• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 35

Member
Joined
Dec 1, 2024
Messages
39
சுந்தரி - 35


“இன்னொருத்தன் குழந்தையை வளர்க்க நான் உயிரோட இருக்கனுமே. இந்த ஊர்க்காரர்கள், என் உடன்பிறப்புகள் எல்லார் மேலயும் கோபம். அதிகம் என்மேலயே எனக்கும் கோபம். அப்படியே தோட்டத்துக்குப் போயி அழுது முடிச்சி தெளிவாகி, செத்து விட முடிவு செய்து மறுநாள் சாயங்காலம் வீட்டை விட்டு கிளம்பிட்டேன்.” என்று சொல்ல,

“ரவி” என்று தேவகி அவர் கைபிடித்து ஆறுதல் சொன்னார்.

“ரவிப்பா” என்று அழுதுவிட்டார் கனகா.

“நீங்க இதுக்கு அவங்களை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருக்கலாம் தம்பி. இரண்டு மனித மிருகங்கள் இறந்துட்டதா தைரியமா தாலி அறுத்திருப்பேன்” என்றார் ஹேமாவதி கணவனை கண்களால் கொன்று குவித்தபடி.

“செய்திருக்கலாம். அவங்களைக் கொன்னுட்டு என்னோட அம்மா ஸ்தானத்தில் இருக்கும் உங்களை, எந்த முகம் கொண்டு பார்ப்பேன். என்னன்னு அதை உங்களிடம் சொல்லுவேன். அந்த அசிங்கம் என்னோட போகட்டும். நான் எதுக்கும் பிரயோஜனம் இல்லாதவன் என்றதால, அந்த முடிவுக்கு வந்தேன்.”

“ஊர் எல்லையை கடந்து அங்க இருந்த ஆத்துல விழ இருந்த சமயம், ஒரு பொண்ணோட அலறல் குரல் தொடர்ந்து கேட்டுச்சி. ஊர் பக்கம் பேய் பிசாசுன்னு சொல்லுவாங்களே, அது பயமுறுத்துது நினைச்சி குதிக்க போற சமயம், “என்னை விடுடா. யாராவது காப்பாத்துங்கன்னு குரல் கேட்டுச்சி. அது நிஜம்னு புரிந்த சமயம், ஒரு உயிரை காப்பாத்திட்டு போகலாமுனு அந்த இடம் தேடி போனேன்” என்றவர் நிறுத்தி தன் அண்ணனை உக்கிரமாக பார்க்க, அவருக்கோ இப்பொழுது சில நிகழ்வுகள் கண்முன் வந்து சென்றது.

“அங்க இருந்த இடிஞ்ச கட்டிடத்துல, இந்த உத்தம புருஷன் அந்தப் பொண்ண நாசம் பண்ணிட்டு என் கண்ணுக்கு முன்னால போறான். அப்போதைக்கு அந்தப் பொண்ணு என்ன நிலையில் இருக்குனு பார்த்து, அடுத்து இவனை கவனிச்சிக்கலாம்னு உள்ள போனேன். ரொம்ப சின்னப் பொண்ணு. நம்ம கனகாவ விட ரெண்டு மூணு வயசு பெரியவளா இருப்பா” என்ற போது யாருக்குப் புரிந்ததோ இல்லையோ சுந்தரிக்கு சில புரிவது போலிருந்தது.

“என்னையும் இவன் போல நினைச்சி வேண்டாம்னு அலறி கதறினா. அவளோட அந்த செயல் மனச ரம்பம் போட்டு அறுத்துச்சி. அப்பத்தான் இந்த மாதிரி ஆளுங்களை கொன்னு போட்டிருக்கணும். நான் தப்பு பண்ணிட்டதா தோணின நிமிடம். என்னோட வேட்டி, சட்டையை கழட்டி குடுத்து, நான் மிருகம் இல்லை. இதை கட்டிட்டு வாமா சொல்லி வெளில வந்தேன். அந்தப் பொண்ணு தன்னோட பாவாடைக்கு மேல என்னோட சட்டையை போட்டுட்டு வேட்டியை என்னிடம் குடுத்தா. எந்த ஊர்? இவனிடம் எப்படி சிக்கின கேட்டேன்.”

“பக்கத்துல சேவல்பட்டி. என்னோட பிரெண்டுக்கு இந்த ஊரு தான். இன்னைக்கு அவளுக்கு கல்யாணம். நேத்து சாயங்காலம் வந்துட்டு காலையில் கல்யாணம் முடிஞ்சதும், கிளம்பி பஸ்ஸ்டாப் வந்த இடத்துல...” என்று அழுதாள் அப்பெண்.

“அவ்வளவு நேரம் அந்தப் பொண்ண விடவே இல்லை இவன். கண்டிப்பா கொன்னுடனும் முடிவுக்கே வந்துட்டேன். அதுக்கு முன்ன அந்தப் பொண்ணுக்கு ஏதாவது வழி செய்யனுமே. இப்ப இருட்டிருச்சி. வா உங்க வீட்டுல போயி விட்டுட்டு வரேன். இங்க ஒரு முக்கிய வேலை இருக்கு. அதை முடிச்சிட்டா திருப்தியா போவேன், சொல்லி அவளை அவளோட வீட்டுக்கு அழைச்சிட்டு போனா, அவங்க வீட்டுல கல்யாணத்துக்குப் போன பொண்ணு ஓடிப்போயிட்டானு ஊரே பேசுது. அந்தப் பொண்ணோட நிலையை கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க.”

“பொண்ணை காணோம்னா, இந்த மாதிரி காம வெறி பிடித்த மிருகத்திடம் சிக்கிருந்தா என்ன செய்யன்னு தேடனும். அதை விட்டுட்டு, ஓடுகாலி பட்டம் குடுத்திருச்சிங்க. இந்த விசயத்துல மட்டும் படிச்சவனும் அப்படிதான் இருக்கான். படிக்காதவனும் அப்படிதான் இருக்கான். இருந்தும் அவங்க அம்மாவிடம் போயி பேசினேன். நடந்ததை சொன்னதும் அழுதாங்க. சரி அந்தப் பொண்ணுக்கு நல்லது நடக்கும் காத்திருந்தா, அந்தம்மா பேசினது அநியாயத்தின் உச்சம்.” என்று பல்லைக் கடித்தார்.

“கெட்டுப்போனவனு சொல்லுறதுக்கு பதிலா, ஓடிப்போயிட்டா சொல்லிடலாம் தம்பி. நீங்க அவளை எங்கயாவது ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட்டுருங்க. அவ படிச்சிருக்கா. இருங்க வரேன்னு உள்ள போயி ஒரு ட்ரேவல் பேக் எடுத்து வந்து தந்தவங்க, இதுல அவளுக்கான ஆடை, அவள் படிச்ச சர்டிபிகேட் இருக்கு. அவளோட படிப்புக்கான வேலை மட்டும் வாங்கி குடுங்க. அவளோட பிழைப்பை அவ பாத்துக்குவா. இப்படி சொல்லுறது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. எனக்கு வேற என்ன செய்யுறது தெரியலை. அவளுக்கு அடுத்து ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. இந்த விஷயம் வெளில தெரிஞ்சா அவங்களுக்கு வரன் அமையாது.” என்று சொன்னார்.

“ரொம்ப சுயநலவாதி அம்மா நீங்க. இது நீங்க அவளுக்கு செய்யுற துரோகம். இனிமேல் உங்க ரெண்டு பொண்ணுங்களை மட்டும் பார்த்துக்கோங்க. பெரிய பொண்ணு ஓடிப்போயிட்டா சொல்லாதீங்க. கல்யாணத்துக்கு போன இடத்தில், ஆத்தில் குளிக்கறப்ப ஆத்தோட போயிட்டதா சொல்லுங்க. அதான் எல்லாருக்கும் நல்லதுனு சொல்லிட்டு வெளில வந்துட்டேன். அந்த பொண்ணை பார்க்கிறப்ப பாவமா இருந்தது. அதுக்குக் காரணமான இவன் மேல் இன்னும் இன்னும் ஆத்திரம்” என்று இப்பொழுது அண்ணன் மேல் அடிக்க பாய்ந்தார்.

அவரை இழுத்துப் பிடித்த ஈஸ்வர், “ஓரளவு கதையோட எல்லாத்தையும் கெஸ் பண்ணிட்டேன். மீதியை நீ சொல்லுப்பா. இவனை என்னிடம் விடு. பையன் இருக்கிற தகப்பன் பொறுப்பை பையனிடம் விட்டுட்டு வேடிக்கை பார்க்கணும். இப்படி சீறி உடம்புக்கு எதையாவது இழுத்து வச்சிக்காத. உனக்கு உடம்புக்கு முடியலன்னா, என்னோட அம்மாவால உன்னிடம் மல்லுக்கட்ட முடியாது. கூல்ப்பா” என்று அமைதிபடுத்தினான்.

“பாவம்டா அவன்” என்றார் மகனைப் பற்றி தெரிந்தவராய்.

“அதுக்கு உன் அண்ணன் பாவம் பண்ணாம இருந்துருக்கனும். அடுத்தவனுக்கு செய்தாலே விடமாட்டேன். என்னோட குடும்பத்துல செஞ்சதுக்கு எப்படி விட்டு வைப்பேன். அதெல்லாம் யோசிக்காம மேல சொல்லுப்பா” என்றான் சாதாரணமாய்.

சுந்தரியோ சுந்தரனை தான் பார்த்திருந்தாள். ஆள் சாதாரணமாக இருப்பது போல் தோன்றினாலும், ஆழிப்பேரலை ஒன்று அவனுள் கொதித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ‘செத்தான்டா சேகரு நிலை தன் தாத்தனுக்கு’ என்று புரிந்தாலும் அவருக்காக சிறிதளவும் பாவப்படவில்லை.

“பொய் சொல்லி சமாளிச்சி அந்தப் பொண்ணுக்கு பின்னாடி தெரிந்து வருத்தப்படுறதோட, வலியோட வலியா இதையும் அனுபவிச்சி மறந்திடட்டும்னு, அவங்க அம்மா பேசினது எல்லாத்தையும் சொல்லிட்டேன்.”

“ஓரளவு இதான் நடக்கும் என்று தெரியும். ஒன்னும் பிரச்சனை இல்லை. அவங்க சொன்ன மாதிரி ஆசிரமத்துல சேராம, ஏதாவது ஹாஸ்டல்ல சேர்ந்துக்கறேன். எனக்கு குளிக்க மட்டும் ஏற்பாடு பண்ணுங்க சார்னு சொன்னா. எனக்கு தான் ஒரு எழவும் தெரியாதே. போற வழியில் தோப்பு இருந்தா பம்ப் செட்ல குளிக்க வச்சிக்கலாம்னு கூட்டிட்டு நடந்தப்ப தான் பால்ராஜ் பார்த்தேன். அவனுக்கு மட்டும் தான் என்னை பத்தின எல்லாமே தெரியும்.”

“ஆனா, அந்த பொண்ண பத்தின உண்மையைச் சொல்லாம, வெறி நாய் ஒண்ணு விரட்டி விரட்டி கடிச்சி குதறியதில் உடம்பெல்லாம் காயம். குளிக்கணும் சொல்லுறாங்க பாலா. கொஞ்சம் ஏற்பாடு பண்ண முடியுமானு கேட்டதும் பக்கத்துல இருந்த அவன் சித்தி வீட்டுக்கு கூட்டிட்டு போனான்.”

“குளிச்சி முடிச்சி வந்ததும் நாங்க கிளம்ப தயாரானப்ப, என்னை மட்டும் தனியா அழைச்சிட்டு போனவன், கை நிறைய பணம் குடுத்து, இது உங்களுக்குன்னு ஒரு வீடு பார்த்து செட்டில் ஆகிற வரை. உன்னை நம்பி ஒரு பொண்ணு வர்றா. அவளை நல்லா பாத்துக்கோ. சீக்கிரம் ஏதாவது வேலை செய்து பிழைச்சிக்கோங்க. நீ சொன்ன நாய் மனுசன்னு தெரியுதுடா. வளர்மதி வேணாம்னு முடிவு பண்ணிட்டா, இந்த பொண்ண கட்டிக்கடா. ஜோடி பொருத்தம் அருமையா இருக்கு. உனக்காக கடவுள் அனுப்பி இருக்கார்னு நினைக்கிறேன். அவங்களுக்கும் ஒரு பாதுகாப்பு. உனக்கும் ஒரு துணைனு சொன்னான்.”

“வேலி என்னைக்கும் பயிரை மேயக்கூடாது சொல்லி, அவனை அடக்கி வெளில வந்தப்ப, அந்தப் பொண்ணு பெயர் கேட்டேன்.”

“தேவகி! என்னோட பெயர்னு சொன்னா” என்று மனைவியை தோளோடு அணைத்து, “என்னோட தேவி! என்னோட வாழ்க்கையின் சந்தோசமான பக்கங்கள் மீட்கப்பட்டது இவளால் தான். எனக்குன்னு தனிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கு. அதை வாழனும் என்ற எண்ணம் வர வச்சது இவள் தான். இவள் இல்லைன்னா இன்னைக்கு நான் இல்லை. அன்னைக்கு இவள் தான் இவனால பாதிக்கப்பட்டது” என்றார்.

அனைவரும் ஓரளவு கணித்துவிட்டதால் பெரிதாக அதிர்ச்சி இல்லை யாரிடமும்.

“இவனைக் கொல்லனும் என்ற வெறியை விட, இவளை பாதுகாக்கணும், காப்பாத்தணும் என்ற எண்ணம் நிறைய இருந்தது. என்ன செய்யுறதுன்னு தெரியாமலே தென்காசி வந்தோம் நாங்க.”

“நீங்க அன்னைக்கே கொன்னுருக்கலாம். அப்படி செய்திருந்தா நிறைய குடும்பம் நல்லா இருந்திருக்கும். நிறைய பொண்ணுங்க தப்பிச்சிருப்பாங்க” என்று கோபத்தில் சொன்னாள் சுந்தரி.

அனைவரும் திரும்பி அவளைப் பார்க்க, “இவரை மட்டும் இல்லை. இந்த கனகா புருசனையும் சேர்த்து கொல்லுங்க. ரெண்டும் விஷம் உள்ள பாம்புகள். ஒண்ணு கண்ணாடி வீரியன்னா, இன்னொன்னு கட்டு வீரியன். பொண்ணுங்க வாழ்க்கையைச் சீரழிப்பதில் ஒன்னுக்கொன்னு குறைந்தது இல்லை” என்றாள் வெறுப்புடன்.

“என்னடா மகனே கேட்டுச்சா?” என்ற ரவீந்திரன் பேத்தியின் கோபத்தை சொல்ல,

“ஆங்... கேக்குது... கேக்குது. வேற ஏதாவது லிஸ்ட் இருந்தா சொல்லச் சொல்லுங்க. சேர்த்தே முடிச்சிடலாம். கைவசம் எக்கச்சக்க பிளான் இருக்கு. எதுவும் மிஸ் ஆகாம பண்ணிடலாம்” என்றான் அவன்.

“ம்க்கும்...” என்று முகம் திருப்பிக் கொண்டாள் அவனின் மனைவி.

“என்ன பாப்பா உன் பொண்ணு இப்படி சொல்லுறா? உன் எதிர்ப்பு இல்லை எனும்போதே, உன் அம்மா அளவு நீ அப்பாவி இல்ல போல தெரியுது. தெரிஞ்சிட்டே கமுக்கமா கூடவே இருந்திருக்க. அப்பவே விஷம் வச்சி தொலைச்சிருக்க வேண்டியது தான? மாமிச மிருகங்களில் ஒண்ணு குறைஞ்சிருக்கும்ல” எனக் கேட்டார் ரவீந்திரன்.

“என் தப்பு தான் ரவிப்பா. அப்பன் தான் சரியில்லை. வர்றவனாவது நல்லவனா இருப்பான் பாத்தேன். வேண்டாத கடவுள் இல்லை. கல்யாணம் முடிஞ்சா புதுசுல நல்லா தான் இருந்தான். இந்தாளோட ஊரு மேய போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எல்லாம் மாறிச்சி. எங்க அம்மா நல்லவுக தான். ஆனா, ஒரு வடிகட்டின அப்பாவி. வீட்டில் என்ன நடக்குதுன்னே தெரியாம, ஊர்ல உள்ளவங்களுக்கு எல்லாம் உதவி செய்வாக. இப்பவரை தெரியாம இருந்திருக்குனா எப்பேற்பட்ட வீட்டுப்புழு என்று பாருங்க. நல்லவேளை நான் அப்படி இல்லை” என்றவருக்குத் தாகம் எடுக்க தண்ணீர் வாங்கிக் குடித்து,

“சொந்த மகள் வாழ்க்கையில் சூனியம் வச்ச பாவி இவர் ரவிப்பா. இவள் அப்பனுக்கு சொல்லிப் பார்த்தேன், கெஞ்சிப் பார்த்தேன், திட்டியும் பார்த்தேன். கேக்குற வழியை காணோம். இனி ஊர்ல உள்ளவனிடம் வாங்கிகட்டுன்னு விட்டுட்டேன். அவனை கொன்னு நான் ஜெயில் போயிட்டா, என் பொண்ணோட வாழ்க்கை கடைசி வரை தனியாவே போயிறும்னு பயம் ரவிப்பா. என்னை என்ன செய்ய சொல்லுறீங்க? கையாலாகாத நிலை என்னுடயைது” என்றார்.

“அதுவும் சரிதான். உனக்கு என்னம்மா உன் தாத்தன், அப்பன் மேல கோபம்?” என்று செல்வ சுந்தரியிடம் கேட்டார் ரவீந்திரன்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top