• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 42

Member
Joined
Dec 1, 2024
Messages
46
சுந்தரி - 42


அக்கா செல்வதைப் பார்த்தாலும் அவள் யோசிக்கட்டும் என்று மோட்டார் ஆஃப் செய்ய ரூம் பக்கம் சென்றாள் சித்ரா.

“ஓய் எனக்காக தான இங்க வந்த?” ஹரிஹரன் குரல் கேட்டு அவனைக் காண, கண்ட நொடி வெட்கம் கொண்டு வேறுபுறம் திரும்பினாள்.

“யார் சொன்னா. நான் மோட்டர் ஆஃப் பண்ண வந்தேன். இதோ...” என்று சிகப்பு பட்டனை அழுத்தி அங்கு இருந்து நகர, அவளை வழி மறித்து, “ரூம் சின்னதா இருக்கே. நமக்கு சரி வருமா?” என அவளை நெருங்கியவாறு கேட்டான்.

அவனின் மேலாடை இல்லா தேகம் பார்த்து எச்சில் விழுங்க, “எ..எதுக்கு?” என்றாள் திணறலாய்.

“எதுக்கோ” என்றவன் அவளின் முகத்தில் விரலால் கோலமிட, அவளோ அதை தடுக்க, அவள் இரு கையையும் உயர்த்திப் பிடித்து, உடலோடு உடல் மோத அவளின் தேகம் எங்கும் மின்சார பாய்ச்சல். நெற்றி முத்தம் ஆரம்பித்து, உதட்டோடு உதடு பொருத்தி மென்மையாய் முத்தமிட்டு உதடுகளை விலக்க, உணர்ச்சி நரம்புகள் யாவும் இருவருள்ளும் பேயாட்டம் போட்டது. அவள் கைகளை விடுத்து அவளைத் தன்னோடு அணைத்து, கழுத்தில் முகம் புதைத்த நொடி, பெண்மையின் அழகியலைக் கண்டுகொண்டான்.

“முதல்முறை ஒரு பொண்ணை கட்டிப் பிடிச்சிருக்கேன். செம கிக்கா இருக்கு சித்து. லவ் யூ” என்றான் காதோரம் முத்தமிட்டு.

அதில் கூசி சிலிர்த்தவள், “ம்ம்ம்” என்றாள் சிணுங்கலாய்.

“சீக்கிரமே கல்யாணம் செய்துக்கலாம். இத்தனை காலம் இருந்தது வேற. இனி நீ இல்லாம இருக்க முடியும் தோணலை. இப்பவே உன்னை என்னன்னவோ பண்ண கையும் உதடும் பரபரக்குது” என்றவன் இதழ்கள் அவள் இதழோடு சேர, ஈஸ்வரின் ‘அவன் ஜட்டி போடலமா’ என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்ந்த நொடி, நாணம் மேலிட அவனைத் தள்ளிவிட்டு வெளியே சென்றாள்.

முட்டி நின்ற ஆசையை அடக்க சில நொடிகள் அமைதியாக நின்றவன், அவளின் நாணம் எதனால் என்பது தெரிந்ததும், முகமெங்கும் வெட்கம் சூழ, சிறு புன்னகையுடன் வெளியே வந்தான். ஒரு மாமரத்தின் தாழ்ந்த கிளையில் அவள் அமர்ந்திருப்பது தெரிய, அவள் அருகில் அமர்ந்தவன் கண்ணியம் கருதி வேறு கதை பேச, உரிமையாய் அவன் தோள்சாய்ந்து கொண்டாள் பெண்ணவள்.

“சுந்தரி என்ன இங்க வந்து நிற்கிற? சருகா இருக்கு. பாம்பு எதுவும் வந்திடப்போகுது. கொஞ்சம் தள்ளி வா” என்று அழைத்தான் சுந்தரேஸ்வரன்.

“அன்னைக்கு வந்தது நீங்க தான?”

“என்னைக்கு?” என்றான் புரிந்தும் புரியாதது போல்.

“பாம்பு வந்தப்ப காப்பாத்தினது. அது உங்களை கடிச்சது? நீங்க தான்ல.”

“ஹ்ம்... ஆமா நான்தான். அதுவரை உன் கனவில் வந்தவன், உன் வீட்டுக்குள் முதல்முறை வந்தேன்.”

“எப்படி சரியா அந்த நேரம் வந்தீக?”

“உனக்கு எதோ ஆபத்துன்னு தோணிட்டே இருந்தது. அந்த இரவு நேரம் போகக்கூடாது சொல்லி ரஞ்சிமா எவ்வளவோ தடுத்தும் நான் கேட்கலை. என் மனசு உன்னை பார்க்கணும் சொல்லி பிடிவாதமா நின்னுசசி. வந்து பார்த்தா அது உன்னை கொத்த காத்திருக்கு. ஒரு நொடி என் உயிர் என்னிடம் இல்லை. நான் வராம போயிருந்தா என்ன ஆகிருக்கும். இப்ப நினைச்சாலும்...” என்றவனுக்கு அந்த நிமிடங்கள் நினைவு வர தலையை சிலுப்பிக் கொண்டான்.

அதை அவள் உணர்ந்தாலும், “என்ன ஆகிருக்கும் என் உயிர் போயிருக்கும். நல்லது தான” என்றாள் அலட்சியமாக.

சட்டென அவளின் கழுத்தைப் பிடித்தவன், “இந்த உயிர் எனக்குச் சொந்தமானது. அதை வேண்டாம் சொல்ல உனக்கு உரிமை இல்லை. நீ எனக்கானவள். என்னோட மனைவி என்பதை மைண்ட்ல பதிச்சிக்கோ. உனக்கு ஆபத்துன்னு எனக்கு ஏன் தோணனும்? அது மாதிரி அந்த மதன் வந்தப்பவும், உனக்கு எதோ பிரச்சனன்னு எனக்கு ஏன் தோணனும்? இதுதான் உனக்கும் எனக்குமான பந்தம். இதை விட்டுட்டு விலக நினைக்காத. தொலைச்சிடுவேன்” என்று அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்து, “கோபத்தில் கழுத்தை பிடிச்சதுக்கு சாரி” என்று அங்கிருந்து நகர்ந்தான்.

ஏனோ அவனின் வாசம் அவளைச் சுற்றி வளையமாய் நிற்க, சில நிமிடங்கள் அவன் கோபத்திற்கான அர்த்தத்திற்கு விடை தேட ஆரம்பித்தாள்.

“ஹரி சித்துவ கூட்டிட்டு வா நேரமாகுது” என்றதும் மரத்தில் இருந்து குதித்து இருவரும் வர, “உன் அக்காவ கூட்டிட்டு வா சித்து” என்று சொல்ல,

“நீங்களே போய்...” என்றவளிடம்,

“அது சரி வராதுமா. நீ கூட்டிட்டு வா. எனக்கு அர்ஜெண்டா வெளில போகனும்.”

“சரி மாமா” என்றவள் அக்காவை அழைத்து வர, வீடு வந்ததும் அவர்களை இறக்கிவிட்டு சென்றுவிட்டான்.

“நீங்க சார ஏதாவது சொன்னீங்களா அக்கா?” அவனின் கேள்விக்கு அவள் பதில் சொல்லாமல் நடக்க, “ஒரு நிமிஷம்” என்று அவளை நிறுத்தியவன், “உங்களுக்கு சார் சொன்னாரா தெரியாது. அவர் கனவு ஒரு பக்கம் இருந்தாலும், இங்க வர நான் தான் காரணம். உங்களோட கதை கேட்ட எனக்கு மனசுல ஒரு சங்கடம். உங்களோட காதல் கிடைச்ச அந்த லக்கி பெர்சன் யாருன்னு தெரிஞ்சிக்க, யாருக்கும் தெரியாம உங்க வீட்டுக்கு வந்து அவரோட போட்டோ பார்த்தப்ப, சார பார்க்கிறாப்ல இருந்தது. அதை ஒரு போட்டோ எடுத்து, இன்னும் உங்களைச் சுற்றி உள்ள சிலதும் சேகரித்து, உங்க கதையை ஒரு டாக்குமென்ட்ரி ஆக்கினேன். அதை அவரிடம் காண்பிக்க ரொம்ப முயற்சித்தேன்.”

“என் முயற்சிக்கு இன்னொரு காரணம், எங்க சார் உங்களை கல்யாணம் செய்தா நல்லா இருக்கும் தோணியது. உங்களுக்கான வாழ்க்கையை வாழாம இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்தது. அவரும் கல்யாணம் செய்யாம வேலை வேலைன்னு சுத்திட்டு இருந்தார். உங்களை ஜோடி சேர்த்தா என்ன என்ற எண்ணம் வரவும் அதற்கான முயற்சி எடுத்தேன். அப்பவும் அவர் பிடிகுடுக்கவே இல்லை.”

“ஒரு நாள் அவரா வந்து உன்னோட டாக்குமெண்டரி குடுன்னு கேட்டார். நான் குடுத்ததைப் பார்த்த நிமிடம் யோசிக்கவே இல்லாம, உங்க இருப்பிடம் கேட்டு ஒரு வாரத்துக்குள்ள தன்னோட வேலையை முடிச்சிட்டு, இங்க ட்ரான்ஸ்பர் கேட்டுட்டு வந்துட்டார். உங்க நிலை எங்க யாருக்கும் புரியாம இல்லை. இதுவும் கடந்து போகும்னு ஒரு வாக்கியம் இருக்கு. நீங்களும் பழயதை கடந்து வாங்க. அவர் உங்க கணவர். உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் ஒரே புள்ளியில் அமைஞ்சிடுச்சி. அதை அழகான கோலமா மாத்திக்கிறது உங்களிடம் இருக்கு. உடனே எதுவும் சாத்தியம் இல்லை தான். அவரை ஹர்ட் பண்ணாம நட்பா பழக ஆரம்பிக்கலாமே. உங்களைத் தாண்டி ஒரு உலகம் இருக்கு. அதைப் பாருங்க. நான் வரேன். வரேன் சித்து” என்று சென்றான்.

“என்ன அடுத்த அட்வைஸ் பண்ணப்போறியா?” என்று தங்கையிடம் பாய,

“நான் ஏன் பண்ணனும். இவ்வளவு தெளிவா எல்லாரும் சொல்லுறதை புரிஞ்சிக்காத முட்டாள் இல்ல என் அக்கான்னு தெரியும். உன் வாழ்க்கை நீதான் வாழணும். நான் என் மச்சானோட இப்போதைக்கு கனவுல குடும்பம் நடத்தப் போறேன். அவர் இருக்கிற ஸ்பீடுக்கு எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் முடிஞ்சிடும். ப்பா... என்னா புடி, என்னா கடி” என்று உதட்டைத் தொட்டு காட்டி கடுப்பேற்றிச் சென்றாள்.

“யேய் என்னடி இப்படி சொல்லிட்டுப் போற. கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்புடி” என்று போகும் தங்கையைப் பார்த்து சொன்னாள்.

திரும்பி வந்த சித்ரா, “தப்பு தான். எல்லை மீறாத வரை. கட்டிப்பிடிக்கணும் ஆசைப்பட்டவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு குடுத்தேன். நானும் எல்லை மீறலை. அவருக்கும் அந்த எண்ணம் இல்லை. மாறா சீக்கிரம் கல்யாணம் செய்யும் எண்ணம் வந்திருக்கு. ஆனா நீ எல்லை மீறலாம் அக்கா. அதுக்கான அங்கீகாரம் இருக்கு” என்று அவளின் கழுத்தில் இருந்த தாலியைக் காண்பித்து, “மாமாவுக்கு ஒரு வாய்ப்பு நீயும் குடுத்துப்பாரு. உன்னை விட்டு அங்க இங்க விலகமாட்டார். வாழ்க்கையை என்ஜாய் பன்னுக்கா” என்று சென்றாள் சித்ரா.

யோசனைகள் அதிகரிக்க அதிகரிக்க தலைவலி அதிகமாகவும், மதிய உணவு சமைக்கவும் மறந்து கட்டிலில் படுத்துவிட்டாள்.

வேலை முடித்து ஏழு மணிபோல் வந்த ஈஸ்வர், வீடு இருட்டில் இருப்பதை கண்டு மின்சாரத்தை ஒளிர விட்டு, மனைவியின் அறை நோக்கிச் செல்ல அது சாத்தியிருந்தது. நேரே கிச்சன் வந்தவன் அங்கு எதுவும் சமைக்கவில்லை என்றதும், தனக்குத் தெரிந்த உணவு செய்ய ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தவன், அப்படி எதுவும் இல்லை என்றதும் ரஞ்சிதாவை அழைத்து தோசை மாவு கேட்க, அவளோ இரவு உணவையே கொண்டு வந்துவிட்டாள்.

“எதுக்குமா இதெல்லாம்? மாவு மட்டும் தந்திருக்கலாமே?”

“நீங்க இப்பதான் வேலை முடிச்சிட்டு வரீங்க. வந்ததும் சமையல்னா கஷ்டம். ஏன் என் அண்ணனுக்காக இதைக் கூட செய்யக்கூடாதா?” என்று கோபிக்க,

“தாராளமா செய்யலாம். நீ போய் பையன்களை பாரு” என்று அனுப்பி உடல் கழுவி உடை மாற்றி வந்தவன், தட்டில் இரண்டு இட்லி, இரண்டு தோசையுடன், சாம்பார், சட்னி வைத்து அறைக்கு வந்தான்.

தூங்கிக் கொண்டிருந்தவள் தலை வருடி, “சுந்தரி” என்று எழுப்பினான்.

தூக்கம் கலையாது எழுந்து அமர்ந்தவள் தன் முன் அமர்ந்திருந்தவனைக் கண்டு புன்னகைத்து, “மாமா” என்றழைத்தாள்.

அவள் பழைய நினைவில் சொல்லுகிறாள் என்பதை உணர்ந்த அவனிடமும் புன்னகை எழ, “உன் மாமா தான். இப்ப நான் குடுக்குறத சாப்பிட்டுவிட்டு தூங்குவியாம். மதியமும் சாப்பிடலை” என்றான் ஈஸ்வர்.

“எனக்குத் தூக்கமா வருது. நீங்க ஊட்டிவிடுங்க மாமா. சாப்பிட்டு அப்படியே தூங்கிடுறேன்.”

“குட்” என்றவன் அவளுக்கு ஊட்டி விட, அவள் உண்டு முடித்ததும் வாய் துடைத்து தண்ணீர் கொடுத்து, தட்டை வைத்து வந்தவன் படுக்கப் போனவளை தடுத்து, “ரெண்டு நிமிஷம் கழிச்சி படு. இப்ப படுத்தா சாப்பிட்டது செரிக்காது” என்று அவளை தன் தோள்சாய்த்துக் கொள்ள, “என்ன மாமா புதுசா தொட்டுப் பேசுறீங்க” என்று அவனை விலக்கி அமர்ந்தாள்.

“மாமா நீங்க ஏன் அவனை மாதிரியே இருக்கீங்க? வேற முகத்தோட பிறந்திருக்கலாம்ல. இந்த தாத்தா அவங்க அம்மாவுக்கு பண்ணினது கொடுமை. அதை கேட்டப்ப அவன் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். பாவம்ல மாமா அவன். எனக்காக காத்திருக்கிறது தப்புன்னு தெரிஞ்சும் காத்திருக்கேன் சொல்லுறான். ஆளாளுக்கு வண்டி வண்டியா அட்வைஸ் பண்ணுறாங்க மாமா. எதுவுமே பிடிக்கலை.”

“எப்படி மாமா இரண்டாவது காதல் வரும்? முதல் காதல் மனசுல அச்சா பதிஞ்சி இருக்கிறப்ப, இரண்டாம் காதல் எப்படி வரும். எல்லாரும் அவனுக்காக பேசுறேன்னு உளருறாங்க மாமா. உங்களுக்காக சாகத் துணிந்தவள் நான். உங்களுக்காகவே சாவை தடுத்து நிறுத்தியவள். இப்படி மனசால உங்களோட வாழ்ந்துட்டு, எப்படி மாமா அவனோட... அது ஏன் அவங்களுக்குப் புரிய மாட்டிக்குது. நீங்க கூட அவனை இங்க எனக்காகத்தான் கூட்டிட்டு வந்திருக்கீங்க. உங்களுக்கு எப்படி மாமா மனசு வந்தது? நான் உங்க செல்வி இல்லையா” என்று பேசியபடி படுத்து உறங்கிவிட்டாள்.


வருவார்கள்...
 
Last edited:

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top