Member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 40
- Thread Author
- #1
சுந்தரி -36
“அது ஒரு பத்து வருஷத்துக்கும் மேல இருக்கும். இது ரெண்டும் தோட்டத்துக்கு வந்துச்சிங்க.”
“எதுங்கம்மா. அனிமல்ஸ் ஆர் ஜந்துஸ்?” என்ற ரவீந்திரனின் கேலியில் சின்ன தாத்தனை முறைத்தாள்.
“யுவர் சாய்ஸ். மாமன், மருமகன் கூடவே ஒரு பொம்பளையும் வந்தது. அப்ப தோட்டத்தில் சின்னதா குடிசை இருந்தது. நான் இருக்கிறது தெரியாம மாமனும் மருமகனும், ச்சீய் அசிங்கம் பிடிச்சவனுங்க. அந்தப் பொம்பளையோட கூத்தடிக்கிறானுங்க. இது அடிக்கடி நடக்கும்னு புரிஞ்சது. அன்னைக்கே அந்த குடிசையை கொளுத்திட்டேன். ஹ்ம்ம்... அதை விட கொடுமை, ஒரு நாள் பிச்சைக்காரி ஒருத்தியிடம் போறானுங்க. எனக்குப் புரியாத ஒரு விஷயம் என்னன்னா, என் கண்ணுலயே இத்தனை அநியாயம் படுதே. ஊருல உள்ள ஒருத்தர் கண்ணிலுமா படல. அது சரி கட்டின பொண்டாட்டிக்கே புருஷன் ஊர் மேயுறது இன்னைக்கு தான் தெரிஞ்சிருக்கு. இதுல இவரை போல நல்லவர் இல்லன்னு, இன்னும் பஞ்சாயத்து தலைவர் போஸ்டிங்ல உக்கார வச்சிருக்கானுக. லூசுப்பயலுக” என்று ஊரில் உள்ளவர்களையும் திட்டினாள்.
“அதெல்லாம் அரசல் புரசலா தெரியாமலா இருக்கும். தன் வீட்டில் பாதிப்பு இல்லாத வரை அவனை நல்லவனா தான் கொண்டாடுவானுவ.” என்று நொடித்தார் கனகா.
“அப்புறம்?” என்றார் கனகவேல்.
“ஆங்... நான் பார்த்ததை மாமனும் மருமகனும் பாத்துட்டானுங்க. எங்க எல்லாரிடமும் சொல்லிடுவேனோ பயம். வெளில யாரிடமும் சொல்லக்கூடாது சொல்லி மறைமுக மிரட்டல் வந்தது. சகிச்சிட்டு அந்த வீட்டில் இருக்க முடியலை. அதான் அம்மா தடுக்கத்தடுக்க வெளில வந்துட்டேன். இன்னொரு எண்ணம் எந்தப் பொண்ணும் கிடைக்கலன்னு, என்னைக்காவது பெத்த பொண்ணுட்ட வந்துட்டா...” மற்றவர்கள் அதிர்ந்து அவளைப் பார்க்க,
“ரொம்ப கற்பனை வேண்டாம். இது என்னோட கற்பனை. நிறைய இடங்களில் இது உண்மையா நடக்கிறதை பார்க்கிறப்ப, அந்த அசிங்கம் நடக்குறதுக்கு முன்ன அந்த ஆளை விட்டு போகனும் என்ற எண்ணம் தானாக வந்தது. இதோட முக்கிய காரணம்...” என்று கிழவனை முறைத்து, “நான் அங்கயே இருந்தா உண்மையை சொல்லிருவேன்னு பயம் இருக்கும்ல. அதனால கல்யாணம் என்ற பெயர்ல என்னை தொலைதூரம் அனுப்ப திட்டம் போட்டானுங்க. வீட்டுல யாருக்கும் தெரியாது. ஒருமுறை தோட்டத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரன் என்ற பெயர்ல ஒரு பொறுக்கி வந்தான்.”
“பொறுக்கியா?” என்றார் ஹேமாவதி.
“ஆமா. அந்த வகையில் கூட சொந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிரக் கூடாது. அப்படி அமைஞ்சா அவனை வச்சே இவங்களை ஏதாவது செய்திருவேன்னு பயம். அந்த அளவுக்கு நல்லவங்க உங்க ரெண்டு பேரு புருசனும். வந்தவன் பார்வையே சொன்னது இவனுங்களை விட பலமடங்கு மோசமானவன்னு. அடிக்காத குறையா விரட்டி விட்டேன். இன்னொரு முறை இப்படி ஒண்ணு நடந்ததுன்னா, நான் சொல்லிருவேன் என்று நீங்க பயப்படுற உண்மையை ஊருக்கே சொல்லிருவேன். இனி அந்த வீட்டில் இருக்க மாட்டேன். ஏதாவது தடை செய்ய முயற்சி செய்தா அவ்வளவு தான்னு மிரட்டி அனுப்பினேன்.” என்று சொன்னாள் செல்வ சுந்தரி.
நீ எல்லாம் என்ன மனுசன்யா. சொந்த பேத்திக்கு உண்மை தெரிஞ்சதும் கண்ட நாயையும் கூட்டிட்டு வந்திருக்க? அப்படி என்ன பொண்ணு சுகம் கேட்குது. ரெண்டு பொண்ணுங்க சொன்னதே இவ்வளவு இருக்கே. இன்னும் என்னென்ன செய்து வச்சிருக்கியோ.” என்று புருஷனை காரி உமிழ்ந்த ஹேமாவதி, “மாரித்தாயே! இவனுங்க செய்த பாவம் தான் என் பையனை இல்லாமல் செய்திருச்சா. மத்த பிள்ளைகளை இவனுங்க பாவக் கணக்குல சேர்க்காத தாயி. இன்னொரு இழப்பை தாங்கிக்க முடியாது.” என்று மகனை எண்ணி கண்ணீர் விட்டார்.
“உன்னை என் கையாலயே அடிச்சிக் கொல்லனும் வெறி இருக்கு. உன்னைத் தொடுற பாவத்தை செய்ய வேண்டாம்னு பார்க்கிறேன். உடம்பு தேவைன்னு வந்தா தாயும், தங்கையும், மகளும் அடையாளம் தெரியுமா? இல்ல... ச்சே உன்னால தப்பு செய்யாத உன் வீட்டுப் பொண்ணுங்கள அசிங்கப்படுத்த வேண்டியிருக்கு. அருவருப்பான ஜந்து நீ. பிச்சைக்காரி கூட விட்டு வைக்கலன்னா, எந்தளவு அசிங்கத்துல புரண்டுட்டு இருக்க. ஈஸ்வரா இனி இவன் உன் பொறுப்பு” என்றார் தேவகி.
“ஹ்ம்ம் யாருக்கும் ஒரு பொட்டு நல்லது செய்யலை நீ. அப்படி என்னடா அரிப்பு உங்களுக்கு? எய்ட்ஸ் மாதிரி நோய் ஏன் உங்களுக்கு வரமாட்டேன்னுது. வந்திருந்தாலும் எங்க அடங்கி இருப்பீங்க. அடுத்தவன் குடியை எப்படி கெடுக்கலாம்னு திட்டம் போட்டுருப்பீங்க. பால்ராஜ் அவனை விடு. எங்க ஓடி ஒழிஞ்சாலும், இனி இந்த எஸ்.பி விடமாட்டான்” என்று ரத்தினசாமியை அங்கு இருந்து போக வைத்தார் ரவீந்திரன்..
“ப்ச்... ப்பா... வெட்டிக்கதை பேசாம அடுத்து என்ன நடந்தது சொல்லுப்பா. அப்படியே உங்க கல்யாணக் கதை. காதல் கதையும் சொல்லு” என்றான் காரியத்தில் கண்ணாக.
“என்னது வெட்டிக்கதையா?” என்று அவனை அவள் முறைக்க, “இல்லையா பின்ன” என்றான் தோள்குலுக்கி.
“ச்சீ... பே” என்று அவள் முகம் சுளிக்க, அவனோ சத்தமாகச் சிரித்தான்.
அதுவும் ரசனையாக தான் இருந்தது அங்கு இருந்தோருக்கு. அதிக சண்டை நிறைய நெருக்கத்தைக் கொடுக்கும் என்பது வாழ்ந்த சிலரின் கருத்து.
“இந்த சுற்று வட்டாரமே வேண்டாம்னு முடிவு பண்ணி, பார்த்தா சென்னை பஸ் நின்னுட்டு இருந்தது. எதையும் யோசிக்காம ஏறச் சொல்லிட்டேன்.” என்ற ரவீந்திரன் நினைவுகள்...
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கிய இருவருக்கும் அடுத்து என்ன என்ற கேள்வி வந்தது. முதலில் வீடு பார்த்து குடியிருக்க நினைத்து, வாடகை வீடு தேடி அலைந்தார்கள். வாடகை வீடு கிடைப்பதில் சிக்கல் வந்தது.
அவர்கள் யார் என்று கேட்டவர்களிடம் என்ன உறவுமுறை சொல்லுவது என்று தடுமாறும் சில கணங்கள், வீட்டின் உரிமையாளர்கள் அவர்களைப் பார்க்கும் தவறான பார்வையில் மனம் சோர்ந்து போகும். இரண்டு நாட்கள் எப்படியோ சமாளித்தவர்களால் வீடு இல்லாத நிலை இருக்கும் துன்பத்தை அதிகப்படுத்தியது.
தன்னால் ரவீந்திரன் படும் அவஸ்தை புரிய, “சார் என்னை ஹாஸ்டல் சேர்த்து விட்டுட்டு நீங்க ஊருக்குப் போயிடுங்க. எனக்காக உங்க நாட்களை வீணாக்காதீங்க. வீட்டுல உங்களைத் தேடப் போறாங்க சார். இல்லன்னா உங்களுக்கு கெட்ட பெயர் வரும்” என்றாள் தேவகி.
‘கெட்ட பெயரா? இதுக்கு மேல என்ன பெயர் எடுத்திடப் போறேன். வீட்டுல தேடுவாங்களா? சர்தான் வீடுன்னு ஒண்ணு இருக்கா என்ன’ என்று நினைத்த ரவீந்திரனுக்கு மனம் கசப்பை ஜீரணிக்க முடியாது தவித்தது. இரத்தினசாமி மாதிரி ஆட்கள் தேவகியை நெருங்கினால் என்ன செய்வது என்ற பயம் எழ, தேவகியைத் தனியாக விட மனமில்லை.
“தேவி.. தேவகி எதுவா இருந்தாலும் என்னோட இரு. உன்னை இந்த மோசமான ஆளுங்க இருக்கிற உலகத்துல தனியா விட பயமா இருக்கு. நீ நல்லா இருக்கன்னு தெரிந்தால் தான் எனக்கு நிம்மதி.” என்று தயக்கத்துடன் சொல்ல,
“உங்க வீட்டு...”
“எனக்கு வீடுன்னு எதுவும் கிடையாது தேவி. சொந்தபந்தம் கட்டின மனைவி எதுவும் வேண்டாம்னு சாகப் போன நான் உயிரோடு இருக்கக் காரணம் நீ தான்...”
“சார்” என்று அதிர்ந்தாள் தேவகி.
மூச்சை இழுத்து விட்டு, “நிஜம் தேவி. நான் அந்த ஆற்றில் விழுந்து சாகனும் என்றுதான் வந்தேன். உன்னோட காப்பாத்துங்க சத்தம் கேட்டது. அந்த அபயக்குரல் என்னை சாகவிடாம தடுத்துச்சி. உன்னோட தொடர் சத்தம் கேட்டு சாகும் முன்ன ஒரு உயிரைக் காப்பாத்திட்டுப் போவோம்னு நீ இருக்கிற இடம் தேடி வந்தேன். காலையில் அந்த முடிவை எடுத்திருந்தா, உன்னை அவன் தொடாத அளவு காப்பாத்தி இருப்பேன். அதுக்கு நீ தான் என்னை மன்னிக்கனும்.” என்று தன் கதையை ஆதி முதல் அந்தம் வரை ரவீந்திரன் சொல்லி முடிக்க,
‘இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா?’ என்று எண்ணிய தேவகி கண்களில் கண்ணீர்.
“நீ அழணும்னு சொல்லல தேவி. எனக்கு வாழ்க்கை வாழவே விருப்பம் இல்ல. உனக்காக மட்டும் தான் இந்த முடிவு. இது மாறிச்சினா என்னோட முடிவு தேடி போயிடுவேன்.”
“சார்... ஆனா வீடு கேட்கிற எல்லாரும் நம்ம உறவுக்கான அடையாளம் கேட்குறாங்களே? அதை எப்படி குடுக்க முடியும். நீங்களோ நானோ சம்பந்தம் இல்லாதவங்க. அப்புறம் எப்படி?” என்று கேட்டாள்.
“நமக்குள்ள ஒரு உறவு வேனும்னா, நாம கல்யாணம் பண்ணிக்கலாம் தேவி” என்று பட்டென கேட்டதும் தேவகி, “சார்!” என அதிர,
“எனக்குப் புரியுது. இது அதை கேட்கும் நேரம் இல்லைன்னு. ஆனா, இதுதான் சரின்னு தோணுது தேவி. அண்ணன் தங்கைனு சொன்னாலும் எதோ ஒரு நெருடல் மத்தவங்களுக்கு இருக்கும். அண்ணன் தங்கை மட்டும் குடும்பமா வாழலையா கேட்காத. எதோ ஒரு கட்டத்தில் ரெண்டு பேரும் கல்யாணம் செய்துப்பாங்க. எனக்கு அப்படி ஒரு எண்ணம் கிடையாது. உனக்கு இருந்தா சந்தோசப்படுவேன். இல்லாம போனா அந்த இடமும் சந்தேகத்திற்கு உள்ளாகும்.”
“ஆனா, நா...நான்...” என்று தடுமாறினாள்.
“என்ன அந்த வெறிநாய் கடிச்சதை சொல்லுறியா? அப்படிப் பார்த்தா நானும் கல்யாணம் முடிச்சவன் தான் தேவி. இரண்டு வருடமா அந்த நரகத்தில் இருந்து இல்லாத அசிங்கம் பட்டு, அவமானத்தில் துடிச்சி, முடியல தேவி” என்று ரவீந்திரன் குலுங்கி அழ,
“சார்” என்று தேவகி அவர் கைபிடித்து அமைதிப்படுத்த,
நிமிர்ந்து கண்ணீர் துடைத்து அவள் கைமேல் தன் இன்னொரு கையை வைத்து, “எனக்கு அமைதியான நிம்மதியான வாழ்க்கை வாழனும் தேவி. எந்த குத்தல் பேச்சுகளும், நெஞ்சைக் கொல்லும் வசவுகளும், அருவருக்கும் செயல்கள் இல்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கை வேனும். என்னை அவ எதுக்கும் லாயக்கில்லைனு அடிக்கடி திட்டி திட்டி பேசினதால, தாழ்வுணர்ச்சியில் தான் எனக்கு இந்த குறை வந்ததா தெரியல. என்னால ஒரு பொண்ணோட தாம்பத்திய வாழ்க்கை வாழ முடியாதுன்னு மட்டும் சொல்ல முடியும். நாம கல்யாணம் செய்துக்கலாம் தேவி. எந்த காலத்திலும் நான் உன்னை கஷ்டப்படுத்தமாட்டேன். உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா அந்த சமயம் நான் அமைதியா விலகிப் போயிடுவேன். இப்போதைக்கு என்னை விட உன்னோட நலன் எனக்கு முக்கியம். உன்னோட இருந்தா நான் நானா இருப்பேன் தோணுது. உனக்கு சம்மதம்னா சொல்லு. இல்லன்னா ஏதாவது விடுதியில் சேர்த்துட்டு நான் போறேன்.” என்க,
ரவீந்திரனின் ஒவ்வொரு வார்த்தையிலும் துடித்துப் போனவள், ஒரு முடிவுக்கு வந்த பொழுது தான் ரவீந்திரனின் ‘தேவி’ என்ற ஒருமை அழைப்பு மூளையில் பளிச்சிட்டது. மனம் கொஞ்சம் லேசானது போல் இருப்பதை தேவகியால் உணர முடிந்தது.
வருவார்கள்...