Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 503
- Thread Author
- #1
ராமேஸ்வரம்:
அனைவரும் தயாராகி கோவிலுக்கு சென்றவர்கள்,அங்கிருந்த தீர்த்தக் குளத்தில் எல்லாம் தலையில் தண்ணீர் தெளித்து விட்டு,சாமியை தரிசனம் பண்ணி விட்டு வெளியே வர காலை 11:30 மணியானது.
காலை சாப்பாடும் யாரும் சாப்பிடவில்லை என்பதால், நேரடியாக மதிய சாப்பாட்டை சாப்பிடலாம் என்று ஹோட்டலுக்கு சென்றவர்கள்,அவரவருக்கு தேவையானதை ஆர்டர் பண்ணி சாப்பிட்டு முடித்தனர்.
பின்னர்,அங்கிருந்து மற்ற இடங்களை சுற்றி பார்த்து முடித்து மீண்டும் ரூமிற்கு வர,இரவு ஏழு மணியானது.
மற்றவர்கள் டிராவலர் வேனின் உள்ளேயே இருக்க,ஆண்கள் மூன்று பேர் மட்டும் ரூமை வெக்கேட் பண்ணி விட்டு,எல்லார் லக்கேஜையும் எடுத்துக்கொண்டு வந்தனர்.
வேனும் அங்கிருந்து கன்னியாகுமரியை நோக்கி புறப்பட்டது.போற வழியிலே இரவு உணவையும் சாப்பிட்டு முடித்தனர்.
அங்கே இங்கே என்று சுற்றிப் பார்த்தது டயர்டாக இருக்க, எல்லாருமே அசதியின் காரணமாய், சீட்டில் உட்கார்ந்த சில நிமிடத்திலே தூங்கிவிட்டனர்.
வேன் டிரைவரோடு சங்கரும் ருத்ரனும் பேசிக்கொண்டே வர,அந்த இரவு நேர பயணம் ருத்ரனுக்கு புதுவித அனுபவமாகவும்,மனதிற்கு அமைதியாகவும் இருந்தது.
அவ்வப்பொழுது மனைவியை எட்டி பார்க்கவும் ருத்ரன் தவறவில்லை.
அப்படி தான் பேசிக்கொண்டே ருத்ரன் திரும்பி ஆர்கலியை பார்க்க,அவள் அவனை முறைப்பது தெரிந்தது.
எதுக்கு நம்மளை பார்த்து இப்படி முறைக்கிறாளென்று ருத்ரன் யோசிக்க,ஆர்கலியோ தனது தலையசைத்து இங்கே வா என்று கூப்பிடுவது தெரிந்தது.
நம்மள தான் கூப்பிடறாளா?.இல்லை கனவு ஏதாவது காணுறோமா என்று தனது கண்களை துடைத்து விட்டு ருத்ரன் பார்க்க,உன்ன தான் என்று விரலை நீட்டி ஆர்கலி சொல்வது ருத்ரனுக்கு தெரிய,எழுந்து போய் அவள் அருகே இருக்கும் சீட்டை பிடித்து நின்றான்.
என்ன வேண்டுதலையா என்றாள்?
அவள் பேசுவது புரியாததால் என்ன சொல்லுற என்க,இடது கையை சீட்டின் பக்கம் காட்டி உட்கார சொன்னாள்.
டேய் நம்ம பொண்டாட்டி பக்கத்தில் உட்கார சொல்லுறாடா என்று குஷியாக,சிரித்தபடியே ஆர்கலியை உரசியவாறு உட்கார,ஏன் என் மூஞ்சில் எதாவது வித்யாசமாக உனக்கு தெரிகிறதா?என்றாள்.
இல்லையே,நீ "நல்லா கியூட்டா பப்ளி போல அழகா தான் இருக்கடி" என்றான்.
ம்ம் என்று வெளியே முறைத்தவள், மனதிற்குள் கணவன் சொன்னதை வெகுவாய் ரசித்தாள்.
பின்ன என் தலையில் எதாவது உட்கார்ந்திருக்கா என்க,ஹேய் ஆர் யு ஓகே பேபி?
உனக்கு ஒன்னும் இல்லையே?,என ருத்ரன் குழப்பமாக கேட்டான்.
பல்லை கடித்தவள்,நான் நல்லா தான் இருக்கேன்.எதுக்கு அங்க இருந்து கிட்டு என்னமோ பட்டிகாட்டான் பஞ்சுமிட்டாய பார்க்குறது போல உத்து உத்து பார்த்துட்டு இருந்த என்றாள்.
ஓஓஓஓ...!!
நாம பார்த்ததுக்கு தான் இந்த கிராஸ் கொஸ்டீனோ என முணு முணுத்தவன்,இப்போ பாருடி என தனக்குள் சொல்லியவன்,உன்னை யாரு பார்தாங்க?
பின்னாடி வரும் வண்டிங்களை, கண்ணாடி வழியாக பார்த்தேன். உடனே உன்னை பார்ப்பதாக உனக்கு நினைப்போ?
புருஷனை பார்க்க ஆசை இருந்தால்,நீ நல்லா ரசித்து பாருடி. நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
ஆமா நான் கண்ணாடி பக்கம் தான் பார்த்தேன்.அப்போ நீ தான் என்னையே பார்த்துட்டு வர,ஓஓஓஹோன்னானாம்!!
நீ தாராளமா சைட் அடி டி செல்லகுட்டி!
உன் புருஷன் ஸ்மார்ட் தான் என்று தனது தாடியை தடவி விட்டு,ஒரு பக்கம் மீசையை முறுக்கி காட்டி சொல்ல,ஆர்கலிக்கோ ருத்ரனின் வார்த்தையை கேட்டு ஒன்னும் சொல்ல முடியவில்லை.
நாம இவனை கேள்வி கேட்க வந்தால், இவன் நம்மளை மடக்குறானே என முழித்தவள், ஒன்னும் சொல்லாமல் ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டாள்..
மனைவியை பார்த்தவன்"இந்த ருத்ரன் கிட்டயேவாடி என் கியூட் பொண்டாட்டி"என நினைத்தவன், அவள் பக்கமாய் சாய்ந்து,நீ சைட் அடி டி நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் என்றவன்,பட்டென்று அவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை குடுத்து விட்டு,வேகமாக எழுந்து முன்னே போய் உட்கார்ந்து கொண்டான்.
ஆர்கலியோ அவன் செயலில் முறைக்க,அங்கிருந்து கண்ணடித்தவனை கண்டவள்,இம்சைக்காரனென்று சொல்லி கண்ணை மூடிக்கொண்டாள்.
நள்ளிரவில் கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தனர்.நேரமும் கடக்க அதிகாலையில் உதயமாகும் ஆதவனை கண்டு ரசித்தவர்கள், பின்னர் இங்கையும் புக் பண்ணிய ரூமிற்கு சென்று ப்ரஷாகி விட்டு, மற்ற இடங்களை சுற்றி பார்த்து விட்டு ஊரை நோக்கி கிளம்பியவர்கள்,
அதிகாலையில் சதூர்வேதமங்கலத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
வாங்க நம்ப வீட்டில் தூங்கிட்டு நல்லா விடிந்த பின்னர் போகலாமென்று கண்ணன் தம்பதியினர் சொல்ல,பரவாயில்லையென்று அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
இரண்டு இரவு தூங்காமல் கண்விழித்ததால் பெட்டில் படுத்த உடனே ருத்ரன் தூங்கி விட்டான்.
காலை உணவு நேரம் தாண்டியும் ருத்ரன் எழல…
ஒருவாரு தூங்கி எழுந்தவன் மணியை பார்க்க,மதிய உணவிற்கான நேரமென்று காட்டியது.
ஓஓ காட்!!
இவ்வளவு நேரம் தூங்கிட்டோமாயென்று எழுந்தவன் ப்ரஷாகி வெளியே வர,ஹாலில் இருந்த தேவகி ருத்ரனை பார்த்தவர், வா ருத்ரா சாப்பாடு எடுத்து வைக்குறேன் என்க,"சரிங்க ஆன்டி".
"அங்கிள் எங்கே? என்றவாறு சாப்பிட உட்கார,வயலுக்கு போயிருக்காரு பா என்றபடியே அவனுக்கு பரிமாறினார்"
பொள்ளாச்சி:
"செக்கப்பிற்கு அனாதை போல தனியா போய்ட்டு வருவேன்.ஒவ்வொரு முறை ஹாஸ்பிட்டலுக்கு போகும் போதெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா சத்தியென்று வசு சொல்லி அழ...
என்னை மன்னிச்சிடு தாராயென்று வசுந்தராவின் காலில் விழுந்தார் சத்தியமூர்த்தி.
இதை சிறிதும் எதிர் பார்க்காத வசு, சத்தி என்ன பண்ணுறயென்று பதறி எழ சத்தியமா எனக்கு எதுவும் நினைவு இல்லை தாரா மா!!
உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய பாவியை உன் கையாலே தயவு செய்து கொன்னுடு.
அப்போவாது உன் மனசு அமைதியாகுமென்று சத்தியமூர்த்தி அழுதவாறு சொல்ல,உனக்கு என்ன பைத்தியமா??
முதல்ல எந்திரி சத்தி,பட்டென்று என்னால் குனிஞ்சி தூக்க முடியாது, இப்போ தான் தையல் பிரிச்சிருக்கென்று வசு பதறி சொல்ல,என்னை மன்னிச்சிடு தாரா..
உனக்கு எவ்வளவு பெரிய கொடுமை பண்ணியிருக்கேன்.
ஆனால் இந்த விஷயங்களெல்லாம் எனக்கு சுத்தமா இத்தனை வருஷத்தில் நினைவு வரலைமா.
தேவ்ராஜை ஹைதராபாத் ல மீட் பண்ணும் போது கூட உன்னை பற்றி பேசினோம்.
அவன் கிட்ட நடந்த விபத்தை பற்றி சொன்னேன்.அப்போ உனக்கு கல்யாணம் ஆகிட்டாடானு என்னை கேட்டான் தாரா.
நான் இல்லைனு சொன்னேன். என்றைக்கு இருந்தாலும் தாரா மட்டும் தான் என் பொண்டாட்டினு என்க..
வசுக்கும் அன்று தேவ்ராஜ் கால் பண்ணிய நாள் நினைவிற்கு வந்தது.
அப்போ சத்தியை பற்றி சொல்ல தான் தேவா எனக்கு கால் பண்ணினானா என்க,என்னாஆஆ!!
தாரா நீ என்ன சொல்லுறமா?.
தேவா உன்கிட்ட பேசினானா என்று சத்தியமூர்த்தி கேட்க,ஆமா சத்தி. ஆர்கலி காணாமல் போன அன்னைக்கு தான் எனக்கு கால் வந்துச்சி என்றார்.
பேசிட்டு இருக்கும் போது திடீர்னு கட்டாகிடிச்சி என்க,சரி மா சரி..
தாரா நம்ப குழந்தையென்று கை கூப்பி கேட்க,ஆர்கலி சத்தியமூர்த்தி!
இப்போதைக்கு ஒரு ஸ்கூல்ல டீச்சரா இருக்கிறாள் என்கும் மனைவியை, இறுக்கி அணைத்து கதறி அழுதார்.
முதல் முறையாக தன்னவனின் அணைப்பு.அதும் நினைவு இருக்கும் போது என்பதை கண்ட வசுக்கு,அந்த வயதிலிலும் வெட்கம் வராமலில்லை.
சிறிது நிமிடம் சென்று அழாத சத்தியென்ற வசு,கணவரின் தோளில் தட்டி சொல்ல,அப்பா-அம்மா உயிரோட இருக்கும் போது,நம்ப குழந்தைக்கு இந்த நிலையா??..
ஆண்டவா???
நான் யாருக்கு என்ன தீங்குப்பா செய்தேன்.
எந்நேரமும் உன்னை தானே கூப்பிடுவேன்.ஏன் இப்படி ஒர் சோதனை எனக்கென்று சத்தியமூர்த்தி கதறினார்.
"சத்தி போதும் அழாத"
"வா வெளியே போகலாமென்க", அப்பொழுது தான் மற்றவர்கள் இருப்பது நினைவுக்கு வர,தன் முகத்தை துடைத்துக் கொண்ட இருவரும்,கதவை திறந்து ஹாலிற்கு வர,வீட்டை சுத்தி பார்த்தவர்களும் அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தனர்.
வள்ளியும் கிச்சனிற்கு சென்று மதியம் சாப்பாடு ரெடியாகிவிட்டதா என்று பார்க்க,அங்கே எல்லாம் தயாராக இருந்தது.
வள்ளி நீ சாப்பாடு குடுத்துடு.இலையும் கந்தனை விட்டு அறுத்துட்டு வந்தாச்சி.
நாங்க ரெண்டு பேரும் கிளம்புறோம். சாயங்காலமாக வரோமென்று சொல்ல,அக்கா சாப்பிட்டு போங்கக்கா என்க,அட நம்ப ஊடு தானே வள்ளி.
எப்போ வேணாலும் சாப்டா போதும்.நீ வந்தவர்களை கவனி போ என்றவாறு, சமையல் செய்த இரண்டு பெண்களும் அங்கிருந்து இன்னொரு கதவு வழியாக வெளியே சென்றார்கள்.
அண்ணா சாப்பாடு குடுத்திடலாமென்று வள்ளி சொல்லும் போது சைரன் சத்தத்தோடு போலீஸ் ஜீப்பும்,இன்னொரு கார் ஒன்றும் அந்த பங்களாவின் பார்க்கிங்கில் வந்து நிற்க...
என்னணா நம்ப வீட்டில் போலீஸ் வண்டி சத்தம் என்கும் போது,இரு வள்ளி நான் போய் பார்க்கிறேனென்று சத்தியமூர்த்தி சொல்ல,நான்கு போலீஸும்,இன்னும் இரண்டு அதிகாரிகளும் உள்ளே வந்தவர்கள்,அங்கிருந்த வசுவை பார்த்து சல்யூட் அடித்தார்கள்.
வெல்கம் மேம் நான் கோவை கமிஷ்னர் திவாகரன் என்றவாறு பொக்கேவை கொடுத்தார்.மேடம் நீங்க அடுத்த வாரம் தான் டூட்டியில் ஜாயின் பண்ணுறதாக இருந்தது. ஆனாலென்று அவர் சொல்ல வர..
லேசாக சிரித்த வசுந்தரா,ஆமாம். இவங்க என்னோட ஹஸ்பண்ட்.இது எங்க வீடு தானென்று சத்தியமூர்த்தியை காட்டி சொல்ல, சார்,மேடம் உங்க வொய்பா என்று அதிர்ந்தார்.
ஆமாம் சார்,ஏன் நம்ப முடியலையாயென்று சத்தியமூர்த்தி சொல்லி சிரிக்க,அய்யோ சார்.இவ்வளவு நாளாக நான் உங்களை பிரம்மசாரி என்று நினைச்சிட்டு இருக்கேனென்று சொல்ல...
ஹாஹாஹா என்று சிரித்தவர்,எனக்கு ஒரு பொண்ணு இருக்கு.அவங்களுக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறக்க போறாங்களென்று சொன்னார்.
சரி வாங்க சாப்பிடலாமென்க, இருக்கட்டுமென்று சொல்லியவர்கள், சிறிது நேரம் வசுவோடு பேசியிருந்து விட்டு சென்று விட,மற்றவர்களை சாப்பிட அழைத்து போன வள்ளி, அனைவருக்கும் பரிமாற,நீயும் வாமா என்றார்கள்.
இன்னைக்கு சஷ்டி விரதம்.தங்கச்சி எதுவும் சாப்பிடாதென்றார் சத்தியமூர்த்தி..!!