• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 46

Member
Joined
Dec 1, 2024
Messages
50
சுந்தரி - 46


விஷயம் அறிந்த அடுத்த நிமிடம் தாய், தந்தையிடம் இருந்து அழைப்பு வர, அழைப்பை ஏற்றவனிடம் வாழ்த்து மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டனர். அவனுக்குப் புரிந்தது பஞ்சாயத்தில் நடந்ததை எண்ணி அவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டிருப்பது.

அன்றிரவு படுக்க போகும்போது, “சுந்தரி இனி நமக்கு இங்க வேலை இல்லை. தென்காசில வீடு பார்த்திருக்கேன். அங்க தான் இருக்கப் போறோம். இத்தனை நாளா இந்த ஊர் பிரச்சனைக்காக தான் இருந்தேன். இனி பசங்க பார்த்துப்பாங்க. நாம நம்ம பிழைப்பை பார்த்து கிளம்பலாம்” என்றான் மனைவியிடம்.

“நம்ம பிழைப்பா? உங்க பிழைப்பு சொல்லுங்க. நீங்க போறதுக்கு என்னை ஏன் கூப்பிடுறீக? ஊரே ஹீரோவா கொண்டாடினா நிஜ ஹீரோ ஆகிடுவீகளோ? நான் எங்கேயும் வரமாட்டேன். இது தான் என் வீடு. இங்க தான் நான் இருப்பேன்.” என்று அழுத்தமாக சொன்னாள் செல்வ சுந்தரி.

“ஆனா, இது என் வீடு இல்லையே சுந்தரி. இந்த வீட்டில் எத்தனை நாள் இருக்க முடியும்?”

“நான் உங்களை இங்க இருக்கச் சொல்லலையே. உங்க வேலை எங்கேயோ அங்க போங்க. நான் தடுக்கலை.” என்று விதண்டாவாதம் பேசினாள் பெண்.

“உன் சுந்தரனுக்காக வரமாட்டியா?” என்றவன் குரல் கரகரத்தது.

“நான் வரமாட்டேன். வர முடியாது” என்றாள் அழுத்தமாக.

“திரும்பத் திரும்ப சொல்ல வைக்காத சுந்தரி. புருஷன் இருக்கிற இடம் தான் உனக்கு சரி. இங்கே இருந்து உன்னோட பேரையும் கெடுத்து, என்னோட பெயரையும் கெடுத்து, எதுக்கு இதெல்லாம். வந்துரு சுந்தரி எனக்காக.” என்றான் திரும்பவும்.

“யாருக்காகவும் என்னால வர முடியாது. நான் இங்க தான் இருப்பேன்” என்றாள் அடமாக.

அதில் கோபம் வரப்பெற்றவன், “இல்ல நீ என்னோட வரணும். வர்ற. நைட்டுக்குள்ள முடிவு பண்ணி காலையில வீடு பால் காய்ச்ச என்னோட வர்ற.”

“முடியாதுன்னா முடியாது தான்.”

“ஓ... ஒருவேளை உன் ராஜன் மாமா சொன்னா வருவியா?” என நக்கலாக கேட்டான்.

“அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. எனக்கு புடிக்கல. அதனால வரலன்னு சொல்றேன். இதுல ஏன் நீங்க மாமாவ இழுக்கறீங்க? அவரை தொந்தரவு பண்ணாதீங்க.”

“ஓகே. அவனை டிஸ்டர்ப் பண்ணலை. அப்ப மார்னிங் உனக்காக நான் காத்திருப்பேன். படுத்து தூங்கு. குட் நைட்” என்று வெளியே சென்றான்.

“மாமா உங்க அண்ணன் வரவர ரொம்ப அநியாயம் பண்றான். அடங்கமாட்டான் தான் இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வை.” என்று இல்லாத ராஜனிடம் புகார் அளித்தாள்.

“கம்ப்ளைன்ட் போலீஸ்காரனிடம் பண்ணனும். ஏன் செத்துப்போன உன் மாமனிடம் சொல்லிட்டு இருக்க? என்கிட்ட வந்து புகார் குடு. நான் உன்னுடைய கம்ப்ளைன்ட் எடுத்துக்கிறேன்.” என்றவன் அவளை நெருங்கி, “உடம்பு கசகசன்னு இருக்கு. சேர்ந்து ஒரு குளியல் போடுவோமா?” என்று சோம்பல் முறிக்க கைகள் உயர்த்த, அவனை விட்டு அவள் விலகப்பார்க்க, உயர்த்திய கைகளால் அவளை தன்னோடு சேர்த்து அணைத்தான்.

“விடுங்க விடுங்க சொல்லுறேன்ல. ஏன் இப்படிப் பண்ணுறீங்க? நான் உங்க தம்பியை காதலிச்சவ” என்றாள் அவனை தன்னிடம் இருந்து விலக்க.

“ம்ம்ம்... நீயே சொலிட்ட காதலிச்சவன்னு. காதலிச்சிட்டு இருக்கிறவ சொல்லலை. சோ, மேடம் என்னை ஏத்துக்க ஆரம்பிக்கிறீங்க” என்றான் அவன்.

“அப்படிலாம் இல்லை. நீங்க எதோ தப்பா...”

“சரியா தான் புரிஞ்சிருக்கேன். காதல் இல்லாம செய்த கல்யாணங்கள் பெரும்பாலும் கல்யாணத்துக்குப் பின் காதலில் சிறக்குது. பிற்காலத்தில் நம்ம கல்யாணமும் காதலுக்கு எடுத்துக்காட்டா இருக்கும்.” என்று அவள் நெற்றி முட்டி நிற்க,

“உளராம போங்க” என்று நகர்ந்தவளை நகர விடாது, “பாம்பு கடிச்சப்ப என்னோட இருந்த, என்மேல் அன்பைக் கொட்டிய என் சுந்தரி வேணும். அவளை நான் ரொம்ப தேடுறேன்.”

“அது மாமான்னு...”

“அப்படிங்களா அம்மணி. உன் மாமனை நீ தொட விட்டது இல்லைன்னு எனக்கு தெரியும் சுந்தரி. உன்னை தொட்டு முத்தமிட்டவனும், உன்னோட குடும்பம் நடத்தப் போறவனும் நான் மட்டும் தான். அதுக்காக உன்னோட சின்ன வயசு காதலை காதலே இல்லைன்னு சொல்லல. காதலே இல்லாம ஒருத்தனுக்காக இத்தனை வருடம் காத்திருக்க முடியாது. அதனால அந்த காதலை நான் மதிக்கிறேன்.” என்று அவள் காதலுக்கான மரியாதையைக் கொடுத்தான் ஈஸ்வர்.

“தெரியுதுல்ல. அப்புறம் என்னை விட்டுட்டு போங்களேன்” என்றாள் கெஞ்சலாய்.

“போறதுக்கா உன்னை காதலிச்சி கல்யாணம் செய்தேன். எதார்த்த வாழ்க்கைக்கு வா சுந்தரி. உன் பத்து வருஷ காத்திருப்பை, காதல்னு மட்டும் முடிச்சிட முடியாது. அது ஒரு வைராக்கியம். அந்த வைராக்கியத்தைக் கட்டிக் காக்க தான் நீ தனியா இருந்தது. இருக்க போறேன்னு பிடிவாதமா இருக்கிறதும். என்னை ஏத்துக்க நீ கஷ்டப்படுற இன்னொரு விஷயம் என்னன்னா, வேற ஒருத்தனா இருந்தால் கூட உன் மனசு என்னை ஏத்துக்க தயாராகும். ஆனா, ஒரே முக அமைப்புள்ள ஒருத்தரை கல்யாணம் செய்ததால உன்னால ஏத்துக்க முடியலை. இந்த முகத்தினால் ஒரு உறுத்தல் உனக்கு கண்டிப்பா இருக்கும். அதைத் தாண்டி என்னோட நீ வாழணும் சுந்தரி. இதை நம்ம வாழ்க்கையா பாரு.”

“உங்களுக்கே என்னோட நிலை தெரியுது. அப்புறமும் ஏங்க. உங்க தேவை இந்த உடலா? உடல்னா அதுக்கு சென்னையில் இல்லாத ஆளா” என்றாள் அவனை காயப்படுத்த என்று.

அவள் வார்த்தையின் வீரியம் தாளாது கோபத்தில் அவளின் நெருக்கத்தை அதிகரித்து கண் பார்த்து, “சென்னையில் ஆள் இல்லைன்னு நான் எங்கடி சொன்னேன். நினைச்சா தினமும் ஒருத்தியோட என்னால குடும்பம் நடத்த முடியும். அதுக்கான வசதியும், பதவியும் எனக்கு இருக்கு. என்னோட அம்மா என்னை அப்படி வளர்க்கலை. ஒரு மிருகத்தோட உடல் பசிக்கு பலியானவங்களுக்கு தெரியும், தன்னோட பையனை எப்படி வளர்க்கனும்னு. என் வருங்கால பொண்டாட்டிக்காக என்னை யாரிடமும் இழக்காம இருந்ததுக்கு, நீ கொடுக்குற பட்டம் சூப்பர்.”

“உன்னோட உடல் தான் வேணும்னா எப்பவோ எடுத்திருப்பேன். பாம்பு கடிச்சதா சொன்ன அன்னைக்கு, உன்னைக் கேட்டிருந்தா தர்ற நிலையில் நீ இருந்த. யாரோன்னு நினைச்சி என்னை நீ ஏத்துக்கிட்டா எனக்கு அது அசிங்கம். உனக்கு அது அவமானம். நாட்டை காப்பாத்துற பொறுப்பில் இருந்துட்டு, ஒரு பொண்ணை கற்பழிக்கிறது தூக்கிற்கு சமம். அதான் எல்லையோட நின்னு எழுந்து போயிட்டேன். நீ சொல்லுவதை பார்த்தா உன்னை அப்பவே எடுத்திருக்கனுமோ?” என்றதில் அவள் அதிர்ந்து பார்க்க,

“உனக்காக தானடி இத்தனை வருசமா கன்னிப் பையனா இருக்கேன். என்னைப் பார்த்து யாரோடவும் போ சொல்லுற. நான் ஏன் யாரோடவோ போகனும். நீ எதுக்கு இருக்க என் பொண்டாட்டின்னு. எனக்கு இப்ப உன்னைக் கொடு” என்று உதட்டோடு உதடு பதிக்க, ‘ஹக்’ என்ற சத்தம் அவளிடம். முத்தம் சில நொடிகளில் யுத்தமாக மாற, மெல்ல அவளைத் தூக்கி படுக்கை அறையின் கட்டிலில் கிடத்தி அவளின் புடவையின் ஊக்கை கழட்டி முந்தானையை விலக்கினான்.

தான் விட்ட வார்த்தையின் வலியை திருப்பி கொடுக்கவென்று, தன்னிடம் அத்துமீறும் கணவனை தடுக்க வழியில்லாது படுத்திருந்தவள் கண்கள், சிறுதுளி கண்ணீரை வெளியிட, அறையின் சிறு வெளிச்சம் அதை மறைத்தது.

முத்தம் முடித்து கீழே இறங்கியவன் பார்வை அவளின் அங்க வனப்புகளில் பதிய தொண்டைக்குள் எச்சில் விழுங்க பார்த்திருந்தான். அனைத்தையும் அனுபவிக்க அவன் இளமை தூண்ட, அவன் இதழ்கள் ஆடை மீது அவளின் அங்கங்களை தீண்டியது.

சொல்ல முடியா ஒரு உணர்ச்சி அவளையும் ஆட்கொள்ள மெத்தையின் நுனி அவள் கைகளில் சிக்கி கசங்கியது.

மெல்ல இன்னும் இறங்கி அவளின் தொப்புள் கண்டவன் அதில் மோகம் கொண்டு, பல் படாது கவ்வி இழுக்க பெண்மை ஒன்று துள்ளித் துடித்தது. செல்லக் கடிகளும் முத்தங்களுமாய் அவளை துடிக்க வைத்தவன், அவள் கைகள் தன்னை அணைக்காததால் சிறு ஏமாற்றம் அவனுக்கு.

“என்னை நிஜமாவே உனக்குப் பிடிக்கலையாடி?” என்று காதோரம் கேட்க,

“அப்படி தான் நினைக்கிறேன்” என்று பொய்யுரைத்தாள்.

கோபத்தில் கழுத்தோரம் கடித்து, இதர பகுதியிலும் அவளைக் கடித்து காயப்படுத்,த கணவன் செய்த செயல்கள் எல்லாம் அவளுக்கு ஒருவித போதையை கொடுத்தது. மெத்தையில் இருந்த கை கணவனை தன்னோடு அணைக்கும் நேரத்தில், “சாரி” என்று அவளை விட்டு விலகினான்.

அவளுக்கு ஏமாற்றம் இருந்த போதிலும், அதை விட அதிக ஏமாற்றம் அவனுக்கு தான் என்பதையும் அறிவாள்.

பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கைக்கு அழைத்த, அப்படி ஒரு காமபிசாசுக்கு மகனாக பிறந்தவன் இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருப்பது ஆச்சர்யம் தான் அவளுக்கு. அதில் ஒருவித நிம்மதி எழ, படுக்கையில் எழுந்து அமர்ந்து தன்னையே ஒருமுறை பார்க்க, வெட்கம் அழையா விருந்தாளியாய் வந்து முந்தானை கொண்டு முன்னழகை மூட வைத்தது.

“கொஞ்ச நேரத்துல என்ன பண்ணிட்ட மாமா என்னை. உடலும் உள்ளமும் உன்னை தேடுது. எப்படி வந்தது அவ்வளவு கட்டுப்பாடு. என்னை மொத்தமா முடிச்சிடுவ நினைச்சா, இடுப்புக்குக் கீழ இறங்கவே இல்லை. பயம் மாமா உனக்கு. எங்க போனா உன் கட்டுப்பாடு உடைஞ்சி உன் கன்னித் தன்மையை இழந்திடுவியோ பயம். கொஞ்சம் கொஞ்சமா உன் பக்கம் இழுத்த நீ, இப்ப உன் செய்கையால் முழுசா இழுத்துட்ட. என்ன அந்த முகம் தான் என்னைத் தடுக்கும் ஆயுதமா இருக்கு. அதை தாண்டி வர பார்க்கிறேன் மாமா” என்றாள் தனிமையில்.

யோசனையின் நடுவே திடீரென திருமணத்திற்கு முன் அவன் வாங்கிய சத்தியம் நினைவு வந்தது. ‘ப்ராமிஸ் பண்ணு. எந்த சூழ்நிலை வந்தாலும் என்னோட தான் இருப்பேன்னு. சத்தியத்தை மீறினா நான் இல்லைன்னு அர்த்தம்.’ நினைவு வந்த நிமிடம் அவ்வார்த்தைகள் உண்மையாகிட கூடாது என்ற வேண்டுதல் வைத்தாள் அவசரமாக.

நீண்ட நேரம் கழித்துத் தன்னருகில் வந்து படுத்தவன் அரவம் உணர்ந்து அவன் உறங்கியதும், நெருங்கி தோளில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள் அவனின் சுந்தரி.

காலை எழுந்தவன் உறங்கும் மனைவியின் முகம் பார்த்து, “சாரிமா. எந்த நிலையிலும் உன்னை ஹர்ட் பண்ணக்கூடாது நினைச்சேன். நைட் என்னோட பொறுமை என்னை விட்டு போயிடுச்சி. நீ பேசினதும் தப்பு தான். அதுக்காக விருப்பம் இல்லாத பெண்ணிடம் அத்து மீறினது குற்றம். என்னை புரிஞ்சிக்கோடி. உனக்காக தான் எல்லாமே விட்டுட்டு வந்திருக்கேன். எனக்காக என்னோட வரமாட்டியா? என்னோட நீ தென்காசி வந்தா சந்தோசப்படுவேன்” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, “லவ் யூ சுந்தரி” என்றான்.

கணவன் வெளியே சென்றதும் கண் விழித்தவளுக்கு, அவனின் காதல் மெய்சிலிர்க்க வைத்தது. ரெண்டாவது காதல் குற்றம் என்று வாதிட்டவள், இப்பொழுதோ கணவனின் காதலில் மெல்ல மெல்ல கரைகிறாள். செல்பவனின் முதுகை சிறு புன்னகையுடன் பார்த்தவள், குளிக்க எழுந்து சென்றாள்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top