• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
ஷாலினிக்கு மேரேஜ் நடக்கப் போறதால ஏற்கனவே அவ ஸ்கூலுக்கு போய் லீவு சொல்லி இருந்தா ஆனா சூர்யாக்கு அப்படி இல்லையே திடீர்னு நடந்தா கல்யாணம் சோ ஆபீஸ்க்கு லீவ் போட முடியல.

வினய் : சோபால உட்காந்து முன்னாடி இருந்த டேபிள்ல காலை நீட்டி டிவி பார்த்துகிட்டே இருந்தான்.

அபி :(அவன் பக்கத்துல உட்கார்ந்தான்) மாமா காலேஜ் போலயா நீ.

வினய்: ஷாலினி மேரேஜ் காக லீவு போட்டு இருந்தேன் அது முடிய இன்னும் இரண்டு நாள் இருக்கு அதுவரை வீட்டுல தான்...

ஷாலினி :அபி வா ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்ப வேண்டாமா.

அபி : அம்மா நீ ஸ்கூலுக்கு வரமாட்டியா.

ஷாலினி : நான் வர ஒரு வாரம் ஆகும் இப்போ நீ ஸ்கூல் கிளம்பு வா.

அபி : அம்மா அப்ப நானும் வினய் மாமா மாதிரி இரண்டு நாள் லீவு போட்டு வீட்ல இருக்க வா.

ஷாலினி: வினைய்ய முறைச்சா.

வினய் :என்ன ஏன் முறைக்கிற.

சூர்யா: அபி வா குளிக்க போகலாம்.

அபி : அப்பா வினய் மாமா இரண்டு நாள் காலேஜ்க்கு போக மாட்டாராம் நானும் இரண்டு நாள் ஸ்கூலுக்கு லீவு போட்டு விடவா.

வினய்:(mv,) எல்லார்கிட்டயும் என்னை மாட்டி விட்றான் பாரு.

சூர்யா : நீ ஏண்டா காலேஜ் போகல.

வினய்: ஷாலு திங்க்ஸ் எல்லாம் இங்க எடுத்துட்டு வரணும்ல அதான் லீவு போட்டேன்.

அபி : அப்பா நானும் மாமாவுக்கு உதவி பண்ணுவேன்.

ஷாலினி : அபி நீ எந்த ஹெல்பும் பண்ண வேண்டாம் ஸ்கூல் கிளம்பு.

அபி : அப்பா ப்ளீஸ் ப்ளீஸ்.

சூர்யா : சரி இந்த இரண்டு நாள் மட்டும் தான் லீவு போடணும் சரியா.

அபி : ஐஐஐ ஜாலி ஜாலி.

வினய் : இரண்டு நாள் வீட்டுல நிம்மதியா இருக்கலாம்ன்னு பார்த்தேன் அது பொருக்கலையா டா உனக்கு.

அபி : நீ மட்டும் ஜாலியா இருக்கலாம்ன்னு பார்த்தியாக். வே வே (பளிப்பு காட்டிட்டு ஓடிட்டான்).

வினய்: அவனை துரத்திட்டு ஓடினான்.

ஷாலினி : அவங்களை பார்த்து சிரிச்சிட்டு இருந்தா.

சூர்யா : ஷாலு.

ஷாலினி : சொல்லுங்க சீனியர்.

சூர்யா : நானும் அபியும் இருந்தப்ப இந்த குட்டி வீடு சரியா இருந்துச்சு இப்போ நீயும் வந்ததால இந்த வீட்டுல தங்க கஸ்ட்மா இருக்கலாம் அதனால வேற வீடு பார்க்கலாமா.

ஷாலினி : அச்சோ சீனியர் இந்த வீட்டுல இருக்க எனக்கு கஸ்டமா எல்லாம் இல்ல நான் ரொம்ப சந்தோசமா தான் இருக்கேன்.நாம இரண்டு பேரும் இப்போ சொந்தமா ஒரு வீடு கட்டலாம் நீங்க, நான், அபி மட்டும் அந்த வீட்டுல சந்தோசமா இருக்கலாம்.

சூர்யா : ஆசை எல்லாம் பெருசா இருக்கே சீக்கிரம் நிலம் வாங்கி வீடு கட்ட ஆரம்பிக்கலாம்.

ஷாலினி: ம்ம்ம்ம்ம்ம் டைம் ஆகுதே ஆபீஸ் போகலையா.

சூர்யா:அச்சோ ஆமா ( தலைல அடிச்சிட்டு ஓடினான் ).

அப்பறம் சூர்யா ஆபீஸ் கிளம்பி வந்தான்.

ஷாலினி : மூணு பேருக்கும் பிரேக் பாஸ்ட் எடுத்து வச்சா.

சூர்யா, வினய், அபி : மூணு பேரும் சாப்பிட ஆரம்பிச்சாங்க.

லட்சுமி : ( அப்போ தான் உள்ள வந்தாங்க )சூர்யா எங்க டா கிளம்புற.

சூர்யா: என்ன மா கேள்வி ஆபீஸ் தான்.

லட்சுமி : ஏண்டா கல்யாணம் ஆனா முதல் நாளே யாராவது ஆபீஸ் போவாங்களா.

சூர்யா : இது திடீர்னுன்னு நடந்த கல்யாணம் மா நான் ஆபீஸ்க்கு லீவு கூட போடல நான் என்ன பண்ணுறது.

லட்சுமி : பொன் பண்ணி லீவு சொல்லு கல்யாணம் முடிஞ்சு எங்கையாவது கோவிலுக்கு போக வேண்டாமா.

சூர்யா :இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு அதனால லீவு போட முடியாது சோ நாளைக்கு கண்டிப்பா லீவு சொல்லிட்டு வரேன் நாளைக்கு கோவிலுக்கு போகலாம்.

லட்சுமி :ஏதோ பண்ணு சொன்னா கேக்கவா போற.

சூர்யா : நாளைக்கு கண்டிப்பா லீவு சொல்லிட்டு வரேன் மா.

லட்சுமி : சரி, சரி.

ஷாலினி : அத்தை நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம்.

லட்சுமி : கீழ உங்க மாமா வெயிட் பண்ணுறாரு நான் அவரு கூட சேர்ந்தே சாப்பிடுறேன்.

அபி : லட்சு கொஞ்சமா சாப்பிடு உன் சமையல விட அம்மா சமையல் சூப்பரா இருக்கு.

லட்சுமி :( அவன் காதை பிடிச்சு திருக்குனாங்க ).படவா உங்க அம்மா வந்ததும் என் சமையல மட்டும் தட்டி பேசுறியா.

வினய்:உண்மைய சொன்னா இப்படி தான் கோவம் வரும் அத்தை.

லட்சுமி: (இன்னொரு கையால் அவன் காதையும் திருகுனாங்க) ரெண்டு பேருக்கும் கொழுப்பு அதிகமாயிடுச்சு.

வினய், அபி: விடுங்க அத்தை /விடு லட்சு.

லட்சுமி : அத்தை, லட்சுன்னு சொல்லிட்டு கீழ வாங்க அப்புறம் இருக்கு உங்களுக்கு ( சொல்லிட்டு அவங்க கீழ போய்ட்டாங்க ).

சூர்யா: ஆபீஸ் கிளம்பி போயிட்டான்.

வினய், அபி: ஷாலினி வீட்டுக்கு போனாங்க.

அபி :தாத்தா பாட்டி உள்ள ஓடினான்.

ஷாலினி அப்பா: வாங்க செல்லம் (அவன தூக்கி மடியில உட்கார வச்சிக்கிட்டார்).

அபி : தாத்தா சாப்பிட்டீங்களா.

ஷாலினி அப்பா : சாப்பிட்டேன் செல்லம் நீங்க.

அபி : சாப்பிட்டேன் தாத்தா அம்மா சமையல் சூப்பரா இருந்தது.

ஷாலினி அப்பா : சரி டா செல்லம்.

அபி : பாட்டி எங்க தாத்தா.

ஷாலினி அப்பா : கோவிலுக்கு போய் இருக்கா இப்போ வந்திடுவா.

அபி : சரி தாத்தா, என்ன மாமா எங்க பார்த்துகிட்டு நிக்கிற போய் அம்மாவோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா.

வினய்:என்ன டா என்ன மட்டும் போக சொல்லுற நீயும் வா உதவி பண்ணுறேன்னு சொல்லி தான என் கூட வந்த.

அபி : பாருங்க தாத்தா நான் குட்டி பையன் தான என்னை போய் மாமா வேலை பார்க்க சொல்லுறாரு.

வினய் : அடப்பாவி.

ஷாலினி அப்பா : ஆமா வினய் உனக்கென்ன கொழுப்பா சின்ன பையன போய் வேலை வாங்குற நீ போய் எடுத்துட்டு வா.

அபி :போ மாமா.

வினய்: போ டா.

அப்புறம் இரண்டு பேரும் ஷாலினி அம்மா வரவும் அவங்க கூட பேசிட்டு ஷாலினி டிரஸ் எல்லாம் ஒரு பேக்ல வச்சி எடுத்துட்டு சூர்யா வீட்டுக்கு போனாங்க.

தொடரும்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top