Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் - 8
ஓரக்காற்று உதவியுடன் பாக்கியம் பெற்ற சாரல் துளிகள் எல்லாம் அவள் முகத்தை முத்தமிட, ஏதுமற்ற ஏழையாய் குறுகி நின்றேன். அவள் ரசிக்கும் அழகைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவளைப் போலவே மழையும் பேரழகென்று.
“என்ன பேசவும் மாட்டேன்ற பாடவும் மாட்டேன்ற “
“இல்ல அப்படிலாம் ஒன்னும் இல்ல “
“கிளாஸ்ல எல்லாரும் இருக்கும்போது வர்ற சத்தம் இப்போ வர மாட்டேங்குதே? “
“நான் சத்தமாதான் பேசுறேன் மழ சத்தத்துல உனக்குதான் கேக்கல போல “
“இவ்வளோ நெறுக்கமா நின்னு பேசுறேன் அது கூடவா உனக்குக் கேக்கல? “
(நீ இவ்வளோ நெறுக்கமா நிக்குறதாலதான்டி எனக்குப் பேச்சே வரல என்று மனதிற்குள் முனுமுனுத்தபடியே நின்றேன்)
“நீ ஏன் என் முகத்த பாத்தே பேச மாட்டேன்ற? “
“நீ ஏன் கேப் விடாம கேள்வியா கேக்குற? உன் முகத்த பாத்தா மழ தண்ணி எல்லாம் மூஞ்சில படுது அதான் “
“ம்ம்ம் ரசனையே இல்ல உனக்கு “
“யாருக்கு எனக்கா? அது சரி “
“சென்ட் பாட்டில உன் பேக்ல வச்சனே அத பத்தி ஒரு வார்த்த கேட்டியா நீ? காலைல இருந்து வெயிட் பண்ணேன் நீ வந்து பேசுவனு. ஆனா நீ வரவே இல்ல. அதான் நானே வந்து பேசுனேன் “
“ஓஓ அத நீதான் என் பேக்ல வச்சியா? “
“ஏன் உனக்குத் தெரியாதா? “
“தெரியாதே “
“ம்ம் அது எப்படி உனக்குத் தெரியும்?. அந்தப் பக்கம் போகும்போதும் வரும்போதும் என்னைய உத்து உத்துப் பாக்க மட்டும்தான் தெரியும் “
அவள் வார்த்தைக்கு பதிலாக சிரிப்புதான் எனக்கு வந்தது. நான் எப்படி அவளைக் கவனித்தேனோ அதை விட அதிகமாகவே அவள் என்னைக் கவனித்திருக்கிறாள் என்கிற புரிதல் அப்போதுதான் வந்தது.
குனிந்த தலையை நிமிர்ந்து பார்த்துப் பேசலாம் என்று நினைக்கும் போது அவள் என்னைக் கடந்து நடந்து சென்றுவிட்டாள்.
வகுப்பில் இருந்து வெளியே வந்ததும் படிக்கட்டுகளில் அவள் குதித்து ஓடும் சத்தம் என்னை வா வா என்று கூப்பிட்டது. அவள் பின்னாலே நானும் ஓடினேன்.
மறைந்து நின்றிருந்த அவள், தண்ணீரை என் மீது வீசிச் சிரித்தபடியே நின்றாள். குளிர் நடுக்கத்தில் நகராமல் நின்ற என்னைக் கேலி செய்தாள்.
மழையின் வேகம் குறையும் என்று காத்திருந்த இருவரும் ஒரு முடிவுக்கு வந்தோம்.
“அப்போ சரி என் வீடு பக்கம்தான்... போற வழியில என்னைய விட்டுட்டு நீ போ “ என்று அவள் யோசனை கூற நானும் தலையாட்டினேன்.
கொட்டித் தீர்க்கும் மழைக்கு நடுவில் நாங்கள் இருவரும் என் பைக்கில் சென்ற காட்சியை விவரிக்கும் அளவிற்கு அழகான சொற்கள் இந்த உலகில் எந்த மொழியிலும் இல்லை.
பூங்காற்றே என் பின்னால் அமர்ந்து வருவது போல அவ்வளவு கூச்சத்தை ஏற்படுத்தினாள். எங்களை அழைத்துச் சென்ற வளைந்து நெளிந்த பாதையைப் போலே நானும் என் ஆண் எனும் பெயரும் அல்லு சில்லாய் சிதைவுற்றோம்.
என்னைத் தொடாமல் அமர்ந்துவர அவளும் படாத பாடு பட்டுவிட்டாள் பாவம்.
காற்றின் தீவிர வேகம் வண்டியை ஒரு ஓரமாய்த் தள்ள அதோடு போட்டி போட்டு என்னால் பிடிகொடுக்க முடியவில்லை. அதனால் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் இருந்த டீ கடையில் நுழைந்தோம்.
ஆடம்பர அமைப்புகளோடும் வண்ண வண்ண விளக்குகளோடும் ஜொலிக்கும் பெரிய மாளிகையாய் இல்லா விட்டாலும்கூட, தற்போது திரைக்கு வரும் காதல் படங்களில் காட்டிச்சிப்படுத்தப்படும் கேண்டில் லைட் இரவு உணவு உலகமாகத் தோன்றி என் பசிக்கு அடிபோட்டது ஏனோ தெரியவில்லை.
காஃபியின் அடர் நறுமணம் குடிக்கத் தூண்டியது. கைகளில் கொதிக்கும் சூட்டோடு இரு கோப்பியை ஏந்தியபடியே அவள் அருகே செல்ல, அவள் பார்த்த ஈரப் பார்வை பட்டு விரிய மீண்டும் நினைந்துதான் போனேன் நானும்.
சூடான கோப்பைக்கு உதட்டால் முதலுதவி செய்து ஆற்றிக்கொண்டே ஓரப்பார்வை வீசினாள். அவள் மீது மீளா காதலை உறுதிசெய்யும் ஆசைக்கு அடிபோட்டாள் சதிகாரி.
மழையின் வேகம் குறைந்த பிறகு அவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்று அவள் வீட்டுத் தெருவிற்கு முன்னரே இறக்கிவிட்டேன்.
“உனக்கு என் கிட்ட பேசனும்னு கொஞ்சம் கூட ஆசையாவே இல்லையா? கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா உன்கூடவேதான் இருக்கேன். நீ என்னைய பாக்குறனு தெரியுது, ஏதோ நெனைக்குறனு தெரியுது, ஆனா என்ன நெனைக்குறனு தெரியல.
உன் மனசுல என்ன இருக்குனு எனக்கு எப்படித் தெரியும்? சொன்னாதான தெரியும்? “
“ம்ம்ம் சரிதான். ஆனா உன் மனசுல என்ன இருக்குனு எனக்கு நீ சொல்லாமையே தெரியும்? “
“என்ன தெரியும் உனக்கு? “
“டீ கடையில வேற எங்கையோ பாத்துகிட்டே கிளாஸ எடுக்குறதுக்கு பதிலா என் கையத் தொட்டியே அது வேணும்னுதானே பண்ண? “
ஆதி புரிதல் இல்லாத பையன் என்று தப்புக் கணக்கு போட்ட யாமினிக்கு விபரீத பதில் கிடைத்ததும் நாணுமுற்றுக் குறுகினாள். அதுவரை துள்ளித் துள்ளி கிண்டல் செய்தவள் அவனை எதிர்கொள்வதில் இருக்கும் இனிமையான சிக்கலை நினைத்து அஞ்சி ஓடினாள்.
வாசற் படியைக் கடந்து உள்ளே சென்ற போதும்கூட, தெருமுனையில் ஒரு முறை முகம் பார்க்கும் கடைசி வாய்ப்பிற்குக் காத்திருந்த ஆதியைத் தலை சாய்த்து எட்டிப் பார்த்து வழியனுப்பினாள்.
இப்படியான தேன் நொடிகளின் சொட்டுக்கள் இறுகி இப்போது என் சிரிப்பைக் கோடுபோட்டுக் கிழித்துக் கொண்டிருக்கிறது. எத்தனை யுகம் கூடி வாழ்ந்தாலும் அந்த முதல் நாள் சந்திப்பில் கிடைத்த ஸ்பரிசம் அதற்கு பிறகு இருக்காது. அது புதுப்பிக்கத் தகாத ஒரு உணர்வு என்ற ஏக்கத்தோடு ஆதி, யாமினியின் நினைவைக் கண்ணீரோடு சேர்த்துத் துடைத்து எடுத்துவிட்டு வீடியோ எடுக்கத் தொடங்கினான்.
இரண்டாம் நாள் வீடியோவில் தன்னை வழக்கமான முறையில் அறிமுகம் செய்துவிட்டு நேரம் தாழ்த்தாமல் விஷயத்திற்குள் நுழைந்தான்.
நேற்றைய நாள் வீடியோவில் அக்பரும் ஜோதவும் யார்? அவர்களின் பின்னனி என்ன? என்பதைப் பற்றி பார்த்தோம் இன்றைக்கு அவர்களின் முதல் சந்திப்பு எப்படி இருந்தது? என்பது பற்றி பார்க்கலாம்.
வெவ்வேறு வேர்களில் பிறந்த இவர்களை இந்த பிரபஞ்சம் சந்திக்க வைத்த சுகமான சூழ்ச்சி உங்களின் காதுகளில் இனிக்குமென்பதில் கூடுதல் உறுதி எனக்கு இருக்கிறது.
விடுதியில் தங்கி இருந்து கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த ஜோதா ஒரு குறும்புத்தனமான குழந்தை என்றே சொல்லலாம். அவளுக்கு பெரிதாக வினையம் வியாக்கியானம் எல்லாம் தெரியாது. பார்க்கும் ஒவ்வொரு நபருடனும் இயல்பாகப் பேசி பழகி எளிதில் ஒட்டிக்கொள்ளும் ஒரு பட்டுப்பூச்சி.
விடுதியில் அவள் குரல் ஓயவே ஓயாது. யாரிடமாவது கேலியான வாக்குவாதத்தில் ஈடுபட்டு நகைப்பூட்டிக் கொண்டே இருப்பாள். அவளுடன் இருக்கும் தோழிகளுக்கு நேரம் ஆற்று நிரைப் போல நிற்காமல் ஓடி விடும். முடிவில் என்ன பேசி என்ன செய்துதான் நேரம் கழிதந்ததோ? என்கிற கேள்விக்கு விடை யே தெரியாது.
விடுதி அறையில் அவளுடன் சேர்ந்து படிக்க யாருமில்லை. அறையில் இருந்த நான்கு பேரும் வெவ்வேறு துறையினைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களுக்குள் படிப்பு ரீதியான போட்டியே இருக்காது.
சொல்லப்போனால் படிப்பைப் பற்றி பேசவே மாட்டார்கள். கல்லூரியில் இருந்து விடுதி திரும்பியவுடன் உடையை மாற்றிக் கொண்டு, கையில கண்ணாடி கோப்பையை எடுத்துக் கொண்டு நால்வரும் தேனீர் அருந்த விடுதி உணவகத்திற்குச் செல்வார்கள்.
மேசையும் நாற்காலிகளும் பல இருக்க அதையெல்லாம் விட்டுவிட்டு வெளியே வந்து துணி துவைக்கும் சாய்ந்த பாறைகளின் மீது ஏறி அமர்ந்துகொண்டு போவார் வருவார் எல்லாரையும் வம்பிழுத்துப் பேசி சிரித்து பொழுதைக் கழித்துவிட்டு அறைக்குத் திரும்புவார்கள்.
புத்தகத்தை எப்போதாவது எடுப்பதுண்டு. யாராவது ஒருவருக்கு நாட்டமில்லாமல் இருந்தாலும் மற்ற மூன்று பேரும் படிக்க முடியாத அளவிற்கு ரகளைகள் ஆரம்பிக்கும்.
அவர்கள் நான்கு பேருமே வாழ்க்கையைக் கொண்டாடத் தெரிந்தவர்கள். அவர்களுக்கு நியாபங்களைச் சேகரிப்பதில் நாட்டம் அதிகம். அதனால் அவர்களின் அறைகளில் அரங்கேறும் சில நகைப்பான நாடகங்களை செல்ஃபோனில் பதிவு செய்வதையும் அதைப் பகிர்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள்.
ஓய்வெடுக்கும் பொழுதுகளில் எதாவது ஒரு தலைப்பை எடுத்து அசைபோடுவது என்பது அவர்களுக்கு விருப்பமான ஒன்று.
இளம் வயதில் அப்படி என்ன பேசிவிடப் போகிறார்கள்? எல்லாம் காதலும் அதைச் சுற்றி நிகழும் காமெடிகளும்தான் பெரும்பாலும் தலைப்பாகவே இருக்கும்.
தன்னை எத்தனை பேர் காதலித்தார்கள்? எத்தனை காதல் கடிதம் வந்திருக்கிறது? எனக்கு யாரைப் பிடிக்கும்? எனக்குப் பிடித்தவருக்கு என்னைப் பிடிக்குமா? என்ற கேள்விகளைச் சுற்றியே காதல் கிசு கிசு பேசுவார்கள். பேசிய கதையையே திரும்பத் தொடங்கினால் சலிப்பாகி கூட்டம் களைந்துவிடும். அதிலிருந்து, இந்த காதல் தலைப்பு மட்டும் சற்று மாறுபட்டது. எத்தனை முறை பேசினாலும் சொல்லுபவருக்கும் கேட்பவருக்கும் சடைப்பே ஏற்படுவதில்லை.
காதலைப் பற்றி பேசும்போது காதல் தோல்வி பற்றி பேசாமல் இருக்க முடியுமா?. எல்லா நண்பர் குழுவிலும் ஒரு காதல் தோல்வியடைந்த ஜீவன் இருக்கும்.
காதலின் மென்மையான பக்கங்களை இன்புற பிதற்றும் போதெல்லாம் பல்லைக் காட்டிக்கொண்டு நக்கலாக சிரிப்பாள். “நீ ஏன்டி இப்படி இருக்க?” என்று யாராவது தெரியாமல் கேட்டுவிட்டால் போதும், ஊற்றி முடிய கதையைத் தோன்டி எடுத்து தூர் வாரி கேட்டவரை மட்டுமல்லாது மற்றவர்களையும் சோர்வடையச் செய்துவிடுவாள். அப்படியானவளைச் சமாளிக்க யாராலும் முடியாது.
தோல்வி கண்ட அந்தக் குரலில் எப்போதும் வருத்தமும் கோபமும் இருக்கும். அந்த வருத்தமும் கோபமும் காதல் மீதும், காதலிப்பவர் மீதும், பொதுவாக ஆண்கள் மீதே ஒரு வித வெறுப்பை ஏற்படுத்திவிடும். காதலில் தோல்வி கண்ட அந்த தோழியின் கருத்து மட்டும் அனைத்திலும் தனித்து இருக்கும்.
மற்றவர்களுக்கு அவளின் கருத்து சில நேரங்களில் வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் சக தோழிகளின் கண்களுக்கு அவள் பூமராகவே தெரிவாள் (பூமர் என்கிற சொல் தற்போது இணையதள பகடிச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சொல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அதாவது 1965- 1985களில் பிறந்தவர்களைக் குறிக்கிறது. இது பின்தங்கிய தொழிநுட்ப அறிவு மற்றும் பழமைவாதத்திற்கு அர்த்தமாகிறது).
தொடரும்...♡