Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 37
- Thread Author
- #1
அத்தியாயம் - 32
ஜோதா அக்பர் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்து பிறகு அவர்களுடைய வாழ்க்கை வசந்தமாக மாறியது. வாழ்கை நல்ல திசையை நோக்கித் திரும்பும் போது அக்பருடைய அம்மா இறந்துவிட்டார்கள். தன்னுடைய ஆணிவேர் சிதைந்ததைத் தாங்க முடியாத சோகத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தார் அக்பர். அதிலிருந்து மீண்டு வாழ்கை சந்தோஷத்தைத் ஓடியதிலே ஏழு வருடம் முடிந்து விட்டது.
எழு வருடம் முடிந்த பிறகும்கூட ஒரு குழந்தையைக் கொடுத்து ஆசிர்வதிக்க அந்தக் கடவுளுக்கு மனம் வரவில்லை. எழு வருடமாக உற்றார் உறவினரிடத்தில் ராசியில்லாதவல் எனப் பெயரெடுத்தாள் ஜோதா. இவளைத் திருமணம் செய்த பிறகு மறக்கமுடியாத விபத்து, கடன் தொல்லை, அம்மாவின் இழப்பு அதைத் தொடர்ந்து குழந்தையின்மை என உனக்கு சுமைக்கு மேல் சுமைதான். நீ அதற்கு முடிவுகட்டும் விதமாக அந்த சுமையை இறக்கி வைத்து விட்டு வேறொரு புதிய வாழ்க்கையைத் தேடிக்கொள் என்று அங்கிருந்த அக்பரின் சொந்தக்காரர்கள் வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் இருவருமே ஆரம்பத்தில் அதைப் பெரிதுபடுத்தவில்லை. நாளுக்கு நாள் அந்த நச்சரிப்பு அதிகமாக, மனதில் அடைத்து வைத்த சோகம் அணை மீறி ஜோதா தற்கொலை முடிவிற்குத் தள்ளப்பட்டாள். அவள் மீது உயிரையே வைத்திருந்த அக்பர் அவளையும் அவள் மீது வைத்திருந்த காதலையும் மட்டுமே சொத்தாக நினைத்து தனக்கு அங்கிருந்த உடமைகளை விற்று வெளியூர் வந்தார்.
அங்கு அவர்களுக்குப் பிடித்தவாறு எளிமையான வாழ்க்கையை அமைத்து சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
எல்லாம் இருந்தும் குழந்தை இல்லை என்கிற ஏக்கம் ஜோதாவின் அடிவயிற்றில் பற்றி எரிந்து கொண்டிருந்தது. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் அதைத் தன்னுடையதாக நினைத்து அதைப் பிரிந்த பிறகு மீளா சோகத்தில் மூழ்கிவிடுவாள். அதன் பிறகு அவளை அதிலுருந்து மீட்டெடுக்க அக்பர் படாத பாடு படவேண்டி இருக்கும்.
இந்தச் சூழல் இப்படியே இன்னும் ஒரு வருடம் கூடுதலாக நீள, ஜோதாவின் பிறந்தநாளன்று அக்பர் அவளுக்கு ஒரு பரிசு கொடுத்தார். குளியலறையில் இருந்து குளித்து முடித்து வெளியே வந்த ஜோதாவை, “இங்க வாடி உனக்காக நான் ஒரு அற்புதமான பிறந்த நாள் பரிசு கொண்டு வந்திருக்கேன்” என்று சொன்னதும் ஜோதா ஆர்வமாக படுக்கையறைக்குள் நுழைந்தாள்.
அங்கு அவர் கையில் ஒரு ஆண்குழந்தை கை கால்களை ஆட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தது. இவளைப் பார்த்ததும் குழந்தை சிரித்தது. குழந்தையின் தெய்வச் சிரிப்பைப் பார்த்து ஜோதா அழுக அதைப் பார்த்து உற்சாகத்தில் ஊற்றெடுத்தது அக்பரின் கண்கள். அதிர்சியில் உறைந்து நகர முடியாமல் கிடந்த ஜோதாவின் அருகே அந்தக் குழந்தையை ஆடியபடியே தூக்கிக் கொண்டு அவள் கையில் வைத்தார்.
அக்பர் ஜோதாவிற்காகக் கொடுத்த பிறந்த நாள் பரிசுக்கு ஜோதா ஆதி என்று பெயர் வைத்தாள். இதைச் சொன்னதும், காரை சட்டென நிறுத்திய ஆதியின் கண்கள் களங்கி அவனுடைய உலகம் திடீரென மறைந்தது போல் இருந்தது.
தன் முதல் மகன் ஆதிக்கு ஏழு வயது இருக்கும் போது தான் ஜோதா முன்தன் முறையாக கற்பமாக இருந்தாள். பின் சிபி என்னும் தவப் புதழ்வனை ஆதிக்குத் தம்பியாகப் பரிசளித்தாள்… என்று கதையை முடித்தாள்.
நடு ரோட்டில் உடைந்து அழுத ஆதி யாமினியைக் கட்டியணைத்துக் கண்ணீரால் அவளை நினைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய ஒட்டு மொத்த உயரமும் குறைந்து அவர்கள் இருவருக்கும் செருப்பாக இருந்து தன் வாழ்க்கை மோட்சம் பெற்று முடிய வேண்டும் என்று யாமினியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஆதி நீ சொன்னது கதை இல்ல நிஜம். நீ வாசிச்சது கதை நோட்டு இல்ல. அது உன் அம்மாவோட டைரி. உங்க அம்மாவோட உண்மையான பேர் கூட ஜோதி இல்ல பார்கவி. அந்த நோட்டோட கடைசி பக்கத்துலதான் இதையே எழுதியிருந்தாங்க “
“அப்போ அப்பா பேர் பார்த்திபன் இல்லையா?. அவரு ஒரு முஸ்லிம்னா அவரோட உண்மையான பேர் என்ன? “
“அவர் பேர் அக்பர்ன்றத தவிர வேற எதையும் குறிப்பிடல. ஊர விட்டு வெளிய வந்த பிறகு பேர மாத்திகிட்டாங்க “
“அப்போ அப்பா பேர் அக்பரா? “
“அது சரியா தெரியல ஆதி. அவரோட உண்மையான பேர் அம்மாவத் தவிர வேற யாருக்கும் தெரிய வாய்ப்பில்ல”
யாமினி சொல்வது எல்லாம் கனவில்தான் நடக்கிறதோ என்று நினைத்தவன் தன்னைக் கிள்ளிப் பார்த்து உறுதிசெய்து, காரை நேராக வீட்டிற்கு விட்டான். உண்மை தெரிந்த பிறகு அம்மா அப்பாவை அவனால் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை.
யாமினி இந்த உண்மை உனக்குத் தெரியக்கூடது என்றுதான் அவர்கள் ஒவ்வொருநாளும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீ அவர்களுடைய வேண்டுதலைப் பொய்யாக்காமல் இருக்க வேண்டும் என்று சொன்னதை மனதில் வைத்துத் தனக்குள் இருந்த உணர்வை காட்டிக் கொள்ளாமல் அவர்களுக்காக வாழ ஆரம்பித்தான்.
மறுநாள் அப்பாவின் பிறந்தநாள் விழாவில் அவருக்குப் பிறந்தநாள் பரிசாக அவர்களுடைய ஊரில் பாக்ஸிங் ஸ்கூல் நடத்துவதற்கான லைசன்ஸைப் பரிசாகக் கொடுத்தான். அதைப் பார்த்துப் பூரித்துச் சிரித்த அப்பா அவனை ஆறத்தழுவிக் கொண்டார். அப்பாவும் மகனும் பழையபடி கட்டியணைத்து நெருங்குவதைப் பார்த்து சந்தோஷத்தில் ஆழ்ந்த ஜோதி அவர்களுக்கு நடுவில் வந்து நின்றாள்.
அந்த ஓரத்தில் சிபியும் இந்த ஓரத்தில் யாமினியும் நிற்க அந்த இனிப்பான நிகழ்வு ஒரு மின்னல் வெட்டு ஒளியினால் புகைப்படமாக்கி அந்த வீட்டுச் சுவற்றை அலங்கரித்தது.
எப்போதெல்லாம் ஆதி அவனுடைய அம்மா அப்பாவை நினைவில் வைக்கத் தவறுகிறானோ அப்போதெல்லாம் யாமினி இதைக் கூறி அவனுக்கு நியாபகப்படுத்துவாள்.
“ஜோதா அக்பரோட உன்னதமான காதலுடைய உச்சகட்ட பெருமை சிபி பிறந்தது அல்ல. யாமினி, ஆதின்ற ரெண்டு ஆதரவில்லாத உயிர்களுக்குக் கிடைத்திருக்கின்ற அற்புதமான வாழ்க்கைதான்” இதைச் சொன்னவுடனே மீண்டும் தெளிவான் ஆதி. கூடவே அவனுடை முகமும் மாறிவிடும். அவனை சமாதானம் செய்ய “சிபிய அமேசான்ல இருந்து வாங்கல, நாங்க எல்லாரும் சேர்ந்து உன்னதான் அமேசான்ல இருந்து ஆர்டர் பண்ணி வாங்கிருக்கோம் “ என்று சொல்லி முத்தமிட்டு ஆற்றுவாள்.
அவனும் மனதின் பாரம் குறைந்து சிரித்து, அன்று அப்பாவின் கையில் இருந்து அம்மாவைப் பார்த்ததைப் போலவே மீண்டும் குழந்தையாவான்.
காதலின் அற்புதமே பிடிமானம்தானே. அந்தப் பிடிமானம் நினைக்கவியலா சக்தியைக் கொண்டு புதுப்புது அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கும். ஜோதா அக்பரின் காதல் யாமினி மற்றும் ஆதியின் வாழ்க்கைக்கும் காதலுக்கும் பிடிமானமாக மாறி… பிரபஞ்சத்தை மீறிய சக்தி ஏதோ ஒன்றினால் அவர்களுடைய வாழ்க்கையை திண்ணத் திண்ணத் திகட்டாத காதலால் எழுதிக் கொண்டே இருந்தது… இருக்கிறது… இனிமேலும் இருக்கும்.
♡ சுபம் ♡