• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி:

"இந்த வருஷம் வினித் 12 ஆம் வகுப்பாச்சே ஜனனி,ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு உன் தம்பிகாரன் இன்றைக்கும் பள்ளிக்கூடம் போயிருக்கிறான்".

"ஆமாம்மா, இப்போலாம் எல்லா ஸ்கூலிலும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இப்படி நேரம் ஒதுக்குறாங்க".

"அச்சோ நான் பேசிகிட்டே இருக்கேனே என்றவள்,பாட்டி அம்மாக்கு குடிக்க எதாவது கொடுத்தீர்களா?".

"ம்கும்,இப்போ தான் இந்த சித்துராங்கிக்கு தெரிஞ்சிருக்கு என்றவர்,ஏண்டி எங்கள பாத்தா மனுசனா தெரியலையா?

"ஏன் நாங்க எல்லாம் வாங்கி கொடுக்க மாட்டோமாக்குமானு கண்ணம்மா பாட்டி கேட்க,ஜனனியோ,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லையென்றாள்".

"ஓஓஓஓ,வேறு எதுக்குடி குறைச்சலென்க,தினமும் என் வாயை புடுங்காமல் உங்களால சும்மாவே இருக்க முடியாதானு பல்லை கடித்தாள்".

" ஏண்டி உன் பல்லு என்ன நாற்றா, இல்லை செடியானு கண்ணம்மா பாட்டி சிரிக்க,தனது சின்னம்மாவும்,தங்கச்சி மகளும் பேசுவதை பார்த்த மலருக்கு சிரிப்பு தாங்கவில்லை".

அண்ணி,இவங்க மூன்று பேர் பஞ்சாயத்தை தீர்க்க இந்த உலகத்திலே ஆள் இருக்கமாட்டாங்கனு மாரியப்பனும் சிரித்தார்".

"ஏத்தா..,அதான் உம்மவகாரி வந்துட்டாளே, அவள் கிட்ட நீயே விஷயத்தை சொல்ல வேண்டியது தானேனு ராக்கம்மா பாட்டி கேட்க, சொல்லணும் தான் அத்தை".

"அப்படி என்ன இந்த மேடம் புதிர் போடுறாங்களென்று தன் பெரியம்மாவிடம் கேட்க,எல்லாம் நல்ல விஷயம் தாண்டா.உங்க பெரியப்பா,அன்புக்கு உன்னை பொண்ணு கேட்க சொல்லுறாங்கடா".
அது விஷயமா தான்,நான் உங்க எல்லார்கிட்டயும் பேசிட்டு போகலானு வந்தேன்".

"இப்படியொரு விஷயத்தை மலர் சொல்லுவாறென்று ஜனனியோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை".

"அடுத்த வாரம் அன்பு சிங்கப்பூர்ல இருந்து வரான் மா".அவனுக்கொரு கல்யாணத்தை பண்ணனும் இல்லாயாடா,நம்ப வீட்டில் பொண்ணு இருக்க,வெளியே ஏன் பார்க்கணும்னு உங்க பெரியப்பா சொல்லிட்டாங்கடா".

அவர் சொல்வதும் சரிதானே ஜனனி.

"எங்க எல்லாருக்கும் இந்த விஷயத்தில் சம்மதம்மா,இப்போ உன் பதிலை நீ தான் சொல்லணுமென்று,முடிவை ஜனனியிடம் விட்டு விட்டார்".

"ஜனனிக்கோ சிறிதும் பேச்சு எழும்பவில்லை".

"மூவரும் ஒருவித ஆர்வத்தோடு என்ன சொல்லப்போகிறாளோனு ஜனனியின் முகத்தையே குறு குறுவென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்".

தனது கண்ணை மூடி திறந்தவள், எனக்கென்று தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு வெறுப்பும் இல்லைங்கம்மா.எது செய்தாலும் நீங்கள் என் நல்லதுக்கு தான் செய்வீர்கள் என்பது எனக்கு தெரியும்.உங்கள் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பமென்று சொல்லி விட்டு,வேகமா அங்கிருந்து வீட்டின் உள்ளே சென்று விட்டாள்".

"ஜனனி சொல்லிச்சென்ற பதிலை கேட்ட மூவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை".ஆத்தா மீனாட்சி நீயே நல்லபடியா இதை நடத்திக்குடுத்தா என்றபடி கையைகூப்பி கண்ணம்மா பாட்டி வணங்கினார்".

"உள்ளே வந்த ஜனனி,சுவற்றில் மாட்டியிருந்த தனது தாய் மல்லிகாவின் ஃபோட்டைவை பார்க்க, அவள் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தோடியது".

"அம்மா உனக்கு எது சரின்னு படுதோ அதுவே என் வாழ்க்கையில் நடக்கட்டுமென்று சொல்லியவள், கண்ணை துடைத்துக் கொண்டு சமையற்கட்டிற்குள் சென்றாள்".

"வெளியே உட்கார்ந்திருந்த மூவரும், அடுத்தது என்ன பண்ண வேண்டுமென்று பேச்சை ஆரம்பித்தனர்".

"அந்த நேரம் கீதாவும் அங்கு வந்தாள்".

"வாங்கம்மா,எப்போ வந்தீங்கனு மலரிடம் கேட்க,கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் வந்தேன் கீதா".நீ நல்லாருக்கியா?,சோமு மாமா( கீதா அப்பா),கலா நல்லா இருக்காங்களா?.

எல்லாரும் நல்லா இருக்கோம் பெரியம்மா என்றவள்,இரண்டு பாட்டியை பார்த்து முகத்தை இடம் வலம் முறுக்கி காட்டி விட்டு உள்ளே சென்றாள்.

"பாத்துடி,முறுக்கும்போதே, வடக்க மொகரகட்டை இழுத்துக்க போகுதென்றார் ராக்காம்மா பாட்டி".

ராக்கம்மா பாட்டி சொன்னதை கேட்ட கீதா,போனவள் திரும்பி வந்து,உன் வாய்ல வசம்பை தான் வச்சி தேய்க்கணுமென்று சொல்லி விட்டு, மீண்டும் உள்ளே சென்றாள்.

"ஜனா, ஜனா என்றபடியே சமையற்கட்டுக்குள் வர,ம்ம் வாடி இங்க தான் இருக்கேனென்று ஜனனியும் குரல் கொடுத்தாள்".

"அங்கு வந்து சுவற்றின் மேல் சாய்ந்து உட்கார்ந்தவள்,என்னடி,மலரம்மா வந்துருக்கென்றாள்".ஆமா கீதா,பெரியம்மா வந்தே எப்படியும் ரெண்டு வருஷத்திற்கு மேல ஆகுதுடி.
அக்கா கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்க வந்ததோட சரி,நாமளும் காலேஜ் போய்விட்டதால் அன்று பார்க்க முடியலையேடி.

ஆமா ஜனா, என்ன சமைக்கிற என்க,இந்த நேரத்தில் வேற என்னத்தைடி ஆக்க,சாம்பாரும் உருளை பொரியல் தான் பண்ணப் போகிறேனென்று ,குழம்பை தாளித்து ஊற்றினாள்.

சரி குடு உருளைய நான் அரிகிறேனென்ற கீதாவோ, எழுந்து போய் அருவாள்மனையும், உருளையும்,அரிந்து போட குண்டானையும் எடுத்து வந்தவள், பொரியலுக்கு அரிய தொடங்கினாள்.

பின்னர் சமையலை முடித்து இருவரும் வெளியே வர,அங்கு கீதாவின் அப்பா அம்மாவும் மலரோடு பேசிக்கொண்டிருந்தனர்.

இரத்தினபுரி:

"ஹேப்பி பர்த்டே பாட்டினு சொல்லிக் கொண்டே மாடி படியிலிருந்து,ருத்ரன் கீழே இறங்கி வந்தான்".

"பேரனை பார்த்து தலையசைத்து ஏற்றுக்கொண்டவர் பூஜையறைக்கு அழைக்க,ம்ம் என்றபடியே சாமியின் முன்பு போய் கண்ணை மூடியவன்,அனைவரும் நல்லாயிருக்கணும்.ஆரம்பிக்கப் போகும் புதிய தொழில் உங்கள் ஆசிர்வாதத்தில் நல்ல முறையில் போக வேண்டுமென்று வணங்கினான்".

"இஷ்ட தெய்வமான கிருஷ்ணனுக்கும்,துர்கை அம்மனுக்கும் ஆரத்தி காட்டி முடித்த கிரிஜா பாட்டி,பேரனிடம் வந்தவர், அவன் நெற்றியில் விபூதி, குங்குமத்தை திலகமிட்டார்".

"பாட்டியின் செயலில் கண்ணை திறந்தவன்,ஆரத்தியை எடுத்து தனது கண்ணில் ஒற்றிக்கொண்டு, சோபாவில் போய் உட்கார்ந்தவன் காஃபி என்று குரல் கொடுத்தான்".

"சிறிது நொடியிலே வேலையாள் ஒருவர்,அவன் முன்பு இருந்த டீப்பாயின் மேல் காஃபியை வைத்துச்சென்றார்".

"குடித்து முடித்தவன்,தாத்தா என்று கூப்பிட்டான்".

"பேப்பர் படித்துக்கொண்டிருந்த சிம்ஹன் தாத்தா,ம்ம் என்றார்".

"ஷோரூம் ஓப்பனிங்கிற்கு அத்தையையும்,மாமாவையும் கூப்பிடணுமென்றான்".

"ஆமாம்,கூப்பிடணுமென்றார் சிம்ஹன் தாத்தா".

"தாத்தா என்று வீரா பல்லை கடிக்க, அதற்கும் ம்ம் என்றார்".இப்போ என்ன பரிட்சைக்கா தயாராகுறீங்க?.

இதே பேப்பரை எவ்வளவு நேரம் தான் படிப்பீங்க என்றவாறே பேப்பரை அவரிடமிருந்து பிடுங்கியவன்,அதை மடித்து டீப்பாயின் மேல் போட்டான்.

இப்போ என்ன தான் வீரா உனக்கு பிரச்சினை?.

"என்னனு விஷயத்தை சொல்ல வேண்டியது தானே".

அதை விட்டு,மனுஷனை பேப்பர் படிக்க விடாமல் இருந்தால் என்னடா அர்த்தமென்றார்?.

"அத்தை வீட்டுக்கு போகணும்".

"பாட்டியும்,நீங்களும் கிளம்புங்க என்றான்".

"போகலாம் வீரா என்றபடியே,அங்கு வந்தார் கிரிஜா பாட்டி".

"பின்னர் காலை டிபனை முடித்துக்கொண்டு, மூவரும் காரில் பயணமாகினர்".

"மூவரும் வந்த கார்,இரண்டு மணி நேர பயணத்தில்,களுத்துறை மாவட்டத்திற்குள் நுழைந்தது".

"மேலும் ஐந்து நிமிட பயணத்தில்,மேகா இல்லத்தின் வாசலில் முன்வு வந்து கார் ஹாரனை அடிக்க,வாட்ச்மேன் வந்து கதவை திறந்ததும்,கார் உள்ளே ஓடிப்போய் நின்றது".

"காரிலிருந்து மூவரும் இறங்கி, அவர்களுக்கு வாங்கிய பொருட்களோடு வீட்டில் உள்ளே சென்றனர்".

"அப்பொழுது தான் சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மேகலா,அங்கு வந்து கொண்டிருந்த தனது தாய்,தந்தை,மற்றும் அண்ணன் மகனையும் பார்த்து அதிர்ந்து போய் நின்றார்".

"மேகு என்று சிம்ஹன் தாத்தா கூப்பிட,அவர் குரலில் உணர்வு வந்தவர்,அப்பா என்று வேகமாய் வந்து தாய் தந்தை இருவரின் கையை பிடித்துக்கொண்டார்".

"வாங்கப்பா, வாங்கம்மா,வா கண்ணா என்று வீராவின் கன்னம் தொட்டு சொல்ல,எப்படி இருக்கிற அத்தை?".

"அண்ணன் மகனின் கேள்விக்கு,நல்லா இருக்கிறேன் கண்ணா என்றவர்,பின்னர் மூவரையும் அழைத்து போய் சோபாவில் உட்கார வைத்துவிட்டு,இதோ வருகிறேனென்று அங்கிருந்து கிச்சனிற்குள் சென்றார்".

"வீரா கடைசியா நீ எப்போ இங்கு வந்தயென்று பேரனிடம் தாத்தா கேட்க,கனடா போகுறதுக்கு முன்பு வந்தது தாத்தா".

"ம்ம் என்றவர்,வீடே மாறிடுச்சி போல என்றபடியே எழுந்து போய் ஹாலை சுற்றி பார்க்க,வித விதமான வண்ண ஓவியங்களால் அந்த ஹால் முழவதும் நிரம்பியிருக்க பார்க்கவே அவ்வளவு அழகாய் இருந்தது".

"ருத்ரனும் நல்லா இருக்கே ஓவியங்கள் என்று சொல்லி,அதன் அருகில் போய் உற்று பார்த்தவன், கீழே எழுதியிருந்த பெயரை பார்த்து இவங்கள் ஓவியமா என்று அதிர்ந்தான்!!.

அந்த நேரம் கையில் டிரேயோடு ஹாலிற்கு வந்த மேகலா,கண்ணா என்று கூப்பிட்டார்.

ஓவியத்தின் பெயரை பார்த்து அதிர்ந்து போய் நின்றவன், அத்தையின் குரல் கேட்டு,மேகு மேகு இதெல்லாம் என்று அதிர்வாய் கேட்க,ஆமா கண்ணா என்றார்.

என்ன சொல்லுறத்தை?

இந்த ஓவியங்கள் எவ்வளவு பாப்புலர் தெரியுமா?.எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாயென்றான்?.

அண்ணன் மகனின் கேள்விக்கு சிரித்தவர்,வந்து டீயை குடி கண்ணா என்றார்.

ம்ம் பணம் இருக்கென்று இஷ்டத்திற்கு இந்த ஓவியங்களை வாங்கி அலங்கரிச்சிருக்க போலனு சொல்லிக்கொண்டே அங்கு வந்தவன்,மேகலா கொடுத்த டீயை வாங்கி குடித்து முடித்தான்.

சரி மேகு,மாமா எப்போ வீட்டிற்கு வருவாங்க?.ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் வந்தோமென்றான்.

நம்ப தேயிலை எஸ்டேட்டிற்கு தான் போயிருக்காங்க.இப்போ வரும் நேரம் தான் கண்ணா என்றவர்,அதற்குள் அத்தை கிட்ட என்ன விஷயமென்று சொல்லுப்பா.

"ம்ம் என்றவன்,மாமா வரட்டுமே மேகுயென்று தனது அத்தையின் தோளில் சாய,சரி கண்ணா".உன் விருப்பம் என்றபடி,தனது பெற்றோரை பார்த்தவர்,இங்க இருக்கும் மகளை பார்க்க வர, உங்களுக்கு இத்தனை மாசமா?".

"மேகலா,நேரில் வந்து பார்த்தா தான் பாசமா?அதான் பொழுதன்னைக்கும் நீயும் உன் அம்மாவும்,மணி கணக்கில் பேசுறீங்களேமா அது போதாதா என்று சிம்ஹன் தாத்தா சிரித்தார்.

அதுவும்,இதுவும் ஒன்றாங்கப்பா?சொல்லுங்க என்று மேகலா கேட்க,என்னம்மா செய்ய?.

"பொண்ணை கட்டி கொடுத்த வீட்டிற்கு,என்றோ ஒரு நாள் வந்து போவது தான் மரியாதை."

"அப்பொழுது தான் உறவும் சுமூகமாக போகுமென்று சொல்லியவர்,எங்கே இருந்தாலும் எங்களுக்கு உன் ஞாபகம் இல்லாமல் போய்விடுமா? சொல்லு?".

"தந்தை சொன்னதை கேட்ட மேகலா,அய்யோ அப்பா,மகள் வீட்டிற்கு வருவதற்குமா இந்த கொள்கை என்க,கண்டிப்பாகம்மா.உன் அண்ணன் வீட்டிற்கு கூட நான் இதுவரை போகவில்லையேமா என்றதும்,மேகலா வாயை மூடிக்கொண்டார்".

வாங்க,வாங்க என்று சொல்லியவாறே அங்கு வந்தார் மேகலாவின் கணவரும்,ருத்ரனின் தாய் மாமனாகிய சுந்தர்.

நல்லா இருக்கீங்களாயென்று தனது மாமனார் மாமியாரை சுந்தர் விசாரிக்க,இருவரும் நல்லாயிருக்கோம் மாப்பிள்ளை என்றனர்.

"வீரா என்று தனது தங்கை மகனை நோக்கி கை நீட்ட,தனது மாமனை அணைத்துக்கொண்டான்".

"நல்லா இருக்கியா கண்ணா என்றவாறு மருமகனின் தலையை தடவி விட நல்லா இருக்கேன் மாமா, உங்களுக்கு உடம்பு நல்லா இருக்கா?".


உன் அத்தை இருக்கும் போது எனக்கென்ன கண்ணா கவலை என்றவர்,மேகலா சாப்பாடு ஏற்பாடு பண்ணிட்டியா என்க,ம்ம் ஆச்சுங்க என்று கணவருக்கு பதில் சொன்னார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி:

என்ன மாமா,மேலத்தெரு பார்வதி நல்லா இருக்காளாயென்று மலர் கேட்க,அய்யோ மலரு ஏன் புள்ள இப்படி?.

"உம்மவளுங்களை வச்சிக்கிட்டு பேசுற பேச்சா இது?".

"இப்போ ஏன் அந்த ஆக்கங்கெட்டவளை பற்றி ஞாபகப்படுத்துற என்றார் கீதாவின் அப்பா சோமு".

"என்ன கலா,மாமா இப்படி அந்தர் பல்டி அடிக்கிறாரு,ம்ம் என்ற கலா,அந்த சாயம் வெளுத்து போய் பல வருஷம் ஆகுதுக்கா".

"நெசமாவாடி தங்கச்சி?".

ஆமாக்கா,இப்போ எந்த பிரச்சினையும் இல்லையென்று கலா சொல்ல, மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்குடி.

"மாமா, நீ அந்த பார்வதி ஊட்டுக்கு போகும் போதெல்லாம்,என் தங்கச்சிகாரி வடிச்ச கண்ணீர் இருக்கே,அதை சொல்ல வார்த்தையில்லை மாமா".

"எம்மாடி மலரு புத்தி கெட்டு போயும்,இள இரத்தத்தின் சூட்டில் அப்படி பண்ணிட்டேன்".எப்ப அந்த மெத்த வீட்டுக்காரன் கூட இருந்ததை பார்த்தனோ,அப்பவே ச்சீ என்று வந்துட்டேன்".இந்த உசுரு இருக்குற வரைக்கும்,உன் தங்கச்சிக்கு மட்டும் தான் புருஷனா இருப்பேன்".இந்த மாமன் சொல்லுறதை நம்பு மலரு".

"இந்த ஒரு வார்த்தையே போதும் மாமா".

"இவ்வளவு நேரம் இவர்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டே வெளியே வந்த தோழிகள் இருவரும் சாப்பிடலாம் வாங்க என்றனர்".

"சரி நீங்க சாப்பிட்டு படுங்க,நாங்க வறோமென்று சோமுவும் கலாவும் எழ,ஜனனியோ எங்கப்பா போறீங்க?இங்கையே சாப்பிடலாம் இருங்க என்றாள்".

"இல்லத்தா,உம்மா அங்க ஆக்கி வச்சிருக்காள்.மலரு வந்துருக்குனு நம்ப சின்னாச்சி ஆத்தா சொல்லுச்சி, அதான் பார்த்துட்டு போகலானு வந்தோம்".

"எய்யா சோமு,அதான் உம்மவள் சொல்லுறாளே இங்கையே சாப்புடலாம்யானு ராக்கம்மா பாட்டியும் சொல்ல,சரித்தை,நான் போய் ஆக்கி வச்சதை எடுத்துட்டு வந்துடுறேனென்று சொல்லி விட்டு கலாவும் அங்கிருந்து சென்றவர் சிறிது நிமிடத்தில்,சமைத்த உணவு பாத்திரத்தோடு கலாவும் அங்கு வந்தார்".

"ஜனனியும்,கீதாவும் உள்ளே இருந்த எல்லாவற்றையும் திண்ணைக்கு எடுத்து வந்து வைத்து விட்டு, எந்திரிச்சி வாங்கப்பா என்றனர்".

"பின்னர் பேசிக் கொண்டே, அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்".

"கீதாவும் ஜனனியும் சாப்பிட்ட பாத்திரங்களையெல்லாம், தோட்டத்திலே கழுவி அங்கிருந்த பரணில் காய வைத்து விட்டு,வீட்டிற்குள் வந்தனர்".

"அப்பா,மாத்திரை என்று கீதா கொடுக்க,கொடுடா என்று வாங்கி,மாரியப்பனும் தனது வாயில் போட்டுக்கொண்டார்".

"அம்மா உங்களுக்கு படுக்கைனு மலரிடம் நாங்கள் கொஞ்ச நேரம் பேசிட்டு வரோம்டா,நீங்க ரெண்டு பேரும் போய் படுங்களென்க, சரியென்று தோழிகள் இருவரும் உள்ளே போய்,தரையில் விரித்த பாயில் படுத்துக்கொண்டனர்".

"படுத்த சிறிது நேரத்திலே கீதா தூங்கிவிட்டாள்".

"ஜனனியோ,தனது வாழ்க்கையை நினைத்து சத்தமின்றி கதறி அழுது கொண்டிருந்தாள்".

"அவள் மனசாட்சியோ,அவங்களிடம் சம்மதம் சொல்லிவிட்டு,இப்பொழுது எதற்குடி கண்ணை கசக்கிக்கிட்டிருக்கிறாய்?என்றது".

இப்போதைக்கு கீதாவிற்கு இந்த விஷயம் தெரிய கூடாது என்பதில் ஜனனி உறுதியாக இருந்தாள்.

"அவளுக்கு தெரிந்தால்,நிச்சயமாக வெற்றியிடம் சொல்லுவாள் என்ற உண்மை தெரிந்தே இந்த முடிவை எடுத்தாள்".

நேரம் நள்ளிரவை தாண்டிய பிறகே, ஜனனிக்கு தூக்கம் வந்தது.

அடியேய் சீம சித்ராங்கிகளா, கோழிக்கூவி எம்புட்டு நேரமாகுது, இன்னும் ரெண்டு குமரியும் இழுத்து போர்திக்கிட்டு தூங்குறாளுங்க.

போறவன் வீட்டில் இப்படி தூங்குனாக்க வளர்ப்பு சரியில்லைனு எங்க மூஞ்சில தாண்டி துப்புவாங்க என்று சொல்லும் குரல்,தூங்கிக் கொண்டிருந்த தோழிகள் இருவரின் காதில் விழுந்தது.

கிழவிஈஈஈ,நிம்மதியா தூங்கக்கூட விட மாட்டியானு சொல்லிக் கொண்டே கீதா எழுந்து உட்கார்ந்தாள்.

டீ வாங்கிட்டு வந்திருக்கேன்டி எந்திரிச்சு குடிங்க என்று சொல்லிச்சென்றார் ராக்கம்மா பாட்டி.

ஜனனியையும் எழுப்பி விட, இருவரும் வாய் கொப்பளித்து, மூஞ்சை கழுவி விட்டு வாசலுக்கு வர, அங்கே மற்றவர்கள் டீ குடித்துக்கொண்டிருந்தனர்.

ஆளுக்கொரு டம்ளரில் டீயை கலா ஊற்றி கொடுக்க,இருவரும் வாங்கி குடித்தனர்.பின்னர் வழக்கமான காலை வேலையை தொடங்கினர்.

மலர் வந்திருப்பதால் இன்று வேலைக்கு வரவில்லை என்பதை இரவே கீதாவிடம் சொல்லியதால், வீட்டு வேலைகளை பொறுமையாகவே ஜனனியும் செய்து கொண்டிருந்தாள்.

டீயை குடித்து உள்ளே வந்தவள், முதலில் அழுக்கு துணிகளை சர்ப் பவுடரில் ஊற வைத்து விட்டு மற்ற வேலைகளை செய்தாள்.

சாணம் தெளித்து,வாசல் கூட்டி கோலம் போட்டவள்,ஊற வைத்த துணி கூடையை எடுத்துக்கொண்டு குளக்கறைக்கு சென்று துவைத்து முடித்து வீட்டிற்கு வர,காலை ஏழு மணி சங்கு ஒலிக்கும் சத்தம் கேட்டது.

பிறகு கொடியில் துணிகளை காய வைத்து உள்ளே வர,மலர் சமையல் கட்டில் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து,ஏம்மா ஏன் உங்களுக்கு இந்த வேலை எல்லாம்?.

தினமுமாடா ஆக்கி போடுறேன் என்றபடியே,உலையில் அரிசியை கழுவி போட்டார்.

"பின்னர்,மகளுக்கு பிடித்த வத்தல் குழம்புக்கு தேவையானவைகளை தயார் செய்ய,ஜனனியும் கூட மாட பெரியம்மாவிற்கு உதவி செய்ததால், அரை மணி நேரத்தில் காலை உணவும் தயாரானது.

திருச்சூர்- பாண்டியன் பேலஸ்:

"ஆர்கலியோ மைக்கேலை மாமா என்று கூப்பிட்டதிலே பெரியவர்கள் இருவரும் அதிர்ந்து போய் நிற்க,வசு என்னை அண்ணனென்று கூப்பிடுறதால்,அவளும் மாமா என்று கூப்பிடுகிறாளென்று, இருவருக்கும் மைக்கேல் பதில் சொன்னார்".

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்முனு மைக்கேல் சொல்ல தேங்க்யூ மாமா என்றவள்,அவரின் காலில் விழ,ஐயோ,என்ன காரியம் பண்ற அம்மு? என்று பதறிப் போய் மருமகளை தூக்கி விட்டார்".

"தம்பி,உன்னோட ஆசிர்வாதமும் உன் மருமகளுக்கு தேவை தான் பா என்று முதிய தம்பதிகள் இருவரும் சொல்ல, அதற்கு நான் தகுதியானவனா?என்று பார்வையாலே அவர்களிடம் கேட்க, கண்ணை மூடி திறந்த இருவரும் ஆம் என்றனர் ".

"பின்னர்,அம்மாச்சி உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்னு ஆர்கலி சொல்ல,உனக்கு என்ன வேணும்?, கேளுடா அம்மு என்றார் சைலஜா பாட்டி".

"இன்னைக்கு ஒரு நாள்,நான் சமைக்கட்டுமா என்று தயங்கியபடியே கேட்க?,தாராளமாக செய்யுமானு சொல்ல,ஓகே என்றவள் அங்கிருந்து சந்தோஷமாக கிச்சனை நோக்கி சென்றாள்".

"நீயாவது கல்யாணம் பண்ணுவ, பேரப்புள்ளைய தூக்கி கொஞ்சலானு இருந்தோம் அதுவும் நடக்கவில்லை".

"நடந்து போனதெல்லாம் கடந்து,புது வாழ்க்கையை ஆரம்பித்து இத்தனை வருஷம் போயிட்டு".

"இன்னமும் எதுக்குப்பா,உனக்கு அந்த குற்ற உணர்ச்சினு சுந்தரபாண்டியன் தாத்தா மைக்கேலிடம் கேட்க,எப்படிப்பா நடந்தது எல்லாம் மறப்பதென்று கண்கலங்கினார்".

"போனதெல்லாம் விடு தம்பி.உன் மருமகளையும்,உன் தங்கச்சியையும் அவங்க புருஷனோட வாழ வைக்கிறதுக்கான வழியை பாரு".

"கண்டிப்பாங்கப்பா.அதை விட இவனுக்கு வேற வேலை என்ன இருக்கென்று சொன்னவர்,அப்பா, ஆனால் எனக்கு மனசுல ஒரு விஷயம் மட்டும் படுது".சத்தியமூர்த்தி மேல தப்பு இருக்கிற போல இதுவரைக்கும் எனக்கு தெரியவில்லைங்கப்பா".

"அவசரப்பட்டு வசு தான் தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கிற போல எனக்கு படுதுனு மைக்கேல் சொல்ல,எனக்கும் அப்படித்தான் இருக்கென்றார் சைலஜா பாட்டி".

"காலம் தான் இதற்கு பதிலென்ற சுந்தரபாண்டியன்,உன் தங்கச்சி, இன்னைக்கும் ஆசிரமத்திற்கு போயிருக்கிறாளா?".

"ஆமாப்பா,காலையிலேயே போய் மேனேஜருக்கு பணத்தை கொடுத்துட்டு வந்துடுச்சு".

"இத்தனை முறை என் தங்கச்சி சோகமா போகும்,ஆனா இந்த முறை சந்தோஷமாக எல்லாம் செஞ்சுட்டு வருவாள்னு சொல்லும் போது, வசுவும் வீட்டிற்குள் வந்தார்".

"அம்மா என்று கூப்பிட்டுக்கொண்டு, கையில் இருந்த புடவை கவரை சைலஜா பாட்டியிடம் நீட்ட,முதல் முதலாக தன் மகள் வாங்கிக் கொடுத்த புடவையை பார்த்து, சைலஜா பாட்டிக்கு கண்கள் கலங்கியது".

"மன்னித்து விடும்மா.இதுவரைக்கும் உங்களுக்குனு நான் எதுவுமே செய்ததில்லைனு வசு சொல்ல,உன் மனசு எனக்கு தெரியும் டா என்றார்".

"எங்கேம்மா ஆர்கலினு கேட்க,உன் பொண்ணு தான் இன்னைக்கு சமைக்கிறேன்னு சொல்லிட்டு போயிருக்கிறாள் என்க,அப்படியா என்ற வசந்தராவுக்கு ஆனந்த அதிர்ச்சியானது".

"எவ்வளவு பெரிய பாக்கியம்".

"இத்தனை வருஷம் கழிச்சு,என் பொண்ணு கையால் சமைச்சு சாப்பிட போறேனென்று சொல்லிய வசுவோ கண்கலங்கினார்".

"அம்மாடி வசு வருத்தப்பட்டதெல்லாம் போதும்.இனி சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்'.

"இது ஆனந்த கண்ணீர்ணா என்றவர், இனிமேல் நான் எதுக்கும் அழுக மாட்டேன்னு சொல்லி விட்டு, கிச்சனை நோக்கி சென்றார்".

"அங்க போய் பார்க்க, வேலையாட்களின் சிறு சிறு உதவியோடு,ஆர்கலி பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்தாள்".

"தூரத்தில் இருந்தே மகளை பார்த்து ரசித்து விட்டு,வசுவும் வெளியே வந்து விட்டார்".

"வசு,உன்கிட்ட ஒன்னு கேட்க வேண்டுமென்று மைக்கேல் சொல்ல, கேளுங்கண்ணா என்றார்".

"சத்தியமூர்த்தி பற்றி தெரியணும்மா".

"இத்தனை வருஷம் உனக்கு தேவைப்படவில்லை,ஆனால் இப்போ ஆர்கலிக்கு கண்டிப்பா தேவைப்படுது".

"உனக்கு தெரிந்ததை நீ சொல்லு".

"இந்த உலகத்தில் அந்த மனுஷன் எங்கே இருந்தாலும்,நான் கண்டு பிடிக்கிறேனென்று மைக்கேல் சொன்னதை கேட்ட வசுக்கு, அதிர்ச்சியாக இருந்தது".

"இத்தனை வருஷத்தில் சத்தியமூர்த்தி பற்றி, வீட்டில் இருக்கும் மூவரும் அவளிடம் எதுவும் கேட்டதில்லை".

"இன்று ஆர்கலிக்காக கேட்கும் போது, வசுவால் அமைதியாகவும் இருக்க முடியவில்லை".

" அண்ணா அவரோட அப்பா பேரு சந்திரன்,அம்மா பேரு சகுந்தலா,ஊர் திருச்சியில் உள்ள பாலக்கரை".

"எனக்கு இது மட்டும் தான் தெரியும்ணா என்க,இது போதும் டா".

"அப்புறம்,சத்தியமூர்த்தி ஃபோட்டோ எதாவது உன்கிட்ட இருக்கா என்று கேட்க,இல்லைணா என்றார்".

"அண்ணா,எந்த ஆதாரமும் இல்லாமல் என் பொண்ணு கிட்ட போய்,நான் தான் உன்னுடைய அம்மாயென்று இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாதுணா".

"ஒன்னு ஃபாதர் சொல்லணும், அதுக்கு வழியில்லை".

"இல்லை உங்க அப்பா சொல்லணும்".

" அதற்கு ஆதாரமாக,சத்தியமூர்த்தி இருக்கணும்ணானு சொல்லி வேதனை பட்டார்".

"விரைவில் எல்லாம் நல்லதே நடக்கும்மா".

"அந்த ஆண்டவர் நிச்சயமாக கைவிடமாட்டார் என்ற மைக்கேல்,நீ மருமகளோடு சந்தோஷமா இருடா, மற்றதை எல்லாம் அண்ணன் பார்த்துக்குறேன்".

"அடுத்து என்ன பண்ண வேண்டுமென்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, சாப்பாடு ரெடி என்று குரல் கொடுத்தவாறே ஆர்கலியும் அங்கு வந்தாள்".

"என்ன அம்மு,உன் சோதனைக்கு இன்னைக்கு நாங்கள் தான் எலியா? என்று மைக்கேல் கேட்க, ஐயோ மாமா என்று சினுங்கினாள்".

"அம்மாடி அம்மு,சமைத்ததை கொஞ்சம் சீக்கிரம் வயிற்றுக்கு போடும்மா".

"பல வருஷமா,இந்த கிழவி கையாலே சாப்பிட்டு நாக்கெல்லாம் செத்துப் போய் கிடக்கின்றதுமானு சொல்லி,சுந்தர பாண்டியன் சிரித்தார்".

"ஓஓஓஓஓ...சைலு அந்த சாம்பார் கொஞ்சம் ஊத்துடி, இந்த எலுமிச்சை ரசத்தை டம்ளரில் குடு,பிளீஸ் அந்த சொதிய இன்னும் கொஞ்சம் போடுடீனு வாய்க்கு நல்லா வக்கனையா தின்னுட்டு,இன்றைக்கு பேத்தி சமையலுக்காக இப்படி சொல்லுறீங்களா?.

இனி அது வேண்டும் இது வேண்டுமென்று வாங்க,அந்த குழம்பு கரண்டியாலே நாலு நடு மண்டையில் தருகிறேனென்று சைலஜா பாட்டி சொல்ல,அதை கேட்ட மற்ற மூவரும் சிரித்து விட்டனர்.

"சுந்தரபாண்டியன் தாத்தாவோ, மனைவியை பாவமாக பார்த்து வைத்தார்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top