Member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 38
- Thread Author
- #1
சுந்தரி - 34
“என்ன இந்திரா தம்பி சொல்லுறிய? இவர் உங்க அண்ணன். நினைவு இருக்கா” என்று தவித்துப்போய் கேட்டார் ஹேமாவதி.
“அதனால தான் கொல்லாம கோழையா ஊரை விட்டுப் போனேன். இப்ப இருக்கிற ரவியா அப்ப இருந்திருந்தா, உங்களுக்கு இன்னொரு பையன் பிறந்து இறந்து போயிருக்க மாட்டான்” என்றார்.
“தப்பா பேசுறீய தம்பி.”
“தப்பானவரை தப்பா மட்டும் தான் பேச முடியும். நீங்க கிணத்துத் தவளை மயினி. வீட்டுக்குள்ளயே இருந்து வெளி உலகம் தெரியாம இருந்துட்டீங்க. இல்ல இருக்க வச்சிட்டான் இவன். வீட்டுக்குள்ள இருந்த உங்களுக்கு வீட்டுக்குள்ள நடந்த அசிங்கம் தெரியலன்னா, எந்த அளவு இவனை நீங்க நம்பிட்டு இருக்கீங்க.”
“என்ன இந்திரா தம்பி இப்படி பேசுறீய?” என்றவர் குரல் கலங்கிப்போய் வந்தது.
“உங்க அப்பாவித்தனமும், அறியாமையும் தான் இவங்க மூலதனமே மயினி. இன்னுமா புரியலை? என் பொண்டாட்டியா வந்தவ என்னை விட்டு போனதுக்குக் காரணம் இவன் தான்” என்றார் அண்ணனை பார்த்து.
“அப்பா என்ன சொல்லுறீங்க? உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா?” என்று அதிர்ந்து தந்தையிடம் கேட்டான் சுந்தரேஸ்வர்.
“ஆமா. அதை கல்யாணம் சொல்லுறதுக்கு பதிலா, என் கழுத்துக்கு நான் போட்ட தூக்கு கயிறு சொல்லலாம்.”
“புரியலப்பா. என்ன நடந்தது? அம்மா எப்படி உங்களோட...” என்று நிறுத்தினான்.
படிப்பு வராததால பத்தோட என் பள்ளிப்படிப்பு முடிஞ்சிடுச்சி. விவசாயம் பிடிச்சதால எங்க நிலத்துலயே வேலை செய்ய ஆரம்பிச்சேன். தோப்பு துரவுனு மரம் செடிகளோட இருந்ததால, நட்பு வட்டம் ரொம்ப கம்மி. கம்மி சொல்லுறதோட இதோ இருக்கானே இவன் மட்டும் தான் என் நண்பன்” என்று பால்ராஜை அணைத்து விடுவித்தார்.
“யார் வம்புக்கும் போறவனும் கிடையாது. வம்பை விலைக்கு வாங்குபவனும் கிடையாது. நான் உண்டு என் வேலை உண்டுன்னு ஒரு குறுகிய வட்டத்துல என் வாழ்க்கை இருந்ததால, மனுசங்களை படிக்க மறந்துட்டேன்.”
“என்னோட இருபத்தி ஏழாவது வயசுல இவன் பார்த்து கட்டி வச்ச பொண்ணு தான் வளர்மதி. அம்மா இல்லாத ஊதாரி அப்பன் வளர்த்ததால, தான்தோன்றித் தனமா வளர்ந்த பொண்ணு. என்னோட பொறுமை, அமைதி அவளுக்குப் பிடிக்கலை. நடை உடை பாவனையில் ஸ்டைலிஸ் தேடுற ஆள் அவள். எதிலும் வேகம் இருக்கனும். அது படுக்கையிலும் அவளுக்கு தேவைப்பட்டுச்சி. அவள் வேகம் என்னை பயமுறுத்திச்சி. முடிந்த அளவு ஈடு குடுத்தும் அவளுக்கான திருப்...” சட்டென சிறியவர்களை பார்த்து அப்படியே நிறுத்தினார்.
“இங்க யாரும் குழந்தைகள் இல்லப்பா. உன் மனசுல உள்ளதைச் சொல்லி, உன் மனபாரத்தை இறக்கு” என்றான் ஈஸ்வர். அவன் மனதிலும் பல கணக்குகள்.
“அவளுக்கான திருப்தி கிடைக்கலைன்னு, தொட்டதுக்கு எல்லாம் நீ ஆம்பளையா? கட்டின பொண்டாட்டிய படுக்கையில் திருப்தி படுத்த முடியாதவன், எதுக்கு கல்யாணம் செய்துக்கணும். அப்படியே சந்நியாசியா இருந்திருக்கனும் சொல்லி திட்ட ஆரம்பிச்சா. அவள் பேசுறது யாருக்கும் கேட்காது. என்னோட ரெண்டாவது அண்ணன் செல்வம் மனைவிக்கு இவள் பேசுறது தெரியும். அவங்க என்னை மட்டமா பார்த்து வெளில பேச ஆரம்பிச்சாங்க.”
“அந்த வளர்மதி எப்பவும் உனக்கு அது வேலை செய்யாது. உன்னால எனக்கு எந்த சந்தோசமும் இல்லை. உன்னை கட்டினதுக்கு உன் அண்ணனுக்கு ரெண்டாந்தாரமா போயிருக்கலாம். மனுசன் நாற்பது வயசிலும் நச்சின்னு இருக்கார். அப்படினு என்னிடம் சொல்லுறப்ப, ஒரு கணவனா என்னோட நிலை எப்படி இருந்திருக்கும்” எனும்போது இரத்தினசாமி தவிர அங்கிருந்த அனைவருக்கும் வளர்மதியை கொன்று போடும் கோபம்.
“ஹேமா மயினி வந்து, என்ன இந்திரா தம்பி இப்படி பேசுறாங்க. நீங்க அமைதியா இருக்கியனு கேப்பாங்க. என்ன சொல்ல? என்ன சொல்ல முடியும் என்னால்? கட்டினவளை காட்டிக்குடுக்க முடியாம, நான் கல்யாணம் பண்ணிருக்க கூடாது மயினி. தப்பு பண்ணிட்டேன் சொல்லுவேன்.”
“அப்பவே சொல்லிருக்கலாமே தம்பி. உங்க அண்ணனிடம் சொல்லி கண்டிச்சிருப்பேன்ல. இல்ல அறுத்து விட்டுருக்கலாம். அவளுக்கு எம் புருஷன் மேல ஆசையா” என்றார் நடப்பு தெரியாத அப்பாவி.
“அவனிடம் தான, கண்டிப்பா சொல்லி இருக்கணும். இப்ப சொல்லுறேன் மயினி” என்றவர், “அவள் சொல்லிச் சொல்லியே எனக்கு தாம்பத்தியத்தில் உள்ள ஈடுபாடு போயிடுச்சி. அதனால மனதிலும், படுக்கையிலும் விழுந்த விரிசல் பெரிதானது. தட்டுத்தடுமாறி ரெண்டு வருஷம் கடந்தப்ப நான் இழந்தது நிறைய. ஊர் முழுக்க நான் ஆண்மை இல்லாதவன் என்ற பட்டத்தோட அசிங்கப்பட்டது எனக்கு தான் தெரியும். வெளிய சொல்ல முடியாத வலி. ஒவ்வொரு நிமிடமும் உள்ளுக்குள்ள வெடிச்சி அழுதுட்டு இருப்பேன். காரணம் இவன்” என்றார் தன் அண்ணனை நோக்கி கைநீட்டி.
“தம்பி” என்று ஹேமாவதி அதிர,
“நான் பார்த்தேன் இவனும் அவளும் ஒரே படுக்கையில் இருந்ததை” எனவும் அனைவரும் ரத்தினசாமியை அருவருப்பாய் பார்க்க ஹேமாவதி நிலை சொல்லவும் வேண்டுமா.
“ஒரு ஆண் பார்க்கக்கூடாத கோலம். அதிலும் ஒரு கணவன் மனைவியை பார்த்திருக்க கூடாத கோலம். அப்பவாவது எனக்கு ரோஷம் வந்து ரெண்டு பேரையும் வெட்டி போட்டுருக்கனும். பண்ணலையே நான். என்னோட பொறுமையின் அளவில் எனக்கே ஆச்சரியம். கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்காத ஒன்னு தான் பாக்கி. அதையும் அவள் செய்ய தயாராகிட்டா. மனசு தாங்காம ஒருமுறை அவளிடம் கேட்டுட்டேன். அப்படி கேட்டிருக்க கூடாது.” என்றவர் அன்று நடந்ததைச் சொன்னார்.
தோட்டத்தில் வேலை பார்த்ததில் மண்வெட்டி முட்டிக்குக் கீழ் வெட்டியதில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு அதிகரித்தது. தண்ணீரில் காலைக் கழுவிய ரவியின் வேட்டியில் இரத்தக்கறை அதிகம் இருக்க, அந்நேரம் அங்கு வந்த ஹேமாவதி பார்த்ததும் பதறினார்.
“என்ன இந்திரா தம்பி. பாத்து வேலை செய்ய மாட்டியளா. பாருங்க எவ்வளவு ரெத்தம்.” என்று சென்றவர் காயத்தை ஆற்றும் இலையை எடுத்து வந்து பிழிந்து, அடிபட்ட இடத்தில் வைத்து, அதை கட்டுவதற்கு சுற்றிலும் பார்த்தவர் சும்மாடு சுத்தி இருந்த பழைய துணியைக் கிழித்து கட்டு போட வர,
“மயினி என்ன என் காலைப் பிடிக்கிய? நானே கட்டிக்குறேன் குடுங்க” என்று ரவீந்திரன் சொல்ல,
“சூ சும்மா இருங்க. மயினி மத்தவிய மாதிரி இல்ல. அம்மாவுக்கு சமமான உறவு. அம்மா பிள்ளை காலை பிடிக்கிறதில் என்ன தப்பு.” என்று கட்டு போட, ரவீந்திரன் மனம் அவரின் குணத்தை எண்ணி மகிழ்ந்தது. தாயை அண்ணன் மனைவி வடிவில் பார்த்ததாலோ என்னவோ, நீங்க நாட்கள் கழித்து மனம் சற்று நிம்மதியாக உணர்ந்தது.
“வேட்டி முழுக்க ரெத்தமா இருக்கு தம்பி. வீட்டுக்குப் போயி வேற வேட்டி மாத்திட்டு வாங்க.” என்றார்.
“இங்க வேலை இருக்கு மயினி.” என்று ரவீந்திரன் தயங்க,
“அதெல்லாம் நான் ஆள் வச்சி பாத்துக்குறேன். நீங்க போயி துணி மாத்திட்டு, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வாங்க” என்று அனுப்பினார்.
சம்மதமாகத் தலை அசைத்து கைகால் கழுவி வீடு நோக்கிச் சென்றார். முன் வாசல் உள்பக்கம் பூட்டி இருக்க, இவரோ தள்ளிப் பார்த்துவிட்டு, பின் வாசல் வழி உள்ளே வந்தார்.
திடீரென இதயம் அதி வேகமாக துடிக்க, மனம் சொல்ல முடியா உணர்வில் பாரமாகியது. எப்பொழுதும் வேகநடை கிடையாது என்பதால், அவர் பழக்கமாக வந்தவர், அங்கு இருந்த கொடியில் இருந்த வேட்டியை எடுத்து, கறை படிந்ததை தண்ணீரில் அலசி கொடியில் போட்டு உள்ளே வந்தார்.
தங்கள் அறைக்கு நுழையும் சமயம் கேட்ட வினோதமான சத்தத்தில், கதவை மெல்ல திறந்தவர் பார்த்த காட்சிகள் அவரை கூனிக்குறுக வைத்தது. ஒரு நல்ல ஆண்மகனாக, நல்ல கணவனாக தோற்றுப்போய் அருவருப்பின் உச்சத்தில் நின்றிருந்தார். தம்பி மனைவியைத் தன் மனைவியாக எண்ணினாரோ இரத்தினசாமி. இருவரும் உடல்ரீதியான உல்லாசத்தில் இருக்க, அதைப் பார்க்க முடியாது, பார்த்த நொடி கொல்லவும் தோன்றாது வெளியே வந்து அழ ஆரம்பித்தார் ரவீந்திரன்.
அண்ணன் அவன் வெளியே சென்றது தெரிந்து தொய்ந்து பொய் உள்ளே வந்தவர், மனைவியைக் காண, அவளோ புதுப்பொலிவுடன் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
வந்த கோபத்தை அடக்கி, “ஏன் வளர் இப்படிப் பண்ணின? எனக் கேட்க,
“நீயா?” என்று அலட்சியமாகப் பார்த்து, “என்ன பண்ணினேன்? பாட்டு பாடினது தப்பா. நீ என்ன இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்திருக்க? வேலை அழுத்துப் போய் பொண்டாட்டிய தேடி வந்தியா. அதுக்கு ஏத்த ஆள் நீ இல்லையே. நானே வந்தாலும் தள்ளிப்போற ஆள் நீ. நீ எல்லாம் எதுக்கு தான் கல்யாணம் முடிச்சியோ” என்று கணவனை அருவருப்பாக பார்த்தாள்.
“அதுக்கு ஏத்த ஆள் நான் இல்லன்னு தான் என் அண்ணனைப் பிடிச்சியா? வீட்டுக்குள்ளே ஆள் இருந்தா இன்னும் பாதுகாப்பு இல்ல” என்க,
வளர்மதி அதிர்ந்தாலும், “என்ன உளர்ற? உன் அண்ணனை அடிக்கடி புகழ்ந்து பேசுறதால, நான் அவரோட போயிருவேன் நினைச்சியா. வாயைக் கழுவிட்டு வேலையைப் பாரு” என்றாள் சிடுசிடுப்பாக.
“இந்த வாய் அமைதியா இருக்கிறதால தான, நீ ஆடுற. ஒரு பொண்ணை தப்பா பேசக்கூடாதுன்னு, நீ போட்ட பழிக்கு நான் பலியானேன் பாரு... என்னைச் சொல்லனும்.”
“எதையாவது உளராம போ” என்றவள் மனதிற்குள் பயம் இருக்கத்தான் செய்தது.
“பார்த்தேன்டி. நீயும் அவனும் ஆடை இல்லாம உருண்டத.” என்று சொல்ல முதலில் அதிர்ந்தாலும் முற்றும் மூழ்கியதும் முக்காடு எதற்கு என்ற எண்ணம் எழ, அது குருட்டு தைரியத்தையும் கொடுத்தது வளர்மதிக்கு.
“ஆமா. உன் அண்ணனோட இருந்தேன். அதனால என்ன கெட்டுப்போச்சி. வெளிய எவனோடவாவது போனா இன்னும் அசிங்கமாகிரும். இது யாருக்கும் பிரச்சனை இல்லையே” என்று தன் தப்பை நியாயப்படுத்தினாள்.
“இதைச் சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல. கட்டினவன் கிட்டயே கண்டவனை வச்சிருக்கிறதா சொல்லுற. அந்த அசிங்கத்தை நினைத்து எனக்கு அருவருப்பா இருக்கு.”
“அதுக்கு என்ன பண்ண முடியும்? உன்னால முடியலை. உன் அண்ணன் குடுக்கிறார். எனக்கும் அவர் வேகம் பிடிச்சிருக்கு. என்னடா இவ்வளவு அசிங்கம் செய்துட்டு அதை வெளில சொல்லுறாளே பாக்குறியா? உன்னைக் கல்யாணம் செய்யுறப்ப நான் கன்னிப்பெண் இல்லை” என்றதில் ரவீந்திரன் அதிர,
“வயசு கோளாறுல கல்யாணம் ஆனவனிடம் என்னை குடுத்துட்டேன். கர்ப்பம் ஆவேன்னு எனக்கு தெரியாது. மூணு மாச உறவுல கர்ப்பம் ஆகி, கடைசியில் வீட்டுக்கு விஷயம் தெரிந்து கருகலைப்பு செய்துட்டாங்க. சத்தம் இல்லாம வெளில மாப்பிள்ளை தேடி உனக்கு கட்டி வச்சாங்க. கொஞ்சம் பாக்குறாப்ல அழகா இருந்தியா. நமக்கு ஏத்த ஆளுன்னு நினைச்சேன். நீ என்னடானா கொழ கொழனு சரியான வழுக்கத் தேங்காயா இருக்க. எனக்கு இதில் எப்பவும் ஒரு தேடல் உண்டு. கல்யாணமாகி ரொம்ப வருஷம் ஆனவன் தான் இதுக்கு சரிப்பட்டு வருவான்னு அந்த சமயம் தோணிச்சி. உன் அண்ணன் ப்பா... நீ அவர் பக்கத்துலயே நிற்க முடியாது.” என்றதும் ரவீந்திரன் முகம் சுளிக்க,
“என்ன அசிங்கமா இருக்கா. அப்ப நீ சரியா இருந்திருக்கணும். பொண்டாட்டிக்கு என்ன தேவைன்னு சரியா பூர்த்தி செய்திருக்கணும். நீ தப்பு பண்ணிட்ட. அதனால நான் தவறிட்டேன். உன் அண்ணன் மூலமா குழந்தை வந்தா, அதுக்கு நீ அப்பனா இருந்து வளர்த்துக்கோ. உன்னோட பொட்டப் பையன் என்ற பெயர் இல்லாம போயிடும்” என்று ஒரு ஆணை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அதற்கு மேலும் செய்தாள்.
வருவார்கள்...