• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 26

Member
Joined
Dec 1, 2024
Messages
30
சுந்தரி - 26


நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஈஸ்வர், சில நொடிகள் நிதானித்து மதனை வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்று, “வந்த வழியே போயிரு. ஏதாவது ஏடாகூடம் பண்ண நினைச்சன்னு வை, போலீஸ்ல புடிச்சுக் குடுத்து உன்னை முட்டிக்கு முட்டி தட்டி, ஸ்டேஷனை விட்டு வெளியேவே வராத அளவுக்கு பண்ணிடுவேன். இங்க வந்தது, சுந்தரியிடம் தப்பா நடக்க முயற்சி பண்ணதுனு யாரவது சொல்லி கேள்விப்பட்டேன். அன்னையோட நீ உங்க அம்மாவுக்கு புள்ளையா இருக்கமாட்ட. அதையும் கவனமா நியாபகம் வச்சுக்கோ. எகிறிக் குதிடா” என்று அதட்டினான்.

மதனோ அச்சுவரில் ஏற முடியாது ஏறிக் குறித்து கீழே விழுந்தான். கால்களில் அடிபட்டு வலி எடுத்த போதும், வேறு வழி இல்லாது தன் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்றான்.

உள்ளே வந்தவன் அதிர்ந்து நின்ற தன் சுந்தரியை கண்டு, என்ன செய்வதென்று புரியாது அவளிடம் சென்று அவள் தோள்தொட, சட்டென்று தட்டிவிட்டவள், “யார் நீங்க? நான் என் மாமாவுக்கு எடுத்து கொடுத்த டிரஸ் உங்க கிட்ட எப்படி? ஏன் என் மாமா மாதிரி வந்து நிக்கிறீங்க? யாருனு சொலுங்க?” என்றாள் அவள்.

கதவு இன்னும் தட்டப்பட்டு கொண்டிருக்க, “அதையெல்லாம் பேசறதுக்கு இப்ப நேரம் இல்லமா. முதல்ல யாரு என்னன்னு பாரு. இன்னொருத்தன் வந்தத யார்கிட்டயும் சொல்லாத. நான் மட்டும் தான் உன்னோட இருக்கேன். வேற யாரும் இங்க வரல. இதை மட்டும் மனதில் வை” என்றான்.

அதில் கோபம் எழ, “ஏய் என்ன பேசிட்டு இருக்க? வெளியே போறியா இல்லையா. இங்கயே நின்று இருந்தா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. வெளில போ” என்றாள்.

“பரவால்ல உனக்கு தெரியாத வரைக்கும் நல்லது தான். முதல்ல யாரு கதவை தட்டுறாங்கன்னு போய் பாரு” என்றான் அவன்.

“முதல்ல நீ யாருன்னு சொல்லு? இங்க என்ன பண்ணிட்டு இருக்கன்னு சொல்லு? உனக்கு இங்க என்ன வேலைனு சொல்லு?” என்றாள் விடாது.

“ஆஹா எத்தனை சொல்லு வருது. அது ஒன்னுமில்லமா. இந்த நேரத்துல பொண்டாட்டி எதோ ஆபத்துல இருக்கான்னு எதோ ஒரு சக்தி எனக்கு உணர்த்திச்சி. வேகமா காப்பாத்தலாம்னு வந்தா ஓவரா பேசிட்டு இருக்க.”

“என்ன காப்பாத்திக்க எனக்கு தெரியும். முதல்ல நீ வெளிய போ” என்று கத்தினாள்.

“ப்ச்... மா போய் கதவு திறந்து யாரு வந்திருக்காங்கன்னு முதல்ல பாரு. அதுக்கு அப்புறம் நம்ம சண்டை போட்டுக்கலாம்” என்றான் அவன் சலிப்பாக.

“நீ இங்கன என் வீட்டு உள்ள இருக்கிற. உன்னோட நான் இருக்கிறேன். என்னை வெளில உள்ளவங்க உன்னோட பாத்தா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? இன்னைக்கு காலைல ஒருத்தன் வந்து பழி போட்டானே அது நிஜம் மாதிரி ஆகிடாதா. வெளியில போக சொல்றேன்ல போ” என்றாள் கோபத்தில்.

கதவு தட்டும் வேகம் அதிகரிக்க வீட்டில் பின்னாலும் சத்தம் கேட்டது.

“விட்டா உன் சொந்தக்காரங்க வீட்டு சுவத்துல ஏறி குச்சி வந்துருவாங்க போலிருக்கு. முதல்ல போய் கதவை திற” என்றான் திரும்பவும்.

“உன்னை உள்ள வச்சுட்டு நான் கதவை திறந்தேன்னா, என் நிலைமை என்னன்னு தெரியுமா உனக்கு? முதல்ல நீ வீட்டை விட்டு வெளியே போ” என்றாள் அவன் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ளாது.

“ம்ம்ம்... நீ சரிப்பட்டு வரமாட்ட. போ நானே போய் திறக்கிறேன்” என்று நடக்க ஆரம்பித்தான்.

“ஏய் நில்லு நில்லு போகாதே. உன்னைப் பார்த்தா எல்லாமே முடிஞ்சிரும். ஐயோ! ஏன்டா ஏன் இப்படி பண்ற? எங்க இருந்துடா வந்த நீ. தயவு செஞ்சு வெளிய கிளம்பு. நீ இங்க இருந்தா என்னால சமாளிக்க முடியாது.”

“அப்படியா சொல்லுற? அப்ப நான் இப்ப வெளிய போகனும். அதானே உனக்கு வேணும்” என்றான் எதோ முடிவெடுத்து.

“ஆமா” என்று பல்லைக் கடித்தாள்.

“அப்போ ஒரு கிஸ் குடு. நான் கிளம்பிட்டே இருக்கிறேன்” எனறான் சாதாரணமாக.

“என்னது கிஸ்ஸா? டேய் யாருடா நீ. மரியாதையா சொல்றேன் கிளம்பி போய்கிட்டே இரு. இல்ல அருவா பேசும்” என்று மிரட்டினாள்.

“ஆஹா இந்த மாதிரி ஏகப்பட்ட மிரட்டல் நாங்க பார்த்துட்டோம். எங்களிடமேவா. இதெல்லாம் செல்லாதுமா. நான் கேட்டது நீ குடுத்தா கிளம்பி போய்க்கிட்டே இருக்கேன்” என்றான் கூலாக.

கதவு தட்டலின் வேகம் மேலும் அதிகரிக்க, பின்னால் இருந்து ஏதோ சத்தம் வேறு கேட்டது. என்ன ஏதென்று இவர்கள் திரும்புவதற்குள் அவர்களை சுற்றி கூட்டம் கூடி விட்டது.

“ஐயோ கடவுளே! டேய் உன்னால தான்டா. என் மானம் மரியாதைக்கு ஏதாவது பிரச்சனை ஆச்சு, உன்ன சீவிட்டு நான் ஜெயிலுக்கு போகவும் தயங்க மாட்டேன்டா” என்றபடி தலையில் கைவைத்துக் கொண்டாள்.

“இளநீர் சீவி சீவி அந்த வார்த்தை உனக்கு அதிகமா வருது. சீவுறதை விட்டுட்டு முதல்ல சுத்தி உள்ள ஆளுங்கள பாருமா.” என்று சிறிதும் அலட்டல் இல்லாது சொன்னான்.

“பாத்துட்டு தான்டா சொல்லுறேன் முட்டாள்” என்க,

“நீ ரொம்ப தெளிவு சுந்தரி. என்னை முட்டாள்னா சொல்லுற. இது வேற யாராவது சொல்லியிருந்தா நடக்கிறதே வேற” என்றான் அவள் காதருகில் குனிந்து.

“அப்ப நீ அறிவாளி சொல்லுறியா? அந்த வேற நடக்கிறப்ப பாத்துக்கறேன். ஷப்பா! என்னைக் கொஞ்சம் யோசிக்க விடேன்டா. அதைக் கூட செய்ய விடாம என்ன இப்படி டார்ச்சர் பன்னுறது தப்புடா” என்றாள் தன்னுடைய கோபத்தை கத்திச் சொல்ல முடியாமல்.

“அடியேய் இதை வச்சு எத்தனை டா போட்டு பேசிட்டு இருக்க நீ. இவ்வளவு நாள் அவ்வளவு மரியாதையா பேசிட்டு, இன்னைக்கு ஏகப்பட்ட டா போடுற. பரவாயில்லை விடு, இது கூட நல்லா தான் இருக்கு. எனக்கு இந்த உரிமையான டாவை ரொம்ப புடிச்சிருக்கு” என்று மேலும் அவளைக் கடுப்படித்தான்.

“கடுப்படிக்காதடா. ஏதாவது பண்ணு ப்ளீஸ்” என்று இறங்கி வந்தாள் அவள்.

“அதுக்கெல்லாம் இப்ப வாய்ப்பே இல்ல ராசாத்தி. நாம இப்ப என்ன சொன்னாலும் யாரும் நம்ப போறது கிடையாது. அவங்களை நம்ப வைக்கவும் நம்மால் முடியாது. அவங்க என்ன சொல்றாங்களோ அதை நாம செய்துவிட்டு போகலாம். வேற ஆப்ஷன் இல்லை.”

“கடவுளே! இத்தனை வருஷம் நான் சேர்த்து வச்ச ஒட்டு மொத்த பெயரையும், ஒரே நேரத்துல காலி பண்ணிட்டியேடா. இடியட்” என்று திட்டினாள்.

“ஓய் நானாவது நல்லவன். எனக்கு முன்னாடி வந்தவன் ரொம்பவே மோசமானவன். அவனிடம் நீ சிக்கிற கூடாதுனு, உனக்காக மெனக்கெட்டு சுவர் ஏறி குதிச்சு வந்தா, நீ ஏன் பேச மாட்ட? இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ.”

“என்ன தான்டா உங்களுக்கு வேணும்?” என்றாள் சலிப்பாக.

“உங்களுக்குனு பன்மையில் சொல்லாதடி. உனக்கு என்ன வேணும்னு கேட்டுப்பாரு. நீதான்டி வேணும். நீ மட்டும் தான் வேணும். அப்படியே கூடவே வந்துடு. உன்ன கூட்டிட்டு போறேன் சொல்லுவேன்.” என்றான் கண்ணடித்து.

“செருப்பு பிஞ்சிரும்டா. என்ன தைரியத்தில் நீ இதெல்லாம் பேசிட்டு இருக்கனு எனக்கு புரியல?” என்றவளுக்கு சுவற்றில் முட்டாத குறைதான்.

“எல்லாம் என்னுடைய சுந்தரி நீ இருக்கிற தைரியத்தில் தான்.”

“ஏய் ஒரு நிமிஷம், சுந்தரியா? இந்த பேரு உனக்கு எப்படி தெரியும்? முதல்ல உன் முகத்துக்கு மூடி இருக்கிற அந்த மாஸ்கை கழட்டு. இரு நீ கழட்ட மாட்ட. நானே...” என்று அவனின் முக கவசத்தை பிடுங்க வர அவனோ முகத்தை திருப்பிக் கொண்டான்.

“நல்லா பாருங்க சித்தப்பா. நாங்க வந்து இவ்ளோ நேரம் ஆகுது. கதவை திறந்து விட்டு வெளியில் இருந்து நீங்களும் வந்துட்டீங்க. ஆனா இன்னும் இவங்க ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. அப்போ காலைல அந்த சஞ்சய் சொன்னது சரியா இருக்குல்ல. கையும் களவு மாட்டி இருக்காங்க. அப்படி இருந்தும் கொஞ்சம் கூட பயம் இல்லாம இப்படி பேசிட்டு ஃப்ரீயா இருக்கிறாங்க பாருங்க.” என்றான் உறவினன் ஒருவன்.

சட்டென நிதானம் வந்து திரும்ப, “என்ன செல்விமா இதெல்லாம்?” என்றார் கனகவேல்.

“எனக்கே ஒன்னும் புரியல மாமா. என் மாமாவை தவிர இந்த வீட்டுக்குள்ள இதுவரை யாருமே வந்தது கிடையாது. வர்ற தைரியமும் யாருக்கும் இருந்தது இல்ல. ஆனா இன்னைக்கு எது குடுத்த துணிச்சல் தெரியலை. கண்டவன் என் வீட்டுக்குள்ள வரான். அதுவும் பூட்டி இருக்கிற வீட்டில் திருடன் போல. என்ன சுத்தி என்னவோ சதி நடக்குது” என்றாள் அவர் கண் பார்த்து.

“நீ அந்த ரஞ்சிதா அண்ணன் தான? காலையில நீ உள்ளே இருக்கிறதாவும், உன்ன உள்ள வச்சி பூட்டி வச்சிருக்கறதா அந்த பையன் எங்களிடம் சொல்லிட்டு இருந்தான். ஆனா நீ உள்ள இல்லை. எங்க பொண்ணு மேல உள்ள நம்பிக்கையில் அதை பெருசா எடுக்கலை. இன்னைக்கு கொஞ்சம் ஜாக்கிரதையா பார்க்கணும்னு வெளில தான் உக்காந்து பேசிட்டு இருந்தோம். ஆனா, நீ பின்பக்கமா உள்ள குதிச்சத்தை பார்த்துட்டு வந்த இவன், வீட்டுக் கதவைத் தட்டுறதைப் பார்த்துட்டு வரோம்” என்று எதிரில் நின்ற ஒரு இளைஞனை நோக்கி கை நீட்டியவர், “அது நிஜம்னு நிரூப்பிக்கிற மாதிரி நீ இருக்க. என்ன இதெல்லாம்? அக்கா பார்த்தா ரொம்ப கஷ்டப்படுவாங்க செல்விமா” என்று மருமகளிடம் முடித்தார்.

“மாமா நான் எதுவும் பண்ணலை. என்மேல எந்தத் தப்பும்...”

அவளை கைநீட்டி தடுத்தவர் “எதுவும் பேச வேண்டாம். நீ என்ன சொன்னாலும் இந்த நிலை மாறப்போறது கிடையாது. எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்” என்று தன் மனைவியை மருமகளுடன் இருக்க சொல்லி ஈஸ்வரை வெளியே அழைத்துச் சென்றார்.

நேரே ரஞ்சிதாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றவர் சுகுமாரின் வீட்டு வாசலில் வைத்து, “காலைல எப்படியும் பஞ்சாயத்தை கூட்டுவாங்க. எதுக்கும் தயாரா இருங்க. எங்கயும் அதுக்குள்ள தப்பிச்சி போயிரக்கூடாது. இது எங்க வீட்டுப் பொண்ணோட வாழ்க்கை” என்றவர் அந்நேரம் சத்தம் கேட்டு வெளியே வந்த சுகுமாரைக் கண்டு, “உன் மச்சான் என்ன பண்ணுறான்? எங்க போறான்னு பாக்காம உள்ள உக்காந்துட்டு இருக்க. தெரியாம இருந்தியா இல்ல தெரிஞ்சே... “

அவர் முடிக்கும் முன், “சார் தப்பா பேசுறீங்க. நான் செய்ததுக்கு மத்தவங்களை பொறுப்பாக்குறது தப்பு. அவங்களை எதுவும் சொல்லாதீங்க. எதுவா இருந்தாலும் என்னோட நிறுத்திக்கோங்க. உங்க பேச்சிக்கான காரணகர்த்தா நான்” என்றான் ஈஸ்வர்.

“இந்தக் குரல்! இந்த குரலுக்கு மட்டும் தான் உன்னை இதுவரைக்கும் சும்மா விட்டு வச்சுட்டு இருக்கேன். இல்ல என்னுடைய மருமகள் வாழ்க்கை விளையாண்டதுக்கு, அந்த இடத்திலேயே கொன்னு கூறு போட்டு இருப்பேன். சொல்றது புரியுதா சுகுமார்? நாளைக்கு காலைல எங்கேயும் போகக்கூடாது. பஞ்சாயத்து இருக்கு” என்றார்.

“மாமா அது...”

“வாய மூடுடா. இனி ஒரு வார்த்தை பேசின அவ்வளவுதான் சொல்லிட்டேன். சொந்தம்னு உங்களை நம்புனதுக்கு நல்ல உபகாரம் செய்திட்ட. ப்ச் காலையில் சீக்கிரம் வந்து சேரு. இன்னும் என் பெரியப்பனுக்கு என்னென்ன பதில் சொல்லனுமோ. இப்பவே சேதி போயிருக்கும். இந்நேரம் வீட்டுல ருத்ரதாண்டவம் ஆடிட்டு இருப்பார். அவரை எப்படி சமாளிச்சு“ என்று புலம்பியப்படி சென்றார்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top