• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
515
சதூர்வேதமங்கலம்:

என்னன்னு தெரியல பாட்டி,ரெண்டு மூணு நாளாகவே எனக்கு மனசு ரொம்ப
படபடப்பாக இருந்துச்சு.ஆதிராவிற்கும் ரஞ்ஜனுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் ஆனதை சொல்லியவன் நானும் அங்கிட்டு இருக்கிற வேலைகள் எல்லாத்தையும் முடிச்சிட்டு சீக்கிரம் இங்கு வரலாம்னு இருக்க,நாளும் தள்ளி போய்ட்டு இருந்தது.

நேற்றுலாம் என்னால அங்க இருக்கவே முடியலை.அதான் நான் உடனே கிளம்பி வந்துட்டேன்.

திருச்சிக்கு வந்த பிறகு தான் தாத்தாக்கு கால் பண்ணி இங்கு வந்திருப்பது பற்றி சொன்னேன்.பிறகு அங்கிருந்து வாடகை கார்ல வந்தேன்.

வீட்ல போய் பார்த்தால் வீடு பூட்டி இருந்துச்சு.எதிர் வீட்டில் இருக்கும் பெரியம்மா தான் சொன்னாங்க.இந்த ஹாஸ்பிட்டலில் இருக்கீங்கன்னு.

அந்த காரிலே நேராக இங்க வந்துட்டேன் பாட்டி என்றான்.

அப்பொழுது கதவை திறந்து வெளியே வந்த இரண்டு நர்ஸ்ங்கள் ஆளுக்கொரு குழந்தையோடு வர,என்னா டுவின்ஸாஆஆஆ என்று கண்கள் விரிய சந்தோஷத்தில் அதிர்ந்து போனான்.

கண்ணு குழந்தையை வாங்குப்பா என்க,ருத்ரனுக்கோ ஆனந்த கண்ணீரில் கண்கள் மறைத்தது.

சார் வாங்கி பாருங்களென்று சிரித்துக்கொண்டே நர்ஸ் சொல்ல,மாமா நீங்களும்,பாட்டியும் வாங்குங்களென்றான்.

அதைக்கேட்ட இருவருக்கும் கண்கள் கலங்கியது.

இங்க குடுங்கம்மாயென்று ஆளுக்கொரு குழந்தையை வாங்கி பார்க்க,இருவரும் கொழுக் மொழுக்கென்று,ரோஜா பூவின் நிறத்தில் இருக்க,நால்வரும் கொஞ்சி மகிழ்ந்தனர்.

பாட்டி இவங்களை தூக்க எனக்கு பயமா இருக்கேயென்று ருத்ரன் சொல்ல,ஆமா கண்ணு,புதுசுல அப்படி தான் இருக்கும்.

நீ உட்காரு உன் மடியில் நான் குழந்தைங்களை வைக்குறேனென்று பாட்டி சொல்ல,எதையும் யோசிக்காமல், பட்டென்று தரையில் உட்கார்ந்தான்.

அப்பொழுது,ஏன்மா என் தங்கச்சி எப்படி இருக்குமாயென்று சங்கர் அங்கிருந்த நர்ஸிடம் கேட்க,அவங்க நல்லா இருக்காங்கணா.இப்போதைக்கு மயக்கத்தில் இருக்காங்க.

இன்னும் கொஞ்ச நேரத்தில் வார்டுக்கு மாத்திடுவாங்க என்றவர்,குழந்தைகளை தரீங்களா,தாய்ப்பால் கொடுக்கணுமென்றார்.

செத்த இருமா என்ற பாட்டி,தன் கையில் இருந்த பேரனை ருத்ரன் மடியில் வைக்க, அவனுக்கோ.என் வாரிசுகள் என்கும் சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்கியது.

பின்னர் சங்கரை பார்க்க,கருப்பாயி புள்ளைய மாப்ளை கிட்ட குடு என்றார்.

இரண்டு குழைந்தைகளையும் பார்த்தவனுக்கு மேலும் சந்தோஷம் தாங்கவில்லை.

செல்லங்களாயென்று தனது நெஞ்சில் அணைக்க,குட்டிங்களோ அழ ஆரம்பித்தனர்.

பசி போலயென்று பாட்டி சொல்ல,சரி சரி நீங்க போய் சாப்பிட்டு வாங்களென்று சொல்லி இருவரின் உச்சந்தலையில் முத்தம் வைத்தவன்,தங்கச்சி தூக்கிட்டு போங்கம்மா என்று சொல்ல,நர்ஸ் இருவரும் ஆளுக்கொரு குழந்தையை தூங்கிக் கொண்டு உள்ளே சென்றனர்.

வாழ்த்துக்கள் மாப்பிள்ளை என்று சங்கர் கை கொடுக்க,ருத்ரனும் கையை பிடித்து குலுக்கி தேங்க்யூ மாமா என்றான்.

சரிப்பா புள்ளைங்க பிறந்ததை பற்றி வீட்டில் சொல்லிடு என்று பாட்டி சொல்ல, ஓஓஓ காட்...

நல்லவேளை எனக்கு ஞாபகப்படுத்துனீங்க பாட்டியென்றவன், பாக்கெட்டில் இருந்த தனது போனை எடுத்து,தனது தாத்தாவிற்கு கால் பண்ணினான்.

இரண்டே ரிங்கில் அட்டன் பண்ணியவர், என்ன நினைச்சிட்டு இருக்க வீரா?.உன் இஷ்டத்திற்கு எல்லாமே பண்ணுவதா?என்று சத்தம் போட,ருத்ரனோ சந்தோஷத்தோடு தாத்தா குழந்தை பிறந்துட்டாங்க.

உங்களுக்கு ரெண்டு பேர புள்ளைங்க என்று சொல்ல,சிம்ஹன் தாத்தாவே பேரன் சொன்னதை கேட்டு, சந்தோஷத்தில் வாயடைத்து போய் நின்றார்.

தாத்தா தாத்தா என்ற ருத்ரன் வேகமாக கத்த கண்ணா நிஜமாவா என்று அவர் கேட்க ஆமா தாத்தா ஒரு பேத்தி ஒரு பேரன்.

என் குட்டிங்க ரெண்டு பேரும் என்னை போலவே எவ்வளவு அழகாக இருக்கிறாங்கள் தெரியுமா என பெருமையாக சொன்னான்..

பின்னர் மற்றவர்களுக்கும் போன் பண்ணி விஷயத்தை சொல்லியவன், ஹாஸ்பிட்டலில் உள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக சாக்லேட்டையும் வாங்கிட்டு வந்து அனைவருக்கும் கொடுத்தனர்.

இவர்கள் வெளியே சென்று அரை மணி நேரத்தில் ,ஆர்கலியை முதல் தளத்தில் இருக்கும் ரூமிற்கு மாற்றியிருந்தனர்.
ஆர்கலிக்கு ஊசி போட்டிருப்பதால் அவள் நன்கு உறக்கத்தில் இருந்தாள்.

இரண்டு குழந்தைகளையும்,பாட்டியும், கருப்பாயியும் கொஞ்சியபடி பேசிக் கொண்டிருந்தனர்.

கதவை திறந்து உள்ளே வந்து பார்க்க, ஆர்கலி ஓய்ந்து போய் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.

பின்னர் தெரிந்தவர்களெல்லாரும் வந்து பார்த்து செல்ல,ஆர்கலிக்கோ இன்னும் மயக்கம் மட்டும் தெளியவில்லை.நேரமும் கடந்து செல்ல,குட்டிங்கள் இருவரும் தூங்கி விட்டனர்.

பக்கத்தில் இருந்த தொட்டிலில் இருவரையும் படுக்க வைத்து விட்டு, பாட்டியும்,கருப்பாயியும் வெளியே இருக்கோம் பா என்று சொல்லி சென்றனர்.

அந்த அறைக்குள் தன் மனைவி, தங்களின் குழந்தைகள் மட்டும் இருக்க, இந்த உணர்வை எப்படி சொல்வதென்று ருத்ரனுக்கு தெரியவில்லை. மனம் மட்டும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.

தூங்கும் குழந்தைகளை இமைக்காமல் பார்த்து ரசித்தவன்,வரும் போன் காலிற்கு அட்டென் பண்ணி பதிலை சொல்லியவாறு இருந்தான்.

பின்னர் ஆர்கலி படுத்திருக்கும் பெட்டின் மேல் தலைசாய்த்து கண் மூடியவன், அப்படியே தூங்கி விட்டான்.

நேரமும் கடந்து சென்றது...

ஒருவாறு மயக்கம் தெளிந்து கண் விழித்த ஆர்கலிக்கு,வலது பக்கம் தெரியும் தலையை பார்த்தவளுக்கு, வந்திருப்பது யார் என்பது தெரிந்தது.

பொறுமையாக அவன் தலை முடியில் கையை வைக்க,பட்டென்று நிமிர்ந்தவன், தன்னவளுக்கு மயக்கம் தெளிந்ததை கண்டு,மை டியர் பார்பிடாலென்றவாறு, மனைவியின் உதட்டில் ஆழ முத்தமிட்டான்.

ஆர்கலியும் அவன் செயலை எதிர்க்கவில்லை.சில நொடிகள் சென்று அவளிடமிருந்து மனமேயின்றி பிரிந்தவன்,உனக்கு இப்போ எப்படி இருக்குடி?.

ஆர் யூ ஓகே தானே என்றான்.

ஆர்கலியோ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, மனைவியின் கையை பிடித்து தனது இதயம் பக்கம் வைத்தவன்,இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேனென்று சொல்ல வார்த்தையே இல்லைடா.

அதற்கு முழு காரணம் நீ தான்.ஐ லவ் யூ டி மை டியர் சில்லி பொண்டாட்டி என்க, இப்பொழுது ஆர்கலி அவனை முறைத்து பார்த்தாள்.

குழந்தைகள் என்று கேட்க,ரெண்டு லட்டூஸும் தூங்கிட்டு இருக்காங்க.செம்ம கீயூட் டி.

எனக்கு டபுள் ஹேப்பி..

அப்பொழுது கதவை திறந்து உள்ளே வந்த மூவரும்,எப்படி இருக்கம்மா என்று விசாரித்தனர்.

அம்மாடி ஆராமா புள்ளைங்க ரெண்டு பேரும் அப்படியே தம்பி போல நான் பிறந்திருக்காங்களென்று கருப்பாயி சொல்ல,அப்படிங்களா அண்ணி என்று ஆச்சர்யமாக கேட்டாள்.

ஆமா டா என்ற சங்கர்,மாப்ளை போல தான் ரெண்டு பேரும் இருக்காங்க என்றார்.

சரிங்க பாட்டி...

நீங்க ரெண்டு பேரும் இருங்க.நானும் மாமாவும் வீட்டுக்கு போய் சமைச்சி எடுத்து வரோமென்று சொல்லி அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

மாமா ஆராக்கு காரம் இல்லாம தான் கொடுக்கணும்.அதனால இட்லி ஊத்திடட்டுமா என்க,சரி,கொஞ்சோண்டு பருப்பை அள்ளி தனியா தங்கச்சிக்கு பண்ணிடு.

நான் சட்னிக்கு தயார் பண்ணுறேனென்றார்.

இருவரும் பேசிக்கொண்டே சமைத்து முடித்தவர்கள்,அது அதற்குரிய டப்பாவில் எடுத்து வைத்து விட்டு,எல்லாம் சரியா இருக்கா என்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு வண்டியில் ஏறி ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர்.

இவர்கள் வரும் போது குட்டீஸ் இருவரும் விழித்திருந்தனர்.

ஹேய் செல்ல குட்டிங்களா,தூங்கி எந்திரிச்சாச்சாயென்று ஆளுக்கொரு குழந்தையை தூக்கி கொஞ்சினார்கள்.

ஆச்சி,ஆராக்கு தனியா சாப்பாடு வச்சிருக்கேன் அதை குடுங்க.இதில் உங்களுக்கும் தம்பிக்கும் இருக்குயென்ற கருப்பாயி,தனது கையில் இருந்த ஆண் குழந்தையை பார்த்து,உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க?அத்தை செஞ்சி தரேனென்க,குழந்தை கண்ணை மூடி மூடி திறந்தது.

ஒரு இட்லி போதுமென்று ஆர்கலி சொல்ல,அட சாப்பிடு ஆராமா.என் ரெண்டு மருமக பிள்ளைய கவனிக்கணும்.அதுக்கு உனக்கு தெம்பு வேண்டுமாச்சே என்க,போதுங்கண்ணி என்றாள்.

சரி பசிக்கும் போது சாப்பிட்டுக்கோ என்கும் போது,டாக்டர் ரவுண்ஸிற்கு வருவதாக,நர்ஸ் ஒருவர் வந்து சொல்லிட்டு போனார்.

நேரமும் கடக்க பேஷண்ட் கூட இரண்டு அட்டெண்டர் தவிர,வேறு யாரும் இருக்க கூடாது என்பதால் நர்ஸ்ங்கள் ஒவ்வொரு ரூமிலும் சொல்லிச் சென்றனர்.

அதும் ஆண்களுக்கு இரவில் உள்ளே தங்க அனுமதிமில்லை.நாங்க வெளியே இருக்கோம்.எதாவது என்றால் கூப்பிடுங்க பாட்டியென்றவாறு ருத்ரனும், சங்கரும் எழுந்து வெளியே சென்றனர்.

கொஞ்ச நேரம் நான் அப்படியே நடந்துட்டு வரேனென்று சொல்லியவாறு அந்த மெயின் ரோட்டில் பலத்த யோசனையோடு நடந்தான்.

அடுத்து என்ன செய்யலாமென்று யோசிக்க,எப்படியும் இன்னும் ரெண்டு- மூன்று நாள் ஹாஸ்பிட்டலில் இருக்குற போல இருக்கும்.

அவளுக்கும் உடம்பு சரியான பிறகு தான் நாம ஊருக்கு போக முடியும் போல. அதுவரை அவசரத்திற்கு கார் வேண்டும்.

நாளைக்கு சென்னைக்கு போய் வாங்கிட்டு வந்திடலாமாயென்று யோசனையோடு நடந்தவன்,அங்கிருந்த டீ கடையை பார்த்து சென்றான்.

டீ குடித்தவன் அதற்குரிய காசை கொடுத்துவிட்டு திரும்பி நடந்து வர, ஹாஸ்பிட்டல் வராண்டாவில் லைட்களெல்லாம் அணைத்திருந்தது.

கிரில் கேட்டை திறந்து உள்ளே வந்தவன், சங்கர் அருகில் வந்து உட்கார்ந்தான். இருவரும் பேசிக்கொண்டே அங்கிருந்த தரையில் சாய்ந்து படுத்தவர்கள் சில நிமிடத்தில் தூங்கிவிட்டனர்.

விடியலும் தொடங்கியது..

ரோட்டில் போகும் வண்டி சத்தத்தில் கண் விழித்த சங்கர்,தனது அருகில் படுத்திருந்த ருத்ரனை பார்த்தவர், எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் இப்படி தரையில் படுத்து இருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டார்.

பின்னர் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து மணியை பார்க்க,அதிகாலை 5.30 என்று காட்ட,எப்படியும் மனைவி விழித்திருப்பாள் என்று நினைத்து கருப்பாயி நம்பருக்கு போன் பண்ண, இரண்டே ரிங்கில் அட்டென்ட் பண்ணியவரும் சொல்லு மாமா என்றார்.

அந்த பிளாஸ்கை எடுத்துட்டு வா புள்ள.காபி வாங்கிட்டு வரேன் என்க, இதோ வரேன் மாமா என்றபடி போனை வைத்தார்.

சிறிது நிமிடத்தில் பிளாஸ்கோடு அங்கு வந்த கருப்பாயி,இந்தா மாமா என மெயின் கேட்டை திறந்து கொடுக்க, மருமக புள்ளைங்க ரெண்டு பேரும் என்ன புள்ள பண்றாங்க என்று கேட்டார்

ஏன் மாமா அந்த கதை கேக்குற.ராவெல்லாம் ரெண்டு பேரும் அடிச்ச கூத்து இருக்கே யாத்தே,தூங்கவே இல்லை.

ம்ம் என்று சிரித்தவர்,பிளாஸ்கை வாங்கியபடி அங்கிருந்து டீக்கடையை நோக்கி சென்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
515
நான் வீட்டுக்கு போய் சமைச்சி எடுத்துவரேன் என்க,அக்கா காலை டிபன் தானே கடையிலே வாங்கிக்கலாம்.

எவ்வளவு தான் நீங்க ஒரே ஆளா பார்ப்பீங்களென்று ருத்ரன் சொல்ல,இருக்கட்டும் தம்பி.
இதில் என்ன இருக்கு என்றார்.

அம்மாடி மதியம் சமைச்சிக்கலாம்.சங்கரு நீ போய் ஆரா கண்ணுக்கு மட்டும் டிபனை வாங்கிட்டு வாய்யா.மாத்தரை போடணுமென்க,மாப்ளை உங்களுக்கு என கேட்க,நான் வீட்டிற்கு வந்து குளிச்சிட்டு பிறகு சாப்டுறேனென்று சொல்லிவிட்டான்.

அதைப்போல ஆர்கலியும் காலை டிபனை சாப்பிட்டு மாத்திரை போட்டு படுத்து விட்டாள்.

பாட்டி எதாவது என்றால் போன் பண்ணுங்க,நாங்க வீட்டிற்கு போய்ட்டு வரோமென்று சொல்லி மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.மாமா என்னோட டிராலி அம்மா வீட்டில் இருக்கு எடுத்துட்டு வந்துடுறேனென்ற ருத்ரன் எதிர் வீட்டிற்கு சொல்ல,தன்னிடமிருந்த சாவியால் சங்கரும் வீட்டை திறந்தார்.

ருத்ரனும் பேகோடு வீட்டிற்கு வந்தான்.சரி மாப்ளை நீங்க குள்ளிச்சிட்டு டிபனை சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுங்க,உங்கக்காகாரி சமைத்ததும் நாம கிளம்பலாமென்று சொல்லிவாறு அங்கிருந்து தங்கள் வீட்டிற்கு சென்றனர்.

குளித்து சாப்பிட்டவனோ அசதியால் அப்படியே தூங்கி விட்டான்.

மாப்ளை மாப்ளை என்னும் சத்தம் கேட்டு எழுந்து போய் கதவை திறக்க அங்கே சங்கர் நின்றார்.பின்னர், இருவரும் வண்டியில் ஏறி ஹாஸ்பிட்டலை நோக்கி சென்றனர்.

சிறிது நிமிடத்தில் ஹாஸ்பிட்டலின் முன்பு வந்து வண்டியை நிறுத்திய சங்கர், மாப்ளை நீங்க உள்ளே போங்க.
வயலுக்கு கொஞ்சம் மருந்து வாங்க வேண்டியது இருக்கு.நான் போய் கடைகார் கிட்ட சொல்லிட்டு வந்துடுறேனென்று அங்கிருந்து சென்றார்.

சாப்பாட்டு பேகோடு முதல் தளத்தில் இருக்கும் ரூமிற்கு படியில் ஏறி சென்றவன்,அங்கே நிற்பவர்களை பார்த்து திகைத்தவன்,பின்னர் மாமாயென்றவாரு ஆனந்திடம் வர, ருத்ரனின் குரலை கேட்டு திரும்பியவர், வீரா என்றார்.

வாங்க மாமா எப்போ வந்தீங்க?, நாங்கள் வந்து ஒரு மணி நேரம் ஆகுது வீராயென்றவர்,நீ வீட்டுக்கு போயிருக்கயென்று ஆர்கலி சொல்லுச்சிப்பா.

அதற்குள்ள ரஞ்ஜன் போன் பண்ண, அந்த சத்தத்தில் உன் புள்ளைங்க எந்திரிச்சி ஒரே அழுகையென்றார்.

அப்படியாயென சிரித்தவன் இதை கொடுத்துட்டு வரேனென்று ரூமை திறக்க,அங்கிருப்பவர்களை பார்த்து ஆனந்த அதிர்ச்சியடைந்தான்.

ஹேய் உங்க அப்பா வந்தாச்சியென்று சைலஜா பாட்டி சொல்ல,சாப்பாடு இருக்கும் பேகை அங்கிருந்த செல்பில் வைத்தவன்,எல்லாரையும் பார்த்து வாங்க வாங்க என்றான்.

பாட்டியென்றவாறு இரண்டு பாட்டிகளின் தோள்களை அணைக்க,ம்ம்,ரெண்டு பேரும் உன்னை போல தான் இருங்காங்களென்க,ஹாஹாஹா.

என் பொண்டாட்டிக்கு என் மேல அம்புட்டு காதல் பாட்டி.அதான் என் லட்டுங்க அப்பாவை போலவே பிறந்திருக்காங்களென்க,விவஸ்தை கெட்டவனென்று ஆர்கலி முணவினாள்.

ஆமாம் எங்கே இரண்டு யங் மேன் தாத்தாவையும் காணும்?, என்னத்தை சொல்ல வீரா.டவுனுக்கு போய்வரேனென்று போய் அரை மணி நேரத்துக்கு மேல ஆகுது கண்ணா.ஆனால் இன்னும் வந்தபாடில்லை.என்னமோ இந்த ஊரிலே பிறந்து வளர்ந்த போல கிளம்பியாச்சு என்றார் கிரிஜா பாட்டி.

பின்னர் குழந்தைகளோடு இவர்களும் கொஞ்சிக் கொண்டிருப்பதை ஆர்கலி கண்டும் காணாமல் இருந்தாள்.

டவுனிற்கு போனவர்களும் வந்து சேர, அவர்களிடமும் நலம் விசாரித்தான்.

எல்லாருமே கிளம்பி வந்தாச்சு என்றால், அங்கு யாரு எல்லாத்தையும் பார்ப்பது என்று ருத்ரன் கேட்க,ஆலீஸும் ஜேம்ஸூம் தான் என்றார் சிம்ஹன் தாத்தா.

வசுவை டெல்லிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்திருக்க, வசுந்தரா-சத்தியமூர்த்தி இருவரும் இலங்கையிலிருந்து நேராக டெல்லிக்கு சென்று விட்டதால்,ஆர்கலிக்கு குழந்தை பிறந்ததை பற்றி தெரியவில்லை.

அப்பொழுது கதவை தட்டி உள்ளே வந்த நர்ஸ்,அம்மா இவ்வளவு பேர் இங்கு இருந்தால் டாக்டர் பார்த்திட்டு திட்டுவாங்கமா என்க,சரிம்மா சரிமா.
இதோ கிளம்பிடுறோமென்றனர்.

சரி நீங்களாம் வீட்டிற்கே போங்களென்று ருத்ரன் சொல்ல,நான் இங்கே இருக்கேன் கண்ணா.

அக்கா வீட்டிற்கு போய் குளிக்கட்டும். நேற்றிலிருந்து இங்கையே இருக்காங்களென்று சைலஜா பாட்டி சொல்ல,நானும் இங்கையே இருக்கேன் என்றார் கிரிஜா பாட்டி.

சைலஜா பாட்டியை தவிற மற்றவர்களை, ஒரு வழியாக பேசி தேவகி கண்ணனோடு வீட்டிற்கு அனுப்பினான்.

அம்மு சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்க,சரி பாட்டி என்றவள்,பொறுமையாக எழுந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

அப்பொழுது குழந்தைக்கு தோல் ஊசி போடணும் என்று வர சொல்லி செல்ல, இரண்டு குழந்தையும் தூக்கிக் கொண்டு சென்றனர்.

குழந்தைகளின் இடது கையில் இஞ்ஜக்ஷனை போட,இருவரும் வலியில் அழ,அவர்களை அமைதிப்படுத்தவே போதும் போதுமென்று ஆனது.

ஒரு வழியாக தோளில் தட்டி தூங்க வைத்து,இருவரையும் தொட்டிலில் கடத்தினர். இப்படியே இரண்டு நாட்கள் சென்றது.

முதல் நாள் இரவு ரவுண்ஸிற்கு வந்த போது,நாளைக்கு டிஸ்சார்ஜ் என்பதை டாக்டர் சொல்லிட்டு போனார்.

தனது குழந்தைகளுக்காக புத்தம் புதிய காரை வாங்கியவன்,வாசலில் வந்து நிறுத்தி விட்டு,டிஸ்சார்ஜ் பற்றி கேட்க, பணத்தை கட்டியாச்சு என்கவும்,ஓஓஓ தாத்தா தான் பே பண்ணிருப்பாறென்று நினைத்து உள்ளே போனான்.

இரண்டு பாட்டிகளும் ஆளுக்கொரு குழந்தையை தூக்கிக்கொள்ள லக்கேஜ் பேகை சங்கர் எடுத்து போய் கார் டிக்கியில் வைத்தார்.

பின்னர் குழைந்தகளோடு காரில் ஏறி வீட்டிற்கு வந்தனர்.

அதற்குள் கருப்பாயி ஆலம் கரைத்து ரெடியாக வைத்திருக்க தன்னிடமிருந்த பேத்தியை ஆர்கலியின் கையில் கொடுத்த கிரிஜா பாட்டி,ஆலத்தட்டை வாங்கி தனது பேரப்பிள்ளைங்களுக்கு திருஷ்டி கழித்து பொட்டு வைக்க,உள்ளே சென்றனர்.

ரூமில் பல மாற்றங்கள் இருப்பதை கண்டவள் எதுவும் கேட்கவில்லை.

குழைந்தைகளுக்காக இரண்டு தொட்டில்கள் இருக்க,வரும் போதே அவர்கள் தூங்கிட்டு வந்ததால்,தொட்டிலில் கிடத்தினர்.

கடந்த மூன்று நாட்களாக மனைவியின் அருகாமை வேண்டி ருத்ரன் ரொம்ப தவித்து போனான்.

யாராவது ஒருவர் கூட இருப்பதால் அவளிடம் பேச முடியவில்லை.

எல்லாருக்கும் மதிய சாப்பாடு பெரிய வீட்டிலே தயாராவதால்,பாட்டிகளும் மாறி மாறி கண் விழித்திருந்தது அசதியாக இருக்க,சாய்ந்தரம் வரோமென்று சொல்லி அங்கிருந்து சென்றனர்.

பாட்டியும் அங்கிருந்த சோபாவில் படுத்து விட,அறையில் ஆர்கலியும்,ருத்ரனும் இருந்தனர்.

கட்டிலின் ஒரு பகுதியில் உட்கார்ந்து கொண்டு அவளையே பார்த்திருக்க, எதுக்கு இவன் ஜெயினறுக்க வந்த திருடன் போல இப்படி பாக்குறானென்று முணவினாள்.

சிறிது நொடிகள் அமைதியாக இருந்தவள்,எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கயென்று கோவமாக கேட்க, உனக்கு இப்போ ஹெல்த் ஓகேவா என்றான்.

இவனுக்கு என்ன பைத்தியம் புடிச்சிட்டாயென்று நினைக்க,ஆமாம் உன் மேல தான் பைத்தியம் புடிச்சிருக்கென்றவன்,எழுந்து போய் ஹாலை எட்டி பார்த்து விட்டு, பொறுமையாக கதவை தாழ்ப்பாள் போடும் போது அவன் போனிற்கு கால் வரும் சத்தம் கேட்க,எந்த கரடினு தெரியலேயே என்றவாறு ஃபோனை எடுத்து பார்க்க,ஆதுவிடமிருந்து வீடியோ கால் வந்தது.

அட்டென் பண்ணியவன் ம்ம் என்க, எருமை உன் மொகரைய பார்க்க யாருடா கால் பண்ணினால் செல்லங்களை காட்டு பன்னியென்கவும் ரொம்ப மரியாதைடா என்றவாறு குழந்தைகளை காட்ட,வாவ்.... டேய் எருமை,உன்னை போலவே இருக்காங்கடா என்றான்.

தள்ளு எருமை நானும் பார்க்குறேனென்று ரஞ்சனும் குழந்தைகளை கொஞ்சியவன், ஆர்கலியை பற்றி விசாரிக்க,நீயே கேட்டுக்கோயென்று அவளிடம் போய் போனை நீட்டினான்.

இந்த அதிரடியை எதிர்பார்க்காதவள் திரு திருவென்று முழிக்க,ம்ம் பேசு என்றான். போனை வாங்கியவள் லேசாக சிரிக்க, ஹாய் டா மா.நான் ரஞ்சன்,இவள் என் பொண்டாட்டி ஆதிரா என்க,என்னாஆஆஆ...

ஆதிராவிற்கு திருமணம் ஆகிட்டாயென்று உள்ளுக்குள் வந்த அதிர்வை காட்டிக்காமல்,ஹாய் ணா என்றாள்.

சிறிது நிமிடம் இருவரும் பேசி விட்டு ஆது விடம் கொடுக்க,ஹலோ குட்டி பாப்பா என்க,ஆர்கலியின் இயல்பான குணம் திரும்பியது.

சொல்லு வளர்ந்த மாடு என்றாள்.

அதைக்கேட்டு மற்றவர்கள் சிரித்து விட்டனர்.அப்புறம் பாப்பா நல்லா இருக்கியா பாப்பா என ஆது வெறுப்பேத்த,பனமரம்,கையில கிடைச்ச மண்டைய பொளந்துடுவேனென்றாள்.

சபாஷ் சரியான பாயிண்ட் என்று ரஞ்சன் கைத்தட்ட,எம்மா தாயே உன் புருஷன் கிட்ட போனை குடுத்தா என்றான்.

அந்த பயம் இருக்கட்டும் என்று சொல்லிய ஆர்கலி,ருத்ரனிடம் போனை நீட்ட,பின்னர் நண்பர்கள் மூவரும் பிசினஸ் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

அவன் பேசுவதை பார்த்தவாறு பெட்டில் சாய்ந்து கண்களை மூட சிறிது நிமிடத்தில் தூங்கிவிட்டாள்.

போன் பேசி முடித்தவன் திரும்பி பார்க்க,ஆர்கலி பெட்டில் தூங்குவது தெரிந்தது.

பொறுமையாக அவள் காலருகில் வந்து உட்கார்ந்தவன்,மனைவியின் இரண்டு கால்களை எடுத்து தனது மடியில் வைக்கும் போது ஆர்கலிக்கு விழிப்பு வந்தது. என்ன பண்ணுறான் இந்த மனுஷனென்று அமைதியாக இருந்தாள்.

ரொம்ப ஓய்ஞ்சிட்டியா செல்லம்?..

குட்டீஸ்ங்கள் நைட்டெல்லாம் தூங்க விடலைனு பாட்டி சொன்னாங்கள்.

உனக்கு கால் பிடித்து விடுறேன் நல்லா தூங்கு என்றபடி கைல்களை அமுக்கி விட, பட்டென்று இழுத்துக்கொண்டாள்.

அதை பார்த்தவன்,ஓஓ எந்திரிச்சிட்டியா என்றவாறு அவள் கையை பிடித்து இழுக்க,வேகமாக வந்து ருத்ரனின் நெஞ்சில் மோதியவள்,ஏய் என்ன பண்ணுற என்கும் போது,மனைவியை தூக்கியவன்,நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி.

அஞ்சு வயசு வரை விளையாட யாருமே கூட இருக்கமாட்டாங்க தனியா அழுது, தனியா விளையாண்டு,தனியாவே தூங்கினு என் வாழ்கை அப்படியே போய்ட்டு இருக்க,அப்போ தான் ஆதுவும்,ரஞ்சனும் வாழ்க்கையில் வந்தாங்கள்.

உன் புருஷனை பற்றி உனக்கு எதுவுமே தெரியாது இல்லையா என்று கையணைவில் இருந்தவளை கேட்க,ம்ம்,பிளீஸ் கீழ இறக்கி விடுயென்றாள்.

பரவாயில்லை நீ இங்கையே இருடி.
உன்கிட்ட நான் மனசு விட்டு பேசணும்..
பெற்றவங்க கூட இருந்தும் நான் யாருமில்லாத அனாதையாக தாண்டி வாழ்ந்தேன். பணம்,அவங்க ரெண்டு பேரோட ஹேப்பி மட்டும் தான் கண்களுக்கு தெரிந்தது.புள்ளை என்னை கொஞ்சம் கூட கண்ணு தெரியலை.

அப்போ ஒரு நாள் நான் மாடியில் இருக்கும் ஹாலில் விளையாண்டிட்டு இருக்கும் போது,அந்த விஷாலா தேவி ரூமிற்குள் பந்து ஓடிட்டு.

அதை எடுக்க போனேனா அப்போ, அங்கயிருந்த கபோர்ட் திறந்திருக்க, அதில் சில ஓவியங்கள் இருக்க,அழகா இருக்கேயென்று நான் எடுத்து பார்க்கும் போது,அந்த லேடி ரூமிற்குள் வந்துட்டாங்க.

அம்மா இங்க பாரு டிராயிங்கென்று நான் வியப்பா காட்ட,இங்கு உனக்கு என்ன வேலை ருத்ரா என்றவாறு வேகமாக வந்து என் கையில் இருந்த பேப்பரை புடிங்கியவங்க,அதை கபோர்டில் வைத்து லாக் பண்ணிட்டு,என் கையை புடிச்சி இழுத்துட்டு போய் அந்த வீட்டில் கடைசியாக இருக்கும் டார்க் ரூம்ல உள்ளே விட்டே கதவை லாக் பண்ணிட்டாங்கடி.

உள்ள எங்கு பார்த்தாலும் இருட்டு.அம்மா -அப்பா பயமா இருக்கு.பிளீஸ் என்னை கூப்பிட்டு போயிடுங்களென்று நான் கதறி அழுதேன்.

என்னோட பிஞ்சு கையால் அந்த கதவை தட்டி கத்துனேன்.ஆனால் யாருமே கதவை திறக்கவில்லை!

ஆர்கலியில் விழுந்தேன்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top