• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
628
3

வேலைக்குச் செல்ல இன்னும் நான்கு நாட்களே இருந்த சமயம், வீட்டில் ஆராதனாவின் பஞ்சாயத்து நடந்தது. கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி அம்மா, அப்பாவை வற்புறுத்த, ‘என்ன செய்வது?’ என்ற யோசனையிலிருந்த கேசவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் மனதினுள், ‘வேண்டாம்ப்பா. ப்ளீஸ் சம்மதிக்காதீங்க” என்ற வேண்டுதல் ஓடியது.

“ஆனா, செல்வி. அவள் வேலைக்குப் போகணும்னு சொல்றாளே” என்று மகளின் மனதில் பால் வார்க்க,

“அதெல்லாம் பொம்பளப்புள்ள அவ்வளவு தூரம் தனியா அனுப்புறது சரிவராது. எதுவும் வேண்டாம் அவளை ஸ்கூல் சேர்த்ததிலிருந்து எல்லாமே தாமதம்தான். இப்ப இருபத்தி நாலு வயசாகுது, நம்ம ஊர் பிள்ளைங்க இத்தனை வயசு வரை யார் இருக்கிறா? அதெல்லாம் வேலைக்கெல்லாம் போக வேண்டாம். கல்யாணம் பண்ணி அனுப்புற வழியைப் பாருங்க” என்று அப்பா பால் வார்த்த மனதில், அம்மா தீயை வார்த்தார்.

‘சே, என்னடா ஆராவுக்கு வந்த சோதனை’ என்று தனக்குள் புலம்ப, ‘இந்த நேரத்துல இந்த ரைமிங் வேற உன் மனசுக்குத் தேவையாடி ஆரு’ என்று மனப்போராட்டத்தை நிறுத்தி நிஜப் போராட்டத்திற்கு வந்தாள்.

அதே நேரத்தில் கீர்த்தனாவும், தாத்தாவும் உள்ளே வர, “அப்பா! அக்கா வேலைக்குப் போகட்டும். மேரேஜ் பிக்ஸ் பண்றப்ப பார்த்துக்கலாம் மற்ற பிரச்சனைகளை” என்றாள் நல்ல தங்கையாக.

“ஆமாடா கேசவா. கொஞ்ச நாள் அவ இஷ்டத்துக்கு விட்டுப்பிடி. கண்டிப்பா நல்லதே நடக்கும்” என்றார்.

“சரிப்பா. அப்படியே செய்றேன். எனக்கும் அவ சந்தோஷம் தான் முக்கியம். அவளை அழவச்சிட்டு நான் சந்தோசமாவா இருக்கமுடியும்? என்றார்.

“ஆமா. பச்சப் பாப்பா, மடியில வச்சித் தாலாட்டுங்க. என் சொல்லை மட்டும் கேட்டுறாதீங்க” என்று செல்வி புலம்பினார்.

அதேநேரம் உள்ளே வந்த கலைவாணி, “அண்ணா வள்ளியும் வேலைக்குப் போறேன்னு பிடிவாதமா இருக்கிறா. இப்ப என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல. கல்யாணம் பேசினா வீட்டைவிட்டு வெளியே போயிருவேன்னு மிரட்டுறா” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார் கலைவாணி.

“வேதா அப்பா, என்னமா சொல்றாங்க?”

“அவங்களுக்கும் என்ன பண்றதுன்னு தெரியலண்ணா. குழப்பத்துல இருக்காங்க. இந்தப் பொண்ணு பண்ற கூத்துக்கு ஏற்ற மாதிரிதான் நாமளும் நடந்துக்க வேண்டியிருக்கு. வயசு ஏறிட்டுப் போகுதேன்னு, கொஞ்சமாவது வயசுக்கேத்த புத்தி இருக்கா. இன்னும் ஒன்னு ரெண்டு வருஷம் போச்சிதுன்னா மாப்பிள்ளை கிடைக்கிறதே கஷ்டம் கேசவன் அண்ணா. சொன்னா புரிஞ்சிக்கமாட்டேன்னுறா.”

தோழியின் முடிவில் சந்தோஷமடைந்தாலும், அவளின் அம்மாவின் பரிதவிப்பைப் பார்த்தவளால் சுயநலமாக யோசிக்க முடியவில்லை. தன்னால்தானே என்ற கோவம் தன் மேலேயே வந்தது. ‘சும்மா வீட்டுல உள்ளவங்க பேச்சைக் கேட்டு, அமைதியா இருந்த பெண்ணை, என் நட்பை காரணம் காட்டி அலைக்கழிச்சிட்டேனோ? நான் ஏன் இவ்வளவு சுயநலமா இருந்துட்டேன்?’ என்று ஒரு நிமிடம் யோசித்தவள் தோழியின் தாயிடம் திரும்பி, “நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன். நீங்க அவ கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றாள்.

“உன்னால முடியுமா ஆரா?”

“முயற்சிதான் பண்ணிப் பார்க்கிறேனே. நீங்க இங்கேயே இருங்க. நான் ஒரு பத்து நிமிஷத்துல வர்றேன்” என்று சொல்லியபடியே தோழியைத் தேடிச் சென்றாள். வீட்டில் சோகத்தில் மூழ்கியிருந்த வேதவல்லியின் அருகில் சென்று அமர்ந்தவள்,

“ஏன்டி இப்படிப் பண்ற? நான்தான் உன்னை வீட்டுல சொல்றதைக் கேட்டு நடந்துக்கன்னு சொன்னேனா இல்லையா? அப்புறமும் என்னடி இதெல்லாம்? நான் வேலைக்குப் போறேன்னு சொன்னேன்னா, அதுல ஒரு காரணம் இருக்கு. நீ ஏன்மா என்கூட சேர்ந்து கஷ்டப்படணும்? உனக்குத் தலையெழுத்தா என்ன? உங்கம்மா உன்னோட ஃப்யூச்சர் பத்தி ரொம்ப கவலைப்படுறாங்க. ப்ளீஸ் வேதா ஒத்துக்கோ. பெத்தவங்க மனசைக் கஷ்டப்படுத்தாதே” என்றாள் கவலையுடன்.

“ஏன் நீ கஷ்டப்படுத்தல? நான் படுத்தினா பெருசா தெரியுதா? சரி. உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். இந்த ட்ரெயினிங் முடிய ஆறு மாசமாகும்தான? அதுக்குள்ள சென்னையிலேயே எனக்கொரு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லு. நான் மறுக்கமாட்டேன். இந்த ஐடியாவுக்கு சரின்னா எனக்கும் ஓகே. என் சார்பா நீயே போயி சொல்லிரு” என்று அனுப்பினாள்.

வீட்டில் அனைவரிடமும் வேதவல்லி சொன்னதைச் சொல்ல, அவர்களுக்குமே அந்த பதிலில் ஒரு திருப்தி இருந்தது.

“இதே மாதிரி உனக்கும் அங்கேயே பார்க்கலாமாடா? என்ற தகப்பனை முறைத்து, “அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. தோணும் போது சொல்றேன்.”

“உனக்கு எப்பதான் தோணும் சொல்லு. நாங்க காத்திருக்கோம்” என கோவமாகக் கத்திய தாயிடம் வந்த கீர்த்தனா,

“அம்மா! அவதான் சொல்றால்ல கொஞ்ச நாள் போயிட்டுத் தான் வரட்டுமே. நீங்க நிதானமா மாப்பிள்ளை பாருங்க. அவ அழகுக்கு, மாப்பிள்ளை நீ நான்னு போட்டி போட்டுட்டு வருவாங்கம்மா. விடுங்கம்மா அவ ஆசைப்பட்டதும் தான் நடக்கட்டுமே” என்றவள் சகோதரியிடம் திரும்பி. “பாரு உனக்காக எவ்வளவு பேசுறேன். கொஞ்சம் தண்ணியாவது தர்றியா? அப்படியே வாய் பார்த்துட்டு நிற்கிற?” என்றதும்,

ஓடி வந்து தங்கையைக் கட்டிக் கொண்டாள் ஆராதனா. “தேங்க்ஸ்டி. நான் உன்னோட சப்போர்ட் எதிர்பார்க்கலை” என்றாள் கலங்கிய குரலில்.

“தேங்க்ஸ்லாம் வேண்டாம். என்னோட பேரைக் காப்பாத்து போதும்” என்றாள் சகோதரியின் கண்ணீர் துடைத்து.

“அது சரிம்மா தெரியாத இடம் எங்க தங்குவீங்க? பொண்ணுங்களை பாதுகாப்பான ஒரு இடத்துல தங்க வைக்கணும். என்ன பண்ணலாம்” என்று யோசித்துக் கொண்டிருந்த கேசவன் மனதில், பால்ய சிநேகிதன் ஒருவன் நினைவு வர, அந்த நிமிடமே தொலைபேசியை எடுத்து நண்பன் மணியிடம் பேசி, பெண்களின் வேலை விவரம் சொல்லி, தங்க இடம் கேட்டார் கேசவன்.

“என் வீட்டுல பையன் இல்லாம இருந்திருந்தா, பொண்ணுங்களை என் வீட்டுலேயே தங்க வச்சிருப்பேன்டா” சரி எந்த இடத்தில் வேலை?” என்று வேலை விபரத்தையும் கேட்டார்.

“தாம்பரம் பக்கத்துல இருக்கு.”

சற்று யோசித்த மணி, “தாம்பரம் தாண்டின்னா, ஹான்! அங்க ஒரு லேடீஸ் ஹாஸ்டல் இருக்குடா. ஹாஸ்டல் பெயர் தனலக்ஷ்மி லேடீஸ் ஹாஸ்டல். அங்க தாராளமா தங்க வைக்கலாம். மதுரைக்காரவங்க. நல்லா பாசமா பார்த்துக்குவாங்க. எல்லா ஹாஸ்டல்லயும் ரூல்ஸ் இருக்கும். ஆனா, இங்க கொஞ்சம் கன்டிஷன் அதிகமா இருக்கும். நம்ம பொண்ணுங்க அதை பாலோ பண்ணினா போதும்” என்றார்.

பெயரைக் கேட்டதுமே கேசவன் மனதில் சந்தோஷப் பூ பூத்தது. “மணி நாலு நாளைக்குள்ள வேலையில் சேரணும். நான் இரண்டு நாளைக்குள்ள வர்றேன். கொஞ்சம் பிள்ளைகளுக்கு வேலைக்குப் போற இடத்துல இருந்து, ஹாஸ்டல் வரை உள்ள தொலைவு முதல்ல பழக்கப்படுத்தணும்” என்றவர் மணியிடம் முகவரி வாங்கி, போனை வைத்துத் திரும்பி அனைவரிடமும் விஷயத்தைச் சொல்ல, பெரியவர்களுக்கு கொஞ்சம் திருப்தியானது.

பெற்றவர்களின் ஆயிரத்தெட்டு அறிவுரைகளையும் வாங்கிக் கொண்டு, இனிதே சென்னையை வந்தடைந்து மகளிர் விடுதியிலும் சேர்ந்தார்கள்.

விடுதி நடத்துனர் ‘ராணி கணேஷ்’ நாற்பத்திரெண்டு வயதிலிருக்கும் பெண்மணி. நல்ல களையான முகம். எதிரில் இருப்பவர்கள் என்ன விதமான மனிதர்கள் என்பதை, முதல் பார்வையிலேயே தரம் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர். அவரின் பார்வையில் ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், சிறிதும் யோசிக்காமல் இடம் காலி இல்லை என்ற வாசகத்தைப் படித்து திருப்பி அனுப்பிவிடுவார்.

ஆராதனாவையும், வேதவல்லியையும் அவருக்கு ரொம்பவே பிடித்தது. ஆராதனாவைப் பார்க்கும் போது மட்டும் நெருங்கிப் பார்த்துப் பழகிய முகமாகத் தோன்றியது. இரண்டு நிமிடப் பேச்சில் பெண்களை அளவெடுத்தவர், இருவரும் எல்லா விஷயத்திலும் உஷாராகத் தோன்ற உடனே அனுமதித்தார்.

விடுதியில் இருவருக்கும் ஒரே அறை தயார் செய்துக் கொடுத்து, பெண்களைப் பற்றிய பயம் வேண்டாம் என்று ராணி சொன்ன நம்பிக்கையும், பெற்றவர்களை தைரியமாக, நிம்மதியாக அங்கிருந்து செல்ல வைத்தது.

சென்னை:

வேலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த சரண், சிக்னலில் நிற்கும் போதுதான் பார்த்தான், ஏதோ தெரிந்த முகமாக இருக்கிறதே என்று. நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர், ஒரு பெண்ணிடம் சிரித்துப் பேசியதைப் பார்த்தவன் கண்ணில் சிறு பளிச்சிடலுடன், “மாட்டிக்கிட்டீங்களே மாமா” என்று சிரித்துக் கொண்டே காரை எடுத்தான்.

அப்பா, தங்கையுடன் வீட்டிற்கு வந்து, சமையல் முடித்து சாப்பிட்டு அனைவரும் படுக்கச் செல்ல, தன் அறைக்குச் சென்ற சரண், தன் தாயிடம் அன்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து பின் உறங்கினான்.

நல்ல உறக்கத்தில் இருந்தவன், கதவு தட்டும் ஓசையில் எழுந்து, தூக்கத்திலேயே கதவு திறக்க, சரியாக இரவு பனிரெண்டு மணி அலாரம் அடித்தது.

“ஹேப்பி பர்த்டே டூ யூ. ஹேப்பி பர்த்டே டூ யூ. ஹேப்பி பர்த்டே டூ யூ” என்று கோரஸ் குரல்களுடன் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல, ஒரு நிமிடம் சந்தோஷத்தில் வாயடைத்துப் போனான். வருடா வருடம் இதைப் போலவே கொண்டாடினாலும், தனக்கேத் தனக்கான இந்த நாளில், தன் குடும்பம் முழுவதும் வந்து வாழ்த்தும் நாள் அல்லவா இது. தாத்தா, பாட்டி, அத்தைகள், மாமா என்று அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கினான்.

“அண்ணா என்னை மட்டும் ஏன் விட்டுட்ட? என் கால்லயும் விழு.”

“குட்டிமா விழுந்திருவேன். உன் அண்ணன், உன் கால்ல விழுந்தா உனக்குத்தான அசிங்கம். பரவாயில்லைன்னா சொல்லு. நான் விழுறேன்” என்றான்.

“ஹையோ! அண்ணா! சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னா, ரொம்ப சீன் போடுற. போதும், முதல்ல கேக் வெட்டு. வா வா வா” என்றாள்.

கேக் வெட்டி தந்தைக்கும், தங்கைக்கும் ஊட்டியவன், மற்றவர்களுக்கும் கொடுக்க, அனைவரும் வாழ்த்துச் சொல்லி தங்களின் பரிசுகளைக் கொடுத்தார்கள்.

என்றாவது ஒரு நாள் கூடுவதால், இரவே அவர்களின் கச்சேரி வரவேற்பறையில் ஆரம்பித்தது.
தாத்தா, பாட்டி கலகலப்பான பேர்வழியாக இருந்தாலும், பெரிய அத்தை ராஜி, வெற்றியை விட பத்து வயதுப் பெரியவர். சின்ன வயதிலேயே கணவர் இறந்தும், தம்பியின் உதவியை நாடாமல், கணவர் ஆரம்பித்த சிறு குடிசைத் தொழிலை, அவரின் நினைவாக நடத்தி, இன்று ஒரு இருபது பெண்களை வைத்து தன் தொழிலை நடத்தி வரும் ஒரு குட்டித் தொழிலதிபர். தாயையும், தந்தையையும், தன் கூடவே தன் துணையாக வைத்துக் கொண்டதால், தொழிலின் காரணமாக போக்குவரத்து கம்மியானது.

ராஜியின் மேல் சின்னவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம். அதனால், அவர்கள் மரியாதை நிமித்தம் கலகலப்பாகப் பேச மாட்டார்கள்.

ஆனால், சின்ன அத்தையிடம் அப்படியில்லை. பெயரைச் சொல்லி கிண்டலடிக்கும் அளவு கலகலப்பானவர்கள்.

“அத்தை உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று ஆரம்பித்தான் சரண்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
628
“என்னடா? ஏதோ தெரியுமான்னு பிட்டெல்லாம் போடுற? தாங்கள் ஆரம்பித்ததைத் தொடரலாம்” என்று ராணி கூற,

“நான் இன்னைக்கு ஆபீஸ் போயிட்டு வரும்போது, குரோம்பேட்டை சிக்னல் பக்கத்துல மாமா ஒரு பொண்ணுகிட்ட நின்னு பேசிட்டு இருந்தாங்க. அதுவும் சும்மா இல்லை. சிரிச்சிச் சிரிச்சி பேசிட்டிருந்தாங்க. எங்க அத்தைகிட்ட கூட இந்த அளவுக்கு சிரிச்சிப் பேசினதில்லையேன்னு, நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்” என்று அவர் பெரிய தவறு செய்துவிட்டது போல் சொன்னான்.

அப்பொழுதுதான் கேக் சாப்பிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த கணேஷிற்கு புரை ஏறியது. பின் ஒருவழியாக நிதானத்திற்கு வந்தவர், “ஏன்டா டேய், எதுக்காகடா இப்படிக் கோர்த்து விடுற? அடேய் மருமகனே! உன் மனசாட்சி தொட்டுச் சொல்லுடா? நீ சொன்னதுல எதாவது உண்மை இருக்குதான்னு. அநியாயமா பேசாதடா. நீ பார்த்ததைக் கரெக்டா சொல்லுடா?” என்றார்.

“இருங்க மாமா யோசிக்கிறேன்” என யோசனைக்குப் போக,

“ஆமா. நல்ல நாள்லயே உனக்குப் பேசத் தெரியாது. இதுல யோசிச்சி வேற பேசப் போறியா? ஒண்ணும் தேவையில்லை போடா” என்று திட்டி மனைவியிடம் திரும்பி, “செல்லம் நான் இல்லமா. இவன் ஏதோ ப்ளானிங்ல இருக்கான். இவனை நம்பி என்னை சந்தேகப்பட்டுராத. நான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன். என்னை நம்புமா” என்றார் கணேஷ்.

“ஹான்! ஞாபகம் வந்திருச்சி. மாமா கூட பேசிட்டிருந்த பொண்ணு க்ரீன் கலர் சல்வார் போட்டிருந்திச்சி. தலைக்கு ஒய்ட் கலரிங் பண்ணி, ப்ரீ ஹேர் விட்டுருந்திச்சி. நீங்க கூட கையைப் பிடிச்சிட்டு சிரிச்சிச் சிரிச்சிப் பேசுனீங்களே மாமா? அதுக்குள்ளயா மறந்துட்டீங்க?”

“வேண்டாம்டா. சல்வார் போட்டவங்க எல்லாம் சின்னப் பொண்ணுங்க இல்லடா. கலரிங் வயசுப் பொண்ணுங்க பண்ணலாம். வயசானவங்களுக்கு ஆட்டோமேடிக்கா ஒய்ட் கலரிங் வரும்டா. எங்க அம்மா வயசு இருக்கும்டா அந்த அம்மாவுக்கு” என்று அவர் பாவம் போல் சொல்லவும் அனைவரும் சிரித்தனர்.

“நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்” என்றான் சரண்.

‘என்ன?’ என்று அனைவரும் அவனிடம் கவனத்தைத் திருப்ப, “இப்பத்தான மாமா சொன்னாங்க. உன் மனசைத் தொட்டுச் சொல்லுடா. நீ சொன்னதுல கொஞ்சமாவது உண்மை இருக்குதா அப்படின்னு. இப்ப அவங்க வாயாலயே நான் பேசினது ஒரு லேடிகிட்டத்தான்னு வந்திருச்சி. அது வயசான லேடியா? இல்ல சின்ன வயசுப் பொண்ணான்னு கேளுங்க அத்தை?” என்று ஏற்றிவிட்டான்.

“ஆமாடா. நீ கேட்குறதிலேயும் நியாயம் இருக்கே” என்று பாட்டி நடுவில் வர, ராஜி ஒரு வித சுவாரசியத்துடன் இதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

“அத்தை நீங்களுமா? பேரன் கூட சேர்ந்துட்டு மருமகனை சந்தேகப்படுறீங்க?”

“அதுமட்டுமில்லை அத்தை. அந்தப் பொண்ணைப் பார்க்கிறதுக்கு, காரை எங்கேயோ விட்டுட்டு வந்து, பார்க்கிறாங்கன்னா பாருங்களேன். இன்னும் நீங்க கேள்வி கேட்டா ஏகப்பட்ட ப்ளாஷ் நியூஸ் கிடைக்கும்” என்று தன் அத்தையை உசுப்பேற்றி விட்டான்.

“போடா. என்னோட ஹீரோ தங்கம்டா. யார் என்ன சொல்லுங்க, அந்தப் பால் வடியுற முகம் தப்புப் பண்ணுமா, பண்ணாதான்னு எனக்குத் தெரியாதா?” என்றார் செல்லமாக முறைத்து.

“நிஜமாவாடா ராணிமா” என்று மனைவியின் அருகில் அமர்ந்த கணேஷ், “என்னைப் பார்த்தாடா பால் வடியுற முகம்னு சொன்ன?” என்று ஆர்வத்துடன் கேட்டார்.

“வந்துட்டாருப்பா காதல் மன்னன்” என்று நியா கேலி செய்து, “அண்ணா, புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து உனக்கு பல்பு தர்றாங்க பாரு” என்று சிரித்தாள்.

நடுவில் புகுந்த வெற்றி, “ராணிமா பார்த்து பால் ரொம்ப பொங்கிரப்போகுது. மாப்ள இது பப்ளிக் நியாபகம் இருக்கட்டும்” என்றார் கிண்டலாக.

“அப்படியா மச்சான். எனக்கு இது தெரியாமல் போச்சே. இதை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க பையன் ஆரம்பிக்கும்போது சொல்லியிருக்கணும். இப்ப வந்தா என்ன அர்த்தமாம்?”

இவர்களின் கலகலப்பான அரட்டையின் நடுவே, தன்னைக் கவனிக்காத மாமாவின் கைதொட்டுக் கூப்பிட்டு, “தம்பி என்னைக்கு மாமா வர்றான்?” என்று கேட்டாள் நியா.

“ப்ளஸ் டூ எக்ஸாம் முடிய இன்னும் நாலு நாள்தான் இருக்கு. முடிஞ்சதும் வந்திருவான்மா.”

“நீங்க அவனை இங்கேயே சேர்த்திருக்கலாம் மாமா. என்னோட இருந்தா அவனை நான் நல்லா பார்த்திருந்திருப்பேன்ல?”

அவளின் தலையை வருடிக் கொடுத்து, “எனக்கும் ஆசை இல்லையாம்மா. அவன்தான் ஊட்டி கான்வென்ட்ல சேர்த்து விடுங்கன்னு ஒத்தைக்கால்ல நின்னு சாதிச்சிக் கிளம்பிட்டான். நீயும்தான சேர்ந்து அனுப்பின. அங்கேயும் ரூல்ஸ் எல்லாம் நல்லா திருப்திகரமா இருந்தது. உங்க அத்தை ஹாஸ்டல் பொண்ணுங்களுக்குப் போடுறாளே அந்த ரூல்ஸ் மாதிரி” என்று கண்சிமிட்டி, “நல்ல புத்திசாலி. நல்ல மார்க் எடுப்பான். காலேஜ் சென்னையிலேயே படிக்க ரெடி பண்ணிரலாம்” என்றார்.

“சரிங்க மாமா. எப்படியோ தம்பி என்கூட இருந்தா சரிதான்.”

“சரி எல்லாரும் போயிப் படுங்க. காலையிலேயே எழுந்து கோவிலுக்குப் போகணும்” என்று வெற்றி சொன்னதும்,

“அண்ணா! நான் காலையிலேயே சீக்கிரமா எழுந்து ஹாஸ்டல் போயிருவேன். நீங்க கோவிலுக்குப் போயிட்டு, அப்படியே பிள்ளைங்களுக்கு ஒரு நல்லது நடக்கணும்னு வேண்டிட்டு வாங்க” என்றார்.

மறுநாள் காலையிலேயே எழுந்த ஆராதனா குளித்துவிட்டு வந்து, தன் தோழியையும் எழுப்பிக் குளிக்க அனுப்பினாள். முதல் நாள் வேலையோடு சேர்த்து, இன்னும் ஒன்றும் நினைவு வர, அத்துடன் சேர்த்துத் தன் அத்தை மகனைத் தேடும் பணியும் நாளும் இன்று.

இந்த நாள் முதல் இனியதாக அனைத்தும் நடக்க, அவளுக்குப் பிடித்தமான முருகர் கோவில் எங்கே இருக்கிறது என்று தன் சக அறைத் தோழியிடம் கேட்க, “வடபழனி முருகன் கோவில் பேமஸ். ஆனா, கொஞ்சம் தூரம் அதிகம். டிராபிக் தாண்டிப் போய் வர அரைமணி நேரத்திற்கும் மேலேயே ஆகும். டிராபிக் அதிகமானா அதுக்கு மேலேயே டைம் ஆகும்” என்றார்கள்.

அதனால்தான், எட்டு மணிக்குச் செல்ல வேண்டிய அலுவலகத்திற்கு, ஐந்து மணிக்கே எழுந்து குளித்து, தோழியையும் எழுப்பி விட்டாள்.

இருவரும் கிளம்பி வர, அப்பொழுதுதான் உள்ளே நுழைந்த ராணி, “என்னம்மா, இவ்ளோ சீக்கிரமா கிளம்பிட்டீங்க? பத்து நிமிடப் பயணம்தான். நீங்க ஏழு மணிக்கு மேல தாராளமா கிளம்பலாமே? என்றார் கேள்வியாக.

“இல்ல மேடம். நாங்க வடபழனி முருகன் கோவில் போறோம். போயிட்டு அப்படியே வேலைக்குக் கிளம்பறோம்.”

“என்னமா சொல்றீங்க? இங்க இருந்து வடபழனி போயிட்டு, அப்புறம் இதே ரூட் திரும்பி வருவீங்களா? உங்களுக்கு ரூட் எதுவும் தெரியாதே. தெரியாத இடத்துல எப்படி?” என்றவருக்குமே, ‘என்ன இந்தப் பிள்ளைகள் புதிதாக வந்த இடத்தில் தனியாகப் போவதாகச் சொல்கிறார்களே’ என்றிருந்தது.

“இல்ல மேடம். நாங்க ஆட்டோவுல போறோம்.”

“இல்லை இல்லை ஆட்டோவுல போகக்கூடாது. இருங்க நான் உங்களுக்கு பெர்சனலா, ஒரு ஆட்டோ ஏற்பாடு பண்றேன். ரொம்ப நம்பிக்கையானவங்க. எங்க பேமிலி ப்ரண்ட் கூட. வேலைக்குக் கூட அவங்க ஆட்டோவையே பிக்ஸ் பண்ணிக்கோங்க. சேப் அன்ட் செக்யூரிட்டி” என்றார்.

“சரிங்க மேடம். ஏற்பாடு பண்ணுங்க” என்றார்கள் இருவரும்.

அவர்கள் சம்மதம் சொன்ன உடனே கையிலுள்ள கைபேசியை எடுத்து அவரை அழைத்து, “அண்ணா! கொஞ்சம் ஹாஸ்டல் வரைக்கும் வர்றீங்களா? இப்ப எங்க இருக்கீங்க? ஓ பக்கத்துலதானா? சீக்கிரம் வாங்கண்ணா” என்று அழைப்பைத் துண்டித்து, ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணுங்கம்மா. அண்ணா வரவும் பேசிவிடுறேன்” என்றார் ராணி.

“ரொம்ப நன்றிங்க மேடம்” என்றதும்,

மறுத்து தலையசைத்து, “அவர் வரட்டும். நீங்க உட்காருங்க. சேகர் அண்ணாவுக்கு நாலைந்து ஆட்டோ இருக்கு. பந்தா இல்லாத மனுஷன். குறிப்பிட்ட ஒரு சிலருக்காகத் தான் ஓட்டுவாங்க. ரொம்ப கேரிங் டைப். உங்களுக்கு நல்ல பாதுகாப்பா இருப்பாங்க.”

சொன்ன நேரத்திற்கு வந்த சேகரிடம், பெண்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி, “எங்க ஊர் பக்கம் உள்ள பொண்ணுங்க அண்ணா. அவங்களுக்கு பெர்சனலா ஆட்டோ ஓட்டணும். சென்னைக்கு இப்பதான் முதல்முறை வந்திருக்காங்க. மாசத்துக்கு இவ்வளவுன்னு பேசிக்கலாம்” என்றார்.

“பணம் பற்றி என்னம்மா. அதை நான் பார்த்துக்கறேன். பொண்ணுங்க பாதுகாப்பா போகணும் வரணும் அவ்வளவுதான? நான் இருக்கேன் கவலைப்படாதீங்க” என்றார்.

“சரிங்கண்ணா. அதான் உங்களைக் கூப்பிட்டேன். இனி இவங்களைப் பற்றிய பயம் இல்லை. முதல்ல கோவிலுக்குப் போகணுமாம். கோவிலுக்குக் கூப்பிட்டுப் போயிட்டு, ஆபீஸ் போங்க” என்றதோடு இருவருக்கும் வாழ்த்துச் சொல்லி அனுப்ப, இருவரும் நன்றி சொல்லி கிளம்பினார்கள்.

ஆறரை மணிக்கெல்லாம் கோவிலில் இறக்கிவிட்டு, “நான் வெளியே இருக்கேன். இந்த கார்டு வச்சிக்கோங்க. வெளியே வந்ததும் கால் பண்ணுங்க. போன் இருக்குல்லம்மா? என கேட்டார்.

“இருக்கு அங்கிள்” என்றனர்.

அதேநேரம் காரிலிருந்து இறங்கிய வெற்றி, “நான் காரைப் பார்க் பண்ணிட்டு வர்றேன். நீங்க உள்ளே போங்க” என்றார்.

“அப்பா விநாயகர் சந்நிதி முன்னாடி நிற்கிறோம். நீங்க வாங்க” என்று உள்ளே சென்று நேரமாகியும் வெற்றி வரவில்லை என்றதும் சரண் அங்கேயே நிற்க, பாட்டியும், அத்தையும் சேர்ந்து, “வாடா. அப்பா வருவான். முதல்ல உள்ள போ. அத்தைக்கு வேற டைம் ஆகுது” என்று சொல்லி அவனை இழுத்துச் செல்ல, சரண் ஒருபுறமும், ஆராதனா மறுபுறமும் நின்றிருந்தார்கள்.

“அர்ச்சனைக்கு கொடு பாப்பா” என்று நியாவிடம் சொன்னதும்,

“பாட்டி அப்பா வரட்டும்” என்று வரும் வழியை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.

“அவன் வர்றப்ப வரட்டும். சந்நிதானத்துல ரொம்ப நேரம் நிற்க விடமாட்டாங்க” என்றார்.

எதிரிலிருந்த ஆராதனா அர்ச்சனைக்குக் கொடுக்கையில், “சரவணன் பெயருக்கு அர்ச்சனை” என்றதோடு அவன் ராசி நட்சத்திரமும் சொன்னாள்.

அதேநேரம், “சரணு நீயே இதைக் கொடுப்பா” என்று பாட்டி கொடுத்ததும், அவன் திரும்பிய அதே வினாடி, அவளும் திரும்பிப் பார்த்தாள்.

அவளுக்குப் பாட்டி சொன்னது ‘சரவணன்’ என்று காதில் விழுந்தது. இருவர் பார்வைகளும் சந்திக்க, சரணுக்குள் அவள் முகம் அந்த நொடி, அழகாக, ஆழமாகப் பதிந்தது.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top