• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 17

New member
Joined
Dec 1, 2024
Messages
21
சுந்தரி - 17

“யாரா இருந்தா என்ன? அடிபட்டா வந்து உதவுவது மனித இயல்பு” என்று கையில் இருந்த கைக்குட்டையை கூரான கல்லில் வைத்து இரண்டாகக் கிழித்து, அதில் ஒன்றை எடுத்து அவள் மறுத்து தடுக்கத் தடுக்க இரத்தத்தைத் துடைத்தவன், “டேய் மருமகனே! அந்த பூக்கார அக்காவிடம் கொஞ்சம் தண்ணீர் வாங்கிட்டு வா” என்று அனுப்ப, சீக்கிரமே வாங்கி வந்தவன் யாரிடமோ பேசிக் கொண்டிருந்த தாயையும் அழைத்து வந்தான்.

“அண்ணே! என்ன ஆச்சு? என்னம்மா செல்வி?” என்று இருவரிடமும் கேட்டாள் ரஞ்சிதா.

“ஒன்னும் இல்ல ரஞ்சிமா. கால்ல கல்லு இடிச்சிடுச்சி. இல்ல இல்ல கல்லில் கால் இடிச்சிடுச்சி” என்றான் பதிலாய்.

அவன் குரல் இப்பொழுது சாதாரணமாக இருக்க, அடிபட்ட வேதனையில் இருந்து நிதானத்திற்கு வந்த செல்வ சுந்தரி, “யா..யார் அக்கா இவர்? இந்தக் குரல்? இந்த வாச...” சொல்ல வந்தவள் அப்படியே நிறுத்தினாள்.

‘நான் சொல்லலை’ என்பதாக ரஞ்சிதா ஈஸ்வரைப் பார்க்க, கண்கள் மின்ன தன் சுந்தரியை ரசித்தவன், “என்னங்க மீதியை முழுங்கிட்டீங்க? சொல்ல வந்ததைச் சொல்லுங்க” என்றான்.

“நீங்க சும்மா இருங்க அண்ணே. இவர் என்னோட அண்ணன் செல்வி. கொஞ்ச நாள் இங்க இருந்துட்டுப் போக வந்திருக்கார்.”

“ஆனா, உங்களுக்கு அண்ணன் இல்லையே. தம்பி மட்டும் தான சொன்னீங்க?” என்றாள் கேள்வியாய்.

“இல்லயே செல்வி. எனக்கு அண்ணன் இருக்கிறதை வெளியில் சொல்லலை. ஏன்னா சின்ன வயதில் இவர் எங்களிடம் கோபிச்சிட்டு எங்கயோ போயிட்டார். ரொம்ப வருடம் கழித்து வீட்டில் பேசி சமாதானமாகி இப்ப வந்திருக்கார்” என்று வாய்க்கு வந்ததை எடுத்துவிட்டாள்.

“ஓஹ்... ஆனா இந்தக் குரல்?” இன்னும் தடுமாற்றம் பெண்ணிடம்.

“இவங்க அப்பாவும்” என்று தன் பையன்களைக் காண்பித்து, “உன்னைப் போல தான், வீட்டுக்குள்ள நொழைஞ்சதுமே ராஜனோட குரல் கேக்குதுனு கொஞ்ச நேரத்துல ஒரே சேட்டை. அவருக்குப் புரிய வைக்கவே தொண்டத் தண்ணி வத்திடுச்சி. அதனால தான் அண்ணனை வெளில வரப்ப பேச விடுறதில்ல. உனக்கு அடிபட்டதும் சக மனிதரா துடிச்சிட்டார். தப்பா எடுத்துக்காத செல்வி. எழுந்திருச்சி நடக்க முடியுதா பாரு” என்றாள்.

“ஒரு நிமிடம் ரஞ்சிமா” என்றவன் இன்னொரு பாதியை தண்ணீரில் நனைத்து அடிபட்ட இடத்தில் சரியாக சுத்தி லேசாக முடிச்சிட்டு, “இப்ப எழுந்திருங்க” என்று சொன்னான்.

எழப்போனவள் கையை ரஞ்சிதா பிடித்து தூக்கி விட்டு, “நடக்க முடியுதா பாரு” என்றதும் இரண்டு எட்டு எடுத்து வைத்தவள், தலை சுற்றித் தள்ளாட, வேகமாக அவளை வந்து தாங்கிக் கொண்டான் ஈஸ்வர்.

“விடுங்க” என்று அவனை விட்டு விலக,

“சும்மா இருங்க. என் தங்கச்சிக்கு உங்களைத் தாங்குற அளவு சக்தி கிடையாது. நான் தான் உங்களை சுமக்கனும்” என்றான் மறைபொருளாக.

“என்ன சொன்னிங்க? என்ன பேசுறீங்கனு புரிஞ்சி தான் பேசுறீங்களா? வாய்க்கு வந்ததை பேசிட்டு போறீங்க” என்று அவனைத் திட்ட ஆரம்பித்தாள்.

“ஐயே... இது வேலைக்கு ஆவாது. சொம்மானாச்சும் கத்திக்கினே கீது. தங்கச்சிமா நீ பசங்கள கூட்டினு முன்ன போ. நான் இத்த தூக்கினு வரேன்” என்று சென்னை பாசையில் அவன் வெளுத்து வாங்க, ‘ங்ஞே’ என விழித்தபடி ரஞ்சிதா சென்றதும், சுற்றி உள்ள எதையும் பார்க்காமல், “நீ வா” என்று அவளைத் தூக்கினான்.

“யேய் என்ன பண்ற? விடு விடுடா” என்று துள்ளி விழப் பார்க்க,

“ஸ்ஸ்.. அமைதியா வா. நான் சும்மா பிடிக்க செய்தேன். நீ செய்த வேலையால தான் இப்ப தூக்க வேண்டியதாகிடுச்சி. இன்னும் துள்ளினா சம்பவம் செய்யுற மாதிரி ஆகிடும்” என்று மிரட்டினான்.

யாருலே நீ? வாய்க்கு வந்ததை பேசிட்டிருக்கா. கீழ விடுறியா, இல்லையா? தோல உரிச்சி தொங்க போட்டுருவேன். யார் மேலலே கைய வைக்க. சுத்தி இருக்குற எல்லாரும் சொந்தக்காரங்க. மரியாதையா கீழ இறக்கிவிட்டு மன்னிப்பு கேட்டுட்டுப் போ” என்று அவனை அடித்தாள்.

“அடியேய் சும்மா இருடி. எப்பப்பாரு சூரியன் மாதிரி சுட்டெரிக்கிறது. உன்னால நடக்க முடியலனு தான தூக்கிட்டு போறேன். நீ என்னன்னா குதிக்கிற. அப்புறம் சேதாரம் நிறைய ஆகும்” என்று எச்சரித்தான் அவன்.

ஊரே வேடிக்கை பார்த்தது அவர்களை. என்னவென்று கேட்க வந்தவரிடம், “அண்ணே செல்வி காலு கல்லுல இடிச்சதுல கால் சுளுக்குப் பிடிச்சிருச்சி. எழுந்து நிற்கக் கூட முடியலை. ஆபத்துக்குப் பாவம் இல்லன்னு தூக்கிட்டு வர சொன்னேன். தூக்கிட்டு வரது என் அண்ணன் தான். அவர் தப்பான ஆள் இல்லை. உங்களால முடிஞ்சா நீங்க தூக்கிட்டு வாங்க” என்றாள் ரஞ்சிதா படபடவென.

“என்னது தூக்குறதா’ ம்ஹ்கும் அது முடிஞ்சா என் பொண்டாட்டி ஏன் என்னைத் திட்டுறா’ என மனதில் நினைத்து, “பரவாயில்லமா. உன் அண்ணன்னா நல்லவனா தான் இருப்பான். பார்த்து பத்திரம்” என்று மெல்ல நழுவினார்.

அவரின் யோக்கியதை தெரிந்து தானே ரஞ்சிதா சொன்னது. மனதுக்குள் சிரித்து அந்த புது ஜோடியைக் காண, அவர்களின் அந்த அழகியல் அவள் மனதிற்கு சந்தோசத்தை அளித்தது.

இருவரும் பேசியது என்னவோ கோபத்தில் மட்டுமே. ஆனால், அவளுக்கோ அவனின் காதலும், இவளின் ஊடலுமாகத் தெரிந்தது. ‘நல்ல பொருத்தமான ஜோடி. செல்வி மட்டும் மனசு வச்சா போதும், மகாராணி வாழ்க்கை காத்திருக்கு’ என்றெண்ணி சந்தோசப்பட்டாள்.

அவள் வீடுவரை வந்து வாசலில் அமர வைத்து, “சாவியை எங்க?” எனக் கேட்டான் அவளிடம்.

அவளோ, “அது எதுக்கு உனக்கு. அதான் விட்டுட்டல்ல. உன் வேலைய பாத்துட்டு போ” என்றாள் கோபத்தில்.

“அட... ஹான்... நீங்க சொன்னா நாங்க கேட்கணுமா? முதல்ல
சாவியைக் குடு” என்று அவளின் இடுப்பு அருகே கையைக் கொண்டு செல்ல, பதற்றத்தில் பக்கென்றாக வேகமாக எழுந்தவள் கால்கள் தள்ளாடியது.

“இது வேற இவனுக்கு ஏத்த மாதிரி சதி பன்னுது” என்று தன் காலை திட்டி முடியும் முன், அவளைப் பிடித்து, “சொல்றதைக் கேட்கிறதே இல்லை” என்று அமர வைத்து, வாசல் நிலைப்படியில் பார்க்க அங்கு தான் இருந்தது.

‘போலீஸ்காரன் பொண்டாட்டி திருடனுக்கு ஏத்த மாதிரி சாவியை வச்சிருக்கா. கொஞ்சமாவது முன்னெச்சரிக்கை இருக்கா’ என மனதினுள் திட்டி, “இப்படியா சாவியை வைப்பாங்க? அப்புறம் திருடன் அதை எடுத்துட்டான். இதை எடுத்துட்டான்னு எங்கட்ட வந்து கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது” என்றான் அவன் கோபத்தில்.

“புரியல. உங்களிடம் வந்து கம்ப்ளைன்ட் பண்ணுறோமா? யாருங்க நீங்க?” என்றாள் புரியாது.

‘அடேய் ஈஸ்வரா? என்ன காரியம் பண்ணிருக்க? எப்படி சமாளிக்கிறது’ என சில நொடி யோசனைக்குப் பின், “நான் ஈஸ்வர். ரஞ்சி அண்ணன். இன்னுமா சந்தேகம் தீரலை? இருங்க கதவை திறக்கிறேன்” என்று கதவை திறந்து அவளைத் தூக்க வர, அவள் அவன் எண்ணம் புரிந்து தள்ளிவிட்டு கையை ஓங்கி விட்டாள்.

அவள் கையைப் பிடித்தவன், “மாமா மேல ஆசைனா ஓங்கி காண்பிக்கக் கூடாது. இப்படி அன்பா தொடவும் செய்யலாம்” என்று தன் முகம் அருகில் கொண்டு வர, பட்டென்று ஒரு கை வந்து தட்டி விட்டு செல்வ சுந்தரியை தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

“யாருலே நீ? என் வீட்டுப் பொண்ணு மேல கையை வைக்கிற? ஏன்த்தா செல்வி, இவன் உன்னிடம் வம்பிழுக்கிறான்னு பயலுக சொன்னானுவ. யார் இவன்? என்னவாம் இவனுக்கு?” என்றார் எதிர் வீட்டில் இருக்கும் அவளின் மாமன் கனகவேல்.

ராஜனின் பெரிய சித்தப்பா மகன். செல்வ சுந்தரியின் இன்னொரு தாய்மாமன். அவளின் பாதுகாப்புக்காக மருமகளின் எதிரில் வீடு கட்டி குடும்பத்துடன் வந்துவிட்டார்.

யாரோ ஒருவர் ‘உன் மருமகளை ஒருவன் தூக்கிச் செல்கிறான்’ என்றதும் கோபத்தில் வந்தவர் கண்ணில், மருமகளிடம் அவன் வம்பு செய்வதும், கோபத்தில் மருமகள் அடிக்கக் கை ஓங்கியதும் பட, விரைந்து அருகில் வந்து தடுத்துவிட்டார்.

தன் குடும்பத்தினர் மீது கோபம் இருந்த போதிலும், மூன்றாம் மனிதன் முன் விட்டுக்கொடுக்க மனம் இல்லாது, “இவர் ரஞ்சிதா அக்காவோட அண்ணன். கால்ல அடிபட்டுதுனு...”

“அத்து மீறித் தூக்கிட்டு வந்தானா? என்ன துணிச்சல் உனக்கு? வயசுப் பொண்ண இப்படித் தூக்கிட்டு வந்தா, ஊர்ல எல்லாரும் எப்படிப் பேசுவாங்கனு தெரியாத தற்குறியா நீ?” எனக் கேட்டார் கனகவேல்.

“சார் வார்த்தையை அளந்து பேசுங்க. தற்குறின்னு சொல்றீங்க? அந்த இடத்தில் ரஞ்சி மட்டும் தான் இருந்தா. அவளால இவங்களை எப்படி தூக்கிட்டு வர முடியும்? ஏன் மத்தவங்களும் வேடிக்கை தான பாத்தாங்க. அவங்கள்ல யாராவது ஒருத்தர் வந்து, நான் பார்த்துக்குறேன் தம்பி. நீங்க போங்கன்னு சொல்லி, உங்க வீட்டுப் பொண்ணை தூக்கிட்டு வந்திருக்கலாமே. ஏன் பக்கத்துல யாருமே வரலை? என்ன ஏதுன்னு தெரியாம பேசக்கூடாது” எனும்போது ரஞ்சிதா அங்கு திரும்பி வந்தாள்.

அதுவரை அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த கனகவேலுக்கு, அவன் முகம் பார்க்கும் ஆர்வம். தன் தம்பியின் குரலில் ஒருவன் பேசப்பேச, ஏதேதோ நினைவுகள் அவரை ஆட்டிப் படைத்தது.

“என்ன அண்ணே பிரச்சனை? இவங்க யாராவது ஏதாவது சொன்னாங்களா? ஆள் இல்லாததால தூக்கிட்டு வந்துட்டீய சரி. இங்க விட்டதும் வீட்டுக்கு வர்றதில்லையா? இன்னும் நீங்க உதவி செய்ததைப் பார்த்தவன் எல்லாம் என்னென்ன சொல்லுவானுவளோனு இருக்கு. தங்கச்சி வீட்டுக்கு வந்ததுக்கு இன்னும் என்னன்ன பேச்சு வாங்க வேண்டியிருக்குமோ. வாங்க அண்ணே போகலாம்” என்று அவனை அழைத்தாள்.

“இவங்க கால் வலி?” என்று மறுத்து அவன் நிற்க,

“அதுக்கு இதோ அவ மாமா இருக்காவ. அவுக பாத்துக்குவாக” என்று கைபிடித்து இழுத்துச் சென்றாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் “மன்னிச்சிகோங்க அண்ணே. கனகு ஐயா முன்னாடி எதுவும் தப்பா ஆகிடக் கூடாதுனு, கைபிடித்து இழுத்துட்டு வந்துட்டேன். தப்பா எடுத்துக்காதிய” என்றாள்.

“இப்பவும் என்னை நீ அண்ணன்னு ஏத்துக்கவே இல்லை. இல்லன்னா உரிமையா அழைச்சிட்டு வந்ததை, தப்பா எடுத்துக்குவேன்னு சொல்லுவியா? போமா நான் தனியா வீடு பார்த்து இருந்துக்குறேன்” என்றான் முறுக்கிக்கொண்டு.

“ஐயோ இல்லண்ணே. அது தெரியாம வாயில வந்திடுச்சி. நான் கோயிலுக்கு போகல சரி. நீயும் என்னோட வந்துட்ட? பசங்களை கூட்டிட்டு போய் சாமி கும்பிட்டு வாமா” என்றான் அவன்.

“கோயில் மண்ணை மிதிச்சாச்சில்ல அது போதும். உங்க மருமகனுக விளையாட போயிட்டாங்க. இனி வர இருட்டிடும். நீங்க உக்காருங்க காபி எடுத்துட்டு வரேன்” என்று அடுப்படி சென்றாள்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top