• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 38

Member
Joined
Dec 1, 2024
Messages
42
சுந்தரி - 38


“அவன் அவசரப்படல மக்களே. என் பையன் விதி முடிஞ்சதால போயிட்டான்” என்று அமைதியாக சொன்னார் ஹேமாவதி.

“புரியல? என்னம்மா சொல்ல வறீய?” கனகா கேட்க,

“உண்மையை சொல்லுறேன்மா.” என்று அன்று நடந்ததைச் சொன்னார்.

ஜாதகம் பார்த்த இடத்தில், “அக்கா எப்படி சொல்ல தெரியலை. கட்டம் ஏதேதோ சொல்லுது.”

“எதுவா இருந்தாலும் ஒடச்சி சொல்லிருங்க தம்பி.” என்றார் ஹேமாவதி.

“மனச தேத்திக்கோங்க அக்கா. உங்க பையனோட ஆயுள் ரொம்ப கம்மியா இருக்கு. அதுவும் ரொம்ப நெருக்கத்தில் இருக்கு. இந்தக் கல்யாணம் நடக்காது.”

சில நிமிடங்கள் மகனை எண்ணி அதிர்ந்து அழுது முடித்து முகத்தைத் துடைத்து, அவர் கொடுத்த தண்ணீரை குடித்து விட்டு, “இந்த மாதிரி ஜாதக பிரச்சனை இருக்கிற பையனுக்கு, கல்யாணம் நடந்தா அந்த பொண்ணு ஜாதகம் இதை சரி செய்யும்னு சொல்லுவாவளே. அப்படி எதுவும் இருந்தா சொல்லுங்க தம்பி.” அடக்கியும் அடங்காது வந்தது அழுகை.

“அப்படி ஒண்ணு இருந்திருந்தா முதல்ல உங்களுக்கு அதை சொல்லிட்டு தான் மற்றதை சொல்லி இருப்பேன். மீறி கல்யாணம் நடந்தா அன்னைக்கே இந்தப் பையன் உயிர் போகும். பொண்ணு விதவை பட்டத்தோட இருக்கனும் நினைச்சா பண்ணுங்க அக்கா.”

“பரிகாரம் செய்யலாமா? அதுக்கு வழி இருக்கான்னு பார்த்து சொல்லுங்க தம்பி?” எனக் கேட்டார்.

“பரிகாரம் நம்ம மன திருப்திக்கு வேணும்னா செய்துக்கலாம். ஆனா எதையும் மாத்த முடியாது. மாத்த முயற்சித்தாலும் தோற்றுப் போவீங்க” என்று பையன் ஜாதகத்தை மூடி கையில் கொடுத்துவிட்டார்.

என்ன செய்ய என்று தெரியாத நிலையில் பித்துப் பிடிக்காத குறையாக இருந்தவருக்கு, அவரின் பேத்தி வாழ்க்கை வந்து நெஞ்சை நெருடியது. சின்ன வயதில் இருந்து ஆசையை வளர்த்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தார். பின் தெளிந்து செல்வ சுந்தரி ஜாதகம் பற்றி கேட்டார்.

“இன்னும் கொஞ்ச வருஷம் இந்த ஜாதககாரர் வனவாசம் தான் இருப்பார். குடும்பத்தோட இணைக்க யார் நினைச்சாலும் முடியாது. இவங்க வனவாசத்தில் இருந்து வெளில வரும்போது அவங்க கல்யாணம் முடிஞ்சிருக்கும்.”

“நிஜமாவா தம்பி? என் பேத்திக்கு கல்யாணம் நடக்கும் தான? அவள் நல்லா வாழ்வா தான?” என்றவர் கண்களில் புதிதாக ஒரு ஒளி.

“கண்டிப்பா நடக்கும். குடும்பம், குழந்தை என்று ரொம்பவே சந்தோசமா வாழ்வா உங்க பேத்தி. கொஞ்ச வருடம் கஷ்டப்பட்டாலும், பின்னால் உள்ள காலம் சுபம் மட்டும் தான்.” என்றார்.

வீட்டிற்கு வருவதற்குள் பலவித யோசனைகள். அதன் பின்னே முடிவெடுத்து மகளைச் சந்தித்தார்.

“அம்மா. தம்பிக்கு...”

“ஆமாம் மக்களே. கண்டம் அவனுக்கு தான். அதுக்காக என் பேத்தி வாழ்க்கையை பாழாக்க எனக்கு எப்படி மனசு வரும். அவளோட உயிருக்கு ஆபத்துனு சொன்னா, நீ புள்ளைய பாதுகாக்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டன்னு மாத்தி சொன்னேன்.” என்றார் ஹேமாவதி.

“தம்பி உயிருக்கு ஆபத்துனா, அப்ப அந்த கல்யாண ஏற்பாடு? அது ஏன்ம்மா பண்ணுனீங்க? அந்த பொண்ணு பாதிச்சா பரவாயில்லையா?” என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டார் கனகா.

“அது உன் பொண்ணு மனச மாத்த செய்தது. உன்னோட அப்பனிடம் சொன்னேன். பேத்தி வாழ்வை நினைச்சாரோ என்னவோ, அவரும் சம்மதிச்சார். கடைசி நேரத்தில் பொண்ணு கல்யாணத்தை நிறுத்தி, அவங்க சொந்தக்கார பையன் கல்யாணம் செய்துக்கனும். இது தான் நாங்க சொல்ல இருந்தது. நிஜம் அது இல்ல. நம்ம வீட்டு ஏற்பாடு முழுக்க கண்துடைப்பு. அவங்க வந்தது எல்லாம் நாம உறவு என்பதால, அந்த பொண்ணுக்கு பார்த்த பையனை விசாரிக்க, நிச்சயத்துக்கு அழைக்க, கல்யாணப் பத்திரிகை வைக்க மட்டும் தான். பொண்ணு பேரை மட்டும் யூஸ் பண்ணிக்க கேட்டேன். நல்லது நடக்க சரின்னு சொன்னாங்க.”

“வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு ரொம்ப தெளிவு தான்” என்று வாயில் கைவைத்தார் கனகா.

மெல்ல சிரித்தவர், “தெளிவா இருந்திருந்தா உன் அப்பனை தெரிஞ்சிருப்பேன். இத்தனை வருஷ வாழ்க்கையே இல்லைன்னு ஆகிப் போச்சி. என்னன்னு சொல்ல.” என்றவர்பெருமூச்சு விட கனகா அமைதியானார்.

“செல்வி...? அவள் அவசரப்பட்டு முடிவெடுப்பா நினைக்கலை. அவன் அதுக்கும் மேல அவசரப்பட்டுட்டான். அவன் விதி இது தான்னு மனச தேத்திகிட்டேன். ராஜன் இவளுக்காக உயிர் விட்டதால, தன்னால் தான்னு நினைச்சவளுக்கு, இன்னும் அவன்மேல் பிடிப்பு அதிகமாகிடுச்சி. அவனை எரிச்ச இடத்திலேயே அவனுக்கு சமாதி கட்டி, அவன் நினைவில் வாழ ஆரம்பிச்சிட்டா. அது தப்பு உன் மனச மாத்திக்கோ சொன்னோம். கேக்க அவள் தயாரா இல்லை. என் பையன் இறந்து ஆறு மாசம் ஆகிருக்கும் அப்ப வீட்டை விட்டு வெளிய போறேன்னு நின்னு தனியா போயிட்டா. என்ன காரணம்னு இப்ப தான் புரியுது. அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்த்திடனும். ஏதாவது வழி சொல்லுப்பானு என் பையன அடிக்கடி கேட்டேன். அதன் விளைவு தான் அவன் அண்ணனோட கனவுல வந்து இழுத்துட்டு வந்திருக்கான்” என்றார் பெருமையாக.

“நிஜமும் அதுதான் பெரியம்மா” என்றார் அதுவரை அமைதியாக நின்றிருந்த கனகவேல்.

“என்ன நிஜம்?” எனக் கேட்டார் ஹேமாவதி.

“ராஜன் சாகுறப்ப செல்விக்கு கல்யாணம் செய்து வையுங்க சொன்னான். அவள் சம்மதிக்க மாட்டா. இருந்தாலும் விட்டுவிடாதீங்க. நீங்க பார்க்கலைன்னா, நான் பார்த்து அனுப்புவேன். அதுக்கு பின்ன தான் என் ஆத்மா சாந்தி அடையும் சொன்னான். சொன்ன மாதிரியே செய்துட்டான்.” என்று அன்றைய சுந்தர்ராஜனின் கடைசி நிமிடங்களைச் சொன்னார் கனகவேல்.

“சாகும் போதும் என் தம்பி, என் பொண்ணுக்கு நல்லது செய்ய நினைச்சிருக்கான். அந்த மனசு இப்ப இல்லன்னு நினைச்சா நெஞ்சே வெடிக்குது” என்று அழுதார் கனகா.

“இல்ல. இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என்று தேவகி மறுபடியும் மறுப்புடன் நின்றார்.

அனைவரும் அதிர்ந்து புரியாது அவரைக் காண,

“என்ன தேவிமா” என்றார் ரவீந்திரன்.

“இவனுக்கு இப்பவே முப்பத்தஞ்சி வயசுங்க. இன்னும் அவளிடம் போராடி வாழ ஆரம்பிக்க வருஷமாகிடும். நம்ம நிலையே நம்ம பையனுக்கும்னா தாங்க முடியலைங்க” என்றார் அவர்.

“அம்மா அம்மா” என்று தாயை தந்தையிடம் இருந்து பிரித்து தன்புறம் திருப்பி, முகம் நிமிர்த்தி, தாயின் கண் துடைத்து, “எங்க அம்மாவ எங்களிடம் குடுக்குறதே இல்ல இவர். கேட்டா என் பொண்டாட்டி. உனக்கு வேணும்னா கல்யாணம் செய்து உன் பொண்டாட்டி கொஞ்சு சொல்வார்” என்று தகப்பனின் கால்வாரி, “என்னை என்ன உங்க ரவி நினைச்சீங்களா? எண்ணி மூணே மாசத்துல அவளோட மனச மாத்தி என்னோட குடும்பம் நடத்த வச்சி, மாங்கா சாப்பிட வைக்கலை. நான்.. நான்...”

“அடுத்து சொல்லுடா.” என்றார் தேவகி கிண்டலாக.

“அட வரலன்னா விடேன்மா. சரி வாங்க நாம ரஞ்சி வீட்டுக்கு போகலாம். நமக்காக சமைச்சி வச்சிட்டு காத்திருப்பாங்க” என்றான் சுந்தரேஸ்வரன்.

“நாங்க ஊருக்கு கிளம்புறோம்டா. இந்த ஊர்ல எங்களால இருக்க முடியாது” என்று சொன்னார் ரவீந்திரன்.

“இழந்த இடத்தில் தான் நமக்கான மரியாதையை தேடிக்கனும். உன்னை அசிங்கப்படுத்தின இந்த ஜனங்களை, உனக்கான மரியாதையை குடுக்க வைப்பேன்ப்பா. அப்புறம் உன் பையனா இருந்து என்னத்துக்கு. நீ எதையும் யோசிக்காதப்பா.” என்றவன் மனம் உள்ளே கொதித்துக் கொண்டிருக்க, வெளியில் சாதாரணமாக நின்றிருந்தான்.

“மரியாதை எதையும் எதிர்பார்க்கலைடா மகனே. மனுசங்க மனசு நிலையானது கிடையாது. என்னை விட்டுட்டு அவளை பேச ஆரம்பிக்கும். என்னோட பெயர் எக்காரணம் கொண்டும், அவளோட சேர்ந்து அடிபடுறது பிடிக்கலை. அது இன்னும் என்னை அசிங்கமா உணர வைக்கும். இப்ப இந்த வாழ்க்கையில் ரொம்பவே நிம்மதியா இருக்கேன். சந்தோசமா இருக்கேன். இது போதும்டா எனக்கு.”

“சிங்கம் மாதிரி ரெண்டு பையன்களோட, ஊர்ல கொஞ்ச நேரம் நடமாடினா, அவள் சொன்னது அத்தனையும் பொய்யினு ஆகப்போவுது. விடுப்பா பார்த்துக்கலாம். அதை விடுங்க. உங்க நண்பனை நான் எப்படிப்பா கூப்பிடனும்?” என்று பால்ராஜை காண்பித்து கேட்டான்.

“என் ரெண்டாவது அண்ணனோட மருமகன். உனக்கு அக்கா புருஷன். முறைக்கு மச்சான். உனக்கு எப்படி இஷ்டமோ அப்படி கூப்பிட்டுக்கோ. உன்னை பார்த்ததும் சந்தேகம் வந்து என் நம்பர் கிடைக்காம தேடிப் பிடித்து கூட்டிட்டு வந்தான். இப்பவரை இருக்கும் ஒரே நட்பு” என்று நண்பன் பால்ராஜ் தோளோடு அணைத்து, “எப்படி என் அண்ணன் பொண்ண கல்யாணம் செய்தான்னு தான் தெரியலை” என்றார் அவர்.

“உன் மனைவிக்கு நடந்தது உன் அண்ணனாலனு தெரியாதுடா. தெரியாததால என்னைக்காவது நீ வருவ. அப்ப உன்னோட குடும்பத்துல ஒருத்தனா இருக்கனும் நினைச்சி, நானே போய் தலைய குடுத்துட்டேன்டா. உன் சின்ன அண்ணன் பொண்ணு, என்னை தாயக்கட்டையா உருட்டுறா. முடியலடா” என்று வருத்தப்பட்டார் பால்ராஜ்.

“உன் புருஷன் பேசினது கேட்டுச்சா பாப்பா” என்று ரவீந்திரன் சொல்லி முடிக்க முதல்,

“பொன்னுமா நான் இவனிடம் விளையாட்டுக்கு சொன்னேன்டா. நீ தங்கம்டா. பொன்னி நதி மாதிரி பொறுமையானவ நீ” என்று வேக வேகமாக அளந்துவிட்டார்.

“ஹாஹாஹா டேய் நண்பா உன் பொண்டாட்டி வரலை. பயப்படாம நில்லு” என்றார் ரவீந்திரன்.

“உன்னை என்ன செய்யுறேன் பாரு” என்று அவரை விரட்ட,

“இது தான் சொந்த ஊர் செய்யும் மாயம் இல்லம்மா” என்றான் ஈஸ்வர்.

“அப்படிதான் போலடா. மன நிறைவோட சிரிக்கிறார். இதுக்காகவாவது இவர் மேல உள்ள களங்கத்தை துடைச்சி, சின்னதா கூட அவர் மனதில் உறுத்தல் இல்லாம பார்த்துக்கணும் ஈஸ்வரா.” கணவனின் விளையாட்டை ரசித்து சொன்னார் தேவகி.

“செய்திடலாம் அம்மா” என்று நண்பனின் தோளில் கைபோட்டு செல்லும் தன் தகப்பனை சிறு புன்னகையுடன் பார்த்தான் சுந்தரேஸ்வரன்.

ரஞ்சிதாவின் வீட்டிற்கு தாய் தகப்பனை சமாதானப்படுத்தி அழைத்து வர, அங்கு அமர்ந்து உண்டு கொண்டிருந்தவனை கண்டு, “சர்வேஸ்” என்றான் சுந்தரேஸ்வர்.

“வாங்க எஸ்பி சார். என்ன இவங்களை பாதியில் விரட்டிவிட்டு நீங்க சொந்தக்கதை, சோகக்கதை பேசுனீங்களாம். அதெப்படி நீங்க இப்படி செய்யலாம்? ஹரி எவ்வளவு அழுதான் தெரியுமா? இப்ப கூட அழுகையில் சாப்பிட முடியாம திணறிட்டு இருக்கான்.” என்று ஹரிஹரனை மாட்டி விட்டான் சர்வேஸ்வரன்.

“எப்படா வந்த தம்பிப்பயலே?”

“இப்பதான் வந்தேன் அண்ணா... ஐயோ! பயலே சொல்லக்கூடாது தப்பு. சொன்னா அம்மா அப்பும்” என்றவன், “ஆமா எங்க உன்னோட வொய்ஃப்?” எனக் கேட்டு ரஞ்சிதாவிடம் திரும்பி, “அண்ணியை இந்த ஊர்ல எப்படி கூப்பிடனும் ரஞ்சிக்கா?” என்று கேட்டான்.

“மயினி கூப்பிடனும் தம்பி. ஆனா, அவள் உங்களுக்கு மருமகள் முறையாச்சே” என்றாள் அவள்.

“மருமகளை விட மயி...” என்று ரஞ்சிதா சொன்னது மறந்து நிறுத்த,

“னி... மயினி” என்று முடித்தாள் ரஞ்சிதா.

“எஸ். அது எனக்குப் பிடிச்சிருக்கு. அப்படியே கூப்பிட்டுக்குரேன்” என்க,

“வாடா சர்வேஸ்வரா” என்று உள்ளே வந்து சின்ன மகனின் தோளில் தட்டி, “எங்க அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சது சொன்னதும் நீ மாலையும் கழுத்துமா வந்து நிற்பியோ நினைச்சேன். நல்ல வேளை தனியா வந்திருக்க” என்று நிம்மதி மூச்சிவிட,

“சர்வா இந்த சேலை நல்லா கட்டி இருக்கேனா பாருங்க. இல்லன்னா சேஞ்ச் பண்ணனும்” அது எப்படி நிம்மதியாக இருக்கலாம் என்று சர்வேஸ்வரனின் காதலி ரியா வர, அசடு வழிய சிரித்தான் இளைய மகன்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top