- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
6
“நீங்கதான் அண்ணியா வரப்போறீங்கன்னு தெரிந்ததும் அவ்வளவு சந்தோஷம். வீட்டுல ஏமாற்று வேலை செய்தாலும், சாமியம்மா பற்றித் தெரிந்ததுன்னா கல்யாணத்தை மறுத்துருவீங்கன்னு அண்ணன் மேல் உள்ள நம்பிக்கையில் உண்மையைச் சொல்லலை அண்ணி. ஆனா, அண்ணா.. இப்படிச் செய்வாங்கன்னு எதிர்பார்க்கலை. எவ்வளவோ கெஞ்சினேன். நான் சொல்றதைக் காதுலயே வாங்கலை. எங்க வீட்டுக்குப் போகவே வெறுப்பாயிருக்கு அண்ணி. பேசாம எதாவது செய்துக்கலா...”
சட்டென்று அவள் வாய்மூடி, “என்ன பேசுற பவிக்குட்டி? நான் இருக்கும்போது இப்படி வாழ்க்கையை வெறுத்த மாதிரி பேசக்கூடாது. யார் இருந்தாலும் இல்லைனாலும் நான் இருக்கேன் உனக்கு” என்று அவளின் கண்ணீர் துடைத்தாள்.
“என் கூடவே இல்லையே அண்ணி” என்று தேம்ப,
பவானி பேசியதைக் கேட்டபடி நின்றிருந்த ராகினி, அவளருகில் அமர்ந்து கண்ணீர் துடைத்துத் தன் முகம் பார்க்க வைத்து, “உனக்குத் தங்க ஒரு வீடிருக்கு பவிமா. எத்தனையோ குழந்தைங்க இருக்க இடமில்லாமல் சொல்ல முடியாதக் கொடுமையை அனுபவிக்கிறாங்க தெரியுமா? வீட்டுல கொடுமைப்படுத்துறாங்கன்னு வெளிய போன பொண்ணுங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா? உன் மாமா லாயர்தான அவங்ககிட்டக் கேளு கதைகதையா சொல்வாங்க. இதுவரை நடந்ததை மாற்ற முடியாது. இனி எதாவதுன்னா நாங்க கேட்கிறோம். இனி இப்படிப் பேசக்கூடாது சரியா?” என்றார்.
“ம்.. சரிங்க அத்தை” என்று தலையாட்ட,
“குட் கேர்ள். சரி உன் அண்ணா அவ்வளவு கெட்டவரா?” என்றார் செந்தூரனைத் தெரிந்து கொள்வதற்காக.
“இல்லை.. இல்லை அத்தை. ரொம்ப நல்லவங்க. என் விஷயத்திலும் அண்ணி விஷயத்திலும்தான் சறுக்கிட்டாங்க. ஒருவேளை அம்மா சரியாயிருந்து, எங்களை அன்பா பார்த்திருந்தா பெண்களைப் பற்றிய புரிதல் இருந்திருக்குமோ என்னவோ! எங்க வீட்டுலதான் அதுக்கெல்லாம் வழி கிடையாதே. மத்தபடி எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. பழகிப்பார்த்தா உங்களுக்கேப் பிடிக்கும்” என்றாள்.
‘ம்க்கும்.. இங்க பேசவே சந்தர்ப்பம் கொடுக்குறதில்லையாம். இதுல பழகிப்பார்க்கணுமா.. அடப்போமா!’ என்றது அன்பழகியின் மனது.
“அண்ணி! என்ன செய்யலாம்?” என்று அன்பழகியின் எண்ணத்தைக் கலைக்க,
“இப்ப கேட் மூடியிருப்பாங்க. ம்..” என சில நொடிகள் கண்மூடி யோசித்தவள், சட்டென்று கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்து, “ஓகே மேம்” என்று வைத்து, மீண்டும் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்து மதியம் வரை விடுப்பு சொல்லிவிட்டு, “இந்தப் பிரச்சனையை முடிந்தளவு இன்னையோட முடிச்சிரலாம் பவிக்குட்டி. அந்தப்பொண்ணு எந்த டிபார்ட்மெண்ட்?” என்றாள்.
“எம்எஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் செகண்ட் இயர்”
“ஓ.. நீ?”
“பிசிஏ லாஸ்ட் இயர். பிசிஏ முடிச்சிட்டு பேங்கிங் எக்ஸாம் எழுதி, பேங்க்ல ஒர்க் பண்ணனும்னு ஆசை அண்ணி.”
“நல்ல விஷயம்தான் பவிக்குட்டி. சரி வா டிபன் சாப்பிட்டுக் கிளம்பலாம்” என,
“டிபன் வேண்டாம் அண்ணி. பசியில்லை” என்றாள்.
“ப்ச்.. குட்டின்னு கூப்பிடுறதால இடுப்புல வச்சி ஊட்டிலாம் விடமுடியாது. ஒழுங்கா சாப்பிட வா” என்றழைத்து காலை உணவு முடித்துத் தாயிடம் சொல்லி வெளியே வருகையில், எதிரே வந்த அதியன் பவானியை முறைத்துக் கொண்டே வர, அவன் பார்வையின் வெப்பம் உணர்ந்து தலைகுனிந்து அண்ணியவளை ஒட்டி நின்று கொண்டாள்.
“அதி எதாவது அர்ஜெண்ட் ஒர்க் இருக்கா?”
“இல்லைக்கா” என்றானவன் முறைப்பை விடாது.
“அப்ப டிபன் முடிச்சிட்டு வா. நாங்க வெய்ட் பண்ணுறோம்” என்கையில், “அண்ணி உங்க தம்பி எதுக்கு?” என்று அன்பழகிக்கு மட்டும் கேட்கும்படி கேட்க,
“எல்லாம் காரணமாதான்மா. நீ எதையும் கண்டுக்காத. நான் பார்த்துக்குறேன்” என்றாள்.
“என்ன வேலையிருக்கு?” என்ற அதியனுக்கு ஏதோ பிரச்சனையென்று புரிந்தாலும் பவானிக்காகச் செல்வதில் விருப்பமில்லை. அதனாலேயே இல்லாத வேலையை இருக்கிறது என்றான்.
தம்பியின் மனம் புரிந்தவளோ, “பரவாயில்லைடா. சாப்பிட்டுட்டு வா. அதை முடிச்சிட்டே போகலாம்.” ‘நான் உன் அக்காடா’ என்பதாய் அவனைப் பார்க்க, அவளை முறைத்து முணுமுணுத்துச் சென்றவன் பத்து நிமிடத்திற்கெல்லாம், “எங்க போகணும்?” என கடுகடுத்தபடி வந்து நின்றான்.
“முகத்தைச் சிரித்த மாதிரி வைடா தம்பி” என்று தன் இருவிரல் கொண்டு அவன் வாயைத் தொடப்போக, “ஹையோ அக்கா நான் சிரிச்சிட்டேன் போதுமா” என்று கேலியாகச் சொன்னவன் உண்மையிலேயே சிரித்துவிட்டு, காரை எடுக்க ஒரு வித்தியாசமான ஜந்துவைப்போல் அவனையே பார்த்திருந்தாள் பவானி.
கல்லூரி வாசல் சென்று வாட்ச்மேனிடம் விவரம் சொல்ல, பிரின்சிபால் தனக்கும் போன் செய்ததைச் சொல்லி கார் உள்ளே செல்ல கேட்டைத் திறந்துவிட்டார்.
“அக்கா இரண்டு நாள் முன்ன இங்க வந்திருந்தேன். அப்பாதான் லேண்ட் விஷயமா பார்த்துட்டு வரச்சொன்னாங்க. ஆமா, என்ன பிரச்சனை?” என்றான்.
“சீனியர் ராக்கிங்டா. அது கொஞ்சம் எல்லை மீறிப்போறதா அழுறா. தேர்ட் இயர் படிக்கிற பொண்ணைக் காரணமே இல்லாம ஒருத்தர் ராக்கிங் பண்றது நல்லதாப்படலை. அந்தப் பொண்ணுகிட்ட வேறெதோ பிரச்சனை இருக்கும் போல” என்றாள்.
“அதுக்கு நீ ஒரு ரௌடி போதாதா. நான் எதுக்குக்கா?”
“லா பாய்ண்ட்ஸ் பேசி அந்தப் பொண்ணை லாக் பண்ண ஆள் வேணும்னுதான் உன்னைக் கூட்டிட்டு வந்தேன். அப்பா அம்மா உன்னைப் பெத்து லா படிக்க வைத்தது எதுக்குன்னு நினைச்ச? எனக்காகத்தான்” என்றாள் கெத்தாக.
“அடப்பார்றா! ஹலோ மேடம் மூத்தவங்கதான் இளையவங்களைப் பார்த்துக்கணும்.”
“வேணும்னா அப்பாகிட்டக் கேட்டுப்பாருடா” என்றாள் சவாலாக.
“அதுக்கு உன்கிட்டேயே சரண்டராகிரலாம்” என்றானவன்.
ஏனோ அந்த அக்கா தம்பி விளையாட்டை ஆசையாகப் பார்த்திருந்தாள் பவானி. ‘ஏன் தன் அண்ணன் இப்படியிருக்கவில்லை’ என்ற ஏக்கம் எழாமலில்லை. இதனாலேயே அண்ணியவளை இன்னும் பிடித்தது.
கல்லூரி முதல்வர் உதவியுடன் அப்பெண் வரவழைக்கப்பட்டு தனியறை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட, உள்ளே வந்தவர்களைக் கண்ட அப்பெண் முதலில் அதிர்ந்து பின் அதியனையே விழியகற்றாது பார்த்திருந்தாள்.
மூவரும் அமர்ந்து அவளையும் உட்காரச்சொல்லி அமர்ந்ததும், “உன் பிரச்சனை என்ன ரசிகா?” என்றாள் அன்பழகி.
அவள் பார்வையோ அதியனையும் அவனருகில் அமர்ந்திருந்த பவானியையும் வெறிக்க, காரணம் புரியாது பயத்தில் எழுந்து அண்ணியவள் அருகில் சென்றமர்ந்து அவள் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“ஏன் பயப்படுற நீ? உன் பயம்தான் அவளோட மூலதனம். வருஷக்கணக்கா ஒருத்தி மிரட்டுறாள்னு யார்கிட்டேயும் சொல்லாம இருந்திருக்க? உன் அண்ணனுக்கு இருக்கு” என்று கணவனையும் திட்டி, “நீ சொல்லு ரசிகா? என்னதான் பிரச்சனை உனக்கு?” என்றாள் அவள் கண்பார்த்து.
“இவன்தான் பிரச்சனை? இவனால இவளும் பிரச்சனை” என்றாள் பட்டென்று.
“என்னது நானா? ஹலோ மேடம் என்ன உளர்றீங்க? உங்க பிரச்சனையில் நான் எங்க வந்தேன்? இன்னைக்குதான் உங்களை முதல்முறையா பார்க்கிறேன்” என்றான் வந்த கோபத்தை அடக்கி.
“நீங்க பார்க்கலை. நான் உங்களைதான் நாலைந்து வருடமா பார்த்துட்டிருக்கேன்” என்றவள் குரலில் ஒருவித பரவசம்.
“என்னையா? என்ன விளையாடுறீங்களா?” என்று அதட்ட,
சற்றே பயம் எழுந்த போதும், “ஆமாம். நீங்க என் அண்ணன் ராகேஷோட ஃப்ரண்ட்” என்றாள்.
“ராகேஷ் சிஸ்டரா நீங்க? வீட்டுக்கு வந்திருந்தப்ப கூட உங்களைப் பார்த்ததில்லையே?” என்றான் யோசனையாக.
“அதனாலதான் நான் உங்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். முதல்முறை அண்ணனோட வீட்டுக்கு வந்திருந்தீங்க. எப்படிச் சொல்றது? லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் சொல்வாங்கள்ல அப்படி. நீங்கதான் பார்க்கவேயில்லை. எங்கண்ணன்கிட்ட சும்மா விசாரிக்கிற மாதிரி உங்களைப் பற்றிய நியூஸ் கலக்ட் பண்ணிக்குவேன். நீங்க இரண்டு பேரும் வெளிய போறதா ப்ளான் பண்ணியிருந்தா, அதை அண்ணன் மூலம் தெரிஞ்சிக்கிட்டு உங்களுக்கு முன்ன நான் அங்கயிருப்பேன். அப்படி வந்ததுதான் திநகர்ல இருக்கிற அந்த ஜவுளிக்கடை!”
“தீபாவளி நேரம் அது. அண்ணனைத் தொடர்ந்து போனப்ப, இவங்க இரண்டு பேரும் பப்ளிக்ல கட்டிப்பிடிச்சிட்டு நின்னுட்டிருந்தாங்க” என்றாள் கோபமாய்.
“என்னது?” என்று மூவரும் அதிர்ந்து கேட்க,
“என்ன எதுவும் தெரியாத மாதிரி நடிக்குறீங்க? பட்டப்பகல்ல சுற்றிலும் பல பேர் இருக்குற இடத்தில் கட்டிப்பிடிச்சிட்டு நின்னதை நானே பார்த்தேன். இல்லைன்னு சொல்லச் சொல்றீங்களா?” என்றாள் கோபம் குறையாது.
“சீ மிஸ்.ரசிகா. நீங்க எதோ மிஸ்அண்டர்ஸ்டாண்ட் பண்ணிருக்கீங்க நினைக்குறேன். இந்தப் பொண்ணை என் அக்கா கல்யாணத்துக்கு முதல்நாள்தான் பார்த்தேன். அதுக்கு முன்ன பார்த்ததேயில்லை” என்றான்.
“அப்படியா?” என நக்கலாகக் கேட்டு, தன் கைபேசியை எடுத்து அதனுள்ளே தனக்குத் தேவையானதைத் தேடி எடுத்து அதை அவர்களிடம் காண்பித்தாள் ரசிகா.
அவள் சொல்வது உண்மையென்பதை அப்புகைப்படம் காட்டியது. இருவரும் நெருக்கமாக நிற்க, அதியன் பவானி முதுகில் கைவைத்து அணைத்தபடி நின்றிருந்தான்.
“அண்ணி! இல்லண்ணி. நா..நான்..” என திணற, அன்பழகிக்கு பவானி சொன்ன அந்த தீபாவளி சம்பவம் நினைவு வர, “அப்ப இதைப் பார்த்துதான் உன் சித்தி சூடு வச்சிருக்காங்க போல” என்றாள்.
“என்னது சூடா?” திகைத்துப்போய் பவானியைப் பார்த்தான் அதியன்.
“ம்.. இருக்கும் அண்ணி. அன்னைக்கு நிறைய கூட்டம். அப்ப யாரோ எதோ கேட்டாங்கன்னு எதோ சொல்லப்போகையில் ஒரு கூட்டம் வந்து இடிச்சதுதான் தெரியும். யாரோ என்னைப் பிடிச்சிக்கிட்டாங்க. பின்ன கூட்டம் அதிகமாயிருக்கு பார்த்துப் போங்கன்னு சொல்லிட்டுப் போனாங்க. என்னைப் பிடிச்சது ஆணா பொண்ணான்னு கூட பார்க்கலை அண்ணி. சித்தி பற்றிதான் உங்களுக்குத் தெரியுமே. இதைப் பார்த்துதான் அவ்வளவு பேசியிருக்காங்க போல” என்றாள் தன் விளக்கமாக.
“அக்கா! அன்னைக்கு மென்ஸ்வேர் எந்த ப்ளோர்னு தெரியாம, அங்க நின்னுட்டிருந்த ஒரு பொண்ணுகிட்ட கேட்டேன். ஒரு கும்பல் அந்தப் பொண்ணை இடிச்சதுல பேலன்ஸ் மிஸ்ஸாகி என்மேல சாய்ஞ்சிட்டாங்க. அந்நேரம் அந்த கூட்டத்துகிட்டயிருந்து ப்ரொடக்ட் பண்ண மட்டும்தான் தோணிச்சி. சோ சேஃப் பண்ணினேன். அது தவிர்க்க முடியாத சமயத்துல நடந்தது. நானுமே அவங்க முகம் பார்க்கலை. இதுக்காகவா?” என்றான் சூடு போட்டதை எண்ணி.
“இது மட்டுமில்லை. பொங்கலுக்கு மறுநாள் மெரினாவுல ஒரு கடையில் பக்கத்துல பக்கத்துல நின்னு சிரிச்சிட்டிருந்தாங்க. நான் இவர்கிட்ட ஹாய் சொன்னப்ப கண்டுக்காம, இவள்கிட்ட எதையோ காண்பித்து இது நல்லாயிருக்கு. எடுத்துக்கலாம்னு சொன்னார்” என்றாள் ரசிகா.
“ஏங்க தற்செயலா நடந்ததுக்கு இப்படி ஒரு விளக்கமா?” ‘நாங்க சந்திச்சது எங்களுக்கேத் தெரியாதேடா’ நிலைதான் அதியன் பவானிக்கு.
“ஓ.. கட்டி பிடிச்சிப்பீங்க. பக்கத்துல உரசுற மாதிரி நிற்பீங்க. ஆனா, ஒருத்ததை ஒருத்தர் தெரியாதா? என்னோட கோபமெல்லாம் இவள்கிட்டதான். எப்படி உங்களோட பழகலாம்?” என்றாள் ஆத்திரமாக.
‘லூசா இவள்’ என்பது போல் மூவரும் பார்த்திருக்க,
“அடிக்கடி உங்ககிட்ட பேசக்கூடாதுன்னு வார்ன் பண்ணியும் இரண்டு மாசம் முன்ன பைக்ல இவரோட போனதைப் பார்த்தப்ப கோபம் அளவில்லாமல் வந்தது” என்று அடுத்து அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து எழுந்தேவிட்டனர்.
“ஆளில்லாத நேரமா பார்த்து பைக்ல என்னை மறைத்தபடி நேரா வந்து இவளை இடிச்சித் தள்ளிட்டேன். தூக்கிவிடக்கூட ஆளில்லாம கத்திக்கிட்டிருந்தா” என்றவள் கண்களில் கொலைவெறி கொட்டிக்கிடந்தது.
“அச்சோ! அப்படில்லாம் இல்லை அண்ணி. ப்ளீஸ் என்னைத் தப்பா நினைக்காதீங்க. நான் அப்படிப்பட்ட பொண்ணில்லை அண்ணி.” எங்கே அண்ணியவள் தன்னைத் தவறாக நினைத்துவிடுவாளோ என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.