• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 1, 2024
Messages
36
சுந்தரி - 32


“ரவிப்பா” என்று வந்த கனகா தகப்பனின் முறைப்பில் அப்படியே நிற்க,

பெறாத மகளைக் கண்டு சிரித்தவர், “இத்தனை வருடம் ஆகியும் உன் அப்பாவுக்கு பயப்படுவத நிறுத்தவே இல்ல பாப்பா” என்று அண்ணனின் கையை விட, தடுமாறி விழப்போனவரை கனகவேல் பிடித்துக் கொண்டார்.

“ம்ம்ம்...” என்று தலை அசைத்த கனகா அப்பொழுது தான் ஈஸ்வரைப் பார்த்தார். அவனைக் கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியில் சந்தோசக் கண்ணீர் விட்டார்.

“தம்பி” என்று வந்தவரை விட்டு ஒரு அடி தள்ளி நின்றவன், “நான் உங்க தம்பி இல்லங்க அத்தை. நான் சுந்தரேஸ்வரன்” என்றான்.

“அத்தையா? நான் உனக்கு அக்கா. என்னோட சித்தப்பா பையன் நீ. அப்படியே ரெட்டை புள்ளைங்க மாதிரி இருக்க. செல்விமா? உன் மாமன் உனக்கே கிடைச்சிருக்கான் பாரு” என்றார் சந்தோசமாக.

“கிறுக்கு புடிச்சிடுச்சா உங்களுக்கு? என் மாமாவ யாரோடவோ சேர்த்து பேசுறிய” என்றாள் கோபத்தில் அவள்.

“நல்லா பாரு மக்களே” என்று அவளை இழுத்து வந்து அவன் முன் நிறுத்த,

அவன் முகம் கண்டவள் நேரம் ஆக ஆக மயங்க ஆரம்பித்துவிட, சிறு புன்னகையுடன், “ஓய் பாட்டிமா! இவளுக்கு தண்ணி தெளிச்சி எழுப்பி விடுங்க” என்றான் ஹேமாவதியிடம்.

“நான் உனக்கு பெரியம்மா ராசா. பாட்டி சொல்லாதிய” என்றார் அவர்.

“இங்க நடக்குற எதுவும் எனக்கு புரியலை. எதுவா இருந்தாலும் எங்க அப்பா, அம்மா வாயில வரட்டும் சொல்லுறேன்” என்றான் ஈஸ்வர்.

அதற்குள் சுந்தரி மயக்கத்தில் இருந்து முழித்திருக்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். மதன் காட்டிய புகைப்படங்களின் ரகசியம் புரிந்தது அவளுக்கு. அதோடு அவன் தன் மாமா பெயரை சொல்லி ஏமாற்றி தன்னுடன் ஒட்டி உரசியிருப்பது புரிந்த நொடி, தன்னையே வெறுத்தாள். இந்த பஞ்சாயத்து எல்லாம் அவளுக்கு பழகிப்போன ஒன்று. அவள் தாத்தனைப் பற்றி தெரிந்ததால் ஓரளவு நடப்பை புரிந்து கொண்டாள். தேவகியை நினைத்து மனது பாரமாகதான் இருந்தது. என்ன செய்ய நடந்ததை மாற்ற முடியாதே.

மாற்றி அமைப்பான் அவள் கணவன் என்பதை அறியாது போனாள் பெண்.

“ஏங்க யாரு அவர்? ஊரை விட்டு ஓடிப் போயிட்டதா சொன்ன உங்க சித்தப்பாவா? இவரை அவ்வளவு மட்டமா பேசுவாங்க உங்க அம்மா. பார்த்தா அப்படித் தெரியலையே. இந்த வயசிலும் கம்பீரமா தெரியுறார். உங்க அம்மா கணக்குப்படி பாத்தா, இவர் சரியான கோழை நோஞ்சானா இருக்கனுமே” என்றார் கனகவேல் மனைவி.

“ம்ம்ம்.. இப்ப நேரடியா பாத்துட்டல்ல. திரும்ப என்ன கேள்வி. மத்தவங்க மாதிரி வேடிக்கை மட்டும் பாரு” என்றார் அதட்டலாக. அத்தோடு கப்சிப்பாகி விட்டார்.

“இந்திரா இத்தனை வருசமா எங்க இருந்த? கல்யாணம் முடிச்சிக்கிட்டியா?”

இரத்தினசாமி குரலில் திரும்பியவர், “அது உனக்கு கஷ்டமா இருக்கா? ஒன்றுக்கு இரண்டு பையன்க இருக்காங்க எனக்கு. என்ன சொல்லி என்னை இந்த ஊர்ல அசிங்கப்படுத்தினாங்களோ, இப்ப அப்படி ஒன்று இல்லைன்னு சொல்ல எனக்கு பிள்ளைங்க இருக்காங்க” என்று சத்தமாகச் சொன்னார்.

“ஒஹ்” என ஒரு மாதிரி இழுத்தவர், “நல்லது. இந்த உன் பொண்டாட்டி என்னை பேசினது தப்புத் தான? அதான் கை ஓங்கிட்டேன்.” என்று தன்மேல் தவறு இல்லாது காட்டினார்.

“கட்டுன பொண்டாட்டியை அடிக்கனும்னு நினைப்பதையே தப்புன்னு நினைக்குறவன் நான். இதில் நீ அடுத்தவன் பொண்டாட்டி மேல கையை வைக்க வர்ற. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கனும் உனக்கு” என்றார் கைமுஷ்டி இறுக கேட்டார் ரவீந்திரன்.

“அப்பா நீ மட்டும் நடுவில் வரலன்னா, ஓங்கிய கையை இந்நேரம் உடைச்சி ரெண்டு துண்டாக்கி இருப்பேன். ஜஸ்ட் மிஸ் ஆகிட்டார் இந்த ஆள். இந்த ஈஸ்வரோட அம்மாவை அடிக்க வர என்ன தைரியம் இருக்கனும்” என்று ஐயனார் தோரணையில் அவன் நிற்க,

“சார் இப்ப சொல்லுங்க. கேஸ் போட்டு உள்ள தள்ளிடலாம். ஆயுள் வரைக்கும் உள்ள உக்கார்ந்து களி தின்னட்டும்” என்று வந்தான் ஹரிஹரன்.

“டேய்! நீ இங்க வா” என்று அழைத்தார் ரவீந்திரன்.

“இல்ல நீங்க அடிப்பீங்க. நான் வரமாட்டேன். எக்கா என்னை கூப்பிட்டியா” என்று ஓடப் பார்த்தவன் சட்டையை பிடித்து இழுத்தவர்,

“எத்தனை முறை கேட்டேன். ஒரு முறையாவது இவன் இங்க இருக்கிறதை சொன்னியா? அப்ப என்மேல பயம் விட்டுப்போச்சி. ம்ம்ம்...” என்று மிரட்டினார்.

“இங்க பாருங்க பெரிய சார். பேச்சி பேச்சா இருக்கனும். எதுவா இருந்தாலும் ஈஸ்வர் சாரிடம் பேசுங்க. அதென்ன புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் என்னை பார்த்தா கிள்ளுக்கீரையா தெரியுதா? நான் வளர்ந்த காட்டுமரம்” என்று பஞ்ச் டயலாக் பேசினான்.

“பேசுறதெல்லாம் நல்லா பேசுற. ஆனா, வொர்கவுட் ஆகலையே முருகேசா. வாட் டூ டூ” என்றார் நக்கலாக.

அதைக் கேட்ட சித்ரா பக்கென்று சிரித்துவிட்டாள்.

“சார் கட்டிக்கப்போற பொண்ணு முன்ன என்னை ரொம்ப டேமேஜ் பண்ணுறீங்க” என்றான் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“கட்டிக்கப் போற பொண்ணா? என்னடா எங்களிடம் சொல்லவே இல்ல” என்க,

“இப்ப கொஞ்ச நேரம் முன்ன தான் பிக்ஸ் பண்ணினேன். அவளுக்கும் சம்மதம். இனி தான் அவங்க வீட்டுல பொண்ணு கேட்கணும்.” என்று உண்மையைச் சொன்னான்.

“ஓ... யார் பொண்ணுமா நீ?” என சித்ராவிடம் கேட்க,

“அப்பா பால்ராஜ், அம்மா பொன்னுத்தாய்” என்று கை நீட்டினாள்.

“அடடே ரொம்ப நல்லதா போச்சி. டேய் பாலா! இவன் எனக்கு இன்னொரு பையன். உன் பொண்ண என்னோட இந்த பையனுக்கு குடு. நல்லா பார்த்துப்பான்” என்றார் சத்தமாக.

“நீ சொல்லி மறுப்பேனாடா. அவர பெத்தவங்களிடம் பேசி அடுத்த மாதமே கல்யாணம் வச்சிக்கலாம்” என்றார் பால்ராஜ்.

“என்னடா உனக்கு சம்மதம் தானே?” என்றார் சத்தமாக.

வேகமாக அவரை கட்டிக்கொண்ட ஹரிஹரன், “தெய்வமே நீர் வாழ்க” என்றான் மெல்லிய குரலில்.

“நம்ம கணக்கை அப்புறம் பார்க்கலாம். நீ சத்தம் இல்லாமல் உன் குடும்பத்தைக் கூட்டிட்டுக் கிளம்பு. இனிமேல் நடக்கிற எதுவும் உனக்குத் தெரிய வேண்டாம்” என்று அவன் காதில் ஓதி அவனை குடும்பத்துடன் அனுப்பி வைத்தார்.

அப்படியே கனகவேல் தவிர அவர் குடும்பத்தினரையும், பால்ராஜ் தவிர அவர் மனைவி பிள்ளைகளையும் அனுப்பி விட்டார்கள்.

“பாப்பா உன் புருஷன் எங்க?” என்று கனகாவிடம் கேட்க,

“பஞ்சாயத்தில் வந்து பிரச்சனை பண்ணுவார்னு தூக்க மாத்திரை போட்டு படுக்க வச்சிட்டு வந்திருக்கேன் ரவிப்பா” என்றார் கனகா.

“பாருடா அந்தளவு தைரியசாலி ஆகிட்டியா? அதை உன் பொண்ணு விசயத்திலும் செய்திருக்கலாமே.”

“செய்திருக்கலாம் ரவிப்பா. என்னை மனுசியா மதிச்சி சொல்ல வருவதை கேக்க, என் குடும்பத்தில் யாரும் இல்லை. புருஷன் உண்டு. பிள்ளை உண்டு. இருந்தும் நான் அநாதை தான் ரவிப்பா” என்றதில் சுந்தரி அதிர்ந்து தாயைப் பார்த்தாள். அவரோ அவளைக் கவனிக்கும் நிலையில் இல்லை.

“ஏன் உன் பாசக்கார தம்பி என்ன பண்றாப்ல” என்றார் கனகவேலை பார்த்தபடி.

“அவனும் என்ன பண்ணுவான்? அவரவருக்கு வாய்க்குற துணையை வைத்து தான் எல்லாம். இங்க எதுவும் சரியில்லை ரவிப்பா. அதை விடுங்க சித்தி அழகா இருக்காங்க. எந்த ஊரு அவங்களுக்கு? எப்ப கல்யாணம் ஆச்சுது?” என்று தேவகியைப் பார்க்க அவர் அங்கு இல்லை என்றதும், “இங்க தான இருந்தாங்க ஆளைக் காணோம்” என்று தேட,

“அதெல்லாம் அப்புறமா சொல்லுறேன். இப்ப கோயிலுக்குள்ள இருப்பா. வா உன் ரவிப்பா கூட்டிட்டுப் போறேன். யாருக்கும் பயப்படாம வா. இனிமேல் அநாதைனு பேசாத. கேட்கிற எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. உன்னை பெத்த தாயும், நீ பெத்த பொண்ணும் அதிர்ந்து அப்படியே நிற்கிறாங்க பாரு” என்றார்.

“நான் சொன்னது நிஜம்தான ரவிப்பா. பொய் இல்லையே” என்றார் கனகா.

“உன் நிலை எனக்குப் புரியுது. இனி எல்லாம் மாறும். என் பையன் எல்லாத்தையும் மாத்துவான். இல்லடா மகனே” என்றார் அவர்.

“இதுதான்னு நடந்தது தெரிஞ்சா, நீங்களே எதிர்த்தாலும் மொத்தமாவே மாத்திடுவேன் அப்பா” என்று உறுதியாக சொன்னவன், “இவங்க எனக்கு அக்காவா? பார்த்தா அம்மாவுக்கு தங்கை மாதிரி இருக்காங்க” என்றான்.

“தங்கைக்கான வயசு தான். முறைனு ஒண்ணு இருக்கே. கடைக்குட்டியா பிறக்கிற எல்லா வீட்டினரும் சந்திக்கும் பிரச்சனை தான், இந்த உறவுமுறை பிரச்சனை. அதுக்காக முறையை மாத்த முடியாதே. சரி வா இந்த அம்மனை பார்த்து முப்பத்து ஆறு வருஷம் மேல ஆகுது. ஏன் வரலன்னு கோபமா இருப்பாங்க. அதோட உன் அம்மா கோபமா போயிருக்கா. அவளையும் சேர்த்து சமாதானப்படுத்திட்டு வரலாம்” என்று உள்ளே செல்கையில் திரும்பி அண்ணனை பார்த்தவர், “உனக்கு ஒரு பரிசு தரனும். கோயில்ல வச்சினா நல்லது” என்று உள்ளே சென்றார்.

அவர்கள் உள்ளே சென்றதும் ‘வரமாட்டேன்’ என மறுத்த இரத்தினசாமியை பால்ராஜ் கிட்டத்தட்ட உள்ளே தள்ளிக்கொண்டு வந்தார்.

சாமியை தரிசித்து மனைவியை தேடியவர், கோயிலின் பின்புறம் விசேச தினங்களில் பந்தி பரிமாறப்படும் இடத்தில் உள்ள சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து கோயில் கோபுரத்தை பார்த்திருந்த மனைவியைக் கண்டு புன்னகையுடன் வந்து அருகில் அமர்ந்தார்.

“பரவாயில்லையே சாப்பிட தனி இடம் கட்டி செட் போட்டு வச்சிருக்காங்க” என்றவர், “என்ன தேவிமா இங்க வந்தாச்சி? சாமியை பார்த்தியா, இல்ல நேரா இங்க வந்துட்டியா?”

கணவன் தோள் சாய்ந்தவர், “சென்னை போகலாமா ரவி” என்றார்.

“இங்க நமக்கு என்ன வேலை. வந்தது வந்தாச்சி. சில ஜென்மங்களை தோல் உரிச்சி காட்டிட்டு போவோம்.”

“இத்தனை வருடம் கழித்து அந்த அசிங்கத்தை நினைவு படுத்தணுமா? நம்ம பையனுக்கு தெரிஞ்சா கூனிக் குறுகிட மாட்டானா. இல்லன்னா அவனை எரிச்சிடமாட்டானா. அவனைப் பார்த்தாலே உடலெல்லாம் பத்திட்டு எரியுதுங்க” என்றார் கோபத்தில் கண்கள் சிவக்க.

“எரியுற நெருப்பை அணைத்தால் நீ ஜில்லுன்னு ஆகிடுவ. நம்ம பையன் மாத்தி யோசிக்கிற ஆளு. ரத்தினத்துக்கான தண்டனையை வேற மாதிரி குடுப்பான்” என்றார்.

“சொல்ல அவசியம் இல்லையேங்க. அப்படியே விட்டுடலாமே” என்று கலங்கினார் தேவகி.

“உன் பையனுக்கு எதோ இருக்குனு சந்தேகம் வந்திருக்கு. என்னன்னு தெரியாது. அதை தெரிஞ்சிக்க இறங்கினா யார் யாரோ சொல்லுற கட்டுக்கதைளில் ஒன்றை உண்மைன்னு அவன் நினைச்சிட்டாலும், நாம வாழற வாழ்க்கை ஒன்றும் இல்லாமல் போயிடும் தேவிமா. நம்ம வாய்மொழியில் கேட்டா அவனுக்கு நிஜம் புரியும்” என்றார் நிதானமாக.

“ம்ம்ம்” என்றார் மனதே இல்லாது.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top