான முகப்பாவனைக் கண்டு இவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆயினும் தனது பாவனையை உடனே மாற்றிக் கொண்டவராய் காமாட்சி அவர்களிடம் ஏதோ கேட்க வந்து உடனே நிறுத்திக் கொள்ள,

"என்னக்கா ஏதோ கேட்க வந்துட்டு நிறுத்திட்டீங்க? என்ன கேட்கனும்னு நினைச்சீங்க?" என்று கேட்டான் கார்த்திகேயன்.

"கேட்குறேன்னு தப்பா நினைக்காதீய! அந்த வீடு இரண்டு தெரு தள்ளி தானே இருக்கு! அப்புறம் எதுக்கு இங்கன வந்து தங்கியிருக்கீய?" எனக் கேட்டார்.

"நாங்க லவ் மேரேஜ் செஞ்சிக்கிட்டோம்னு எங்களை வீட்டை விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க அக்கா" என்று கார்த்திகேயன் உரைத்ததைக் கேட்டு ஜீரணிக்க முடியாதவராய்,

"இதென்ன அநியாயமா இருக்கு! ஊருக்குத் தெரியுற மாதிரி காதலிச்சவனைக் கட்டிக்கிறது தப்பு ஆனா ஊருக்குத் தெரியாம ஒரு பொண்ணுக் கூட வாழுறது தப்பில்லையோ?" உணர்ச்சி மிகுதியில் பட்டென உரைத்து விட்டவர் பின் நாக்கைக் கடித்துக் கொண்டார்.

கார்த்திகேயனும் வள்ளியும் கேள்வியாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவருக்குமே அவர் யாரைப் பற்றிப் பேசுகிறார் என்று புரியவில்லை.

"யாரை சொல்றீங்க அக்கா? யாரு ஊருக்குத் தெரியாம பொண்ணோட வாழுறாங்க?" எனக் கேட்டான் கார்த்திகேயன்.

"இல்ல தம்பி. அது வேணாம் விடுங்க. அப்புறம் உங்க சொக்காரவியல நான் தப்பா சொன்னேன்னு பழியாகிடும். நீங்க இங்கன இருக்க வரைக்கும் உங்களை நல்லா கவனிச்சிட வேண்டியது எங்க பொறுப்பு தானே. மனஸ்தாபம் ஆகிடக் கூடாது பாருங்க" என்று கூறி விட்டு சமையலறைக்குள் சென்று விட்டார்.

இருவரும் உண்டு முடித்த சமயம் முத்துப்பேச்சு வரவும், அவனது ஈருருளியைக் கேட்டு வாங்கிக் கொண்டான் கார்த்திகேயன்.

அவனது ஈருருளியில் இருவரும் பயணித்த போது, எங்கோ கோவிலுக்குத் தான் அழைத்துச் செல்லப் போகிறான் என்று நினைத்திருந்தாள் வள்ளி.
 
Joined
May 20, 2025
Messages
67
ஆனால் அவனது வண்டி சென்று நின்றதோ அவளின் பாரம்பரிய வீட்டில்.

அவளின் முன்னோர்கள் தலைமுறையாய் வாழ்ந்த பாரம்பரிய வீடு அது!

அவன் வண்டியை நிறுத்தியதும் வீட்டைப் பார்த்தவாறு இறங்கியவளுக்கு உடலும் உள்ளமும் நடுங்கியது. கண்கள் கலங்கின.

உள்ளே செல்லவே விருப்பமில்லை அவளுக்கு.

"இப்ப எதுக்கு என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க?" கோபத்துடன் கேட்டாள்.

"நான் சொன்ன வாக்கை காப்பாத்துறதுக்கு" என்றவன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல, வேறு வழியில்லாமல் இவளும் பின்தொடர்ந்தவளாய் வாசலில் நின்றாள்.

அழைப்பு மணியை அழுத்தினான்.

அவளின் தாய் தான் வந்து கதவைத் திறந்தார்.

இவளைக் கண்டதும் திகைத்து விழித்தவரின் கண்கள் கலங்கிட, மறுநொடி ஆவேசம் கொண்டவராய், "எதுக்குடி இங்கே வந்திருக்க? இன்னும் நாங்க உசுரோட இருக்கோமா இல்ல செத்துட்டோமானு பார்க்க வந்தியா?" எனக் கேட்டார்.

அவரின் பேச்சில் கோபம் மூண்ட போதும் கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தான் கார்த்திகேயன்.

கண்களில் கண்ணீர் பெருகி வழிய, "ஏன்மா இப்படிப் பேசுற? சென்னைல நீங்க இல்லைனு தெரிஞ்சதும் நான் எப்படித் துடிச்சிப் போனேன்னு தெரியுமா? ஏன்மா சொல்லாம கொள்ளாம இங்கே வந்துட்டீங்க?" எனக் கேட்டாள்.

"வேற என்ன எங்களைச் செய்யச் சொல்ற? அங்கேயே இருந்து சுத்தியிருக்கிறவங்க நம்ம குடும்பத்தை அசிங்கமா பேசுவதைக் கேட்டுட்டு இருந்திருக்கனும்னு சொல்றியா? உனக்குத் தான் மான அவமானம் இல்லாம போச்சு? எங்களுக்கும் இல்லைனு நினைச்சியா?" வாசலில் அவர் அவ்வாறு சத்தமாய்ப் பேசவும், நிஜமாவே அவமானமாக உணர்ந்தாள் வள்ளி.

தனக்காகத் தனது கணவனும் இப்படி நின்று அவமானப்படுவதை ஏற்க முடியாதவளாய் அங்கிருந்து சென்று விடலாம் என்று நினைத்த நொடி,

"யாருக்கிட்ட முத்துச் சண்டைப் போட்டுட்டு இருக்க?" என்று கேட்டவராய் வந்து நின்றார் செல்வகுமார்.

வாசலில் நின்ற மகளைக் கண்டதும் இன்பமாய் அதிர்ந்து விழித்தவர், "வள்ளிமா, எப்படிடா இருக்க?" என்று வாஞ்சையுடன் கேட்டிருந்தார்.

வள்ளியும் கார்த்திகேயனும் அவரின் இந்தப் பாசப்பேச்சைக் கண்டு வியந்து திகைத்துப் பின் மனம் லேசாக ஆசுவாசத்துடன் அவரைப் பார்த்தனர்.

"நல்லா இருக்கேன்ப்பா! நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்டாள்.

"ஏன் வாசல்லயே நிக்கிறீங்க? உள்ளே வாங்க! வாங்க தம்பி" என்று இருவரையும் செல்வகுமார் அழைக்க, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்தார் முத்துலட்சுமி.

"இல்ல மாமா! நான் வள்ளியை விட்டுட்டுப் போகத் தான் வந்தேன். இரண்டு நாள் அவ உங்க கூட இருந்துட்டு வந்தா அவளுக்கு மனசுக்கு நல்லாயிருக்கும்னு தான் கூட்டிட்டு வந்தேன்" என்று அவன் வாசலில் இருந்தே கிளம்ப‌ முற்பட, வள்ளியின் முகத்தில் மனத்திலும் அப்பட்டமாய்ப் பேரதிர்ச்சி.

'என்னை விட்டுட்டு போய்டுவியா நீ?' என்பது போல் அவனை அவள் பார்த்திருக்க,

அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாது, "நான் வரேன் மாமா! வரேன் வள்ளி. ஃபோன் பண்றேன்" எவரின் பேச்சையும் காதில் வாங்காது நில்லாது அங்கிருந்து சென்றிருந்தான்.

மடை திறந்த வெள்ளமாய் கண்களில் வடிந்த கண்ணீர் காட்சிகளை மறைக்க, தன்னை விட்டுச் செல்லும் கணவனைப் பார்த்தவாறே வீட்டிற்குள் நுழைந்தாள் வள்ளி.
 
Member
Joined
May 9, 2025
Messages
55
Why da eppadi pannura, happy to know you that you found her parents. Karthigeya, Valli is there don’t ever think of Deivayani, because u r near Thirruchandur- the prominent place Murugan family.🤪🤪
 
Joined
May 20, 2025
Messages
67
Why da eppadi pannura, happy to know you that you found her parents. Karthigeya, Valli is there don’t ever think of Deivayani, because u r near Thirruchandur- the prominent place Murugan family.🤪🤪
ஆமா அப்புறம் வள்ளி கோவிச்சிக்கிட்டு அப்பா அம்மா கூடவே இருந்துடுவா 🤣🤣🤣🤣🤣
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top