Member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 59
- Thread Author
- #1
அழகன் - 3
கணவன் கிளம்பிவிட்டதாக அலுவலகத்தில் இருந்து அழைத்துச் சொல்லி முடித்திருக்க, அவளின் வாட்சப் எண்ணிற்கு எதோ தகவல் வந்திருப்பதாக சப்தம் வந்தது. புது நம்பராக இருக்கவும் உள்ளே சென்று பார்க்க யோசித்த வேளையில், அடுத்த தகவல் வந்திருந்தது. போன் ஸ்க்ரீனை கீழே இழுத்துப் பார்க்க, முதலில் வீடியோவும், இரண்டாவது ‘இந்த வீடியோ பார்க்கலைன்னா வாழ்க்கையில் ரொம்ப வருத்தப்படுவ. ஏன்னா இது சோசியல் மீடியாவுக்குப் போகும்’ என்று இருக்க,
“அடப்போங்கடா ஸ்பேம் குரூப்களா” என்ற எண்ணத்தில் அவள் விட, திரும்ப வந்த தகவலில் அவசரமாக அந்த எண்ணிற்குள் சென்றாள்.
“யுவர் ஃபர்ஸ்ட் நைட் சீன் ம்ம்ம் வாவ்வ்வ்வ்...” என்றிருந்தது.
அத்தகவலைப் பார்த்து பயந்தவள், மேலே உள்ள வீடியோவை திறக்க, பார்த்த நொடி செத்தேவிட்டாள். சேர்ந்து இருந்தது என்னவோ கணவனுடன் தான். ஆனால், பார்த்து வீடியோ எடுத்தது வேறு ஒருத்தன் ஆகிற்றே. ‘அது ஒருவனா? அல்லது.....’ அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை. அவளால் இன்னொருவன் தன் உடலை பார்த்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
‘இது மட்டும் தானா? அல்லது இன்னும் இருக்கிறதா?’ என்ற எண்ணமே அவளைக் கொன்று குவிக்க, சொல்ல முடியா கோபம் கணவன் மேல் எழுந்தது. ‘அவனின் ஆசை தன்னை எந்த நிலையில் கொண்டு விட்டிருக்கிறது’ என்ற எல்லையில்லா கோபம்.
அதைவிட அவள் பார்த்து முடித்ததும் வீடியோ இல்லாது போக, அடுத்ததாக மெசேஜ் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது. கடைசியாக வந்த தகவலில், “இந்த விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லாது, உன் கணவனை விட்டுச் செல்ல வேண்டும்” என்றிருக்க, அதுவும் சில நொடிகளில் அழிக்கப்பட்டது.
அடுத்த சில நொடிகளில், அவள் நம்பருக்கு அழைப்பு வர தாறுமாறாக துடித்த இதயத்தையும், நடுங்கும் உடலையும் அடக்கி அழைப்பை ஏற்றாள்.
“தேங்க்ஸ் பார் யுவர் பியுட்டிபுல் சினாரியோ. உன் புருஷன் இருக்க வேண்டிய இடம் என்னோடது” என்றவன் குரல் இதுவரை எங்கும் கேட்டதாக நினைவில் இல்லை.
“ச்சீய்...” என்றவளின் ஒற்றை வார்த்தை அவனுக்கு அமிர்தமாக இறங்க, “உன்னோட ஒவ்வொன்னையும் ரசிக்கும் ரசிகன் நான். நீ என்ன அசிங்கமா திட்டினாலும் ரசனை மட்டுமே என்னிடம் இருக்கும். நோ சூடு. நோ சொரணை. நோ மானம். நோ மரியாதை. யூ க்நொவ் பேபி ஐ லவ் யூ. யூ அண்ட் யூ ஒன்லி.”
“எனக்கு கல்யாணம் ஆகிருச்சிடா.”
“ம்ம்ம்... ஆகாம எப்படி முதலிரவு நடக்கும்” என ஏக்க மூச்சி விட்டவன், “ஜஸ்ட்ல உன்ன மிஸ் பண்ணிட்டேன். மனசு இருக்கு பாரு அது மாறமாட்டேன் நீதான் வேணும்னு அடம் பிடிக்குது. ஸீ... ஆரா, இது ரொம்பவே முக்கியமான விஷயம். உன்னை பற்றி எனக்கு தெரியும். உன்னை இன்னொருத்தன் பார்த்துட்டான். நான் எப்படி உயிரோட இருக்கிறது அப்படின்னு சாக நினைச்சன்னு வை, உன் உயிர் போன அடுத்த நிமிடம், என்னோட வெறிக்கு உன்னைச் சார்ந்த எல்லாரும் அடுத்தடுத்து உன்னோட வருவாங்க. நானே போன பிறகு யார் போனா என்னன்னு நீ நினைக்கலாம். உன்னோட அப்பா டாப் மோஸ்ட் ஆடிட்டர்ல. அவர் ஒரு பொண்ணோட உல்லாசமா இருக்கிறதா, அவர் அறையில் அரைகுறையா நிற்கிற பொண்ணு மீடியாவுக்குச் சொல்லுவா. அவர் நிலை யோசிச்சிப் பாரு?”
“டேய்” என்று கத்தினாள்.
“எனக்கு சத்தம் பிடிக்காது. ஆனாலும்,, உன் வாயிலிருந்து வர்ற எந்த வார்த்தையா இருந்தாலும் தேன்மழை பொழியுது ஆரா. உன் அப்பனுக்கானது அதர பழைய டெக்னிக் தான். எந்த காலத்திலும் அதுக்கு வேல்யூ உண்டு. அடுத்து உன் அண்ணன். அவன் வேலை பார்க்கிற பேங்க்ல கோடிக்கணக்கான பணம் கையாடல்னு வரும். கொசுறா தினமும் விலைமாதரிடம் செல்வதற்கு பணம் செலவிட, வங்கியில் கை வைத்ததா வரும். மானம் போனா உயிரோட இருக்க, அவங்க என்ன நானா? பொண்ணு. புருஷன், பிள்ளை இல்லாத இடத்தில் உன் அம்மாவுக்கு என்ன வேலை? சோ...” என்று நிறுத்தினான்.
“அடுத்து உன் புருஷன சொல்ல மறந்துட்டனே. உனக்கு ஒண்ணுன்னா அவன் துடிப்பான். காரணம் தேடி கண்டுபிடிச்சி என்னை தேடி பழிவாங்க வருவான். நிதானமா இருக்கிறவனே இந்த மாதிரி நேரத்தில் தப்பும் தவறுமா செய்வான். அடுத்தடுத்த அடியில் அசந்து போனவனுக்கு ஒரு டெம்போ லாரி பத்தாது. இல்ல ஒரு ஃபயர் ஆக்சிடென்ட்.”
“என்னதான்டா உன் பிரச்சனை? வாழவும் விடாம சாகவும் விடாம லாக் பண்ணி ஏன் டார்ச்சர் பண்ணுற?”
“வேற என்ன, எனக்கு நீ வேணும். நீ மட்டும் தான் வேணும். உனக்காக யாரை வேணும்னா அழிப்பேன். அது என்னை பெத்தவங்களா இருந்தாலும்.”
“நீ என்னைத் தொட்டாலே நான் செத்துடுவேன்டா. பிணத்தோட குடும்பம் நடத்துற அளவு வெறின்னா, அப்ப தீர்த்துக்க உன் வெறியை. ஏன்னா அப்ப அந்த உடல் எனக்குச் சொந்தமானது இல்லை. உயிர் இருக்கிற வரைதான் எல்லாம்” என்றாள் கோபத்தில் முகம் சிவக்க.
“அப்படி ஒரு சூழ்நிலை வந்தா அதுக்கும் நான் தயார்தான்” என்றவனை எந்த மொழியிலும் திட்ட வார்த்தைகள் இல்லை அவளிடம். ‘மிருகங்களை விட மோசமான விஷப் பிறவி’ என்று தெரிந்துகொண்டாள்.
“என்ன வாயடைச்சிப் போயிட்ட? என்னோட பெர்பார்மன்ஸ் அவ்வளவு பிடிச்சிருக்கு உனக்கு. சரி விசயத்துக்கு வரேன். உன்னோட மனசு மாற நான் கொஞ்ச நாள் டைம் குடுக்குறேன். ரெண்டு மாசம் போதாது. அது போதும் உன் மனச மாத்திக்க.”
“என்னை அவ்வளவு ஈசியா நினைச்சிட்டல்ல.”
“நீ ஈசி இல்லன்னு தெரிஞ்சதால தான் இவ்வளவும் பண்ணுறேன். ஈசியா கிடைச்சா உன்னிடம் நான் ஏன் வரேன். அதுக்கு ஆளுங்களா இல்ல. நீ என்ன பண்ணுற அதுக்குள்ள உன் புருஷனை விட்டு பிரிஞ்சி போயிடு. இவ்வளவு நடந்த பின்னாடி அவனோட நீ ஒட்டி உரச மாட்ட தான். இருந்தாலும் பர்ஸ்ட் நைட் முடிஞ்ச மறுநாள் மாதிரி, புருஷன் நெருக்கம் உன்னை நிலை இழக்க வச்சிட்டுனா?” என்று கொக்கி போட்டு நிறுத்தினான்.
“யே...யேய்... நீ... நீ... நீ அப்ப அங்க இருந்தியா?” என்றவளுக்கு உடலெல்லாம் அமிலம் ஊற்றிய வலி.
“எஸ் பேபி. பென்டிரைவ் தூக்கி செப்டி டேங்க்ல போட்டுட்டா, அதுக்கும் முன்ன எடுத்த வீடியோ இல்லன்னு ஆகிடுமா. காணக் கிடைக்காத காட்சி. நான் எதுக்கோ வந்தா லட்டு மாதிரி வீடியோ. சண்டை போட்ட வேகத்துக்கு பிரிஞ்சிடுவ பார்த்தா, ப்ச்...ப்ச்.. என்னை ஏமாத்திட்ட பேபி. திரும்பவும் அவனோட ரூமுக்குள்ள போயிட்ட. ப்பா... அவ்வளவு லவ்வு. பண்ணுங்க பண்ணுங்க.”
“ஆனா, இனி பண்ண முடியாதே. நடுவில் தான் இந்த... ஓஹ்ஹோ என்னோட நேம் சொல்லலைல. துரியோதனன்... ம்ஹூம். அவன் கொஞ்சம் நல்லவனாம். சோ துச்சாதனன் வச்சிகோ பேபி. இந்த துச்சாதனன் வந்ததால உங்க காதலோட சேர்த்து காமத்துக்கும் என்டிங். ஒன் வீக் நல்லா என்ஜாய் பண்ணிட்டீங்கள்ள. என்ன பேபி காதை மூடிக்கிட்டியா? என்ன செய்யுறது எனக்கு இன்னும் அதிகமா உன்னிடம் பேச தோணுதே.”
“சொல்ல வந்ததைச் சொல்லுடா” என்று பல்லைக் கடித்தாள்.
“பார்த்தியா புருஷனை கூட மரியாதையா வாங்க போங்க சொல்லுற. என்னை உரிமையா டா போட்டுப் பேசுற” என்றான் அதற்கும்.
“காதலுக்கும், உரிமைக்கும், மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாத உன்னிடம் பேசுவது வேஸ்ட். என்னுடைய அழைப்பின் வித்தியாசம் என் புருஷனுக்குத் தெரிஞ்சா போதும். கண்டவனுக்கும் தெரிய வேண்டியதில்லை.”
“சரி விடு நீ டென்சன் ஆகாத. இன்னைக்கு நீங்க ஹனிமூன் போறீங்கல்ல, அதை நிறுத்தனும். அப்படியே சண்டை போட்டு இந்த வீட்டில் இருக்க மாட்டேன் சொல்லி, உன் வீட்டுக்குப் போகனும்” என்று உத்தரவிட்டான்.
“சண்டை போட காரணம் வேணும். அந்த காரணமும் வலுவா இல்லன்னா, நீ சொன்ன எதுவும் நடக்காது. தயவு செய்து என்னை விட்டுடு. நீ செய்யுறது கடவுளுக்கே அடுக்காது. அவர் தண்டனை குடுத்தா நீ சொன்ன எல்லாத்தையும் விட கொடுமையா இருக்கும்டா.”
“ஒரு முறை நீ கிடைச்சிட்டா, எவ்வளவு பெரிய தண்டனையா இருந்தாலும் தாங்கிப்பேன். உனக்குக் காரணம் தான வேணும். படிச்சி வேலை பார்க்கப் போறேன்னு லட்சியத்தோட இருந்த உன்னை, உன் புருஷன் லாக் பண்ணி கல்யாணம் செய்த கதை தெரியுமா?”
“என்ன உளர்ற? அவர் விரும்பி நடந்த கல்யாணம் இது. எனக்கும் பிடிச்சதால சம்மதிச்சேன். இதில் எதுவும் அவர் செய்யலை. அவரை என்னிடம் தப்பானவரா காட்ட நினைக்காத” என்றாள் கோபத்தில்.
“உன் லட்சியம் இதில் வரலையே பேபி. நான் சொல்லட்டா உங்க கல்யாணம் நடந்த கதை” என்று அவன் சொன்னவை அவளை அதிர்ச்சியில் தள்ளியது.
“இல்ல பொய் சொல்லுற. அவர் அப்படி செய்திருக்க மாட்டார். என்மேல் உயிரா இருக்கார்” என்றாள் நம்பாது.
“கல்யாணத்துக்கு அப்புறம் வந்த காதலா இருக்கலாம். இல்ல அவன் தங்கைக்காக நடிக்கலாம். எது எப்படி வேணும்னா இருக்கட்டும். நான் சொன்னது நிஜம். இதெல்லாம் பெரிய விசயமா, அதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே. நல்லா பார்த்துக்கறாரே... அப்படி நினைச்சி நடந்ததை நீ தள்ளனும் நினைச்சா, இன்னொரு விஷயம் சொல்லுறேன் கேளு. உன் அண்ணன் பேங்க்ல திருடினதா பழி போடுவேன் சொன்ன ப்ளான் என்னோடது இல்ல. நீ அவனை கல்யாணம் செய்ய மறுத்தா, இதை சொல்லித்தான் உன்னை லாக் பண்ணி இருப்பான்” என்றான் அவன்.
“நீ சொன்னத அப்படியே நம்புவேன் நினைச்சியா? யாரடா நீ? நடந்ததை சொல்லுறேன்னு சொல்லுற உனக்கும், என் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“உன்னோட சம்பந்தம் வச்சிக்க நான் கலக்ட் பண்ணிய துப்பறிவு செய்திகள் பேபி. நீ வேணும்னா உன் புருசனிடம் கேட்டுப்பாரேன். இல்லன்னு சொல்லவே மாட்டான்” என்று சின்னதாக நக்கல் சிரிப்பு சிரித்தான்.
“அப்படியே ஆனாலும், இதுக்கு அவர் குடுக்குற விளக்கம் சரியா இருந்தா?”
“என்ன பேபி நீ. நான் பிரிய சொன்னா, நீ சேர வழி பார்த்துட்டு இருக்க. ராங் ரூட் பேபி. உன்னோட இந்த லவ் என்னோட மட்டும் இருக்கனும். பேராசை தான். இருந்தாலும் மனம் எதிர்பார்க்குதே. என்ன செய்ய?” என்றான் அவன்.
“ப்ச்... இப்ப என்னதான் செய்யணும் சொல்லுற?” என்று எரிச்சலாக கேட்டாள்.
“ஒன்னும் இல்ல. சும்மா சின்னதா உன் புருஷன் ஈகோ தூண்டி விட்டா, அவனே உன்னை தூக்கிப் போட்டுடுவான். அடுத்த மாசமே டிவர்ஸ். அதுக்கு அடுத்த மாதம் இன்னொரு கல்யாணம்னு போயிடுவான். உன் மேல வச்ச காதலை கூட அந்த ஈகோ தட்டித் தூக்கிடும். ஈகோவுக்கு அவ்வளவு ஸ்ட்ரெங்த் உண்டு. அப்புறம் பேபி இதில் எது நடக்கலைனாலும், என்னோட கோணல் புத்தி எல்லாத்தையும் கோணல் மாணலா செய்யும். புருசனிடம் நடந்ததை சொல்லி பிரச்னையை சரி பண்ணலாம் நினைச்ச, கண்டிப்பா முதல் பழி உன் அப்பன் தான். இனி இந்த நம்பர் வொர்க் ஆகாது. நீ வீட்டை விட்டுப் போனதும் வேற நம்பர்ல இருந்து கூப்பிடுறேன். அதுவரை உன்னோட நினைவில் உன்னுடன் வாழும் துச்சாதனன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.
அழகன் வருவான்...