• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 40

Member
Joined
Dec 1, 2024
Messages
44
சுந்தரி - 40


மாலையில் வீடு வந்த தாயின் முகத்தில் இருந்த ஏதோ ஒன்றை, என்ன என்று பார்த்தாள் சுந்தரி.

“இன்னைக்கு உன் கல்யாணம் முடிந்த நாள் மக்களே. நீ ஈஸ்வர் தம்பியோட சேர்ந்து காலத்துக்கும், குழந்தை குட்டியோட நல்லா வாழனும். அதைப் பாக்க உன் அம்மா இனி உன்னோட இருக்கமாட்டேன். நான் போறேன்” என்று புதிராகப் பேசினார் கனகா.

“அம்மா என்ன சொல்லுறிய? அவர் உங்களை அடிச்சாரா? என்னை பாக்ககூடாது மிரட்டினாரா? அதுக்காக என்ன பேச்சு இது” என்று கடிந்தாள்.

“என்னை மிரட்ட உன் அப்பன் உயிரோட இருக்கனுமே மக்களே” என்றார் புன்னகையுடன்.

“அம்மா” என்று அதிர்ந்தாள்.

“அவனை நான் கொன்னுட்டேன் மக்களே. என் மகளை வாழ விடமாட்டேன் சொன்னதால கொன்னுட்டேன். நீ சந்தோசமா வாழணும். எனக்கு அது போதும். உன் ஒருத்தி வாழ்க்கையை சரிபண்ண தான் இத்தனை நாள் பொறுமையா இருந்தேன். நானே தேடினாலும் இப்படி ஒருவன் உனக்கு கிடைத்திருக்க மாட்டான். கையில் கிடைத்த வைரத்தை கோயில் கோபுரத்தில் வை. கீழ போட்டு மிதிச்சிடாத மக்களே. நான் வரேன்” என்று நகர,

வேகமாக வந்து வாசலில் மூச்சி வாங்க, “நான் கேள்விப்பட்டது நிஜமா?” என்று நின்றான் ஈஸ்வர்.

தாயை விட்டு நீங்காது, “இ... இல்ல. நீங்க கேள்விப்பட்டது நிஜம் இல்லை. என் அம்மா கொலை பண்ணலை. அவங்களை கைது பண்ணாதீங்க” என்று அழுதாள் அவன் காவல்துறை பணியில் இருப்பதால்..

“சுந்தரி நீ கொஞ்சம் அமைதியா இரு. இவங்க என்னோட அப்பாவோட செல்லப்பொண்ணு. எனக்கு அக்கா. அப்படிலாம் விட்டுட மாட்டேன். நாங்க உங்களோட இருக்கோம்” என்க,

“நாங்களும் தான் பாப்பா” என்று வந்த ரவீந்திரன் பின்னால் அவர் குடும்பமும், ரஞ்சிதா குடும்பமும் இருந்தது.

நடந்ததை கேள்விப்பட்ட நிமிடம் சர்வேஸ்வரனையும், ஹரிஹரனையும் கனகா வீட்டுற்கு அனுப்பி வைத்துவிட்டான்.

“என்னை அக்கா சொன்னியா தம்பி” என்ற கனகாவிற்கு ஆனந்தக் கண்ணீர்.

“எனக்கு அக்கா தான நீங்க? நான் கூப்பிட்டது சரிதானப்பா” என்று தகப்பனிடமும் கேட்டு, “எனக்கு உங்களை அப்படி தான் கூப்பிட தோணுது. என்ன நடந்தது மட்டும் சொல்லுங்க? எதுவா இருந்தாலும் நான் இருக்கேன். பார்த்துக்கலாம்” என்றான் சுந்தரேஸ்வரன்.

“அது தம்பி...”

கோவிலில் இருந்து அனைவரும் செல்ல, அவர்கள் பின்னால் செல்ல எண்ணிய கனகாவிற்கு வீட்டில் கணவன் எந்த நிலையில் இருக்கிறானோ தெரியாது இருக்க, வீட்டிற்குச் சென்று அதன்பின் மகளைப் பார்க்கச் செல்லலாம் என்று, தாயை அவர்கள் வீட்டில் விட்டு, “எதையும் யோசிக்காம இருங்கம்மா. இப்பவாவது தெரிஞ்சிதேன்னு சந்தோசப்பட்டுக்கோங்க” என்று வெளியேற போக,

“இது உனக்கு எப்ப தெரியும் மக்களே?” எனக் கேட்டார் ஹேமாவதி.

“தெரிஞ்சி என்ன செய்யப் போறம்மா? முடிஞ்சதை விட்டுட்டு உன்னை தைரியமா வச்சிக்கோ. அவர் என்ன நிலையில் இருக்கார்னு பார்த்துட்டு வந்து உன்னை செல்வி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்றார் கனகா.

“நான் அந்த ஆள் செய்ததை தெரிஞ்சிக்க கேட்கலை. உன்னோட மனசு பட்ட கஷ்டம் தெரிஞ்சிக்க கேட்கிறேன். சொல்லுமா?” என்று கலங்கிய குரலில் கேட்டார்.

“அது தெரியும் சின்ன வயசுலயே.” என்றதில் ஹேமாவதி அதிர, “என்னோட படிச்ச பொண்ணோட அம்மாவிடம் தப்பா நடந்ததா அவங்க ஊர்ல சொல்லுவாங்க. அதை முதல்ல நம்பலை. உங்க பேத்தி சொன்ன மாதிரி தான்... தோட்டத்து வீட்டுல ஒரு பொம்பளையோட அவர் இருந்ததைப் பார்க்க நேரிட்டது. அதனால தான் அவரைப் போல ஒருத்தன் புருசனா வரக்கூடாது நினைச்சேன். விதி அவருக்கு அப்பனா ஒருத்தனை எனக்கு குடுத்திருச்சி.” என்றார் விரக்தியான குரலில்.

“ஊருக்கே தெரிந்த விஷயம் எனக்கு மட்டும் எப்படி தெரியாம போச்சி? கடவுளே அந்த அளவு முட்டாளாவா என்னைப் படைச்ச?” என்று தன்னையே நொந்து கொண்டார்.

“நடந்ததை விடும்மா. இனி நடக்கப் போறது தான் நமக்கு முக்கியம். என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்திடுச்சி. நம்மளோட எத்தனை வருட கனா இது” என்றார் சந்தோசமாக.

“அந்த ஒரு காரணம் தான் என்னோட அமைதிக்குக் காரணம். நீ போயிட்டு வா மக்களே. நான் உன் அப்பனைத் தலை முழுகிட்டு தயாரா இருக்கேன்” என்றதும் கனகா வீட்டுக்கு வந்தார்.

கனகா தலை வீட்டினுள் தெரிந்த கணம், “என்னடி உன் ஓடுகாலி பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சிட்டு வந்தியா? மனசு குளுகுளுன்னு இருக்குமே. ஊர் ஜனமே அதை பார்த்திருக்கு. பெத்தவன் என்னை என்னடி செய்த?” என்று எகிறினார்.

“நான் ஒன்னும் செய்யலை. நீங்க எவகிட்ட போயிட்டு வந்தியலோ. அசதியில் தூங்கியிருப்பிய” என்று குத்தலாகப் பேசினார் கனகா.

“என்னடி வாய் நீளுது? வெளிய போக வேண்டியிருக்கு வந்து உன்னிடம் பேசிக்குறேன்” என்று வெளியே சென்று திரும்பி வர ஒருமணி நேரம் ஆனது.

வந்த நிமிடம் முதல், “உன் பொண்ணையும் அவனையும் வெட்டப் போறேன் பாரு” என்று அருவாள் எடுத்து வர, பதறிப்போனார் கனகா.

‘கடவுளே என் பொண்ண ரொம்ப வருஷம் கழிச்சி மாலையும் கழுத்துமா பார்த்திருக்கேன். அது நிலைக்கனும். இவன் ஏன் பெத்த பொண்ணுக்கு நல்லது நடக்க விடாம நிலையா நிக்கிறான். எதாவது செய் தாயே” என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டிருக்க, கையோ அவரை வெளியே செல்ல விடாது பிடித்துக் கொண்டார்.

“யேய் கையை விடுடி. இல்ல முதல் வெட்டு உனக்கு விழும். என் பொண்ண சந்தோசமா வாழ விடு. என்னோட இத்தனை வருட தவம் என் பொண்ணோட கல்யாணம். அவளைக் கொல்லனும் துடிக்கிறியே நீயெல்லாம் ஒரு அப்பனா?” என்றார்.

“அதில் எனக்கும் சந்தேகம் இருக்கு.”

“ஓ... இந்த சந்தேகமும் இருக்கா. அது சரி உன்னை மாதிரி புடவையைப் பார்த்தாலே பொம்பளை பின்ன போற காமகோட்டிக்கு சந்தேகம் வராம இருந்தால் தான் ஆச்சரியப்படணும். நீ என்னை என்ன வேனும்னா நினைச்சிக்க. என் பொண்ணையும், தம்பியையும் வாழ விடு. அது போதும்” என்றார் கனகா.

“உன் தம்பினதும் பாசம் பொங்குதோ. உன் அப்பன் அவனையும் சேர்த்து வெட்ட சொல்லுறான். இரு ரெண்டு பேரையும் முடிச்சிட்டு வரேன்” என்று வெறியில் நிற்க,

அப்பொழுது தான் தெரிந்தது அதன் சூத்திரதாரி யார் என்று.

“உங்களை விட்டால் தான போவிய. எனக்கு என் பொண்ணு, என் தம்பியோட சேர்ந்து நீண்ட ஆயுளோட, நீண்ட காலம் சந்தோசமா வாழணும். அதுக்காக எதுவும் செய்வேன்” என்று கண்களில் கனல் கக்கி உறுதியாக நின்றார்.

“வசனம் பேசிட்டு திரியாத கனகா. போயி சோத்தைப் பொங்கி வை. ரெத்தக்காவு வாங்கிட்டு வந்து சாப்பிடுறேன்.” என்று வெளியேறப் பார்க்க,

“என்னைத் தாண்டி போனா தான எதையும் செய்ய முடியும்.”

“அதுக்கு?” என்றவர் பார்வை கூர்மையாக, அதற்குள் அவர் கையில் இருந்த அருவாளை பிடுங்கிய கனகா, அத்தனை வருட கோபம், ஆதங்கம், அழுகை, வலி, விரக்தி, வேதனை, ஆத்திரம் அத்தனையையும் நொடியில் கையில் கொண்டு வந்தவர், ஒரே போடாக கழுத்தில் இரக்க, ஆடு அறுத்த நிலையில் துடிதுடித்து இறந்தார் அவர்.

“அம்மா” என்றவள் கண்கள் கலங்க தாயைப் பார்க்க,

“அவன் எடுத்த அருவாளை புடுங்கி, அவன் கழுத்தை அறுத்துட்டேன். என் பொண்ணு நல்லா வாழணும் என்ற ஒரே காரணத்துக்காக” என்றார் கனகா.

அனைவரும் அதிர்ந்தாலும், கனகா செய்ததில் தவறு இருப்பதை தெரியவில்லை. வெறி பிடித்த மிருகங்களை வெட்டி விடுவது சாலச் சிறந்தது.

“அம்மா. அம்மா ஏம்மா இப்படி செய்தீக? அந்தாள் வெட்ட வந்தா இந்தா வெட்டுன்னு கழுத்தை குடுத்துட்டு இருப்பாகளா? நீங்க ஏம்மா அவசரப்பட்டிய?” என்று அழுதாள்.

“உங்க தம்பி ஒரு போலீஸ்காரன் என்பதை மறந்துட்டீங்களா? அவர் வந்து வெட்டுற அளவா அஜாக்கிரதையா இருப்பேன். போன் பண்ணி ஒரு வார்த்தை சொல்லிருந்தா போதுமே. அந்த ஆளை ஏதாவது ஒரு கேஸ்ல உள்ள தூக்கிப் போட்டு, ஆயுளுக்கும் வெளியில் வரவிடாம பண்ணிருப்பேனே.”

“எனக்கு என் பொண்ணு வாழ்க்கை முக்கியம் தம்பி. அவளுக்காக தான் இத்தனை வருட வாழ்க்கையே. அவளையும் உன்னையும் அவன் கொன்னுட்டா, அப்புறம் நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம். இத்தனை பேரை சாகடிக்குறதுக்கு பதிலா, அவன் மட்டும் போகட்டும்னு கொன்னுட்டேன்.” என்று நிதானமாக சொன்னார்.

“சரி சரி. கொஞ்சம் அமைதியா இருங்க. இப்ப ஹரி வந்திடுவான். அவன் வந்ததும் சூழ்நிலை பார்த்து முடிவு பண்ணிக்கலாம்” என்று முடிக்க அவர்கள் இருவரும் வர, “என்னடா? நமக்கு சாதகமா ஏதாவது இருக்கா?” எனக் கேட்டான் ஈஸ்வர்.

“இவங்களிடம் கேட்டு சொல்லுறேன் சார்” என்று கனகாவிடம் திரும்பி, “இது நடக்கிறப்ப அங்க யாராவது இருந்தாங்களா? உங்க வீட்டுல வேலை செய்யுறவங்க. சும்மா பேசிட்டுப் போக வந்தேன்னு சொல்லி வர்ற பக்கத்து வீட்டு ஆளுங்க. இல்லன்னா வாசல்ல, ஜன்னல் பக்கம்னு நின்னு யாராவது வேடிக்கை பார்க்கிறது. இப்படி யாரையாவது பார்த்தீங்களா?” எனக் கேட்டான் ஹரிஹரன்.

“இல்ல தம்பி. இன்னைக்கு எல்லாரும் விளையாட்டு போட்டி பாக்க போயிருப்பாங்க. ஊருல நடக்க முடியாத கிழடுகெட்டை தவிர எல்லாரும் சும்மா வேடிக்கை பார்க்க என்றாலும் போயிருப்பாங்க” என்றார் கனகா.

“நல்லதா போச்சி. அப்ப யார் எது கேட்டாலும், என் பொண்ணு செய்த கல்யாணம் பிடிக்காம, பொண்ண வெட்ட போறேன்னு கோபத்துல நின்னார். நான் வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தேன். என்னை தள்ளி விட்டுட்டு போனப்ப தூண்ல மோதி கீழ விழுந்தார். நான் அவர் மேல உள்ள கோபத்துல தூக்க போகல. ரொம்ப நேரமா அப்படியே இருக்கவும் பக்கத்துல போயி பார்த்தா ரெத்தம். பயத்துல என்னங்கன்னு கத்தி வெளில ஓடி வந்துட்டேன். இதுதான் நீங்க சொல்ல வேண்டியது. எங்க கேட்டாலும், எவ்வளவு மாத்தி மாத்திக் கேட்டாலும் நீங்க இதையே திரும்ப திரும்ப சொல்லணும். சரிங்களா?” என்றான்.

“நான் கொன்னது நிஜம்தானய்யா. அதுக்கான தண்டனையை எந்தவித சஞ்சலமும் இல்லாம ஏத்துக்கறேன்” என்று கனகா நியாயம் பேச,

“நீங்க கொன்னது ஒரு மிருகத்தை. வெறி பிடிச்ச மிருகம் இருந்தா, இன்னும் நிறைய குடும்பம் பாதிக்கப்படும். தன்னோட உயிரைக் காப்பாத்திக்க நடக்கிறதில் கொலை தப்பில்லைனு சட்டம் சொல்லுது. அப்படி பார்த்தாலும் நீங்க செய்தது சரி. நேர்ல பார்த்த சாட்சியா, நீங்க சாட்சி சொன்னா போதும். சுந்தரி உன் அம்மாவுக்கு நீ சொல்லு. மத்ததை நாங்க பார்த்துக்கறோம்” என்று உள்ளூர் சப்இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தான் ஈஸ்வர்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top