• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Nov 9, 2025
Messages
2
அப்போது மது பத்தாவது வகுப்பு படித்து கொண்டு இருந்தான். ஒருநாள் வயலுக்கு சென்ற கேசவ் மூர்த்தி வீடு திரும்பவில்லை. மாலை அவரது சடலம் தான் வந்தது. கொடிய விஷ பாம்பு கடித்ததால் மரணம் என ரிப்போர்ட் கூறியது.பிள்ளைகள் இருவரும் நிலைகுலைந்து போயினர். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை முறை இன்னும் மாறியது.
மதுவிற்கு நிறைய பொறுப்புகள் கூடி போயின. தாய் இறந்த பின்பு வீட்டு நிர்வாகத்தை கையில் எடுத்தவனுக்கு இப்போது தொழிலையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிலை. முன்பும் அவன் தான் வீட்டில் சமையல். அன்னை இவ்வுலகை விட்டு சென்ற பிறகு அக்கம் பக்கத்து பெண்களிடம் இருந்து அரையும் குறையுமாக கற்று கொண்டு தன் சொந்த முயற்சியில் மெருகேற்றி கொண்டான். இப்போது சமையல், விவசாயம், படிப்பு, கூடவே தங்கையின் பொறுப்பு என ரொம்ப கஷ்டப்பட்டு தான் போனான்.‌ அதுவும் உறவினர்கள் அறிவுரையின் பேரில் முதலில் நிலத்தை குத்தகைக்கு மட்டும் தான் விட்டிருந்தான்; ஆனால் சொந்த சித்தப்பாவே அவனை பண விஷயத்தில் பெரிய அளவில் ஏமாற்றியது தெரிந்ததும் மிகவும் நொறுங்கி போனான். அந்த ஏமாற்றில் அவனது அத்தைக்கும் உடந்தை என தெரிய வந்ததும் அனைவரையுமே ஒதுக்கி வைத்து விட்டான். அதன் பிறகு அவனும் அவன் தங்கை மட்டும் தான். " அண்ணா என் டிரெஸ்ஸை பாரு " என்று சிவப்பு கறை படிந்த பள்ளி சீருடையை காண்பித்து அழவும், ஏதும் புரியாமல் தவியாக தவித்து விட்டு பின் பக்கத்து வீட்டு அக்காவை அழைத்து வந்து முறையாக எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும் நடத்தி முடித்தவன், அவன்.‌அந்த இருவரை அடுத்து கொஞ்சம் நம்பத்தகுந்த மனிதர் அவன் தாய் மாமன் மணி.அவ்வளவு தான். அவர்களின் உலகம்.

சித்தப்பா ஏமாற்று, கொஞ்சம் கடன் போக மீந்த சொத்தை காக்க, அவனே களத்தில் இறங்கி விவசாயம் செய்தான். கிடைத்த நேரத்தில் படித்து பள்ளி செல்லாமல் டூடோரியல் உதவியுடன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றான். அத்தோடு படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கடினமாக உழைத்து இழந்ததை மீட்டு , அவனது சமையல் திறமையை அடிப்படையாக வைத்து தஞ்சையில் 'பார்வதி பவன் ' என்ற பெயரில் ஒரு நடுத்தர உணவகம் வைத்து இருக்கிறான்; கூடவே விவசாயமும் பார்த்து வருகிறான்.அவன் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
வந்த வருமானத்தில் தங்கையை நன்றாக படிக்க வைத்து விட்டான்.இந்த நிலையில் சமீப காலமாக இந்த மணி மாமா அவன் திருமண பேச்சை திணித்து வருகிறார்.


" எனக்கு சொந்தமானது எனக்கு ன்னு இருக்கணும். இல்ல தொலைச்சு கட்டிடுவேன் " என்று எதிரே நிற்பவன் காது கிழிய கத்தினான், சர்வேஸ்வரன். ஏன் இந்த சத்தம் என்கிறீர்களா? அவன் வீட்டுக்கு வந்த நண்பன் ஆர்வகோளாறில் அவனது வாசனை திரவியத்தை எடுத்து அனுமதி கேட்காமல் தன் மேலே பூசி கொண்டான். அதற்காக சர்வேஸ்வரன் கஞ்சனோ கருமியோ இல்லை. நண்பன் கேட்டிருந்தால் இது போல் பத்து பன்னிரண்டு பாட்டில்களை கூட வாங்கி தந்திருப்பான். ஆனால் தன்னுடையதை தனக்கென்று வாங்கியதை யாருடனும் பகிர்ந்து கொள்ள அவனுக்கு பிடிக்காது. இந்த பிரச்சினை அதிகம் ஆனது அவனது ஆறாவது வயதில் இருந்து தான்.
ஆம் அப்போது தான் அவனது தங்கை அன்னலட்சுமி பிறந்தாள். அதுவரை
அன்னபூரணி குரூப் ஆஃப் கம்பெனி ஓனர் சதாசிவத்தின் ஒரே மகனாக இருந்தான். புதிதாக பிறந்தவள் அன்னை தந்தையின் பாசத்தை கூறு போடுவதை அவனால் தாங்க இயலவில்லை. அவர்களின் முழு கவனமும் அவள் மேல் செல்வதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.‌அதுவரை அவனை தூக்கி‌ வைத்து கொண்டாடிய தாத்தா பாட்டி சுற்றம் கூட அவள் பக்கம் செல்லவும் அனைவரையும் வெறுக்க துவங்கினான். இப்போது வளர்ந்த பிறகு இவன் யாரையும் பக்கத்தில் சேர்ப்பதில்லை. இப்போது கூட தனியே ஒரு வீட்டில் தான் தங்கி இருக்கிறான். சிறு வயதில் இதற்காக மனநல மருத்துவரிடம் கூட அழைத்து சென்று இருக்கிறார்கள், அவனது பெற்றோர்; அவரும் உரிய கவுன்சிலிங் கொடுத்து விட்டு தன்னால் சரியாகும் என அனுப்பி வைத்து விட்டார்.

' என் இனிய தனிமையே ' என்று கைப்பேசி அழைக்கவும் போனை‌ காதில் ஒற்றினான், சர்வா. எதிர்முனை என்ன சொன்னதோ விரைந்து வெளியே கிளம்பினான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top