• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
24



மனம் மனைவியின் முதல் சந்திப்பிற்கு செல்ல, உதடுகளோ,

மூடுபனியும், முன்னூறு நிலவும்
ஒன்று சேர்ந்து - முக்கோடித் தேவர்கள்
ஆசீர்வதித்து வரம் தந்ததுபோல்
மலராய், மலர் தேடும்
வண்ணத்துப் பூச்சியாய்!
வண்ணத்துப் பூச்சியின் வண்ணமாய்!
வண்ணங்கள் ஒன்று சேர்த்து சமைத்த,
வானவில்லின் வடிவாய் வந்த
பூந்தளிரென கண்டேனே
என் தேவதையை!
என் கண்களுள் உனை நிரப்பி,
காதல் காவியம் படைக்க
மனம் விளைகிறது!
நான் கண்ட பெண்களிலே - எனை
எனக்கே அறிமுகம் செய்வித்தவள் நீயே!
உனைக் கண்ட அந்த நொடி,
என் மனம் உனைச்சேர்ந்து
உயிர் கலந்ததடி!

சற்று நிறுத்தியவன் சில நொடி மௌனத்தின் பின், “அப்பொழுதுதான் அது நடந்தது. அவள் வந்த காருக்கு முன்னாடி வந்த லாரியை ஒரு பெரியவர் க்ராஸ் செய்ய, அதற்குள் மினிலாரிக்காரன் சுதாரித்து சடன்ப்ரேக் போட, பின்னால வந்த அவளோட கார் இதை கவனிக்காமல் மோதிருச்சி. ஒரு செகண்ட் இந்த உலகமே இடிஞ்சி என் தலையில விழுந்த மாதிரி இருந்துச்சி. நான் வேகமா இறங்கி போய் பார்த்தா, என் தேவதையின் முகம் முழுக்க சேதாரம்.”

“நாங்க வந்த கார் அந்த காரை முந்தாம அது முன்னாடியே போயிருந்தாலோ, இல்ல அந்த காரை க்ராஸ் பண்ணினதும் நாங்க நிற்காம அதே ஸ்பீடுல போயிருந்தாலோ, இந்த ஆக்ஸிடெண்ட் நடந்திருக்காது. அதே டைம் எனக்கானவளையும் பார்த்திருக்க முடியாது. இருந்தாலும் அவள் சேஃபா இருந்திருப்பாள்னு தோணிச்சி. ப்ச்... விதி நான் அவளைப் பார்த்த மூணே நிமிஷத்துல எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சி. அப்ப தோணினது இது தான்.”

நான் கண்ட அந்த நொடி
உனை என் கண்களுள்
பூட்டி வைக்கும் முன்னே,
உடைந்து சிதறி,
உருவம் கலைந்து போனது
நீ மட்டுமல்ல,
என் மனமும்தான்!
இமைக்க மறந்த
இமைகளையும்,
சுவாசிக்க மறந்த
மூச்சுக் காற்றையும்,
துடிக்க மறந்த
இதயத்தையும்,
உணர்ந்தேனடி நானும்!
உயிர் இருந்தும்
உயிர் பிரியும் வலியால்,
உனை மீட்க வழியறியாமல்
பித்தாய் அலைந்தேனடி!
உன் சுவாசம்
உணர்ந்த பொழுதுதான்
என் சுவாசம் எனக்கே
தெரிந்ததை அறிவாயா!

சொல்லி முடித்தவனுக்கு அன்றைய நினைவின் வலிகள் முகத்தில் தெரிய, அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுபாவிற்கு அவளறியாமல் கண்களில் கண்ணீர் ஆனந்தமாக வழிய, தன்மேல் அவன் கொண்ட காதலை உணர்ந்த இந்த நொடி ‘ஜீவாவின் மனைவி நான்’ என்ற பெருமை உள்ளம் முழுவதும் நிறைந்தது.

தன்னை சமாளித்த ஜீவா, “விபத்துக்கு அப்புறம் மேரேஜ்கு சம்மதிக்கவே மாட்டேன்னுட்டாங்க. நான் போய் கேட்டு மறுத்திட்டா என்ன பண்றதுன்னு, பெரியவங்களை விட்டு பேசி சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள ஒரு வழியாகிட்டேன்னா பாருங்களேன். அப்புறம் தான் ஃபேஸ் அன்ட் நெக் சர்ஜரிலாம் பண்ணி ஃபேஸ் சரியாச்சி.”

“க்ரேட் சார். உங்க ஒய்ஃப் போட்டோ இருக்கா?”

“ம்... இருக்கு. ஆனா, விபத்துக்கு முன்னாடி நான் பார்த்த என் தேவி இவள்தான்” என செல்லில் இருந்த போட்டோ காண்பிக்க...

“சார் நிஜமாகவே தேவதைதான். சூப்பராயிருக்காங்க சார்.” அனைவரும் கோரஸாக சொல்ல, “இப்ப உள்ள போட்டோ காண்பிங்க சார்” என்று ராஜேஸ்வரி மிஸ் கேட்டார்.

“நாளை மறுநாள் என் ஒய்ஃப்கு வளைகாப்பு. அப்ப வாங்க போட்டோ என்ன நிஜத்தையே உங்க கண் முன்னால நிறுத்துறேன்” என்று யாருமறியாமல் தன்னையே பலவித உணர்வுகளுடன் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து கண்ணடித்தான் அவளின் கள்வன். அதில் முகம் சிவந்தவள் வெட்கத்தில் தலைகவிழ... அதை ரசித்தவன் அதன்பின், அவர்களிடம் பள்ளியைப் பற்றி பேச ஆரம்பித்ததும் சுபா தன் அண்ணனிடம் சென்றாள்.

நேருக்கு நேர் தங்கையைப் பார்த்தும் சற்றுத் தடுமாறிய ப்ரேம் பாசத்தை மறைக்க இயலாது, “தேவிமா!” என அருகில் வந்தவனை கைநீட்டி தடுத்து, “நீ என்கிட்ட பேசாதண்ணா. உன்னைத்தான நான் எல்லாமாகவும் நினைச்சிருந்தேன். எனக்கு ஒரு பிரச்சனைன்னா நீ என்னோட இருப்பன்னு நம்பினேன். ஆனா, நீ என்னை கை விட்டுட்டல்லணா. எல்லாரும் சேர்ந்து நான் ஒரு அனாதைன்ற ஃபீல் கொடுத்துட்டீங்கள்ல? என்னை, என்னோட உணர்வுகளுக்கு உங்ககிட்ட மதிப்பு இல்லதான. போ நீயும் வேண்டாம். உன்னோட அப்பா, அம்மாவும் வேண்டாம். நான் கடைசிவரை தனியாகவே இருந்துக்கறேன்” என்று அழுதாள்.

அனாதை என்ற சொல்லில் அடிவாங்கிய ப்ரேமின் கண்கள் கலங்க, “என்னடா அனாதைன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுற? இதுக்கு நீ என்னைக் கொன்றிருக்கலாம் தேவிமா. நாங்க உன்னை விட்டுருவோம்னு நீ எப்படி நினைக்கலாம்? நாங்க உன்னைவிட்டு விலகியிருந்தாலும், நீ எங்க கண்காணிப்புலதான்டா இருந்த. அப்பா பேச்சை நாம என்னைக்காவது மீறியிருக்கிறோமா சொல்லு. அப்பா உன்னை வீட்டைவிட்டு வெறியேறச் சொன்னதும் தாண்டவ்கு நான்தான் மெசேஜ் அனுப்பி என்னோட ஸ்தானத்துலயிருந்து உன்னை பாதுகாக்கச் சொன்னேன். மாமாவுக்கு அட்டாக் வந்தததா தாண்டவ் சொன்னதும், உனக்கு முன்னாடியே ஜீவாவுக்கு இன்பார்ம் பண்ணினேன். நீ எங்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டதால ஃபேமிலியோட வந்தோம். நீ பார்க்காத நேரத்துல நாங்க உன்னைப் பார்த்துன்னு ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம். அந்த டீச்சர் பிரச்சனை வந்தப்பவும் நான், அப்பா, ஜீவா மூணுபேரும் சேர்ந்துதான் அதை சால்வ் பண்ணினோம். அப்பாவும் உன்னை எந்த நிமிஷமும் கைவிடல. எங்களை நம்பு தேவிமா.”

“ஜீவாவை நீ புரிஞ்சிக்கணும்னு தான் நாங்க நினைச்சோம். உன்னைப் புரிஞ்சிக்காம இல்லடா. உன்னை எங்க எல்லோருக்கும் புரிஞ்சிது. அதை வெளிக்காட்டினா உங்க ரெண்டு பேரோட பிரிவு நிரந்தரமாகிருமோன்ற பயம்தான் விலக வைத்தது. அதுக்குப் போயி “அனாதை”ன்னெல்லாம் பேசிட்டியே தேவிமா. நீ இந்தளவுக்கு ஃபீல் பண்ணியிருப்பேன்னு தெரியாதுடா, தெரிஞ்சிருந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டு உனக்கு துணையா வந்திருப்பேன்மா. ப்ளீஸ் புரிஞ்சிக்கோமா!” என்று கண்ணில் நீருடன் தங்கையின் கைபிடிக்க...

அதே நேரம் ராஜனும், சுந்தரியும் வந்து அதை உண்மையென்று சொல்லி மகளின் தலையை வருட அந்த இதத்தில் தாயைக் கட்டியணைத்து, “நீங்க கூட என்னை கண்டுக்காம இருந்துட்டீங்கள்லம்மா? மாமாக்கு அட்டாக் வந்தப்ப நான் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா? அப்பதான் எனக்கு அந்த ஃபீல் வந்தது” என்று அனாதை என்ற வார்த்தையை தவிர்த்து தேம்பி அழுதாள்.

“பாப்பா அழக்கூடாது. அன்னைக்கு நீ கர்ப்பமாயிருக்கிற விஷயம் எங்களுக்கு முதல்ல தெரியாது. தெரிஞ்சப்ப முன்னாடியே சொல்லலையேன்ற வருத்தம். சாதனாவுக்கு அப்பான்றதால அவளுக்கு பாதிப்பு அதிகமா இருக்கும்னுதான் அவளை சமாதானப்படுத்தினேன். அதுவுமில்லாம யாருமில்லைன்ற எண்ணத்துல, உன் புருஷனோட போய் சேருவன்ற எண்ணத்துலயும் சும்மா இருந்திட்டோம்.”

மகளின் அழுகை நிற்காமலிருக்க, “பாப்பா மாசமாயிருக்கிற பொண்ணுங்க ரொம்ப நேரம் அழுதா குழந்தைக்கு ஆகாதுன்னு சொல்வாங்க. கண்ணைத் துடைச்சிக்கோ” என மகளின் கண்ணீர் துடைத்து விட்டு, “சரி இப்பவாவது உன் பிரச்சனை முடிஞ்சிதா?”

“இல்ல நான் கோபமா இருக்கேன்” என்று ப்ரேமிடம் திரும்பி “அண்ணா ஆக்ஸிடெண்ட் ஆனப்ப உள்ள போட்டோஸ் அப்புறம் மேரேஜப்ப எடுத்த போட்டோஸ் எனக்கு அனுப்பு” என்றாள்.

“ஏன் தேவிமா வேண்டாமே. இப்பத்தான் எல்லாம் சரியாகிடுச்சே.”

“உன்னால அனுப்ப முடியுமா? முடியாதா?”

ராஜன், ப்ரேமிடம் அனுப்ப சொல்லி தலையசைக்க, “சரி அனுப்புறேன்” என்றான்.

“இப்ப அனுப்பு.” அடுத்த ஆர்டர் போட...

“பங்ஷன் முடியட்டுமே தேவி” என்றான்.

“அதெல்லாம் பிரச்சனையில்ல. எனக்கு இப்ப வேணும் என்றதும் தன் கைபேசியிலிருந்த தங்கையின் போட்டோஸ் அனைத்தையும் அனுப்பினான்.

சுபாவிடம் வந்த சாதனா “அண்ணி எங்கண்ணனை மன்னிச்சாச்சா?” என சந்தோஷத்தில் மனம் துள்ள...

“உங்கண்ணன் என்ன தப்பு பண்ணினாங்க மன்னிக்கிறதுக்கு? நான் விலகியிருந்தது என்மேல உள்ள கோபத்துல.”

“அடப்பாவி அண்ணி. ப்ளேட்டையே மாத்திட்டீங்களே!”

“ப்ளேட்டெல்லாம் மாத்தல. அன்னைக்கு நடந்த சீனைத்தான் மாத்தினேன்.”

“பாவம் எங்கண்ணன்.”

“யாரு உங்கண்ணன் பாவமா? அங்க ஹால்ல போயி பாரு. கோபியர் புடைசூழ இருந்த கண்ணன் மாதிரி டீச்சர்ஸ் நடுவுல உட்கார்ந்து ப்ளாஷ்பேக் ஓட்டிட்டிருக்காங்க.”

“ஓஹ்ஹோ! அதான் ஜெலஸாகி வந்துட்டீங்களோ!”

“ஹா...ஹா எனக்கு ஜெலஸா.. நோ சாதுமா. எத்தனை ரசிகைகள் இருந்தாலும், அவங்க மனசுல உயிரா, உணர்வா இருக்கிற ஒரே பொண்ணு நான்தான்ற பெருமைதான்” என்று கண்ணடித்துக்கூற...

“அண்ணி நீங்களா நீங்களே தானா? ஹையோ... என்னால நம்பமுடியலையே?” ப்ரேமைப் பார்த்து “என்னங்க கொஞ்சம் கிள்ளுங்க” என்றவள் “ஒன் செகண்ட். ஸ்லோவா கிள்ளணும்.” கணவன் போட்ட அடியை வாங்கிக்கொண்டு “நிஜம்தான். மாமா, அத்தை குடை எடுத்துட்டு வந்திருக்கீங்களா?” என்றாள்.

“பரிந்தவர்கள் இல்லையென்று தலையாட்ட... “அப்ப நாம எப்படி வீட்டுக்குப் போறது. சே... இன்னைக்கு பார்த்து மறந்திட்டேனே” என்று அண்ணியின் கன்னத்தில் அன்பாய் முத்தமிட்டு தன் சந்தோஷத்தை வெளியிட்டாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் சுபா, மாமியாரிடம் வந்து “அத்தை நான் வீட்டுக்குப் போயி ரெஸ்ட் எடுக்கிறேன். நீங்க எல்லாம் முடிச்சிட்டு வாங்க” என்றாள்.

என்ன? ஏதென்று கேட்க வாய்திறந்த வந்தனாவிற்கு, சுபாவின் பார்வையிலிருந்த ஏதோ ஒன்று அவரைத் தடுக்க, “சரிமா” என்று தாண்டவை அழைத்து வீட்டில் விட்டுவரச் செய்தார்.

பஃபே முறையிலுள்ள உணவை உண்ண அழைத்து அனைவரையும் உபசரித்து, மனைவி சாப்பிட்டாளா என்று அவளைத்தேட... வீட்டிற்கு சென்றுவிட்டாளென்று தாய் சொன்னதும் குழம்பியவன், “எதாவது பிரச்சனையாமா? யாராவது அவளை எதாவது சொன்னாங்களா?”

“பிரச்சனையெல்லாம் இல்லடா நார்மலாதான் இருந்தா. கரெக்டா சொல்லணும்னா முகம் சந்தோஷத்துல இருந்தது. தேவி இன்னும் சாப்பிடல. ஹோட்டல் சாப்பாடு வேண்டாம் ஃபுட் பாய்சனாகிடப்போகுது வீட்ல தோசை மாவு இருக்கு தோசை ஊத்திக்கோங்க” என்று பையனை அனுப்ப... நேராக தந்தையிடம் வந்து விஷயம் சொல்லி, மாமனார் வீட்டிலுள்ளவர்களிடமும் விடைபெற்று, ஹரியிடம் “நாளை சந்திக்கிறேன்டா” என்று வேகமாக வீடு சென்றான்.

காரில் செல்லும் வழியெல்லாம் “என்னாச்சி அவளுக்கு? டீச்சர்ஸ் கூட பேசிட்டிருந்ததை தப்பா எடுத்து, நான்தான் ஆக்ஸிடண்ட் பண்ணியதுன்னு நினைச்சிட்டாளா? டேய் ஜீவா இன்னுமா உன் பிரச்சனை நீளுது. இதுக்கு என்டிங்கே கிடையாதா? கடவுளே!”

"அடடடடடடா... இவன் வேறு அடிக்கடி எனையழைத்து தொல்லை செய்கிறான். போடா டேய் உன் மனைவியைப் பார். நல்லதே நடக்கும்" என்று அடுத்து கேட்ட குரலுக்கு செவிசாய்க்கச் சென்றார்.


வீட்டிற்கு வந்தவன் மனைவியைத் தேட, “தேவி எங்கேயிருக்க?? அவனின் குரலுக்கு பதில் குரல் இல்லையென்றதும் எல்லா அறைகளிலும் தேடிப்பார்த்து கடைசியில் மொட்டைமாடி சென்றான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
விழாவில் மாமியாரிடம் சொல்லி வீட்டிற்கு வந்தவள், தன் அறைக்குள் வந்து ப்ரேம் அனுப்பிய போட்டோஸ் பார்த்தாள். ஒவ்வொரு படத்திலும் முகமெங்கிலும் கட்டுப்போட்டு முகமென்று ஒன்று இல்லாதது போலிருந்தது. மணமேடையில் அருகிலிருக்கும் சமயமாகட்டும், தாலிகட்டும் சமயமாகட்டும், அக்னி வலம் வரும்போதாகட்டும், ஒரு சின்ன முகச்சுளிப்போ, சலிப்போ, தன்னைப் பிடிக்கவில்லையென்ற எண்ணமோ ஒரு நொடிகூட வந்ததுபோல் தோன்றவில்லை அவளின் கணவனுக்கு. ஜீவாவின் முகத்திலிருந்தது சந்தோஷம் மட்டுமே!

எதையோ வென்றுவிட்ட, கிடைக்கவே கிடைக்காதென்று நினைத்த பொக்கிஷம் கிடைத்த பொலிவுதான் இருந்தது. “என்னாலயே என் முகத்தைப் பார்க்க முடியலையே? என்னைப் பார்த்த மூணு நிமிஷத்துக்குள்ள எப்படி சிவா?”

“வருஷக்கணக்குல பழகிய பொண்ணுக்கு சின்ன காயம்னாலே எனக்கும், அந்தப் பொண்ணுக்கும் சம்பந்தமே இல்லைன்னு சொல்ற ஆண்கள் மத்தியில, என்னை இந்த கோலத்துல சிவா மட்டுமில்லாம, மாமா, அத்தைகூட கல்யாணத்தை ஏத்துக்கிட்டது வெரி க்ரேட். அப்படி என்ன இருக்கு என்கிட்டன்னு என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டீங்க சிவா? எவ்வளவு நல்ல உறவுகள் எனக்கு. உணர்வுகளைப் பார்த்த நான் ஏன் உறவைப் பார்க்க மறந்தேன்.”

“ஆனாலும், ஒரு பெண்ணா என்னோட ஃபீலிங்க்ஸ் ஹஸ்பண்ட்னு இன்னொருத்தனை நினைச்சது, என் புருஷனுக்கு செய்த துரோகமில்லையா? நடந்ததை சொல்லாமல் விட்ட அவங்களும் துரோகிதான... கடவுளே! யோசிச்சி யோசிச்சி மூளைதான் குழம்புது. தீர்வு கிடைக்கலையே!”

நீயும் என்னை கூப்பிட்டியாமா. இதோ வர்றான் பாரு உன் புருஷன் என்று கடவுள் சொன்னார்.

மொட்டை மாடியில் சுவற்றில் வயிறு இடிக்காத அளவிற்கு முழந்தாலிட்டு அமர்ந்து முகம் புதைத்திருந்தவள் தலைநிமிர்ந்து பார்க்க, எதிரில் ஜீவா நிற்க, தன்னிடமிருந்து நிறைய விஷயங்களை சொல்லாமல் மறைத்த கணவனை முறைத்துப் பார்த்தாள்.

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்

குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்

கண்களிரண்டும் காதல் சொல்ல இருந்தும் நடித்தாய்.

அடிக்கடி முள்ளெனத் தைத்தாய்

ஆயினும் பூவெனப் பூப்பாய்

இதயக் கதவை இரக்கம் கொண்டு எனக்காய் திறப்பாய்.

இந்த காதலென்பது ஒரு மழலை போன்றது

அது சிணுங்கச் சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்

உனைக் கெஞ்சிக் கேட்கிறேன்

எனை கொஞ்ச கேட்கிறேன்

நீ கேட்க மறுக்கிறாய் தொடர்ந்து நடிக்கிறாய்

உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர...”

பாடியபடியே மனைவியினருகில் வந்தமர்ந்து, அவளின் கண்களை நோக்கி... “என்ன பிரச்சனை தேவி உனக்கு? நான் உன்கிட்ட உண்மையை சொல்லாததால வந்த பிரச்சனையா? இல்ல நமக்குள்ள நடந்த உறவுதான் பிரச்சனையா?”

‘உறவுதானே பிரச்சனை. இன்னொருவனை எண்ணி கணவனுடன், சே...’ நினைக்கும்போதே அருவருப்பாக இருந்தது.

அவள் முகத்தை ஆராய்ந்தவன், “ஓ... ரெண்டாவது சொன்னதுதான்ல. அதுதான் பிரச்சனைன்னா என்னோட கேள்விக்கு பதில் சொல்லு நமக்குள்ள அது நடந்தப்ப உனக்கு கண் தெரியுமா? தெரியாதா?”

அன்றைய நினைவில் கன்னம் சிவக்க தலைகவிழ்ந்தபடி “தெரியும்” என்றாள்.

அவளையே பார்த்திருந்தவன், “ஓ... அப்ப நான் கண்ணு தெரியாத பொண்ணுகிட்ட உரிமை எடுத்துக்கலை இல்லையா?” என்றதும் சட்டென்று தலையுயர்த்தி கேள்வியாய் கணவனைப் பார்க்க...

“இதுல என்னோட தப்பு இல்லன்னு நீயே சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ். என்னடா கண் தெரியாத பொண்ணுகிட்ட உரிமையெடுத்து, கண் தெரிஞ்சதும் ரொம்ப ஃபீல் பண்றாளே முன்னாடியே உண்மையைச் சொல்லாம தப்புப் பண்ணிட்டோமோன்னு கில்டியா இருந்தது. இப்ப அது இல்லன்னு ஆகிருச்சி. உனக்கு கண்ணு தெரிஞ்சப்பவே நீ என்னைப் பார்த்திருப்ப. அதுக்கப்புறம்தான நமக்குள்ள எல்லாம் நடந்திச்சி. அப்பவே தடுத்திருக்கலாமே. ஏன் செய்யல? செய்யுறதையெல்லாம் நீயும் சேர்ந்து செஞ்சிட்டு, இப்ப என்னை எதோ குற்றவாளிபோல எண்ண வைக்கிற?” என்று சற்று வேகமாகவே கேட்டான்.

கணவன் கேட்ட கேள்விகளுக்கு விடையில்லாமல் வாயடைத்துப் போனாள் சுபா. ‘ஜீவா கேட்ட அனைத்தும் சரிதானே! கண்ணு தெரிந்த பிறகுதானே அந்த தவறு நடந்தது. அதை இல்லையென்று சொல்ல முடியாதே! எது மறைத்தது கண்களை? மழைநீரா இல்லை உடல் உணர்ச்சிகளா? தன் கணவன் என்ற எண்ணமும் தன்னுடைய பலநாள் ஏக்கமும் சேர்ந்துதானே. அதுவும் பகலில் அவன் முகம் பார்க்கவில்லையென்று சொன்னால் குழந்தை கூட நம்பாது. அப்படியென்றால், என் உள்ளத்து உணர்வுகள் பொய்யென்ற வாதமல்லவா வருகிறது. எப்படி எந்த வகையில் என்னை நிரூபிப்பது மறைத்தது அவனென்றால், அதை அறியாதது நானல்லவா!”

‘தப்பு பண்ணிட்டேனா? ஜீவாவை விலக்கி வைத்து எங்களுக்குள் உள்ள இடைவெளியை அதிகப்படுத்தி விட்டேனோ?’ கணவனை ஏற்கனவே ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்த மனது தன்னிடமும் உள்ள தவறை எண்ணி வருந்தினாலும், அவனிடம் எப்படி தன் மனமாற்றத்தைச் சொல்வது என்றெண்ணியவள், ம்கூம்... இப்படியே இருப்பது நல்லதல்ல உடனடி முடிவுதான் சரியென்று தோன்றியது.

“ஐம் சாரி சிவா நான் தப்பு பண்ணிட்டேன். ஆனா, நான் என்ன பண்றது அந்த சூழ்நிலையில் பிரிவுதான் சரின்னு தோணிச்சி.”

“இதுக்குமேல நான் உனக்கு என்ன க்ளியர் பண்ணனும் தேவி? சரி கண் தெரிஞ்ச பிறகு அன்னைக்கு நான் உன்னைத் தூக்கும்போது ஏன் என்னைப் பார்க்கல?”

தலை குனிந்தபடி, “அ...அது கண்ணுல தண்ணி பட்டதால...”

மனைவியின் வெட்க முகமும், திணறலும் ஏதோ சொல்ல உள்ளுர எழுந்த புன்னைகையுடன், “தண்ணி பட்டதால” என ஜீவா எடுத்துக்கொடுக்க...

“எ...னக்கு கண்ணு திறக்க முடியல. திறக்க முயற்சி பண்ணினப்ப வெ...வெட்கத்துல பார்க்கல. எல்லாம் முடிஞ்ச பிறகு பார்க்கலாம்னா, மழையினால இருட்டு வேற. நீங்க எல்லா ஜன்னலையும் மூடிட்டீங்களா, அப்புறம் அவசரமா வெளியே கிளம்பி போயிட்டீங்களா அதான் பார்க்க சந்தர்ப்பம் இல்லாமல் போச்சி.”

“திரும்பி வரும்போது நீங்க மட்டும் வந்திருந்தா இந்தளவு மனசு பாதிக்குமா தெரியல. ஆனா, அந்த ராஜ் உங்க பின்னாடியே வந்தானா, அவனை நீங்கன்னு நினைச்சி கண்தெரிஞ்சதை சொல்லணும்ன்ற வேகத்துல அவனை நான் கட்டிப்பிடிச்சிருந்தா, இல்ல கையை பிடிச்சாகூட வைங்க, அதனால பாதிப்பு யாருக்கு? நான் கால் இடறும்போது சுப்பூன்னு கூப்பிட்டு வந்து என்னைப் பிடிச்சீங்க பாருங்க. அப்பதான் மனசுல ரொம்ப அடிவாங்கினேன். அதே டைம் சந்தோஷப்படவும் செஞ்சேன். நல்லவேளை அந்த ராஜை நான் மேரேஜ் பண்ணலைன்னு. கடைசிவரை கண் தெரியாமலே இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமேன்னு எத்தனை நாள் நினைச்சிருக்கேன் தெரியுமா?” மனதில் ஏற்பட்ட வலி சுபாவின் முகத்தில் தெரிய...

“சாரிடா சுப்பு. ரியலி சாரி. நான் முதல்ல உன் கண் சரியானதும் சொல்லலாம்னு நினைச்சேன்” என்றவன் அவனின் சூழ்நிலை அனைத்தையும் சொன்னான்.

மெல்ல கணவன் தோள் சாய்ந்தவள், “என்னால உங்களுக்கு எந்த ப்ரயோஜனமும் இல்லைங்க. பேசாம என்னை டைவர்ஸ் பண்ணிட்டு வேற மேரேஜ் பண்ணிக்கோங்களேன்.”

“கேடிடி சுப்பு நீ. அதெப்படி டைவர்ஸ் பண்ணனுமா? அதை நான் செய்ய மாட்டேன்னு தெரிஞ்சிதான வார்த்தையை விடுற?”

ஹிஹி என்று அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவள், “என்னைத்தவிர யாரையும் ஒய்ஃப் ஸ்தானத்துல வச்சிப் பார்க்க மாட்டீங்கன்னு தெரிஞ்சேதான் தைரியமா சொன்னேன்” என்று அவனின் காதைக் கடிக்க...

அவளின் தலையைக் கலைத்து, அவள் வயிற்றில் கைவைத்து நம்ம குழந்தையோடு பார்க்கும்போது, “இந்த சுப்பு இன்னும் சூப்பராயிருக்கா” என்றான்.

“நான் உங்க குழந்தையோட வளர்ச்சியைக் கூட உங்களை உணரவிடலைதான?” என கண்கலங்கினாள்.

மனைவியின் கண்ணீர் துடைத்து, “நீ எப்பவும் முழிச்சிருக்க மாட்டியே சுப்பு” என்று கண்ணடிக்க...

“கேடி அப்பாவும், பிள்ளையும் நைட் ஷிப்ட் வேலை செய்தீங்களா?”

“எஸ்மா. அம்மா உன்கிட்ட கதவை உள்ள பூட்டாமல் தூங்குன்னு சொன்னாங்கள்ல, அது ஐயாவோட காதுலயும் விழுந்துச்சி. அதான் நானும் என்னோட ஜுனியரும் நைட்ல மீட் பண்ணுவோம். ஆனாலும் நீ சரியான கும்பகர்ணிடி. ஒருத்தன் தூக்கத்தைக் கெடுத்துட்டு ஹாயா தூங்குற.”

“நீங்க இங்க வர்றதுக்கு முன்னாடிவரை என்னால நைட்ல தூங்க முடியாது சிவா. மனசுல ஒருவித தவிப்பு, ஆத்திரம் எல்லாரும் என்னை நிராகரிச்ச வலின்னு பல நினைவுகள் வந்து என் தூக்கத்தைக் கெடுக்கும். நீங்க இங்கேயே வந்து, அதுவும் என் பக்கத்துல இருக்கிறீங்கன்னதும் தான் நான் நிம்மதியா தூங்கினேன்.”

கண்களில் மின்னலுடன், “அப்படிப்பட்டவதான் நீங்க பக்கத்துல இருந்தா உங்களை வெறுத்துடுவேன்னு சொன்னியாக்கும்.”

“அ... அது அந்த டைம் என் மைண்ட்ல அப்படிதான் தோணிச்சி. இதான் சரின்னு உள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டுட்டே இருந்திச்சி. சாரி சிவா ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல.”

“ஆமா இப்ப சொல்லு. சரி சாப்பிடாம வந்ததா அம்மா சொன்னாங்க சாப்பிடலாமா?”

“ப்ச்... சந்தோஷத்துல எனக்குப் பசிக்கலைங்க.”

“எனக்கும் என் பிள்ளைக்கும் பசிக்குதேடா.”

“போ இன்னைக்கு நீயும் உன் பிள்ளையும் பட்டினிதான்” என கணவனை மிரட்டி மார்பில் சாய்ந்தவள், “எப்படி சிவா ஒரே டைம்தான். வயித்துல உங்க குழந்தை. என்னால இன்னும் நம்ப முடியலை தெரியுமா?”

“காட்ஸ் கிஃப்டுடா சுப்பு” என்று வயிற்றில் முத்தமிட்டான்.

‘டேய்! ரொமான்ஸ் பண்ணும்போதாவது என்னை விடேன்டா. அப்பக்கூட என்னை டிஸ்டர்ப் பண்ணனுமா?’ என கடவுள் ஒருபுறம் புலம்பியதை இவர்கள் அறியவில்லை.

“உண்மைதான்ங்க” என்றபடி இருவரும் கீழே செல்ல, சுபா தோசை ஊற்றியபடி, “சாம்பார், தக்காளி சட்னி ஓகேவாங்க?” என கேட்டாள்.

‘ந” எது குடுத்தாலும் ஓகேதான்டா.”

“ஓ... அப்ப வெறும் மாவை அப்படியே குடிச்சிக்கிறீங்களாங்க. எனக்கும் வேலை மிச்சம் பாருங்க” என்று கணவனை கால்வார,

“ஓ... ஷ்யூர்டா சுப்பு. என்னோட சேர்ந்து நீயும் குடிப்பதான?” பதிலுக்கு கால்வாரி கிச்சன் தேடிச் சென்றவன், மனைவியின் முகத்தில் பூத்த வியர்வைத் துளிகள் அவனை ஈர்க்க... அவளின் பின் சென்றணைத்து “சுப்பு சூப்பராயிருக்கடி!” காதில் சொல்லி, “நான் எடுத்தப்ப இருந்ததை விட, நீ கட்டினதும்தான் இந்த ட்ரஸ் சூப்பராயிருக்கு.”

“ஹேய் சிவா! இதை நீங்களா வாங்கினீங்க?”

“ஆமா, தெரியாதா? நீ போடுற சுடிதார்லயிருந்து, சாரி வரை ஐயாவோட கலக்ஷன் தான்” என்று காலரைத் தூக்கிவிட்டான்.

“ஓ... நான் அம்மா குடுத்தனுப்பினாங்க நினைச்சேன். நீங்க எடுத்ததா அதான் சூப்பரா செலக்ட் பண்ணியிருக்கீங்க. என்னை செலக்ட் பண்ணின மாதிரி.”

“குசும்புடி உனக்கு. நான் எடுத்ததுன்னு தெரிஞ்சிருந்தா, என்மேல உள்ள கோபத்துல இதை கொண்டு வந்திருக்கமாட்டதான?” என்று இறங்கிய குரலில் சொல்ல...

அவன் குரலிலுள்ள வருத்தத்தை போக்க கணவனை தன் நெஞ்சோடணைத்து, “உண்மையை சொல்லணும்னா கண்டிப்பா அதான்ங்க நடந்திருக்கும். சாதனா எடுத்து வைச்சிட்டுப் போன பிறகு, கப்போர்ட் பார்த்தேன் அந்த ட்ரஸஸ் அழகாயிருந்தது. அதனால நான்தான் மாத்தினேன்.”

“இருடி உங்கம்மாகிட்ட சொல்றேன். அத்தை உங்க செலக்ஷன் சரியில்ல சொல்லிட்டான்னு.” பின் இருவரும் சாப்பிட்டு முடித்ததும் சுபா தன்னறைக்கச் செல்ல, பின்னாடியே சென்றவனை கவனிக்காததுபோல் செல்ல... “சுப்பு நான் லோன்லியா ஃபீல் பண்றேன்.”

“அதுக்கு!”

“அதை நீதான் தீர்த்து வைக்கணும்.”

“முடியாது போ.”

“முடியும்டி சுப்பு” என்று மனைவியை சேர்த்தணைத்தவனிடம், “எப்படி முடியும்?” என்று கிறங்கலாய் கிசுகிசுக்க...

“இப்படித்தான்” என்று நெற்றியில் ஆரம்பித்த முத்தம் முகம், கழுத்தென்று ஊர்வலம் நடத்தி இதழில் இளைப்பாறியது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top