• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 21

New member
Joined
Dec 1, 2024
Messages
26
சுந்தரி - 21


அவளின் குழப்பம் உணர்ந்து, “கொஞ்சம் உள்ள போயி பேசலாமா?” எனக் கேட்டான்.

“இந்த நேரத்திலா?”

“இதுல மட்டும் உஷாரா இரு. உன்னை என்ன செய்ய போறேன்னு வர்றப்ப எல்லாம் வாசல்ல நிற்க வச்சி பேசுற” என்றவன் குரலில் கோபம்.

மாமனின் கோபத்தில் மனம் பிசைய, “மன்னிச்சிக்கோங்க மாமா. இத்தனை வருசமா நீங்க உள்ள வந்தது இல்லையா. அப்படியே பழக்கமாகிடுச்சி.”

“இனிமேல் மாத்திக்க. இப்ப எனக்கு சூடா ரெண்டு தோசை ஊத்து வரேன்” என்று அவளை உள்ளே அனுப்பி, சுந்தரராஜனைப் பார்த்தவன், “என்ன ராஜன் எனக்குத் தெரியாம ஏதாவது பண்ணுறியா? உன் கண்ணுல கள்ளத்தனம் தெரியுது” என்றான்.

“நீ போலீஸ்னு நானும் ஒத்துக்கறேன். அதுக்காக எல்லாரையும் சந்தேகப்படாத. என்னால என்ன செய்ய முடியும்? உங்களை சேர்த்து வைக்குறது வரை இங்க இருப்பேன். அப்புறம் எனக்கு இங்க என்ன வேலை. எனக்கான உலகத்துக்கு போயிடுவேன்.”

“என்னவோ பண்ணிக்கோ. ஒரு விஷயம் கவனிச்சியா? அவளுக்கு உன்னுடைய ப்ரெசென்ஸ் தெரியவே இல்ல. என் கண்ணுக்கு முன்னாடி நிற்கிற உன்னை தெரியல பாரேன்” என்றான் கிண்டலாக.

“அவளுக்கு அது நல்லது தான. நிஜம் நீ இருக்க. நிழலோட வாழ வேண்டிய அவசியம் இருக்காது. கொஞ்சம் கொஞ்சமா நிஜத்தை ஏத்துக்குவா” என்றான் சீரியஸாகவே.

“அதுவும் சரிதான். நான் போயி என்னோட பொண்டாட்டி கையால தோசை சாப்பிடுறேன்” என்று உள்ளே சென்றவன் கையில் உள்ள கவரை அங்கிருந்த சேரில் வைத்துவிட்டு கிச்சன் சென்றான்.

“ஓய் சுண்டெலி கொஞ்சம் மாமனை பாரேன்” என்று அழைக்க,

“இருங்க மாமா. இன்னும் ஒரு தோசை மட்டும் ஊத்திட்டு வரேன்.”

“சுந்தரி நீ இந்த சுந்தரனோட பொண்டாட்டி தான?” எனக் கேட்டான்.

“அதில் என்ன சந்தேகம்?”

“பொண்டாட்டிக்கு புருஷன் உதவி பன்னுறதுல தப்பில்லன்னா, நானும் உனக்கு ஹெல்ப் பன்னுறேன்” என்று அவளின் பின்புறம் நின்று கொள்ள,

அவன் நிற்பது தெரியாதவளோ, “இந்த ஒரு தோசையோட வேலை முடிஞ்சிடும். இதில் ஹெல்ப் பண்ண என்ன இருக்... ஹக்க்...” என்ற சத்தத்துடன் வார்த்தைகளை முடிக்க முடியாமல் நிறுத்தினாள்.

அவன் கைகளோ அவள் இடையில் ஒன்றும் தோசைக் கரண்டியை பிடித்திருந்த அவளின் கரத்தில் ஒன்றுமாய் இருந்தது.

“மா...மா எ..ன்ன பண்ணுறிய? போய் ஹால்ல உக்காருங்க.”

“என்ன பண்ணுறாங்க பொண்டாட்டிய கட்டிப் புடிக்காங்க” என்று அவளை தன்னுடன் இன்னும் சேர்த்து அணைத்து, கழுத்தில் முத்தம் என்ற பெயரில் கவ்வி இழுக்க, முற்றும் மறந்த நிலை அவளுக்கு. சமீபமாக மாமனிடம் கிடைக்கும் முதல் அனுபவங்கள் அனைத்திற்கும் மொத்தம் மயங்கிப் போகிறாள்.

இந்த மயக்கம் அவன் செல்லும் வரை மட்டுமே. அதன் பின் நிறைய யோசனைகள். ‘எப்படி தொடு உணர்வை தான் உணர்கிறோம்’ என்று. அவள் தானே தன் மாமனுக்கு சமாதி கட்டி வைத்திருப்பது. ‘பின்னர் எப்படி?’ என்ற சந்தேகம் எழுகிறது. அதுவும் அவனைக் காணும் வரை மட்டுமே.

“மல்லிப்பூ வாசம் மயக்குதுடி. நான் வருவேனு தான வச்ச?” என்றான் வாசம் பிடித்தவாறு.

“யார் சொன்னா? பின்னாடி தோட்டத்துல பூ வேஸ்டா போகுதேனு தொடுத்து வச்சேன். நாளைக்கு கோவிலுக்கு போகனும் அதுக்காகவும் பூ தொடுத்தேன்” என்றாள் அவள்.

“பொய் சொல்லாதடி” என்று பூ வாசத்துடன் பெண் வாசத்தையும் நுகர்ந்து தோள்பட்டையில் முகம் திருப்பி கன்னத்தைக் கடித்துச் சுவைக்க, அவளுக்கோ இன்ப அவஸ்தையில் உயிர் போய் வந்தது.

“ம்..மா..ம்மா வேணாம் விடு. என்னால இதை தாங்க முடியலை” என்றாள்.

“இதையே முடியலன்னா, என்னை எப்படி தாங்குவ? நம்ம குழந்தையை எப்படி சுமப்ப?”

“அ...அது எல்லாம் அப்ப பாத்துக்கலாம். தோ...தோச கருகுது மாமா. தள்ளிப்போ” என்றாள் அவன் தரும் இன்பம் தாளாது.

தோசையை லாவகமாக எடுத்தவன், ஸ்டவ்வை அணைத்து அவளை தன் புறம் திருப்பி, “நான் கேட்டதுக்குப் பதில்” என்று அவள் முகத்தினில் விரல் கொண்டு கோலமிட்டான். நாணத்தில் சிவந்த முகம் இன்னும் சிவக்க, சட்டென முகத்தை பக்கவாட்டாக சாய்க்க, ஒரு கைகொண்டு அவள் முகம் நிமிர்த்தி, “என்னைப் பாருடி” என்று கண்ணில் முத்தமிட்டான்.

திறவாத கண் மெல்ல திறந்து அவன் கண் பார்க்க, “என்னை நம்புறியா?” எனக் கேட்டான்.

“உன்னைத் தவிர வேற யாரையும் நம்பமாட்டேன் மாமா. அதனால தான் உன்னோட இருக்கேன்.”

“பழைய கதை வேண்டாம். இப்ப இருக்கிற இதே நம்பிக்கை எந்த சூழ்நிலையிலும் மாறக்கூடாது. மீறி நீ மாறினாலும் நான் விடமாட்டேன் என்பது வேறு. ஏன்னா நீ என்னில் பாதி” என்றான் மனதார.

“மாமா” என்றாள் உணர்ச்சிப்பெருக்கில்.

“ப்ராமிஸ் பண்ணு. எந்த சூழ்நிலை வந்தாலும் என்னோடதான் இருப்பேன்னு. சத்தியத்தை மீறினா நான் இல்லைன்னு அர்த்தம்” என்றதும் அவள் அவன் வாய் மூட, மென்மையாக அதை எடுத்து விட்டவன், “உண்மை சில நேரம் வலிக்கத்தான் செய்யும். நான் சொன்னதை மனசுல வச்சிட்டுப் பண்ணு” என்றான்.

“சத்தியம் மாமா. எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டுட்டு போகவும் மாட்டேன். விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்” என்று அவன் தலையில் கைவைத்து சத்தியம் செய்தாள்.

அந்தக் கையை தன் கைக்குள் அடக்கி அவள் நெற்றி முட்டி, “ஐ லவ் யூ” என்றான்.

பதில் சொல்லாது அவனையே பார்த்திருக்க, “என்னடி பார்வை?” என்க,

“ரொம்ப புதுசா தெரியுற மாமா. நீ இப்படி இருந்ததே கிடையாது. என்னிடம் தொட்டுப் பேசவே அவ்வளவு தயங்குவ. இப்ப என்னன்னவோ செய்யுற. என்னை நானாவே இருக்க விடுறதில்ல. உன்னோடவே எப்பவும் இருக்கனும் என்று என் மனசு துடிக்குது. இந்த உணர்வுக்குப் பெயர் என்ன?” என்றாள் அவ்வுணர்வை கொடுப்பவனிடமே.

“காதல்னு சொல்லுவாங்க. இதுக்கு அடுத்து ஒன்னு இருக்கு. அதையும் உனக்கு கத்துத் தரேன்” என்றான் குறும்பாய்.

“என்னது?”

அவள் காதோரம் குனிந்து, “காமம்! நானும் நீயும் மட்டும் அதில். மன்மதனா நான். ரதிதேவியா நீ” என்றவன் அவள் காதில் செல்லக்கடி கடிக்க, அலைபாய்ந்த அவளின் கைகள் அவன் பிடறி முடியை இறுக்கிப் பிடிக்க, “ஒரு சாம்பிள் காட்டுறேன்” என்று அவள் இதழை கவ்விக்கொள்ள, “ம்ம்ம்... என்னைக் கொல்லுற மாமா” என்ற முனகல் அவளிடம்.

“உன்னோட நானும் சாக ரெடிடி பொண்டாட்டி. காமத்தில் கூட எல்லாம் சாத்தியம்” என்றான் அவனும் உளறலாக.

அவன் சாவு என்றதும் சட்டென உணர்வு வந்தவள், இருவரின் நிலை உணர்ந்து, அவனை விலக்க முனைய, அவனின் பிடியோ உடும்பாய் இறுகியது.

“மாமா கல்யாணத்துக்கு முன்னான நீங்க சொன்ன காமம் தப்பு. இன்னொரு முறை சாவுனு பேசாதீக. பசிக்குது சொன்னீங்கல்ல வாங்க சாப்பிடலாம்” என்று அவனை வலுக்கட்டாயமாக விலக்கி, தோசையில் சாம்பாரை ஊற்றி எடுத்து வந்து ஹாலில் அமர்ந்து தட்டை அவனிடம் நீட்ட, அவனோ ஊட்டி விடச்சொல்லி வாயைத் திறந்தான்.

மெல்லிய புன்னகை அவளிடம் எழ, தோசையை பிய்த்து ஊட்டிவிட்டாள்.

“உன்னோட இந்தப் புன்னகை என்னைக்கும் வாடாம பாத்துக்குவேன் சுந்தரி. உன் சுந்தரன் அதுக்கான உறுதி குடுக்குறேன்” என்றான்.

“உங்களை எனக்குத் தெரியும் மாமா” என்றவளிடம்,

“ஓய் இவ்வளவு நேரம் வா போ சொன்ன. இப்ப என்ன ங்க வருது?” எனக் கேட்டான்.

“எப்ப சொன்னேன்?” என்றாள் புரியாது.

“நம்ம அந்தரங்க நேரத்தில்” என்றான் கண்ணடித்து.

“மாமா தப்பா பேசாதிய. பேசாம சாப்பிடுங்க” என்றவளுக்கு அந்த நினைவுகள் வந்து முகத்தை நாணம் கொள்ள செய்தது.

“உன் முகச் சிவப்பு என் இளமைக்கான தவிப்பை அதிகப்படுத்துது சுந்தரி. சீக்கிரமே கல்யாணம் செய்துக்கணும்” என்று சொல்லும் போது அங்கிருந்த பையைப் பார்த்தவன் அதைக் கையில் எடுத்து, “சொல்ல மறந்துட்டேன். இதில் இரண்டு புடவை இருக்கு. உனக்காக நான் பார்த்துப் பார்த்து வாங்கியது. நாளைக்குப் பொங்கலுக்கு இதை தான் போட்டுக்குற. பிடிச்சிருக்கா பார்த்து சொல்லு?” என்றான் அவளிடம்.

“மாமா பட்டுப்புடவையா? ஏன் மாமா? விலை அதிகமா இருக்குமே?”

“விலையை ஏன் பார்க்கிற? என் சுந்தர பொண்ணுக்காக நான் எடுத்துக் குடுக்கிறது. இதுக்கெல்லாம் கணக்கு பார்க்காத. பிடிச்சிருக்கா மட்டும் சொல்லு?” என்று அவள் கையில் கொடுக்க நீட்ட,

“இருங்க மாமா கையை கழுவிட்டு வரேன்” என்று எழுந்து செல்லப் போனவள் கைபிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவளை மடியில் அமர்த்தி, புடவை பையை அருகில் வைத்து, “இரு நானே செய்யுறேன்” என்று அவள் விரலை எடுத்து வாயில் வைத்து சுவைத்தான்.

“மாமா என்ன பண்ணுறிய?” என்றவளை தாங்க முடியா உணர்வில் தள்ளியது அவனின் செய்கை.

“உன் வேலையை மிச்சப்படுத்துரேன்” என்று ஒவ்வொரு விரலாக சுவைக்க, உணர்ச்சிகளின் தாக்குதலைத் தாங்க இயலாது அவனைத் தள்ளிவிட்டு, பாத்திரம் தேய்க்கும் இடம் சென்று கை கழுவி வர, இன்னும் அவனின் இதழ் சுவை அவள் விரல் தனில் ஒட்டிக் கொண்டிருந்தது போன்ற பிரமை அவளுள்.

“இந்த மாமா ரொம்ப மோசம்பா. விட்டா என்னை முழுசா முழுங்கிருவாவ போல. என் உடம்பும் அவர் சொன்னத தட்டாம கேக்குது. இத்தனை வருட காதல்ல என் கை பிடிக்கவே ஆயிரம் யோசிக்கும் மாமாவா இது. என்னவோ ஆச்சு இவருக்கு. ஆனாலும், பிடிச்சிருக்கு” என்றாள் தனக்குள்.

“பிடிச்சிருக்கா?” என காதோரம் கேட்ட குரலில், “ம்ம்ம்...” என்று உரைத்ததும் தான் உணர்வு வந்து பார்க்க, அவனோ இருந்த இடத்தை விட்டு அசையாது இருந்தான்.

“ச்சை கண்ணை திறந்திட்டே கனவு காணுறேன். கெட்டுப் போயிட்டடி செல்வி.” தன்னையே கடிந்தபடி ஈஸ்வர் அருகில் செல்ல, அவனோ கள்ளச்சிரிப்பை சத்தமில்லாமல் கொடுத்தான்.

புடவையை எடுத்துப் பார்த்தவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, “எனக்கு இந்த கலர் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி மாமா தெரியும்? இதுவரை அம்மாவுக்கே தெரியாது. உங்களிடமும் சொன்னதில்லையே” என்றாள் அவள்.

“நீதான் சொன்ன என்னிடம்” என்றான் குறும்பாக.

“நானா? கனவிலும் யாரிடமும் சொன்னது இல்லையே மாமா” என்று புரியாது விழித்தாள்.

“கனவில் வந்து தான் சொன்ன? நீ வரும் போதெல்லாம் ஒரே கலர்ல வேற வேற டிசைன்ல சாரி கட்டிருப்ப. இது போதாதா” என்றான் கண்ணடித்து.

“பொய் சொல்லாத மாமா.”

“நிஜம்டி சுண்டெலி. கனவில் இன்னும் என்ன என்னவோ செய்த. அதையும் சொல்ல ஆசை தான். நீ தான் கல்யாணத்துக்கு பிறகுன்னு சொல்லிட்டியே. அதான் கண்ட்ரோல் மை செல்ப்னு இருக்கேன்” என்றான் அப்பாவியாய்.

“நீங்க கண்ட்ரோல் பண்ணுற லச்சணம் தான் தெரியுதே” என முனகினாள் செல்வ சுந்தரி.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top