• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 13

New member
Joined
Dec 1, 2024
Messages
18
சுந்நரி -13

செல்வ சுந்தரியைப் பாவம் என்று சொன்னதும், “பாவம் தான். என்ன செய்யுறது? ஊரே அன்னைக்கு அழுதது. அந்தப் பையன் செத்ததுக்கு அழுதுச்சோ என்னவோ, செல்வியோட நிலைக்காக அழுதிச்சி. ஏன்னா அவங்க காதல் அப்படிப்பட்டது. இப்படி ஒரு பிரிவு அவங்களுக்குள்ள வரும்னு யாருமே யோசித்துக் கூட பாக்கல. காலம் எல்லாத்தையும் முடிச்சு வச்சிருச்சு. யாரால் என்ன பண்ண முடியும்? ராஜன் அண்ணன் நல்லவர்தான். அதுக்காக காலத்துக்கு அந்த பொண்ணுடைய நிலை இப்படியேவா இருக்கணும். ஏதாவது மாற்றம் வந்தா நல்லா இருக்கும்... அப்படின்னு நான் நினைக்காத நாளைக்கு கிடையாது. அவளுக்குனு ஒருத்தன் பிறந்து இருந்தா அவ வாழ்க்கை மாறலாம். அப்படி ஒருத்தனை கடவுள்தான் கொண்டு வந்து நிறுத்தனும்” என்றாள் ரஞ்சிதா.
“அப்ப அதுக்கான முயற்சி செய்து பார்க்கலாமே?”
“அது எப்படிடா முடியும்? இல்ல அதுக்கான முயற்சிதான் எடுக்காம இருப்பாங்களா. அவளுக்காக செத்த அவள் மாமனுக்கு, அவன் இறந்த இடத்துல சமாதி கட்டி புருசனா நினைச்சி வாழ்ந்திட்டு இருக்கா. அவனோட மானசீகமா குடும்பம் நடத்துறாள்னு அவள் முக பளிச்சிடல் சொல்லுது. அவன் இறந்தும் பத்து வருஷம் ஆக போகுது. கடைசி வரை கல்யாணம்னு ஒன்னு இனிமேல் கிடையாதுன்னு இருக்கிறவ மனசு, எப்படி மாறும் நினைக்கிற? இவ்வளவு நல்ல பொண்ணுக்கு இந்த நிலைனா, மனசுக்கு வேதனையா இருக்குடா. எத்தனை காலத்துக்கு அவளை அவளே ஏமாத்திக்குவாளோ. இப்ப சரி. வயசான காலத்துல என்ன செய்வா இந்தப் பொண்ணு?” என்று வருத்தப்பட்டாள் ரஞ்சிதா.
“மனோதத்துவ டாக்டரிடம் போனா, சரி பண்ணலாமே அக்கா?”
“அதுக்கு அவ சம்மதிக்கனுமேடா. இந்த வாழ்க்கை போதும்னு இருக்கிரவ எப்படி வருவா? ம்ம்ம்... சரி வீடு வந்திடுச்சி உள்ள வா. கடவுள் அவளுக்கு என்ன வச்சிருக்காரோ அதன்படி நடக்கட்டும்” என்றாள் பெருமூச்சுடன்.
சுந்தர்ராஜனின் அந்தக் காதல் பிடித்திருந்ததால், அவனைப் பார்த்தே தீர வேண்டும் என்று, யாரும் அறியாமல் செல்வி வீடு சென்று, அவள் மாமனின் புகைப்படத்தைப் புகைப்படம் எடுக்க வந்தவன், அதில் இருந்த உருவம் கண்டு அதிர்ந்து ஆச்சரியப்பட்டு புகைப்படம் எடுத்து வந்தான். அதையும் அந்த டாக்குமெண்டரியில் சேர்த்திருந்தான் ஹரிஹரன்.
இருவரையும் பார்த்த ஈஸ்வருக்கு அதிக அதிர்ச்சியே. அவன் தன்னைப்போல் இருப்பதைக் கண்டு. அந்த ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்தான். முழுவதையும் பார்த்தவனுக்கு ஒன்று மட்டும் கடைசிவரை புரியவே இல்லை. ஆனால், புரிந்தது.
கனவில் வந்தவன் சுந்தர்ராஜன்! என்றால், கனவில் வந்து தன்னுடன் வாழ அழைத்தது செல்வ சுந்தரி.
ஆம் செல்வி என்று அவன் கனவில் வர ஆரம்பித்தாளோ அடுத்த சில நாட்களில் இவனும் கனவில் வர ஆரம்பித்திருந்தான். இருவரின் வார்த்தையிலும் வித்தியாசம். அவள் வாழ அழைத்தாள் என்றால், அவன் புதையலைத் தேடி வரும் அளவு புதிர்போட்டு வரவழைத்திருந்தான்.
கனவிற்கான இரகசியம் புரிந்த நிமிடம் ஒரு மர்மப்புன்னகை எழ, அவர்கள் இருக்கும் இடம் தேடி வந்துவிட்டான் ஈஸ்வர்.
கண்ணுக்கு எதிரே இருந்த புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த அவளின் மாமன் சுந்தர்ராஜனைக் கண்டவள், “உன்னால தான் மாமா நான் வாழ்கிறேன். உனக்காக மட்டும் வாழ்கிறேன். இப்ப வந்து வா கூப்பிடுறாங்க. நான் எப்படி உன்னை விட்டுப் போவேன். இப்ப போனா திரும்ப உன்னோட இருக்கும் சந்தர்ப்பம் இல்லாமலே போயிடும். எனக்கு இந்த வாழ்க்கை போதும் மாமா. வேற யாரும் வேண்டாம்” என்று கண்மூட, இரு கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள் இறங்கி தலையணையை நனைத்தது.
அக்கண்ணீரைத் துடைக்க அவளின் ராஜன் மாமா வரவில்லை. இனி வரவும் வாய்ப்பில்லை.
ஆனால், அவன் வருவானோ! அவளின் சுந்தரன், அவனின் சுந்தரியைத் தேடி. அவன் வந்தால்???
அந்த டாக்குமெண்டரி பார்த்தவனுக்கு அவளை இப்பொழுதே காண வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதே சமயம் எதோ ஒரு சக்தி, அவனை அங்கு செல்லச் சொல்லித் துரத்தியது. ஒரு பெண் தனியாக இருக்கும் வீட்டிற்குச் செல்வது நாகரீகம் இல்லை என்று புரிந்தாலும், அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற உறுதி எழ, அவள் வீட்டிற்கு எப்படிச் செல்லுவது என்ற யோசனையில் இருந்தான் ஈஸ்வர்.
இரவில் அவன் இருந்த அறையில் வெளிச்சம் வரவும், தண்ணீர் குடிக்க எழுந்து வந்த ரஞ்சிதா யோசனையுடன், “அண்ணே தூங்கலையா?” எனக் கதவைத் தட்டி கேட்டாள்.
அவளின் சத்தம் கேட்டு லேப்டாப்பை மூடி வைத்து வெளியே வந்தவன், “எனக்கு சூரியனைப் பார்க்கணும்” என்றான் பட்டென்று.
“இப்பவா? என்ன அண்ணே திடீருனு சொல்லுறீக? நேரம் இப்ப பதினொன்று. பொம்பளப்புள்ள தனியா இருக்கிற இடத்துக்கு இந்நேரம் போறது தப்பு. உங்களுக்குத் தெரியாதா அண்ணே.” என்றாள் சிறு தயக்கத்துடன்.
“தெரியும் தங்கச்சிமா. எதோ ஒன்னு என்னை அங்க போகச் சொல்லுது. அவளுக்கு எதுவும் ஆபத்தா தெரியலை. மனசுக்கு என்னவோ போல இருக்கு. பார்த்தா பெட்டரா பீல் பண்ணுவேன். போகாம இருந்து எதாவது என்றால் என்னை நானே மன்னிக்க முடியாதுமா. பிளீஸ் போயிட்டு வரேனே” என்றான்.
“ஏன்ணே இதுக்கு பொய் பிளீஸ் சொல்லுறீய. இந்த ஊர்ல அவளுக்கு ஆபத்தா? அதுக்கு வாய்ப்பே இல்ல அண்ணே. அவளோட எதிர் வீட்டுல இருக்கிறது, அவளோட சின்ன தாத்தா மகன் கனகவேல். குடும்பத்தோட இருக்கார். எதாவது என்றால் அவர் பாத்துப்பார். இப்ப நீங்க அங்க போயி யாராவது பாத்துட்டா பிரச்சனை ஆகிடும். நீங்க யாரோவா அறிமுகமானா அவள் உங்கள சுத்தமா கண்டுக்கமாட்டா. தேவையா இதெல்லாம்” என்றாள் ரஞ்சிதா.
“இல்ல. இதையும் மீறி எதோ ஒரு ஆபத்து அவளுக்கு இருக்கு. நான் போயிட்டு வரேன். நீ போய் தூங்குமா” என்றவன், போட்டிருந்த அரைக்கால் ஷார்ட்ஸும், கையில்லா பனியனுமாக வாசலை விட்டு இறங்கி, அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
ரஞ்சிதாவிற்கு பதட்டத்தில் தூக்கம் வர மறுத்தது. “கடவுளே! இந்த அண்ணன் வேற சொல்ல சொல்ல கேளாம போறாரே. யாராவது பாத்தா பாலை அருவா எடுத்து வீசுருவாவலே. சொன்னா கேக்குதா இந்த அண்ணே. யாரும் பாத்துரக்கூடாது கடவுளே!” என்று புலம்பிக்கொண்டு இருந்தாள்.
அங்கு செல்வ சுந்தரியின் வீட்டு வாயிலில் நின்றிருந்தவன், உள்ளே எப்படி செல்வது என்ற ஆராய்ச்சியில் இருக்க, கதவில் கைவைத்துப் பார்க்க அதுவோ திறந்து கிடந்தது. “என்ன இத்தனை கேர்லசா இருக்கா. இது தப்பாச்சே” என்று உள்ளே நுழைய, நேரே சுந்தர்ராஜன் புகைப்படம் தொங்கிக்கொண்டு இருந்தது. “ம்ம்ம்... நம்மள போலதான் இருக்கான். அவனை போல நான் இல்லை” என்று கொஞ்சம் சத்தமாக முனுமுனுக்க, போட்டோ திடீரென ஆடியது.
“என்ன மேன், உன்னைக் குறை சொல்லிட்டதா கோபம் வருதா? நீ என்னோட ஒரு வருஷம் சின்னவன் தான். அதனால நீதான் என்னைப் போல இருக்க. நான் இல்லை. இரு என் ஆள பார்த்துட்டு வரேன்” என்று அலட்சியமாக ராஜனை ஒதுக்கி உள்ளே செல்ல, அங்கோ அவளைக் கொத்தக் காத்திருந்தது ஒரு நீளமான விஷப் பாம்பு.
“யேய்” என்று அலறிய அலறலில் அப்பொழுது தான் தூங்க ஆரம்பித்தவள் பதறி எழ, அவளின் மாமன் கையில் இருந்த பாம்பைக் கண்டு பயந்துவிட்டாள்.
“மாமா. அதை தூக்கிப் போடுங்க. அது விஷம் உள்ளது. கையில் கொத்திடாம” என்று அவன் அருகில் வரப் பார்க்க,
அவளின் ரொம்பவே சாதாரணமான மாமாவில் ஆச்சர்யமாய் அவளை நோக்கினான். ‘அவளுக்குத் தான் யார் என்று தெரியுமா? இல்லை ஹரி சொன்னது போல அவளோட மாமாவோட வாழ்கிறாளா? இரண்டும் தப்பாச்சே’ என்று நினைத்தாலும், அவள் தன்னை நெருங்குவது புரிந்து, “ஸ்ஸ்ஸ்.. அங்கேயே நில்லு. நீ தோட்டம் துரவுனு சுத்துரவ தான. இது கடிச்சா என்ன ஆகும்?” என்று கேட்டான்.
“அது கட்டுவீரியன். ரெண்டு மணி நேரத்துல ஆள் காலி மாமா. அதைக் கீழ போடுங்க” என்றாள்.
“இதுக்கு எத்தனை திமிர் இருந்தா என் சுந்தரியைக் கடிக்க வந்திருக்கும். டென் செகண்ட் லேட்டா வந்திருந்தா, இது உன்னை என்ன வேனும்னா செய்திருக்கும். இதை இப்படியே எப்படி விடுறது?” என்றவன் வீட்டின் பின் பக்கம் வந்து அடித்துக் கொன்று வெளியே தூக்கி எறிந்தான்.
“ப்பா... மாமா எப்படி இவ்வளவு தைரியம் வந்திச்சி? உங்களுக்கு பாம்பைக் கண்டாலே பயமாச்சே. அதனாலயே உங்க கையில் பாத்ததும் ரொம்ப பயந்துட்டேன்” என்றாள் அவள்.
“உன் குரல் அழகா இருக்கு சுந்தரி. உன்னோட சேர்ந்து ஒரு நாளாவது வாழனும்” என்றான் சம்பந்தம் இல்லாது.
“என்ன மாமா திடீருனு?”
“ஏன்னா அந்தப் பாம்பு என்னை கொத்திருச்சி சுந்தரி” என்றவன் கையில் இரண்டு பல்தடங்கள்.
“என்ன மாமா சொல்லுறீங்க? எங்கன கடிச்சது?” என்று வேகமாக வந்து அவனின் கை பிடித்து, “நான் அப்பயே சொன்னேனே கேட்டிங்களா. ஐயோ நான் என்ன செய்வேன்?” என்று அழுதபடி கொடியில் இருந்த துணி ஒன்றை எடுத்து வந்து, கடிபட்ட இடத்திற்கு மேல் இறுக்கிக் கட்டியவள், அங்கு நின்றிருந்த பாம்பு விஷம் முறிக்கும் செடியில் இலைகளைப் பறித்து வந்து சாறெடுத்து, பாம்பு கடித்த இடத்தில் ப்ளேடை வைத்து மெல்லிய கீறல் போட்டாள்.
அதில் எழுந்த வலியை தன் அனுபவம் கொண்டு மறைத்தான். அவளோ அதில் வந்த இரத்தத்தைப் பொருட்படுத்தாது, இலையின் சாரை ஊற்றினாள். திரும்பவும் இலைகள் பறித்து கசக்கி சாரோடு சேர்த்து இலையையும் வைத்து கையில் கட்டினாள்.
மீதி இலையில் நான்கை எடுத்து, “இந்த இலையை வாயில வச்சி கடிங்க மாமா. விஷம் முழுசா பரவினா கசப்பு தெரியாது. கசப்பா இருந்தா விஷம் இறங்குது அர்த்தம்” என்றாள்.
அதை வாயில் வைத்து கடித்து, “கசப்பு கொஞ்சமா இருக்கு” என்றவனுக்கு தான் தெரியும் வாயில் வைக்க முடியாத அளவு கசப்பு இருப்பது. சொன்ன பொய்யை மெய்யாக்க அவள் பாராத சமயம் வாயில் இருந்து எடுத்துவிட்டான்.
“ஓஹ்... அப்ப வீரியம் குறையுது. பாம்பு கடிச்ச பனிரெண்டு மணி நேரம் தூங்க கூடாது மாமா. உள்ள வாங்க குளிர் அதிகமாகுது. மறந்தும் தூங்கிடாதீங்க மாமா. எனக்கு நீங்க முக்கியம்” என்றாள் அவள்.
“எனக்கும் சுந்தரி முக்கியம்” என்று வழிந்தான் இவன்.
அதைக் கவனிக்காதவள், “அதான் எப்பவோ தெரியுமே. எப்படி அதைப் பாத்து சரியா வந்தீங்க?” என்று கேட்டாள்.
“தெரியலை. உன் சுந்தரிக்கு எதோ ஆபத்துடா. போயி பாருனு தலையில் எதுவோ அடிச்சி அனுப்பிச்சி. ஓடி வந்து பார்த்தா, மை காட்! கொஞ்சம் லேட் ஆகிருந்தது... ஹப்பா அதை நினைச்சா இப்ப கதிகலங்குது” என்றான் அவன்.

வருவார்கள்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top