• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

ஆர்கலியில் விழுந்த ஆலியிவன்

Active member
Joined
Jun 3, 2025
Messages
346
எஸ். எஸ். மருத்துவமனை சென்னை:

"டாக்டர் வெளியே வந்து என்ன சொல்லப்போகிறாரோ?" என்ற பதற்றத்தில், வசுந்தராவும் நின்று கொண்டிருந்தார்.


"அவ்வப்பொழுது,தனது கையிலிருக்கும் வாட்சில் மணியை பார்க்கவும் தவறவில்லை."அம்மா துர்காதேவி, என் பொண்ணுக்கு எதுவும் ஆகிடக்கூடாதும்மா.

"இத்தனை வருஷம் கழித்து, இன்று தான் என் பொண்ணை கண்ணில் காட்டியிருக்கிறாய்,அந்த சந்தோஷத்தைக் கூட என்னால் அனுபவிக்க முடியாமல் பண்ணிட்டியே?".

"ஏன்?,எனக்கு மட்டும்,இப்படியொரு தலையெழுத்தென்று, சத்தமின்றி அழுதார்".

"மேலும் சிறிது நிமிடங்கள் கடந்து செல்ல, ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த டாக்டரை கண்டவர், 'டாக்டர், என் பொண்ணுக்கு இப்போ எப்படியிருக்கென்றூ?' அழுகையோடு கேட்டார்."

"மேடம், கொஞ்சம் அமைதியாகுங்க."

நீங்க பதற்றப்படும் அளவிற்கு, அவங்களுக்குப் பெரிய பிரச்சினையில்லை.அதிர்ச்சியும், பசியும் சேர்ந்து மயங்கி விழும் போது, கீழே இருந்த கல்லில் அடிபட்டதால்தால் நெற்றியில் அந்த காயம்.

"அடுத்து,உங்களுக்கொரு சந்தோஷமான விஷயம், உங்க பொண்ணு கன்சீவாக இருக்காங்கள்".

இவ்வளவு நேரம் டாக்டர் சொன்னதை கேட்ட வசுந்தராவிற்கு, இப்பொழுது கேட்ட விஷயத்தை நினைத்து அழுவதா, இல்லை சந்தோஷப்படுவதானு தெரியவில்லை.

"அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்த டாக்டர், இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு மயக்கம் தெளிந்துவிடும்."பிறகு, நீங்க தாராளமாக கூப்பிட்டு போகலாமென்று சொல்லி விட்டு, அங்கிருந்து சென்றார்.

கதவை திறந்து உள்ளே வந்த வசுந்தரா, பெட்டில் படுத்திருக்கும் தன் மகளைக் கண்டவர், கைகள் நடுங்க, அவள் தலையின் மேல் பொறுமையாக தனது கையை வைத்து தடவி விட, கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

"இந்த பாவி வயிற்றில் பிறந்த பாவத்திற்கு, எத்தனை கொடுமையை அனுபவித்தாயோயென்று தெரியலையே?" என்று, உள்ளுக்குள் கதறி அழுதார்.

அப்பொழுது அவர் செல்லிற்கு கால் வரும் சத்தம் கேட்க, கையிலிருந்த செல்லை பார்க்க, அதில், "அப்பா" என்ற பெயர் "டிஸ்பிளேயில் தெரிந்தது."

அட்டென் பண்ணியவர், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அம்மாடி வசு, என் பேத்தியைப் பார்த்திட்டியாமா?.

அவள் எப்படி இருக்காமா?.

"நீ யாரென்று அவளுக்குத் தெரிந்து என்னம்மா சொன்னாள்" என்று கேள்விகளை அடுக்கினார் வசுந்தராவின் அப்பா சுந்தரபாண்டியன்.

"வசுந்தராவோ தனது அப்பாவின் கேள்விக்கு, 'என் பொண்ணை பார்த்து விட்டேன்' என்று சொல்லி, அழைப்பை கட் பண்ணினார்."

பின்னர் தனது அண்ணனுக்கு கால் பண்ணியவர், ஆப்பிள் ஜூஸ் ஒன்றை வாங்கிக்கொண்டு செகன்ட் ஃப்ளோரில் இருக்கும் எமர்ஜென்சி வார்டிற்கு வரச்சொல்லி ஃபோனை வைத்தார்.

"சிறிது நிமிடங்கள் சென்று கதவு தட்டும் சத்தம் கேட்டு, எழுந்து சென்று கதவை திறந்து பார்க்க, கையில் ஜூஸோடு மைக்கேல் நின்று கொண்டிருந்தார்."

அம்மா வசு இந்தாமானு நீட்ட, "தேங்க்ஸ்ணா" என்றவாறே வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவர், அங்கிருந்த டேபிள் மேல் ஜூஸை வைத்து விட்டு, பெட்டில் படுத்திருப்பவள் கண் விழிக்கப்போகும் நேரத்திற்காக காத்திருந்தார்.

"மனதுக்குள் எரிமலை வெடித்துக்கொண்டிருந்தாலும், கற்ற தியானம் பலனை கொடுக்க, அங்கிருந்த சேரில் மகளின் முகத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்."

மேலும் ஒரு மணி நேரம் கடந்து சென்றிருக்க, பெட்டில் படுத்திருந்தவள் பொறுமையாக தன் கண் விழிகளை உருட்டுவது தெரிந்து, சேரிலிருந்து எழுந்த வசுந்தரா, மகளின் அருகே செல்ல, கண்களை திறந்தவளுக்கு எதிரே இருக்கும் உருவம் சரியாக தெரியவில்லை.

"மீண்டும் கண்களை மூடி திறந்தவளுக்கு, தற்பொழுது வசுந்தரா நிற்பது தெரிய, இவங்கள் யாரென்று யோசனையாக பார்த்தாள்."

அவளின் பார்வையை வைத்து, தன்னை யாரென்று தெரியாமல் இருக்கிறாள் என்பது புரிய, உள்ளுக்குள் ஈட்டியால் குத்தும் வலிகளிருந்தாலும், அதை மறைத்துக்கொண்டவர், அவளைப் பார்த்து லேசாக சிரித்தார்.

"மேடம் நான் எப்படி இங்கே?" என்று அந்த அறையை சுற்றி பார்த்துக்கொண்டே கேட்க, தன் மகள் தன்னை மேடம் என்றழைப்பதை கேட்டு, வசுந்தராவின் நெஞ்சுக்குள் இடி விழுந்தது போலிருந்தது.

அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்தவள், பெட்டிலிருந்து எழ, தலை சுற்றுவது போல இருக்க, மீண்டும் பெட்டிலே உட்கார்ந்தாள்.

அவளின் செய்கையில் சுதாரித்த வசுந்தரா, டேபிளின் மேலிருந்த ஆப்பிள் ஜூஸை எடுத்து அவளின் முன்பு நீட்டியவர், "இதை குடிமா" என்றார்.

பெண்ணுக்கே உரிய அச்சம் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, வேண்டாமென்று மறுத்தாள்.

நம்பிக்கையில்லையா என்றவாறே கொஞ்சம் ஜூஸை தனது வாயில் ஊற்றிக்கொண்ட வசுந்தரா, இப்பொழுது குடி ஆர்கலி என்கவும், இதுவரை தன் வாழ்வில் பார்க்காத ஒருவர், ஆர்கலியென்னும் தனது பெயரை சொன்னதைக்கேட்டு, மான்விழிகளிரெண்டும் விரிய அதிர்ந்து போனாள்.

இலங்கை...

R. S. Groups...


பார்க்கிங்கில் வந்து நின்ற காரிலிருந்த கதவை திறந்து இறங்கியவன், அங்கிருந்த லிப்டில் ஏறி, பதினொன்றாவது தளத்திற்கான பட்டனை அழுத்த, கதவை மூடிய ஃலிப்டும் சிறிது நொடிகளில் மேலே வந்து நிற்க, அதிலிருந்து வெளியேறினான்.

ஷூவின் சத்தமே, வந்து கொண்டிருப்பவனின் மனநிலையை அங்கிருப்பவர்களுக்கு திகிலை மூட்டியது.

யாரையும் பார்க்காமல் எம். டி. என்ற போர்டு கொண்ட அறைக்கதவை திறந்து உள்ளே வந்தவன், அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்ட சிறிது நிமிடத்தில், கதவை தட்டும் சத்தம் கேட்டது.

எஸ் என்ற கணீர் குரல் கேட்டு, கதவை திறந்து உள்ளே வந்த சுந்தரை, இமைக்காமல் பார்த்தான் ருத்ர வீர சிம்ஹன்.

"வீரா, இது எப்படி நடந்ததென்று எனக்கு தெரியாதுப்பா. என்னை நம்புப்பா," என்கும் சுந்தரை பார்த்தவனின் பார்வையோ மேலும் திகிலை மூட்டியது.

ஓகே ஃபைன் அங்கிள்.உங்களுக்கு தெரியாது இல்லையா,சரி நீங்க போங்களென்று சொல்லிய குரலில் எதைக்கண்டாரோ,உங்க நல்லதுக்காக தான் இப்படி செய்தது தம்பியென்று குனிந்து நின்றார்.

"எப்போ நடந்தது அங்கிள்?" என்றவனுக்கு தம்பி ருத்ரா, "நான் வெறும் அம்பு தான் சாமி."

"உன் தாய்மாமன் சொல்றது உண்மை. எனக்கு வேற எதுவும் தெரியாதுப்பா".

அப்படிங்களா அங்கிள்? சரி, இப்போ அவள் எங்கே போனாளென்றான்.

" சத்தியமா எனக்கு தெரியாது ருத்ரா."

"கோர்டில் டைவர்ஸ் கிடைச்சதும், அந்த பேப்பரை வாங்கிக்கொண்டு, நானும் இங்கு வந்து விட்டேன்."

"ஆர்கலியை நான் பார்க்கவில்லை ருத்ரா, இதுதான் உண்மையென்றார்."

"சரிங்க மாமா, டைவர்ஸ்கு அப்ளே பண்ணியது யாரு?" என்றான்.

"என் தங்கச்சி தேவி என்றார்."

"என்னா அம்மாவா" என்று அதிர்ந்தான் ருத்ரன்!.

வாங்க இந்த கதையில் யாரெல்லாம் இருக்காங்க என்று பார்க்கலாம்...

ஹீரோ: ருத்ர வீர சிம்ஹன்

அப்பா: தன வீர சிம்ஹன்

அம்மா: விஷாலா தேவி

தாத்தா: வீர சிம்ஹன்

பாட்டி: கிரிஜா

நண்பன்: ஆதவன்

தாய் மாமா: சுந்தர்

அத்தை: மேகலா

மாமன் மகள்: ஆதிரா

ஊர்: இலங்கை

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

ஹீரோயின்: ஆர்கலி

அம்மா: வசுந்தரா

அப்பா: சத்தியமூர்த்தி

தாத்தா: சுந்தர பாண்டியன்

பாட்டி: சைலஜா

ஊர்: கேரளா

கதைக்குள்ளே போகலாம்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
எஸ்.எஸ்.மருத்துவமனை சென்னை:

"அய்யோ மேடம், நான் உங்களை குற்றவாளியாக நினைக்கவில்லை."


" வாழ்க்கையில் பட்ட அடிகள், யார் மேலயும் நம்பிக்கை வைக்க மனம் வரமாட்டேங்கின்றது."

"குடுங்க" என்றபடியே வசுந்தராவின் கையிலிருந்த ஜூஸை வாங்கியவள், ஒரே மூச்சில் குடித்து முடிக்க, இரண்டு நாட்களுக்கு பின்னர் வயிற்றில் போன ஆகாரத்தால் சிறிது தெம்பு வந்தது.

அவள் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவர், "ஆர்கலி, நீ எங்கே போகணுமென்று சொன்னால், உன்னை அங்கு கொண்டு போய் விடுகிறேன்" என்று அவளிடம் பேச்சு கொடுத்துப் பார்த்தார்.

"ம்கும்," என விரக்தியாக சிரித்தவள், "அனாதைக்கு ஏதுங்க மேடம் வீடென்க, தான் பெற்ற மகள், தன்னிடமே அனாதை என்று சொல்வதைக் கேட்டவருக்கு, உள்ளுக்குள் இரத்தம் கொதித்தது."

"அப்பா," என்று மனதுக்குள் அலறியவர், தனக்குள் எரியும் கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, "ஏன்மா இப்படி சொல்லுகிறாய்?"

யாரும் இல்லாமலா இவ்வளவு பெரிய பொண்ணாக வளர்ந்திருக்கிறாயென்க,மேடம், நான் வளர்ந்தது ஆசிரமத்தில்.அதும் இங்கில்லை, கோவையில் உள்ள ஆசிரமத்தில், என்னை வளர்த்த ஃபாதரும் கடந்த வாரம் தான் இறந்து போனாங்களென்று கதறினாள்.

மகளின் கண்ணீரை கண்டு கைகட்டி நிற்கும் நிலையை நினைத்து, கழிவிரக்கம் கொண்ட வசுந்தரா, முதலில் என் பொண்ணை என்னோட கூப்பிட்டு போற வழியைத்தான் பார்க்கணும்.

"மற்றது விதி விட்ட வழி' என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர், அம்மாடி ஆர்கலி, நான் வசுந்தரா சுந்தரபாண்டியன்."

"கேரளா மாநிலத்தில் இருக்கும் திருச்சூர் மாவட்ட கலைக்டர்."

"உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால், தாராளமாக நீ என்னோடு என் வீட்டிற்கு வரலாம்".

"வசுந்தராவின் வார்த்தைகளை கேட்டவள், 'அய்யோ மேடம், இந்த பூமியில் வாழனுமென்ற ஆசையெல்லாம் எனக்கு சுத்தமாக இல்லை.'"

"நான் பிறந்ததே பூமிக்கு பாரம். ஒன்னு கேட்கணும்" என்றதும், "கேளுமா"என்றார் வசுந்தரா.

"என் பெயர் ஆர்கலி என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?".

இதழ் பிரியாமல் சிரித்தவர், "உன் ஹேண்ட்பேகில் இருந்த சர்டிபிகேட்டில், ஆர்கலி சத்தியமூர்த்தி என்ற பெயர் இருந்ததுமா." அந்த சத்தியமூர்த்தி என்ற பெயரைச் சொல்லும் போதே, 'என் கண்ணில் நீ படாதவரை உன் உயிருக்கு ஆபத்தில்லை' என்று வசுந்தரா தனது மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

"ஓஓஓ..." என்ற ஆர்கலி, "விதிங்க மேடம். அப்பா பெயர் சத்தியமூர்த்தி என்பது தெரிந்தவளுக்கு, அந்த அப்பா யாரென்று தெரியவில்லை?

அய்யோஓ கடவுளே, என் மகள் முன்னாடி தான் இருக்கேன், ஆனால் நான் தான் அவளைப் பெற்றவள் என்று சொல்ல முடியாத சூழலை ஏன் எனக்குக் கொடுத்தாய்?.

அப்படி யாருக்கு என்ன நான் தீங்கு செய்தேனென்று, என்னை இப்படி சோதிக்கிறாயென்று, உள்ளுக்குள் கடவுளிடம் மன்றாடினார்.

கடவுளோ, வழக்கம் போல நடப்பதை மேலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

தன் நினைவுக்குள் உழன்று கொண்டிருந்த வசுந்தரா, "மேடம்" என்ற அழைப்பில் நிகழ்விற்கு வந்தார்.

"மேடம், நான் பி.எஸ்சி., பி.எட். படித்திருக்கின்றேன். இந்த படிப்பிற்கு ஏற்ற வேலையை நான் தேடிக்கிறேன். உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? மயங்கி கிடந்தவளை கண்டுக்காமல் போகாமல், இவ்வளவு தூரம் கொண்டு வந்து ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கீங்களே, அதுவே போதும். மேலும் உங்களை சிரமப்படுத்த எனக்கு மனம் வரவில்லைங்க மேடம்" என்றாள்.

"வார்த்தைக்கு வார்த்தை தன்னை மேடம், மேடமென்று தான் பெற்ற மகள் அழைப்பதைக் கேட்டு, சாட்டையால் அடி வாங்குவதை போல வசுந்தராவிற்கு உள்ளுக்குள் வலித்தது."

"அம்மாடி ஆர்கலி, என்னை உன் அம்மாவா நினைச்சிக்கம்மா. இப்போதைக்கு என்னோட அப்பா, அம்மா, அண்ணன் மைக்கேலிற்கு அடுத்தது நீ. உங்களை தவிர இந்த உலகத்தில் எனக்கு சொந்தமென்று யாரும் இல்லைடா. இன்னைக்கே நான் இறந்து போனாலும், இவர்களைத் தவிர இந்த உலகத்தில் எனக்காய் அழக்கூட வேறு எந்த நாதியுமில்லாத பாவி நான். இதுவரை வாழ்க்கையில் எந்த பிடிப்புமே இல்லாமல் ஓடின எனக்கு, அந்த கடவுள் பார்த்து இப்பொழுது தான் உன்னை என் கண்ணில் காட்டியிருக்கிறார். என் கூட வந்துருமா? நான் பெத்த பொண்ணை பார்த்துக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுமா?" என்று வசுந்தராவும் கண் கலங்கினார்.

உடனே அவர் வார்த்தையை கேட்ட ஆர்கலி, "என்ன நீங்கள் பெற்ற மகளா? என்ன மேடம் சொல்லுறீங்கள் ?" என்று வசுந்தராவை அதிர்ந்து பார்த்தாள்.

ஆர்கலி எங்கே?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top