• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
17


எங்கே போனாலும் நானும் வருவேன்

கண்ணாடி பாரு நானும் தெரிவேன்.

தாயே உயிர் பிரிந்தாயே!

கண்ணே நீயோ என்னுயிர் தானே!

இன்று நீ பாடும் பாட்டுக்கு

நான் தூங்க வேணும்.

நான் பாடும் தாலாட்டு

நீ தூங்க காதோரம்

என்றென்றும் கேட்கும்.

அம்மா அம்மா நீ எங்க அம்மா

உன்னை விட்டா எனக்காரு அம்மா.

கண்களில் கண்ணீர் அவனறியாமல் வடிய, தாயின் மரணம் நேரில் அவன் கண்முன் நடப்பது போல் தெரியவும் தாயின் நினைவு சரவணனை வாட்டியது.

சரணை உலுக்கிய அபிஷேக், “என்னடா? உனக்கே இன்னும் ட்ரீட்மெண்ட் தரணும் போலருக்கே”

“ப்ச்... இல்லடா நான் நார்மலா தான் இருக்கேன். அம்மா இல்லன்றது எனக்குப் புரியுது. ஆனாலும், மனசு அம்மாவைத் தேடுது. அவளுக்கு வாய் பேச வராதுன்னு உனக்குத் தெரியும். ஆனா, அந்த சம்பவத்திலிருந்து குட்டிமாக்கு தண்ணின்னா பயம். பள்ளமான இடம்னா பயம். வீட்டுல எதற்காவது பள்ளம் தோண்டினா கூட அங்க நிற்கமாட்டா. ஸ்கூல், காலேஜ்ல டூர் கூப்பிட்டுப் போனாலும் மறுத்திடுவா.”

“இனி அபி என்னோட பொறுப்புடா. அவளைச் சரி பண்ண வேண்டியது என்னோட கடமை. இனி நான் உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவேன். மத்தவங்க பார்வைக்கும், அபிக்கும் சாதாரணமா வர்ற மாதிரி இருக்கும், ஆனா, நான் ட்ரீட்மெண்ட் தான் கொடுப்பேன். சரி டைமாகுது கிளம்பு அப்புறம் உன் தங்கச்சி உன்னை ஒரு வழி பண்ணிருவா” என்று சிரித்தபடி இருவரும் விடைபெற்றுக் கிளம்பினார்கள்.

சரண் சொன்னது போல் ஆராதனாவைச் சந்திக்கவோ, போனில் பேசவோ முயற்சிக்கவே இல்லை. ஆராதனா, வேதவல்லி இருவருக்கும் பயிற்சி முடிய சில வாரங்களே இருக்க, இன்னொரு நிறுவனத்திற்கு நேர்காணல் சென்று அதில் தேறியதும், பத்து நாட்களில் பணியில் சேருவதாகச் சொல்லி வந்தனர்.

அந்த விடுமுறைக்கு ஊருக்கு நெல்லை எக்ஸ்பிரசில் செல்வதற்கு இரயில் நிலையம் வர, நேரம் ஆக ஆக ஆராதனாவிற்குள் கோவம் ஏறிக்கொண்டே இருந்தது. ஊருக்குச் செல்லும் முன் கணவனை ஒரு முறையாவது பார்க்கத் துடித்தாள்.

‘என்ன புருஷன் இவங்க? பொண்டாட்டி ஊருக்குப் போறாளே, ஒரு தடவை பார்க்கலாம்னு தோணுதா? பெரிய ரொமாண்டிக் ஹீரோ மாதிரி லுக் மட்டும் விடுறது.’

‘நீ சொன்னியா?” என்று மனசாட்சி கேட்க, ‘ஏன் சொல்லணும்? அதான் பாசமலர் இருக்கே. இங்கே ஆ..ன்னு கொட்டாவி விட்டா கூட சொல்லிருவாளே. இப்பச் சொல்லாம இருப்பாளா என்ன?’ நேரம் நெருங்க எங்கே கணவனைப் பார்க்காமல் சென்று விடுவோமோ என்ற பயம் வர, கண்கலங்குவது போல் தோன்ற அதை மறைக்கத் தோழியிடம் பேச்சுக் கொடுத்தாள்.

அவள் முகத்தின் கவலையைப் பார்த்த வேதவல்லி, “ஆரு அண்ணாவ மிஸ் பண்றியா?” என்று வேதா நேரடியாகக் கேட்க,

இல்லையென்று தலையாட்டியவள் பின், “தெரியலை வள்ளி. பார்க்கணும்னு தோணுது. பார்க்க கூடாதுன்னும் தோணுது.”

அவளின் வள்ளியில் வருத்தம் உணர்ந்தவள், “ஏதோ தோணுதுல்? ஷப்பா! அண்ணா வாங்க. அண்ணிக்கு எதோ தோணுதாம்” என்றாள் புன்னகையுடன்.

அடுத்த நிமிடம் அவள் முன் நின்றிருந்தான் சரண். அவனைப் பார்த்ததும் முகத்தில் சிரிப்பு தன்னால் வர, அவளருகில் வந்தமர்ந்தான்.

“நீங்க பேசிட்டிருங்க. நான் தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வர்றேன்.”

“செல்லம் ஏன்டி சிரிச்ச? பாரு நீ சிரிச்சா நான் ப்ரீஸ் ஆகிடுறேன். உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே உன் தெத்துப்பல் சிரிப்புதான்” என்று புன்னகைக்க,

கணவனை முறைத்து, “எனக்கு தெத்துப்பல்லா?” என்றாள்.

“ஹி..ஹி கொஞ்சோண்டு” என்று அவன் கைபேசி எடுத்து திருமணத்தன்று காலையில் எடுத்த நிழற்படங்களைக் காட்டினான்.

அதைப் பார்த்தவள் “இது நானா?” என அதிசயித்தாள்.

“அவ்வளவு களேபரத்துலயும் கலகலன்னு சிரிச்சிருக்க பாரு” என்றான்.

அவனைக் கையால் இடித்து, “இதை எனக்கு அனுப்பி விடுங்களேன்” என்று கேட்டாள்.

“செல்லம் இட்ஸ் ஒன்லி மீ. உனக்கு வேணும்னா இப்ப சிரி நான் எடுக்குறேன்.”

“ஒண்ணும் தேவையில்லை. நீங்க கிளம்புங்க. ட்ரெயின் எடுக்கப் போறாங்க. இந்த வேதா எங்க?”

“நான் இங்கதான் இருக்கேன். அண்ணா கிளம்பினதும் வர்றேன்” என்றாள்.

“சரி நான் கிளம்புறேன்” என்றவன் மனைவியிடம் நெருங்கி வந்து அவள் பார்த்திருக்கும் போதே கன்னத்தில் முத்தமிட்டுக் கிளம்பினான்.

அவன் முத்தமிட்ட இடத்தை தொட்டு ரசித்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்தாள் அவனின் சரிபாதி.



திருநெல்வேலி டவுன்:

ஆராதனாவும், வேதவல்லியும் ஊருக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. வேதவல்லி வந்ததுமே ‘இன்னும் நான்கு நாட்களில் உனக்கு நிச்சயதார்த்தம்’ என்ற தகவல் சொன்னார்கள். ‘கல்யாணத்துக்குப் பிறகு விருப்பம் இருந்தால் வேலைக்குப் போகலாம். பையன் சென்னைதான்’ என்ற தகவல் கிடைத்தது.

‘நல்லவேளை தாலி கட்டுறதுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம்னு சொல்லாம விட்டாங்களே. அதுவரைக்கும் சந்தோஷம்தான்’ என மனதினுள் நினைத்தாள்.

கீர்த்தனா மட்டும் தன் அக்காவை அடிக்கடி வித்தியாசமாகப் பார்த்தாள்.

‘என்னடா இவ இப்படிப் பார்க்கிறா?’ என்று மனதில் கேட்டதை அவளிடமே கேட்க,

“இல்ல ஏதோ வித்தியாசம் இருக்கு உன்கிட்ட. சம்திங் ராங். உன்னோட முகம் டாலடிக்குதே. என்ன எதுவும் லவ் மேட்டரா? அக்கா அத்தானைப் பார்த்திட்டியா?” என்று ஆர்வத்தில் கேட்டாள்.

“ப்ச்... அப்படில்லாம் ஒண்ணுமில்லடி. உன் தொல்லையில்லாமல் இருக்கிறேன்ல. அதான் உனக்கு அப்படித் தெரியுதோ என்னவோ.”

தாய் செல்வியுமே மகளிடம் வித்தியாசத்தை உணர்ந்தார். அதனால் கணவரிடம் சொல்லி நல்ல பையனாகப் பார்த்து, அவள் ஊருக்குப் போவதற்குள் பொண்ணாவது பார்க்க வரட்டும் என்றதும், கேசவனுக்கு அது நல்ல விசயமாகப் பட்டது. அதைத் தன் தந்தையிடமும் சொல்லி, சென்னையில் வேலை செய்யும் பையனாக பார்த்து, வேதவல்லி நிச்சயம் முடிந்த மறுநாள் ஆராதனாவைப் பெண் பார்க்க வரச் சொல்லி, அதை மனைவியிடமும் சொன்னார்.

அதைக் கேட்ட கீர்த்தியோ, “அவசரப்படுறீங்கப்பா. எதுக்கும் அக்காகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருங்க” என்றாள்.

“சொல்லலாம்மா. நாளைக்கு வேதா நிச்சயம் முடிஞ்சதும் நானே சொல்லிருறேன்.”

வேதாவின் நிச்சயதார்த்தத்திற்கு காலையில் அவளை அலங்கரித்த ஆராதனாவிடம், “அண்ணாவும் இருந்தா நல்லா இருக்கும்ல ஆரு?” என கேட்க,

“உனக்கு வேற வேலையில்லையா. கம்முன்னு இருடி. ஏற்கனவே கீத்து வித்தியாசமா பார்க்கிறா. இதுல நீயே என்னைக் காட்டிக் கொடுத்திருவ போல” என்று அதட்டி அமைதியானாள்.

அதற்குள் மாப்பிள்ளை வீட்டினர் வர, பெண்ணை அழைத்து வந்த ஆராதனா மாப்பிள்ளையைப் பார்த்து திகைக்க, வேதவல்லியின் கையை அழுத்தி, “ஏய்! மாப்பிள்ளையைக் கொஞ்சம் நிமிர்ந்து பாரு” என்று இரகசியமாக சொல்ல, நிமிர்ந்து பார்த்த வேதவல்லி, ‘இவனா?’ என்று அங்கு மாப்பிள்ளையாக அமர்ந்திருந்த முகிலனைப் பார்த்து அதிர்ச்சியானாள்.

“ஏய்! ஆரு! இன்ஸ் இங்க எப்படி? எனக்கு ஒண்ணும் புரியலடி?”

“அங்க என்ன ரெண்டு பேரும் காதைக் கடிச்சிட்டு இருக்கீங்க” என்று கலைவாணி கடிந்தார்.

“இங்க வாம்மா” என்று முகிலனின் தாய் அழைத்து பக்கத்தில் அமர வைத்து சகஜமாகப் பேச, முகிலனின் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்தாள் வேதவல்லி.

“இது ஒரு மாசத்துக்கு முன்னாடி நடந்திருக்க வேண்டியது. பையன் பொண்ணைப் பார்க்கிறதுக்கே மாசம் ஓடிப்போச்சி” என்று முகிலனின் தாய் சொன்னதும்தான், அன்று அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் புரிந்தது. ‘பொறுப்பான பதவியில் இருப்பவன், முன்னப்பின்ன தெரியாத பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்குவானா?’ என்று நினைத்திருந்தவள், ‘தன் உறவென்று தெரிந்த பின் தான் பார்த்திருக்கிறான்’ என்று தெரிந்ததும் மனம் நிம்மதியாக அவனை தலைநிமிர்ந்து பார்த்தாள்.

“ஹாய்! ப்யூட்டி!” என்று உதடசைத்து யாருமறியாமல் கண்ணடித்தான். அவனின் சேட்டையில் முறைக்க முயன்று தோற்று, வெட்கத்தில் தலை குனிய, இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் என்று முடிவானது.

ஆராதனாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென தோழி அமைதியாகி யாரையோ பார்ப்பதைக் கண்டு திரும்பிய வேதவல்லி சந்தோஷத்தில், “அண்ணா வாங்க. கொஞ்சம் முன்னாடி தான் உங்களை நினைச்சேன். நீங்க இருந்தா நல்லாயிருக்குமேன்னு” என்றாள்.

“ஓ... அதான் நான் இங்க வந்ததுக்குக் காரணமா?” பரிசுப்பொருள் ஒன்றைக் கையில் கொடுத்து, “வாழ்த்துகள்மா” என்றான்.

“அண்ணா உண்மையைச் சொல்லுங்க? உங்க ஒய்ஃப் பார்க்கத்தான வந்தீங்க?” என மற்றவர்கள் அறியாமல் கேட்க,

மனைவியைப் பார்த்தபடி, “அதுக்கும்தான்” என்றான்.

கணவனைப் பார்த்ததும் சந்தோஷமும் பயமும் என்று கலவையான உணர்ச்சியில் இருந்தாள் ஆராதனா. அவன் பார்வை தன்னையே பார்த்திருப்பதை அறிந்தவள், அவ்விடத்தில் அமர முடியாமல் ஒரு மாதிரி நெளிந்து கொண்டிருந்தாள்.

அருகில் இருந்த கீர்த்தனா, “அக்கா ஏன் ஒருமாதிரியா இருக்க? முகமெல்லாம் வேர்க்குது. மாப்பிள்ளையோட ப்ரண்டை உனக்கு ஏற்கனவேத் தெரியுமா?” என்ற நேரடியாகக் கேட்டாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
“ஹான்! இ...இல்லை. தெரியாது. நான் போயி முகம் கழுவிட்டு வர்றேன்” என்றவளை நம்பாத பாவனையில் பார்த்த கீர்த்தனா, சரணைக் கவனிக்கலானாள். யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவனின் பார்வை முழுக்க தன் அக்காவின் மேல் படிவதை பார்த்தவள், ‘இருவருக்கும் இடையில் ஏதோ இருக்கு. ஹ்ம்ம்... இவளுக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. இதென்னடா புதுப் பிரச்சனை? இது எந்த வகையில் சரிவரும்? இவளுக்கு ஏன் இந்தத் திடீர் காதல்? வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன நடக்குமோ. கடவுளே! என் அக்காவுக்கு எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கோ’ என்று வேண்டிக் கொண்டாள்.

நிச்சயம் முடிந்து மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் செல்ல, சரணை மட்டும் வீட்டில் இருக்கச் சொன்ன வேதவல்லியிடம் மறுத்தவன், மனைவியிடம் திரும்பி, “என்ன பண்ணலாம்?” என்று கேட்க, அவள் கண்மூடி சம்மதம் சொல்லச் சொன்னதும், “சரி” என ஒத்துக்கொண்டான்.

“நான் வீட்டுக்குப் போயிட்டு வர்றேன் வேதா” என்று தன் வீட்டிற்குச் செல்ல, அங்கு இருந்த தகப்பனைப் பார்த்து, “ஏன்பா நிச்சத்துக்கு வரல?” என கேட்டாள்.

“இல்லடா தனா. முகூர்த்தநாள் என்பதால இன்னைக்கு நிறைய பேர் லீவு எடுத்துட்டாங்க. அப்பாவும், நானும் கண்டிப்பா இருக்க வேண்டியதா போச்சி. இப்பக் கூட உனக்காகத் தான்டா வந்தேன். நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வரப்போறாங்கல்ல. அதான்” என்றார் சாதரணமாக.

“என்னது பொண்ணு பார்க்க வர்றாங்களா?” என்று அதிர்ச்சியானவள், யாரைக் கேட்டு முடிவு பண்ணுனீங்க? நான் சொன்னதும் மாப்பிள்ளை பாருங்கன்னுதான சொன்னேன். இப்பக் கல்யாணம் பண்ற ஐடியாவுல இல்ல. அவங்களை வரவேண்டாம்னு சொல்லுங்க. வேணும்னா கீர்த்திக்கு ரெடி பண்ணுங்க” என்றாள் வேகமாக.

“அடி பிச்சிருவேன் கழுதை” என்று ஒரு அடி போட்ட தாய், “வாய்த் திமிரு அதிகமாகிருச்சி உனக்கு. உன் போக்குல நாங்க போறோம்ல, ஏன் பேச மாட்ட. நீ பேசுறது, செய்யுறது தான் கரெக்ட்னு இருக்கிற உங்கப்பாகிட்ட இப்படியா எதிர்த்துப் பேசுவ? உன்னல்லாம் என்ன செய்யலாம்?” என்றார் கோவத்தில்.

“அம்மா ப்ளீஸ். நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு கல்யாணம் வேண்டாம். என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க” என்றவளுக்கு, அப்பா, அம்மாவை எதிர்த்துப் பேசுமளவு கொண்டு வந்த கணவன் மேல் கோவம் வந்தது. ‘இவன் மட்டும் தாலி கட்டாம இருந்திருந்தா, இந்த நிலை தனக்கு வந்திருக்குமா?’ என்ற யோசனையில் இருந்தவள், “நான் நைட் சொல்றேன்பா. இப்ப வேதாவைப் பார்த்துட்டு வர்றேன்” என்று விட்டால் போதுமென்று அங்கிருந்து கிளம்பினாள்.

கீர்த்தனாவிற்கு சந்தேகம் வந்து அக்காவின் பின்னாடியே சென்றாள்.

வேதாவின் வீட்டிற்குள் புயலாய் நுழைந்தவளிடம், “வாடி அண்ணி. என்ன போன செகண்ட்ல வந்துட்ட?”

‘இதென்ன புதுசா அண்ணி முறை?’ என்று கீர்த்தனா யோசித்தாள்.

“எங்கடி உங்க அண்ணன்?” என கோவமாய் கேட்க, தோழியின் கோவத்திற்குக் காரணம் புரியாமல், “என் ரூம்ல தான் இருக்காங்க. என்ன ஆரு கோபமா இருக்கிற?” என்றவளின் கேள்வியை காதில் வாங்காமல் செல்லவும் பின்னாடியே சென்றாள்.

பின்னால் வந்த கீர்த்தனாவை இருவரும் கவனிக்கவில்லை.

உள்ளே வந்தவளைப் பார்த்த சரண், “ஹாய் செல்லம்! என்னமா இப்பத்தான் போன. அதுக்குள்ள வந்துட்ட. என்னை அவ்வளவு மிஸ் பண்றியாடா” என்று அணைக்கச் சென்றவனிடம் இருந்து விலகி, அவனை கையில் அடித்தாள்.

“ஹேய் என்னாச்சிடா தனு? எதுக்கு இந்தத் திடீர் அட்டாக். அடிக்காம பேசவே வராதா உனக்கு. என்னமா பிரச்சனை? சொன்னால்தான தெரியும்?”

“எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான். உங்களாலதான், இன்னைக்கு அப்பா, அம்மாவை மனம் நோக பேசிட்டு வந்திருக்கேன். உங்களாலதான், அவங்களுக்கு நல்ல மகளா இருக்க முடியல. உங்களாலதான், நீங்க என் லைஃப்ல வந்ததாலதான் எல்லாம். நாளைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்களாம். இல்லையில்லை உங்க பொண்டாட்டியைப் பொண்ணு பார்க்க வர்றாங்களாம். இப்ப சந்தோஷம்தான?” என்றதும் சரணை விட அதிக அதிர்ச்சியானது கீர்த்தனா தான்.

‘என்னது பொண்டாட்டியா? லவ் பண்றதால பொண்டாட்டின்னு சொல்றாளோ’ என்று நினைத்தவள், அடுத்து அவள் பேசியதில் இன்னும் அதிர்ந்தாள்.

“நீங்க மட்டும் தாலி கட்டாம இருந்திருந்தா, இதை வேற விதமா டீல் பண்ணியிருப்பேன்.”

“என்னது தாலி கட்டியாச்சா?” என்றதும் சத்தத்தில் திரும்பிய வேதவல்லி, ‘இவ எப்ப வந்தா?’ என்று மனதில் நினைக்க,

“நான் ஆரம்பத்திலேயே வந்துட்டேன்” என்ற கீர்த்தனா, “இங்க என்ன நடக்குது? என்ன சொல்றா அவ?” என்று கேள்வி கேட்டாள்.

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப யாராவது வர்றாங்களா பார்த்துட்டு இங்க வேடிக்கை பாரு.”

“ம்க்கும்... ரொம்ப நல்ல வேலை தான் கொடுக்குறீங்க” என்று சொல்லியபடியே அவர்களைக் கவனித்தாள்.

“இப்ப உங்களுக்கு நல்ல மனைவியாவும் நடந்துக்க முடியாம, அப்பாவுக்கு நல்ல பொண்ணாவும் நடந்துக்க முடியாம பண்ணிட்டீங்களே?” என்று அவன் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்தவள், அப்படியே கீழே அமர்ந்து காலை மடித்து உட்கார்ந்து அழுதாள்.

அவளருகில் அமர்ந்தவன், “தனு அழாதமா ப்ளீஸ். அழாத சொல்றேன்ல. நான் இருக்கும் போது நீ ஏன் கவலைப்படுற? நான் அந்த அளவுக்கு விட்டுருவேனா? நான் என் மாமனார்கிட்ட முறைப்படி பொண்ணு கேட்கிறேன்” என்றான் மென்மையாக.

“கேட்டா கொடுத்திருவாங்களா?”

“கொடுத்தாலும், கொடுக்கலைன்னாலும் நீ என்னோட மனைவி. அது மாறாதுடா. நான் இருக்கேன்ல” என்றதும் அவன் மார்பில் சாய்ந்தபடி, “தப்பா எதுவும் நடக்காதுல்லங்க? அப்படி நடந்தா...” என்று மறு வார்த்தை சொல்லும் முன் வாயை மூடி, “அபசகுனமா எதுவும் சொல்லாதமா. என்னால தாங்க முடியாது” என்றான்.

அவர்களின் அன்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. அக்காவிற்கு நல்ல கணவன் கிடைத்த நிம்மதி எழ, ஔர்வாரு தன்னை நிதானப்படுத்தி அக்காவிடம் வந்து, “நீ ஏன்கா கவலைப்படுற? உன் தங்கச்சி எதுக்கு இருக்கேன். அப்பா பார்த்த மாப்பிள்ளை நல்லவனாகத் தான் இருக்கணும். நீ சொல்லிட்டு வந்த மாதிரி நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள்.

“கீத்து நீ... நீ... எப்படி? எப்ப வந்த?” என்று உளற,

“நான் உன் பின்னாடிதான் வந்தேன். எல்லாத்தையும் கேட்டேன் அதனால எனக்கு நோ அப்ஜெக்சன்.”

“தேங்க் யூ சோ மச்டா. அன்ட் ஐம் சாரி கீத்து. என்னால உனக்கும் பிரச்சனை.”

“அதெல்லாம் இல்லக்கா. நீ எப்பவும் ஹேப்பியா இருக்கா அது போதும்” என்று தன் அன்பை வெளிப்படுத்தினாள்.

அக்கா, தங்கை பாசம். பிறந்தது முதல் சண்டையிட்டு, ஏட்டிக்குப் போட்டியாக பேசி, வாயாடி, எதிரெதிர் துருவமாய் வளர்ந்தாலும், இக்கட்டான சமயங்களில் தான் அவர்களின் உண்மையான பாசம் வெளிப்படும்.

“நான் உங்கப்பாகிட்ட பேசுறேன். இப்ப எங்க இருப்பாங்க? அவங்க பேர் என்ன? பழகுறதுக்கு எப்படி?” என கேட்டான்.

“அப்பா இப்பதான் கடைக்கு கிளம்புறாங்க. ரொம்ப நல்ல ஜாலி டைப். அவங்க அக்கா மாதிரி ஜாடையில் நான் இருக்கேன்னு இன்னுமே என்னைப் பிடிக்கும். எதையும் யோசிச்சி அலசி ஆராய்ந்து தான் பேசுவாங்க. அப்பா பேர் கேசவன்.”

“கேசவன்” அந்தப் பெயரை சொல்லிப் பார்த்தவனுக்குள் மனதினுள் குழப்பமும், ‘அப்படி இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்’ என்ற சந்தோஷமும் வந்தது.

“ஹாய்! நான் கீர்த்தனா. நான் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட். உங்க மனைவி ஆராதனாவோட கூடப்பிறந்த தங்கை” என்று மனைவிக்கு அழுத்தம் கொடுத்தாள்.

“ஹை நான் சரண். சென்னையில் சாப்ட்வேர் கம்பெனில மேனேஜரா வொர்க் பண்றேன்.”

“உங்களை நான் எப்படிக் கூப்பிடணும்? அத்தான் சொல்லவா?” என்றதும், சரணும், வேதவல்லியும் சிரிக்க, ஆராதனா அவர்களை முறைத்தாள்.

“நான் இப்ப என்ன தப்பா கேட்டுட்டேன்னு சிரிக்கிறது, முறைக்கிறதுன்னு நடக்குது இங்க?” என்று கண்டிப்புடன் கேட்க,

“அதுவாடா கீத்து” என்று அவளின் தோளணைத்த வேதவல்லி, வேலைக்குச் சென்ற முதல் நாள் சரணைப் பார்த்தது, பின் சரவணனைப் பார்த்தது, அவனின் தந்திரம், அதை முறியடித்து சரண் தாலிகட்டியது என அனைத்தையும் சொல்லி முடித்துத் தன் கைபேசியில் உள்ள நிழற்படத்தையும் காட்டினாள்.

அக்காவைக் கட்டிக் கொண்டவள், “நல்லவேளை தப்பிச்சக்கா. இல்லண்ணா உன் நிலைமை நினைக்கவே ஐயோன்னு இருக்கு. தேங்க்ஸ் அத்தான்” என்றாள்.

“திரும்பவுமா?” என்று ஆராதனா பார்க்க,

“உனக்குப் பிடிக்காததைச் செய்யுறது தான ஆரு என்னோட புல் டைம் ஜாப்” என்று வேதவல்லியிடம் ஹைபை கொடுத்தாள்.

“இன்னும் ஆறு நாளைக்கு உன் அக்கா தொந்தரவில் இருந்து எனக்கு விடுதலை. ஏன்னா என்னைய கலாய்க்கிறவளை ஓட ஓட விரட்டுற ஒரே ஆள் நீதான் கீத்து.”

“என்ன என் தனுவை விரட்டுவியா?”

“எஸ் அத்தான்” என்ற தன் நாலு மார்க் கதையை எடுத்து விட,

“ச்சீ... போடி” என்று கணவனின் பின் ஒழிந்தாள்.

“சரி நான் கிளம்பறேன். வேதாக்கா உங்க அப்பா, அம்மா எங்க? வீட்டுல இருக்கிற மாதிரித் தெரியலையே?”

“மண்டபம் பார்த்து அட்வான்ஸ் பண்ண போயிருக்காங்க.”

“சரிதான் வேலை ஜரூரா நடக்குது போல. அக்கா வர்றியா?”

“வர்றேன்” என்றவளை வேதவல்லி குறுக்கிட்டு, “இல்ல ஆரு. முகத்தைக் கழுவிட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சப் போ. அப்பதான் அழுதது தெரியாது” என்று கீர்த்தனாவை வீட்டுக்கு அனுப்பி, ஆராதனாவை முகம் கழுவ அனுப்பிவிட்டுச் சரணிடம் திரும்பி, “பத்து நிமிஷம் டைம் கொடுத்திருக்கேன். சொதப்பாம பேசுங்கண்ணா” என்று வெளியே சென்றாள்.

“முகம் கழுவித் தன் புடவையிலேயே துடைத்தபடி வெளியே வந்தவள், கணவனின் மேல் மோத, கீழே விழாமல் பிடித்தவன் அவளையே பார்த்திருக்க, இருவரின் பார்வையும் மௌன மொழி பேசியது.

“வா சாந்தி” என்ற வேதவல்லியின் சத்தத்தில் சமநிலை அடைந்து விலகி நின்றனர்.

“இப்பத்தான் ஊரிலிருந்து வந்தேன். அதான் லேட்டாகிருச்சி. நீ எப்படியிருக்க?” என ஆரம்பித்து மாப்பிள்ளை வீடு பற்றி விசாரித்து, “தனியாவா இருக்க? வீட்ல யாருமில்லையா?” என கேட்டாள்.

“இல்ல ரெண்டு பேரும் வெளில போயிருக்காங்க. இப்ப என்னைத் தவிர வீட்ல யாருமில்லை” என்று வேதவல்லி சொல்லி முடிக்க,

சாந்தியின் குரல் கேட்டு வெளியே வந்த ஆராதனா, ‘யாருமில்லை’ என்று தோழி சொன்னதைக் கேட்டதும் உள்ளே வந்து, “ஏன் இந்த வேதா பொய் சொல்றா? லூசு” என்று அவளைத் திட்ட ஆரம்பித்தாள்.

“அவ லூசு இல்லமா. யோசிச்சித்தான் பேசுறா. இப்ப நீ வெளிய போற. அதேநேரம் அவங்க அப்பா, அம்மா திரும்பி வர்றாங்க. ஏதோ ஒரு காரணத்திற்காக என்னைக் கூப்பிடச் சொல்றாங்கன்னு வையி, என்ன பண்ணுவ?”

“இன்னுமே எனக்கு ஒண்ணும் புரியலை? நான் தான் முன்னாடியே போயிருவேனே அப்புறம் என்ன?”

கட்டிலில் அவளை அமர வைத்து, தானும் அருகில் அமர்ந்து அவள் கைபிடித்து, “முன்னாடி போற நீ எந்த ரூம்ல இருந்து போவ? வெளிய நீ போனா இந்த ரூம்ல இருந்து போறது தெரியும். அதே சமயம் நானும் இந்த ரூம்ல இருந்து வெளியே வந்தா?” என கேள்வியாய் நிறுத்தினான்.

“அட ஆமால்ல. நாம ஒரே ரூம்ல இருக்கோம். நான் லூசு தான் ஒத்துக்கறேன்” என்றவள், “என்னங்க அப்பாகிட்டப் பேசி கன்வின்ஸ் பண்ணிருவீங்க தான?” என்று கவலையுடன் கேட்டாள்.

“கண்டிப்பாமா. எந்த காலத்துலயும் உன்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். எனக்கு நீ முக்கியம். உங்க அப்பாவே என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு பிடிவாதம் பிடிப்பாங்க பாரு.”

கணவனின் அவ்வார்த்தைதனில், அவன் காதலில் அவனையே பார்த்திருந்தவள், அவன் தோள் மீது சாய, அவளின் தலையை வருடிக் கொடுக்க, அந்த இனிமையைக் கலைக்காது இருவரும் அமைதியாக இருந்தனர்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
கதவு தட்டும் ஓசையில் கதவைத் திறக்கப் போன மனைவியிடம், “தனு நான் எதாவது செஞ்சா அழுவியா?” என்றான்.

“ஏன் அழணும்?” புரியாது அவள் விழிக்க,

“இதுக்குத்தான்” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டுச் சொன்னான்.

“ச்சோ... போங்க. அடுத்த வீட்டில் இருந்துட்டு என்ன வேலை பண்ணுறீங்க” என்று கதவைத் திறந்து வெளியே வந்த ஆராதனாவிடம், “சாந்தி கிளம்பிட்டா. அப்பா, அம்மா வந்திட்டிருக்காங்க ஆரு. அண்ணா நைட்தான நீங்க கிளம்பணும்? அதுக்குள்ள இவ அப்பாகிட்ட பேசிட்டு வாங்க” என்று இருவரையும் வெளியே அனுப்பினாள்.

சரண் நேரே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்றவன், அங்கு கேசவனைப் பார்த்துமே பிடித்துப் போனதோடு, அவர் யாரெனத் தெரிந்ததால் மனதில் ஒரு நிம்மதி பரவியது. அவரிடம் பேசி, பின் மாப்பிள்ளையிடமும், மாப்பிள்ளை வீட்டாரிடமும் பேசி, மறுநாள் பெண்பார்க்க வருவதைத் தள்ளி வைத்தார்கள். மாப்பிள்ளைப் பையனுக்கு சின்ன மகளைப் பிடித்திருந்தால், இன்னும் ஒரு வருடம் காத்திருந்து கீர்த்தனாவைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னதும், சரியென்று மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொள்ள, சந்தோஷமாக வந்தான்.

மனைவிக்கு போன் செய்து வரச்சொல்லி, வேதவல்லியின் வீட்டிற்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் நால்வரும் சந்திக்க, “உன்னை இனி யாரும் பொண்ணு பார்க்க வரமாட்டாங்க. கீர்த்தி உன்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டாங்க. நல்ல பேமிலி. உன்னோட படிப்பு முடிஞ்சதும் தான் கல்யாணம். என்னோட அட்வான்ஸ் வாழ்த்துகள்” என்றான் சரண்.

சிறிது வெட்கத்துடன் கைகொடுத்து, “தேங்க்யூ அத்தான்” என்றாள்.

“பாருடா வெட்கத்தை” என்று கலாட்டா பண்ணியபடி அவளை உள்ளே அழைத்துச் சென்று இவர்களுக்கு தனிமை கொடுத்தாள் வேதவல்லி.

ஆராதனா சந்தோஷத்தில் முகம் மலர்ந்து சிரித்து, “பத்திரமா ஊருக்குப் போயிட்டு போன் பண்ணுங்க” என்றதும், மனைவியிடம் நெருங்கி வந்தவன், “ஹேய் செல்லம்! நான் எதாவது செஞ்சா அழுவியா?” மாலையில் கேட்ட அதே கேள்வியைக் கேட்டான் புன்னகையை உள்ளடக்கியபடி.

“ஏன் அழணும்? என் ஹஸ்பண்ட் என்கிட்ட கண்ணீர் வேல்யூ உள்ளது. அதை அனாவசியாமா வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. ஏன் கேட்குறீங்க?” என்றாள் கொஞ்சம் கர்வமாகவே.

“இதுக்குத்தான்” என்று அவளின் இடையைப் பிடித்து காற்றுப் புகாத அளவு இறுக்கியணைத்து, கழுத்தில் முகம் புதைத்தவன் முத்தமிட்டு, பின் முகம் முழுவதும் முத்த யுத்தம் நடத்தி, அவள் காதருகில் உதடு உரச, “ஐ லவ் யூ தனு” என்றான். அவள் உடல் விரைத்து, பின் பலகீனமானதை உணர்ந்தவன் அவளை விடுவித்து, ஹேய்! அழுதுகிழுது வச்சிராத. அப்புறம் என் மனசு தாங்காது” எனவும் ஏற்கனவே அவன் செயலில் உணர்ச்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவள், வெட்கத்தில் முகம் சிவக்கத் தலை கவிழ்ந்தாள்.

“தேங்க்ஸ் தனு.”

“எதுக்கு தேங்க்ஸ்?” புருவம் உயர்த்தி கேள்வியாய் பார்த்தவளிடம்,

அவன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு, “அடிக்காம, அழாம இருந்ததுக்கு” என்றதும் வாய்விட்டுச் சிரித்தாள். மனைவியின் சிரிப்பை சின்ன லயிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவன், ‘இவ வேற ஊருக்குக் கிளம்புற டைம்ல சிரிச்சி வேற கொல்றா. கொலையில் இதுவும் ஒரு வகைதான் போல’ என்றெண்ணியவன், “தனுமா வேண்டாம். ப்ளீஸ் சிரிக்காத” என்று திரும்பவும் அவளைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு விடைபெற்றான்.

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள் மௌனமாகப் புன்னகைத்து, “ஐ லவ் யூடா மச்சான்” என்றாள்.

கணவன் சொல்லிச் சென்றது போல், எந்த எதிர்ப்பும் இல்லாமல் செனனை திரும்பினார்கள் தோழிகள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top