- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
24
தன் முன்னே நின்றிருந்தவனிடம் “யார்னு தெரிஞ்சிதா?” என்றான் ஜெய்ராம்.
“அந்தப்பொண்ணு அணைப்பட்டியில அவள் அத்தையோட இருக்கிறாள்ணே. அந்தப் பையனை வாட்ச் பண்ண வச்சிருக்கிறதா நீங்க காண்பிச்ச ஆள்கிட்டேயும் விசாரிச்சேன். ரொம்ப நாள் பழக்கமில்லையாம். சமீபமாதான் இவங்க ரெண்டு பேரையும் பார்க்கிறதா சொன்னான். அவன் அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி மதுரையில பார்த்திருக்கான். சாதாரணமா இருந்ததால உங்ககிட்ட அதைச் சொல்லல சொன்னான். நான் கவனிச்ச வரைக்குமே அந்தப்பொண்ணு கூடதான் எப்பவும் இருக்கிறான். ரொம்ப உரிமையா பேசிக்கிறாங்க. பேமிலி ப்ரண்ட்னு நினைக்கிறேன். மூணு நாள் முன்னாடி வாடிப்பட்டியில நம்ம பசங்க பார்த்ததா சொன்னாங்க.”
‘இருவருக்குள்ளும் எதோ இருக்கிறது?’ என்னவென்று கண்டுபிடிக்க வேண்டுமென்று மனதினுள் நினைத்து, “சரி தம்பியை ஃபாலோ பண்ணச் சொன்னேனே என்னாச்சி?”
“தம்பி அடிக்கடி வாடிப்பட்டியில இருக்கிற அப்புன்றவர் கூடதான்ணே இருக்கார். அப்புறம் ஒரு டீச்சர் பின்னாடி போறதைப் பார்க்கிறேன்.”
“லவ்வா?” என்றான் ஒரு மாதிரியான குரலில்.
“நம்ம தம்பிதான்ணே பின்னாடி சுத்துறார். அந்தப் பொண்ணுக்கு இவர் யார்னு கூட தெரியாது. அவளை வச்சி எந்தப் பிரச்சனையும் இல்லண்ணே!”
“போட்டோ கிடைச்சதா? யார் அந்தப் பொண்ணுன்னு எனக்குத் தெரியணும்?”
“பதினைந்து வருஷமா ஒரே ஏரியாவுலதான் இருக்காங்க. பக்கத்துல உள்ள தனியார் ஸ்கூல்ல டீச்சாராயிருக்கு. அவளோட அம்மாவும் டீச்சராயிருந்தவங்கதான். இப்ப வீட்லயே ட்யூஷன் எடுக்கிறாங்க. அவங்க அம்மா போட்டோ கிடைக்கலண்ணே. இதான் அந்த டீச்சர்” என்று காண்பித்தான்.
கயல்விழியை அடையாளம் தெரியவில்லை ஜெயராம்கு. ‘ம்.. பொண்ணு அழகா அமைதியாயிருக்கா. என்ன ஜாதியோ! இவ இருந்தா தம்பி நான் சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கமாட்டான். என்ன செய்யலாம்?’ என யோசித்தவன் “நீ போயிட்டு நான் கூப்பிடும்போது வா. அந்த டீச்சரும், அவள் அம்மாவும் எங்க போறாங்க வர்றாங்கன்னு பாரு” என்றனுப்ப அவனின் உள்ளுணர்வு ஏதோ சரியில்லையென்று அறிக்கை விடுத்தது.
‘அன்பு ஏன் அந்த டீச்சருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்? வாடிப்பட்டியில அவனுக்கு என்ன வேலை? ஸ்ரீராம் சுத்துற பொண்ணும் வாடிப்பட்டி. ஏதோ ஒண்ணு நெருடுதே’ என்றெண்ணி தந்தையிடம் ஆலோசனை கேட்க நேரே அவரிடம் சென்றவன் நடந்ததைச் சொன்னான்.
“நமக்குத் தெரியாம எதிரியா? இருக்கக்கூடாதேடா ஜெய். எதிரின்னு தெரிஞ்சதுமே தூக்கிரணும். இல்ல நம்மளை இல்லாமலே பண்ணிருவாங்க. நீ வேற சி.எம்கு நிற்கப்போற. இந்த டைம்ல எந்த இடைஞ்சலும் வரக்கூடாது. அப்புறம் நம்ம அரசியல் வாழ்க்கை ஒண்ணுமில்லாமல் போயிரும். முதல்ல அந்த அன்புவையும் அவனோட அக்காவா சந்தேகப்படுற பொண்ணையும் முடிச்சிரு.”
“எனக்கும் அதுதான் சரின்னு தோணுதுப்பா. நமக்குத் தெரிஞ்சே வளர்ற எதிரியோட பையன் அவன். கையெழுத்து வாங்கிட்டு முடிச்சிரலாம். அதோட தம்பி சுத்துற பொண்ணையும், அவள் அம்மாவையும் அவங்களோட சேர்த்து அனுப்பிரலாம். சொந்தம்னு யாரும் இல்லாததால பிரச்சனையில்ல” என்று கணக்குப் போட... கடவுளும் தன் கணக்கை ஆரம்பித்தார்.
“ஹலோ கார்த்திக் சார்! ரொம்ப நேரமா காக்க வச்சிட்டேனா?”
“நோ நோ இப்பதான் வந்தேன். ஏரியா எப்படின்னு பார்த்துட்டிருந்தேன். நல்ல இயற்கை கொஞ்சும் தனிமையான இடம். அதான் இங்க வச்சி பண்ணிட்டாங்க போல” என்றான் “சி.நாராயணன் அலைஸ் கார்த்திகேயன் சிஐடி ஆபீஸர்.”
“எங்க குலதெய்வம் சார். அடிக்கடி வர்றதுதான்” என்றான் அன்பழகன்.
“உங்க சித்தப்பா எப்படி? குடும்பத்தையே அழிக்கிற வெறினா, உங்க குடும்பத்துக்கும் அவருக்கும் அப்படியென்ன விரோதம்?”
“ப்ச்... அப்படியிருந்தால்தான் பரவாயில்லையே சார். கோவில்ல பொங்கல் வைக்கப்போறோம்னு கூப்பிட்டதே அப்பாவும், தாத்தாவும்தான். நானும் கூடதான் இருந்தேன். அந்தாள் மனசுல என்னயிருந்ததுன்னு அனுபவப்பட்ட பெரியவங்களுக்கே தெரியாதப்ப, ஏழு வயசுப்பையனான எனக்கு எப்படி சார் தெரியும்?”
“ஓகே. உங்களை சொத்துக்காகத்தான் விட்டு வச்சிருக்கிறதா சொல்றீங்க? ஏன் இன்னும் உங்களை எதுவும் பண்ணல? ஒருவேளை உங்க சித்தப்பா சொன்னதா நீங்க சொன்னது மன பிரமையா இருக்கலாமே?”
“சார் சிபிஐனா சந்தேகப்படணும்தான். அதுக்காக நடந்ததையே இல்லன்னு சொல்றளவுக்கா? நடந்தது நிஜம் சார். ஏன் என்னை இன்னும் விட்டு வச்சிருக்காங்க தெரியல? அரசியல்ல தீவிரமா இருக்கிறதால என்னை அப்புறமா பார்த்துக்கலாம்னு விட்டிருக்கலாம். என்னை கண்காணிக்க ஆள் போட்டிருக்காங்க சார்” என்றான் தெளிவாய்.
“அப்ப உங்க மூலமா உங்க சிஸ்டரைப் பிடிக்க சான்ஸ் இருக்கே? அதுக்கு ஏன் சந்தர்ப்பம் குடுத்தீங்க?”
“நான் இதை யோசிக்கல சார். முதல்ல பழகுறப்ப என்னோட அக்கான்னு தெரியாது. அண்ணன் கல்யாணத்தோடதான் தெரியும்” என்றவன் குரல் இறங்கியிருந்தது. தப்பு செய்துவிட்ட குற்றவுணர்ச்சி.
“மிஸ்டர்.கதிர் நடந்த சம்பவம் உண்மைனா உங்க ஒய்ஃப் அவங்களோட கண்காணிப்புல வந்திருப்பாங்க. உங்க குடும்பம் ஹைதராபாத்லயிருந்து மதுரை இறங்கினதிலிருந்து நம்மாளுங்க பாலோ பண்றாங்க. இப்ப ரெண்டு நாளா புதுசா சிலரோட நடமாட்டம் இருக்குன்னு எங்க டீம் சொன்னாங்க. அநேகமா எம்.எல்.ஏ ஆளுங்களா இருக்கலாம். இங்கன்னு இல்ல வாடிப்பட்டியில உங்க ஒய்ஃபோட அத்தைப் பொண்ணை யாரோ ரெண்டு பேர் வழிமறிச்சிப் பேசிட்டிருக்க அவங்களை இன்னொருத்தன் வேவு பார்த்திட்டிருக்கான். ஐ திங்க் வழிமறிச்ச பையன் உங்க சிஸ்டரை லவ் பண்றான்னு நினைக்கிறேன்.”
“ஓ... அநேகமா கோவில்ல பார்த்த பையனாயிருக்கும். அப்ப ஆபத்தும் பக்கத்துலயே இருக்குது. அவங்களுக்கு முன்னாடி நாம உஷாராகணுமே சார்.”
“உங்களைத் தவிர எல்லாரைமே முடிஞ்சளவு வார்ன் பண்ணிவைங்க. நான் ஒவ்வொருத்தரையும் தனியா மீட் பண்ணி விசாரிக்கணும் கதிர். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. அப்புறம் உங்க சைடுலயிருந்து எதிரி ஏரியாவுக்கு கேஸ் விஷயமா போக, அவங்க சந்தேகப்படாத ஆள் இருந்தா பெஸ்ட். ஏதோ ஒரு கட்டத்துல தேவைப்படுவாங்க.”
“அப்பா இருக்காங்க சார். கார்மேகத்தை ஏதோ தூரத்து உறவுன்னு சொல்லிதான் நிஷாந்த் கல்யாணத்தோட அறிமுகப்படுத்தினார்.”
“அவரும் நம்ம சந்தேக வட்டத்துல இருக்கிறார்ல?”
“ஆமாம் சார்” என்றான் இளங்கதிர். திருமணம் முடிந்த அன்று காமாட்சியுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, “உன்னையும், உன் அப்பாவையும் திரு கிடைக்கிறதுக்குக் கொஞ்சம் நேரம் முன்னாடிதான் பார்த்துப் பேசினேன்” என்றார்.
“எங்க சித்தி கோவில்லயா?”
“ஆமாபா. நீதான் எல்லாத்தையும் மறந்துட்டியாமே? அப்பா என்கிட்ட சொல்லி கோவில்ல எங்களைப் பார்த்ததை உன்கிட்ட சொல்லக்கூடாது சொன்னார். நான்தான் பேச்சுவாக்குல உன்கிட்ட உளறிட்டேன்” என்றிருந்தார்.
அவர் மூலம்தான் தன் அப்பாவும் சம்பவம் நடந்தபொழுது அங்கிருந்தது தெரிய அவரை சந்தேக லிஸ்டில் சேர்த்திருந்தான்.
ரிசப்ஷன் மறுநாள் கையெழுத்து வாங்கியது சிபிஐ விசாரணைக்கு உட்பட்ட அனைவரையும் விசாரிக்க, அனுமதிக்காக கொடுத்த கம்ப்ளெய்ண்ட் காப்பி அது. ஏற்கனவே சிபிஐ ஒதுக்கிய கேஸை நண்பன் ஒருவன் மூலமாக கார்த்திக்கைப் பற்றிக் கேள்விப்பட்டு திரும்பவும் சிபிஐ வசம் கேஸை ஒப்படைத்தான் கதிர்.
“உங்க அப்பாவையும், நிஷாந்தையும் சீக்கிரமே வரவழைங்க கதிர்.”
“கண்டிப்பா இப்பவே கிளம்பச் சொல்றேன் சார்” என்றான்.
“அன்பு நீங்க அன்னைக்குப் பார்த்ததை அப்படியே டெமோ காட்டுங்க. நினைவிருக்கிறது வரை செய்து காண்பிச்சா போதும்.’
“எப்படி சார் மறக்கும்?” என்று அனைத்தையும் சொல்லிக்கொண்டே வர, காட்டுக்குள் உள்ள கோவில் அருகில் வருகையில் திடீரென்று வானம் இருட்டிக்கொண்டு சின்னச் சின்னதாய் மழைத்துளி விழத்தொடங்கியது.
அதைத் தொடர்ந்து இடியும் மின்னலும் தன் தலையில் விழுவது போலிருக்க, ஏதேதோ ஞாபகங்கள் மூளைக்குள் அலைமோதியது இளங்கதிருக்குள்.
அன்பழகனுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. இடி மின்னலுக்கு ஓரளவு பக்குவப்பட்டுவிட்டாலும் பயம் முற்றிலுமாக விலகியபாடில்லை. வேகமாக கதிரின் அருகில் வந்து அவன் விரல்களுடன் விரல் கோர்த்தான்.
உருவமில்லா ஏதோ ஒன்று நரம்பின் வழி சென்று இளங்கதிருக்குள் எதையோ உலுக்கியதில், கதிரின் பிடி இறுக கண்களோ அருவியையே வெறித்திருந்தது. கொட்டும் நீரின் சத்தம் யாவும் அழுகுரலாகவும், நீர் இரத்தத் துளிகளாகவும் தெரிந்தது.
“கதிர் மரத்துக்குக் கீழ நிற்கிறது எப்பவும் ஷேப் கிடையாது. வாங்க போகலாம்” என்ற கார்த்திக் அவர்களை அங்கிருந்த சின்ன கட்டடத்திற்கு அழைத்து நடக்க ஆரம்பிக்க, இளங்கதிரோ நின்ற நிலையிலிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.
பயந்திருந்த அன்புவோ, “இளா அத்தான் வாங்க போயிரலாம். எனக்குப் பயமாயிருக்கு. அன்னைக்கும் இப்படித்தான் இடி மின்னல்னு... எனக்கு எல்லாம் கண்முன்னால நடக்கிற மாதிரியிருக்கு” என்றான் புலம்பலாக.
‘இளா நிற்காத போயிரு. போயிரு இளா!’ மண்டைக்குள் யாரோ கத்துவது போலிருந்தது. ‘அப்பாஆஆஆ... வேண்டாம் அப்பாவை விடு. ஐயோ அம்மா...’ தன் சிறுவயது அலறல் தனக்கே கேட்பது போலிருந்தது. நெஞ்சைப் பிழியும் அலறல்கள். ‘டேய் எங்க மாமாவை விடு!’ மங்கலாக சில உருவங்கள் தெரிய வேகமாகத் தலையைப் பிடித்தான்.
அவனின் மாற்றத்தை பிரஷாந்த் உணராமல் அங்கிருந்து இழுத்துச் செல்வதிலேயே குறியாகயிருந்தான்.
‘எல்லாரையும் கூட்டிட்டுப் போ தமிழ்.’ தன் மாமனின் அழுத்தமான குரல். ‘அறிவு அத்தான் இதோ வந்துட்டேன். உங்களை நான் காப்பாத்துறேன்?’ என்ன முயன்றும் காப்பாத்த முடியாத கோபத்தில் சிவராமை வெட்டியது. அதைத் தொடர்ந்த ஓட்டம்... ஓட்டத்தின் முடிவில் மலையிலிருந்து கீழே விழும்போது, மீண்டும் வருவேனென்று சபதமிட்டது அனைத்தும் எதிரிலேயே தெரிந்தது.
‘நானா! அது நானேதானா? என் குடும்பமா? நான் எப்படி? எனக்கு என்னாகிற்று?’ ஆயிரத்தெட்டு கேள்விகள் அவனை ஆட்டிப்படைக்க, “இளா எங்களையெல்லாம் எப்படி மறக்க முடிந்தது உன்னால்? இளா உன் தங்கையைக் காப்பாற்று. இளா... இளா... இளா...” அவன் பெயர் மட்டுமே பலகுரல்களால் ஆக்கிரமிக்கப்பட, எங்கெங்கு காணினும் அரூபங்கள் யாவும் உருவங்களாகி அவனின் மூளையை துவம்சம் செய்து தங்களை அறிமுகப்படுத்த, தலை வெடிக்க இதயமோ பலமடங்கு துடித்தது.
‘இளா அத்தானுக்காகக் காத்திருக்கேன்!’ மனைவியவளின் குரல். ‘நீதான் என் அண்ணன் இளநாதன்!’ தங்கை கயலின் உறுதி. ‘கனவுகளாக தனைத் தாக்கி தன்னைப் புரியவைக்க இழுத்து வந்த இந்த அம்மனின் அவதாரம்!’ தனித்தனியே கிடந்த நினைவுகளை அனைத்தையும் மூளை ஏற்க, இளங்கதிரானவன் தன்னை இளநாதன் என்று உணர்ந்து கொண்ட தருணம்.
சிறு வயது முதல் நடந்த அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நெஞ்சில் மோத, கடைசியில் தன் கண்முன் நடந்த அநியாயங்கள் அவனை இறுக்கியது. அன்றைய கோபம் அப்படியே மாறாமல் “வந்துட்டேன்டா! இளா வரமாட்டான் நினைச்சீங்களா? விடமாட்டேன்டா உங்களை!” பற்கள் கடிபட உடல் விரைப்புற, அன்புவின் விரல்களில் அவனின் மொத்த கோபமும் வெளிப்பட்டது.
“மச்சான் என்னாச்சி? ஏன் ஒருமாதிரி பேசுறீங்க? முதல்ல கையை விடுங்க வலிக்குது. மழை வேற ரொம்ப கொட்டுது. மச்சான் எவ்வளவு நேரமா கூப்பிட்டிருக்கேன். ஆ... அம்மா வலிக்குது.” அன்புவின் சத்தமான அலறலில்... மெல்ல இறுக்கத்திலிருந்து வெளிவந்தவன் தன் கைக்குள் இருந்த அன்புவின் கையை விடாது, “உன்னை எப்படி அன்பு விடுவேன். நீ என் தாய்மாமா பையன்டா” என்றான் என்றுமில்லாத கம்பீரக்குரலில்.
“மச்சான்! ஏன் என்னவோ போல பேசுறீங்க? என்னாச்சி உங்களுக்கு?”
“என்னைத் தெரியலையா அன்பு? நான் உன் காமாட்சி அத்தை பையன் இளநாதன்டா! உங்களோட இளா அத்தான்!”
“இ..ளா அத்..தான்...”
“எஸ்! இளநாதன் சன் ஆஃப் தேவநாதன்! என் தாய்மாமா அருணாச்சலத்தோட மருமகன். இப்ப உன் கூடப்பிறந்த அக்கா புருஷன்” என்றான் தெளிவாக.