• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
517
சென்னை சிம்ஹன் பேலஸ்:

கண்ணையா கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்கும் தனாவின் குரலில் இருக்கும் சந்தோஷமே அந்த வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு என்ன விஷயமென எல்லாரையும் யோசிக்க வைத்தது.

சொல்லுங்க தம்பி என்றவாறு ஹாலிற்கு வர,அண்ணா ருத்ராக்கு என சொல்ல வந்தவர் இல்லை எனக்கு பேரப்பிள்ளைகள் பிறந்திருக்காங்கணா.அதுவும் ரெண்டு பேரு என்க அதைக் கேட்டவர் தம்பி ரொம்ப சந்தோஷம் என்றார்.

அண்ணா இதில் எல்லோருக்கும் ரெண்டு மாசம் போனஸ் இருக்கு கொடுத்துடுங்க. அப்புறம் காரில் ஸ்வீட்,டிரஸ் இருக்கு.அதையும் எல்லாருக்கும் மறக்காம குடுத்துடுங்க.

நான் இப்பவே என் பேரப்பிள்ளைகளை பார்ப்பதற்காக ஊருக்கு போகிறேன்.வீட்டை பார்த்துக்குங்கணா என்று தனா சொல்ல,நான் கொடுத்துடுறேன் தம்பி.அந்த செந்தூர் ஆண்டவன் புண்ணியத்துல எல்லாம் இனிமே நல்லதா நடக்கும் என்று சொன்னார் சமையல்காரர் கண்ணையன்.

அந்த நேரம் தனது டெக்ஸ்டைல்ஸில் இருந்து வீட்டிற்குள் வந்த விஷாலாதேவி கணவரின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்து என்ன விஷயம் தனா என்று பொறுமையாக கேட்டார்.

இத்தனை மாதங்களாக மனைவியின் முகத்தைப் பார்த்து முகம் கொடுத்து பேசாதவர்,தற்பொழுது அவரின் குரலில் திரும்பிப் பார்த்து,எனக்கு பேரப்பிள்ளைகள் பிறந்திருக்காங்க என்று சொல்ல,தனா நிஜமாவா என்று தேவி ஆச்சரியப்பட்டார்.

ஆமாம்!!

இதில் பொய் சொல்ல என்ன வேண்டி இருக்கு.என் பையனுக்கும் மருமகளுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது.

என் குடும்ப வரிசை பார்ப்பதற்காக இதோ நான் கிளம்பிட்டேன் என்று தனா சொல்ல, உங்களுக்கு மட்டும் தான் பேரப்பிள்ளைகளா?

அப்போ எனக்கு இல்லையா தனா என்று அழுகையோடு கேட்க,உனக்கு அந்த எண்ணம் எல்லாம் மனதில் இருக்கிறதா என்றார்.

வேண்டாம் தனா.

இதுவரைக்கும் மௌனமாக இருந்து என்னை கொன்றது போதும்.

இனியும் வார்த்தையாலே மேலும் என்னை குத்தி காயப்படுத்த வேண்டாம். தயவு செய்து என்னையும் அழைத்துட்டு போங்கள் என்று தேவி கையை கூப்பி கெஞ்ச,ஏம்மா நீ எவ்வளவு பெரிய கோடீஸ்வரி..

அது சாதாரணம் ஒரு டீச்சர் பொண்ணு வீடு.அங்க உன் ஸ்டேட்டஸ்க்கு ஏற்றவாறு ஏசி வசதிலாம் கிடையாது.
அது மட்டும் இல்லாமல் கிரானைட் கற்கள் பதித்த வீடு கிடையாது.நான் போகப் போகும் ஊர் ஒரு சின்ன குக்கிராமம்.அங்க உன்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதேயென்று மனைவியை வார்த்தையாலே அடித்து விளாசினார்.

கணவரின் வார்த்தைகளை கேட்ட தேவிக்கு அழுவதை தவிர வேறு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

பிளீஸ் தனா,தயவு செய்து என்னை கூப்பிட்டு போங்க என்று கெஞ்ச இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரர் கண்ணையா, தம்பி,போதும் தம்பி என்றார்.

சரிங்க அண்ணா.என்கூட வர சொல்லுங்க.ஆனா அங்க இருக்கிறவங்கள் யாருக்கும் இவளால எந்த ஒரு சின்ன மனக்காயம் கூட வரக்கூடாது.அப்படி மட்டும் ஏதாச்சும் நடந்தது,அந்த நிமிஷமே இவளை அங்கேயே தலை முழுகிட்டு வந்துவிடுவேன்.சீக்கிரம் ரெடியாகிட்டு வர சொல்லுங்கணா என்றார்.

இல்லை இப்படியே போகலாம் என்று தேவி சொல்ல ஒரு நொடி மனைவியை மேல் இருந்து கீழே வரை பார்த்தவர் போயிட்டு வேற புடவை மாத்திட்டு வா.

உன் முகத்தை கொஞ்சம் போய் கண்ணாடில பாரென்று கோபமாக சொன்னாலும் உள்ளுக்குள் சிறிது வேதனையாகத்தான் இருந்தது.
கடந்த ஒரு வாரமாக தேவியிடம் முன்பு இருந்த அந்த மிடுக்கு தற்பொழுது சிறிதுமில்லை. ஏனோ தானோ என டிரஸ் பண்ணிக் கொண்டு தான் டெக்ஸ்டைலுக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

கண்ணில் நீரோடு அமைதியாக தேவி ஹாலில் நிற்க,அம்மா தேவி போ மா.

தனது முகத்தை கழுவி தலையை மட்டும் சீவிக்கொண்டு வேகமாக கீழே இறங்கி வந்தார். பின்னர் இருவரும் கண்ணையாவிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்து காரில் ஏறி சதூர்வேதமங்கலத்தை நோக்கி பயணமாகினர்.


சதூர்வேதமங்கலம்:

எவ்வளவு நேரம் போனது என்பது, எனக்கு தெரியல.அப்போ கதவை திறந்து தேவதை போல ஒருத்தங்க வந்தாங்க.

வீரா வீரா என்று என்னை தட்டி எழுப்பி என் வாயில தண்ணி ஊத்துனாங்களென்று நினைக்கிறேன்.
எனக்கு நினைவு வந்து அம்மா என்று நான் போய் அவங்கள கட்டிக்கிட்டு அழுதேன். அவங்களும் பயப்படாத வீரா என்று சொல்லிட்டு என்னை வெளியே கூப்பிட்டு போய் குளிக்க வைத்து வேற டிரஸ் மாற்றி விட்டார்கள்.

அந்த நேரம் விஷாலாதேவியும் அவங்க வீட்டுக்காரரும் வீட்டுக்குள் வர என்னை பார்த்து விட்டு இவன் எப்படி வெளியில் வந்தான் வசந்தியென்று கோவமாக கேட்டாங்க. நான் பயந்து போய் அந்த வசந்தி என்பவங்க பின்னாடி ஒளிஞ்சிகிட்டேன்.

என்னாச்சு என்று விசாலாதேவி வீட்டுக்காரர் கேட்க இவன் என் புடவைங்களில் எல்லாம் பெயிண்ட் ஊத்திட்டானு தனாயென்று அந்த லேடி பொய் சொல்லும் போது,நீ இப்படி பண்ணினாயா இல்லையா என அவர் என் கிட்ட எதுவுமே கேட்கல.

வேகமாக வந்து அவங்க பின்னாடி ஒளிஞ்சிருந்த என் கையை பிடித்து இழுத்து நல்லா அடிச்சுட்டாரு.

அதில் அழுது அழுது எனக்கு ஃபீவர் ரொம்ப வந்துடுச்சு.மூணு நாள் நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்.
வீட்டுக்கு வரும் போது தனா இவனுக்கு ரொம்ப முரட்டு குணமா இருக்கின்றது.
நம்மகிட்ட வளர்ந்தால் இவன் ஒழுங்கா வளர மாட்டேன்.பிசினஸால் நீயும் நானும் அதிகமா வெளியே தான் இருக்கிறோம். நம்மால் இவனை ஹேண்டில் பண்ண முடியாது.அதனால் இவனை கொண்டு போய் இலங்கையில் உங்க அப்பா அம்மா கிட்ட விட்டுவிடுங்க.

உங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவர். அவர் நல்லா வளர்ப்பாரு.அப்படி நல்ல விதமாக வளர்ந்தா நமக்கு தானே பெருமை என்று அவங்க சொல்லிக்கிட்டு இருந்தாங்கள்.

நீ சொல்றதும் சரிதான் தேவி என்று, என்னை கூப்பிட்டுக்கிட்டு மறுநாளே இலங்கைக்கு வந்து தாத்தா பாட்டி கிட்ட விட்டுட்டு போயிட்டாங்கள்.

அந்த வயசில் நான் என்ன தப்பு பண்ணேன் என்பது எனக்கு கொஞ்சம் கூட புரியவே இல்லை.

பெண்களை பார்த்தாலே பயம்..

ஒரு வாரத்திற்கு மேல தான் பாட்டி-அத்தை இருவரோடு பேச ஆரம்பித்தேன்.

ஒரு தாயோட அன்பு எப்படி இருக்கும் என்பது என்னுடைய பாட்டியிடயும்,அத்தை மேகலாவிடம் தான் நான் உணர்ந்தேன்.

பாட்டியும் தாத்தாவும் எனக்கு அப்பா அம்மாவாக மாறினாங்க.அந்த வயதிலே எனக்கு பெண்கள் மேல நல்ல அபிப்பிராயம் சுத்தமா வரலை.

நான் மதித்த பெண்கள் என்று பார்த்தால் என்னுடைய பாட்டி கிரிஜா என்னுடைய அத்தை மேகலா ஆதுவோட அம்மா.

ரஞ்சனோட அம்மா கிருபா ஆன்ட்டி. இவங்க நாலு பெண்கள் மட்டும் தான் என் வாழ்க்கையில் இன்று வரை பிடித்த பெண்கள்.

வருஷத்துக்கு ஒரு முறை என்னோட அப்பா அம்மா என்று சொல்லிக்கிட்டு இரண்டு பேரும் வந்து என் கூட தங்கி போவாங்கள்.

ஆனால் அவங்கள் வருகை எனக்கு சுத்தமாக விருப்பம் கிடையாது.

ஒரு புள்ளையை பெத்து அதை வளர்க கூட முடியலன்னா அவங்க என்ன தாய்? தகப்பன்?

என்னைக்கு நான் இலங்கைக்கு வந்தோனோ அன்றிலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் அவங்களை அப்பா அம்மா என்று நான் கூப்பிட்டது கிடையாது.

ஸ்கூல்ல பேரன்ஸ் மீட்டிங் வைக்கும் போது எல்லாருக்கும் அவங்களுடைய அப்பா அம்மா வருவாங்க.

எனக்கு மட்டும் தாத்தா பாட்டி தான் வருவாங்க.பக்கத்து கிளாஸ் பசங்க கிண்டல் பண்ணுவாங்க ஹோய் இவன் அப்பா அம்மா இல்லாத பையன் போல,பாவம் அனாதை பையன் அப்படி இப்படி என்று.

நான் என்ன தாத்தா தப்பு செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் அப்பா அம்மா இல்லை என்று நான் ஒவ்வொரு வாட்டியும் அழுவேன்.

அங்கு ஒன்னாங்கிளாஸ் சேர்ந்த போது எனக்கு ஆதுவும் ரஞ்ஜனும் கிடைத்தாங்கள்.

அவங்க ரெண்டு பேருக்கும் மதிய சாப்பாடு ஆன்டிங்க இரண்டு பேரும் ஸ்கூலுக்கு எடுத்துட்டு வருவாங்க.

எனக்கு பாட்டி வருவாங்க இல்லன்னா மேகலா அத்தை வரும்.

வருஷம் போக போக என்னை பெற்றவர்கள் இருவரின் உறவு எனக்கு வேண்டாம் என்று சுத்தமா விட்டுட்டேன்.

என்னுடைய கவனத்தை எல்லாம் படிப்புல தான் காமிச்சேன்.நேரம் கிடைக்கும் போது தாத்தா பாட்டியிடம் தொழிலையும் கத்துக்கிட்டேன்.

எனக்கு உலகம் என்று பார்த்தால் நண்பர்கள் இருவரும்,அதன் பின்னர் எங்கள் ஃபேமிலி மட்டும்தான்.

இப்படியே என் வாழ்க்கை போச்சு.

12த் எக்ஸாம் எழுதிட்டு போகும் போது தான் ரஞ்ஜனை கடைசியாக பார்த்தது.அதற்குப் பிறகு அவன பத்தி எதுவுமே தெரியலை.

மேற்படிப்புக்காக நானும் ஆதுவும் கனடாக்கு போயிருந்த போது தான் ராம்,விக்டர்,பிலீப்,இவர்களும் நண்பர்கள் ஆனார்கள்.

படிப்பு முடிந்து நாங்க எல்லாம் அங்கே ஒரு கம்பெனியில் வேலை பார்த்தோம்.

பிறகு இலங்கைக்கு வந்து நானும் ஆதுவும் புது பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினோம்.

நல்லா போயிட்டு இருந்துச்சு.சில வருஷத்துக்கு அப்புறமா ஒரு நாள் ரஞ்ஜனை மீட் பண்ணினோம் என்றவன் சுருக்கமாக ராகினையையும்,ரஞ்சனின் வாழ்க்கையில் நடந்த பிரச்சனையையும் கண்ணீரோடு சொன்னான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
517
ரஞ்சன் ரொம்ப அருமையா ஓவியம் வரைவான்.அவனைப் பார்த்து தான் டிசைனிங் பண்ணும் ஆசை எனக்கும் வந்துச்சு.

பிறகு ஆனந்த் மாமா வீட்டிலே ரஞ்ஜன் தங்கிட்டான்.எங்க இருவர் கூடவே அவனும் டிசைனராக வேலை பார்க்க மூன்று பேரும் எங்களோட முழு உழைப்பு போட்டோம்.

இன்னைக்கு சொல்லிக்கும்படியா சில நாட்டுல எங்களுடைய ஷோரும் இருக்கின்றது.

ரஞ்சன் அவனுக்கு வர சம்பளத்தில் ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட் பண்ண அதில் வர பணத்தை ஷோரூமில் பார்ட்னர் ஆனான்.

ஷோருமோட மொத்தம் சொத்தும் எங்க மூணு பேரோட ஷேர் தான்.யாரும் இங்கே முதலாளி கிடையாது.மூன்று பேரும் உழைப்பாளியா தான் இந்த நிமிஷம் வரைக்கும் இருக்கின்றோம்.

அப்படி போயிட்டு இருக்கும் போது தான் ராம் அவனோட கல்யாணத்துக்கு வர சொல்லி போன் பண்ணி கூப்பிட்டான்.

அங்கு வந்த போது தான் உன்ன முதல் முதல்ல பார்த்தேன்.இத்தனை வருஷமா என் மனசுல பெண்களை பத்தி இருந்து வெறுப்பு உன்ன பார்த்ததும் உடைஞ்சிதுடி.

நீ சின்ன பொண்ணு என அறிவு சொல்லுச்சு.ஆனா என் மனசு அதை கொஞ்சம் கூட ஏத்துக்கல.

ஒரு பக்கம் படிக்கிற ஸ்கூல் பொண்ணை போய் இப்படி தவறாக நினைக்கிறோமோ என எனக்கு குற்ற உணர்ச்சி இருந்தது.

ஆனா புடவை கட்டிக்கிட்டு வந்த பாரு வாவ் அசந்து போயிட்டேன் டி.
என்னைக்கா இருந்தாலும் நீ தான் என்னோட பொண்டாட்டி என்பதை
அந்த நிமிஷமே முடிவு பண்ணிட்டேன்.

அதன் பிறகு நடந்த தான் உனக்கு தெரியுமே என்றவன்,மூன்று மாதத்திற்கு முன்னாடி என்னோட கப்போர்டில் எதையோ தேடும் போது தான் என்னுடைய பழைய போன் கையில் கிடைத்தது.

நான் திருச்சூரில் இருக்கும் போது அந்த விஷாலாதேவி வீட்டுக்காரர் தான் போனை என் கிட்ட கொடுத்தார்.

இந்த போன் எவ்வளவு ஸ்பெஷல் என்பது யாருக்குமே தெரியாது.இத்தனை வருஷமா நாங்கள் சுற்றி அலைந்த இடத்தோட ஞாபகமாக எத்தனையோ புகைப்படங்கள் அதுல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன்.
உடனே போனை செக் பண்ணும் போது சார்ஜ்ர் இல்லன்னு தெரிஞ்சுச்சு.

வீட்டிலேயே அதுக்கு சார்ஜர் இருந்ததால் நானும் சார்ஜிங் போட்டு அரை மணி நேரம் சென்று ஓபன் பண்ண பிறகுதான் அதுல நீயும் நானும் ஒன்றாக இருந்த வீடியோ ஒன்று ரெக்கார்டிங்ல இருந்தது.
அதை பார்த்த உடனே சத்தியமாக துடி துடிச்சு போயிட்டேன் டி.

நான் போதையில தான் உன்கிட்ட கணவனாக எல்லா உரிமையும் அன்று இரவு எடுத்துக்கிட்டேன் என்பது பார்த்தவுடன் எனக்கு பயங்கர ஷாக்.

பிறகுதான் அன்று நடந்தது போட்டோ ஏதாச்சும் இருக்கா என்று போனை செக் பண்ணும் போது ஒரு பார்ட்டிக்கு போயிருந்தது ஞாபகம் வந்துச்சு.

எனக்கு ட்ரிங்க்ஸ் பண்ணும் பழக்கம் இல்லை.ஆக்சுவலி உன்ன தேடி தான் லண்டன்ல இருந்து நான் சென்னையில் வந்து மூன்று நாளா அலைஞ்சிட்டு இருந்தேன்.அப்போதான் பிசினஸ் விஷயமா தெரிஞ்ச ஒருவர் பார்ட்டிக்கு என்ன கூப்பிட்டார்.

அங்க போய் கூல் ட்ரிங்க்ஸ் தான் குடிச்ச ஞாபகம் எனக்கு இருக்கு.அதன் பிறகு எனக்கு பெருசா எதுவும் ஞாபகம் இல்லைடி.

ஐயோ எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோம்.எவ்வளவு கேவலமான வார்த்தையால் உன்னை காயப்படுத்திட்டோம்னு என்னை நானே தண்டிச்சிக்கிட்டேன். தாத்தா பாட்டிக்கு நடந்த உண்மையை சொல்ல அதிலிருந்து அவங்க என்னிடம் பேசுவது கிடையாது.

மூணு மாசமா பைத்தியக்காரன் போல இந்த இந்தியாவுல உன்னை தேடி நான் அலையாத இடமே இல்லை தெரியுமாடி?

உன்கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்லை.அது எனக்கு நல்லா புரியுது. ஆனா எனக்கு வந்த நிலைமை நம்மளோட குழந்தைகளுக்கு ஒரு போதும் வரக்கூடாது.

அப்பா அம்மா இருந்தும் அவங்களோட பாசம் எப்படி இருக்கும் என்பதை இத்தனை வயசு வரைக்கும் எனக்கு தெரியவில்லை இந்த சூழல் என் குழந்தைகளுக்கு வரக்கூடாது நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் தாங்கிக்கிறேன்.

ஆனால் என்ன விட்டு விலகிப் போகணும் என்பதை மட்டும் தயவு செய்து நினைக்காதடி.நீ இல்லாம என்னால் வாழ முடியாது.நம்ம குழந்தைகளுக்கு அம்மா அப்பா ரெண்டு பேரும் வேண்டும்.நடந்ததெல்லாம் மறந்துவிட்டு ஒரு மனைவியாக என்கூட வாழனும்னு சத்தியமா நான் உன்னை கேட்கலை.

அதைக் கேட்பதற்கான தகுதியும் எனக்கு கொஞ்சம் கூட இல்லை.ஏனென்னால் அவ்வளவு கேவலமாக உன்கிட்ட நான் நடந்துருக்கேன்.ஒன்னே ஒன்னு கேட்கிறேன்டி.குழந்தைகளுக்கு நீ தாயாக,நான் அப்பாவா வாழ்ந்தால் போதும்.உன்னை பார்த்துக்கொண்டே என் வாழ்க்கையை முடிஞ்சிடும்.

நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது ஆர்கலி.அந்த அளவுக்கு உன்னை நான் காதலிக்கிறேன்.
எவளும் என்னை அசைக்க முடியாதென்ற இறுமாப்பில் கம்பீரமாக சுத்திக்கிட்டு இருந்தவன் கோயம்புத்தூரில் பார்த்த சின்ன பொண்ணு ஆர்கலியின் மேல் காதல் வந்து அவள் நினைவில் விழுந்தேன்டி.

இந்த காதல் உன் மேல எனக்கு எப்படி வந்துச்சு ஏன் வந்துச்சு என்பதுலாம் இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு காரணம் தெரியாது.ஆனால் நான் உன்னை காதலிக்கிறேன்.என்னுடைய உயிர் கடைசி நொடி என் உடம்பிலிருந்து பிரியும் வரைக்கும் உன்னை மட்டும் தான் நான் காதலிப்பேன்.

குழந்தைகளுக்கு மட்டும் நீ அம்மா இல்லை.எனக்கும் ஒரு அம்மாவாக இருக்கிறாயாடி என்று கேட்டு ஆர்கலியின் கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதான் தி கேரேட் பிஸ்னஸ் மேன் ருத்ர வீர சிம்ஹன்.

இதுவரை அவன் சொன்னதையெல்லாம் கேட்ட ஆர்கலியோ வார்த்தைகளின்றி கண்ணீர் வழிந்தோட உட்கார்ந்திருந்தாள்.

சென்னை:

இருவருக்கும் குழந்தைகள் எப்படி இருப்பார்களோ என்ற எண்ணம் தான் அதிகமாக இருந்தது.

தனாவிற்கு தேவியை பார்த்த பிறகு ருத்ரனின் மனைவியாகிய தனது மருமகள் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ என்று யோசிக்க ஒரு பக்கம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

கடந்த 30 வருடமாக கூட இருந்து குடும்பம் பண்ணிய மனைவியின் குணங்களையும் தற்போது ஐந்து நாட்களாக இருக்கும் மனைவியின் நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார் தன வீர சிம்ஹன்.ஏனோ அவரால் அவ்வளவு எளிதாக மனைவியை நம்ப முடியவில்லை.

வசந்தியின் டைரியில் எழுதியிருந்த விஷயங்களை படித்த பிறகு தான் இந்த அளவு மனைவியை வெறுப்பதற்கான மூல காரணமாக போனது.

கண்ணை மூடி சீட்டில் சாய்ந்த தனா அந்த நாளை நினைத்துப் பார்க்கலானார்.

வசந்தி இறந்து போய் ஒரு மாதத்திற்கு பிறகு அவர் அறையில் இருக்கும் பொருட்களை ஆசிரமத்திற்கு கொடுத்து விடலாம் என்று கண்ணையன் சொல்ல அதுவும் சரி என்று தனாவுக்கு பட்டது.

அதைப்போல ஒரு மாதத்திற்கு பிறகு வசந்தியின் அறை கதவை திறந்து உள்ளே போக ஒரு மாதம் பூட்டி இருந்ததால் ஒட்டடை அங்கங்கே தூசி படிந்து இருந்தது.

வேலையாட்கள் இரண்டு பேர் அவர் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் அங்கிருந்து சூட்கேஸில் அடுக்கி கொண்டிருக்கும் போது கபோர்டு உள்ளே ஒரு சின்ன பெட்டி இருப்பதை பார்த்த தனா அதை எடுக்க சொன்னார்.

ஒருவேளை வசந்திக்கு தெரிந்தவர்கள் யாரைப் பற்றியாவது இதில் குறிப்பு இருந்தால் அவர்களுக்கு இந்த பொருட்களை கொடுத்து விடலாம் என்று எண்ணத்தில் தான் தனா அதை எடுக்க சொல்லியது.

இந்தாங்க சார் என்று வேலையால் ஒருவர் பெட்டியை தனாவின் முன்பு நீட்ட,அதன் மேலே அலங்கரிக்கப்பட்டதை பார்த்து ஒரு பக்கம் திடுக்கென்ற உணர்ந்தார்.

இந்த டிசைன் இந்த டிசைன் என்று யோசனையாக அந்த பெட்டியை திறந்து உள்ளே பார்க்க அதில் சின்ன சின்ன கிளிஞ்சல்களில் செய்த உருவங்கள் இருந்தது.

வசந்திக்கும் இதை செய்ய தெரியும் போலயென தானாகவே ஒரு முடிவெடுத்தவர்,அதன் உள்ளே இருந்த டைரியை எடுத்து படிக்க தொடங்கினார்.

சின்ன வயதில் தெரிந்தவர்கள் ஒருவரிடம் சிறு சிறு கிளிஞ்சல்கள் வைத்து உருவங்களை செய்ய கற்றுக்கொண்டதையும் வளர வளர அந்த கலையே அவர் குடும்பத்திற்கு சாப்பாடு போட்டதை எழுதியிருந்தார்.

இப்படியே வருடங்கள் கூட ஒரு நாள் ஒருவர் தனது உருவத்தை சிறுசிறு சங்கில் வரைந்து கொடுக்க முடியுமா என்று கேட்க சொல்லி கடைக்காரரிடம் சொல்லி இருப்பதாகவும் அந்த அண்ணன் என்னிடம் சொன்னார் என்றும் அதில் எழுதியிருக்க அதை படித்து தனாவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

ஏனென்றால் வசந்தி எழுதியிருந்த விஷயம் மகாபலிபுரத்தில் உள்ள சென்னாங்குப்பத்தின் கடற்கரையோரம் இருக்கும் ஓர் கடையில் தனா தான் தன் உருவத்தை இதைப்போல செய்து தரமுடியுமா என்பதை கேட்டு சொல்ல சொல்லியிருந்தார்.

இவ்வளவு உறுதியாக அந்த கஷ்டமர் தான் என்று தனா நம்புவதற்கு காரணம் அந்த கடற்கரையோரம் வேறு எந்த கடையிலும் அதைப் போல சிறு சங்கில் செய்த கலை பொருள்கள் விற்பனைக்கு இல்லை.

அப்போ நாம் லெட்டர் எழுதி வர சொன்னது வசந்தியை தானா என்று அதிர்ந்து போனார்.

அதன் பின்னர் விஷாலா தேவி அதே போல் சங்கில் உருவம் செய்ய சொல்லி தருமாறு தன்னை கேட்டுக்கொண்டதையும் அவளுக்கு கற்றுக் கொடுப்பதற்குள் பாதி உயிர் போனதையும் எழுதி இருந்தார்.

பிறகு வசந்தியின் கல்யாண வாழ்க்கையில் ஏற்பட்ட அவலங்களையும் அதில் எழுதி இருந்தார்.படிக்க படிக்க தனாவிற்கு வேதனையாக இருந்தது.

ஒருநாள் தற்கொலை பண்ணிக்கொள்ள கடற்கரைக்கு போன போது தேவியை சந்தித்ததும் வீட்டுக்கு கூப்பிட்டு வந்தது.

ருத்ரன் பிறந்தது,அதன் பின்னர் ருத்ரனுக்கு ஒரு தாயாக எல்லா பணிகளையும் தானே செய்ததையும் ஆனால் தாயாக ருத்ரனிடம் ஏன் விஷாலா தேவி நடந்து கொள்ள மாட்டேங்கிறா என்பது மட்டும் எனக்கு புரியவில்லை என்பதையும் எழுதி இருந்தார்.

அப்படித்தான் ஒரு நாள் ருத்ரன் தேவி கபோர்டில் ஏதோ ஓவியத்தை பார்த்ததற்காக இருட்டு அறையில் வைத்து பூட்டிவிட்டாள்.

அன்று என்று பார்த்து நான் வெளியே போய்விட்டதால் எனக்கு தெரியாது. மாலை வீட்டுக்கு வரும் போது வேலையாட்கள் சொல்ல ஓடிப்போய் கதவை திறக்க குழந்தை மயங்கி கிடந்தது.

ஆனால் இதை பற்றி தனா சாரிடம் வேறு விதமாக தேவி சொல்லியதை கேட்டு எனக்கு மனதிற்கு ரொம்ப வருத்தமாகிவிட்டது என்று எழுதியிருக்க,இதுவரை படித்த தனாவிற்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறோம் என்பது அப்பொழுது தான் புரிந்தது.

அதற்கு மேல் டைரியை படிக்க மனம் இல்லாமல் அதை தீயிட்டு எரித்தவர் மனைவியிடமிருந்து சுத்தமாக ஒதுங்கி விட்டார்

ஆர்கலியில் விழுந்தேன்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top