• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 23

New member
Joined
Dec 1, 2024
Messages
27
சுந்தரி - 23


“பொய் சொல்லாதிய மாமா. நீங்க நல்லா கட்டுவியனு எனக்கு தெரியும். ஊர்ல கைலியும், வேட்டியும் தான உங்க டிரஸ். இப்ப என்ன புதுசா தெரியாது சொல்லுறிய?”

‘அடேய் ராஜன் என்னடா பழகி வச்சிருக்க. இது இடுப்புல நிக்க என்ன செய்யணும் கூட தெரியாத ஆளுடா நானு. வீட்டுல லுங்கி கட்டுற பழக்கமும் இல்லடா. ட்ரௌசரும் பேண்ட்டுமா அலைந்தவன் நானு. கடவுளே! வேற வழியில்ல சமாளிச்சிதான் ஆகணும்’ என்று யோசித்து, “நிஜமாவே மறந்திடுச்சி சுந்தரி. எதாவது ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்” என்றான்.

“நான் எப்படி மாமா?”

“ப்ளீஸ்” என்று கெஞ்சலில் அவன் இறங்க,

“சரி கண்ண மூடிக்கோங்க. நான் கட்டி விடுறேன்” என்றவள் முதலில் தன் கண்ணை மூடிக்கொண்டாள்.

வந்த சிரிப்பை அடக்கியவன், அவள் கையை எடுத்து வேட்டியை கொடுத்து, “என் கண்ணை மட்டும் பார்த்து கட்டிவிடு. வேற எந்த எண்ணமும் வராது” என்றான்.

“என்ன எண்ணம்? நான் ஒன்னும்....”

“நீ ஒன்னும் நினைக்கலை. என்னோட மனசு அலைபாயாம இருக்க என்னோட கண்ணை பார்த்து கட்டி விடு” என்றான்.

அவன் சொன்னது போல செய்தவள் ஐந்து நிமிடத்தில் கட்டி முடிக்க, அதற்குள் அவளின் இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்து ஒரு வழி ஆக்கியது. கண்கள் விலகவில்லை அவனிடம் இருந்து.

அவள் முகம் நோக்கி குனிந்து, “தேங்க்ஸ்” என்றான்.

பட்டென பார்வையை விலக்கி “பொங்கல் வைக்கலாம் வாங்க” என்று அழைத்துப் பின்புறம் செல்ல, அங்கு பொங்கல் வைக்கத் தேவையான எல்லாம் இருந்தது. சூரிய ஒளி பானையில் பட்ட நொடி பொங்கல் பொங்க, “நல்ல சகுனம் மாமா. நம்ம வாழ்க்கை அமோகமா இருக்கும்” என்றாள் அவனின் சுந்தரி.

தொடர்ந்து பொங்கல் வைத்து முடிய, வாழை இலையில் பொங்கல் வைத்து தேங்காய் உடைத்து சூரிய பகவானை தரிசித்தார்கள். பூஜை முடித்து காகத்திற்கு முதல் பொங்கலை வைத்து, இருவரும் இலையில் பொங்கல் வைத்து உண்டு முடிய, காலை ஏழரை மணியானது. அப்பொழுது முன் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது அங்கு.

“மறந்தே போயிட்டேன் மாமா. நேத்து கதவு திறக்கலை என்றதும் அப்படியே விட்டுட்டோம். நீங்க கதவை பூட்டுனீகளா? கதவு உடையுற அளவு தட்டுறாங்க. வாங்க போகலாம்” என்று அவனை அழைத்து கதவின் அருகில் வந்தாள்.

“அக்கா, சார் எங்க போயிருக்கார்? நான் வந்தே மூனு மணி நேரம் ஆகுது. இதோ அதோ சொல்லுற அவர் வரக்காணோம். இதோ பொங்கல் வைத்து சாப்பிடவும் செய்தாச்சி” என்றான்.

தம்பி சத்தம் போடவும் முந்தின நாள் நடந்ததைச் சொன்னாள்.

“அங்க இருந்து வரலையா? அப்ப அவர் அங்க தான் இருக்கனும். வா போய் பார்க்கலாம்” என்ற போது சுகுமார் ஓட்டமாக வந்து, “ரஞ்சி செல்வி வீட்டு வெளிய நின்னு ஆளுக கதவை தட்டுறாக. என்னன்னு தெரியல. ஈஸ்வர் சார் வந்தாச்சா?” எனக் கேட்டான்.

“இல்லங்க. அவர் போனும் இங்க தான் இருக்கு. அவர் அம்மா ரொம்ப நேரமா அவரை கூப்பிடுறாங்க. எடுத்து என்ன சொல்ல தெரியாததால எடுக்கலை.”

“சரி முதல்ல செல்வி வீட்டுக்குப் போகலாம் வா” என்றதும் மூவரும் செல்ல, இவர்கள் சென்ற நேரம் அவள் வீட்டுக் கதவும் திறந்தது.

“என்ன எல்லாரும் இங்க நிக்கிறிங்க? உங்க வீட்டுல பொங்கல் வைக்குற வேலை இல்லயா? இருங்க நான் தரேன் சாப்பிடுங்க” என்றாள்.

அவள் முன்னால் வந்த கனகவேல், “செல்விமா வீட்டுக்குள்ள யாரோ ஒருத்தன் இருக்கான். ராத்திரி நான் கதவை பூட்டிட்டு வந்தேனு சொல்லி இந்தப் பயல் எல்லாரையும் இழுத்துட்டு வந்திருக்கான். அப்படி இல்ல சொன்னாலும் கேக்க மாட்றாங்க. அப்படி யாரும் இல்ல தானமா?” எனக் கேட்டார்.

“மாமா, அக்கா வீட்டுக்கு அவர் அடிக்கடி வரதை பாத்ததால சொல்றேன். சுகுமார் அண்ணே வீட்டுல இருக்காவல்ல ரஞ்சிதா மயினி அண்ணன். அந்த சார் தான் ராத்திரி ஆனா வரார். முதல் இரண்டு நாள் பார்த்தப்ப சாதாரணமா போயிட்டேன். இதுவே தொடர்ந்தா சரிவராதுனு பூட்டிட்டு திறக்க மறந்து போயிட்டேன். இப்ப தான் நினைவு வந்தது. திறக்கலாம்னு வந்தா எல்லாரும் என்னைய திட்டுறிய. அதான் உண்மைய சொன்னேன்” என்றான்.

“என்ன செல்வி இதெல்லாம்?” என்றார் தூரத்து உறவினர் ஒருவர்.

“பெரியப்பா என் மாமாவை தவிர வேற யாரு இங்க வருவாங்க? யாரோ எதோ சொன்னா நீங்களும் கேக்குறிய?”

“அவன் உயிரோட இல்லம்மா. நீ நம்பலனாலும் இதான் நிஜம். இல்லாத ஒருத்தனை இவன் எப்படி பார்த்திருப்பான்?”

“மாமா இல்லாத ஒருத்தன் எப்படி பெரியப்பா என்னோட வீட்டுக்குள்ள நுழைய முடியும்? எப்படி நுழைய விடுவேன்? இந்த பையன் தண்ணி அடிச்சிட்டு எதையோ பார்த்து உளறிட்டு இருக்கான். நேத்து நைட் கதவை பூட்டினது நீதானா? அறிவில்ல உனக்கு” என்று அவனையும் திட்டினாள்.

“அக்கா நான் தண்ணி அடிப்பேன் தான். இல்ல சொல்லல. அளவுக்கு அதிகமா அடிச்சிட்டு மட்டையாகுற அளவுக்கு இல்ல. அம்மா யாரு, அக்கா யாருன்னு தெரியுற அளவு தெளிவாதான் இருப்பேன்.” என்றான் பதிலுக்கு.

“ரொம்பத் தெளிவு தான். இங்க பாருங்க என் மாமனைத் தவிர இங்க யாரும் கிடையாது. அதுவும் இல்லாம தேவை இல்லாம ஏன் ரஞ்சிதா அக்கா அண்ணனை இழுக்குற. அன்னைக்கு கால்ல அடிபட்டதுனு தூக்கிட்டு வந்தாரே அதை வச்சா? அது மனிதாபிமானத்துல செய்தது. உடனே சேர்த்து வச்சி பேசுவீகளா? உள்ள வந்து பாருங்க உங்களுக்கே தெரியும்” என்றாள் கோபமாக.

உள்ளே வந்து பார்க்க அங்கு யாரும் இல்லை என்றதும், “இல்ல நான் பாக்குறப்ப உள்ள போனார். இப்ப எங்க?” என முழித்தான் அவன்.

“அதை தான்டா கேக்குறோம். அவன் எங்க? எங்க புள்ள மேல பழிய போட்டுட்டு நீ முழுசா வீடு போவியா? குடிச்சிட்டு கதவை பூட்டினதே தப்பு. திரும்பவும் நீ சொன்னது நிஜம்னு சாதிக்க” என்று அவளின் உறவினர் அவனை அடிக்க ஆரம்பித்தனர்.

அதே சமயம் தங்கள் பின்னால் வந்து நின்று தட்டிய உருவத்தைக் கண்டு, “சார் நீங்க” என்று கேட்டான் ஹரிஹரன்.

“மத்தவங்க கவனிக்கிறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வாங்க” என்று யாரும் அறியாமல் அழைத்து வீட்டுக்குள் நுழைந்த நிமிடம் மற்றவர்கள் கேள்வி கேட்கும் முன், “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குறேன் ரஞ்சிமா. அப்புறமா கேள்விக்கு பதில் சொல்லுறேன். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனால் மட்டும் தெளிவா இருப்பேன்” என்றான் ஈஸ்வர்.

“பொங்கல் தரேன் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க” என்றாள்.

“என் பொண்டாட்டி வச்ச பொங்கலை சாப்பிட்டு வயிறு புல்லா இருக்கு. நீட் சம் ரெஸ்ட்” என்று உள்ளே சென்று கை காலை விரித்துப் படுத்துக்கொண்டான்.

“ஆனாலும் இவருக்கு ரொம்ப தைரியம் தான் ஹரி. வெளில வர அங்க ஒரு வழி தான? எப்படி வந்தார்?”

“போலீஸ்காரனுக்கு தப்பிக்க சொல்லியா தரனும். விடுக்கா பசங்க வரதுக்குள்ள டிபன் செய். சாரும் எழ சரியா இருக்கும்” என்றான்.

“ஆமா ரஞ்சி. அவர் பிரச்சனைய அவர் பாத்துப்பார். ஒரு மாவட்டத்தை பாத்துக்க தெரிஞ்ச அவரால தன்னை பாத்துக்க தெரியாதா” என்று மனைவியை உள்ளே அனுப்பினான்.

“டேய் சஞ்சய் என்னடா மாப்ள? எங்கயாவது விழுந்துட்டியா? கன்னத்துல என்னடா காயம்? அடிச்ச தடம் மாதிரி இருக்கு” என்று விசாரித்தான் மதன்.

“ஸ்ஸ்ஸ் தொடாதீங்க மச்சான். ரொம்ப வலிக்கிது. நான் கீழ விழலை. அடிச்சிட்டானுக மச்சான்” என்று அழுதான்.

“எவன்டா அடிச்சது? என்ன இதுக்காக அடிச்சானுக? யாருன்னு கை காண்பிடா அவன் கையை உடைக்கிறேன். ஆமா எதுக்காக அடிச்சானுங்க?” என்று கேட்டான்.

“கனகா பெரியம்மா பொண்ணு செல்வி அக்கா இருக்காவல்ல. அவுக வீட்டுக்கு அடிக்கடி ஒருத்தன் வர்றான் மச்சான். அதை நான் பாத்து சொன்னதுக்கு அடிச்சிட்டாங்க.”

“தப்பா பேசாதடா. செத்தாலும் அவன் நினைப்புல வாழுது அந்தப் புள்ள. தனியா இருக்கவே தைரியம் வேணும். அவங்க விஷயம் தெரிஞ்சும் நான் கல்யாணம் பண்ணிக்க கேட்டப்ப, இருந்தாலும் இல்லன்னாலும் எனக்கு கடைசி வரை என் மாமா தான் சொல்லிருச்சி. பொண்ணு பார்க்க அழகா இருக்காளே. சம்மதிச்சா கட்டிக்கலாம் பார்த்தேன். இப்பவரை பொண்ணு தேடியும் கிடைக்காம சுத்துறேன்” என்றான் அவன்.

“ஐயோ நான் சொல்லுறது உண்மை மச்சான். நம்புங்க என்னை. செல்வி அக்கா வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி இருக்குறாரே சுகுமார் அண்ணன். அவர் பொண்டாட்டி ரஞ்சிதா மதினி. அவுக அண்ணன் தான் அவர். ஒரு நாள் பிரெண்ட் தங்கச்சி நிச்சயத்துக்கு போயிட்டு, ரொம்ப லேட்டா வந்தேன். அப்ப தான் சுகுமார் அண்ணன் வீட்டுல இருந்து வந்தவர் சுத்தி பார்த்துட்டு, செல்வி அக்கா வீட்டுக்குள்ள போனார். நானும் செல்வி அக்கா சேர்த்துக்காது. சண்டை வந்தா போயி காப்பாத்தனும்னு காத்திருந்தேன். ஏமாந்தது தான் மிச்சம். ஒரு வேளை கற்பனையோனு போயிட்டேன். இன்னொரு நாளும் அதே தான் நடந்தது. நானே நாலஞ்சி முறை பாத்துருக்கேன். அதான் நேத்து பூட்டிட்டு வந்தேன்.” என்று தன் நியாயத்தை சொன்னான்.

“கதவைத் திறக்கிரப்ப அவன் அங்க இருந்தானா?”

“அப்படி ஒருத்தன் அங்க இல்ல மச்சான். பூட்டின வீட்டில் இருந்து வெளிய எப்படி போனான்னு தெரியலை. நான் பொய் சொல்லுறேனு அடிச்சிட்டாங்க. ரொம்ப அசிங்கமா போச்சுது மச்சான். கோபம் கோபமா வருது” என்று அழுதான்.

“அந்தப் புள்ள ரொம்ப யோக்கியம் நினைச்சேன். நீ சொன்னதைக் கேட்டதில் அவ மேல உள்ள மரியாதை சுத்தமா போச்சி. அவள் சுத்தம் இல்லன்னா நான் கரெக்ட் பண்ண பாக்குறேன்டா. உன்னை அடிவாங்க வச்சதுக்கு பழி வாங்க வேணாமா. இன்னிக்கு நைட் போறோம். எவன் வந்து என்ன கிழிக்கிரானு பாக்கலாம்.” என்றவன் மனதில், ‘என்னை வேண்டாம் சொன்னல்ல நீ. இருடி வரேன்.’ திருமணத்திற்கு மறுத்ததை மனதில் வைத்து வஞ்சம் கொண்டான்..

“உளராம இருங்க மச்சான். அவங்க மாமா வீடு எதிர்லயே இருக்கு. ஆள் இல்லன்னு தெரிஞ்சதால் சின்ன அடியோட போச்சு. நீ போய் சிக்கின வையி எலும்பை நொறுக்கிருவானுவ. அத்தை, மாமாவுக்கு என்ன பதில் சொல்லுறது? சந்தர்ப்பம் வரப்ப பார்த்துக்கலாம். நீயா எதுவும் செய்து சிக்கி சின்னாபின்னமாகி போயிராத” என்று அடக்கினான்.

பெண்ணாசை கொண்டவன் அடங்குவானா? அடங்க தான் விடுமா அவள் மேல் அவனுக்குத் துளிர்த்த மோகம்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top