- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
4
இதுவரையிலும் அவன் தங்கை சாதனா தன் கோபத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு முன் சுபாவிற்கு விபத்து ஆனதைக் கேள்விப்பட்டதும், தன் அண்ணனின் அழகிற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒருத்தி மனைவியாக வந்திருக்கிறாள் என்ற எண்ணம். தன் அண்ணனுக்கென்று ஒரு கனவுப் பெண்ணை உருவகப்படுத்தி, இப்படித்தான் வருங்கால அண்ணி இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தவளால், சுபாவின் விபத்து பற்றிக் கேள்விப்பட்டதும் அவளின் கனவு கலைந்ததில் கோபம். தன் படிப்பைக் காரணம் காட்டி திருமணத்திற்குச் செல்லவே இல்லை. அதன்பின் அவளுக்கே நேரம் கிடைக்கவில்லை. ஜீவாவிற்கு தங்கையின் விருப்பம் தெரிந்திருந்ததால், அவளை ரொம்ப வற்புறுத்தவில்லை.
சென்னையிலிருந்து பெங்களுர் வந்த அன்று நேரே சுபாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் ஹாஸ்பிடலில் அனுமதித்திருந்ததால், தங்கைக்கு போன் செய்ய, வரமாட்டேன் என்றவளை ‘நீ வர்ற’ என்று வலுக்கட்டாயமாக வரவழைத்தான் ஜீவா. ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்கள் எதிரில் மரியாதைக் குறைவாக நடக்க மாட்டாள் என்பதில் நூறு சதவீதம் நம்பிக்கை அவனுக்கு. அதனால் தைரியமாகவே வரவழைத்தான். மாமனார் வீட்டில் தன் தங்கையை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதே என்ற எண்ணமும் கூட.
அண்ணனின் நம்பிக்கையை பெரியவர்களிடம் நல்லவிதமாகப் பேசி காப்பாற்றியிருந்தாள் சாதனா. மனைவியைக் காண அழைத்துச் செல்லும் வழியிலேயே அண்ணனிடம் தன் சம்மதமில்லாமல் திருமணம் செய்ததற்கு சண்டையிட்டாள்.
“எதுவாயிருந்தாலும் இங்கேயே பேசி முடிச்சிருடா. உனக்கு ஏற்கனவே சொல்லிட்டேன் என்னால தான் அவளுக்கு ஆக்ஸிடெண்டானது. அவ ஏற்கனவே வலி, வேதனைன்னு ரொம்ப நொந்து போயிருக்கா. நீ எதுவும் மனசு சங்கடப்படுற மாதிரி பேசிறாத. ப்ளீஸ் எனக்காக” என்று கெஞ்சிய அண்ணனிடம்,
“ஓகே” என்று அரைமனதாக ஒத்துக்கொண்டாலும், முன்னப்பின்ன அறிமுகமில்லாத பெண்ணிடம் சண்டை போடும் ஐடியாவெல்லாம் சாதனாவுக்கு இல்லவே இல்லை. உள்ளே சென்று சுபாவின் முகத்தைப் பார்த்த சாதனா அதிர்ந்தே விட்டாள். அண்ணனிடம் பாவமாக ஒரு பார்வையை செலுத்த, அவனோ முகம் முழுக்க சந்தோஷத்துடன் நின்றிருந்தான். தலையிலடிக்காத குறையாக நின்றிருந்த தங்கையின் கைபிடித்து மனைவியிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினான்.
சுபா கைநீட்டி, “நைஸ் டூ மீட்டிங் யூ” என்றாள் சிரித்தபடி. “அவளின் அந்தச் சிரிப்பில் ஒரு வசீகரம் இருப்பதை உணர்ந்தாள் சாதனா. ஆனால் குரல்? சுபாவிற்கு முன்னைப்போல் அல்லாமல் ஓரளவு குரல் வர ஆரம்பித்திருந்ததால், மற்றவர்களுக்கு கேட்கும் அளவு இருந்தது. ‘ஹ்ம்... இது வேறயா குரலுக்கும் தடாவா. டேய் அண்ணா! ஏன்டா இப்படி? ஒருவேளை அவங்க சிரிப்பைப் பார்த்து மயங்கிட்டானோ. இந்த காலத்துப் பசங்க என்ன பண்றாங்கன்னு கணிக்கவே முடியலப்பா” என்று மனதினுள் அலுத்துக் கொண்டாள்.
இவளும் இந்த காலத்துப் பொண்ணுதான! பயபுள்ள ஒருவேளை மறந்திருக்குமோ!
பின், மனமில்லாமல் கைகொடுத்து இரண்டொரு வார்த்தைகள் பேசி சிறிது நேரம் அண்ணனிடமும் பேசிவிட்டுக் கிளம்பி வெளியே செல்ல கதவைத் திறக்க, அதே நேரம் கதவின் மறுபக்கமிருந்து ப்ரேம் கதவைத் திறந்து உள்ளே வர முயற்சிக்க, முயற்சியின் விளைவாக சாதனாவின் நெற்றி கதவில் மோதி வலியெடுத்தது.
உள்ளே நுழைந்தவனைப் பார்த்தவள், வலியின் வேகமும், அண்ணன் மேலுள்ள கோபமும் சேர்ந்து, “அறிவிருக்கா. அதான் நான் திறக்கிறேன்ல அப்புறம் என்ன இழுத்துட்டு இருக்க? அப்படி என்ன அவசரம் உனக்கு? உங்களுக்கு தர்றேன்னு சொன்ன மகாராஜா கிரீடத்தை வேற யாருக்காவது குடுத்திருவாங்கன்னு வேகமா வர்றீங்களோ?” என கோபமாக மரியாதையை இறக்கியும் ஏற்றியும் லெப்ட் அன்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்க, ப்ரேம் திருதிருவென விழித்தான்.
ஹாஸ்பிடலை விட்டு கொஞ்ச நேரம் காற்று வாங்க வெளியே சென்றவன் திரும்பி வரும்போது, தங்கை அறையிலிருந்து வயதுப்பெண் ஒருத்தி வருவாளென்று கனவா கண்டிருந்தான். முதலில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், அவள் பேசிய பேச்சில் அவனுக்குக் கோபம் வந்து, “ஏய்! கொஞ்சம் நிறுத்து. என்ன விட்டா ஒரேயடியா பேசிட்டிருக்க. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்றான்.
அதற்குள் அருகில் வந்த ஜீவா, “என்னாச்சி?” என்று பொதுப்படையாகக் கேட்டான்.
“அண்ணா” என்று சாதனாவும், “மாப்பிள்ளை” என்று ப்ரேமும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்க... ‘தங்கச்சியா?’’ என்று ப்ரேமும், ‘மாப்பிள்ளையா?’ என்று சாதனாவும் அதிர்ந்து, பின் இருவரும் முறைப்பதை நிறுத்தி அசட்டு சிரிப்பை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.
“ஹேய்! என்னைப் பார்த்தா லூசு மாதிரித் தெரியுதா? சண்டை போட்ட சத்தம் காதைக் கிழிச்சது. என்னடான்னு வந்து பார்த்தா நீங்க ரெண்டு பேரும் சாரி சொல்லிட்டு சிரிக்கிறீங்க?” என்றான் ஜீவானந்த்.
“அது ஒண்ணுமில்லண்ணா ரெண்டு பேருமே ஒரே நேரத்துல கதவைத் திறந்ததுல நெத்தியில அடிபட்டிருச்சி. அந்த கோபத்துல திட்டிட்டிருந்தேன்.”
“என்னது அடிபட்டிருச்சா?” என்று இரு ஆண்களும் ஒரே நேரத்தில் பதற, ஜீவா தங்கையின் நெற்றியைத் தேய்த்துவிட, அவளோ பதறியபடி நின்றிருந்த ப்ரேமைப் பார்த்தாள். ‘என் அண்ணன் பதறினா அது உடன்பிறந்த பாசம். இவங்க ஏன் பதறுறாங்க?’ என யோசிக்க...
அதே நிலைதான் பிரேமிற்கும். ‘அந்தப் பொண்ணுக்கு அடிபட்டா நான் ஏன் பதறணும்?’ என நினைத்தவன், தன்னால் தான் அடிபட்டது என்ற பரிதாபமும், தங்கை நாத்தனார் என்ற அக்கறையும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, “சாரிங்க நான் வேணும்னே பண்ணல.” மனப்பூர்வமாக சாதனாவிடம் மன்னிப்பும் கேட்டான்.
“இட்ஸ் ஓகே. இதுக்கு ஏன் சாரி” என்றவளுக்கே, இவ்வளவு நேரம் இவனிடம் கத்திக்கொண்டிருந்தது நானா என்றிருந்தது. “அண்ணா எனக்கு எக்ஸாம் இன்னும் ஒன் வீக்ல முடியுது. நான் திரும்ப வருவேனா தெரியாது. என்னை எதிர்பார்க்காதே” என்று வெளியே செல்லும் பொழுது, ப்ரேமைப் பார்க்க வேண்டும்போல் தோன்றிய உணர்வில் ஆச்சர்யமாகி, பின் தோளைக்குலுக்கி நடந்து சென்றாள்.
“சாரி, மாப்பிள்ளை. என்னால் தான அவங்களுக்கு அடிபட்டிருச்சி?”
“ஆமா மச்சான். அதுக்கு முன்னாடி உங்களால தினம்தினம் ஒருத்தன் அடிபடுறேன் அதைச் சரிபண்ண மாட்டேன்னுறீங்களே?” என்றான் கவலையாக.
ஜீவாவின் வார்த்தையில் அதிர்ந்து பதறியபடி, “நானா? நான் என்ன பண்ணினேன் அடிபடுற அளவு?” என்று கேட்க...
“என்ன பண்ணல கேளுங்க? ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளைன்னு கூப்பிடுறீங்களே.. அதை விட்டுட்டு ஜீவான்னு கூப்பிட்டு வா போ சொல்லலாம். இல்ல மரியாதை குடுக்கணும்னா பெயர் சொல்லி வாங்க போங்க சொல்லலாம். நீங்க அப்படி செய்யுறது இல்லையே.”
“ஓஹ்... அவ்வளவுதானா நானும் என்னவோ ஏதோன்னு பயந்திட்டேன். ஆனா, அதையே நீங்களும் செய்யலாமே?” என எதிர்கேள்வி கேட்டான்.
“ஓஹ்... செய்யலாமே” என்று ப்ரேமைப் போல ஆரம்பித்து, “அப்புறம் என் பொண்டாட்டி வந்து எங்கண்ணா உங்களோட பெரியவங்க. நீங்க எப்படி பெயர் சொல்லலாம்னு கேட்டா நான் என்ன பண்றது?” என்றான் விடாது.
“என் தங்கச்சி பெயரைச் சொல்லி நீங்க எஸ்ஸாகுறீங்க? ஒகே” என்றான் சம்மதமாக.
“அப்புறம் மச்சான் என் தங்கை பேசினதை மனசுல வச்சிக்காதீங்க? அவ பேசினதை அடுத்த செகண்ட் அவளே மறந்திருவா. தன்மேல தப்பிருந்தா மன்னிப்பு கேட்கத் தயங்கமாட்டா.”
“ம்... அதான் நேர்லயே பார்த்தேனே. நல்ல பாலிசி தான். ஓகே ஜீவா நான் ஊருக்கு கிளம்பறேன். ஆபரேஷன் அன்னைக்கு இங்க இருக்கிற மாதிரி பார்த்துக்கறேன். அப்பா, அம்மா இங்கேயே இருக்கட்டும். அங்க வந்தாலும் நிம்மதியா இருக்க மாட்டாங்க” என்று சென்றவன், அதன்பிறகு சிகிச்சை அன்றுதான் வந்தான். அதுவும் உடனே ஊருக்குத் திரும்பும் அவசரத்துடன். ஆதலால், ஜீவாவின் வீட்டிற்கு செல்லும் அவசியமில்லாமல் போனது ப்ரேமிற்கு.
சிகிச்சை முடிந்து மேலும் சில நாட்களிலேயே வீடு அழைத்துச் செல்ல முதன் முதலாக வரும் மருமகளை ஆரத்தி எடுத்து வரவேற்றார் வந்தனா. வீட்டினுள் நுழைய உறவினர்கள் வருகை ஒரு சிலரும் அருகிலுள்ளவர்களும் மாப்பிள்ளை, பெண்ணை பார்க்க வந்திருந்தார்கள். மனைவியிடம் குனிந்து, “நான் சொல்லும் பொழுது வந்தவர்களுக்கு வணக்கம் சொல்லிடு போதும்” என்ற கணவனின் சொல்லை அப்படியே கடைபிடித்தாள்.
மற்றவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சுபாவின் பெற்றவர்களும் கிளம்ப, ஜீவா வீட்டினரும் ரொம்ப நாளாக தொழிலைக் கவனிக்காமல் இங்கேயே எப்படி இருக்கச் சொல்வது என்று சம்மதித்தார்கள்.
சுபாவிடம் வந்த சண்முகசுந்தரி ஒரு தாய்க்கே உரித்தான கவலைகளைச் சொல்லி, நல்ல விதமாக நாலு வார்த்தைகள் பேசிய பிறகே கிளம்பினார். விவேக் தானும் சென்னை வருவதாக சொல்லியிருந்ததால், ப்ரேம் அவர்கள் காரை எடுத்துச் செல்ல, விவேக்கின் காரில் சுபாவின் பெற்றோர்கள் கிளம்பினார்கள்.
அனைவரும் சென்றதும் “சாதனா எங்கம்மா?” என தாயிடம் விசாரிக்க... “உன் தங்கச்சி தான எக்ஸாம் முடிஞ்ச பிறகும் இன்னும் காலேஜையே சுத்தி சுத்தி வந்திட்டிருக்கா.” மருமகளைப் பார்க்க வரவில்லை என்ற கோபத்தில் சொன்னவர், பின் தணிந்து “ஸ்பெஷல் க்ளாஸ் இருக்காம். நீ தேவியை ரூம்கு கூப்பிட்டுப்போ. உன் தங்கை வருவா” என்றார்.
ஜீவாவின் அறை மாடியிலிருந்தது. சுபாவிற்காக தன்னுடைய ஜாகையை கீழே மாற்றியிருந்தான். மனைவியை உள்ளே அழைத்து வந்து கட்டிலில் அமரவைத்தவன், யோசனையாக இருந்தவளிடம்> “என்னடா யோசனையெல்லாம் பலமா இருக்கு?” என்றான் கனிவாக.
“இல்லங்க. நீங்கள்லாம் பேசுறதைப் பார்த்தா உங்க தங்கச்சிக்கு நம்ம கல்யாணம் நடந்ததுல விருப்பமில்லை போல. அவங்களுக்கு என்னைப் பிடிக்கலையா என்ன?” என கேட்டாள்.
“ஏன்மா அப்படிக் கேட்கிற?”
“இல்ல ஏதோ ஒரு ஃபீல். அவங்க என்னை அவாய்ட் பண்றாங்களோன்னு. முதல் நாள் வந்து பார்த்துட்டு போனபிறகு வரவேயில்லையே?”
“அவளுக்கு எக்ஸாம் நடந்ததுமா?”
“எக்ஸாம் நடந்தாலும் உள்ளுர்லதான இருக்காங்க? ஏன் வரல? முதல் நாள் வந்ததுகூட நீங்க வற்புறுத்திதானா?” என்று தன் மனதிலுள்ளதைக் கேட்க...
அந்த சமயம் தங்கையின் மேல் கோபமாக வந்தது. வீட்டுக்கு வந்த பெண்ணை, அதுவும் உடல்நலம் சரியில்லாத பெண்ணை வருத்துகிறாளே என்று. இருந்தாலும் தங்கையை விட்டுக்கொடுக்க மனமில்லாமல், “இதை எப்படி சொல்றதுன்னு தெரியல. நான் சொன்னா அதை நீ எப்படி எடுத்துப்பன்னும் தெரியலமா. அவளுக்கு நம்ம கல்யாணத்துல விருப்பமில்லை” என்றான்.
ஏனென்பது போல் சுபாவின் முகம் கேள்வியாய் சுருங்க, “அ...அது உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சி தான. அதுவும் முகத்துல அடின்னதும் அண்ணனுக்கு ஈக்வலா பொண்ணு அழகா இருக்க மாட்டாங்களேன்ற வருத்தம் ஒருபுறம். உனக்கு கண்ணு தெரியாதுன்ற விஷயம் இன்னொரு புறம். சின்னப் பொண்ணுதான இப்பத்தான் படிப்பையே முடிச்சிருக்கா. இனி தான் ஆளுங்களைப் படிக்க ஆரம்பிப்பா. கொஞ்ச நேரம் உன்கிட்டப் பேசினாள்னா புரிஞ்சிக்குவா. அவளைத் தப்பா எடுத்துக்காதம்மா. அவ நல்லவதான். உன் விஷயத்துலதான் கொஞ்சம் சொதப்புறா.”
“அதுக்கு ஏன்ங்க இத்தனை விளக்கம்? என்னோட நாத்தனாரை நானே பார்த்துக்கறேன். ஆமா, அப்ப என்முகம் ரொம்ப மோசமாகவா இருந்திச்சி?”
“இல்லடா சின்னச்சின்ன காயம் தான்.”
“இல்ல பொய் சொல்றீங்க? சின்ன காயத்துக்காகவெல்லாம் யாரும் ஃபேஸ் சர்ஜரி வரை போக மாட்டாங்க.”
“ஓகே... ஓகே ஐம் சரண்டர் ஃபார் யூ. காயம் கொஞ்சம் பெருசு, கொஞ்சம் சின்னது ஓகேவா.”
“நீங்க என்னைக் கிண்டலடிக்கிறீங்களா?”
“நான் உன்னைக் கிண்டலடிக்காம வேற யாரை கிண்டலடிக்க முடியும். வேற பொண்ணை கிண்டலடிச்சா ஈவ் டீசிங் கேஸ்ல உள்ள தள்ளிடுவாங்க. நான் அந்த ரிஸ்க் எடுக்கமாட்டேன்பா” என்று பயந்தவன்போல் கூறி, “சரி நீ படுத்துக்கறியா கண்ணுக்கு மருந்து போடுறேன் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என்று மனைவியை படுக்க வைத்து மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்த மருந்தை எடுத்து அவளருகில் வந்து, கண்களில் துளி விட அவளின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.