• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
24



தன் முன்னே நின்றிருந்தவனிடம் “யார்னு தெரிஞ்சிதா?” என்றான் ஜெய்ராம்.

“அந்தப்பொண்ணு அணைப்பட்டியில அவள் அத்தையோட இருக்கிறாள்ணே. அந்தப் பையனை வாட்ச் பண்ண வச்சிருக்கிறதா நீங்க காண்பிச்ச ஆள்கிட்டேயும் விசாரிச்சேன். ரொம்ப நாள் பழக்கமில்லையாம். சமீபமாதான் இவங்க ரெண்டு பேரையும் பார்க்கிறதா சொன்னான். அவன் அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி மதுரையில பார்த்திருக்கான். சாதாரணமா இருந்ததால உங்ககிட்ட அதைச் சொல்லல சொன்னான். நான் கவனிச்ச வரைக்குமே அந்தப்பொண்ணு கூடதான் எப்பவும் இருக்கிறான். ரொம்ப உரிமையா பேசிக்கிறாங்க. பேமிலி ப்ரண்ட்னு நினைக்கிறேன். மூணு நாள் முன்னாடி வாடிப்பட்டியில நம்ம பசங்க பார்த்ததா சொன்னாங்க.”

‘இருவருக்குள்ளும் எதோ இருக்கிறது?’ என்னவென்று கண்டுபிடிக்க வேண்டுமென்று மனதினுள் நினைத்து, “சரி தம்பியை ஃபாலோ பண்ணச் சொன்னேனே என்னாச்சி?”

“தம்பி அடிக்கடி வாடிப்பட்டியில இருக்கிற அப்புன்றவர் கூடதான்ணே இருக்கார். அப்புறம் ஒரு டீச்சர் பின்னாடி போறதைப் பார்க்கிறேன்.”

“லவ்வா?” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

“நம்ம தம்பிதான்ணே பின்னாடி சுத்துறார். அந்தப் பொண்ணுக்கு இவர் யார்னு கூட தெரியாது. அவளை வச்சி எந்தப் பிரச்சனையும் இல்லண்ணே!”

“போட்டோ கிடைச்சதா? யார் அந்தப் பொண்ணுன்னு எனக்குத் தெரியணும்?”

“பதினைந்து வருஷமா ஒரே ஏரியாவுலதான் இருக்காங்க. பக்கத்துல உள்ள தனியார் ஸ்கூல்ல டீச்சாராயிருக்கு. அவளோட அம்மாவும் டீச்சராயிருந்தவங்கதான். இப்ப வீட்லயே ட்யூஷன் எடுக்கிறாங்க. அவங்க அம்மா போட்டோ கிடைக்கலண்ணே. இதான் அந்த டீச்சர்” என்று காண்பித்தான்.

கயல்விழியை அடையாளம் தெரியவில்லை ஜெயராம்கு. ‘ம்.. பொண்ணு அழகா அமைதியாயிருக்கா. என்ன ஜாதியோ! இவ இருந்தா தம்பி நான் சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கமாட்டான். என்ன செய்யலாம்?’ என யோசித்தவன் “நீ போயிட்டு நான் கூப்பிடும்போது வா. அந்த டீச்சரும், அவள் அம்மாவும் எங்க போறாங்க வர்றாங்கன்னு பாரு” என்றனுப்ப அவனின் உள்ளுணர்வு ஏதோ சரியில்லையென்று அறிக்கை விடுத்தது.

‘அன்பு ஏன் அந்த டீச்சருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்? வாடிப்பட்டியில அவனுக்கு என்ன வேலை? ஸ்ரீராம் சுத்துற பொண்ணும் வாடிப்பட்டி. ஏதோ ஒண்ணு நெருடுதே’ என்றெண்ணி தந்தையிடம் ஆலோசனை கேட்க நேரே அவரிடம் சென்றவன் நடந்ததைச் சொன்னான்.

“நமக்குத் தெரியாம எதிரியா? இருக்கக்கூடாதேடா ஜெய். எதிரின்னு தெரிஞ்சதுமே தூக்கிரணும். இல்ல நம்மளை இல்லாமலே பண்ணிருவாங்க. நீ வேற சி.எம்கு நிற்கப்போற. இந்த டைம்ல எந்த இடைஞ்சலும் வரக்கூடாது. அப்புறம் நம்ம அரசியல் வாழ்க்கை ஒண்ணுமில்லாமல் போயிரும். முதல்ல அந்த அன்புவையும் அவனோட அக்காவா சந்தேகப்படுற பொண்ணையும் முடிச்சிரு.”

“எனக்கும் அதுதான் சரின்னு தோணுதுப்பா. நமக்குத் தெரிஞ்சே வளர்ற எதிரியோட பையன் அவன். கையெழுத்து வாங்கிட்டு முடிச்சிரலாம். அதோட தம்பி சுத்துற பொண்ணையும், அவள் அம்மாவையும் அவங்களோட சேர்த்து அனுப்பிரலாம். சொந்தம்னு யாரும் இல்லாததால பிரச்சனையில்ல” என்று கணக்குப் போட... கடவுளும் தன் கணக்கை ஆரம்பித்தார்.

“ஹலோ கார்த்திக் சார்! ரொம்ப நேரமா காக்க வச்சிட்டேனா?”

“நோ நோ இப்பதான் வந்தேன். ஏரியா எப்படின்னு பார்த்துட்டிருந்தேன். நல்ல இயற்கை கொஞ்சும் தனிமையான இடம். அதான் இங்க வச்சி பண்ணிட்டாங்க போல” என்றான் “சி.நாராயணன் அலைஸ் கார்த்திகேயன் சிஐடி ஆபீஸர்.”

“எங்க குலதெய்வம் சார். அடிக்கடி வர்றதுதான்” என்றான் அன்பழகன்.

“உங்க சித்தப்பா எப்படி? குடும்பத்தையே அழிக்கிற வெறினா, உங்க குடும்பத்துக்கும் அவருக்கும் அப்படியென்ன விரோதம்?”

“ப்ச்... அப்படியிருந்தால்தான் பரவாயில்லையே சார். கோவில்ல பொங்கல் வைக்கப்போறோம்னு கூப்பிட்டதே அப்பாவும், தாத்தாவும்தான். நானும் கூடதான் இருந்தேன். அந்தாள் மனசுல என்னயிருந்ததுன்னு அனுபவப்பட்ட பெரியவங்களுக்கே தெரியாதப்ப, ஏழு வயசுப்பையனான எனக்கு எப்படி சார் தெரியும்?”

“ஓகே. உங்களை சொத்துக்காகத்தான் விட்டு வச்சிருக்கிறதா சொல்றீங்க? ஏன் இன்னும் உங்களை எதுவும் பண்ணல? ஒருவேளை உங்க சித்தப்பா சொன்னதா நீங்க சொன்னது மன பிரமையா இருக்கலாமே?”

“சார் சிபிஐனா சந்தேகப்படணும்தான். அதுக்காக நடந்ததையே இல்லன்னு சொல்றளவுக்கா? நடந்தது நிஜம் சார். ஏன் என்னை இன்னும் விட்டு வச்சிருக்காங்க தெரியல? அரசியல்ல தீவிரமா இருக்கிறதால என்னை அப்புறமா பார்த்துக்கலாம்னு விட்டிருக்கலாம். என்னை கண்காணிக்க ஆள் போட்டிருக்காங்க சார்” என்றான் தெளிவாய்.

“அப்ப உங்க மூலமா உங்க சிஸ்டரைப் பிடிக்க சான்ஸ் இருக்கே? அதுக்கு ஏன் சந்தர்ப்பம் குடுத்தீங்க?”

“நான் இதை யோசிக்கல சார். முதல்ல பழகுறப்ப என்னோட அக்கான்னு தெரியாது. அண்ணன் கல்யாணத்தோடதான் தெரியும்” என்றவன் குரல் இறங்கியிருந்தது. தப்பு செய்துவிட்ட குற்றவுணர்ச்சி.

“மிஸ்டர்.கதிர் நடந்த சம்பவம் உண்மைனா உங்க ஒய்ஃப் அவங்களோட கண்காணிப்புல வந்திருப்பாங்க. உங்க குடும்பம் ஹைதராபாத்லயிருந்து மதுரை இறங்கினதிலிருந்து நம்மாளுங்க பாலோ பண்றாங்க. இப்ப ரெண்டு நாளா புதுசா சிலரோட நடமாட்டம் இருக்குன்னு எங்க டீம் சொன்னாங்க. அநேகமா எம்.எல்.ஏ ஆளுங்களா இருக்கலாம். இங்கன்னு இல்ல வாடிப்பட்டியில உங்க ஒய்ஃபோட அத்தைப் பொண்ணை யாரோ ரெண்டு பேர் வழிமறிச்சிப் பேசிட்டிருக்க அவங்களை இன்னொருத்தன் வேவு பார்த்திட்டிருக்கான். ஐ திங்க் வழிமறிச்ச பையன் உங்க சிஸ்டரை லவ் பண்றான்னு நினைக்கிறேன்.”

“ஓ... அநேகமா கோவில்ல பார்த்த பையனாயிருக்கும். அப்ப ஆபத்தும் பக்கத்துலயே இருக்குது. அவங்களுக்கு முன்னாடி நாம உஷாராகணுமே சார்.”

“உங்களைத் தவிர எல்லாரைமே முடிஞ்சளவு வார்ன் பண்ணிவைங்க. நான் ஒவ்வொருத்தரையும் தனியா மீட் பண்ணி விசாரிக்கணும் கதிர். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. அப்புறம் உங்க சைடுலயிருந்து எதிரி ஏரியாவுக்கு கேஸ் விஷயமா போக, அவங்க சந்தேகப்படாத ஆள் இருந்தா பெஸ்ட். ஏதோ ஒரு கட்டத்துல தேவைப்படுவாங்க.”

“அப்பா இருக்காங்க சார். கார்மேகத்தை ஏதோ தூரத்து உறவுன்னு சொல்லிதான் நிஷாந்த் கல்யாணத்தோட அறிமுகப்படுத்தினார்.”

“அவரும் நம்ம சந்தேக வட்டத்துல இருக்கிறார்ல?”

“ஆமாம் சார்” என்றான் இளங்கதிர். திருமணம் முடிந்த அன்று காமாட்சியுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, “உன்னையும், உன் அப்பாவையும் திரு கிடைக்கிறதுக்குக் கொஞ்சம் நேரம் முன்னாடிதான் பார்த்துப் பேசினேன்” என்றார்.

“எங்க சித்தி கோவில்லயா?”

“ஆமாபா. நீதான் எல்லாத்தையும் மறந்துட்டியாமே? அப்பா என்கிட்ட சொல்லி கோவில்ல எங்களைப் பார்த்ததை உன்கிட்ட சொல்லக்கூடாது சொன்னார். நான்தான் பேச்சுவாக்குல உன்கிட்ட உளறிட்டேன்” என்றிருந்தார்.

அவர் மூலம்தான் தன் அப்பாவும் சம்பவம் நடந்தபொழுது அங்கிருந்தது தெரிய அவரை சந்தேக லிஸ்டில் சேர்த்திருந்தான்.

ரிசப்ஷன் மறுநாள் கையெழுத்து வாங்கியது சிபிஐ விசாரணைக்கு உட்பட்ட அனைவரையும் விசாரிக்க, அனுமதிக்காக கொடுத்த கம்ப்ளெய்ண்ட் காப்பி அது. ஏற்கனவே சிபிஐ ஒதுக்கிய கேஸை நண்பன் ஒருவன் மூலமாக கார்த்திக்கைப் பற்றிக் கேள்விப்பட்டு திரும்பவும் சிபிஐ வசம் கேஸை ஒப்படைத்தான் கதிர்.

“உங்க அப்பாவையும், நிஷாந்தையும் சீக்கிரமே வரவழைங்க கதிர்.”

“கண்டிப்பா இப்பவே கிளம்பச் சொல்றேன் சார்” என்றான்.

“அன்பு நீங்க அன்னைக்குப் பார்த்ததை அப்படியே டெமோ காட்டுங்க. நினைவிருக்கிறது வரை செய்து காண்பிச்சா போதும்.’

“எப்படி சார் மறக்கும்?” என்று அனைத்தையும் சொல்லிக்கொண்டே வர, காட்டுக்குள் உள்ள கோவில் அருகில் வருகையில் திடீரென்று வானம் இருட்டிக்கொண்டு சின்னச் சின்னதாய் மழைத்துளி விழத்தொடங்கியது.

அதைத் தொடர்ந்து இடியும் மின்னலும் தன் தலையில் விழுவது போலிருக்க, ஏதேதோ ஞாபகங்கள் மூளைக்குள் அலைமோதியது இளங்கதிருக்குள்.

அன்பழகனுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. இடி மின்னலுக்கு ஓரளவு பக்குவப்பட்டுவிட்டாலும் பயம் முற்றிலுமாக விலகியபாடில்லை. வேகமாக கதிரின் அருகில் வந்து அவன் விரல்களுடன் விரல் கோர்த்தான்.

உருவமில்லா ஏதோ ஒன்று நரம்பின் வழி சென்று இளங்கதிருக்குள் எதையோ உலுக்கியதில், கதிரின் பிடி இறுக கண்களோ அருவியையே வெறித்திருந்தது. கொட்டும் நீரின் சத்தம் யாவும் அழுகுரலாகவும், நீர் இரத்தத் துளிகளாகவும் தெரிந்தது.

“கதிர் மரத்துக்குக் கீழ நிற்கிறது எப்பவும் ஷேப் கிடையாது. வாங்க போகலாம்” என்ற கார்த்திக் அவர்களை அங்கிருந்த சின்ன கட்டடத்திற்கு அழைத்து நடக்க ஆரம்பிக்க, இளங்கதிரோ நின்ற நிலையிலிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.

பயந்திருந்த அன்புவோ, “இளா அத்தான் வாங்க போயிரலாம். எனக்குப் பயமாயிருக்கு. அன்னைக்கும் இப்படித்தான் இடி மின்னல்னு... எனக்கு எல்லாம் கண்முன்னால நடக்கிற மாதிரியிருக்கு” என்றான் புலம்பலாக.

‘இளா நிற்காத போயிரு. போயிரு இளா!’ மண்டைக்குள் யாரோ கத்துவது போலிருந்தது. ‘அப்பாஆஆஆ... வேண்டாம் அப்பாவை விடு. ஐயோ அம்மா...’ தன் சிறுவயது அலறல் தனக்கே கேட்பது போலிருந்தது. நெஞ்சைப் பிழியும் அலறல்கள். ‘டேய் எங்க மாமாவை விடு!’ மங்கலாக சில உருவங்கள் தெரிய வேகமாகத் தலையைப் பிடித்தான்.

அவனின் மாற்றத்தை பிரஷாந்த் உணராமல் அங்கிருந்து இழுத்துச் செல்வதிலேயே குறியாகயிருந்தான்.

‘எல்லாரையும் கூட்டிட்டுப் போ தமிழ்.’ தன் மாமனின் அழுத்தமான குரல். ‘அறிவு அத்தான் இதோ வந்துட்டேன். உங்களை நான் காப்பாத்துறேன்?’ என்ன முயன்றும் காப்பாத்த முடியாத கோபத்தில் சிவராமை வெட்டியது. அதைத் தொடர்ந்த ஓட்டம்... ஓட்டத்தின் முடிவில் மலையிலிருந்து கீழே விழும்போது, மீண்டும் வருவேனென்று சபதமிட்டது அனைத்தும் எதிரிலேயே தெரிந்தது.

‘நானா! அது நானேதானா? என் குடும்பமா? நான் எப்படி? எனக்கு என்னாகிற்று?’ ஆயிரத்தெட்டு கேள்விகள் அவனை ஆட்டிப்படைக்க, “இளா எங்களையெல்லாம் எப்படி மறக்க முடிந்தது உன்னால்? இளா உன் தங்கையைக் காப்பாற்று. இளா... இளா... இளா...” அவன் பெயர் மட்டுமே பலகுரல்களால் ஆக்கிரமிக்கப்பட, எங்கெங்கு காணினும் அரூபங்கள் யாவும் உருவங்களாகி அவனின் மூளையை துவம்சம் செய்து தங்களை அறிமுகப்படுத்த, தலை வெடிக்க இதயமோ பலமடங்கு துடித்தது.

‘இளா அத்தானுக்காகக் காத்திருக்கேன்!’ மனைவியவளின் குரல். ‘நீதான் என் அண்ணன் இளநாதன்!’ தங்கை கயலின் உறுதி. ‘கனவுகளாக தனைத் தாக்கி தன்னைப் புரியவைக்க இழுத்து வந்த இந்த அம்மனின் அவதாரம்!’ தனித்தனியே கிடந்த நினைவுகளை அனைத்தையும் மூளை ஏற்க, இளங்கதிரானவன் தன்னை இளநாதன் என்று உணர்ந்து கொண்ட தருணம்.

சிறு வயது முதல் நடந்த அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நெஞ்சில் மோத, கடைசியில் தன் கண்முன் நடந்த அநியாயங்கள் அவனை இறுக்கியது. அன்றைய கோபம் அப்படியே மாறாமல் “வந்துட்டேன்டா! இளா வரமாட்டான் நினைச்சீங்களா? விடமாட்டேன்டா உங்களை!” பற்கள் கடிபட உடல் விரைப்புற, அன்புவின் விரல்களில் அவனின் மொத்த கோபமும் வெளிப்பட்டது.

“மச்சான் என்னாச்சி? ஏன் ஒருமாதிரி பேசுறீங்க? முதல்ல கையை விடுங்க வலிக்குது. மழை வேற ரொம்ப கொட்டுது. மச்சான் எவ்வளவு நேரமா கூப்பிட்டிருக்கேன். ஆ... அம்மா வலிக்குது.” அன்புவின் சத்தமான அலறலில்... மெல்ல இறுக்கத்திலிருந்து வெளிவந்தவன் தன் கைக்குள் இருந்த அன்புவின் கையை விடாது, “உன்னை எப்படி அன்பு விடுவேன். நீ என் தாய்மாமா பையன்டா” என்றான் என்றுமில்லாத கம்பீரக்குரலில்.

“மச்சான்! ஏன் என்னவோ போல பேசுறீங்க? என்னாச்சி உங்களுக்கு?”

“என்னைத் தெரியலையா அன்பு? நான் உன் காமாட்சி அத்தை பையன் இளநாதன்டா! உங்களோட இளா அத்தான்!”

“இ..ளா அத்..தான்...”

“எஸ்! இளநாதன் சன் ஆஃப் தேவநாதன்! என் தாய்மாமா அருணாச்சலத்தோட மருமகன். இப்ப உன் கூடப்பிறந்த அக்கா புருஷன்” என்றான் தெளிவாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“இ..ளா அ..த்..தான்” கண்கள் கலங்க வார்த்தைகள் திக்க கதிரை அணைத்துக்கொள்ள, இடியும் மின்னலும் தங்களின் வேலையை செவ்வனே செய்து முடித்து ஓய்வெடுக்க. ஆத்மாக்கள் மட்டும் மழைத்தூரலாய் அவர்கள் மேல் சாரல் தெளித்து சந்தோஷமடைந்ததோ!

“மறுபிறவி எடுத்து வருவேன்னு சொன்னேன்ல. இதுவும் என் மறுபிறப்புதான். என் குடும்பத்தை சிதைச்சவங்களை சும்மா விடமாட்டேன். என் மங்கையின் லட்சியத்தைக் கண்டிப்பா நிறைவேத்துவேன்.”

“என்ன செய்யுறதா உத்தேசம் கதிர்? சாரி இளநாதன். அப்படியே போய் வெட்டிப்போடப் போறீங்களா?” என்றபடி கார்த்திக் அங்கு வர,

“வெட்டிப் போட்டால் கூட தப்பில்ல சார். அதுல விழுறது தண்ணீர் இல்ல சார். என் குடும்பத்தோட இரத்தம். இரத்த வெறி பிடிச்சவங்களை வெட்டலாம் சார். என் அப்பா அம்மாவுக்குக் கொள்ளி வைக்கக் கூட இல்லாம அனாதையா... எனக்கு என்ன நடந்ததுன்னு எல்லாம் தெரிஞ்சிக்கணும் சார்!”

“அதுக்கு வெட்டிட்டா ஆச்சா? வெட்டித்தான் பழிவாங்கணும்னு அவசியமில்லை. இதென்ன சினிமாவா குடும்பத்தை சீரழிச்சவங்களைத் தன் கையாலயே பழிவாங்கிட்டு ஃபூனு துடைச்சப்போட்டுப் போக. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க கதிர். முடிஞ்சா இன்னும் இரண்டே நாள்ல அவங்களோட சாம்ராஜ்யத்தை சரித்து உங்க குடும்பத்துக்கான நியாயம் பண்ணிரலாம்.”

“அத்தான் அவங்க யாரும் அனாதைப் பிணமா போகல. என்னை மட்டும் வாரிசா காண்பிச்சதால எல்லாருக்கும் நான்தான் கொள்ளி வச்சேன்” என்றான் வேகமாக.

“அன்பு நிஜமாவா? இது போதும்டா. அவங்க எல்லார் ஆத்மாவும் சாந்தியடைஞ்சிருக்கும்.”

“சொத்து போயிரக்கூடாதுன்ற பயம் அத்தான். வாரிசுன்னு யாருமே இல்லாமல் போனா சொத்தை கவர்ன்மெண்ட் எடுத்துக்குமேன்ற பயம். எந்த சொத்துக்காக இத்தனை பண்ணினாங்களோ, அதே சொத்துதான் என்னை உயிரோட வச்சிருக்கு.”

“எனிவே கங்க்ராட்ஸ் இளநாதன். உங்களோட சேர்ந்து நானும் அந்த இன்சிடெண்ட்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமாயிருக்கேன். இளநாதன் எப்படி இளங்கதிரானார்ன்றதுக்கு மிஸ்டர்.குருமூர்த்தி என்ன விளக்கம் சொல்றார்னு பார்க்கலாம்.”

“கண்டிப்பா சார். ஆனா, அப்பா தப்பானவர் கிடையாது. எதாவது ஹெவியான காரணம் இருக்கும் சார்.”

“புரியுது கதிர்” என்று அன்புவிடம் திரும்பி, “முதல்ல உன்னை வளர்த்த அப்பா அம்மாகிட்ட விசாரிக்கணும், போகலாமா? காமாட்சின்றவங்களை தேவதானம்பட்டிக்கு வரச்சொல்லிரலாம்.”

“சரிங்க சார். இளா அத்தான் போகலாமா?”

“சார் கூட நீ போ அன்பு. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு போயிட்டு வந்திருறேன்.”

“இப்பவா? இந்த நிலையில் வேண்டாம். எதாவது ஏடாகூடமா...”

“நீ நினைக்கிற மாதிரி யாரையும் பழிவாங்கப் போகலடா. என் தங்கச்சியைப் பார்க்கணும். கயல் என்னை உணர்ந்திருக்கா. அனா நான்... அதோட அத்தையை அந்தக் கோலத்துல... கண்டிப்பா அந்த கார்மேகத்துக்கு அதற்கான தண்டனையைக் குடுப்பேன்டா” என்று கார்த்திக்கிடம் திரும்பி “சார் ஈவ்னிங் அப்பாவும் நிஷாந்தும் வந்திருவாங்க. அதுக்கு முன்னாடி போன் பண்றேன். வந்து மங்கையை விசாரிச்சிக்கோங்க.”

“அத்தான் பிரகாஷ் அண்ணா!”

“அட ஆமா கார்த்திக் சார் அவனை மறந்துட்டேன். ஜெய்ராமோட தம்பிதான் பிரகாஷ்” என ஆரம்பித்து அனைத்தையும் சொல்ல, கார்த்திக் அதை பதிவு செய்து கொண்டான்.

பதினோரு மணியளவில் கதவு தட்டும் ஓசையில் யாரென்று கேட்டபடி கயல் கதவைத் திறக்க, “ஹை.. இளாண்ணா! வா வா. என்ன திடீர்னு வந்திருக்க? மங்கை வரலையா?”

“உன்னைத்தேடி உன் இளா அண்ணனா வருவேன்னு நம்பிக்கையா சொன்னியே கயல். உன் இளா அண்ணன் வந்துட்டேன். ஐம் சாரிமா” என்றான்.

“அண்ணா நீ...” மேலே பேசமுடியாமல் திணறினாள்.

“என் பிறப்பு முதற்கொண்டு எல்லாமே மறந்திருச்சிமா. ஒண்ணும் இந்த மூளையில... என் கையைப் பிடிச்சி நீ சொன்னப்ப ஏதோ ஒரு உணர்வு வந்ததுதான். அப்பப் புரியல?”

“உனக்கு நினைவு வந்ததை இன்னும் நம்பமுடியலண்ணா!”

“கூடப்பிறந்த தங்கையை எப்படி மறந்தேன்னு புரியலமா.” கண்கலங்க நின்ற அண்ணனின் நிலைதான் அவளுக்குமே. “உள்ள வந்து உட்காருண்ணா. நீ வருவ தெரியும். இவ்வளவு சீக்கிரம்... கனவோன்னு இருக்குண்ணா. கனவாவே இருந்தாலும் இது கலைஞ்சிடராதுதானண்ணா” என்றாள் ஏக்கமாக.

“கனவெல்லாம் நனவான நாள்மா” என்றான்.

சந்தோஷத்தில் வார்த்தைகள் வராமல் போக, ஓடிச்சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து குடித்து முடித்ததும் செம்பை வாங்கி ஓரம் வைத்து, அண்ணன் அருகிலமர்ந்து தோளில் தலைசாய்த்தவள் சத்தமின்றி அழுதாள்.

“கயல்மா!”

“நம்ம குடும்பத்துல நான் மட்டும்தான்னு... அத்தை மட்டும் இல்லன்னா நான் அனாதையா இருந்திருப்பேன்ணா. யாராவது ஒருத்தர் பிழைச்சி வந்து உனக்கு நான் இருக்கேன்னு சொல்லமாட்டீங்களான்னு எத்தனை நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா? நாளாக நாளாக எல்லாம்...” தேம்பி அழுதவளைத் தடுக்காமல் தலைவருட, “ஏன்ணா என்னை விட்டுப்போன? என்னைத் தேடிவர உனக்கு இத்தனை காலமாகிருச்சா? உன்னைப் பார்த்ததிலிருந்து என் அண்ணனா எப்ப வருவன்னு காத்திருந்தேன்ணா.”

அவளின் கண்ணீர் துடைத்து, “அழுதது போதும்மா. முக அடையாளம் மாறின என்னை உன் அண்ணன்னு எப்படி கண்டுபிடிச்ச?”

கார்த்திக் அன்பு இருவரும் சென்றதும் தன் காரிலமர்ந்து தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தான். (திருமொழி ஹைதராபாத்திலிருந்து வந்த மறுநாளே காருக்கு டிரைவர் போட்டு அனுப்பி தேவதானம்பட்டியில் விட்டு திரும்பச் சொல்லியிருந்தான்.)

தன்னாலேயே நம்பமுடியவில்லை. முக அழகில் எந்தக் குறையும் இல்லையென்றாலும், இது தன் முகமில்லை என்பது மட்டும் தெரியும். சற்றுநேரம் காரின் உள்ளே அமர்ந்து நடந்த அனைத்தையும் அசைபோட்டு அழுது தானே சமாதானமாகி அதன் பின்னரே தங்கையைப் பார்க்க வந்திருந்தான்.

“முதல்ல உன் குரல் கேட்டப்ப ஆசையா பார்த்தேன்ணா. முகம் வேறன்னதும் விட்டுட்டேன். அன்பு இளா அத்தான்னு சொல்லி தாலிகட்டச் சொன்னப்ப, என் அண்ணன் கிடைச்சிட்டான்ற சந்தோஷத்தோட இருந்தப்ப நீ தாலிகட்டினது மங்கைக்குன்னு தெரிஞ்சதும் சந்தோஷம் ரெட்டிப்பாகிருச்சி. அப்புறமும் கதிர்னு எல்லாரும் சொல்ல குழப்பமாகிருச்சி” என்றவள் அவனின் சட்டை காலரை சற்று இறக்கி கழுத்துக்குக் கீழ் முதுகுக்கு நடுவில் உள்ள மாங்காய் மச்சத்தைத் தொட்டுக் காண்பித்து, “கோவில்ல சட்டையை லேசா இறக்கிவிட்டிருந்தப்ப காத்தடிச்சதுல இந்த மச்சம்தான் உன்னை என் அண்ணன்னு காட்டிக்கொடுத்தது. இது அதிர்ஷ்ட மச்சம்னு அம்மா சொல்வாங்கண்ணா. மங்கை பார்த்திருந்தா கண்டுபிடிக்க சான்ஸ் இருக்கு. எதுக்கும் இளா அத்தான் வருவாங்கன்றவகிட்ட இதைக் காண்பித்து கண்டுபிடிக்கிறாளா பாரு” என்றாள் சின்னச் சிரிப்புடன்.

“ஹா..ஹா அது கஷ்டம்டா. அவளா கண்டுபிடிக்கிற வரை சஸ்பென்ஸ்தான்.”

“எப்படிண்ணா ஆந்திராவிலிருந்து இங்க வந்து மங்கையைத் தேடிக் கண்டுபிடிச்சி தாலி கட்டின?”

“எனக்கே ஆச்சர்யமான விஷயம்தான். எல்லாம் அந்த காமாட்சியம்மன் செய்த வேலை.” தங்கையின் புரியா மொழியில், “என் கனவுல வந்து உங்களையெல்லாம் காட்டி உனக்கான கடமை காத்துக்கிட்டிருக்குன்னு கிட்டத்தட்ட என்னை மிரட்டி வரவச்சது அந்த அம்மன்தான். இங்க வந்து இறங்கியதுமே நான் பார்த்தது எனக்காகக் காத்திருக்கேன்னு கனவுல சொன்ன மங்கையைதான். அடுத்து உன்னையும் அத்தையும் பார்த்தப்ப ஏன்னு புரியாமலேயே உங்களுக்கு எதாவது செய்யணும் தோணிச்சி. இப்ப எல்லாமே நான்தான்னு ஆகிருச்சி.”

“ஓ... சரிண்ணா காலையில சாப்பிட்டியா?”

“இல்லமா” என்றதும் “இருண்ணா சாம்பார் இருக்கு. தோசை சுடுறேன் சாப்பிடு” என்று செய்து கொடுத்து சாப்பிட வைத்தாள்.

“அத்தை எங்க? நீ ஏன் ஸ்கூல் போகல?”

“அத்தைக்கு உடம்பு சரியில்ல. அரைநாள் லீவு போட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகலாம்னு பார்த்தா, ரொம்பல்லாம் இல்ல நானே போயிட்டு வர்றேன்னு பக்கத்துல இருக்கிற ஜி.ஹெச்கு போயிருக்காங்க. கூட்டமாயிருக்கும் நினைக்கிறேன் ஆளைக்காணோம். அண்ணா ஒரு விஷயம் கேட்கணும் நினைச்சேன். அன்பு ஏன் இப்படிப் பண்றான்? அவனையும் மங்கையையும் நினைச்சிதான் அத்தைக்கு உடம்பு சரியில்ல.”

“அன்புவ சாகுற நிலைமையில காப்பாத்தாம விட்டுட்டுப் போயிட்டாங்கன்னு தனக்குள்ளே வளர்த்துக்கிட்ட கோவம், இப்ப வெறுப்பா நிற்குது.”

“அச்சோ! அத்தை அப்படிலாம் செஞ்சிருக்கமாட்டாங்க. அவன் ஏதோ தப்பா...”

“எனக்கும் அதுதான் தோணிச்சி.” ஏனோ இருவரும் குருமூர்த்தி-சிவகாமி பற்றி எதையும் பேசவில்லை.

வாசலில் ஆண்களின் காலணியிருக்க, “கயல் யார் வந்திருக்கிறாங்க?” என்றபடி உள்ளே நுழைந்த அத்தையையே பார்த்துக் கொண்டிருந்தான் இளநாதன். தன் தாய் அன்பு பாசம் கண்டிப்பு சொல்லித் தந்தாரென்றால், தன் அத்தை தமிழரசியோ, பொறுமை, பொறுப்பு, மற்றவர்களிடம் பழகும் விதம் வாழ்க்கை பற்றிய நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்து தன்னைப் பக்குவப்படுத்தியவர். இப்பொழுது அதே நேர்ப்பார்வை! நிமிர்ந்த நடை! நெற்றி மட்டும் வெறுமையாய்!

“கதிர் நீ எப்பப்பா வந்த? கயல் எதாவது சாப்பிடக் குடுத்தியா?”

“அத்தை அதையெல்லாம் விடுங்க. என் இளா அண்ணனைப் பாருங்க” என்று அவன் தோளில் உரிமையாகக் கைபோட்டு நின்றாள்.

“கயல்” என்றவருக்கு அவளின் நடவடிக்கை வித்தியாசமாயிருக்க, “கயல் விளையாடாம சொல்லு. ஏற்கனவே உடம்பு படுத்துது.”

“சாரி அத்தை. நீங்க முதல்ல உட்காருங்க” என்று கட்டிலில் உட்காரவைத்து காலருகில் வந்த கதிர் முட்டிபோட்டு அவரின் மடியில் தலைவைத்து, “குட்டியா ஒரு கதை சொல்லுங்க?” என்றான்.

அவன் அமர்ந்திருந்த விதத்தில் அந்த மச்சம் தெரிய, சந்தோஷம் அழுகை மொத்தமும் சேர்ந்து பேசவிடாமல் சத்தியாகிரகம் செய்ய, “இ..இளா” என்றார் அழுகையுனூடே. “என் இளாவா நீ?”

“ஆமா அத்தை. உங்க இளாதான்! உங்க நாத்தனார் மகன் இளநாதன்தான்.” தலை நிமிர்ந்து கண்பார்த்துப் பேசிய மருமகனின் முகத்தைக் கண்ணீர் மறைக்க, அவரின் கண்ணீரை கயல் துடைத்தாள். மருமகனின் தலைகோதி “அப்ப எப்படிடா இளங்கதிரான? எங்களை மறந்து போற அளவுக்கு என்ன நடந்தது?”

“அத்தை நீங்க கேட்கிற கேள்விக்கான பதில் அப்பா வந்துதான் சொல்லணும். அம்மாவுக்கு எதுவும் தெரியாது. போலீஸ் விசாரணைக்காகக் கூப்பிட்டதால சாயங்காலம் வர்றாங்க.”

“போலீஸ் விசாரணையா? ஏன்?”

“அத்தை எங்க கல்யாணம் முடிஞ்சப்பவே மங்கையோட லட்சியத்துக்காக, நான் எடுத்த முதல் அடி, நமக்கு நடந்ததை நிரூபிக்க சிபிஐ கிட்ட கேஸ் குடுத்துட்டேன். அன்னைக்கு உங்க எல்லார்கிட்டயும் வாங்கின கையெழுத்து சிபிஐ விசாரணைக்காக.”

“அப்படினாலும் நம்மைத் தாண்டி மத்தவங்ககிட்ட ஏன்?”

“அவங்க எல்லாரும் ஸ்பாட்ல இருந்திருக்காங்க அத்தை. மங்கையைக் காப்பாத்தினது காமாட்சி சித்தி. அப்பாவும் கதிரும் கூட... நான் மலையிலிருந்து விழுந்தப்ப என்னோட யாரோ விழுந்தா மாதிரி இருந்தது. அது கதிர்னு நினைக்கிறேன்.”

“நீ திரும்பக் கிடைச்சதே சந்தோஷமாயிருக்குடா. அதுவும் என் பொண்ணுக்கு புருஷனா! கடவுள் இருக்கார் இளா. இல்லன்னா உன் அம்மாவோட ஆசையை நீ நிறைவேத்தி வைப்பியா.”

தாயின் நினைவில் சற்று அமைதியானவன், “அத்தை போலீஸ் வந்து விசாரிப்பாங்க நடந்ததை சொல்லிருங்க. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. நான் வீட்டுக்குக் கிளம்புறேன். கயல் அத்தையைப் பார்த்துக்கோ. கேஸ் முடிஞ்சதும் மற்றதைப்; பேசிக்கலாம். நான் வர்றேன்” என்று கிளம்புகையில்,

“நான் உள்ள வரலாமா?” என்ற குரல் கேட்டு அனைவரும் வாசல் பார்க்க, பிரகாஷ் நின்றிருந்தான்.
 
Top