• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Mar 20, 2025
Messages
20
சண்டே ஷாலினி அவ அம்மா, அப்பாவை கூட்டிட்டு லட்சுமி வீட்டுக்கு வந்திருந்தா.

கதிரேசன், லட்சுமி : வாங்க வாங்க.

ஷாலினி அப்பா : அக்கா மாமா எப்படி இருக்கீங்க.

கதிரேசன், லட்சுமி : நாங்க நல்லா இருக்கோம் நீங்க.

ஷாலினி, அம்மா, அப்பா :நாங்களும் நல்லா இருக்கோம்.

கதிரேசன் : வினய் எங்க (வினய் ஷாலினியோட தம்பி).

ஷாலினி : அவன் பிரண்ட்ஸ் கூட வெளிய போய் இருக்கான்.

கதிரேசன் : சரி மா.

ஷாலினி : நான் போய் அபியை அழச்சிட்டு வந்திடுறேன் ( மேல போனா).

அபி : டீவி பார்த்துட்டு இருந்தான்.

ஷாலினி: அபி குட்டி.

அபி : ஐஐ ஷாலினி மிஸ்.

ஷாலினி : அப்பா எங்க.

சூர்யா : இதோ நானே வந்துட்டேன்.

ஷாலினி : கீழ அப்பா, அம்மா வந்து இருக்காங்க வாங்க.

சூர்யா : அபியை தூக்கிட்டு கீழ போனான்.

ஷாலினி : சீனியர் இவங்க தான் என்னுடைய அப்பா, அம்மா... அப்பா, அம்மா இவரு தான் என்னோட காலேஜ் சீனியர் சூர்யா.

சூர்யா : வணக்கம் அம்மா, அப்பா.

ஷாலினி, அம்மா, அப்பா: வணக்கம் பா.

அபி :வணக்கம் தாத்தா,பாட்டி.

ஷாலினி அப்பா: வணக்கம் டா செல்லம் நீங்கதான் அபிமன்யுவா (தூக்கி மடியில வச்சுக்கிட்டாரு ).

அபி: ஆமா தாத்தா நான் தான்.

ஷாலினி அம்மா: உன்ன பத்தி தான் அவ எங்க கிட்ட அடிக்கடி பேசுவா.

அபி :அப்படியா பாட்டி.

ஷாலினி அப்பா : ஆமா டா செல்லம் இந்தா சாக்லேட் சாப்பிடு.

அபி : வாங்காம சூர்யாவை பார்த்தான்.

சூர்யா :வாங்கிக்க சொன்னான்.

அபி: சாக்லேட் வாங்கி கிட்டான்.

ஷாலினி அப்பா : உங்க அப்பா சொன்னா தான் வாங்கிபியா.

அபி : ஆமா தாத்தா.

ஷாலினி அம்மா : பையன நல்லா வளர்த்திருக்க பா.

சூர்யா : தேங்க்ஸ் மா.

லட்சுமி : எங்களையும் அப்பா, அம்மான்னு சொல்லுவ அவங்களையும் அப்பா, அம்மான்னு சொல்லுவியா ஒழுங்கா அத்தை,மாமான்னு சொல்லு.

சூர்யா : இதுல என்ன மா இருக்கு.

ஷாலினி அப்பா: உங்களுக்கு உறவு என்று சொல்ல இப்போ நாங்க தான் இருக்கோம். அதனால உரிமையா கூப்பிடு பா.

சூர்யா : சரிங்க மாமா.

ஷாலினி அம்மா : இங்க நம்ம இவ்வளவு பேசுறமே அங்க அவங்க ரெண்டு பேரையும் கொஞ்சம் பாருங்க.

ஷாலினி, அபி : சாக்லேட் சாப்பிட்டுகிட்டே ரெண்டு பேரும் டிவியில் கார்டுன்னு பார்த்துகிட்டு இருந்தாங்க.

சூர்யா : இதுல எது குழந்தைன்னே தெரியல.

ஷாலினி அம்மா: என்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை வெச்சுகிட்டு கார்ட்டூன் பாக்குறா பாருங்க.

கதிரேசன்: என்ன கல்யாணமா சொல்லவே இல்ல.

ஷாலினி அப்பா : ஒரு நல்ல இடமா தேடி வந்து பொண்ணு கேட்டாங்க அதான் மாமா கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.

லட்சுமி: நல்லா விசாரிச்சிட்டிங்களா.

ஷாலினி அப்பா: விசாரிச்சிட்டோம் அக்கா நல்ல இடம் பையன் ஐடி கம்பெனியில் ஒர்க் பண்றாரு நல்ல சம்பளம் பெரிய இடம் தான் அதான் ஒத்துக்கிட்டோம்.

அபி :மிஸ் உங்களுக்கு கல்யாணம் ஆக போகுதா.

ஷாலினி :ஆமா செல்லம்.

அபி : அவங்க பெயர் என்ன.

ஷாலினி : சரத்.

அபி : பெயர் ரொம்ப நல்லா இருக்கு மிஸ்.

ஷாலினி : தேங்க்ஸ் டா செல்லம்.

அப்பறம் ஷாலினி அவ அப்பா, அம்மா எல்லாரும் கொஞ்ச நேரம் பேசிட்டு அவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க.

நாட்கள் ரொம்ப வேகமா நகர ஆரம்பித்தது.ஷாலினி, அபி ரொம்ப க்ளோஸ் ஆக ஆரம்பிச்சாங்க.ஷாலினி, அபியை நல்லா பார்க்கிறதால சூர்யா எந்த சிரமமும் இல்லாம ஜாப்க்கு போய்ட்டு வந்தான்.

ஆனால் ஷாலினிய கல்யாணம் பண்ணிக்க போற சரத்துக்கு தான் அவள் அடிக்கடி அபியை பற்றி பேசுவது பிடிக்கவில்லை.

ஷாலினி எப்ப எல்லாம் அபியை பற்றி பேசுகிறாளோ அப்போது சரத் அந்தப் பேச்சை டைவர்ட் பண்ணி விடுவான். ஷாலினியும் அதை பெருசாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுவாள்.

தொடரும்....
 
Top