• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 15

New member
Joined
Dec 1, 2024
Messages
19
சுந்தரி - 15


அவன் கையில் தன் கையை வைத்து, “சரி என்ன நடந்தாலும், எந்த சூழ்நிலையிலும் இவளை விடமாட்டேன். போதுமா? எங்க பிரைவசி எந்த அளவு இருக்கணும்னு நீ சொல்லாத. அதை நான் பார்த்துக்கறேன்.” என்று கண்டிக்கவும் செய்தான்.

“நீ நினைக்காதது எல்லாம் நடக்கும் ஈஸ்வரா. அப்ப உள்ள கோபத்தில் நிதானம் தவறிடாதே. இந்த வாக்கை கடைசிவரை காப்பாத்தனும்” என்று உறுதிப்படுத்த கேட்டான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். முதல்ல வீட்டை விட்டு கிளம்புடா” என்றான்.

“ம்ம்ம் இப்படி உள்ள வச்சி கதவை மூடிட்டு, வெளில போ சொன்னா எப்படி போறது? இதுல உங்க எய்டீன் ப்ளஸ் காதல் வேற. எய்டீன் ப்ளஸோட நிறுத்திக்க. என் அக்கா பொண்ணு ரொம்ப உஷார். தெளிவாகி நீ வேறன்னு தெரிஞ்சது மக்களே... பாத்து நடந்துக்க. இப்ப வந்து கதவை திற” என்றான் சுந்தர்ராஜன்.

“ரொம்பப் பேசுறடா” என்றாலும் கதவை திறந்து அவனை வெளியே அனுப்பியவன், ‘என்ன சொல்ல வரான் இவன்? பேச்சு முதல் எல்லாமே மர்மமா இருக்கு. வாக்கு வேற வாங்குறான். அப்படி என்ன பிரச்சனை வரப்போகுது? ம்ம்ம் எதோ இருக்கு’ என்றது மனம்.

யோசனையில் நின்றிருந்தவனிடம், “மாமா இங்க என்ன செய்றீயுங்க?” எனக் கேட்டாள்.

“ஓ... இல்ல பாம்பு வந்ததே. எந்த வழியா வந்தது செக் பண்ணினேன். நான் உள்ள போறேன்” என்று அறைக்குள் வந்தான்.

“என்ன மாமா யோசனை பலமா இருக்கு. இவ்வளவு நேரம் நல்லத்தான இருந்தீங்க. எதாவது பிரச்சனையா?”

“இதுவரை இல்லை. இனிமேலும் வரக்கூடாது பார்க்கறேன்” என்றான் யோசனை மாறாது.

“அதெல்லாம் வராது. நீங்க வந்து உக்காருங்க” என்றாள் செல்வ சுந்தரி.

“ஓய் கனவுல வந்தப்ப மரியாதையே தரல நீ. இப்ப ங்க சரளமா வருது” என்றான் கேலியாய்.

“பக்கத்துல இருக்குற உங்க கனவுல நான் ஏன் வரணும்? சும்மா உளறாதீங்க மாமா. சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரட்டா?” எனக் கேட்டாள்.

“ம்ம்ம் சூடா ஒரு ஸ்வீட் இல்ல காரம்” என்றான் ஈஸ்வர்.

“ம்ம்ம்...” என்று அடுப்படி சென்று பார்க்க, நிறைய இல்லாமல் இருந்தது. வேறு வழி ஏற்கனவே வறுத்து வைத்திருந்த ரவையுடன், கடலை மாவு மட்டுமே இருக்க, ரவையை கேசரியாக்கி, கடலை மாவில் வெங்காய பக்கோடா செய்ய ஆரம்பித்தாள்.

“என்ன ஆளையே காணோம்” என்று வந்தவன், அவள் பரபரப்பாக வேலை செய்வது தெரியவும் சின்ன புன்னகையுடன் பார்த்திருந்தான்.

‘மிட் நைட்ல இதெல்லாம் தேவையா’ என கேட்க வந்தவன் மனமோ, ‘கேட்டதே நீதானடா’ என்றது.

அவள் கழுத்தில் மாவு ஒட்டி இருப்பது தெரிய, அதைத் துடைக்க வந்த சமயம் அவளும் திரும்ப, கழுத்திற்கு சென்ற கை இடம் மாறி மார்பில்பட்டது.

“மாமா” என்று அவள் அலற,

கைபட்ட நொடி கையை எடுத்திருந்தவன், “ஸ்ஸ்ஸ்.. ஸாரி ஸாரி சுந்தரி. கழுத்துல மாவு இருந்ததா அதை தொடைக்க வந்தேன். நீ திரும்பினதுல சாரி. வேனும்னு பண்ணல. ப்ளீஸ் நம்பு” என்றான் திரும்பவும்.

“நீங்க ரூம்க்கு போங்க மாமா. நான் வரேன்” என்று அவனைப் பார்க்காது சொல்ல, அவனும் கண்களால் மன்னிப்பைக் கேட்டு உள்ளே சென்றுவிட்டான்.

“என்னடா பண்ணி தொலைச்ச? கைய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா? அவ என்னை என்ன நினைச்சிருப்பா?” என்று கையை தூக்கிப் பார்த்தவன் உடலில் சிறு குறுகுறுப்பு, உதட்டில் சிறு புன்னகை. முதல் முதலாக தெரியாமல் என்றாலும், ஒரு பெண்ணின் அந்தரங்கமான இடத்தில் தொட்டிருக்கிறான். “சீக்கிரமே இவளை கல்யாணம் செய்துக்கனும். அப்ப தான் உறவாட உரிமை கிடைக்கும்” என்று தனக்குள்ளே பேசி சிரித்துக் கொண்டான்.

“சாப்பிடுங்க மாமா” என்று சூடாக எடுத்து வந்ததை அவன் அருகில் வைத்துவிட்டு தரையை பார்த்து நின்றாள்.

“சுந்தரி இன்னும் கோபமா? நான் வேணும்னு செய்யல. என்னை நம்பு ப்ளீஸ்” என்றான் கெஞ்சலாய்.

“இல்ல தெரியாமல் நடந்தது தான. நீங்க சாப்பிடுங்க.” என்றவள் தலை நிமிரவில்லை.

“உனக்கு?” கோபம் எதாவது இருக்குமோ என்று அவளை ஆராய்ந்து பார்த்தபடி கேட்டான்.

“நான் கிச்சன் போய் சாப்பிட்டுக்கறேன்.”

“முடியாது நீ வா” என்று கைபிடித்து பக்கத்தில் அமர வைத்து, “இந்தா சாப்பிடு” என்று மணக்கும் கேசரியை ஸ்பூனில் எடுத்து அவளுக்கு சூடாக ஊட்டிவிட்டான்.

தரை தாழ்ந்திருந்த கண்கள் அவனைக் காண, “ரொம்ப சூடா இருக்கா?” எனக் கேட்டான்.

‘ம்ஹூம்’ என்று தலையசைத்து தன் பங்கிற்கு அவள் கையால் ஊட்டிவிட, “இது இன்னும் டேஸ்டியா இருக்கு” என்று அவள் கண்ணோடு கண் நோக்கி விரலையும் சேர்த்து ருசித்தான்.

“மாமா ப்ளீஸ் இப்படிப் பண்ணாதீங்க. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. இன்னும் நமக்கு கல்யாணம் ஆகலை. மறந்துடாதீங்க.” என்றாள் மென்மையிலும் மென்மையான குரலில்.

“சரி சாரி. ஆமா பாம்பு கடிபட்டவங்க இப்படி இனிப்பு காரம் சாப்பிடலாமா?” தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“தெரியலையே. உங்களுக்கு ஏதாவது பண்ணுதா? அப்படி எதாவது செஞ்சா நிறுத்திடுங்க மாமா” என்று பதறினாள் அவள்.

“ஐயயோ அப்படிலாம் சொல்லக்கூடாது” என்று பதறி கேசரியை நகர்த்தி, “அப்படியே போனாலும் கேசரி தின்னு முடிச்சதும் போகட்டும்” என்றான்.

சட்டென அவன் வாய்மூடி, “அபசகுனமா பேசாதீங்க மாமா. என்னை உங்க உயிருனு சொல்லிட்டு, இப்ப இப்படி பேசுறது என்ன நியாயம்? சாப்பிட்டு முடிச்சதும் உக்காருங்க. நான் வரேன்” என்று அங்கு இருந்த அழுக்கு பாத்திரங்களை தேய்த்து, அடுப்படியை துடைத்து அறைக்குள் வந்தவள், எதையோ தேடி எடுத்து அவன் எதிரில் வந்து அமர்ந்து, “மாமா நாம பரமபதம் விளையாடலாம் வாங்க” என்று அழைத்தாள்.

“இது ஒரு வகையான சூதாட்டம் தான?” எனக் கேட்டான் அவன்.

“ஆமா சூதாட்டம் தான். ஒரு எல்லையோட இருக்கிற வரை. விளையாட்டை விளையாட்டா விளையாடி இருந்தா, ஏன் மகாபாரதப் போர் வரப்போகுது. இதுல நம்ம அதிர்ஷ்டம் கூட பார்த்துக்கலாம்” என்று அதை எடுத்து கட்டிலில் விரித்து சோழியை எடுத்து வைத்தாள்.

“எனக்கு விளையாடத் தெரியாதே” என்றான்.

“பொய் சொல்லாதீங்க மாமா. நீங்க இந்த விளையாட்டில் எக்ஸ்பெர்ட். உங்களை அடிச்சிக்க ஆளே கிடையாதுனு தெரியும். என்னோட விளையாட பிடிக்கலன்னா சொல்லிருங்க” என்று முகம் தூக்கி வைத்தாள்.

திருடனுக்கு தேள் கொட்டிய நிலை தான் அவனது. சுந்தர்ராஜனின் குணங்களை அவள் சொல்ல, இவனோ, ‘எனக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லடா’ என்று மனதில் நொந்தே போனான். வேறு வழி சமாளித்து ஆக வேண்டுமே என்று, “யேய் நிஜமாவே மறந்திடுச்சி. நீ சொல்லிக்கொடு நான் பிக்கப் பண்ணிக்குறேன்.” என்றான்.

“உங்க விளையாட்டுக்கு அளவே இல்லை” என்று சொன்னாலும், இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசி சிரித்து நேரம் ஓடிப்போக, நான்கு மணியளவில் அவனையும் அறியாது கண் அசந்துவிட்டான்.

அப்படியே தூங்கி கீழே சாயப் போகும் நேரம், பரமபதத்தை ஓரம் வைத்து அவனைக் கட்டிலில் சாய்த்து, “மாமா எழுந்திருங்க. மாமா” என்று கன்னத்தைத் தட்டி எழுப்பினாள். அவனோ ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்ல, என்ன செய்வதென்று புரியாத நிலையில், துணியை தண்ணீரில் நனைத்து அவன் முகத்தில் வைக்க, ஏற்கனவே மார்கழி மாத குளிர் வாட்டிக் கொண்டிருக்க, முகத்தில் ஈரம் உணர்ந்தவன் சுருண்டு படுக்க ஆரம்பித்தான்.

“மாமா என்னைப் பாருங்க. விஷம் உச்சிக்கு ஏறிடும் மாமா. தயவுசெய்து தூங்காதீங்க. கொஞ்சம் கண்ணை முழிங்க” என்றவள் விட்டால் அழுது விடுவாள் போல இருந்தாள்.

லேசாக கண் திறந்தவன், “இன்னைக்கும் என் தூக்கத்தைக் கெடுக்க வந்துட்டியா? இருடி உன்னைத் தேடி வந்து அம்மா ப்ரமோஷன் குடுக்கறேன். இப்ப எனக்குத் தூக்கம் வருது. குளிர் வேற. டிஸ்டர்ப் பண்ணாம போ” என்றான் தூக்கம் கலையாது.

“சொன்னா கேளுங்க மாமா. ஏன் அடம் பிடிக்கறீங்க? உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் மாமா. எழுந்திருங்க” என்று அழ ஆரம்பித்தாள்.

அவளின் அழுகையில் தூக்கத்தை விரட்டி எழுந்து அமர்ந்தவன் நிதர்சனம் உணர்ந்து, “இல்ல இல்ல தூங்கல. நீ அழாத” என்றான் தூங்கி விழுந்து கொண்டே.

“இதுக்கு மேல என்ன செய்து உங்களை காப்பாத்தப் போறேன்?” என்று புலம்பியவள், “சாரி மாமா” என்று அவனைக் கட்டிக்கொண்டாள். அவனே எதிர்பாராத திருப்பம் இது. உறக்கம் எல்லாம் போன இடம் தெரியவில்லை.

உடலோடு உடல் உரச ஒரு அணைப்பு. என்னதான் இருந்தாலும் அவளாகச் சென்று கட்டிக்கொண்டது, அவள் உடலில் ஒருவித நடுக்கத்தைக் கொடுத்தது.

அவள் முகத்தை நிமிர்த்தி நேருக்கு நேர் பார்க்க, தன்னை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற அவளின் தவிப்பு தெரிய, அதில் மனம் இளகியவன், “ஒன்னும் இல்ல சுந்தரி. வா” என்று அவளை அணைத்துப் பிடித்து, “நான் தூங்கலை. நீ தூங்கு” என்றான்.

“நான் தூங்கலை. உங்களையும் தூங்க விடமாட்டேன்” என்றவளை, மென்மையாகப் பார்த்தான். அவள் நெற்றியில் முத்தமிட்டு, “ம்.. முழிச்சே இருக்கலாம். ஒரு கண்டிசன்...” என்றதும் அவள் அவனைப் பார்க்க, “இப்படியே தான் காலை வரை இருக்கனும்” என்றான் அவன்.

“ம்ம்ம்...” என்று தலை அசைக்க, “முதல் முறை என்னை கட்டிப்பிடிக்கிறதால உன் உடல் நடுக்கம் நல்லாவே தெரியுது. நான் உனக்கானவன். அதை மனசுல வச்சிக்கிட்டா இதெல்லாம் பெருசா தெரியாது” என்று ஏதேதோ பேச்சிக் கொடுத்து சில நிமிடத்தில் அவளை தூங்க வைத்திருந்தான்.

அவன் நினைத்தால் அவளின் பலகீனமான நிலையைப் பயன்படுத்தி, தவறு செய்திருக்கலாம். அவன் தாயின் வளர்ப்பு அதற்கு இடம் கொடுக்கவில்லை. ராஜன் சொன்னது போல், அவளின் கற்பனை உலகில் இருக்கும் இந்நிமிடம் அவளைத் தொட்டால், அது கற்பழிப்பிற்குச் சமம் என்பதை இவனும் உணர்ந்ததால் விலகியே இருந்தான்..

காலை ஆறு மணியளவில் தூக்கம் கலைந்த செல்வ சுந்தரி, படக்கென்று எழுந்து அமர்ந்து மாமனைத் தேட, அவன் தான் அவள் உறங்கியதும் சென்றிருந்தானே. வேகமாக வெளியிலும் வந்து தேட, அவனோ வாசலில் காட்சி கொடுத்தான்.

“மாமா உங்களுக்கு சரியாகிடுச்சா?” என்று கையைப் பார்க்க, அங்கு எந்தத் தழும்பும் இல்லாதிருக்க, “மாமா எப்படி? சின்னதா தழும்பு கூட இல்லை” என்றாள் சந்தேகமாய்.

“ம்ம்ம் அதை அந்த நடிப்புக்காரன் கையில் பார்த்திருக்கணும். இருந்தாலும் என் அக்கா பொண்ணு மக்கு மண்டோதரி தான்.” மனதில் திட்டி, “அதெல்லாம் சரியாகிடுச்சி” என்றான்.

“சரி மாமா. நான் தூத்துத் தொளிச்சிட்டு வரேன்” என்று வாசல் பெருக்கி தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஈஸ்வரோ குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருக்க, ரஞ்சிதா அங்கிருந்து நகத்தைக் கடித்தபடி அவன் அறையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இரவு என்ன நடந்தது என தெரிய வேண்டி இருந்தது.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top