• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

ஆதிரையின் அழகன் -2

Member
Joined
Dec 1, 2024
Messages
59
அழகன் - 2


“வாங்க புது மணமக்களே” என்று வாய் பேச்சில் இல்லாது குனிந்து வரவேற்ற தங்கையின் தலையை செல்லமாக தட்டி, “அப்பா, அறிவு எங்க?” எனக் கேட்டான் மெய்யழகன். மூன்று நாட்கள் கெஸ்ட் ஹவுஸ் வாசம் முடித்து வந்திருக்கிறார்கள்.

“அண்ணா குளிச்சிட்டு இருந்தாங்க. அப்பா வாக்கிங் என்ற பெயர்ல ஆண்டீஸ கரெக்ட் பண்ண போயிருக்காங்க” என்று சைகையில் அவள் சொல்லியது மெய்யழகனுக்கு புரிய, புரியாது முழித்து கணவனிடம் ரகசியமாக விளக்கம் கேட்ட மனைவிக்கு அவன் சொன்னான்.

நாத்தனாரின் பாஷை ஓரளவு கற்றுக் கொண்டிருக்கிறாள். ஆதலால் சிலவற்றிற்கு இன்னும் அர்த்தங்கள் புரிவதில்லை.

“விசு இப்படிப் பேசுறது தப்பு. என்னதான் கிண்டலா இருந்தாலும் அப்பாவ இன்னொரு பொண்ணோட சேர்த்து வச்சிப் பேசுறது சரியில்லை. அது அவரை அசிங்கப்படுத்துற மாதிரி. அவள்தான் புரியாம பேசுறானா நீங்க அதுக்கும் மேல. வார்த்தையில் ஒரு ஒழுக்கம் வேண்டாமா” என்று கண்டிப்புடன் சொன்னாள்.

“சாரி அண்ணி. நெக்ஸ்ட் இந்த தப்பை செய்ய மாட்டேன்” என்றாள் விசாகா.

இரண்டு அண்ணன்களுக்குத் தங்கையாகப் பிறந்த அந்த வீட்டின் கடைக்குட்டி. வாய் பேச வராது அவளுக்கு. அப்பா மகன்கள் மூவரின் செல்லம்.

“அப்படிச் சொல்லுமா மருமகளே” என்று வந்த ராகவனைக் கண்டு எழப்போன ஆதிரையை உட்காரச் சொல்லி மகளின் அருகில் அமர்ந்தார்.

“வீடுலாம் பிடிச்சிருக்காம்மா? அதோட எங்களையும் பிடிச்சிருக்கா?” எனக் கேட்டார்.

“டாடி கேள்வியை மாத்திக் கேட்குறீங்க.”

“தெரிஞ்சி தான் கேட்கிறேன். மருமகளே இவங்க அருந்த வாலுங்க. இவங்களுக்கு ஆப்போசிட் என் சின்ன பையன். அமைதின்னா அப்படி ஒரு அமைதி. பெரியவன் அழுத்தமும் அடமும் பிடிச்சவன். ஒன்னு நினைச்சிட்டா அதை சாதிச்சே தீருவான். அது போலதான் உன்...”

‘உன்னையும்’ என்று சொல்ல வந்தவரை, “அப்பா... அப்பா என்னை புகழ்ந்தது போதும். உங்க மத்த பிள்ளைங்க புராணம் பாடுங்க” என்று வேகமாக நிறுத்தினான் மெய்யழகன்.

“அதுவும் சரிதான். உன்னைச் சொல்ல என்ன இருக்கு. அப்புறம் மறுவீடு எப்ப போறீங்க? இப்பவே போயிட்டு வந்துட்டா, தொழிலை கவனிக்க ஈசியா இருக்கும் பெரியவனே” என்றார் ராகவன்.

“இன்னைக்கு ஈவ்னிங் போறோம் அப்பா. நாளைக்கு ஈவ்னிங் வந்திடறோம். நாளை மறுநாள் இருந்து ஆபீஸ்க்கு வரேன். உனக்கு ஓகேதானே ஆதிரை?” என மனைவியிடமும் கேட்டான்.

“எனக்கு அம்மா வீட்டுக்குப் போனா போதும்” என்றாள் ஆதிரை.

“ஈவ்னிங் ரெடியா இரு ஆதிரை. நாம உங்க வீட்டுக்கு போயிட்டு வரலாம். இப்ப ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வரனும். டிரஸ் மாத்திட்டு போறேன்” என்றவன் மனைவிக்கு சைகை காண்பிக்க, அவளோ தாய் வீட்டிற்கு எந்த ஆடை அணிந்து செல்லலாம் என்ற கற்பனையில் கணவனைக் கவனிக்கவில்லை.

விசாகா ஆதிரையை தொட, சுயம் வந்தவள் ‘என்ன’ என்பதாய் நாத்தனாரைப் பார்க்க, “அண்ணன் ரொம்ப நேரமா உங்களுக்காக வெய்டிங். உங்க ட்ரீம்ல இருந்து வந்து அவர் குடுக்கிற சைகையைப் பாருங்க” என்று சைகையில் அண்ணிக்குப் புரிய வைக்க,

“நிஜமாவா” என்று மெல்ல திரும்பி கணவனைக் கண்டாள். கண்ட நிமிடம், அக்கண்விழிப் பார்வைதனில் உடல் சிலிர்க்க, மென்னகை ஒன்று மோகனமாய் அவள் உதட்டில் ஒட்டிக்கொள்ள, ‘என்ன?’ என்று புருவம் உயர்த்தினாள்.

“வாடி!” கண்களில் அப்பட்டமான ஏக்கத்தோடு உதடசைத்த வார்த்தையை உள்வாங்கிய நொடி எழுந்துவிட்டாள். அதன் பின்னே சுற்றுப்புறம் கவனித்தாள். அங்கு யாரும் இல்லை என்றதும், குனிந்து காலைக் காண்பித்து, “கால் வலிக்குது. தூக்கிட்டுப் போங்க” என்றாள் உதடசைத்து.

“அவ்வளவுதான. இதோ” என்று கண்களால் பதிலளித்து மென் சிரிப்புடன் படியில் இருந்து இறங்கி வந்தவன் மங்கையவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொள்ள, கழுத்தோடு கட்டிகொண்டவள் துளியாய் ஆட, “யேய் பார்த்துடி” என்றவனைக் கண்டு கண்ணடித்து நெஞ்சில் முத்தமிட்டு “பார்த்துட்டேன்” என்றாள் புன்னகையுடன்.

“அழகா இருக்க ஆதிரை.”

“நீங்களும் தான். நான் பார்க்கவே நிறைய பொண்ணுங்க லுக் விடுதுங்க. என் புருசன பார்க்க அவளுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும். அப்படியே மூஞ்சில பஞ்ச் வைக்கனும் நினைச்சேன். என்னை சந்தேகப்படுறியானு நீங்க கேட்டுட்டா என்ன செய்யன்னு விட்டுட்டேன்.”

“பொறாமைடி உனக்கு” என்றான் கண்கள் மின்னும் காதலுடன்.

“புருசன்னு வந்தா பொறாமை நல்லதுதான். அப்ப தான் எவளும் உங்களை நெருங்கமாட்டா.”

“உன்னைத் தவிர யாரும் என்னை நெருங்க முடியாது. நான் உனக்கு மட்டும்தான். என் இதயத்தைக் கேட்டுப்பாரு அது சொல்லும்” என்றான் மெல்லிய குரலில்.

“சினிமா வசனம் மாதிரி இருந்தாலும், கேட்க இன்னிசையா இருக்கு. இருங்க உங்க இதயம் என் பெயர் சொல்லுதா பார்க்கிறேன்” என்றவள் கணவன் இதயத்தில் காதை வைக்க, அது சொன்னது என்னவோ லப் டப் தான். அவளுக்குக் கேட்டதோ லவ் லவ். “லவ் லவ்னு கேட்குதுங்க” என்று புன்னகைத்தாள்.

“ஹாஹா யார் மேலயாம்?”

“அந்த இதயத்துக்குச் சொந்தக்காரி ஆதிரை மேலன்னு சொல்லுது.”

சட்டென அவள் இதழில் முத்தமிட்டு, “சரியா தான் சொல்லிருக்கு. நீதான் நம்பலை” என்றவன் தங்கள் அறைக்குள் நுழைந்த வினாடி கதவை சாத்தி, “உன் இதயம் என்ன சொல்லுதுனு நான் கேட்க வேண்டாமா?” என்றவன் கட்டிலில் படுக்க வைத்து மனைவி நெஞ்சில் தலை வைத்து, சில நொடி மௌனத்தின் பின் அங்கே முத்தம் வைக்க, அவள் கையோ உணர்ச்சி வேகத்தில் அவன் தலையை அழுத்திக்கொண்டது.

“என்னோட இதயம் என்ன சொல்லுது சொல்லவே இல்ல” என்றாள் ஹஸ்கி குரலில்.

“ம்ம்ம்... என்னை முழுசா எடுத்துக்கோ சொல்லுது” என்று முத்தமிட்ட இடத்தில் கடிக்க, இன்பவலி அவள் அங்கம் எங்கும். அங்கங்களை உதடு கொண்டு ஆராய்ந்து அவளின் பெண்மைக்கு தன் ஆண்மையை பரிசளித்து முடிக்கும் பொழுது சுகங்களின் இனிய ராகங்கள்.

ஒரு மணி நேரம் கழித்து தங்கள் நிறுவனம் செல்ல கிளம்பியவன் மனைவியின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு, “சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு. ஈவ்னிங் உங்க வீட்டுக்குப் போகலாம்” என்று சென்றான்.

அவளின் நினைவுகளோ அவனுடனே செல்ல, இதழோரம் ஒரு புன்னகை தூக்கத்திலும் ஒட்டிக்கொண்டது.

மறுவீடு செல்ல வரவில்லை என்று மறுத்த நாத்தனாரையும் அழைத்து வந்துவிட்டாள் ஆதிரை. அருளானந்தம், கன்னிகா தம்பதியர் அவர்களை வரவேற்று சாப்பிடக் கொடுத்து உபசரிக்க, அச்சமயம் வந்தான் ஆதிரையின் அண்ணன் இளங்கோ.

வேலை முடிந்த சோர்வில் வந்தாலும், தங்கையைக் கண்டதும் மனமும் முகமும் மலர இன்முகமாக வரவேற்று, ரெப்ரெஷ் ஆகி வருவதாகச் சொல்லிச் சென்றான்.

இளங்கோ அரசு வங்கி ஒன்றில் மேலாளராக இருக்கிறான். அவனுக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் மெய்யழகன் வீட்டு சம்பந்தம் வர, ஏற்கனவே தங்கைக்கு முடிந்ததும் திருமணம் செய்வதாக சொல்லி இருந்தவன், தாயின் வற்புறுத்தலுக்காக சம்மதித்தான். இப்பொழுது தங்கைக்கு நல்ல வரன் வரவும், தாயிடம் பேசி அவளின் திருமணத்தை முடித்துவிட்டான்.

இரவு உணவு முடிந்ததும் கொஞ்ச நேரம் பேசி முடித்ததும், புதுமணமக்களை மகளின் அறைக்கு போகச் சொன்ன கன்னிகா, பின் மகன் அறையில் விசாகாவை படுக்கச் சொல்லிவிட்டு, மகனை மொட்டை மாடியில் படுக்கச் சொன்னார்.

“நான் வீட்டுக்குப் போறேன் அத்தை. காலையில் காலேஜ் வரச் சொல்லியிருக்காங்க” என்றதை தாய்க்கு விசாகா பாஷை புரியாது என்பதால் ஆதிரை அவள் சொன்னதை விளக்கினாள்.

“செமஸ்டர் லீவுல தான இருக்க. இப்ப எதுக்குப் போகனும்?”

“இல்ல அத்தை. ஹெச்ஓடி மேம் கூப்பிட்டிருக்காங்க” என்றாள் சைகையில்.

“உங்க மேமிடம் நான் பேசிக்குறேன் விசுமா. நைட் நேரம் தனியா போக வேண்டாம். இல்லன்னா நாங்க உன்னோட வரோம்” என்று மெய்யழகன் சொல்ல,

“இல்லை இல்லை” என்று அவசரமாக மறுத்து, “அண்ணிக்காக நீங்க இங்க இருக்கனும். எனக்கு புது இடம் பிடிக்கும் தோணலை. அறிவு அண்ணாவ வரச்சொல்லி போகட்டுமா?”

“அது சரிவராது. நான் உன்னை விட்டுட்டு வரேன்” என்று எழுந்தவனை, அப்பொழுதுதான் சாப்பிட வந்த இளங்கோ தடுத்து, “உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா நான் விட்டுட்டு வரேன் மாமா” என்றான் இளங்கோ.

“மார்னிங் நீங்களும் வேலைக்கு போகனும். இப்பவே சோர்வா இருக்கீங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம்” என்றான் அவன்.

“குளிக்கிற வரை தான் சோர்வு எல்லாம். இப்ப நார்மல்தான். என்னமா, என்னோட வரீங்களா? உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே” என்று விசாகாவிடம் கேட்டான் இளங்கோ.

‘மா’வா!’ என யோசித்தவள், “ம்ம்ம்..” என்று சம்மதமாய் தலையசைத்தாள்.

“அண்ணா சாப்பிட்டுப் போ” என்ற தங்கை சொல்லுக்குச் சம்மதித்து உண்ணச் சென்றவன் அனைவரிடமும் ‘சாப்பிட்டாச்சா’ எனக் கேட்டு, அவர்கள் ஆம் என்றதும் உண்ணச் சென்றவன், உண்டு முடித்து வந்து விசாகாவை காரில் அழைத்துச் சென்றான்.

பயணம் செய்த அந்த இருபது நிமிடத்திற்குள் அவன் பேசிய வார்த்தைகள் சிலதான். அதில் பல ‘மா’ வர, புன்னகைதான் அவளுக்கு. அதுவும் அந்த மரியாதை விழிப்பு, ‘நைன்டீஸ் கிட்’ என்று மற்ற பெண்ணாக இருந்தால் மனதிலாவது சொல்லி கிண்டல் அடித்திருப்பாள். விசாகா ஒரு வகையில் அதை ரசித்திருந்தாள். தன் அண்ணிக்கும், அவளின் அண்ணனுக்கும் ஒரே குணம் என்பதில் ஒருவகை மனநிறைவு.

திருமணம் முடிந்து ஒரு வாரம் கெஞ்சல், கொஞ்சல், அன்பு, அக்கறை, காதல் என்று அழகாகச் சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. அழகாகச் செல்லும் எதற்கும் ஒரு ‘க்’ வைக்கவில்லை என்றால், அவளுக்காகக் காத்திருக்கும், அவனின் எண்ணத்திற்கு என்ன மதிப்பு?

ஹனிமூன் செல்ல ஸ்விட்சர்லாந் போக ஆதிரைக்கான பாஸ்போர்ட் விசா பிராசஸ் திருமணத்திற்கு முன்னரே ஆரம்பித்ததால் இதோ இரண்டு மணிக்கு ஃபிளைட்.

‘இந்தியாவிற்கு உள்ளேயே நல்ல இடமாகப் பார்த்துப் போகலாம்’ என்றவளின் சொல், கணவனின் ‘நோ’ என்ற வார்த்தையில் ஒன்றும் இல்லாமல் போனது. முதலிரவை வீடியோ எடுத்தது கணவன் என்பதால் பிரச்சனை இல்லாமல் போயிற்று. அதே வேறு யாரோ எடுத்தால்? அந்த பயம் இப்பொழுதும் இருக்கிறது. அதனாலேயே முதலில் ஹனிமூன் வேண்டாம் என்று மறுத்தாலும், கணவன் ஆசைக்காக இந்தியாவிற்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றாள். அவனோ விடாக்கண்டனாய் பிடிவாதம் செய்ய, வெளிநாடு செல்ல தயாராகிவிட்டார்கள்.

இரண்டு மணி ஃபிளைட்டிற்கு இரண்டு மணி நேரமே இருக்க, தங்கள் நிறுவனம் சென்று வந்தவன் தந்தையிடமும், தம்பியிடமும் பொறுப்பை ஒப்படைத்து வீடு வந்து தயாராகி கீழே வரும் வரை மனைவியைக் காணவில்லை.

“ஆதிரை டைமாச்சி. இப்ப கிளம்பினா தான் ஃபிளைட் பிடிக்க சரியா இருக்கும்” என்று சத்தமாக அழைத்தும், அவளிடம் இருந்து எதிர்க்குரல் வரவில்லை என்றதும் யோசனை அவனுக்கு. தங்கையிடம் கேட்க அவளும் அறைக்குள் இருப்பதாக நினைத்ததாக சொல்ல, இருவரும் தேட ஆரம்பித்தார்கள்.

அடித்துக் கொளுத்தும் வெயிலில் தோட்டத்தில் உள்ள மர நிழலில் அவளைக் கண்டவன் “ஆதிரை” என்று அழைத்தான்.

அவளோ அசைவில்லாது கையில் உள்ள போனை மட்டுமே பார்த்திருந்தாள். கண்களில் இருந்து நீர் கொட்ட, இன்னும் நம்ப இயலாது அதையே பார்க்க, இன்னும் முடியாது நீண்டு கொண்டிருந்தது அவளுக்கும், அவள் கணவனுக்குமான முதலிரவுக் காட்சிகள்!


அழகன் வருவான்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top