• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
505
சதூர்வேதமங்கலம் டூ இலங்கை-இரத்தினகிரி:

ருத்ரா என்னாச்சி பா?

ஏன் அழற?,என்கும் போதுஉள்ளே இருந்த கண்ணன் போனில் என்னாஆஆ என்று அதிர்ந்து பேசுவது தேவகிக்கு கேட்டது.

தேவகி என்று வேகமாக வந்தவர், அங்கிருந்த ருத்ரனை பார்த்து,ஒன்னும் இல்லை ருத்ராயென்று அவனை அணைக்க,அங்கிளென்று ருத்ரன் கதறி அழுதான்.

அய்யோ முதல்ல என்ன ஆச்சு, சொல்லுங்களென்று தேவகி பதற, தேவகி,நம்ப சுந்தரும் மேகலாவும் ஆக்சிடெண்டில் இறந்துட்டாங்கமா என்க...

அய்யோ என அவர் பதறி அழுதார்.

ருத்ரனோ,அத்தையுமா என்று கேட்டு அதிர்ந்தான்.

ஆமா ருத்ரா.இப்போ தான் ரியா போன் பண்ணி சொல்லுச்சி.ஆதிராவை கூப்பிட்டுட்டு ரியா ஏர்போர்ட்டிற்கு போயிட்டு இருக்காம்.

நாம உடனே அங்கு போகலாம்,ஃப்ளைட் டிக்கெட் பார்க்கணுமே என்க,அங்கிள் திருச்சியில் இருந்து போற ஃப்ளைட்டில் தான் டிக்கெட் இருக்குயென்றவன், தேவகி-கண்ணனுக்கும் டிக்கெட்டை புக் பண்ணினான்.

தேவகி,ருத்ரா சீக்கிரம் போய் உங்களுக்கு தேவையானதை எடுத்து வைங்க.

நான் அதற்குள் சங்கரை வர சொல்லுறேனென்றவர்,சங்கருக்கு கால் பண்ணி உடனே வர சொல்ல,இதோ வரேங்கைய்யா என்றார்.

ஏன் இப்படி?

அவர்கள் யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணவில்லையே?,பிறகு ஏனிந்த முடிவு??

கடவுளேயென தனக்குள் ருத்ரன் கேள்விகளை கேட்டுக்கொண்டே ரெடியாகியவன் லக்கேஜோடு வெளியே வர,அங்கே தேவகி- கண்ணன் இருவரும் தயாராக இருந்தனர்.

சங்கரும் வந்து விட,விஷயத்தை சொல்லிய கண்ணன்,சீக்கிரம் போய் கார் எடுக்க சொன்னார்கள்.

அங்கிள் தாத்தா பாட்டிக்கு விஷயத்தை சொல்லணுமேயென்று ருத்ரன் சொல்ல,அதான் எனக்கும் யோசனையா இருக்குப்பா.

அத்தை உடம்பு இப்போ தான் நல்லாகியிருக்கு.இந்த நேரத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை நாம சொன்னால்,இதைக்கேட்டு அவங்க உடம்பை பாதிக்குமே?,சொல்லாமலும் இருக்க முடியாது.அதான் என்ன செய்வதென்று புரியலை ருத்ரா என்றார்.

ருத்ரனும் சிறு யோசனைக்கு பிறகு, அங்கிள் நாம மைக்கேல் அங்கிள் கிட்ட விஷயத்தை சொன்னா என்ன என்க,அவரும் யோசித்து விட்டு இதுவும் நல்லது தான்.

மைக்கேல் நிச்சயமாக பக்குவமா எடுத்து சொல்லுவாரு ருத்ரா.சங்கரு காரை கொஞ்சம் ஓரமாக நிறுத்துப்பா என்க,சரிங்கைய்யா என்றவர்,இரண்டு பக்கமும் ரோட்டை பார்த்துவிட்டு காரை ஓரமாக நிறுத்தினார்.

பின்னர்,கண்ணனே மைக்கேல் நம்பருக்கு கால் பண்ணினார்.

இரவு உணவை முடித்துக் கொண்டு காற்றோட்டமாக எல்லாரும் வாசலில், உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது,மைக்கேலின் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.

எடுத்து பார்க்க கண்ணன் சார் என்று வர, அட்டென் பண்ணியவர் சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க என்க,நான் நல்லா இருக்கேன் மைக்கேல் ஒரு செய்தி சொல்லணுமென்றார்.

அவர் குரலை வைத்தே ஏதோ சரியில்லை என்பது புரிய சாதாரணமாக எழுவது போல பேசிக்கொண்டே போனோடு அங்கிருந்து நகர்ந்தவர்,சார் சொல்லுங்க என்னாச்சி என்று பதறினார்.

மைக்கேலிடம் விஷயத்தை சொல்ல அய்யோஓஓ என்று அதிர்ந்தவர் சரிங்க சார் நீங்க பார்த்து போங்க.

நான் இங்க பார்த்துக்குறேனென்று அழைப்பை கட் பண்ணியவரின் கண்கள் கண்ணீரை சிந்தியது.

சிறிது மாதங்களாய் தான் தன்னை தெரியுமென்றாலும்,வசுவை போல அண்ணா அண்ணா என்று அன்பாய் பழகிய தங்கை,இந்த உலகத்தில் இல்லை என்பதை அவராலும் நம்ப முடியவில்லை .

இதை எப்படி பெரியப்பா- பெரியம்மாவிடம் சொல்வதென்று கண்ணீரோடு நிற்க,அண்ணா என்றவாறு அங்கு வந்தார் வசுந்தரா.

திரும்பி நின்று அழுது கொண்டிருந்த மைக்கேல்,தங்கையின் குரல் கேட்டு திரும்ப,அவரைப் பார்த்த வசுந்தரா,என்னாச்சுணா என்று பதறினார்.

மேகலா,மேகலா என்கும் போதே அவரால் அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை.

அண்ணா மேகலாவிற்கு என்னாச்சி சொல்லுணா என்க,வசு மேகலா போன கார் ஆக்ஸிடென்ட் ஆக,மச்சானும்,மேகலாவும் இறந்துட்டாங்கம்மா என்க, அய்யோஓஓஓ என்று வசுவும் கதற, இதைக்கேட்டவர்கள் என்னாச்சோயென்று அங்கு வந்தனர்.

என்னாச்சி வசுயென்று சிம்ஹன் தாத்தா கேட்க,எப்படி இவரிடம் விஷயத்தை சொல்வதென்று புரியாமல் வசுவும் கண்ணீரோடு நின்றார்.

மைக்கேல் உன் தங்கச்சி எதுக்கு அழறா?

ஆர்கலிக்கு உடம்பு எதாவது சரியில்லையா என்று சுந்தரபாண்டியன் தாத்தா கேட்க,அதுலாம் இல்லைப்பா என்க,பிறகு வேற என்னடா விஷயம்,அதை சொல்லு என்றார்.

அப்பா நாமலாம் உடனே இரத்தினகிரிக்கு போகணும்,மேகலாவும்- மச்சானும் கார்ல போகும் போது சின்ன ஆக்ஸிடென்ட் ஆகிட்டாம் என்க...

என்னாஆஆ என்று மற்றவர்கள் பதறினர்.

சத்தியமூர்த்திக்கு மட்டும் அவர் சொல்வதில் ஏதோ விஷயம் ஒளிந்திருப்பது போல தெரிந்தது.

தம்பி,உன் தங்கச்சிக்கும் சுந்தருக்கும் ஒன்னும் இல்லையே என கிரிஜா பாட்டி பதற்றமாய் மைக்கேலிடம் கேட்க,நிஜமா இல்லைங்கம்மா.

நல்லா இருக்காங்க,மேகலாவுக்கு காயந்தான் கொஞ்சம் அதிகமா இருக்காம்.அதுக்கு தான் ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்காம்மா.

ருத்ரன் அங்கிருந்து இலங்கைக்கு கிளம்பியாச்சாம் மா.கண்ணன் சார் இப்போ தான் கால் பண்ணி சொன்னாங்களென்றார்.

சத்தியமூர்த்தி,தாரா வாயென்று அழைத்து போய் விஷயத்தை கேட்க, அழுது கொண்டே தனது தங்கையும், அவள் வீட்டுக்காரரும் இறந்துவிட்டதை சொல்லி கதறி அழுதார்.

கேட்ட சத்தியமூர்த்திக்கும் வேதனையாக தான் இருந்தது.நீ அழாதே என்றவர் உடனே ஃபோன் பண்ணி கோபியை வர வைத்தார்.

என்னாச்சோயென்று கோபியும்,அவன் அப்பாவும் பதறியவாறு அங்கு வந்தவர்கள் மச்சான் என்னாச்சியென்று கோபியின் அப்பா கேட்க,அவரிடம் விஷயத்தை சொன்னார்.

கோபியும் ஃபோனில் செக் பண்ணி பார்த்தவன்,மாமா நைட் 12.30 க்கு இலங்கைக்கு போக ஏர்இந்தியா ஃப்ளைட் இருக்கு.

இப்பவே மணி 10.30 ஆக போகுது. இப்போ நீங்களாம் கிளம்பினால் அந்த ஃப்ளைட்டை புடிச்சிடலாம்.

இல்லையென்றால் திருச்சி போய் தான் மாறணுமென்க,நீ அதிலே டிக்கெட் போட்டுரு கோபி என்றவர்,தாரா நீ போய் எல்லாரையும் தயாராக சொல்லி கூப்பிட்டு வாமா என்றவாறு,தனது அறைக்கு சென்றார்.

அதைப்போல் எல்லாரும் தயாராக, கோபியும் அவனுக்கு தெரிந்த பையனை வர வைத்திருக்க ஆளுக்கொரு காரில் இவர்களை அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டிற்கு வந்தவர்கள் அவர்களுக்கான ஃப்ளைட்டில் ஏற்றி விட்டனர்.

சங்கரு பார்த்து போப்பா என்க,நான் போய்க்குறேன்யா.நீங்களாம் நல்லபடியாக போய் சேர்ந்துட்டு போன் போடுங்க என்றவர்,மாப்பிள்ளை தைரியமாக போங்கள்.மனச விட்டுறாதீங்க.நீங்க தான் இப்போ அங்க ஆறுதலாக இருக்கணுமென்றார்.

பின்னர் இவர்களும் சொல்லிக்கொண்டு ஃப்ளைட்டின் உள்ளே சென்றனர்.

திருச்சியிலிருந்து கிளம்பிய இண்டிகோ விமானம் இலங்கையில் இருக்கும் அனுராதபுரம் ஏர்போர்ட்டிற்கு சில மணி நேரத்தில் வந்து சேர்ந்தது.

மூவரும் வெளியே வர,ருத்ரன் வீட்டு டிரைவரும் காரோடு அவர்களுக்காக வெய்ட் பண்ண,பின்னர் இவர்கள் மூவரும் காரில் ஏறியதும்,புறப்பட்ட காரும் அங்கிருந்து களுத்துறையை நோக்கி சென்றது.

மூன்று மணிநேர பயணத்தில் சுந்தர் வீட்டிற்கு வந்து சேர,அங்கே தெரிந்தவர்களெல்லாரும் அங்கங்கே குழுமி இருந்தனர்.

ஆலீஸும் ரஞ்சனும் அங்கிருக்க, காரிலிருந்து இறங்கி வரும் இவர்கள் மூவரையும் பார்த்த ஆலீஸ் கதறி அழுதார்.

எதுவும் பேசாமல் நண்பனை இறுக்கமாக அணைத்த ரஞ்ஜன்,அவன் முதுகில் தட்டி கொடுக்க,ருத்ரன் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் துளிகள்,ரஞ்ஜனின் தோள் பட்டையில் விழுந்தது.

சதூர்வேதமங்கலம்:

காலை உணவு வேளையும் முடிந்தது.

இவ்வளவு நேரம் அந்த இம்சைக்காரன் இங்கு வந்துருப்பானே,ஏன் இன்னும் வரலையென்ற யோசனையோடு பார்வையை வாசல் பக்கம் ஆர்கலி வைத்திருக்க,பாட்டிக்கு அவள் தேடல் புரிந்து,மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நேரமும் கடந்து சென்றது.

ஒரு வேளை அய்யா வேலையா இருப்பானோ?

அப்படி என்ன வேலை தான் இந்த மனுஷன் பார்க்குறான்?,எப்போ பார்தாலும் அந்த வீணா போன லேப்டாப்பையே கட்டிகிட்டு அழுறானே?..

பாட்டியும் துணி தைப்பதற்காக உட்கார்ந்து விட,ஆர்கலிக்கு தான் ரொம்ப போர் அடித்தது.

என்ன பண்ணலாமென்று யோசித்தவள்,பின்னர் எழுந்து தோட்டத்திற்கு சென்று,அங்கு செடியில் இருக்கும் பழுத்த மிளகாய்களை எல்லாம் தேடி பிடித்து பரித்து முடிக்க,ஆராமா என்றவாறு கருப்பாயியும் அங்கு வந்தார்.

மூவரும் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்க சங்கரும் அங்கு வந்தார்.

என்னணா உங்க அய்யா வீட்டில் இன்றைக்கு வேலை இல்லையா என்றாள்.

இன்னைக்கு வயல்ல மருந்து போடுறது தான் டா.அது முடிஞ்சி தான் வரேன் என்க, ஓஓஓ சரி ணா.

டீ போடட்டுமா என்க,அதுலாம் வேண்டாம் டா என்றவாறு வாசல் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தவர்,என்ன மனுஷ வாழ்க்கை?..

யாருக்கு எப்போ என்ன நடக்குதென்று சொல்ல முடியலையே என்க,அதைக்கேட்ட பாட்டியோ அய்யா சங்கரு,யாருக்கு என்னாச்சியா என்க,என்னத்தை சொல்ல ஆச்சி...

மாப்பிள்ளையோட அத்தையும்-அவங்க வீட்டுகாரரும் நேற்று இரவு கார் ஆக்சிடெண்ட்ல செத்துப் போயிட்டாங்க.

நைட்டுக்கு திருச்சில போய் அவங்களை இலங்கைக்கு வண்டி(ஃப்ளைட்)ஏற்றி விட்டுட்டு,விடியற்காலை தான் நான் வீட்டிற்கு வந்தேன் என்க,என்னாஆஆ என்று மூன்று பேரும் அதிர்ந்தார்கள்.

அய்யோ மாமா,நீ என்னய்யா சொல்லுற என கருப்பாயி கேட்க,நெசந்தான் புள்ள.

நைட்டுக்கு நீங்கலாம் தூங்கிட்ட பின்ன அய்யாகிட்ட இருந்து போனு வந்துச்சி.

உடனே வா சங்கருனு சொல்ல,அவர் குரலே ரொம்ப பதற்றமாக இருக்க,உன் கிட்ட வயலுக்கு காவலுக்கு போறேனு எழுப்பி சொல்லிட்டு போனேன்.

அங்க போன பொறவு தான் எனக்கு விசயம் தெரியுது.

பாரேன்,பெத்த பொண்ணு எங்கையோ ஒரு நாட்டுல படிக்குது,இங்க ஆயி அப்பன் ரெண்டு பேரும் செத்து போயாச்சி.

மகளுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்,பெரிய டாக்டரா மவள் ஆவணும்னு எத்தனை ஆசையோட, கனவுகளோட இருவரும் இருந்துருப்பாங்களென்று சொல்லி சங்கர் கண் கலங்கினார்.

மூவருக்கும் இறந்தவர்களுக்காக வேதனை படுவதை தவிற வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ஆர்கலிக்கோ,தனது கணவனை பார்க்கணும் போல இருந்தது.

மாமா ஒரு போன் போட்டு விசாரிக்கலாமா என்க, இரு புள்ள
அங்க என்ன சூழல்னு தெரியலை.

அய்யா போயிட்டு போன் போடுறேனு சொன்னாங்க.செத்த பொறுத்து பாக்கலாம் என்றவர்,அப்படியே தனது கால்களை நீட்டி அந்த திண்ணையிலே படுத்துவிட்டார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
505
பொள்ளாச்சியிலிருந்து கிளம்பியவர்கள்,அனுராதபுரம் ஏர்போர்ட்டிற்கு வந்து சேர காலை 8 மணியானது.

வசுவின் உடல்நிலையை காரணம் காட்டி வர வேண்டாமென்க அதெல்லாம் ஒன்னும் இல்லை.
நானும் வருவேனென்று பிடிவாதமாக வர,ஒரு பக்கம் அவரின் உடல்நிலை பற்றியும் கவலைபடாமல் இருக்க முடியவில்லை.

செக்கிங் முடித்து வெளியே வந்தவர்கள்,ஏர்போர்ட்டில் இருந்த வாடகை காரில் ஏறியவர்கள் களுத்துறைக்கு வந்து சேர மதியம் 12 மணியானது.

வீடு இருக்கும் தெருவிற்குள் நுழையும் போதே சிம்ஹன் தம்பதிக்கு,மனசு ஏனோ பட படப்பாக இருந்தது.

வீட்டின் முன்பு வந்து கார் நிற்க,எதுக்கு இவ்வளவு கூட்டமென்றவாறு இறங்கினர்.

இவர்களை பார்த்து அங்கிருந்த தெரிந்தவர்களெல்லாரும் தலையசைத்தனர்.

என்ன நடக்குதென்றவாறு இவர்கள் உள்ளே சென்று பார்க்க,அங்கே தம்பதிகள் இருவரும் மாலை போட்டு கண்ணாடி பேழைக்குள் இருப்பதை பார்த்த சிம்ஹன் தம்பதியினர் அதிர்ந்தனர்.

கிரி,அண்ணாயென்று சுந்தரபாண்டியன் தாத்தாவும் சைலஜா பாட்டியும் இருவரின் தோளை தொட அய்யோ போச்சே என கதறியவாறு உள்ளே போனார்கள்.

மகளையும் மருமகனையும் பார்த்து அழுத அழுகையில் கிரிஜா பாட்டி மயங்க,நல்லவேளை தெரிந்த டாக்டர் ஒருவர் அங்கிருக்க,அவருக்கு ஊசியை போட்டு உள்ளே இருந்த ரூமில் படுக்க வைத்தனர்.

ருத்ரனின் அம்மாவோ நேற்றிலிருந்து அந்த வீட்டை எத்தனை முறை ஆராய்ந்து பார்த்தாரென்று அவருக்கே தெரியவில்லை.

சிறிது நேரம் சுந்தர் பாடியின் அருகில் நின்று அண்ணா அண்ணா என்று அழுவதும்,பின்னர் எழுந்து போய் ஒவ்வொரு அறையிலும் என்ன இருப்பதென்று பார்பதையும் வேலையாக வைத்திருந்தார்.

தனாவோ தனது தங்கையும் மைத்துனரும் இறந்ததை நினைத்து, உடைந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்துவிட்டார்.

நேரமும் கடந்து சென்றது.

ஆதிரா மட்டும் இன்னும் வரவில்லை.

மாலை ஆறு மணிக்கு வாசலில் வந்து கார் நிற்க,வாடி என்றவாறு தனது தோழியை அழைத்துக்கொண்டு ரியா உள்ளே வர,ஆதிராவை பார்த்து அங்கிருந்தவர்கள் அழுதனர்.

பேபிமாயென்று ஓடிப்போய் ஆதிராவை கட்டிக்கொண்டு ஆலீஸ் அழ பொம்மை போல வந்தவளோ தனது அப்பா-அம்மா இருவரையும் இமைக்காமல் பார்த்து நின்றாள்.

இருவரையும் பார்த்து ரியாவும் கதறி அழுதாள்.

மேலும் ஒரு மணி கடந்து சென்றது.

போஸ்ட்மார்டம் செய்த பாடியை ரொம்ப நேரம் வைத்திருக்க முடியாது என்பதால்,பாடியை அன்றே எடுக்க ஒரு பக்கம் ஏற்பாடு நடந்தது.

சடங்கு சம்பிரதாயம் முடிந்து சுந்தர்- மேகலா தம்பதியின் உடல்களை, அங்கிருந்து மின்மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

இதோ நாட்கள் ஒரு வாரம் ஓடி விட்டது.

ஆனால் ஆதிராவோ இதுவரை ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை.

அவளை பார்க்க பார்க்க ரியாவிற்கு வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பயம் வந்தது.

பதினோராம் நாள் காரியம் வைத்துக்கொள்வதென்று முடிவு பண்ணியிருந்தனர்.

அதைப்போல் அந்நாளும் வர செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து அந்த காரியமும் முடிந்தது.

அடுத்து என்ன செய்வதென்று யோசனையோடு அனைவரும் ஹாலில் உட்கார்ந்து பேசியபடி இருந்தனர்.

இந்த பதினோரு நாட்களாக தன்னவளை தூரத்தில் இருந்தே பார்த்து வேதனை பட்ட ரஞ்ஜன் பிறகு ஒரு முடிவோடு ஆதிராவின் அறையை நோக்கி சென்றான்.

ஒரு நொடி தயங்கியவன் பின்னர் கதவை தட்ட ரியா வந்து கதவை திறந்தாள்.

அவள் எங்கேமா என கேட்க உள்ளே தான் அண்ணா இருக்காளென்று வழியை விட்டு நிற்க ம்ம் என்று உள்ளே போனான்.

அமைதியாக ஆதிராவின் அருகில் போய் நிற்க அவளோ ஜன்னல் வழியாக தூரத்து பறவைகளை பார்த்தவாறு இருந்தாள்.

அண்ணா என்று ரியா தயங்க, சொல்லுமா என்றான்.அவளை எப்படியாவது அழ வைங்கணா.

இப்படியே இருந்தால் அவள் மனநிலைக்கு நல்லதில்லையென்று வருத்தமாக சொல்ல,நான் பார்த்துக்குறேனென்று ரஞ்ஜன் சொல்லியதும் எதுவும் பேசாமல் ரியா அங்கிருந்து வெளியேறினாள்.

ரியா மட்டும் கீழே வருவதை பார்த்த தேவி,அட ஆண்டவா..அந்த பையனுக்கு ஆதிரா ரூம்ல என்ன வேலை?
எங்கண்ணன் உயிரோட இல்லைனா எவன் வேண்டுமானாலும் உள்ளே போவதா என்றவாறு எழுந்து மாடிக்கு செல்ல போக,இவ்வளவு தான் உங்களுக்கு மரியாதையென்னும் ருத்ரனின் குரல் கேட்டதும்,ஆணி அடித்த போல அதே இடத்தில் நின்றார்.

தயவு செய்து இந்த பொம்பளையை கூப்பிட்டு போங்களென்று தனாவை பார்த்து கோவமாக சொல்ல,என்ன கண்ணா...

அம்மாவை போய் இப்படி பேசுற?

அத்தை இறந்த கவலையில் இப்படிலாமா சொல்வதென்று விஷாலாதேவி மகனிடம் வந்து கேட்க,நான் கொலைகாரனா ஆகுவதற்கு முன்னால் மரியாதையா இங்கிருந்து போய்டுங்களென்றான்.

மகனின் வார்த்தை பயத்தை கொடுத்தாலும்,அது எப்படி நான் சும்மா இருக்க முடியுமா?.

என் வீட்டுக்கு வரப்போற மருமவளான,என் அண்ணன் பொண்ணின் ரூமிற்குள் யாரோ ஒருத்தன் போறான் இது என்ன அநியாம் என்க...

விஷாலாதேவிஇஇஇஇ என்னும் சிம்ஹன் தாத்தாவின் கர்ஜனையில், நீங்களே நியாயத்தை சொல்லுங்க மாமா?

என் அண்ணன் உயிரோட இல்லை அப்போ என் அண்ணனோட மகள் என் பொறுப்பு தானே என்றார்.

வேகமாக எழுந்து வந்த தனா மனைவியின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தவர்,இன்னொரு வார்த்தை உன் வாய்ல இருந்து வந்தது,உன் ஃபோட்டோவும் அங்க தொங்குமென்க, அனைவருக்கும் முன்பு வாங்கிய அடியால் தேவிக்கு பெருத்த அவமானமாகிவிட்டது.

அந்த லேடி கிட்ட சொல்லி வைங்க, ரஞ்ஜனுக்கும்-பாப்புக்கும் ஏற்கனவே கல்யாணம் பேசி முடிவாகிவிட்டது.
இது என்னோட அத்தை-மாமா முழு மனதாக எடுத்த முடிவு.

அது மட்டும் இல்லாமல் எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருஷம் ஆகுது.இன்னும் சில நாளில் என் பொண்டாட்டிக்கு குழந்தையும் பிறக்க போகுது.

இதற்கு பின்னர் வேற யார் கூடயாது என்னை சேர்த்து கல்யாண பேச்சு இந்த லேடி எடுத்தாங்க,அடுத்து நான் என்ன பண்ணுவேனென்று எனக்கு தெரியாது என்றவாறு அங்கிருந்து வெளியே சென்றான்.

ஏன் மாமா உங்க பேரனுக்கு பைத்தியம் எதாவது பிடிச்சிருக்கா?.

போயும் போயும் ஒரு அனாதையை இவன் பொண்டாட்டினு சொல்லிட்டு இருக்கான். பத்து பைசாவிற்கு அவளால் புண்ணியமிருக்கா? அவளே நல்ல வழியில் பிறந்திருந்தால் ஆசிரமத்தில் ஏன் வளரப்போறாளென்கும் போது...

ஷட் டப் யுவர் மவுத் என்னும் வசுவின் குரலில்,ஒரு நொடி பயத்தில் தேவி ஆடி தான் போனார்.

இனி ஒரு வார்த்தை ஆர்கலியை பற்றி தப்பா பேசுனீங்க,இருக்குற அத்தனை கேஸையும் உங்கள் மேல போட சொல்லி சாகுற வரை வெளிய வரமுடியாமல் பண்ணிடுவேனென்றார்.

உள்ளுக்குள் பயம் இருந்தாலும் சிறிது தைரியத்தை வர வைத்துக்கொண்ட தேவி,ஹேய் என்னமா வசுந்தரா,என்கிட்ட என்ன பூச்சாண்டி காட்டுறாயா?.

அந்த பிச்சாக்காரியை சொன்னால் உனக்கு ஏன் இப்படி கோவம் வருது என்கும் போது,நிறுத்துமா என்னும் குரல் வாசல் பக்கமிருந்து கேட்டது.

சதூர்வேதமங்கலம்:

டெலிவரிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்க,ஏனோ ஆர்கலியின் உள்ளுக்குள் ஒருவித பயம் வந்தது.

டெலிவரிக்குள்ளே ருத்ரன் வந்துவிடனுமென்று மனதிற்குள் நினைக்க தவறவில்லை.

இந்த பதினோரு நாட்களை கடப்பதற்குள் அவள் பாதி ஓய்ந்து போனாள்.

மேலும் மூன்று நாள் ஓடியது.

புதன் கிழமை விடியலும் அழகாய் தொடங்கியது...

ஏனோ காலையிலிருந்தே,ஆர்கலிக்கு அடி வயிறு லேசாக வலிப்பது போலவே இருந்தது.

நேரம் செல்ல செல்ல வலியும் தொடர, பாட்டி வயிறு வலிக்குதென்க ஏற்கெனவே ஹாஸ்பிட்டல் போவதற்காக எல்லாத்தையும் தயாராக எடுத்து வைத்திருந்தவர் போனை எடுத்து சங்கருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லி வைத்தார்.

அதற்குள் சாமியை கும்பிட்டவர், பேத்தியின் நெற்றியில் விபூதி, குங்குமத்தை பூசி விட்டு இதோ உன் அண்ணன் வண்டி எடுத்து வரான்.

நாம போய்டலாம் கண்ணு என்கும் போது,கருப்பாயியும்,சங்கரும் வீட்டிற்குள் வந்தனர்.

பின்னர் நால்வரும் காரில் ஏறி,சிறிது நிமிடத்தில் பாண்டியன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

டாக்டர் நாகேஸ்வரியும் ஆர்கலியின் வயிற்றை செக் பண்ணி பார்த்தவர்,இது டெலிவரி பெயின் தான் என்றவர்,இன்று மாலைக்குள் டெலிவரி ஆகிவிடும் என்றவர், அங்கிருந்த நர்ஸிடம் அட்மிஷன் போட்டுருங்களென்றார்.

நேரமும் கடக்க ஆர்கலிக்கு வலியும் விட்டு விட்டு வந்தது.பல்லை கடித்தவாறு அந்த நீண்ட வராண்டாவில் நடந்து கொண்டிருந்தவள் எண்ணமெல்லாம், ருத்ரனின் மேலே இருந்தது.

கடவுளே அந்த மனுஷனை பார்க்கணும் போல மனசு இப்படி தவிக்குதே?

ஏன் எனக்கு இப்படி இருக்கு?

அவன் எவ்வளவு கேவலமான வார்த்தைகளால் நம்மை காயப்படுத்தினான்.இருந்தாலும் அவனை தானே இந்த பாவி மனசு தேடுது..ஏன் எனக்கு இப்படி இருக்கென்று ஆர்கலி புலம்ப...

அவளின் மனசாட்சியோ நீ ருத்ரனை காதலிக்கிறடி என்றது.

ஹேய் நீ வேற கடுப்பேத்திட்டு இருக்காதே.அவன் மேல இந்த லவ் கிவ்வுலாம் எனக்கு வராது என்றாள்.

அடியேய் அடி முட்டாள்,உண்மையை சொன்னாலும் நீ ஏத்துக்க மாட்டாய்.இது தான் உன் கிட்ட இருக்கும் பெரிய பிரச்சினை..

மேலும் இரண்டு மணி நேரம் கடந்திருக்க,ஆர்கலிக்கு வலியும் இன்னும் அதிகமாக,அவளை டெலிவரி ரூமிற்கு அழைத்து செல்ல,தயார் பண்ணினார்.

ஹாஸ்பிட்டலில் குடுத்த டிரஸை பார்க்கவே அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

அவளின் நீண்ட பின்னல்களை, இரண்டாக பிரித்து பின்னி முடிச்சு போட்டு விட்டு,ஆர்கலியின் கையிலிருந்த வளையல்களை கழட்டி கருப்பாயிடம் அங்கிருந்த சிஸ்டர் கொடுத்தார்.

மனம் மட்டும் ருத்ரன் ருத்ரனென்று சொல்ல மறக்கவில்லை.

எல்லா நகையையும் கழட்டி கொடுக்க, மீதம் இருந்தது ருத்ரன் முதன் முதலில் சர்சில் போட்ட ஜெயின் மட்டும் தான்.

மேடம் இதையும் கழட்டுங்களென்று நர்ஸ் சொல்ல,இது மட்டும் வேண்டாமே என்று மறுத்தாள்.

பின்னர் ஒரு வழியாக பேசி அவளையே கழுத்தில் இருந்ததை கழட்டி கொடுக்க சொல்ல கண்ணிலிருந்து நீர் வழிய மனமேயில்லாமல் அதை கழட்டி கொடுத்தாள்.

டெலிவரி ரூமிற்குள் எல்லாம் தயாராக இருக்கின்றதா என்பதை செக் பண்ணிய டாக்டர் நாகேஸ்வரி அங்கிருந்த நர்ஸ் ரோஜாவிடம் பேஷண்டை கூப்பிட்டு வாங்கள் என்றார்.

ரோஜாவும் ஆர்கலி இருக்கும் ரூமிற்கு வந்தவள்,வாங்க போகலாமென்க, கண்ணில் நீரோடு மூவரையும் பார்த்தவாறே ஆர்கலி செல்ல...
பாட்டியோ பேத்தியின் கன்னத்தை கிள்ளி,பயப்படாமல் போடா ஆரா கண்ணு என்றார்.

டெலிவரி ரூமிற்குள் சென்ற சில நிமிடங்களுக்கு பின்னர் ஆர்கலிக்கு மேலும் வலி வர,அவள் கத்துவது, வெளியே இருந்த மூவருக்கும் கேட்டது.

நேரமும் கடந்து செல்ல,கத்தலும் அதிகமாக,கடவுளே தாயும் புள்ளையையும் நல்லபடியா பிரித்து எடுத்துடுப்பாயென்று மூவரும் வேண்டியபடி இருக்க,பெரிய அலறல் சத்தத்தோடு,வீல் வீல் என்கும் குழந்தைகளின் சத்தமும் கேட்க,மாமாயென்றவாறு ருத்ரனும் அங்கு வந்து சேர்ந்தான்.

ருத்ரனை பார்த்து மூவருக்கும் ஆனந்த அதிர்ச்சியாக,பாட்டியோ, கண்ணு நீ எப்படிய்யா இங்குயென்று அதிர்வு மாறாமல் கேட்டார்.

ஆர்கலியில் விழுந்தேன்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top