• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
519
சதூர்வேதமங்கலம்:

ஆர்கலியோ எழுந்து போக,தன்னவளின் வலது கையை எட்டி பிடித்தான்.

கைப்பிடியின் இறுக்கத்தில் ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று வாய் திறந்து சொல்ல ருத்ரன் தனது பிடியை விட்டதும் அங்கிருந்து சென்றாள்.

சிறிது நிமிடங்கள் சென்று கதவை திறந்து வெளியே வந்த ஆர்கலி,அங்கே கட்டிலின் மேல் சாய்ந்து கண்மூடி உட்கார்ந்திருப்பவனின் அருகில் சென்றவள்,அவனின் தலை முடியை கோதி விட,கண் விழித்தவன் எதிரில் இருப்பவளின் இடுப்பை இறுக்கி கட்டியவன் பிளீஸ் டி என்னை விட்டு போய்விடாதே.

எது பண்ணுவதாக இருந்தாலும் கூடயே இருந்து பண்ணுடி.உன் கோபம் போகும் வரை எவ்வளவு வேண்டுமானாலும் அடிச்சிக்கோயென்று சொல்ல,சரி காட்டு என்றாள். அடிப்பாவி ஒரு பேச்சுக்கு அடி என்று சொன்னால் இவள் உண்மையிலேயே கேட்கிறாளே என்று திரு திருவென்று முழித்தான்.

அவன் பார்வையை கண்டவள் மகனே மாட்டுன டா இன்னைக்கு என்று தனக்குள் சொல்லியவள் ம்ம் சீக்கிரம் காட்டு எனக்கு நேரமில்லை என்றாள்.

என்ன என அதிர்ந்தவாறு கேட்க,அதான் என் கோபம் போகும் வரை அடிச்சுக்க சொன்னியே காட்டு என்று சொல்ல ஏதேஏ என்றவன் என்னடி விளையாடுறியா என்க,ஆர்கலியோ ஒரு அடி பின்னாடி தள்ளி போனவள் பின்னர் சராமரியாக ருத்ரனின் கன்னத்தில் மாறி மாறி விட்டாள்.

அவளின் கை வலிக்கும் வரை அவன் கன்னத்தில் அறைந்து முடித்தவள் பின்னர் அவனையே கட்டிக் கொண்டு கதறி அழுதாள்.

என்ன கொடுமை இதெல்லாம்?
அடி வாங்கியது நான்.ஆனால் அழுவது இவள்.யாத்தேஏஏ என்னா அடி சாமியென தனக்குள் புலம்பினான்.

சிறிது நிமிடம் தன்னவள் அழட்டுமென்று விட்டவன்,பிறகு தன்னிடமிருந்து அவளை பிரித்தெடுத்து சற்றும் தாமதிக்காமல் அவள் இதழில் புதைந்தான்.

நேரம் செல்ல செல்ல ருத்ரனின் கண்ணில் இருந்த நீர் துளிகள் ஆர்கலியின் கன்னத்தை நனைத்தது.

ம்ம் என்று தலையசைத்து விலகியவளை கையணைவில் கொண்டு வந்தவன் தனது மடியில் உட்கார வைத்து இறுக்கி பிடித்தவனை அன்னார்ந்து பார்க்க,ஏய் இப்படிலாம் பார்க்காதடி.

பிறகு நடப்பதற்கு நான் பொறுப்பில்லை என்றான்.

ம்கும்...

நீ அதற்கு சரிபட்டு வரமாட்டாயென்றாள்.

எதேஏ..ஏய் என்னடி கொழுப்பா?

அய்யா பவர் அதோ தூங்குறாங்களே தெரியலையா என குழந்தைகளை காட்டி கேட்க,அடச்சை விவஸ்தை கெட்ட மனுஷனென்று தலையில் அடிக்க,ஏய் போதும்டி.

எவ்வளவு தான் அடிப்ப?

நல்லா பாருடி கன்னம் எப்படி பன் போல வீங்கியிருக்கே?கொஞ்சம் கேப் விட்டு அடிச்சிருக்கலாமென்றான்.

ஹேய் உன் கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணுமென்றான்.

யோவ் இதுவரை நீ சொன்னது போதாது?

இன்னும் வேற சொல்லணுமா என்க,எஸ் மை டியர் சில்லி பொண்டாட்டி.கண்டிப்பாக உன் கிட்ட சொல்லணுமென்றவன்,அதற்கு முன்பு எனக்கு ஒரு விஷயம் சொல்லு.

உண்மையிலேயே நீ என்ன மன்னிச்சிட்டியாடி என்க,நான் எங்கே அப்படி சொன்னேன் என்றாள்.

மனைவியின் வார்த்தையை கேட்டவன் பின்ன இத்தனை அடி அடிச்சியேடி அப்போ சமாதானம் தானே என்க,நெவர்.

மிஸ்டர் ருத்ர வீர சிம்ஹன் கொஞ்சம் நீங்க சொன்னதை ரீவைண்ட் பண்ணி பாருங்களென்க,ஏகப்பட்டது சொன்னோமே. இதில் எதை என்றான்.

நம் குழந்தைகளை பற்றி சொன்னீங்களே என்று ஆர்கலி ஹிண்ட் கொடுக்க,ருத்ரனும் யோசனையானான்.

குழந்தைகளைப் பற்றி என்ன சொன்னேன் என்று தனது நெற்றியில் வீரல்களால் தட்டி யோசிக்க,நீ அம்மாவா இருக்கணும் நான் அப்பாவா இருக்கணும் இதையா என்று கேட்க,எஸ் நான் குழந்தைகளுக்கு அம்மாவாக மட்டும் தான் இருப்பேன்
எந்த சூழலிலும் உங்களுக்கு பொண்டாட்டியாக நான் இருக்க மாட்டேன் என்றாள்.

சரி சரி என்றவன் பின்னர் சுதாரித்து எதேஏஏ என்க.என்னவாம் ஷாக்கோ?

என் கூட இருந்தால் மட்டும் போதும்.வேற எதுவும் வேண்டாம் என்று நீங்க தானே சொன்னீங்க என்றாள்.

படுபாவி எல்லாத்தையும் நல்லா ஞாபகம் வச்சுக்கிட்டு சொல்கிறாளே என்ற பல்லை கடித்தவன் சரி உன் விருப்பம். நீங்க குழந்தைகளுக்கு அம்மாவா இருங்க தாயே என்று கை எடுத்து கும்பிட்டவன் அங்கிருந்து கதவை திறந்து வெளியே சென்றான்.

கட்டில் மேல உட்கார்ந்து அடுத்தது என்ன என்று யோசனையாக இருந்தவளை என்ன ஆர்கலி உன் புருஷனை மன்னித்து விட்டாச்சு போல என்று மனசாட்சி கேட்டது.

உனக்கு யார் சொன்னா அந்த மனுஷனை நான் மன்னித்து விட்டேன் என்று திருப்பி கேட்க, நீதான் அவன் கூட இருக்கின்றதற்கு சம்மதம் சொல்லிட்டியே டி என மனசாட்சி சொன்னது.

ஹலோ அதிக பிரசங்கி ஒரு வருஷம் அக்ரிமெண்ட் படி ஒன்றாக இருக்கணும்.அதை நினைத்து நான் சொன்னேன்.மற்றபடி ஒண்ணுமே இல்லை.

ஹா ஹா என்று சிரித்த மனசாட்சி அவன் இவ்வளவு தூரம் கதறி அழுதானே உனக்கு கொஞ்சம் கூட அவனை பற்றி பாவம் என்று தோன்றவில்லையா என்க,ஹம் கண்டிப்பா பாவம் தான்.

எனக்கு அப்பா அம்மா இல்லாமல் ஆசிரமத்துல வளர்ந்தேன்.ஆனா அவன் உண்மையிலே தாய் தகப்பன் இருந்து அவங்க அன்பை அனுபவிக்க முடியாமல் எங்கேயோ ஒரு இடத்துல வளர்ந்தாலும் நல்லா படிச்சு இன்னைக்கு சமூகத்தில் ஒரு ஆளா இருக்கிறான்.உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம்.

வெரி குட் ஆர்கலி.உன் மனசு இது தாண்டி..அவ்வளவு சீக்கிரம் உனக்கு மற்றவர்களை தண்டிக்க தெரியாது.
தவறு செய்யாத மனிதன் இந்த உலகத்தில் யாருமே கிடையாது.அதில் ருத்ரனும் விதிவிலக்கல்ல.நல்லா யோசித்துப் பாரேன். உனக்கும் அவனுக்கும் கணவன் மனைவியாக தாம்பத்திய உறவு நடக்கும் போது அவன் சுய நினைவில் இருந்தானா?என்று கேட்க இல்லை என்று சொன்னாள்.

வெரி குட்..

அவனுக்கு நினைவு இல்லாத போது நடந்தது.ஆனால் உனக்கு நல்ல நினைவு இருந்துச்சு தானே என்க ஆமாம் என்றாள்.

ம்ம்...

அப்போ நீ ஒரு மனைவியாக என்ன பண்ணியிருக்கணும் அவனுக்கு போதை தெளியும் வரைக்கும் அவன் கூட இருந்திருக்கணுமா? இல்லை இருந்திருக்க கூடாதா?என்று கேட்டது.

நான் என்ன செய்ய?

அப்பொழுது தான் நான் வேலையில் போய் சேர்ந்தேன். திடீர்னு எனக்கு லீவு கேட்டா கொடுக்க மாட்டாங்க.

சரி நேர்ல போய் சூழ்நிலையை சொல்லி லீவ் கேட்டுட்டு வரலாம்னு தான் அவன் எழுவதற்கு முன்னரே அன்று கிளம்பிப் போனேன் என்றாள்.

சரி கிளம்பி போனாய் அதுக்கப்புறம் ருத்ரன் கிட்ட நீ ஏன் இது போல விஷயத்தை சொல்லவில்லை என்று கேட்க,அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று தான் நான் நினைத்திருந்தேன் என்க..அதான்,உனக்கு ஒரு நியாயம் இருப்பது போல அவனுக்கும் ஒரு நியாயம் உண்டு.

தவறு ரெண்டு பேர் கிட்டயுமே இருக்கு.
நீ நினைத்திருந்தால் அன்று ருத்ரனோடு வீட்டிலே இருந்திருப்பாய்.
அப்போ புருஷனை விட வேலை தான் உனக்கு பெரிதாக போய்விட்டதா? என்று கேட்க,சத்தியமாக அப்படி இல்லை.நானும் என்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்.வேற எந்த தவறாக எண்ணமும் இல்லை என்றாள்.

ஓகே உன்னுடைய எண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.சரி அதற்கு பிறகு நீ என்ன பண்ணுன?

அவங்க அம்மா உன் உறவு கண்டுபிடித்து வந்து பேசும் போது நீ எவ்வளவு போல்டா பேசினாய்.என் புருஷனை யாருக்கும் விட்டு தர மாட்டேன் என்று பிறகு அந்த பேச்சு எங்கே சென்றது.

சரி விடு உன்னை காயப்படுத்தணும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட கிடையாது.நீ நல்லா இருக்கணும் என்பது தான் இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு இருக்கிறது.கணவன் மனைவிக்கு ஈகோ ஒரு காலமும் வரக்கூடாது.சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துக்காதே.

இதே நீ ஒரு அப்பா அம்மா கிட்ட வளர்ந்த பொண்ணா இருந்திருந்தால் நீ செய்வது தவறு என்று உன்னை அவர்கள் அடித்து திருத்தியிருப்பார்கள்.

அதற்காக இந்த உலகத்தில் அப்பா அம்மா இல்லாதவர்கள் எல்லாருமே தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை.நீ வளர்ந்த சூழலை உன்னுடைய குழந்தைகளுக்கு ஒருபோதும் உருவாக்காதே.

குழந்தைகள் எதிர்காலத்தை நல்லா யோசிச்சு பாரு.அவர்களுக்கு இன்னும் எவ்வளவோ வாழ்க்கை இருக்கு.
நல்ல படிப்பு நல்ல சாப்பாடு நல்ல வாழ்க்கை இதெல்லாம் உன்னால கொடுக்க முடியும் இல்லன்னு நான் சொல்லலை.

ஆனா அப்பா அம்மாவோட அன்பு கொடுக்க முடியாது.அப்பாவோட இடத்தை அப்பாவால தான் பூர்த்தி செய்ய முடியும்.அதே போல் அம்மாவாகிய உன்னுடைய இடத்தை உன்னால் மட்டும் தான் பூர்த்தி செய்ய முடியும்.

காலம் ஒன்னும் முடிந்து போகவில்லை.இன்னும் நீ வாழ வேண்டிய வாழ்க்கை எவ்வளவோ இருக்கின்றது.

உனக்கு உண்மையிலேயே ருத்ரனை பிடிக்கவில்லை என்றால் இவ்வளவு தூரம் உனக்காக நான் பேசிட்டு இருக்க மாட்டேன்.

ஆனால் ருத்ரனை நீ மனதார காதலிக்கிறடி.அவன் இல்லாத ஒரு வாழ்க்கையை நிச்சயமாக உன்னால் நினைத்துப் பார்க்க முடியாது.

ருத்ரனுக்கு மட்டும் பொள்ளாச்சியில் பார்த்தவுடனே காதல் வரவில்லையே.

அன்று நடந்த ஒரு விஷயம் ருத்ரனுக்கு தெரியாது.ஆனா உனக்கும் எனக்கு தெரியும்.

ருத்ரன் இடிச்சிட்டு போன பிறகு நீ திரும்பி வந்து அவனை அந்த வழியில் தேடினாயே மறந்து விட்டாயா?என்று மனசாட்சி கேட்டது.

பிறகு ராம் வீட்டில் ருத்ரனை பார்த்த போது உன் மனசுக்குள்ள ஒரு குதூகலம் வந்ததே அது இல்லை என்று உன்னால் சொல்ல முடியுமா ஆர்கலி??

அந்த நாள் வரைக்கும் எத்தனையோ பேரை கடந்து தான் ஸ்கூலுக்கு போனாய்.ஆனால் நீ யாரையுமே திரும்பி பார்த்தது கிடையாது.

அந்த ஏழு நாள் நலுங்கிலும் ருத்ரனை இமைக்க மறந்து நீ பார்த்தது எனக்கு தெரியும் ஆர்கலி.

மனசாட்சி உண்மையை உடைத்து பேச பேச ஆர்கலிக்கு அழுகை தாங்கவில்லை.

அந்த நேரம் உள்ளே வந்த ருத்ரன் அழுது கொண்டிருப்பவளை பார்த்து என்னடி ஆச்சு என்று வந்து அவள் தோளை தொட,லாம்ப் போஸ்ட் என்றவாறு அவனின் இடுப்பை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
519
டெல்லி பிரதமர் அலுவலகம்:

வசுந்தராவின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு மத்திய அரசால் சிபிஐ இயக்குனராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.சார் இந்த பதவிக்கு நான் தகுந்தவளா என்று பிரதமர் அலுவலகத்தில் நடந்த மீட்டிங்கில் வசுந்தரா கேட்க கண்டிப்பாக நீங்க இதற்கு ஏற்ற ஆள் தான் மேடம் என்றனர்.

தேங்க்யூ சார் என்றவர்,சார் அப்போ நான் டெல்லியில் தான் இருக்கணுமா என்று கேட்க அவசியமில்லை மேடம்.
உங்களுடைய விருப்பமான கலெக்டர் வேலை விட்டு நீங்க வர மாட்டீர்கள் என்பது எங்களுக்கு இத்தனை வருஷத்தில் தெரியாமையா இருக்கும்.

வழக்கம் போலவே நீங்க டூட்டி பாருங்க.உங்களோடு இன்னொரு ஆளுக்கும் அதே போஸ்டிங் கொடுத்திருக்கு.மிஸ்டர் கர்ணா என்க,எல்லாரும் கைத்தட்டினர்.மேலும் சிறிது நேரம் வேலையை பற்றி பேசினார்கள்.

பின்னர் தனக்கு ஒரு மாதம் விடுப்பு வேண்டும் என்றும்,தனது குடும்ப சூழ்நிலை பற்றி மேலோட்டமாக சொல்ல ஓகே மேடம்.ஃபேமிலியோடு நல்ல என்ஜாய் பண்ணிட்டு வந்து உங்கள் பதவியில் ஜாயின் பண்ணுங்க.

அப்புறம் இன்டர்நேஷனல் லெவலில் நடக்கும் டிரக் கேஸ் பற்றி தான் அடுத்தது நீங்க ரிப்போர்ட் சப்மிட் பண்ண வேண்டும்.

கேஸ் பற்றிய டீடைல்ஸ் இதில் இருக்கு என்று பைலை கொடுக்க,சார் அதற்குள்ளேவா என்று வசுந்தரா சிரித்து விட்டார்.மேடம்,கடமைக்கு பிறகு தான் உங்களுக்கு ஃபேமிலி என்று எங்களுக்கு நல்லாவே தெரியும் என்றார் மற்றொரு அதிகாரி.

தேங்க்யூ சார் என்றவர் பின்னர் தனது கணவர் சத்தியமூர்த்தியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

மேலும் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு புறப்பட்டனர்.ஒரு வழியாக திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தவர்களுக்காக மைக்கேலும் காருடன் காத்துக் கொண்டிருந்தார்.

வெளியே வந்த இருவரும் அங்கிருந்த மைக்கேலை பார்த்து சந்தோஷமாக கையை அசைத்தனர்.

பின்னர் காரில் ஏறி போகும் போது பிரமோஷன் பற்றி வசு சொல்ல வாழ்த்துக்கள் மா.

இரண்டு லட்டு குட்டிங்க பிறந்த நேரம் உனக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு பாரு என்று மைக்கேல் சொல்ல,ஏன்ணா கஷ்டப்பட்டு கேஸ் கண்டுபிடிக்கிறது நானு.

கிரெடிட் மட்டும் உங்க லட்டு குட்டிங்களுக்கா என்று வசுந்தரா கேட்க கண்டிப்பா அதுல சந்தேகமே இல்லடா வசு என்றார்.

நல்லா இருக்குணா உங்க நியாயமென்று சிரித்த வசுக்கு கடைசியாக களுத்துறையில் நடந்த விஷயங்கள் நினைவிற்கு வந்தது.

அதைப்போல சென்னையில் இருந்து வந்து கொண்டிருக்கும் தேவிக்கும் அந்த நினைவுகள் கண் முன் வந்தது..

சில தினங்களுக்கு முன்னர்...

களுத்துறை:

சத்தியமூர்த்தி குரலைக் கேட்ட தேவி இந்த ஆள் என்ன பார்க்க அன்னக்காவடி போல இருக்கான்,ஆனால் நம்மள வாயை மூட சொல்றானே என்று மனதிற்கு நினைத்தவர் நான் எதற்கு வாய மூடணும் என்று கேட்டார்.

யாரை பற்றி என்ன பேசுறீங்களென்று சத்தியமூர்த்தி அங்கு வந்து கோவமாக கேட்க,உண்மைய தானே பேசினேன்.

ஒரு பிச்சைக்காரியை பற்றி பேசுறதில் உங்களுக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு கோவம் வருது என்று கேட்க,இவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை. இன்னொரு வார்த்தை ஆர்கலியை பற்றி பிச்சைக்காரி அப்படி இப்படி பேசுவது தெரிஞ்சது,நான் மனுஷனாக இருக்க மாட்டேன் என்று சத்தியமூர்த்தி சொல்ல,வசுவின் பெற்றோரை தவிர மற்றவர்களுக்கு இங்கு என்ன தான் நடக்கிறது என்பது ஒன்றும் புரியவில்லை.

என்ன நீங்களும் உங்க மனைவியும் ரொம்ப குதிக்கிறீங்க.யாரோ ஒரு அனாதையை என் மகன் பொண்டாட்டினு உளரிட்டு இருக்கான்.
அவளை என் மருமகளென்று என்னால் ஏத்துக்க முடியாதென்று சொல்ல,யாரைப் பார்த்து அனாதைன்னு சொல்றீங்க?

ஆர்கலி யாரென்பது உங்களுக்கு தெரியுமா?

ஆர்கலி சத்தியமூர்த்தி என்னோட ஒரே பொண்ணு.ஆர்கலியோட அப்பா அம்மா நாங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்கிறோம்.வேடன்புத்தூர் ஜமீனின் முதல் பெண் வாரிசு,போதுமா இன்னும் எதாவது தெரியனுமா என்று சத்தியமூர்த்தி கோவமாக கேட்க,என்ன ஆர்கலி உங்களுடைய பொண்ணா என்று அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.

ஏய் சைலு,தம்பி என்ன சொல்றாங்க என்று கிரிஜா பாட்டி அதிர்வாய் கேட்க,ஆமா கா வசு-சத்தியமூர்த்தியோட ஒரே பொண்ணு தான் ஆர்கலி என சைலஜா பாட்டி கண்ணீரோடு தனது அக்காவிற்கு சொன்னார்.

அப்புறம் மேடம்,வருஷா வருஷம் முதல் இரண்டு இடத்தில் இருக்கிற டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியோட போட்டி போட்டும்,முதல் இடத்திற்கு வர முடியாமல் கடந்த 20 வருஷமா தோத்துட்டு இருக்கீங்களே அது யாருடையது கம்பெனி என்பது உங்களுக்கு தெரியுமா என்று சத்தியமூர்த்தி கையை கட்டிக் கொண்டு கேட்டார்.

தெரியுமே..

SM Groups & VS Groups என்று சொல்ல அந்த நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் எஸ் எம் குரூப் இந்த சத்தியமூர்த்தியுடையது.

இரண்டாவது இடத்தில் இருப்பது என் மனைவி வசுந்தரா சுந்தரபாண்டியனுடையது என்க,என்னாஆஆ என்று இப்பொழுது தேவி தான் பேரதிர்ச்சிக்கு உள்ளானார்.

அப்பொழுது தேவியிடம் வந்த ஆனந்த் அம்மா தேவி நீ நினைக்கிற போல வசுந்தரா மேடம் சாதாரண ஆள் இல்லை.என்னமோ அரசியல்வாதிக்கு அடி பணிந்து போகும் கலெக்டராக நினைச்சுட்டு இருக்க போல..அவங்க ஒரு சிபி ஆபிசர்.பல மில்லியன் சொத்துக்கு அதிபதி.

அவங்க நினைச்சிருந்தாங்கனா உன் மேல பல கேஸ் போட்டு,அவங்க பொண்ணை வரதட்சனை கொடுமை பண்ணுற என்ற காரணத்திற்காக உள்ள தள்ளிடுவாங்க.இனியாவது மனுஷர்களிடம் எப்படி பேசணும் என்று தெரிந்து கொண்டு பேசு.சுந்தருக்கு உன் மேல ரொம்ப பாசம்.

அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பான்.
என் தங்கச்சிக்கு ரொம்ப நல்லவளாக இருந்தாள்டா.ஆனா அவளுக்குள் பணம் என்கிற பேராசை எப்படி வந்துச்சுன்னு எனக்கு தெரியலை.

நானும் அவளின் குணத்தை மாற்ற எவ்வளவோ முயற்சி பண்ணுனேன்.அவ கொஞ்சம் கூட மாறவில்லை.எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா ஒரு அண்ணனா அவளுக்காக நீ கூட இருடாயென்று அடிக்கடி என்கிட்ட சொல்லுவான்.

அவன் சொன்னதால் இல்லை,நீ எனக்கு தங்கச்சி தான்.நான் உன்னை அப்படி தான் இதுவரைக்கும் நினைச்சுட்டு இருக்கேன்.நீ என்னை எப்படி நினைக்கிறேனு எனக்கு தெரியலை என்றார்.

மாமா என்னை தவறாக நினைத்துக்காதீர்கள் என்று சிம்ஹன் தாத்தாவை பார்த்து சொன்ன சத்தியமூர்த்தி,தேவி மேடம் என் சொத்துல ஒரு பங்குடைய ஒரு நாளோட வருமானம் உங்களுடைய டெக்ஸ்டைல்ஸின் ஒரு மாச வருமானம்.
இப்ப சொல்லுங்க என் பொண்ணுக்கு மாமியாராக இருக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்டார்.

அப்பொழுது ஆஆஆஆ என்று ஆதிரா கதறி அழும் சத்தம் மாடியில் இருந்து கேட்க,அழட்டும் மனசு விட்டு ஆதிரா அழட்டும் என்று அமைதியாக இருந்தனர்.

இவ்வளவு நேரம் சத்தியமூர்த்தி பேசியதெல்லாம் வெளிய நின்று கேட்டுக் கொண்டிருந்த ருத்ரனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

வேகமாக உள்ளே வந்தவன் அத்தை மாமா என்று சத்தியமூர்த்தி-வசுந்தரா இருவரின் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்தவன் ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க.ஆர்கலியின் பிறப்பை பற்றி ரொம்ப தவறாக பேசிவிட்டேனென்று கண் கலங்கினான்.

உன்னை நாங்க மன்னிக்க வேண்டும் என்பது அவசியமில்லை பா.முதலில் என் பொண்ணு மன்னிச்சு ஏத்துக்கிறாளா என்பதை பாருப்பா என்றனர்.

கேட்ட எல்லா செய்திகளிலும் உடைந்து போன தேவி அதற்கு மேல் அவர்களோடு இருக்க விருப்பமில்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.யாருமே அவரை போகதே என்று தடுக்கவில்லை.

ஏன் சைலு நம்ம பொள்ளாச்சிக்கு போயிருக்கும் போது கூட ஆர்கலி தான் வசுவோட பொண்ணுன்னு சொல்லவே இல்லையே என சிம்ஹன் தாத்தா கேட்க, அது தான் மாமா விதி என்றார்.

சரி விடுங்க முடிஞ்சு போனது எல்லாம் பேசி ஒன்னும் புண்ணியமும் இல்லை.அடுத்தது ஆக வேண்டியதை பார்க்கலாமென்று தனா சொல்ல,ம்ம் என்றார்கள்.

ஆதிராவின் அழுகை சிறிது குறைந்தது போல் தெரிந்தது.கடந்த 11 நாட்களாக அவள் அடக்கி வைத்திருந்த அழுகை இன்று தான் வெளியேறியது.

அது ரஞ்சனால் தான் முடிந்தது என்பது அங்கு இருப்பவர்கள் புரிந்து கொண்டனர்.தாத்தா எனக்கு ஒரு யோசனை தோணுது என்க,சொல்லு வீரா என்றார்.

ஆதிராவுக்கும் ரஞ்சனுக்கும் சட்டப்படி கல்யாணம் ஏற்பாடு பண்ணலாம். இப்போதைக்கு அவளுக்கு ரஞ்சனுடைய சப்போர்ட் தான் தேவைப்படுது.
என்னதான் வெளிநாட்டில் படித்தாலும் நம்ம கலாச்சாரம் என்று ஒன்று இருக்கிறது.

அதனால் இருவரையும் ஒரே வீட்டில் தங்க வைக்க நம்ம மனசு இடம் கொடுக்காது. இப்பொழுது ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி ரஞ்சனை ஆதிரா கூட அனுப்பலாம்.

படிப்பு முடிந்த பிறகு ஊர் அறிய கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று ருத்ரன் சொல்ல,நானும் இந்த முடிவு தான் எடுத்து இருக்கிறேன் என்றவாறு ரஞ்சனும் மாடிப்படியிலிருந்து இறங்கி வந்தான்.

இப்படி திடீர்னு சொன்னா என்ன அர்த்தம் என்று சிம்ஹன் தாத்தா கேட்க,சிங்கம் இதுல நீ மண்டையை போட்டு யோசிக்கிறதுக்கு பெருசா ஒன்னும் கிடையாது.நமக்கு ஆதிரா தான் இப்பொழுது முக்கியம்.இன்னும் ஒரு வருஷம் அவளுக்கு படிப்பு இருக்கு.
கண்டிப்பா சித்தி சித்தப்பா நினைவில் இருந்து அவ்வளவு சீக்கிரம் அவள் வெளியில வரமாட்டாள்.

இந்த 11 நாள்ல பேயரைஞ்ச போல அவ மேலயே தான் இருந்தாள்.அதை நீ பார்த்தியா இல்லையா என்று ஆது முறைத்துக் கொண்டே கேட்க நீ சொல்றது சரிதான் கண்ணா என்றார் கிரிஜா பாட்டி.

உனக்கு புரியுதுடா கிரி.ஆனால் உன் புருஷருக்கு புரிய மாட்டேங்குது.இவர் எல்லாம் என்ன பிசினஸ் மேனோ தெரியல என்று சொல்ல,அடேய் வாய மூடுடா என்க...

ம்கும்...

பெரிய மனுஷனா இருக்கிறியே இந்த ஐடியா உனக்கு வந்திருக்கணும்.ஆனால் எங்களுக்கு வந்திருக்கு என்று தனது தலையில் தட்டிக் கொண்டான்.

ஆது சொல்வதும் சரியா தானுங்கப்பா இருக்கென்று வசுந்தரா சொல்ல,உங்க பெரிப்ஸ் காதில் நல்லா விழுற போல சத்தமா சொல்லுங்கம்மா என்றான்.

பின்னர் யோசித்துப் பார்த்து அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்து,ஆதிராவுக்கும் ரஞ்சனுக்கும் சட்டப்படி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைத்தனர்.

அப்பொழுது வசுக்கு டெல்லியில் இருந்து கால் வர சுந்தரமூர்த்தியோடு வசுந்தரா இலங்கையிலிருந்து நேராக டெல்லிக்கு சென்று விட்டார்.

ஐயா நீங்க சொன்ன ஊருக்கு வந்துட்டோம்.அட்ரஸ் என்று டிரைவர் ராஜா கேட்க,இவ்வளவு நேரம் தங்களது நினைவிற்குள் மூழ்கி இருந்த இருவரும் அவர் சத்தத்தில் நிகழ்விற்கு வந்தனர்.

இதோ ஒரு நிமிஷம் ராஜா என்று தனது போனை ஆன் பண்ணி அதில் மைக்கேல் அனுப்பி இருந்து அட்ரஸை பார்த்த சுந்தர்,கூகுள் மேப்பில் அதை டைப் பண்ணி சர்ச் பண்ண தற்பொழுது இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அங்கே செல்ல இன்னும் பத்து நிமிடம் என்று காட்டியது..!!

ஆர்கலியில் விழுந்தேன்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top