- Joined
- Aug 31, 2024
- Messages
- 916
- Thread Author
- #1
5
“என் மகன் என்ன சொல்றான் ராஜி?” ஷோஃபாவில் சாய்ந்தமர்ந்து காப்பியை அருந்தியபடி கேட்டார் ராஜேஸ்வரி.
“எப்பவும் போலதான்கா வீட்டுக்கு வர்றான் போறான். எப்ப வர்றான், எப்பப் போறான்னே தெரியலை.”
“ஓ.. துக்கம் கொண்டாடுறார் போல. அவன் வர்ற நேரத்தைக் கணக்கிட்டு மெல்ல அவன் பொண்டாட்டியை விவாகரத்து செய்யச் சொல்லிப்பார்” என்றார்.
“ஐயையோ! என்னக்கா நீ? அவன் பக்கத்துலயே போக முடியாதுக்கா. இந்தக் கல்யாணத்துல நாம செய்த வேலையில் முகத்தைக் கூடப் பார்க்கமாட்டான். இதுல எங்கிருந்து பேசுறது?” என்றார் அலறலாக.
“பேசிதான் ஆகணும் ராஜி. இல்லைன்னா அந்த அன்பழகி திரும்பவும் அவன் வாழ்க்கையில் வந்திருவா. அது இந்த ஜென்மத்துல நடக்கவே கூடாது” என்றவர் கண்களில் அத்தனை ஆத்திரம்.
“அப்படின்னா வேற ஏடாகூடமான ஆள் யாருக்காவது அந்தப் பொண்ணைக் கட்டிக்கொடுக்கிற மாதிரி ப்ளான் செய்திருக்கலாம்ல அக்கா. நம்மதான் செய்தோம்னு தெரியாமலே செய்துட்டுப் போயிருக்கலாமே. இப்பப்பாரு நம்ம பையனைப் ப்ளாக்மெய்ல் செய்து அவன் மொத்தமா நம்மளை வெறுத்துட்டான்” என்றார் ராஜலட்சுமி.
“அதைப்பற்றிலாம் கவலையில்லை ராஜி. அம்மான்ற மூன்றெழுத்தை வச்சி சுலபமா அவனை மாற்றி, எதையாவது செய்து என் பக்கத்துல கொண்டு வர முடியும். என்னை மீறி அவன் எதையும் செய்ய முடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். அந்த அன்பழகி கஷ்டப்படுறதை பக்கத்துல இருந்து பார்க்கணும்னு நீண்ட யோசனைக்குப் பிறகுதான் செந்தூக்கு முடிச்சேன். அவளுக்கு இன்னும் இருக்கு” என்றார் வன்மமாக.
“என்னவோ சொல்ற போ. இந்தச் சின்னவள் வேற அண்ணி அண்ணின்னு உருகுறா. நம்ம மேல உள்ள பயம் விட்டுருச்சோ தோணுதுக்கா” என்று அவள் பேசியதைக் கூறினார் ராஜலட்சுமி.
“சாது மிரண்டால் காடு கொள்ளாதாம் ராஜி. சாது எப்பவும் சாதுவாயிருக்கணும். அது மிரளாதபடி நாமதான் பார்த்துக்கணும்” என்றவர், “அப்புறம் அந்தப் பையனை யாராலும் கண்டுபிடிக்க முடியாதுல்ல?” என்றார்.
“அதுக்கு சான்சே இல்லைக்கா. உன் கொழுந்தன் பக்காவா செய்திருக்கார்” என,
“சரி நீ டைவர்ஸ் பற்றி அவன்கிட்ட பேசிப்பாரு. என்ன பேசினாலும் அக்காவுக்காகப் பொறுத்துக்கோ” என்றார் தங்கையிடம்.
“உனக்காக பேசுறேன்கா” என்ற ராஜலட்சுமிக்கு அக்காவின் மேல் கண்மண் தெரியாதளவு பாசம். அதை தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ராஜேஸ்வரி. ராஜலட்சுமியின் கணவர் சேகர் அப்படியிருப்பாரா?
இரவு வீடு வந்த செந்தூரனை நிறுத்தினார் ராஜலட்சுமி. சீக்கிரமே உணவருந்தி தன் அறைக்குச் சென்றுவிடும் பவானியும் அங்குதான் இருந்தாள்.
மாலை வந்ததிலிருந்து சித்தி சித்தப்பா இருவரும் குசுகுசுவென்று ஏதோ பேசிக் கொண்டிருப்பது கண்ணில்பட, அண்ணன் திருமணத்திற்கு முன் இப்படி அவர்கள் பேசியது புரிய, ஏதோ ஒன்று நடக்கப்போகிறதென்று உள் மனம் உணர்த்தியதில், சித்தியிடம் ஏதேதோ காரணம் சொல்லி ஹாலிலேயே அமர, அண்ணனை அவர் நிறுத்தவும் மனம் படபடக்க ஆரம்பித்தது.
“என்னன்னு சொல்லுங்க?” என்றான் மொட்டையாக.
“உன் கல்யாணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாசமாகுது செந்தூ. அந்தப் பொண்ணோட வாழ்ற ஐடியா இருக்குதா?” என ஆழம் பார்த்தார்.
“இதுக்குப் பதில் சொல்லியே ஆகணுமா?” என்றான் கிண்டலாக.
“சொன்னால்தான் அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்” என்றார் ராஜலட்சுமியும் விடாது.
“எதோ ஒரு முடிவோடதான் உங்கக்கா உங்களை அனுப்பியிருக்காங்க. சொல்லுங்க கேட்போம்?” என்றான் அலட்டலில்லாமல்.
“அதான் கேட்டேனே?” என்றார் அவரும்.
“அந்தப்பொண்ணு எப்படி வந்தாள்னு தெரிஞ்சும் அவளோட வாழ்றது சாத்தியமா? அதெ...”
“அப்ப விவாகரத்து செய்திரு” என்றார் பட்டென்று.
உள்ளுக்குள் அதிர்வு எழுந்தபோதும், “என்ன சொல்ல வர்றீங்க?” என்றான் நிதானமாக.
பவானியோ திகைத்துப்போய் அவர்களையே பார்த்திருந்தாள்.
“அவளை விவாகரத்து பண்ணிட்டு வேறொரு பெண்ணை கல்யாணம் செய்துக்கோ” என்றார் வேகமாக.
“ஏன் அடுத்த பொண்ணை உங்கக்கா பார்த்துட்டாங்களா?” என்றான் கேலியாக.
“இல்லடா. உனக்கே யாரையாவது பிடிச்சிருந்தாலும் சரிதான். அந்த அன்பழகி மட்டும் வேண்டாம்” என்றார் தாராள மனதாய்.
‘இவர்களே கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்து வைத்து, இவர்களே அவளை வேண்டாம் என்று சொல்ல என்ன காரணமாகயிருக்கும்? அந்தப் பொண்ணுக்குத் திடீர்னு ஏன் என்னைப் பிடிக்கலை?’ என்ற மனதிடம், ‘அவளெங்கே உன்னை வேண்டாமென்றாள். நீதானே அவளை விரட்டியடித்தாய்’ என்றது அறிவு.
இத்தனை நாட்கள் இல்லாத ஏதோ ஒரு நெருடல் மனதினுள். இத்தனை நாள்களும் தாய் மீதுள்ள கோவத்தில் நடந்த திருமணத்தை விபத்து போல் ஒதுக்கியிருந்தவனுக்கு, அத்தனை பிரச்சனைகளுக்குப் பின்னும் தன் கண்பார்த்து வாழக் கேட்டவளை குறை சொல்லத் தோன்றவில்லை. மனதினுள் இனம் புரியா இம்சை ஒன்று குடைய ஆரம்பித்தது செந்தூரனுக்கு.
அவன் அமைதியைக் கண்ட ராஜலட்சுமி, “என்ன செந்தூ? எதாவது பதில் சொல்லு?” என்றார்.
அங்கோ கோவத்தில் நின்றிருந்த பவானியின் பொறுமை பறக்க, அவளின் அண்ணனோ, “டைவர்ஸ்தான பண்ணிரலாம். அடுத்த பொண்ணும் நீங்களே பார்த்திருங்க” என்று அவர்களின் செயல்களை அறிந்துகொள்ள சம்மதித்து, சம்மதித்ததை மறந்தே போயிருந்தான்.
“அன்பு அண்ணி இடத்துல எவளையாவது கொண்டு வரணும்னு நினைச்சீங்க அப்புறம் இந்த வீட்டுல நடக்காததெல்லாம் நடக்கும். உங்களுக்கும் ஒரு தங்கை இருக்கேன்றது ஞாபகமிருக்கட்டும். அண்ணி மாதிரி ஒருத்தர் உங்களுக்குத் தேடினாலும் கிடைக்கமாட்டாங்க. அடுத்தவங்க சொல்லைக் கேட்டு ஆட்டம் போடாதீங்க. அப்புறம் பெயரளவிற்கே ஒட்டிட்டிருக்கிற அண்ணன் தங்கை உறவுதான் முதல்ல ரத்தாகும்” என்று கோவத்தைக் கொட்டிய பவானி தன் அறைக்குச் செல்ல,
“ஏய் என்ன வாய் நீளுது. கல்யாணம் முடிஞ்சதிலிருந்து உன் பேச்செல்லாம் ஒரு மார்க்கமா வருது? அப்புறம் என்னோட தண்டனை வேற மாதிரியிருக்கும். எதிர்த்தா பேசுற நீ” என்று கடுமையான வார்த்தை கொண்டு நேரடியாகவே மிரட்ட ஆரம்பித்தார் ராஜலட்சுமி.
அப்பொழுதாவது அண்ணன் தனக்காகப் பேசுவான் என்று பார்க்க, அவனோ அண்ணன், தங்கை உறவு ரத்தாகிரும் என்ற வார்த்தையிலேயே அவளை வெறித்தாற்போல் நின்றுவிட்டான்.
அண்ணனின் ஒட்டாத்தன்மை தெரிந்ததுதானே என்று அவனை அலட்சியம் செய்து, சித்தியை வழியிலிருந்து விலக்கிவிட்டு உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டாள்.
அதில் கோவம் வரப்பெற்ற ராஜலட்சுமி, “ஏய் பவா! வெளியில வாடி” என்று கதவைத் தட்ட, அதில் உணர்வு வந்தவன் என்னவென்று வர,
“அதான் நீங்க சொல்றதையெல்லாம் கேட்டு, பத்துக் கல்யாணம்னாலும் பண்றதுக்கு ரெடியா தாராள மனசுள்ளவர் இருக்காருல்ல அவர்கிட்டப் பேசிக்கோங்க. எனக்கு யாருமே வேண்டாம். என்னைத் தனியா விடுங்க” என உள்ளிருந்து கத்தினாள்.
அதிர்வென்றால் அப்படியொரு அதிர்வு இருவருக்கும். தங்கை வீட்டில் அவள் இருப்பதே தெரியாது. வாய் பேசி பார்த்ததேயில்லை செந்தூரன். வாய் பேச வீட்டில் அனுமதியில்லை என்பது அவன் அறியாததல்லவா!
தந்தை இறந்தபின் சித்தியின் ஆதிக்கத்தில் வீடு வரவும் தங்கையின் குரல் கேட்பதே அரிது. தாய் தகப்பனில்லாத தங்கையைப் பார்த்துக்கொள்ள தன்னால் முடியுமா? என்ற கேள்வியில் பிடிக்காத தாயின் தங்கையான ராஜலட்சுமி வரவை மறுக்க முடியவில்லை. தங்கைக்காகதான் அவர்களது குடும்பத்தை உள்ளே அனுமதித்தான்.
முதலில் தனக்கும் பிடித்திருந்த சித்தி உறவு, சித்தியினால் தாய் உறவு வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்து பிள்ளைகளை உரிமை கொண்டாட, சித்தி குடும்பத்தையே வெளியேற்றும் கோவம் எழுந்தது செந்தூரனுக்கு. அப்பொழுதும் சிறு பெண்ணான தங்கை கண்முன் தோன்ற, அவர்களிடம் தங்கையின் பொறுப்பை முழுதாகக் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டான். படித்து முடித்த பின் வேலையிலும் பிரச்சனை வர, தனக்கொரு உலகம் அமைத்து அதில் அவன் ராஜாவாகிவிட்டான்.
எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, இன்றோ ஏதோ... இல்லையில்லை எல்லாமே தவறாகப்பட்டது.
‘சாது மிரள ஆரம்பித்துவிட்டதோ?’ என்ற பயம் ராஜலட்சுமிக்கு என்றால், ‘தங்கை தன்னைவிட்டுப் போய்விட்டாளோ’ என்ற பயம் செந்தூரனுக்கு.
“பவி” என்று பலமுறை அழைத்துப் பார்த்தும் பதிலில்லாமல் போக சோர்ந்து போனவன், மொட்டை மாடியில் தனக்காகத் தானே செலவு செய்து கட்டிய அந்த ஒற்றைப் படுக்கறையுடனான வீட்டினுள் நுழைந்து கட்டிலில் படுத்து விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான். மனைவியின் விஷயம் ஓரம்போய், தங்கையின் நினைவே அவனை ஆக்கிரமித்தது. இதில் விவாகரத்து செய்வதாக கோவத்தில் விளையாட்டாகச் சொல்லிய வார்த்தைகளை மறந்திருந்தான். விளைவு!