• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
சூர்யா,ஷாலினி அவங்க வாழ்க்கையை சந்தோஷமா தொடங்கினாங்க, அதற்குப் பிறகு அவங்க லைப் சூப்பரா போச்சு.



ஷாலினி: கிச்சன்ல சமைத்து கிட்டு இருக்கும் போது மயங்கி விழுந்துட்டா.



சூர்யா :அவளுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டான்.



ஷாலினி: கண் திறந்து பார்த்தா.



சூர்யா: என்ன மா ஆச்சு.



ஷாலினி: தெரியலங்க லைட்டா தல சுத்திடுச்சு அதான்.



சூர்யா : சரி வா ஹாஸ்பிடல் போகலாம்.



ஷாலினி : வேண்டாங்க அதான் இப்போ நான் நல்லா இருக்கேனே.



சூர்யா :பரவாயில்லை வா மா ஒரு தடவை போய் செக் பண்ணிட்டு வந்துடலாம்.



ஷாலினி : சரி வாங்க.



அதிக ஸ்கூல்ல விட்டுட்டு ரெண்டு பேரும் ஹாஸ்பிடலுக்கு போனாங்க.



டாக்டர்: ஷாலினி செக் பண்ணிட்டு சூர்யாவை உள்ள வர சொன்னாங்க.



சூர்யா: டாக்டர் என்ன ஆச்சு என் ஒய்ஃப்க்கு.



டாக்டர்: நல்ல விஷயம் தான் சார் நீங்க அப்பாவாக போறீங்க.



சூர்யா: ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் (ஷாலினி கையை அவன் கைக்குள் வைத்து கொண்டான்).



ஷாலினி: அவனையே பார்த்தா.



சூர்யா: டாக்டர் ஷாலு ஹெல்த் எப்படி இருக்கு.



டாக்டர்: அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஹெல்த்தியா தான் இருக்காங்க, குழந்தையும் நல்லா இருக்கு.



சூர்யா :ஓகே டாக்டர்.



டாக்டர்: டேப்லட் எழுதி தரேன் அதை கண்டினியூ பண்ணுங்க மந்த்லி செக்கப்புக்கு மறக்காம அழச்சிட்டு வந்துருங்க.



சூர்யா: ஓகே டாக்டர் தேங்க்ஸ் ( அவங்க கிளம்பிட்டாங்க ).



வீட்டுக்கு வந்ததும் எல்லாருக்கும் கால் பண்ணி சொல்லிட்டாங்க, ஈவினிங் அபி வீட்டுக்கு வந்ததும் இந்த விஷயத்தை சொன்னாங்க.



அபி : ஐஐஐ ஜாலி தங்கச்சி பாப்பா வரப்போகுது( கைய தூக்கிட்டு குதிச்சான்).



சூர்யா :அம்மாவையும் பாப்பாவையும் பத்திரமா பார்த்துக்கணும் சரியா.



அபி: சரி பா அம்மாவை வேலை பார்க்க விடாமல் நாம பத்திரமா பாத்துக்கலாம்.



சூர்யா : ஓகே செல்லம்.



அடுத்த நாள் காலையில சூர்யா அம்மா அப்பா சென்னைக்கு வந்துட்டாங்க.



கொஞ்ச நாள் சென்னையிலயும் கொஞ்ச நாள் மதுரையிலயும் மாறி மாறி வந்துகிட்டு இருந்தாங்க.



ஷாலினி அம்மா லட்சுமி அவளுக்குன்னு என்ன பிடிக்கும்னு கேட்டு ஆசையா செஞ்சு கொடுப்பாங்க.



சூர்யா எல்லாம் செக்கப்புக்கும் அவ கூட போயி ஷாலு, குழந்தையோட ஹெல்த் கண்டிஷனை கேட்டு தெரிஞ்சிப்பான். சுஜி விசயத்தில் நடந்த தப்பு ஷாலினி விஷத்தை நடக்க கூடாதுனு ரொம்ப கவனமா இருந்தான்.



ஷாலினிக்கு ஏழாவது மாதம் சூர்யா வீட்டுல வளைகாப்பு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க.



சூர்யா : ஷாலுவுக்கு கல்யாண புடவை கட்டி விட்டுட்டு இருந்தான்.



ஷாலினி : கால் வலிக்குதுங்க சீக்கிரம்.



சூர்யா : இதோ இரண்டு நிமிஷம் தான்.



ஷாலினி :. ம்ம்ம்ம்ம்ம்.



சூர்யா : அவளுக்கு புடவை கட்டி முடிச்சதும் டிரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி உட்க்கார வச்சு தலை பின்னி பூ வச்சு. நகை எல்லாம் போட்டு விட்டான்.



அவ நெத்திலயும் வகுட்டுலயும் குங்குமம் வச்சி அவ நெத்தில கிஸ் பண்ணினான். ரொம்ப அழகா இருக்க டி.



ஷாலினி : அழகா சிரிச்சா.



சூர்யா : ( மண்டி போட்டு உக்கார்ந்து அவ வயித்துலயும் கிஸ் பண்ணான்) செல்லம் சீக்கிரம் அப்பா கிட்ட வந்துடுங்க டா.



ஷாலினி : ( குழந்தை லைட்டா வயித்துல உதைத்தது ) உதைக்குறா பாருங்க.



சூர்யா : எழுந்தான்.



அபி : அம்மா ( கைல ஜூஸ் கிளாஸ்ஸோட வந்தான் ).



ஷாலினி : வா டா தங்கம்.



அபி : அம்மா இந்தா ஜூஸ் குடி.



ஷாலினி : வேண்டாம் செல்லம் பசிக்கல.



அபி : அம்மா பாப்பாக்கு பசிக்கும் ல ப்ளீஸ் கொஞ்சம் குடிங்க.



ஷாலினி : சரி குடு ( வாங்கி குடிச்சா ).



சூர்யா : வாங்க போகலாம்.



சூர்யா ஷாலினிய சைடு ஹக் பண்ணி அழச்சிட்டு போனான்.அபி, ஷாலு கையை பிடிச்சு கிட்டு வந்தான்.



சூர்யா : ஷாலினிய சேர்ல உட்க்கார வச்சி மாலை போட்டான்.



சூர்யா அம்மா : சூர்யா நீயே முதல பண்ணு பா.



சூர்யா :சரிங்க மா.



அவ கன்னத்துல கைல சந்தனம் வச்சு நெத்தில குங்குமம் வச்சி தலைல அட்சதை தூவினான். அப்பறம் கண்ணாடி வளையல் எடுத்து அவ கைல போட்டு விட்டான்.



ஷாலினி : கண்ணுல காதலோட அவனை பார்த்தா.



அப்பறம் பெரியவங்க எல்லாரும் வரிசையா பண்றாங்க.



அபி : மாமா நானும் அம்மாவுக்கு இதே போல பண்ணவா.



வினய் : பெரியவங்க தான் இதெல்லாம் பண்ணனும் நீ பண்ண கூடாது.



அபி : நான் அம்மாகிட்டயே கேட்டுக்குறேன் ( ஓடிட்டான் ).



வினய் : எங்கயாச்சும் என் பேச்சை கேக்குறானா பாரு.



அபி : அம்மா அம்மா.



ஷாலினி : என்ன பா.



அபி : நானும் உனக்கு இதே போல பண்ணவா.



ஷாலினி : சரி தங்கம் பண்ணுங்க.



அபி : ஓகே ( அவன் குட்டி கையால சந்தானம் எடுத்து எக்கி அவ கன்னத்துல வச்சான் அப்பறம் குங்குமம் வச்சு விட்டான்.வளையல் எடுத்து போட போனான் ஆனால் அவனால போட முடியல சூர்யா ஹெல்ப் பண்ணான் )



ஐஐஐ வச்சுட்டேன் பாப்பா. ( அவ வயித்துல கிஸ் பண்ணினான் ).



எல்லாரும் அவன் பண்றதையே சந்தோஷமா பார்த்தாங்க.



அன்னைக்கு வளைகாப்பு முடிஞ்சு ஷாலினிய அவங்க அம்மா வீட்டுக்கு அழச்சிட்டு போய்ட்டாங்க.சூர்யா, அபி அடிக்கடி போய் பார்த்துட்டு வந்தாங்க.



ஒரு நாள் சூர்யா, அபி அவங்க வீட்டுக்கு போய் இருக்கும் போது ஷாலினிக்கு பிரஷவ வலி வந்துடிச்சு.



சூர்யா: அவளை கார்ல அழச்சிட்டு போனான்.



ஷாலினி அப்பா :கார் ஓட்டுனாங்க.



ஷாலினி அம்மா : அபிய மடில வச்சுட்டு அவர் பக்கத்துல உட்கார்ந்து இருந்தாங்க.



ஷாலினி : ஆ ஆ அம்மா ( வலில துடிச்சா ).



சூர்யா : ஒன்னும் இல்ல மா இப்ப போய்டலாம்.



அபி : அம்மா ( அழுதுட்டே வந்தான் ).



சூர்யா : அவன் கை நடுங்கிக்கிட்டே இருந்தது.சுஜிக்கு நடந்த மாதிரி இவளுக்கும் ஏதாவது ஆகிடுமோனு ரொம்ப பயந்தான்.



ஷாலினி :(அவன் பயம் புரிஞ்சு வலியவெளி காட்டிக்காம பேசுனா ) சூர்யா.



சூர்யா: என்ன மா.



ஷாலினி : சுஜி அக்காவுக்கு நடந்தது எனக்கும் நடந்துரும்னு பயப்படாதீங்க. நான் நம்ம குழந்தையோட உங்கடயே வந்திடுவேன்.



சுஜி அக்கா தான் நமக்கு குழந்தையா வந்து பிறப்பாங்க நீ வேணும்னா பாரு.



சூர்யா : சரி டா நான் பயப்படல.



ஷாலினி : ஆ ஆ ஆ ரொம்ப வலிக்குது சூர்யா.



சூர்யா : இதோ வந்தாச்சி (அவளை தூக்கிட்டு உள்ள ஓடினான்).



ஷாலினி : அபி பயப்படாத அம்மா பாப்பாவோட வரேன்.



அபி : சரி மா.



ஷாலினி : ஆப்ரேசன் தியேட்டர் உள்ள அழச்சிட்டு போய்ட்டாங்க.



கதிரேசன், லட்சுமி, வினய் இவங்க மூணு பேரும் வந்துட்டாங்க.



கொஞ்ச நேரத்துல குழந்தை அழுற சத்தம் கேட்டது.



அப்போ தான் எல்லாருக்கும் நிம்மதியா இருந்தது.ஆனா சூர்யாவுக்கு எப்ப டா ஷாலினியை பார்ப்போம்னு இருந்தது.



நர்ஸ்:(குழந்தையை தூக்கிட்டு வந்தாங்க )



சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு.



சூர்யா :( குழந்தையை கைல வாங்கினான் ) என் ஒய்ப் எப்படி இருக்கா.



நர்ஸ் : நல்லா இருக்காங்க சார் மயக்கத்துல இருக்காங்க வார்டுக்கு மாத்தினதும் பாக்கலாம்.



சூர்யா : அப்போ தான் குழந்தை முகத்தை பார்த்தான்



அழகா பிங்க் கலர்ல கண்ணை இறுக்க மூடி உதட்டை குவிச்சி தூங்கிட்டு இருந்தா.



அவன் ஸ்பரிசம் உணர்ந்த குழந்தை கண்ணை திறந்து பார்த்துகிட்டு திரும்ப மூடிக்கிட்டு.



எல்லாரும் குழந்தையை தூக்கி கொஞ்சினாங்க.



அபி : அவனும் பாப்பா கைய பிடிச்சு கொஞ்சிட்டு இருந்தான்.



கொஞ்ச நேரத்துல ஷாலினியை ரூம்க்கு மாத்திட்டாங்க.



சூர்யா : உள்ள போனான்.



ஷாலினி : அவனை பார்த்து லைட்டா சிரிச்சா.



சூர்யா : (அவ நெத்தில கிஸ் பண்றான்) ரொம்ப வலிக்குதா டி.



ஷாலினி : இல்ல மாமா என்ன குழந்தை பிறந்து இருக்கு.



ஷாலினி அம்மா : பெண் குழந்தை (தூக்கிட்டு வந்து அவ பக்கத்துல படுக்க வச்சாங்க ).



ஷாலினி:குழந்தையை தொட்டு பார்த்தா, அபி பாப்பா பார்த்தியா.



அபி:( அவ பக்கத்துல வந்து உட்காந்தான் ) பார்த்தேன் மா ரொம்ப அழகா இருக்கா.



ஷாலினி : ம்ம்ம்ம்ம்ம்.



சூர்யா அப்பா, அம்மா மறுநாள் காலைல இங்க வந்தாங்க.



மூணாவது நாள் ஷாலினியை டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க.ஒரு நல்ல நாள் பார்த்து பாப்பாவுக்கு பெயர் வைக்கிற பஞ்சன் ஏற்பாடு பண்ணி இருந்தாங்க.



ஷாலினி : குழந்தையை குளிப்பாட்டி பவுடர் அடிச்சிட்டு இருந்தா.



சூர்யா : சீக்கிரம் ரெடி பண்ணு மா எல்லாரும் வந்துட்டாங்க.



ஷாலினி : உங்க பொண்ணு தான் கை, கால, ஆட்டி கிட்டே இருக்கா நீங்களே ரெடி பண்ணுங்க நானும் ரெடி ஆகுறேன்.



சூர்யா, அபி : சேர்ந்து பாப்பாவ ரெடி பண்றாங்க.



ஷாலினி : ரெடி ஆகி வந்தா.



சூர்யா : பாப்பாவை தூக்கிட்டு வந்து தொட்டிலில் போட்டான்.



ஐயர்: சூர்யா, ஷாலினிய உக்கார வச்சு சில மந்திரங்கள் சொன்னாரு.



அப்பறம் மீனாவை கூப்பிட்டு பாப்பாவுக்கு வாய்ல சக்கரை தண்ணி வச்சி வலது காதுல மூணு முறை பெயர் சொல்ல சொன்னாங்க.



அபி : அத்தை நான் சொல்லுற பெயரை தான் பாப்பாவுக்கு வைக்கணும்.



மீனா : ம்ம்ம்ம் சொல்லு அதையே வச்சிடலாம்.



அபி :மீனா காதுல ஒரு பேர் சொன்னான்.



மீனா : பேர் நல்லா இருக்கு செல்லம்.( அவன் கண்ணத்தை கிள்ளிட்டு பாப்பா கிட்ட போய் அவ வாயில சக்கரை தண்ணி தொட்டு வச்சு )ஐஸ்வர்யா ஐஸ்வர்யா ஐஸ்வர்யா (மூணு முறை சொன்னா ).



ஷாலினி : பேர் நல்லா இருக்கு செல்லம்.

அபி : தேங்க்ஸ் மா.

அப்பறம் எல்லாரும் அதே போல சக்கரை தண்ணி தொட்டு வச்சு பேரை மூணு முறை சொன்னாங்க.

அப்பறம் எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க.

சூர்யா, ஷாலினி லைஃப் அவங்க இரண்டு குழந்தையோட சூப்பரா போச்சு. அபி அவனை தங்கச்சிய ரொம்ப பாசத்தை கொட்டி வளர்த்தான்.


முற்றும்.....
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top