• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
962
2

இன்று:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

அருணகிரிநாதரின் கந்தரனுபூதி பாடலை முணுமுணுத்தபடி பூஜையறையிலிருந்து வெளியே வந்த லோஜி சுற்றிலும் கற்பூரம் காண்பித்து பூஜையறையில் வைத்து கற்பூரத்தை கண்களில் ஒற்றி விபூதியிட்டு வெளியே வந்தார்.

“அம்மா வேலை முடிஞ்சது. நான் கிளம்புறேன்” என அவசரமாக வந்த வேலை செய்யும் பெண்ணை... “நில்லுமா காஃபி தர்றேன். குடிச்சிட்டுப் போ” என தடுத்து அடுக்களை பக்கம் அவர் செல்ல,

“அதெல்லாம் வேண்டாம்மா. டைம் ஆகிருச்சி. இன்னும் ரெண்டு வீட்ல வேலை முடிச்சிட்டு வீட்டுக்குப் போய் பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்பணும்.”

“ஓ... வேற எதுவும் இல்லையே?”

“இல்லம்மா. இருந்தா சொல்ல மாட்டேனா?

“சரி போயிட்டு வா.” அவளை அனுப்பிவிட்டு அடுப்படி சென்று பூஸ்ட் கலக்கி இரண்டு டம்ப்ளரில் ஊற்றி தங்களறைக்குச் சென்று அங்கிருந்த மேஜையில் வைத்து கட்டிலில் அமர்ந்து தலைவரை மூடியிருந்த போர்வையை உருவ முயன்றார்.

அதற்குள் போர்வையை விலக்கி எழுந்தமர்ந்து அவரின் கன்னத்தில் முத்தமிட்டு கழுத்தைக் கட்டிக்கொண்டு, “காலை வணக்கம் ஃப்ரண்ட் அம்மாஆச்சி” என்றாள் “ராசி.”

“தினமும் தாமதமா எழுறதே உனக்கு வேலையாய் போச்சி. சீக்கிரம் போய் பல்தேய்ச்சிட்டு வந்து பூஸ்ட் குடி.”

“ஏன் அம்மாஆச்சி. நான் பாட்டுக்கு குளிச்சிட்டு வந்த உங்களுக்கு முத்தம் குடுக்குறேனே.. ஏய் ராசி இதென்ன பழக்கம் பல் தேய்க்காம முத்தம் குடுக்கிறதுன்னு திட்டமாட்டீங்களா?”

“ஏன் திட்டணும்?”

“ஹான்! அப்படிக் கேளுங்க. இதான் பெரிய மனுஷிக்கு அழகு. பெரியவங்க சின்னப்பொண்ணு தப்பு செஞ்சா திட்டி கண்டிச்சி நல்வழிப்படுத்தணும் தான? அப்படியும் சொல் பேச்சி கேட்கலையா இரண்டு அடி போட்டாவது நம்ம வழிக்குக் கொண்டு வர்ற வேலையைப் பார்க்கணும்ல. அதை விட்டுட்டு இப்படிச் செல்லம் கொடுத்தா நான் கெட்டுப் போயிரமாட்டேனா? அப்புறம் மாமா உங்களைத்தான திட்டுவாங்க” என்றாள் குறும்புக் குரலில்.

“நான் எப்பமா செல்லம் கொடுத்தேன்?” என்றார் அதே குறும்புடன்.

“போங்க லோஜி. நீங்க ரொம்ப மோசம். நான் எது பண்ணினாலும் கண்டுபிடிச்சிடுறீங்க” என்றாள் முகத்தை சுருக்கி.

பூஸ்டை கையில் கொடுத்தபடி, “ம்க்கும்... நீ எப்ப.. என்ன பண்ணுவேன்னு தெரியாதா என்ன? நான் வர்றதுக்கு முன்னாடியே ப்ரஸ் பண்ணிட்டு, பூஜை முடிச்சதைப் பார்த்ததும் திரும்ப வந்து படுத்திருக்க. சரியா சொல்றேனா?” என கேட்டார்.

“ப்ச்... உங்களை என்னால ஏமாத்தவே முடியல லோஜி. இருங்க என் டார்லிங்கோட சேர்ந்து உங்களை ஒருவழி பண்றேன்.”

“உன்னோட சேர்த்து உன் டார்லிங்கிற்கும் மொத்து விழும் சொல்லி வை.”

“யாரு... நீங்க.. போங்க அம்மாஆச்சி. சிரிச்சே உங்களை மயக்கிருவாங்க. சரி இப்ப எனக்கு டைம் இல்ல. நான் குளிச்சிட்டு வந்து டிபன் செய்றேன்” என்று கிளாசை கையில் கொடுத்தபடி எடுத்து வைத்திருந்த டிரஸை எடுத்து பாத்ரூம் ஓடினாள்.

“இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கமா. உன் மாமனுக்குத்தான் இதைப் பார்க்க குடுத்து வைக்கலை” என்றெண்ணும் போதே கண்கள் கலங்கியது.

குளியலறையிலிருந்து இதைக் கேட்டவளுக்கும் இதே நிலைதான். தான் கலங்குவதை விட அம்மாஆச்சியை சமாதானப்படுத்துவது முக்கியமென்று தோன்ற, “லோஜி அழறீங்களா? அழுதா மாமாவுக்குப் பிடிக்காது தெரியும்தான. ஏன் அவங்களை கஷ்டப்படுத்துறீங்க? நீங்க போய் சமையல் ஆரம்பிங்க. நான் வர்றேன். முடியாதுன்னா என் டார்லிங்கிற்கு போன் போட்டு வரவழைச்சிருவேன் சொல்லிட்டேன்” என மிரட்ட...

“அச்சோ! அந்த டார்ச்சருக்கு நான் அழாமலிருக்கிறதே நல்லது. நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா.”

“ஹான்! அது. அப்படித்தான் நான் கோடு போட்டா நீங்க ரோடு போடணும். ஓகே” என்றதும் லோஜி வெளியே செல்வது தெரிந்தது. ‘ஹ்ம்...’ என பெரிய மூச்சை இழுத்துவிட்டு, வந்த பழைய நினைவுகளை உதறி குளித்து வர சமையலறையில் வேலைகள் ஆரம்பித்திருந்தது. தாங்கள் இருவர் மட்டுமே என்பதால் வீடு சுத்தப்படுத்த என்று காலையும் மாலையும் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறாள் ராசி.

“நான் பார்த்துக்கொள்ள மாட்டேனா. ஆள் எதற்கு?” என்று மறுத்த லோஜியிடம்,

“அப்படின்னா வருஷத்துக்கு ஒரு வயசு ஏறாம, உடம்புக்கு எந்த பாதிப்புமில்லாமல் பார்த்துக்கணும். அது உங்களால முடியும்னா சொல்லுங்க. எல்லா வேலையையும் உங்க தலையிலேயே கட்டிட்டு வேலைக்குப் போக நான் ரெடி. எப்படி வசதி லோஜி?” என்றாள் சவாலாக.

“அம்மா தாயே! நீ எத்தனை பேரை வேணும்னாலும் வேலைக்கு வச்சிக்கோ. நான் எதுலயும் தலையிடலை” என்று வாயை மூடியவர்தான். மதிய உணவிற்கும் சேர்த்து சமையல் செய்து அலுவலகம் கிளம்ப, “கார்ல போகலாம்ல ராசிமா?” என கேட்டார்.

“இல்ல அம்மாஆச்சி. கார்ல போனா ஐந்து நிமிஷ டிராவலுக்கு, டிராஃபிக் தாண்டி போகவே ஒரு மணி நேரமாகிரும். நான் ஸ்கூட்டியிலேயே போறேன்” என்றதும் லோஜி முறைக்க, புரிந்தவள் “சாரி போயிட்டு வர்றேன்” என்றாள்.

“சரிமா பார்த்துப்போ. போற வழியில உன் டார்லிங்கிட்ட கடலை போடுறேன்னு நேரத்தை ஓட்டிராத.”

“ஓகே பை” என்றபடி ஸ்கூட்டியை எடுத்தவள் மூன்று வீடு தள்ளிச்சென்று வண்டியை நிறுத்தி ஹாரன் அடிக்க, மாடி பால்கனியிலிருந்து அவளின் டார்லிங் எட்டிப் பார்க்கவும், “ப்ரீ டார்லிங் ஈஈஈஈ...” என்றாள்.

பதிலுக்கு மூன்று வயது ப்ரீடாவும் “ஈஈஈஈ..” என சப்தமெழுப்பியதும் “பை டார்லிங். ஈவ்னிங் வர்றேன்” என்றதும் அவளின் வாகனம் வேகமெடுத்தாது.

அவள் வேலை செய்யும் வங்கியினுள் சென்று காசாளர் இடத்தில் அமர்ந்து அன்றைய வேலையை ஆரம்பித்தாள். அவளிடமிருந்த குறும்பு, கொஞ்சல் எல்லாம் பறந்து போக ஒரு பக்குவப்பட்ட பெண்ணிற்கான தகுதி தன்னாலயே வந்திருந்தது.

ராசி! ஒரு குழந்தைக்கான குறும்புகளும் குடும்பத்தை தாங்கி வழிநடத்தும் பொறுப்புகளும் ஒருங்கே சேர்ந்த இளம் பெண்.

“என்னாச்சிடா? பார்த்துட்டியா?”

“ஆமாடா. அவன் பின்னாடிதான் நிற்கிறேன். போட்டோல இருக்கிற மாதிரி நேர்ல இல்லையேடா? எப்படிடா இவனை மாதிரி ஆளுங்களையெல்லாம் பொண்ணுங்களுக்கு பிடிக்குது. பொண்ணுங்களோட ரசனை அவ்வளவு கேவலமாகவா இருக்கு. மூஞ்சைப்பாரு பனங்காயை சப்பிட்டுப்போட்ட கொட்டை மாதிரி. நாடியில தாடின்ற பேர்ல ஆட்டுத்தாடி ஒண்ணு நீளமா தொங்குது. அதைச் சுற்றிலும் க்ளீன் ஷேவ். டாப்ல நடுவுல மட்டும் நிறைய முடியிருக்கு சுற்றிலும் மொட்டை அடிச்சிருக்கான். காதுலயும் புருவத்துலயும் கம்மல். கழுத்துல வளையம் கையில வளையல். ஷப்பா! என்னாலயே இரண்டு நிமிஷத்துக்கு மேல தொடர்ந்து பார்க்க முடியலையேடா. அந்தப் பொண்ணு எப்படிடா பார்த்தா? என்ன டேஸ்டுகளோ கருமம்” என தலையிலடித்தான் அவன்.

எதிரிலிருப்பவன் விழுந்து விழுந்து சிரிப்பது கேட்டது. “டேய்! நானென்ன கதையா சொல்லிட்டிருக்கேன். அவனைப் பாருடா நடு மண்டையில நட்டுட்டிருக்கிற முடிக்கும் கலரிங்ன்ற பேர்ல ஒண்ணைப் பண்ணியிருக்கான் பாரு. நிஜமாவே முடியலைடா என்னால” என்றதும் எதிரிலிருப்பவன் சிரிப்பையடக்க படாத பாடுபட்டான்.

“இரு முடிச்சிடுறேன். அப்புறம் சிரி” என கடுப்படித்து, “அவன்கிட்டேயே போய் ஏன்டா இப்படின்னு கேட்டோம்னு வையி, மத்தவங்ககிட்டயிருந்து தனிச்சி தெரியணும்லனு சொல்வான். அவகிட்ட கேட்டா பத்துபேர் போனா என் ஆளுதான் தனியா தெரிவான்னு சொல்வா. எல்லாம் காலக் கொடுமைடா. சரி நெக்ஸ்ட் என்ன பண்ணனும்?”

சிரிப்பை அடக்கி, “ஹேய்! ஒரு நிமிஷம் இருடா. நீ சொல்றதைப் பார்த்தா ஆள் மாத்தி பார்த்திருப்ப போலிருக்கு. அந்தப் பையன் ப்ளாக் கலர் டாப்பும் ஹாஃப் ஒய்ட் பேண்ட்டும் போட்டிருக்கானா பாரு.”

“ஆமா. நீ சொன்ன ட்ரஸ்தான் போட்டிருக்கான்.”

“இல்லையேடா. என்னோட இடத்திலிருந்து பார்க்கும் போது பார்க்க பக்கா டீசன்டா இருக்கானே. ம்... இப்ப நீ எங்க நிற்கிற?”

“பார்க் என்ட்ரன்ஸ்லடா.”

அவனிருக்கும் இடம் நோக்கியவன், “அடப்பாவி! நான் உள்ள குழந்தைங்க விளையாடுற இடத்துகிட்ட நிற்கிறேன்டா. ச்சீ.. உள்ள வா. உன்னையெல்லாம் வச்சி வேலை வாங்குறேன் பாரு என்னைச் சொல்லணும்” என்றான் சரத்.

“உன்னை யாருடா வச்சிக்கச் சொன்னது” என கூலாக தோளைக் குலுக்கியபடி உள்ளே விரைய, அவர்கள் தேடி வந்த பையன் ஒரு பெண்ணுடன் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தான்.

“அந்தப் பெண்ணா? இல்ல இது வேறயாடா” என்றான் சரத்தின் உயிர் நண்பன். சாரி உயிர் வாங்கும் நண்பன் மணிகண்டன் என்ற மணீஷ்.

“இது அந்த பொண்ணு இல்லதான். என்ன உறவுன்னு தெரியலையே. வேலை முடியுறதுக்கு ஒருமணி நேரம் முன்னாடியே வந்து ஆஃபீஸ்ல வெய்ட் பண்ணினா அந்தப் பொண்ணு. வேலை முடிச்சதும் இங்க கூட்டிட்டு வந்துட்டான். கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணலாம்.”

“ஹ்ம்.. பாருடா. அவனவன் ப்ரண்டைத்தான் ஏகப்பட்டது வைப்பான். இவன் பிகரை வச்சிருப்பான் போலிருக்கே” என ஏக்கப் பெருமூச்சிவிட்டான்.

“டேய்! வயசுக்குத் தகுந்த மாதிரி பேசுடா. ஒரு பேமிலி மேன் மாதிரியா பேசுற” என கண்டித்தான் சரத்.

அதில் கோபம் வந்தவன், “என்ன விளையாடுறியா. இவனும் பேமிலி மேனாகப் போறவன் தான. அதுக்காகத்தான நாமளும் வந்திருக்கோம். அப்ப அவன் மட்டும் லைவ் ஷோ காட்டலாம். நான் பேசக்கூடாதா. சே.. இந்த நாட்டுல பேசற உரிமை கூட இல்லையா” என அலுத்தவனை,

“நீ புலம்பிட்டேயிரு. நான் வர்றேன்” என்று அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த இடத்தின் மறுபகுதியில் மறைவான இடத்தில் அவர்கள் பேசுவது கேட்குமிடத்தில் நின்றான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
962
“உன்னையெல்லாம் என்ன பண்ணலாம். எத்தனை நாள் வீட்டுக்கு வான்னு அம்மா கூப்பிடுறாங்க. கோபத்துல பெத்தவங்க ஏதோ சொல்லிட்டாங்கன்னு நீ பாட்டுக்கு வந்துட்ட. இந்த வயசுல காதல், கல்யாணம் வேண்டாம் கொஞ்ச நாளாகட்டும் சொன்னாங்க. அது தப்பா? உனக்காக காத்திருக்க முடியலைன்னா மேரேஜ் பண்ணக்கோன்னு சொல்லிட்டு வர்றதை விட்டுட்டு, அவங்களுக்காக வீட்டைவிட்டுப் போயிட்டல்ல. வீட்ல எல்லாரும் எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரியுமா? போண்ணா நீ ரொம்ப சுயநலவாதியாகிட்ட” என்றபடி அழுதாள் அப்பெண்.

அதைக் கேட்டதும் சரத் மணியை முறைக்க, அவனோ ‘அங்கயிருந்து ஏன் என்னை முறைக்கிறான்?’ என்று புரியாமல் விழித்தான்.

“சாரிமா. ப்ளீஸ் அழாத. நான் கோவப்பட்டுட்டு வரல. அதே மாதிரி அவளைத் தேடியும் போகல. கோவத்துல ரெண்டொரு வார்த்தை அம்மாகிட்ட கூடப் பேசிட்டேனா, அம்மா முகத்துல முழிக்க கஷ்டமாயிருந்தது. அதான் கொஞ்சம் விலகி வந்திட்டேன். நீ அழாமல் வீட்டுக்குப் போ. நான் ப்ரண்ட்கிட்ட சொல்லிட்டு வர்றேன்” என்று அனுப்பி வைத்து அவனும் கிளம்பினான்.

“யுவர்ஸ் ஃப்ரண்ட் டிடெக்டிவ் ஏஜென்சி” தன் கண்முன் அமர்ந்திருந்தவரையே பார்த்திருந்தான் சரத். ஒரு சின்ன மௌனத்திற்குப் பிறகு, “என்ன சார் முடிவு பண்ணியிருக்கீங்க?” என்றான்.

“குழப்பமாயிருக்கு தம்பி.”

“இதுல குழம்ப ஒண்ணுமில்லை சார். பையன் நல்லவன். நல்லா சம்பாதிக்கிறான். குடும்பத்து மேல பாசமிருக்கு. அவனுக்கு கல்யாண வயசுல தங்கச்சியிருக்கிறதால, அந்தப் பொண்ணுக்கு முடிச்சதும் பையனுக்கு பண்றதா ஐடியா போலயிருக்கு. அவங்க சொல்றதும் நியாயம்தான சார். இந்தப் பையனுக்கு இருபத்தைந்து வயசுதான் ஆகுது. ஸோ.. ரெண்டு பேருக்கும் பிடிச்சதால கொஞ்ச நாள் கழிச்சி முடிங்க. வருஷம் ஆக ஆக பையனுக்குள்ள இன்னும் பக்குவம் வரும் சார். கொஞ்ச நஞ்சம் ஒட்டிட்டிருக்கிற விளையாட்டுத்தனங்களும் குறைஞ்சிரும்” என்று நிதானமாக சொன்னான்.

“ரொம்ப நன்றி தம்பி. அப்படியே செய்கிறேன்” என்று விடைபெற்றுச் சென்றார்.

ஒரு திருமணத்தை நல்லபடியாக பேசி முடித்த திருப்தியில் அமர்ந்திருந்தவன் போன் அடித்ததும் எடுத்துப் பார்க்க முகம் தன்னாலேயே மலர்ந்தது. எதிரிலிருப்பவரின் வார்த்தைகளுக்கு செவிமடுத்து, “ஓகே நான் பார்த்துக்கறேன். வேற யாருக்கோவா நம்ம பொண்ணுக்கு தான. கண்டிப்பா இன்னும் ரெண்டு நாள்ல விசாரிச்சிருறேன். எங்க சிங்கப்பூரா? சரி அட்ரஸ் சொல்லுங்க” என பேனா எடுத்து எழுதியவன், “சரி நான் முழுசா விசாரிச்சிச் சொல்றேன். நான் உடம்பைப் பார்த்துக்கிறது இருக்கட்டும் நீங்க முதல்ல உங்களைக் கவனிங்க. பொண்ணு கல்யாணத்துக்கு தெம்பாயிருக்க வேண்டாமா. எனக்கு கல்யாணமா? இப்ப என்ன அவசரம் முதல்ல பொண்ணுக்கு முடியட்டும்” என பேசி முடித்தவனின் முகம் ஆயிரம் யோசனைகளுக்குப் போனது.

சிங்கப்பூரிலிருக்கும் தன் நண்பனுக்கு போன் செய்து பையனின் பழக்க வழக்கத்திலிருந்து அவனின் நண்பர்கள் வரை விசாரிக்கச் சொல்லி புகைப்படத்தியும், முகவரியையும் மின்னஞ்சல் செய்து முடிக்க உள்ளே நுழைந்தவனைப் பார்த்து, “தேங்க்ஸ்டா மணி. நீ இருக்கிறது எனக்கு எவ்வளவு பெரிய சப்போர்ட் தெரியுமா? கொஞ்சம் ஃப்ரீயா ஃபீல் பண்றேன்டா. சரி நாளைக்கு கோயம்புத்தூர் போய் அந்த சங்கரைப் பார்த்துட்டு வர்றியா. வேலை கொடுத்து ஒரு வாரம் ஆச்சிது இன்னும் ஆளையே காணோம். என்னன்னு பார்த்துட்டு வந்திரு. என்னடா நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கேன் பதிலையே காணோம்?” என்று மணியின் முகம் பார்த்தான்.

“ம்... நான் போகலை.. நீயே போய்க்கோன்னு அர்த்தம்” என முறுக்கிக் கொண்டான் அவன்.

“டேய்! என்ன விளையாடுறியா? நான் வேலை விஷயமா பேங்க் வரைக்கும் போக வேண்டியிருக்கு. ஏற்கனவே வர்றேன்னு சொல்லிட்டேன்.”

“போ.. ஆனா நான் போகமாட்டேன்” என அலம்பல் செய்தவனையே யோசனையாக பார்த்த சரத் ஏதோ நினைவு வர, இதழோரப் புன்னகையுடன், “சாரிடா மறந்துட்டேன். ஆனாலும், நீ இந்தளவுக்கு சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ணக்கூடாதுடா. மணின்னு சொன்னது தப்புத்தான் மணீஷ் சார். போதுமா மணின்னு சொன்னதுக்காக ரொம்ப சீன்லாம் போடாத சொல்லிட்டேன்.”

“ம்... அது. இதை எப்பவும் மறந்திடாத. கால் மீ மணீஷ் ஓகே” என்று கன்னம் தட்டி வெளியே செல்ல நடந்தவனிடம்,

“பார்றா! ஒரு கிராமத்து காக்கா பட்டணத்துக்கு வந்து பஞ்ச் டயலாக் பேசுது” என்று நண்பனை கிண்டலடித்தான் சரத்.

“டேய்! நான்லாம் பந்தா மட்டும்தான் காட்டுறேன். உன் உலகத்தை விட்டு வெளியில வந்து பாரு. அவனவன் என்னலாம் செய்றான்னு.”

“சரிடா நான் பார்த்துட்டு, ஊருக்கு போயிருக்கிற தங்கச்சிகிட்டேயும் சொல்லிருறேன். யூ டோண்ட் ஒர்றி.”

“அப்படியே இன்னைக்குப் பார்த்த அந்த ஜந்துவையும் சொல்லி வைடா. அப்பத்தான் என் புருஷன் எம்புட்டு அழகுன்னு பூரிச்சிப் போயிருவா.”

“ஹா.. ஹா அவன் ஜந்துவா? ஆனாலும், உனக்குப் பெரிய மனசுடா மணீஷ்.”

“என்ன திடீர்னு மனசைத் தேடுற?”

“இல்லடா. நீ அழகில்லைன்னு நீயே ஒத்துக்குற தான” முறைத்த நண்பனிடம், “ஏன்டா ஊர்லயிருந்து வந்த நீயே உன் பெயரை டீசண்டா மாத்திக்கணும்னு நினைக்கும் போது. இங்கேயே பிறந்து வளர்ந்த பசங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க. பார்க்கிற நமக்கு வித்தியாசமாகத்தான் இருக்கும் என்ன பண்றது?”

“அதுக்காக எப்படி இப்படிலாம் இருக்குறாங்கன்னே தெரியல? பேரண்ட்ஸ் பேச்சைக் கேட்கிறாங்களோ என்னவோ. இப்படித் தறுதலையா அலையுதுங்க. சரி நான் கோவை கிளம்புறேன். நீ உன்னோட வேலையைப் பார்” என்று கிளம்பினான்.

நண்பனின் பேச்சில் சிரித்தபடியே அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பினான் சரத்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
515

பிரியா சங்கதி என்ன ஆச்சுன்னு தெரியல அதுக்குள்ள புதுசா நிறைய கேரக்டர் வந்து இருக்காங்க🤔🤔🤔
 
Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top