• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
503
ராமேஸ்வரம்:

அனைவரும் தயாராகி கோவிலுக்கு சென்றவர்கள்,அங்கிருந்த தீர்த்தக் குளத்தில் எல்லாம் தலையில் தண்ணீர் தெளித்து விட்டு,சாமியை தரிசனம் பண்ணி விட்டு வெளியே வர காலை 11:30 மணியானது.

காலை சாப்பாடும் யாரும் சாப்பிடவில்லை என்பதால், நேரடியாக மதிய சாப்பாட்டை சாப்பிடலாம் என்று ஹோட்டலுக்கு சென்றவர்கள்,அவரவருக்கு தேவையானதை ஆர்டர் பண்ணி சாப்பிட்டு முடித்தனர்.

பின்னர்,அங்கிருந்து மற்ற இடங்களை சுற்றி பார்த்து முடித்து மீண்டும் ரூமிற்கு வர,இரவு ஏழு மணியானது.

மற்றவர்கள் டிராவலர் வேனின் உள்ளேயே இருக்க,ஆண்கள் மூன்று பேர் மட்டும் ரூமை வெக்கேட் பண்ணி விட்டு,எல்லார் லக்கேஜையும் எடுத்துக்கொண்டு வந்தனர்.

வேனும் அங்கிருந்து கன்னியாகுமரியை நோக்கி புறப்பட்டது.போற வழியிலே இரவு உணவையும் சாப்பிட்டு முடித்தனர்.

அங்கே இங்கே என்று சுற்றிப் பார்த்தது டயர்டாக இருக்க, எல்லாருமே அசதியின் காரணமாய், சீட்டில் உட்கார்ந்த சில நிமிடத்திலே தூங்கிவிட்டனர்.

வேன் டிரைவரோடு சங்கரும் ருத்ரனும் பேசிக்கொண்டே வர,அந்த இரவு நேர பயணம் ருத்ரனுக்கு புதுவித அனுபவமாகவும்,மனதிற்கு அமைதியாகவும் இருந்தது.

அவ்வப்பொழுது மனைவியை எட்டி பார்க்கவும் ருத்ரன் தவறவில்லை.

அப்படி தான் பேசிக்கொண்டே ருத்ரன் திரும்பி ஆர்கலியை பார்க்க,அவள் அவனை முறைப்பது தெரிந்தது.

எதுக்கு நம்மளை பார்த்து இப்படி முறைக்கிறாளென்று ருத்ரன் யோசிக்க,ஆர்கலியோ தனது தலையசைத்து இங்கே வா என்று கூப்பிடுவது தெரிந்தது.

நம்மள தான் கூப்பிடறாளா?.இல்லை கனவு ஏதாவது காணுறோமா என்று தனது கண்களை துடைத்து விட்டு ருத்ரன் பார்க்க,உன்ன தான் என்று விரலை நீட்டி ஆர்கலி சொல்வது ருத்ரனுக்கு தெரிய,எழுந்து போய் அவள் அருகே இருக்கும் சீட்டை பிடித்து நின்றான்.

என்ன வேண்டுதலையா என்றாள்?

அவள் பேசுவது புரியாததால் என்ன சொல்லுற என்க,இடது கையை சீட்டின் பக்கம் காட்டி உட்கார சொன்னாள்.

டேய் நம்ம பொண்டாட்டி பக்கத்தில் உட்கார சொல்லுறாடா என்று குஷியாக,சிரித்தபடியே ஆர்கலியை உரசியவாறு உட்கார,ஏன் என் மூஞ்சில் எதாவது வித்யாசமாக உனக்கு தெரிகிறதா?என்றாள்.

இல்லையே,நீ "நல்லா கியூட்டா பப்ளி போல அழகா தான் இருக்கடி" என்றான்.

ம்ம் என்று வெளியே முறைத்தவள், மனதிற்குள் கணவன் சொன்னதை வெகுவாய் ரசித்தாள்.

பின்ன என் தலையில் எதாவது உட்கார்ந்திருக்கா என்க,ஹேய் ஆர் யு ஓகே பேபி?

உனக்கு ஒன்னும் இல்லையே?,என ருத்ரன் குழப்பமாக கேட்டான்.

பல்லை கடித்தவள்,நான் நல்லா தான் இருக்கேன்.எதுக்கு அங்க இருந்து கிட்டு என்னமோ பட்டிகாட்டான் பஞ்சுமிட்டாய பார்க்குறது போல உத்து உத்து பார்த்துட்டு இருந்த என்றாள்.

ஓஓஓஓ...!!

நாம பார்த்ததுக்கு தான் இந்த கிராஸ் கொஸ்டீனோ என முணு முணுத்தவன்,இப்போ பாருடி என தனக்குள் சொல்லியவன்,உன்னை யாரு பார்தாங்க?

பின்னாடி வரும் வண்டிங்களை, கண்ணாடி வழியாக பார்த்தேன். உடனே உன்னை பார்ப்பதாக உனக்கு நினைப்போ?

புருஷனை பார்க்க ஆசை இருந்தால்,நீ நல்லா ரசித்து பாருடி. நான் எதுவும் சொல்ல மாட்டேன்.

ஆமா நான் கண்ணாடி பக்கம் தான் பார்த்தேன்.அப்போ நீ தான் என்னையே பார்த்துட்டு வர,ஓஓஓஹோன்னானாம்!!

நீ தாராளமா சைட் அடி டி செல்லகுட்டி!

உன் புருஷன் ஸ்மார்ட் தான் என்று தனது தாடியை தடவி விட்டு,ஒரு பக்கம் மீசையை முறுக்கி காட்டி சொல்ல,ஆர்கலிக்கோ ருத்ரனின் வார்த்தையை கேட்டு ஒன்னும் சொல்ல முடியவில்லை.

நாம இவனை கேள்வி கேட்க வந்தால், இவன் நம்மளை மடக்குறானே என முழித்தவள், ஒன்னும் சொல்லாமல் ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டாள்..

மனைவியை பார்த்தவன்"இந்த ருத்ரன் கிட்டயேவாடி என் கியூட் பொண்டாட்டி"என நினைத்தவன், அவள் பக்கமாய் சாய்ந்து,நீ சைட் அடி டி நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் என்றவன்,பட்டென்று அவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை குடுத்து விட்டு,வேகமாக எழுந்து முன்னே போய் உட்கார்ந்து கொண்டான்.

ஆர்கலியோ அவன் செயலில் முறைக்க,அங்கிருந்து கண்ணடித்தவனை கண்டவள்,இம்சைக்காரனென்று சொல்லி கண்ணை மூடிக்கொண்டாள்.

நள்ளிரவில் கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தனர்.நேரமும் கடக்க அதிகாலையில் உதயமாகும் ஆதவனை கண்டு ரசித்தவர்கள், பின்னர் இங்கையும் புக் பண்ணிய ரூமிற்கு சென்று ப்ரஷாகி விட்டு, மற்ற இடங்களை சுற்றி பார்த்து விட்டு ஊரை நோக்கி கிளம்பியவர்கள்,
அதிகாலையில் சதூர்வேதமங்கலத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

வாங்க நம்ப வீட்டில் தூங்கிட்டு நல்லா விடிந்த பின்னர் போகலாமென்று கண்ணன் தம்பதியினர் சொல்ல,பரவாயில்லையென்று அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

இரண்டு இரவு தூங்காமல் கண்விழித்ததால் பெட்டில் படுத்த உடனே ருத்ரன் தூங்கி விட்டான்.

காலை உணவு நேரம் தாண்டியும் ருத்ரன் எழல…

ஒருவாரு தூங்கி எழுந்தவன் மணியை பார்க்க,மதிய உணவிற்கான நேரமென்று காட்டியது.

ஓஓ காட்!!

இவ்வளவு நேரம் தூங்கிட்டோமாயென்று எழுந்தவன் ப்ரஷாகி வெளியே வர,ஹாலில் இருந்த தேவகி ருத்ரனை பார்த்தவர், வா ருத்ரா சாப்பாடு எடுத்து வைக்குறேன் என்க,"சரிங்க ஆன்டி".

"அங்கிள் எங்கே? என்றவாறு சாப்பிட உட்கார,வயலுக்கு போயிருக்காரு பா என்றபடியே அவனுக்கு பரிமாறினார்"

பொள்ளாச்சி:

"செக்கப்பிற்கு அனாதை போல தனியா போய்ட்டு வருவேன்.ஒவ்வொரு முறை ஹாஸ்பிட்டலுக்கு போகும் போதெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா சத்தியென்று வசு சொல்லி அழ...

என்னை மன்னிச்சிடு தாராயென்று வசுந்தராவின் காலில் விழுந்தார் சத்தியமூர்த்தி.

இதை சிறிதும் எதிர் பார்க்காத வசு, சத்தி என்ன பண்ணுறயென்று பதறி எழ சத்தியமா எனக்கு எதுவும் நினைவு இல்லை தாரா மா!!

உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய பாவியை உன் கையாலே தயவு செய்து கொன்னுடு.

அப்போவாது உன் மனசு அமைதியாகுமென்று சத்தியமூர்த்தி அழுதவாறு சொல்ல,உனக்கு என்ன பைத்தியமா??

முதல்ல எந்திரி சத்தி,பட்டென்று என்னால் குனிஞ்சி தூக்க முடியாது, இப்போ தான் தையல் பிரிச்சிருக்கென்று வசு பதறி சொல்ல,என்னை மன்னிச்சிடு தாரா..

உனக்கு எவ்வளவு பெரிய கொடுமை பண்ணியிருக்கேன்.

ஆனால் இந்த விஷயங்களெல்லாம் எனக்கு சுத்தமா இத்தனை வருஷத்தில் நினைவு வரலைமா.

தேவ்ராஜை ஹைதராபாத் ல மீட் பண்ணும் போது கூட உன்னை பற்றி பேசினோம்.

அவன் கிட்ட நடந்த விபத்தை பற்றி சொன்னேன்.அப்போ உனக்கு கல்யாணம் ஆகிட்டாடானு என்னை கேட்டான் தாரா.

நான் இல்லைனு சொன்னேன். என்றைக்கு இருந்தாலும் தாரா மட்டும் தான் என் பொண்டாட்டினு என்க..

வசுக்கும் அன்று தேவ்ராஜ் கால் பண்ணிய நாள் நினைவிற்கு வந்தது.

அப்போ சத்தியை பற்றி சொல்ல தான் தேவா எனக்கு கால் பண்ணினானா என்க,என்னாஆஆ!!

தாரா நீ என்ன சொல்லுறமா?.

தேவா உன்கிட்ட பேசினானா என்று சத்தியமூர்த்தி கேட்க,ஆமா சத்தி. ஆர்கலி காணாமல் போன அன்னைக்கு தான் எனக்கு கால் வந்துச்சி என்றார்.

பேசிட்டு இருக்கும் போது திடீர்னு கட்டாகிடிச்சி என்க,சரி மா சரி..

தாரா நம்ப குழந்தையென்று கை கூப்பி கேட்க,ஆர்கலி சத்தியமூர்த்தி!

இப்போதைக்கு ஒரு ஸ்கூல்ல டீச்சரா இருக்கிறாள் என்கும் மனைவியை, இறுக்கி அணைத்து கதறி அழுதார்.

முதல் முறையாக தன்னவனின் அணைப்பு.அதும் நினைவு இருக்கும் போது என்பதை கண்ட வசுக்கு,அந்த வயதிலிலும் வெட்கம் வராமலில்லை.

சிறிது நிமிடம் சென்று அழாத சத்தியென்ற வசு,கணவரின் தோளில் தட்டி சொல்ல,அப்பா-அம்மா உயிரோட இருக்கும் போது,நம்ப குழந்தைக்கு இந்த நிலையா??..

ஆண்டவா???

நான் யாருக்கு என்ன தீங்குப்பா செய்தேன்.

எந்நேரமும் உன்னை தானே கூப்பிடுவேன்.ஏன் இப்படி ஒர் சோதனை எனக்கென்று சத்தியமூர்த்தி கதறினார்.

"சத்தி போதும் அழாத"

"வா வெளியே போகலாமென்க", அப்பொழுது தான் மற்றவர்கள் இருப்பது நினைவுக்கு வர,தன் முகத்தை துடைத்துக் கொண்ட இருவரும்,கதவை திறந்து ஹாலிற்கு வர,வீட்டை சுத்தி பார்த்தவர்களும் அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தனர்.

வள்ளியும் கிச்சனிற்கு சென்று மதியம் சாப்பாடு ரெடியாகிவிட்டதா என்று பார்க்க,அங்கே எல்லாம் தயாராக இருந்தது.

வள்ளி நீ சாப்பாடு குடுத்துடு.இலையும் கந்தனை விட்டு அறுத்துட்டு வந்தாச்சி.

நாங்க ரெண்டு பேரும் கிளம்புறோம். சாயங்காலமாக வரோமென்று சொல்ல,அக்கா சாப்பிட்டு போங்கக்கா என்க,அட நம்ப ஊடு தானே வள்ளி.

எப்போ வேணாலும் சாப்டா போதும்.நீ வந்தவர்களை கவனி போ என்றவாறு, சமையல் செய்த இரண்டு பெண்களும் அங்கிருந்து இன்னொரு கதவு வழியாக வெளியே சென்றார்கள்.

அண்ணா சாப்பாடு குடுத்திடலாமென்று வள்ளி சொல்லும் போது சைரன் சத்தத்தோடு போலீஸ் ஜீப்பும்,இன்னொரு கார் ஒன்றும் அந்த பங்களாவின் பார்க்கிங்கில் வந்து நிற்க...

என்னணா நம்ப வீட்டில் போலீஸ் வண்டி சத்தம் என்கும் போது,இரு வள்ளி நான் போய் பார்க்கிறேனென்று சத்தியமூர்த்தி சொல்ல,நான்கு போலீஸும்,இன்னும் இரண்டு அதிகாரிகளும் உள்ளே வந்தவர்கள்,அங்கிருந்த வசுவை பார்த்து சல்யூட் அடித்தார்கள்.

வெல்கம் மேம் நான் கோவை கமிஷ்னர் திவாகரன் என்றவாறு பொக்கேவை கொடுத்தார்.மேடம் நீங்க அடுத்த வாரம் தான் டூட்டியில் ஜாயின் பண்ணுறதாக இருந்தது. ஆனாலென்று அவர் சொல்ல வர..

லேசாக சிரித்த வசுந்தரா,ஆமாம். இவங்க என்னோட ஹஸ்பண்ட்.இது எங்க வீடு தானென்று சத்தியமூர்த்தியை காட்டி சொல்ல, சார்,மேடம் உங்க வொய்பா என்று அதிர்ந்தார்.

ஆமாம் சார்,ஏன் நம்ப முடியலையாயென்று சத்தியமூர்த்தி சொல்லி சிரிக்க,அய்யோ சார்.இவ்வளவு நாளாக நான் உங்களை பிரம்மசாரி என்று நினைச்சிட்டு இருக்கேனென்று சொல்ல...

ஹாஹாஹா என்று சிரித்தவர்,எனக்கு ஒரு பொண்ணு இருக்கு.அவங்களுக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறக்க போறாங்களென்று சொன்னார்.

சரி வாங்க சாப்பிடலாமென்க, இருக்கட்டுமென்று சொல்லியவர்கள், சிறிது நேரம் வசுவோடு பேசியிருந்து விட்டு சென்று விட,மற்றவர்களை சாப்பிட அழைத்து போன வள்ளி, அனைவருக்கும் பரிமாற,நீயும் வாமா என்றார்கள்.

இன்னைக்கு சஷ்டி விரதம்.தங்கச்சி எதுவும் சாப்பிடாதென்றார் சத்தியமூர்த்தி..!!
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
503
சதூர்வேதமங்கலம்:

வரைந்த டிசைன்களை நண்பர்கள் இருவரின் மெயிலிற்கு அனுப்பியவன்,ஹப்பாடா என்று சோபாவில் சாய்ந்து,தனது கழுத்தை இரு பக்கமும் திருப்பி நெட்டி முறித்து மணியை பார்க்க,மாலை 5 மணி என்று காட்டியது.

சரி,பொண்டாட்டி புள்ளை என்ன பண்ணுறாங்களென்று பார்த்துட்டு வருவோமென்று சொல்லியவன், தேவகியிடம் சொல்லிவிட்டு ஆர்கலி வீட்டை நோக்கி போனான்.

அவன் நடந்து செல்லும் போதே" சிறு சிறு தூறல்கள் விழ ஆரம்பித்தது"

வேகமாக நடந்து போய் முன் கேட்டை திறந்து உள்ளே போக,மழையும் பொழிய தொடங்கியது.

என்ன பாட்டி நல்லா ரெஸ்ட் எடுத்தீங்களாயென கேட்டுக் கொண்டே உள்ளே வந்து சேரில் உட்கார்ந்தவன் எங்க இவளென்று? வீட்டை சுற்றி பார்க்க,ஆர்கலி அங்கு இருப்பது போல் தெரியவில்லை.

உன்னால தான் கண்ணு அந்த ஈஸ்வரனை பார்க்கும் பாக்கியம் இந்த கிழவிக்கு கிடைத்தது என்று சொல்லியவாறு டீயை கொண்டு வந்து பாட்டி நீட்ட,நீங்க குடிக்கலையா?என்றான்.

இதோ குடிக்கிறேன் கண்ணு என்றவர்,அவருக்கும் டீயை எடுத்து வந்து,அவனுக்கு எதிரில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டு குடித்தார்.

கோயிலுக்கெல்லாம் நாம நினைத்ததும் போய்விட முடியாது. கடவுள் நம்மை அழைத்தால் மட்டும் தான் போக முடியும் கண்ணு. விதி மண்ணுக்குள்ள போற காலத்தில் பாக்கணுமென்று எழுதியிருக்கு போல என பாட்டி சொல்ல,ஏன் பாட்டி இப்படி பேசுறீங்க?.

இன்னும் எத்தனையோ வருஷம் நோய் நொடியில்லாமல் நீங்க நல்லா இருப்பீங்க என்றவன்,எங்கே பாட்டி இவள்?,ஆளை காணும் என்க..

பக்கத்துல இலங்கை அகதி முகாம் இருக்கே,அங்க தான் போயிருக்காங்க.மாசத்தில் ஒரு முறை இலங்கையில் இருக்கும் பொருளையெல்லாம் எடுத்துட்டு ஒரு பையன் வந்து முகாமில் கடை போடுவான்.

சிலர் நைட்டி கேட்டாங்க,அதுக்கு தான் துணி வாங்க போயிருக்காங்க கருப்பாயியும்,ஆராவும் என்றார்.

ஓஓஓ என்றவன்,மழைவேற வந்துடுச்சி.இந்த வயிற்றை தூக்கி கிட்ட எவன் இவளை போக சொன்னான்?என மனதிற்குள் திட்டியபடி இருக்க,அந்நேரம் வாசலில் ஆட்டே வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

எழுந்து போய் பார்க்க,ஆர்கலியும், கருப்பாயியும் ஆளுக்கொரு குடையோடு இறங்கி வருவது தெரிந்தது.

பின்னர் சேரில் போய் எதுவும் தெரியாதது போல உட்கார்ந்து கொண்டான்.

ருத்ரனின் செருப்பை வைத்தே அவன் உள்ளே இருப்பதை புரிந்து கொண்டவள்,இந்த மனுஷன் எப்போ வந்தாரென்று தெரியவில்லையே என மனதில் நினைத்தவாறு வீட்டின் உள்ளே போனாள்.

ஆனால் ருத்ரனோ அவளை கண்டுக்காமல் போனில் எதையோ பார்த்தபடியே இருந்தான்.

இருவரும் வாங்கிய பொருட்களை பாட்டியிடம் காட்டினர்.துணியை எடுத்து பார்த்த பாட்டி நல்லா இருக்கு கண்ணு.

இந்த துணியில வடநாட்டுக்கார பொம்பளைங்க போட்டுக்குற போல, பாவாடை சட்டை தைத்தால் நல்லா இருக்குமென்று பாட்டி சொல்ல, காக்ரா சோலியை தான் பாட்டி சொல்கிறார் என்பது ஆர்கலிக்கு புரிந்தது.

ருத்ரனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு அறைக்குள் சென்று வேறு உடையை மாற்றி வெளியே வர, அவனோ ஃபோன் தான் உலகமென்று இருந்தான்.

நேரமும் கடந்து செல்ல மழை லேசாக தூறியபடி இருப்பது தெரிந்து,நான் வரேன் பாட்டியென்றவாறு அங்கிருந்து சென்றுவிட்டான்.

இரவு உணவை சாப்பிட்டு அவரவர் அறையில் படுத்திருந்த ருத்ரன்-ஆர்கலி இருவருக்கும், தன்னுடைய இணையை பற்றி யோசனையாக இருந்தது.

எவ்வளவு கொழுப்பு இவளுக்கு?

ஏன் அவசியம் இவள் அங்கு போயாகணுமா?

மழை நேரத்தில் எதாவது ஆனால் என்ன செய்வது?

"கொஞ்சம் கூட இவளுக்கு பயமே இல்லை".

ருத்ரா பொறுமையா இருந்தது போதும் டா.நீ இங்கு எதற்கு வந்தாய் என்பதை மறந்து விட்டாய் போலடா.

இந்நேரம் அங்க இரத்தினகிரியில் இருக்க வேண்டியது.நீ என்னவென்றால் வெட்டி பயல் போல இங்கே சுத்திட்டு இருக்க.

ஏண்டா இத்தனை வருஷத்தில் இவ்வளவு ஃப்ரியா நீ இருந்திருக்கியா?என தனக்குள் கேள்விகளை கேட்டவன்,இந்த தாத்தா-பாட்டி என்னவென்றால் திடீர்னு பொள்ளாச்சிக்கு போறேனென்று கிளம்பி போய்ட்டாங்கள்.

அங்க யாரு இருக்கா?

என்ன விஷயமென்று நமக்கு ஒன்னும் சொல்லவில்லை.

எப்போ வருவாங்களென்று பார்த்தால், சாவகாசமா ரெண்டு நாள் தங்கிட்டு வரோமென்று சொல்லி,இதோ மூன்று நாள் ஆகிவிட்டது.இன்னும் ஊருக்குள் வந்தபாடில்லை.

இப்படியே அமைதியாக இருந்தால்,டெலிவரியும் ஆகிடும்.

பிறகு அவள் நார்மலாக இன்னும் நாள் போகும்.கடைசியில் ஒரு வருஷம் இப்படியே போக என் பொண்டாட்டியும் இங்க இருந்து வரமாட்டாள்...

இந்த கிரியும்-சிங்கமும் விருந்து முடிச்சிட்டு பொறுமையாகவே வந்து சேரட்டும்.

நாம ஆர்கலியோடு இங்கிருந்து நாளைக்கு கிளம்பிட வேண்டியது தான் என்கும் போது,ருத்ரனின் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.

பெட்டிற்கு அருகில் உள்ள டேபிளின் மேல் இருக்கும் ஃபோனை எடுத்து பார்க்க,ஆதுவிடமிருந்து தான் கால் வந்தது.

அட்டென் பண்ணியவன் சொல்லுடா மாடா என்க,அங்கு சொல்லபட்ட செய்தியில் பதறி அடித்து எழுந்தான்.

ஆது நீ என்னடா சொல்லுற என்க, ஆமாடா.சித்தப்பா ஸ்பாட்லே இறந்துட்டாங்க.

சித்தி பற்றி எதுவும் தெரியலை என்று அழுது கொண்டே ஆது சொல்ல, ருத்ரனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட,மறு வார்த்தை பேச முடியவில்லை.

ஏய் வீர் வீர் என ஆது அந்த பக்கமிருந்து கத்த,நான் உடனே வரேனென்று மட்டும் சொல்லி விட்டு போனை வைத்தவன்,இலங்கைக்கு ஃப்ளைட் டிக்கெட் செக் பண்ண, திருச்சியில் இருந்து இன்னும் நான்கு மணி நேரத்தில் புறப்படும் விமானத்தில் டிக்கெட் இருப்பது தெரிந்து,உடனே அந்த ஃப்ளைட்டில் டிக்கெட்டை புக் பண்ணினான்.

பின்னர் கதவை திறந்து வெளியே போனவன்,கண்ணன்- தேவகி அறைக்கு முன்பு போய் கதவை தட்ட, சில நொடியில் தேவகி வந்து கதவை திறந்தவர்,ருத்ரனை முகத்தை பார்த்து விட்டு என்னாச்சி ருத்ரா என்று பதற, ருத்ரனால் எதுவும் பேச முடியாமல் அழுகை மட்டுமே வந்தது.

பொள்ளாச்சி:

சாப்பிட்டு முடித்து ஹாலில் உட்கார்ந்திருக்க,சத்தியமூர்த்தியே பேச்சை தொடங்கினார்.

முதலில் நீங்க எல்லாரும் என்னை மன்னிக்கணுமென்று எழுந்து நின்று இரு கையை கூப்பி சொல்ல,ஏன் பா இப்படியென்று மற்றவர்கள் பதறினர்.

வசுவோட நிலமைக்கு தெரிந்தும், தெரியாமல் நான் தான் முழு காரணம்.
அந்த செந்தூரன் மேல ஆணையாக இந்த நிமிடம் வரை,என் மனைவி தாரா சொல்லிய விஷயங்கள் எனக்கு நினைவில்லை.

இருந்தும் என் மனைவி எந்த நிலமையிலும் பொய் சொல்ல மாட்டாள் என்பது தெரியும்.

இதுவரை நடந்ததை என்னால் சரி பண்ண முடியாது.ஆனால்,இதன் பின்னர் என் மனைவியாக,இந்த வீட்டின் மகாராணியாக வசுந்தரா இங்கு இருப்பது தான் அவளுக்கு கௌரவம்.

நீங்கள் எல்லாரும் யோசித்து முடிவை சொல்லணுமென்று சத்தியமூர்த்தி சொல்லி விட்டு,மனைவியை பார்க்க, வசுந்தராவின் கண்கள் கலங்குவது தெரிந்தது.

அந்நேரம் சொந்த பந்தங்கள், தெரிந்தவர்களென்று வசு வந்த விஷயம் கேள்வி பட்டு அங்கு வர, வந்தவர்களின் அன்பு மழையில் வசுவின் குடும்பத்தார் திக்குமுக்காடி போனார்கள்.

கோதண்டமோ தங்கச்சிமா,ஒரு நாளைக்காவது உன்னை பற்றி பேசாமல் இருக்க மாட்டான் உன் புருஷன்.

பாரு, இத்தனை வருஷமாக கேட்டு கேட்டு என் காதில் இருக்கும் ரத்தமே சுண்டி போயிடுச்சி என்க, அதைக்கேட்டவர்கள் சத்தமாக சிரித்து விட்டனர்.

ஊருக்குள் எல்லாருக்கும் சத்தியமூர்த்தி-வசுந்தரா பற்றி தான் பேச்சாக இருந்தது.

என்ன கம்பீரமா இருக்காங்க அந்த பொண்ணுகாரி.நம்ப ஊரு கலெக்குட்டராமே என பாட்டி ஒருவர் சொல்ல,புள்ளை குட்டி எதாவது இருக்காமா?என்றார் இன்னொரு பாட்டி.

இருக்காண்டி செல்லாயி.

ஒரே ஒரு பொட்ட புள்ளையாம் என்றார்.

இத்தனை வருஷம் கழித்து தான் அந்த ஊட்டுக்கு மருமவள் வரணுமென்று விதி இருக்கு போல..

நம்ப கருப்பணும் அவர் மவளை இந்த தம்பிக்கு கட்டி வைக்க நடையா நடந்தாரு,அந்த பெரிய கவுண்டரு கராரா சொல்லிபுட்டாரு. என் ஊட்டு மருமொவள்னா அது அந்த புள்ளணு தான்னு.

மூர்த்தி தம்பியையும் மடக்க எவ்வளவோ வழி பண்ணி பார்த்து,கடைசியில் இது நடப்பது சாத்தியமில்லை என்பது தெரிந்து தான் அவினாசி பக்கம் மவளை அந்த ஆளு கட்டி குடுத்தாருனா பாரேன்.

எப்படியோ குடும்பமா இருந்தா நல்லது தான்.என்ன அந்த வள்ளி பொண்ணு தான்,இத்தனை காலம் ஆகியும் ஒத்த புள்ளையா நிக்கிது.

அது தலையில இந்த காளியாத்தா என்னத்தை எழுதியிருக்காளோ அது அவளுக்கு தான் வெளிச்சம் என்று பாட்டிகள் இருவரும் பேசிக்கொண்டனர்.

சரி வாங்க எல்லாரும் ரெஸ்ட் எணுங்களென்று வள்ளி சொல்ல, இல்லமா நாங்க ஊருக்கு கிளம்புறோமென்றார் சிம்ஹன் தாத்தா.

அட என்ன மாமா நீங்க இப்படி சொல்லுறீங்க?.

அண்ணி ஊட்டுக்கு வந்ததால் நாளைக்கு கோயில்ல விஷேச பூஜைக்கு சொல்லியாச்சி.

சொந்த பந்தங்க எல்லாருக்கும் நம்ப வீட்டில் விருந்து உண்டு.நீங்கள் என்னவென்றால் போறனு நிக்குறீங்க.

அண்ணி கூட நீங்களும் இங்க இருந்தால் தானே அவங்களுக்கும் சங்கடம் இல்லாம இருக்குமென்று சொல்ல,அதுவும் அவர்களுக்கு சரியென்று பட்டது.

இல்ல மா வள்ளி.நாங்க போட்டுக்க துணிலாம் ஒன்னும் கொண்டுவரலை என கிரிஜா பாட்டி சொல்ல,அட இவ்வளவு தானா அத்தை,நம்ப கடையே கோயம்புத்தூர்ல இருக்கு.

வேண்டியதை வர வச்சிடலாமென்க, மற்றவர்களுக்கு சரியென்பதை தவிற மறுப்பு சொல்லமுடியவில்லை.

அப்பொழுது மாமா மாமா என்று அங்கு வந்த கோபி,இவங்க தான் அத்தையா என்க,ஆமாடா என்றார் சத்தியமூர்த்தி.

இவன் உனக்கு அண்ணன் பையன் தாரா.வெற்றி வேற கோபி வேறு இல்லை என்க,வாங்கத்தை..
நல்லா இருக்கீங்களா என்க,நல்லா இருக்கேன் கண்ணா என்றார் வசுந்தரா.

அதைப்போல் மறுநாள் கோயில் பூஜை,சொந்த பந்தங்களுக்கெல்லாம் விருந்து வைத்து அமர்களப்படுத்த, வந்தவர்களுக்கு மனைவியின் கையாலே துணியை குடுக்க வைக்க, வசு வீட்டினருக்கு மகள் வாழ வந்த இடத்தின் பெருமையை கண்டு வாயடைத்து போயினர்.

வந்தவர்களெல்லாரும் சத்தியமூர்த்தியின் குடும்பத்தினரை புகழ்ந்து பேசி சென்றனர்.

இவைகளையெல்லாம் வீடியோவில் பார்த்த வெற்றிக்கு,சந்தோஷத்தில் கண்ணீர் பெறுக்கெடுத்து ஓடியது.

தனது அப்பாவின் முகத்தில் உள்ள சந்தோஷத்தை கண்டவன்,என்றும் இந்த சந்தோஷம் எங்கப்பாவோடு இருக்கனுமென்று வேண்டியவன், பின்னர் கடமையில் மூழ்கினான்.

இரண்டு நாள் ஓடி விட்டது.

வா வசு நம்ப மருமகளை பார்த்துட்டு வரலாமென்று சத்தியமூர்த்தி கூப்பிட,ம்ம் போகலாங்க.

அதற்கென்று சும்மாவா போவது என்றவர்,கோபியிடம் என்னென்ன வேண்டுமென்று சொல்ல,இதோ ஒரு மணி நேரத்தில் வந்துடுறேனத்தை என்றவாறு அங்கிருந்து சென்றான்.

இதுவரை இருந்த கலெக்டர் வசுந்தரா சுந்தரபாண்டியனாகிய தங்கள் மகள், இந்த இரண்டு நாட்களில் ஜமீன் மருமகளாய் மாறி அதற்கு ஏற்ற போல நடந்து கொள்வதை கண்டு, பெற்றோர்களுக்கும்,வசுவின் அன்பான அண்ணனிற்கும் பூரிப்பு தாங்கவில்லை.

அவர்களும் வசு-சத்தியமூர்த்தி இருவரும் இந்த குடும்பத்தில் ஒற்றுமையாக,இதே மகிழ்ச்சியோடு வாழணுமென்று மனதார வாழ்த்தினர்.

ஆர்கலியில் விழுந்தேன்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top