• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 16

Member
Joined
Dec 1, 2024
Messages
39
சுந்தரி - 16


இரவு ஒரு மணிவரை அவனுக்காகக் காத்திருந்தவள் அதற்கு மேல் முடியாது தூங்கிவிட்டாள். இப்பொழுது அவனிடம் நடந்தது என்ன? என்று கேட்காவிட்டால் தலை வெடிக்கும் போல் இருந்தது.

அவனோ நிதானமாக எட்டு மணிபோல் எழுந்து வந்தவன், “ரஞ்சிமா நைட் முழுக்க தூங்கவே இல்ல. தலை வலிக்குது. கொஞ்சம் காபி குடு” என்று அங்கிருந்த சேரில் அமர்ந்து, “சுகுமார் வேலைக்குப் போயாச்சா?” எனக் கேட்டான்.

“அவர் போயாச்சி. பசங்க விளையாட போயிருக்காங்க. எனக்கு முதல்ல பதில் சொல்லுங்க?” என்று காப்பியை ஆற்றியபடி அவன் கையில் கொடுத்தாள்.

“என்ன கேள்வினு கேட்காம பதில் கேட்டா, என்னம்மா அர்த்தம்?”

“நேத்து எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தீங்க?”

“நேத்தா? நான் காலையில் நாலரை மணிக்கு அவளைத் தூங்க வச்சிட்டு வந்தேன்” என்றான் காபியை ரசித்துக் குடித்தவாறு.

“என்னது? நாலரையா? அண்ணே, என்ன சொல்லுறீய? என்னதான் நடந்தது?” என்று பயத்துடன் கேட்டாள்.

“அது ஒன்னும் இல்லம்மா” என்று இரவு சென்ற நொடி பாம்பு அவளைக் கொத்தக் காத்திருந்ததைச் சொல்லி, அதை தான் பிடித்ததையும் பாம்பு தன்னைக் கொத்தியதாகவும் சொன்னான். “அதனால காலை வரை தூங்க கூடாதுனு என் பக்கத்துலயே உட்கார்ந்து பேசி, விளையாண்டு, ஹ்ம்ம்... இப்படி ஒரு இரவு என் அகராதியில் இருந்ததே இல்லை. எப்பவும் களவாணிப் பயலுகளோட மட்டும் தான் இருந்திருக்கேன். பீலிங் வெரி ஹாப்பி” என்றான் ரசனையாக.

“அண்ணே அவளுக்கு நீங்க வேறன்னு தெரியாது. அவளோட மாமானு...” என்று இழுத்தாள்.

“என்னோட லிமிட் எனக்குத் தெரியும் ரஞ்சிமா. என் அம்மா, அப்பா அதிகமா சொல்லிக் குடுத்த ஒரே வார்த்தை ஒழுக்கம். எந்த நிலையிலும் அந்த ஒழுக்கம் தவறி எந்த செயலையும் செய்யமாட்டேன். என்னை நினைச்சி நீ பயப்பட தேவையில்லை ரஞ்சிமா. யார் கேட்டாலும் என் அண்ணன் தங்கம்னு அடிச்சிப் பேசலாம். அதோட சுந்தரிக்கு நிஜத்துக்கும், கற்பனைக்குமான வித்தியாசத்தைக் தெரிய வைக்கணும். அவள் தெரிந்துத் தெளிந்தால் எல்லாமே சரியாகும்.” என்றான் அவன்.

“நல்லது அண்ணே. அடுத்து என்ன ப்ளான்? எப்படி செல்வியை சரிபண்ண போறீய?”

“அதுக்கு முன்ன சின்னதா ஒரு சந்தேகம். அதை கிளியர் பண்ணனும்.” என்றான் யோசனையுடன்.

“என்ன சந்தேகம்?”

“இல்ல. இந்த சித்ரா பொண்ணு அப்பா இருக்கார்ல, அவருக்கு என்னைத் தெரியும் போல. முதல்ல தெரிஞ்ச மாதிரி பேசிட்டு திரும்ப பேச்சை மாத்தினார். என்னை இந்த ஊரை விட்டு விரட்டுரதுல குறியா இருக்கார். சம்திங் ராங்” என்றான் யோசனையாய்.

“அப்படியே தெரிந்தாலும், இங்க இருந்து ஏன் அண்ணே விரட்டனும்? அதுக்கான அவசியம் என்ன? எப்படிப் பாத்தாலும் இந்த ஊருக்கு நீங்க இப்பதான் வரீங்க. அப்படி இருக்கிறப்ப அவர் ஏன் அப்படிப் பேசனும்?” என்றாள் புரியாது.

“அதை தான் நானும் யோசிக்கிறேன். இதுவரை இந்த ஊர்ப்பக்கம் டூர்னு கூட வந்ததில்லை. அப்படி இருக்கிறப்ப அவர் ஏன் அப்படிப் பேசி பயப்படனும். அதை எப்படியாவது தெரிஞ்சிக்கணும்.” என்றவன், “ரஞ்சிமா அந்த பெரியவர் பெயர் என்ன?” எனக் கேட்டான்.

“யாரு அண்ணே? செல்வி தாத்தாவா?”

“எஸ். அவர் பெயர் ரத்தினசாமி. ரைட்...” அவளின் சம்மதமான தலையாட்டலில், “அவரை சந்திச்சா எல்லாம் புரியும். இந்த ராஜனும் எதோ பெரிய சம்பவம் நடக்கப் போற மாதிரி பூடகமாவே பேசுறான். அதையும் பார்க்கணும்” என்றான் அவன்.

“அ...அவர் எப்படி உங்களிடம்?” என்று பயந்து கேட்க,

“அவன் ஒரு காமெடி பீஸ்மா. என்னால அவனுக்கு எதோ காரியம் ஆக வேண்டி இருக்கு. அதனால இங்க இழுத்துட்டு வந்துட்டான். அந்த காரியம் சுந்தரினா ஓகே. வேற எதோ இருக்கும்னு தோணுது. என்ன நடந்தாலும் சுந்தரிய விட்டுடாத சொல்லுறான். என்னவோ போ. அந்த சந்திப்பு எல்லாத்தையும் சரி பண்ணலாம்.”

சரி பண்ணுமா? அல்லது சரித்திரத்தையே மாற்றுமா?

“சரி ஆகிரும் அண்ணே. டிபன் எடுத்து வைக்கவா? கேட்க மறந்துட்டேன். எப்ப வேலைக்கான ஆர்டர் வரும்? நம்ம மாவட்டத்துல தான போடுவாக?” எனக் கேட்டாள் ரஞ்சிதா.

“இங்க தான் வேணும்னு அடம் பிடிச்சி வந்திருக்கேன். பொங்கலுக்கு முந்தின நாள் வேலையில் ஜாய்ன்ட் பண்ணனும். அதுக்குள்ளே என் சூரியனை கவர் பண்ணனும்” என்றான் வருத்தமாக.

“சரி தான். நைட் சூரியன் சுட்டு எரிக்கலையோ?” எனக் கிண்டலாகக் கேட்டாள் ரஞ்சிதா.

“ம்ஹூம் நல்ல கட்டிப்பிடிச்சி தூங்கிச்சி” என்றவன் அந்த நேரத்திற்கு கற்பனையில் செல்ல, ரஞ்சிதாவோ ஆவென பார்த்திருந்தாள்.

“அவளுக்கு நீங்க அவளோட மாமா இல்லை என்ற வித்தியாசம் தெரியலையா அண்ணே?”

“அவள் கட்டிப்பிடித்த முதல் ஆள் நானா இருக்கிறப்ப, எப்படி ரஞ்சிமா வித்தியாசம் தெரியும்? இதுதான் நிஜம்னு புரிய வைக்கனும். புரிஞ்சி தாலி கட்டி, குடும்பம் நடத்தி, எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட். ஹ்ம்ம்...” என்று பெருமூச்சி விட்டான்.

“சரி தான். நீங்க கற்பனையில் வாழுங்க. நான் டிபன் எடுத்துட்டு வரேன்” என்று சென்றவளுக்கு, “இவர் விடுற பெருமூச்சிக்கு சுந்தரி மட்டும் உரிமையாகிட்டா, பாவம் சுந்தரி. இவரை எப்படி சமாளிக்கப் போறாளோ. ம்ம்ம்... சீக்கிரமே இவங்களுக்கு கல்யாணம் நடக்கனும்” என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.

“அம்மா! ஹாப்பி நியூ இயர். எப்படி இருக்கீங்க? அப்பா எங்க? நான் இல்லாம நீங்க ரெண்டு பேரும் ஜாலியா இருக்கீங்களா? உங்க ஊட்டுக்கார் ஒரு போன் கூட பண்ணல தெரியுமா?” என்று தாய்க்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னதோடு கேள்வியாக அடுக்கினான்.

“நாங்க போன் பண்ணுறது இருக்கட்டும். நீ எங்க இருக்க? ட்யூட்டியில ஜாய்ன்ட் பண்ணிட்டியா?” எனக் கேட்டார் தேவகி.

“திருச்சியில் இருக்கேன்மா. இப்ப ஹாஃப் ட்யூட்டில இருக்கேன். ஜனவரி ட்வெல்வ் ட்யூட்டில ஜாய்ன்ட் பன்னுறேன்.”

“ஆனா, ஈஸ்வரா?” எதோ கேட்க வந்தவர் தடுமாறி நிற்க,

“தேவகிக்கு தடுமாற்றமா? என்னம்மா ஏதாவது பிரச்சனையா?” என்றான் அக்கறையாக.

“இல்லடா. மனசுக்கு எதோ போல நெருடலா இருக்கு. எதோ விரும்பத்தகாதது நடக்கும் போல தோனுது. எதுக்கும் நீ ஜாக்கிரதையா இருந்துக்க. வெளில போறதா இருந்தா கூட யாரையாவது கூட்டிட்டு போ. இப்ப நீ என்ன பண்ணுற, பக்கத்துல இருக்கிற கோயிலுக்குப் போயிட்டு, மனசார வேண்டிட்டு வா” என்றார்.

“அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே அம்மா. நான் எதுக்கு” என்றான் புன்னகையுடன்.

“இருந்தாலும் கடவுள் சன்னிதானத்துல கிடைக்கிற அந்த சக்தி எங்கேயும் கிடைக்காதுடா. பக்கத்துல சிவன், முருகர் இல்ல அம்மன் கோயில் எதுவா இருந்தாலும் கேட்டுட்டுப் போயிட்டு வா. கோவில்ல இருந்து போட்டோ எடுத்து எனக்கு அனுப்பனும். அப்பதான் நான் நம்புவேன்.” என்றார் தேவகி.

“சரிம்மா. என் தேவிமா. கோயில்ல வச்சே போட்டோ எடுத்து லைவா அனுப்புறேன். இப்ப பை” என்று போனை வைத்தான்.

“ரஞ்சிமா பக்கத்துல கோயில் எங்க இருக்கு?”

“மாரியம்மன் கோயில் பக்கத்துல இருக்குது அண்ணே. ஏன் கேக்குறிய?”

“அம்மா கோயிலுக்கு போயிட்டு வர சொல்லுறாங்க. எதோ மனசு நெருடலா இருக்காம்.”

“அப்ப ஏதாவது இருக்கும் அண்ணே. இன்னைக்கு நியூ இயர்ல நானும் பசங்களை ரெடி செய்யுறேன். இவர் வந்ததும் குடும்பத்தோட போயிட்டு வரலாம். யார் கண்டா உங்க சூரியனும் வரலாம்” என்றாள் சிரித்தபடி.

“வந்தா புது வருஷம் புது விதமா இருக்கும்” என்று சிரித்தான் ஈஸ்வர்.

மாலை ஐந்து மணியளவில் கோவில் செல்ல, சின்னதாக மழை தூறிக் கொண்டிருந்தது. ரஞ்சிதாவின் பையன்கள் இருவரும் ஈஸ்வரின் கையைப் பிடித்துக்கொண்டு, “மாமா இங்க சேமியா ஐஸ், ஜவ்வரிசி ஐஸ் நல்லா இருக்கும். ஆனா கோயில் கொடைனா மட்டும் தான் வரும். இல்லனா முழுப் பரிச்சை லீவுல வரும். நடுவுல நினைச்சாலும் கிடைக்காது மாமா” என்றான் வருத்தமாக.

“பொங்கலுக்கு அந்த ஐஸ் இங்க வரவைப்போம். இஷ்டத்துக்கு வாங்கி சாப்பிடுங்க. மாமா ஒரு வண்டிய நம்ம வீட்டு முன்ன நிறுத்திடுறேன்” என்றான்.

“நெசமாவா மாமா?”

“ப்ராமிஸா. பொங்கலுக்கு ஐஸ் வண்டி வரும்” என்று உறுதி கொடுத்தான்.

“ஐ சூப்பர். நான் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் சொல்லிர்றேன். இப்பவே காத்திருக்கோம் மாமா” என்று துள்ளிக் குதித்தனர்.

“அண்ணே இருந்தாலும் இவனுகளுக்கு நிறைய இடம் குடுக்குறிய. கொஞ்சம் இடம் குடுத்தா தலையில் ஏறி உக்காருவானுக. கொஞ்சம் கண்டிப்போட இருங்க” என்றாள் ரஞ்சிதா.

“நான், என் அம்மா, அப்பா, தம்பி தவிர எனக்குன்னு எந்த உறவும் இல்லை. அப்படி இருக்கிறப்ப இவங்க தான என்னோட உறவு. உரிமையா கேட்கிற பிள்ளைகள் மனசு சங்கடப்பட கூடாதுமா. நீ என் தங்கச்சினா, இவங்களுக்கு நான் தாய்மாமா. இதெல்லாம் மாமனுக்கும் மருமகன்களுக்கும் உள்ள டீலிங். இதுல நீ தலையிடாத” என்றான்.

அவனின் அன்பில் நெகிழ்ந்தவள், “என்ன சொல்றது தெரியல அண்ணே. இப்ப என் பிள்ளைகளுக்கு இரண்டு தாய்மாமா இருக்காங்கனு சந்தோஷம் தான் எனக்கு.”

“அப்படியே உன் அண்ணனுக்கு அண்ணியை கட்டி வைக்கிற வழியைப் பாரு. இன்னும் ஆறு மாசம் போனா, எனக்கு இன்னும் ஒரு வயசு ஏறிப்போயிடும். தலையில் வெள்ளை முடி வரத்து அதிகமாகுது. பிரம்மச்சாரிய குடும்பஸ்தனா மாத்துனா போதும் தாயி” என்றான் சிரித்து.

“ஏன் இப்பவே தாலி கட்டுறது?” ரஞ்சிதாவும் கிண்டலாகவே சொல்ல,

“வாய்ப்பு கிடைச்சா பண்ண மாட்டேன்னு நினைச்சியா? அதெல்லாம் தரமா பண்ணுவேன். அதோ தூரத்தில் என் சூரியன் வருது பாரு. இப்பவே வேணும்னா...”

“ஐயோ அண்ணே! தெரியாம சொல்லிட்டேன். நீங்க உங்க சூரியனை ரசிக்கிறதோட நிறுத்திக்கோங்க. அப்புறம் சுட்டுரிச்சி, எரிச்சிருச்சினு சொல்லக் கூடாது.”

“அந்த பயம் இருக்கட்டும்.”

“ம்க்கும்... சரி பக்கத்துல வரா என்ன செய்யலாம்?” என்று அவனிடமே கேட்க,

“கூப்பிட்டு வச்சிப் பேசுமா.” என்றான் அவன்.

“அப்ப நீங்க?”

“என்னை உன் அண்ணன்னு சொல்லு. நான் இருக்கிற கெட்டப்புக்கு அவளுக்கு என்னை சுத்தமா அடையாளம் தெரியாது.”

“அடையாளம் தெரியாது சரி. உங்க வாசனை தெரியுமே அண்ணே. அதை எப்படி மேனேஜ் பன்னுவீக?”

“எப்படித் தெரியும்?” என்றான் புரியாது.

“அதான் மடியில் போட்டு தாலாட்டித் தூங்க வச்சிட்டு வந்திருக்கியளே. அது போதாதா உங்களை அடையாளம் கண்டுபிடிக்க?”

“ஓ... அப்படி ஒன்னு இருக்குல்ல. எதுக்கும் ஒன்ஸ் செக் பண்ணிக்கிறேன். அடேய் மருமகன்களே! நீங்க வாங்க” என்று அழைத்துச் சென்றவன், அவனின் சுந்தரியின் அருகில் அவள் கவனிக்காதவாறு நெருங்கி செல்ல, பிள்ளைகளை கவனித்தவளோ, அவனைக் கவனிக்கவில்லை. இருந்தாலும் எதோ ஒரு உள்ளுணர்வில் நிமிர்ந்து அவனைக் கண்டாள்.

முகம் மறைத்து, இன்னும் கொரானாவுக்கான விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் அவளும் தான் என்ன செய்வாள். கண்ணாடியைத் தாண்டிய அவனின் கண்கள் எதோ சொல்ல, அவனைப் பார்த்தபடி அவள் நடக்க அங்கிருந்த கல்லில் இடித்துக் கொண்டு “அம்மா” என்றாள் சத்தமாக.

வேகமாக அவளிடம் வந்தவன், “என்னாச்சி? காலைக் காட்டு” என்று இடித்த காலைப் பார்க்க, பெருவிரலில் இரத்தம் வந்து கொண்டிருந்தது. அவளோ அவன் தொடுகையைத் தடுக்க, “பார்த்து வரக் கூடாதா?” என்றான்.

‘பார்த்ததால தான் இப்படி’ என்றது அவள் மனம்.

அவளுக்கு அடிபட்ட தவிப்பில் அவன் குரல் லேசாக மாறி இருந்தது.

ஆனால், அந்த வாசனை அவளை வதைக்க, “யார் நீங்க?” எனக் கேட்டாள்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top