• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
72
மலர் நினைவுகள்:

"உனக்கு விருப்பம் இல்லையென்றால் நான் விலகி போயிடுவேன் டி.
ஆனால் உன் மனதில் நான் இருக்கிறேன்
அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்பவனை அதிர்ந்து பார்த்தாள்"


"இப்படி திமிராக பேசினால் அப்படியே வேணாம்னு விட்டுட்டு போயிடுவேன் என்று கனவிலும் நினைக்காதே"

இனி என்னை சமாளிக்கிறதுக்கு நீ ரெடியாக இரு டி என்று சொல்லி விட்டு ஊருக்கு வந்துவிட்டான்

அதே போல் மாதம் தவறாமல் வந்து அவளிடம் பேசி பேசியே கோவமா இருந்தவளின் மனதிற்குள் செழியனின் நினைவுகள் மலைபோல் உயரும் அளவிற்கு மாற்றம் வந்தது

“அவனை காதலிக்க கூடாது என்று போட்டு வைத்த மனத்திரைகள் எல்லாம் உடைந்து போனது.கடந்த இரண்டு மாதமாக அவன் வராமல் போக,வேந்தனுக்காக மலரும் ஏங்க ஆரம்பித்தாள்"

"எதிலும் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் வழக்கம் போல காலேஜிக்கு வந்தவளுக்கு வேந்தனை பார்க்க வேண்டும் போல மனம் படுத்தி எடுத்தது"

"இரண்டு மாதத்திற்குப் பிறகு பிராக்டிகல் கிளாஸ் முடித்துவிட்டு வெளியே வரும் போது,கேண்டின் பக்கத்தில் இருக்கும் மரத்தின் மேல் கையைக் கட்டிக் கொண்டு சாய்ந்து நிற்பவனை பார்த்தவளுக்கு சந்தோஷத்தில் அழுகை வந்தது"

சுற்றம் எதையும் கண்டு கொள்ளாமல் வேகமாக அவனிடம் போனவள் எதுவும் பேசாமல் பளார் பளார் என்று அறைந்தவள்,பின்னர் அவனையே இறுக்கி கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.

"மலரின் செயல்களைப் பார்த்து இரண்டு தோழிகளும் அதிர்ந்து போக,அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர்களோ இதைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றனர்"

அவள் அழட்டுமென்று சிறிது நிமிடங்கள் வரை அமைதியாக இருந்தவன்,ஏய் இது காலேஜ் டி.இப்படி கட்டிப்பிடிச்சிட்டு நிக்கிறியே மனுஷனுக்கு என்னென்னமோ தோணுது என்கவும்,அதைக் கேட்டு சுதாரித்தவளோ பட்டென்று விலகி வேறுபக்கம் திரும்பி நிற்பவளுக்கு தோழிகள் இருவரும் அவளை முறைத்தபடி நிற்பது தெரிஞ்சது

கடந்த சில நாட்களாகவே மலர் எதையோ பறிகுடுத்த போல இருந்த காரணத்தை புரிந்து கொண்ட தோழிகள் இருவரும் அவளிடம் வந்தவர்கள் சரி நீ பேசிட்டு வா,நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்.

நாளைக்கு பார்க்கலாம் என்றவாறு வேந்தனை பார்த்து சிரித்தவர்கள் நல்லா இருக்கீங்களா ணா என்றனர்

"நல்லாருக்கேன் மா,நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க என்று அவனும் விசாரிக்க நல்லாருக்கோம் ணா என்றுவளுங்க,உங்க ஆளுக்கு காதல் பைத்தியம் ரொம்ப முத்திடுச்சி ணா"

நல்லவேளை இன்றாவது வந்தீங்களே,இல்லையென்றால் இவளே கிளம்பி அங்கு வந்துருப்பாள்.மேடம் இத்தனை நாளும் பசலை நோயால் தான் வாடி போயிருக்காங்க என்பது இப்போது தான் புரிகிறது அண்ணா என்றவாறு தோழியை கிண்டல் பண்ணியவளுங்கள் அவனிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றார்கள்.

இன்னும் எவ்வளவு நேரம் தான் டி இப்படியே திரும்பி நிக்க போற?மனுஷனுக்கு கால் வலிக்குது.

அந்த மரத்துக்கு கீழ ஸ்டோன் பெஞ்ச் இருக்கு பாரு அதில் உட்கார்ந்து பேசலாம் என்றவாறு அவளை தாண்டி முன்னே போக,மலரும் எதுவும் சொல்லாமல் வேந்தன் பின்னாடியே சென்றாள்"

"அமைதியாக வந்து உட்கார்ந்தவளின் பார்வை தரையில் இருக்க,அப்படி என்னத்தை தொலைச்சனு சொல்லு நானும் சேர்ந்து தேடுவேனே"

"அதைக் கேட்டு சிரித்துக்கொண்டே நிமிர்ந்தவள் சார் எங்கு வந்தீங்களாம் என்க,இங்கு ஒருத்தி என்னை நினைத்து ரொம்ப ஏங்கி போறாள்னு தெரிஞ்சது.அதான் அவளை பார்க்க வந்தேன்"

"ம்க்கும் அப்படியெல்லாம் உங்களை நினைத்து இங்கு யாரும் ஏங்கி தவிக்கவில்லை,அது இருக்கட்டும் ஏன் ரெண்டு மாதமாக வரவில்லை அதற்கு முதலில் காரணம் சொல்லுங்கள்"

"அவள் சொன்னதை கேட்டவன் நீதான் என்னை நினைத்து ஏங்கலையை பிறகு என்ன வெங்காயத்துக்கு உனக்கு நான் பதில் சொல்லணும் டி"

"சரி நீங்க சொல்ல வேண்டாம் நான் வீட்டுக்கு கிளம்புறேனென்று மலர் எந்திரிக்க சரி பார்த்து போ டாட்டா டி என்றான்"

"உங்க டாட்டாவை தூக்கி குப்பையில போடுங்க என்றவளோ அவனை ஒரு முறை முறைத்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்றாள்"

“தான் தங்கியிருந்த அறைக்கு வந்தவன் எதை நினைத்து இங்கு வந்தோமோ அது நடந்து விட்டதை நினைத்து சந்தோஷமாக இருந்தது”

தான் வராமல் தனக்காக அவள் நிச்சயமாக தேடித் தவிப்பாள் என்பதை ஆணித்தரமாக வேந்தனும் நம்ப,அதை இன்று கண்ணாற பார்த்துவிட்டு சந்தோஷமாக ஊருக்கு கிளம்பி போய் விட்டான்"

"மறுநாள் காலை வழக்கம் போல் காலேஜுக்கு வந்த மலர் முதன்முதலாக வேந்தனின் நம்பருக்கு கால் பண்ணினாள்"

கடைசி ரிங்கிள் அந்த பக்கம் அட்டென்ட் பண்ணியவன் ஹலோ யாருங்க என்றான்.

அதில் ஆத்திரம் வந்தவள் ஏன் டா அறிவு கெட்டவனே,நீதானே டா என் போனில் உன் நம்பரை சேவ் பண்ணின?

இப்ப யாருங்கன்னு கேட்டா என்ன அர்த்தம் விளக்கெண்ணெய் என்று திட்டவும்,ஓஓ நீதானா,ம்ம்ம் சொல்லு பாப்பா,என்ன விஷயம் என்று வேந்தனும் சாதாரணமாக கேட்க,எதே பாப்பாவாஆஆ என்று அந்த பக்கம் மலர் அதிர்வதைக் கேட்டு சத்தமின்றி சிரித்துக் கொண்டான்.

எங்க இருக்கீங்க என்கவும்,நான் எங்க இருக்க போறேன் ஊர்ல தான் இருப்பேன்.

அப்படியா...!!

ஊருக்கு போய்ட்டீங்களா?என்று அதிர்வது அவனுக்கு நன்கு புரிந்தது.

“ஆமா எனக்காக அங்கு யாரு இருக்கா சொல்லு என்று வேந்தன் கேட்க,உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனுமே என்கவும்,ம்ம்ம் கேட்டுக் கொண்டு தான் இருக்கேன் சொல்லு சொல்லு என்றான்"

அது வந்துங்க நானும் லவ் யூ தான் என்கவும்,ஓஓஓ அப்படியா ரொம்ப சந்தோசம் என்கவும்,சரியான மாங்கா மண்டையன் கிட்ட போய் காதலை சொன்னேன் பாரு என்னை அடிக்கணும் என்றவள் போடா என்றவாறு அழைப்பை துண்டித்தாள்.

"அதன் பிறகு இருவரும் போனில் பேசியே நாட்களை கடத்தினர்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்னைக்கு வந்து அவளை பார்த்து செல்வதையும் வேந்தன் விடவில்லை"

ஆனால் இந்த விஷயம் இரண்டு வீட்டினருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.வீட்டில் சொல்லிடலாமா என்று வேந்தன் கேட்க,என் படிப்பு முடிய இன்னும் ரெண்டு வருஷம் தான் இருக்கிறது.முடிந்த பிறகு பேசலாமேயென மலர் சொல்ல,ஹம் சரி என்றான்.

"வழக்கமாக காதலர்களுக்கு இடையே வரும் சின்ன சின்ன சண்டைகள் வாக்குவாதங்கள்,பின்னர் சமாதானமென சென்றது"

ஒரு நாள் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கண்ணகியின் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்டு,யார் என்று பார்க்க மதி என்று வந்தது.

அட்டென்ட் பண்ணியவர் மதி.எப்படி டா இருக்க? எக்ஸாம் நல்லா பண்ணியிருக்கிறாயா?

"நல்லாருக்கேன் சித்தி,நல்லா பண்ணிருக்கேன்"

வெற்றிகரமாக பிஜி முடிச்சிட்டேன் என்று மதி சிரிக்க,கையோட மாப்பிள்ளை பார்த்து விடலாம்னு கண்ணகியும் சிரித்துக் கொண்டே கேட்க,அய்யய்யோ தெய்வமே கல்யாணம் என்கிற பேச்சு இப்போதைக்கு யாரும் எடுக்க கூடாது.

அப்புறம் எதுக்கு நான் போன் பண்ணினேன் என்றால் நானும் பாட்டியும் இன்னைக்கு நைட் இங்கிருந்து கிளம்பி காலையில் சென்னைக்கு வந்துடுவோம் என்க,டேய் சூப்பர் வாங்க வாங்க என்றார்.

வரேன் வரேன் மூணு மாசம் அங்கிருந்து உங்களை இம்சை பண்ணிட்டு தான் நான் பொள்ளாச்சி வருவேன் சித்தியென மதி சிரிக்க,மூணு மாசம் என்ன டா எவ்வளவு வருஷம் வேணாலும் நீ இரு டா மதி.

எனக்கு மலர் வேற நீ வேற இல்லையே என்று கண்ணகி சொல்ல,அது எனக்கு நல்லா தெரியும் சித்தி.அதனாலதான் காலேஜ் முடிந்த அன்றே நான் கிளம்பி வரேன் என்று அந்த பக்கம் மதி சிரிப்பதை கேட்டு கண்ணகிக்கும் சந்தோஷமாக இருந்தது.

சரிடா மதி ரெண்டு பேரும் பார்த்து வாங்க.ட்ரெயின் ஏறிட்டு சொல்லுங்க நான் காலையில அப்பாவை ஸ்டேஷனுக்கு வர சொல்றேன், சரி சித்தி என்றவளும் அந்த பக்கம் அழைப்பை துண்டித்தாள்

"மதியும் வள்ளியும் வரப்போகிற விஷயத்தை கண்ணகி சொல்லவும் ஜாலி ஜாலி என்று மலரும் துள்ளி குதித்தாள்"

"மறுநாள் விடியலும் வந்தது"

அவர்கள் இருவரையும் அழைத்து வருவதற்காக சீவகனும் அதிகாலையிலே சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு சென்றவர் பிளாட்பாரத்தில் டிரைனுக்காக சிறிது நிமிடங்கள் காத்திருக்க கோவை எக்ஸ்பிரசும் 15வது பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது.

டிரைனில் இருந்து இறங்கிய இருவரையும் சீவகன் பார்த்துவிட்டு பரஸ்பரம் நலம் விசாரித்தார்.வாடாமா என்று வான்மதியின் தோளோடு அணைத்துக்கொள்ள,அவரின் பார்வையை வைத்து அங்க எல்லாரும் நல்லாருங்காங்கப்பா என்றாள்.

"பின்னர் மூவரும் பேசிக்கொண்டே அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்தனர்"

அந்த வீட்டின் வெளித்தோற்றத்தை பார்த்து வாவ் என்ற வான்மதி ரொம்ப அழகா இருக்குப்பா என்க,உன் சித்தி தான் இந்த வீட்டை டிசைன் பண்ணிய டிசைனர் என்கவும் சூப்பர் சூப்பர்...

மக்குங்களுக்கு தான் புத்திசாலி மனைவி கிடைக்கணும்னு விதி இருக்கேயென்று மதி சிரிக்க,சிறிது நொடிகளுக்கு பிறகே அண்ணன் மகள் சொல்லிய விஷயம் புரிந்து அட வாலு,எனக்கா புத்தி இல்லைன்னு சொல்ற என்று வான்மதியின் காதை பிடித்து திருவியவர்,போய் கேட்டை திறடா.

உன் சித்தி சமைச்சிட்டு இருக்கிறாள் போல அதான் கார் சத்தம் கேட்டும் வெளியே வரவில்லை என்று சிரிக்க, சரிங்கப்பா என்றபடி கீழே இறங்கி போனவள் அங்கிருந்த இரும்பு கேட்டை திறக்க காரும் உள்ளே ஓடி போய் நின்றது.

"இரண்டு பக்கமும் பெரிய பெரிய மரங்களும்,கலர் கலராக பூக்களும் பூத்துக் குலுங்க அந்த இடத்தை பார்க்கையில் அவ்வளவு அழகாக இருந்தது"

காலிங் பெல்லை அழுத்த சிறிது நொடியில் கதவை திறந்த கண்ணகி வாடா மதியென்றவாறு அவள் கையை பிடித்துக் கொண்டவர்,வாங்க என்று தனது மாமியாரை கூப்பிட,இப்பொழுது கூட இவள் வாயால் அத்தை என்று சொல்ல மாட்டேங்கிறாளேனு அந்த முதிய பெண்மணியின் உள்ளுக்குள் சுருக்கென்று ஓர் வலி வந்தது.

"சரி எல்லாத்தையும் அனுபவித்து தானே ஆகணும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு உள்ளே போய் சோபாவில் உட்கார்ந்த சிறிது நிமிடத்தில் மூவருக்கும் சூடான காப்பியை கொண்டு வந்து கொடுத்தார்"

ஏன் சித்தி மலர் இன்னும் எந்திரிக்கவில்லையா என காபி குடித்துக் கொண்டே மதி கேட்க,உன் தங்கச்சிக்கு காலை 6 மணிலாம் மிட் நைட் என்று கண்ணகி சிரிக்கும் போது அம்மா திஸ் இஸ் பேட் என்றவாறு வேகமாக இறங்கி வந்த மலர் ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி என்றவாறு வள்ளியின் காலில் விழுந்தாள்.

நல்லாரு கண்ணு என்றவரிடம் நலம் விசாரித்து விட்டு,அக்கா என்று போய் மதியின் பக்கத்தில் உட்கார்ந்தவள் எப்படிக்கா இருக்கிற?ம்ம் நல்லாருக்கிறேன்,நீ டி என்று பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டாளுங்கள்.

சொல்வாளா...???
 
Last edited:

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top