Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் - 18♡
அடுத்து என்ன நடந்ததென்று நாளை வீடியோவில் பார்க்கலாம் என்று சொல்லிக் காணொளியை முடித்தான் ஆதி. அன்றைய நாளுக்கான வேலையை சிறப்பாக செய்து முடித்துவிட்டு, யாமினிக்கு குட் நைட் மெசேஜ் செய்துவிட்டு எந்த வித மனக்கவலையும் இன்றி நிம்மதியாக உறங்கச் சென்றான் ஆதி.
ஆதி இறக்கி வைத்ததை விட அதிக கனத்தை ஜோதி சுமக்கிறாள் என்று ஆதிக்குத் தெரியாது.
மயக்கத்தில் இருந்து எழுந்து தன் கனவனின் வருகைக்காக காத்திருந்த ஜோதி இழப்பினை நினைத்துத் துடிதுடித்தாள். அவள் தவிப்பை நீட்டிக்கும் வகையில் தன் கனவனும் “நான் வர கொஞ்சம் லேட் ஆகும்மா. நீ சாப்பிட்று வெயிட் பண்ணாத “ என்று அழைத்துச் சொல்லிவிட்டார்.
செய்வதறியாது இருந்த ஜோதி, யாமினியையும் சிபியையும் சாப்பிட வைத்து உறங்கச் சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள். அவர் சொன்னதை விட ஒரு மணி நேரம் தாமதமாகவே வந்தார்.
வீட்டிற்குள் நுழையும்போதே, அவர் முகத்தில் ஜீவன் இல்லை. பிரச்சனையில் சிக்கியது போன்ற படபடப்பில்தான் வீடு வந்து சேர்ந்தார்.
அவரிடம் சொல்ல இது சரியான சுழலா ? இல்லையா? என்ற சந்தேகத்திலே அவருக்கு இரவு உணவு பறிமாறினாள்.
“நீ சாப்பிட்டியா? “
“சாப்பிட்டேங்க “
“பசங்க? “
“அவங்க சாப்பிட்டுத் தூங்கிட்டாங்க “
“ம்ம்ம் சரி. ஆதி? “
“ஃபோன் பண்ணான் பேசுனேன் “
“சரிமா “
இருவரும் தனிமையில் இருக்கும் போது ஆசையோடு கதை கதையாய்ப் பேசும் ஜோதியிடம் இருந்து கேள்விக்கு மட்டும் கிடைக்கும் பதிலை வைத்து ஏதோ நடந்திருக்கிறது என்று கணித்தார்.
அவளிடம் கேட்டால் உடனே சொல்லிவிட மாட்டாள். அதே நேரத்தில் எதையும் அவரிடமிருந்து அவளுக்கு மறைக்கத் தெரியாது என்று ஜோதியின் கணவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் எதையும் கேட்டுக் கொள்ளாமல் கிடப்பில் தள்ளினார்.
அவர் உணவு உண்ணு முடித்ததும் இருவரும் உறங்கச் சென்று விட்டார்கள். பெரும்பாலன இரவில் பெரிய இடைவெளியில் கட்டிலின் ஓரங்களில் படுத்திருக்கும் இருவரும் தங்களின் பழைய காதல் நினைவுகளால் நெருங்குவார்கள். அப்படியான இரவாக அன்று இல்லை. இருவருக்கும் இடையே அமைதி மட்டுமே நிரம்பி வழிந்தது.
விளக்கை அணைத்து அரை மணி நேரம் கழித்தும் ஜோதியின் கைவளையல் சத்தம் அவரின் காதுகளில் ஏதோ சோக செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த பாஷை அவருக்கு மட்டும்தான் புரியும்.
கண்ணீரால் தலையணையை நினைத்துக் கொண்டிருந்த ஜோதி வெளிச்சம் பட்டதும் கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். தன் கணவன் கையில் தட்டுடன் நிற்பதைக் கண்டாள். அடக்கி வைத்த கண்ணீர் மீண்டும் விடுபட்டு கண்ணம் வழியாக வழிந்தது.
“பசியோட படுத்தா உன் உடம்பு தாங்காது. எதுவும் பேசாம சாப்பிடு முதல்ல “ என்று சொல்லி தன் கையால் ஊட்டினார். வாயில் வைத்த உணவு முள்ளாய் தொண்டையை குத்தி உள்ளே செல்ல மறுத்தது, போதும் என்றாள். சாப்பாட்டு விஷயத்தில் அவள் என்ன பிடிவாதம் செய்தாலும் அவளது கணவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அதனால் வேறு வழியில்லாமல் சாப்பிட்டு முடித்தாள்.
“சொல் பேச்சே கேக்க மாட்டின்ற வர வர. உனக்குதான் உடம்புல ஆயிரத்தெட்டு பிரச்சன இருக்குல. உனக்கு ஒவ்வொரு முறையும் தடவிக் கொடுத்து சொல்லிகிட்டே இருக்கனுமா?. குழந்தையா நீ?. சாப்பிடாம இருக்குற அளவுக்கு அப்படி பெரிய விஷயம் நடந்துருச்சு?"
“ஒன்னும் இல்லங்க நீங்க வந்த உடனே விஷயத்த உங்க கிட்ட சொல்லிடனும்னு காத்திருந்தேன். ஆனா நீங்க வழக்கத்த விட லேட்டா வந்தது மட்டுமில்லாம பாக்க ரொம்ப டென்ஷனா வேற தெரிஞ்சீங்க. அதான் நான் எதுவும் காட்டிக்காம விட்டுட்டேன் “
“என்ன காட்டிகல?. நீ சத்தமில்லாம அழுகுற அழுக என் காத கிழிக்குது ஜோதி. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நம்ம ஜிம்முக்கு புது மிஷன்ஸ் கொஞ்சம் வாங்க வேண்டி இருக்குனு சொன்னேன்ல அதப் பத்திதான் சுந்தர் கிட்ட பேசிட்டு இருந்தேன். அவன் சில கம்பெனி ஃபோன் நம்பர் கொடுத்தான். அதான், கால் பண்ணி பேசிட்டு வந்தேன். ரொம்ப நேரம் அதே சிந்தனைல இருந்துட்டு வந்ததாலதான் பாக்க உனக்கு அப்படித் தெரிஞ்சிருக்கு. நீ எதுவும் மனசுல எடுத்துக்காத”
“சரிங்க”
“ம்ம் சரி இப்போ சொல்லு உனக்கு என்ன பிரச்சனை? “
“இது பிரச்சன இல்லங்க பயம் “
“சரி ஏதோ ஒன்னு. விஷயத்த சொல்லு ஜோதி “
தலையணையின் மேல் இருந்த செல்ஃபோனை எடுத்து ஆதி நடத்தும் யூடியூப் சேனலைத் திறந்து தன் கணவனின் கையில் கொடுத்துப் பார்க்கச் சொன்னாள் ஜோதி. அவரும் பயம் கலந்த ஆர்வத்தோடு ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு சில மணி நேரம் கழித்து ஜோதியைப் போலவே சுருண்டு மடிந்தார். கை நடுங்கி செல்ஃபோன் கீழே விழுந்தது. ஆதி இரண்டாம் நாள் பதிவேற்றிய காணொளி அவர்களது அறையில் சத்தமாக ஒளித்துக் கொண்டிருந்தது. அந்த சத்தத்தை விட அவர்களது மௌனமான அழுகுரலின் சத்தம் அழுத்தமாக இருந்தது.
தங்களது வலியைப் பேசித் தீர்க்க வார்த்தைகளின்றி தவித்த இருவரும் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு கண்ணீர் சிந்தினார்கள். “இந்தக் கதை முடியும் போது ஆதி நம்மல விட்டு போயிருவானாங்க? “ என்று உருக்கமாக கேட்டாள் ஜோதி.
“பைத்தியக்காரி மாதிரி பேசாத. அவன் நம்ம புள்ள. நம்மள விட்டு எங்கையும் போக மாட்டான் “
“எனக்கு பயமா இருக்குங்க “
“சரி அந்த டைரி எப்படி அவனுக்கு கெடச்சது? “
“ அதாங்க தெரியல. பழைய வீட்டுல இருந்து இங்க மாறி வரும்போது காணாமல் போனது. எங்க வச்சேன்றதவே மறந்துட்டேன் “
“நம்ம இங்க வந்தே பத்து வருஷம் ஆகிருச்சே. இத்தன வருஷம் கழிச்சு எப்படி அவனுக்குக் கிடச்சது? “
“ஆதி ஒரு நாள் வந்து ஹாஸ்டல்ல நிறைய நேரம் சும்மாவே இருக்கேன். அந்த நேரத்த வீணாக்காம யூடியூப் சேனல் ஒன்னு ஸ்டார்ட் பண்றேன் அதுக்கு எனக்கு நல்ல ஸ்ட்ராங்கான கன்டென்ட் வேணும். நீதான் நிறைய கதை எழுதி வச்சிருப்பியே அத நான் யூஸ் பண்ணிக்குறேன்னு கேட்டான். நானும் சரி எடுத்துக்கோ பழைய பீரோலதான் எல்லாமே இருக்குனு சொன்னேன். எத எடுத்தான் என்னனு எனக்குத் தெரியாது. இப்போ பாத்த நெஞ்ச உலுக்குற மாதிரி உக்காந்து கத சொல்லிட்டு இருக்கான் “
“உன்னோட நோட் புக் எல்லாம் அடுக்கி வைக்கும் போது அதையும் அதுக்குள்ளயே வச்சிட்டு மறந்திருப்ப ஜோதி”
“இருக்கலாம்”
“சரி எதுவரைக்கும் அதுல எழுதியிருக்க? “
“சிபி பொறந்த வரைக்கும்தா எழுதியிருக்கேன். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் எழுதல. அப்புறம் வீடு மாறுனோம் நோட்டு காணம போச்சு “
“சரி ஜோதி நீ எதுக்கும் பயப்படாத. அதெல்லாம் அவன் கண்டுபுடிக்க மாட்டான் “
“இல்லங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உண்ம தெரிஞ்சா என் புள்ள மனசு என்ன பாடுபடுமோனு பயமா இருக்குங்க “
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ எதுக்கும் பயப்படாத. நான் பாத்துக்குறேன் “
தன் கணவன் கொடுத்த நம்பிக்கையிலும் ஆறுதலிலும் அன்று இரவு தீராத பயம் சற்று குறைந்தது. இருவரும் கண் மூடினார்கள். ஆனால் உறங்கவில்லை.
இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த கதை இப்போது மூன்றாவது ஆளாக ஆதிக்கும் தெரிய வந்தது இருவரின் மனநிலையையும் கடுமையாக பாதித்தது.
இந்தக் கதையின் பெரும் திருப்பு முனையே தான்தான் எனத் தெரியாமலே ஆதி இந்த உலகிற்கு கதை சொல்லிக்
கொண்டிருந்தான்.
அவன் நினைத்ததை விட வீடியோ மிகப் பிரபலமாக ஆரம்பித்தது. கருத்துப் பெட்டியில் விருப்பங்கள் அன்பு மழையாகப் பெய்து பெருகியது. ஒவ்வொரு நாளும் அவன் அடுத்த கதையை எப்படிக் கொண்டு செல்வான் என்கிற ஆர்வத்தில் பார்வையாளர்கள், அதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்கிறார் பதற்றத்தில் அவனின் பெற்றோரும் இருந்தனர்.
பார்வையாளர்கள் மத்தியில் ஆதியின் கதை சொல்லும் காணொளி மிகுந்த வரவேற்பைப் பெற, அவனுக்கு இருந்த ஆர்வம் பல மடங்காக உயர்ந்தது. வீடியோ போடுவதில் முன்பைவிட முனைப்புடன் இருந்தான். இதற்கிடையில் யாமினியை பெரிதாக கண்டுகொள்ளாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான்.
ஆதியின் வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தைபோல ஒரு இன்பமான வாழ்க்கைக்குள் நுழைந்த யாமினிக்கு, அந்த அன்பான குடும்பத்தின் மீது மரியாதை அதிகரித்தது. அந்த குடும்ப வாழ்க்கையில் அவளுக்குக் கிடைத்த மனநிறைவு, ஆதியை இன்னும் அதிகமாகக் காதலிக்க வைத்தது. அவளது அதிகபட்ச ஆசையே அவனுடன் ஒரு சில மணித்துளி செல்ஃபோனில் பேசுவதுதான். அந்த சந்தோஷத்திற்காக ஏங்கினாள்.
வகுப்பில் இருந்து விடுதிக்கு வந்ததும் அன்னைக்கான வீடியோவிற்குத் தேவையான கதைப் பகுதியை வாசித்துவிட்டு, இரவு உணவு முடிந்ததும் அம்மாவிற்கு அழைத்தான் ஆதி.
அம்மாவின் குரலில் இருக்கும் நடுக்கமும் பேச்சில் இருக்கும் மாற்றமும் அவனை அச்சுறுத்தியது.
“உடம்புக்கு எதுவும் முடியலைனா சொல்லிருமா... சொன்னா நாங்க வருத்தப்படுவோம்னு நெனச்சு மறைக்காத.அது பெரிய பிரச்சினையில முடிஞ்சிரும்”
“ஒன்னும் இல்லடா ஆதி. லேசா தல வலிக்குது அவ்வளவுதான்”
“தல வலிச்சா போய் படுக்க வேண்டியதுதான... ஏன் கிச்சன்ல நின்னுட்டு கஷ்டப்படுற?. ஒரு நாள் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா ஒன்னும் ஆகாது”
“யாமினி இருக்கும் போது ஏன்டா ஹோட்டல் சாப்பாடு சாப்பிடனும்.அருமையா சமச்சிட்டு இருக்கா.எனக்கு எந்த வேலையும் இல்ல. துணைக்காக நின்னிருக்கேன் அவ்வளவுதான். என் பாரதத்தை எல்லாம் பங்கு போட்டு சுமந்துட்டு இருக்காடா”
“வீட்டுக்கு வந்து ரெண்டு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள இவ்வளவு பாராட்டா?. நானும்தான் கிச்சன்ல உனக்கு ஹெல்ப் பண்ணிருக்கேன். என்னையப் பாராட்டி பேசிருக்கியா?. பதிலுக்கு தோசக் கரண்டியாலதான் நாலு அடி அடிச்சிருக்க “
“நீயும் யாமினியும் ஒன்னாடா?
"இல்லையா அப்போ?"
“இல்லவே இல்ல”
“ம்ம்ம் அப்போ வீட்ல நமக்கு மரியாத அவ்வளவுதானா?
“உனக்கெல்லாம் இதுவே பெருசுடா. சரி யாமினி கிட்ட பேசுறியா?”
“இல்லமா வேணாம்”
“சரிப்பா பாத்து கவனமா இரு. நாளைக்கு கால் பண்ணு”
“ம்ம்ம் சரிமா”
அம்மாவிடம் பேசிய பிறகு இரவு உணவு உண்ணச் சென்றான்.
தொடரும்...♡