• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 3, 2025
Messages
20
பொள்ளாச்சி:

"தாயின் முகத்தை பார்த்தவன் இங்கு பாருங்க மா,மதி மேல எனக்கு அப்படி ஒரு எண்ணம் இதுவரை இல்லை"

ஏன்,உனக்கு அவள் மட்டும் தான் அண்ணன் பொண்ணா?

வேற எவளையாவது நான் கட்டிக்கிட்டாள் உனக்கு பிடிக்காதா?

மகனின் வார்த்தைகளை கேட்டவர்,உன் சந்தோஷம் தான் எனக்கு வேண்டும் கண்ணு.வாழ போறது நீ.அதனால் உனக்கு பிடித்தவளை தான் கட்டி வைப்போம்.

தாயின் வார்த்தைகளை கேட்டு சிரித்தவன் எல்லாம் உனக்கு ரொம்ப வேண்டியவள் தான்.நேரம் வரும் போது உன் மருமகளை கொண்டு வந்து உன் கண் முன்னால் நிறுத்துறேன்.அதற்கு முன்பு எனக்கு முக்கியமான வேலை இருக்கு அதை முடிக்க போதுமா????

ம்ம்..

எல்லாம் சரி தான் அப்படியே அவள் யாருனு சொல்றேன் யா???

நீ இருக்கியே மா என்று சிரித்தவன்,உன் சின்ன அண்ணன் மவள் மலர்விழி தான் போதுமா????

மகன் சொன்னதை கேட்டவர் யாரு,சீவகன் அண்ணன் பொண்ணா???என்று அதிர,ஆமாம் மா.அவளே தான்.

எனக்கு அவளை தான் மா ரொம்ப பிடிச்சிருக்கு.உன் ஆசைப்படி தை-யில் கல்யாணம் பண்ணுறேன்.இப்போ உனக்கு சந்தோஷம் தானே என்றவாறு அங்கிருந்த வாஷ்பேசனில் கையை கழுவி,இது நடக்காது கண்ணு என்றவரின் வார்த்தைகள் தடுமாறியது.

என்ன மா சொல்றீங்க?

உன் அண்ணன் மகள் தானே,வேற என்ன பிரச்சனை?

சொத்து பத்தில் உன் சித்தப்பா வீட்டுக்கு நாம ஒன்னும் கீழ இல்லயே மா?பிறகென்ன????

படிப்பும் அவளுக்கு ஈக்குவளாக தான் நானும் படிச்சிருக்கேன்.அவளை மகாராணி போல என்னால் பார்த்துக்க முடியும்.இதைவிட உன் அண்ணனுக்கு மாப்பிள்ளையாக வேற. என்ன மா தகுதி வேண்டும்???

மகனின் கோவத்தை பார்த்தவர் அய்யோ செழியாஆஆ...உன் மனசில் இப்படி ஒரு ஆசை இருந்தால் அதை இப்பவே அழித்துவிடு கண்ணு.இது கண்டிப்பாக நடக்காது. என்றவாறு உள்ளே போகுபவரின் நினைவுகளோ, கடந்து சென்ற நிகழ்வுகளை நினைத்து பார்க்க,ரண வேதனையாக இருந்தது.

தாயின் செயலை பார்த்தவன் அம்மாஆஆ... நான் இங்க பேசிட்டு இருக்கேன் நீங்க பாட்டுல உள்ள போனா என்ன அர்த்தம்???

"காரணத்தை சொல்லிட்டு போங்க"

ஏன் அவளுக்கு அழகு இல்லையா?

அறிவு இல்லையா?

படிப்பில்லையா? என்ன குறை மா??

ஒருவேளை அவளை கட்டிக்கிறதுக்கு எனக்கு தகுதி இல்லைனு நினைக்கிறீங்களா???

மகனின் கோபமான குரலை கேட்டு வெளியே உட்கார்ந்திருந்த வாசனோ வேகமாக எழுந்து உள்ளே வந்தவர், என்ன ஆச்சு செழியா??

எதுக்கு சத்தம் போடுற என்கவும் தனது நெற்றியை தடவியவன்,அது வந்து பா ஒரு முக்கியமான விஷயம் என்றவனோ, மலரை விரும்புவதைப் பற்றி சொல்லி முடிக்கவும் கேட்டவருக்கும் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை.

அவரின் அமைதியை பார்த்தவன் என்னப்பா நீங்களும் எதுவும் சொல்லாம இருக்கீங்க??இத்தனை வருஷமா கல்யாணம்னு ரெண்டு பேரும் குதிச்சிட்டு இருந்தீங்க.

இப்ப எனக்கு புடிச்சவளை நானே சொல்றேன்,அவளை கட்டி வைக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?

சொந்த மச்சான் பொண்ணு தானே? ??

மகன் சொன்னதைக் கேட்டவர் செழியா அது வந்து என அடுத்த வார்த்தை பேச முடியாமல் அமைதியாக ஏதோ பிரச்சனை இருக்குனு தெரியுது பா.

என்னன்னு சொல்லுங்க,இல்லன்னா என்னோட விருப்பத்துக்கு கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் குறுக்க நிக்க மாட்டீங்க எனக்கும் விஷயம் எனக்கு நல்லாவே தெரியும்.

நானே ஒருத்தியை புடிச்சிருக்குன்னு சொல்றேன்,ஆனால் அம்மா முடியாதுன்னு சொல்லிட்டு போறாங்க. அதுக்கு என்ன காரணம்?

அது வந்து கண்ணு...கண்ணகி நிச்சயமா உனக்கு பொண்ணு கொடுக்காது.அதைவிட நம்ம குடும்பத்துக்கு கண்டிப்பாக கொடுக்காது.
அதனால்,உன் மனசுல இருக்குற எண்ணத்தை அழிச்சிடு.உனக்கு அப்பா வேற பொண்ணு பார்க்கிறேன் என்கவும், என்னப்பா சொல்றீங்க???

அப்படி என்ன தரம் தாழ்ந்து போய்ட்டோம் நம்ம குடும்பத்தில் பொண்ணு கொடுக்காத அளவுக்கு என்று கோபமாக செழியன் கேட்க..

கண்ணை மூடி திறந்து பெருமூச்சு விட்டவர் தன்னோட அப்பாவையும் கல்யாணம் பண்ணிக்க இருந்த பையனையும்,கொலை பண்ணிய குடும்பத்துல கண்ணகி எப்படி தன் பெண்ணை கொடுக்கும் சொல்லு???

தனது தந்தை சொன்னதைக் கேட்டவன் என்னப்பா சொல்றீங்க என்று அதிர்ந்து போக,ஆமா..இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் எல்லாம் உனக்கு தெரியாது நீ சின்ன புள்ள.

அதனால் இது கண்டிப்பாக நடக்காது.அந்த பொண்ணை மறந்துட்டு வேற வேலையை எனக்கும் போது, உங்கள் வார்த்தையை மறுத்து பேசுகிறேன் என்று தப்பா நினைக்காதீங்க பா.கண்டிப்பா அவளை என்னால் விட முடியாதுங்கப்பா

எனக்கு கல்யாணம் என்ற ஒன்று நடந்தால் அது மலர் கூட தான்.என் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது. முதலில் என்ன நடந்தது என்று நீங்க சொல்லுங்க.

அதன் பிறகு இதற்கு என்ன தீர்வென்று மெடிலெடுக்கலாம் பா.ஆனால் எந்த காரணத்தை கொண்டும் மலரை தவிர வேற எவளையும் நான் கட்டிக்க மாட்டேனென்று உறுதியாக சொன்னான்.

நிமிர்ந்து மகனை தீர்க்கமாக பார்த்தவரோ செழியன் சொன்னதை செய்வான் என்பதை புரிந்து கொண்டவர் சரிப்பா நீயும் இதை தெரிந்து கொள்வது நல்லது என்றவாறு விஷயத்தை சொல்லத் தொடங்கினார். .

மலரின் நினைவுகள்:

மகள் கேட்கும் கேள்விக்கு வாயடைத்துப் போன சீவகன் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருக்க,அங்கு வந்த கண்ணகி மலரு உனக்கு என்ன தெரியும் என்கவும்,கோபமாக தனது தாயின் பக்கம் திரும்பியவள் ஏமா உனக்கு அம்மா தங்கச்சி தம்பி எல்லாம் இருக்கிறாங்க இவருக்கு அப்பாவுக்கு அப்பா அம்மா அண்ணா எல்லாரும் இருக்கிறாங்க இத்தனை சொந்த பந்தங்கள் இருக்கும் போது எதுக்கு என்னை யாருமே இல்லாத போல வர்றீங்க???

அதுக்கான காரணத்தை சொல்லுங்க,இப்பவே எனக்கு தெரிஞ்சே ஆகணும் என்று உறுதியாக சொல்ல,இதற்கு மேல் மறைத்து என்ன ஆகப்போகுது என்று நினைத்தேன். கண்ணகியும் மகளிடம் நடந்ததை சொல்ல தொடங்கினார். .

20 வருடங்கள் முன்பு..

"பானு..."

இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் டி?

வாத்தியார் நானே லேட்டா போனாக்க என்கிட்ட படிக்கிறவங்க என்ன டி நினைப்பாங்க என்றவாறு நாராயணன் தனது ரூமில் இருந்து வெளியே வர,இதோ வந்துட்டேன் என்ற பானுமதியோ மதிய சாப்பாட்டு அடங்கிய பேகோடு வந்தவர் இந்தாங்க என்று கணவரிடம் நீட்ட,சிரித்தவாறு வாங்கியவர் நான் போயிட்டு வரேன்..

ஹம் சரிங்க என்று தலையாட்டி அவர் பின்னால் வர,வெளியே வந்த நாராயணன் அங்கிருந்த சைக்கிளில் ஏறி தான் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கு வந்தார்.

ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நாராயணன் தான் தலைமையாசிரியராக இருக்கிறார்.

வழக்கமாக நிறுத்தும் மரத்தின் கீழ் சைக்கிளை நிறுத்தி பூட்டியவர் சாப்பாட்டு பேகோடு உள்ளே வர அங்கிருந்த பிள்ளைகளும் அவருக்கு குட் மார்னிங் சார் என்கவும் அவரும் குட் மார்னிங் என்று சொல்லிக்கொண்டு பள்ளியின் உள்ளே சென்றவர் தான் உட்கார்ந்து இருக்கும் டேபிளின் கீழே பேக்கே வைக்க பிரேயர் ஆரம்பிப்பதற்கு பெல்லும் அடித்தது.

பின்னர் பள்ளிக்கூடத்திற்கு பின்னாடி இருக்கும் சிறிய மைதானத்திற்கு போக, அங்கே ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வரிசையாக நிற்க,கடவுள் வாழ்த்து பாடி அன்றைய திருக்குறளை சொல்லி முடித்தவர்கள் அவரவர் வகுப்பிற்கு சென்றனர்.

நாராயணன் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது சார் குரல் கேட்டு திரும்பி பார்க்க, அங்கே பள்ளிக்கூடத்தில் ஆபீஸ் பாயாக இருக்கும் ஜேம்ஸ் நின்று கொண்டிருந்தான்.

சொல்லு ஜேம்ஸ்??

சார் நம்ம ஸ்கூலில் வேலைக்கு சேர சார் ஒருத்தர் வந்துருக்கிறார்... அப்படியா என்றவர் வர சொல்ல ஜேம்ஸ் என்று சொல்லிவிட்டு பிள்ளைகளே இப்போ நான் நடத்தினேனே அதை படிங்கள்.

கொஞ்ச நேரத்தில் நான் வந்து கேள்வி கேட்பேன் என்றவரோ ஆபீஸ் ரூமிற்கு போனவர் தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டு ஜேம்ஸ் என்ற குரல் கொடுக்க,மே ஐ கமின் சார் என்றவாறு உள்ளே வந்த இளைஞனை பார்த்த நாராயணனோ இதழ் பிரியாமல் சிரித்தார்.

சொல்வாளா...????
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top