• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
471
சதூர்வேதமங்கலம்:

சைலஜா பாட்டி பிளாஷ்பேக்..

ஸ்கூல் லீவ் விட்டதால், என்னாலையும் அந்த பக்கம் போக முடியலை. இப்படியே இரண்டு வாரங்கள் போக, நாம ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து கோயிலுக்கு போயிருந்தோம்.

அப்போ, பிரசாதம் இருந்த பேகை எடுக்க நான் நம்ப கார் கிட்ட போயிருந்த போது, இவர் வந்து எதிர்ல நின்னாரு.

முதல்ல நான் கவனிக்கல. பேக் எடுத்த பிறகு, டோர் சாத்திட்டு பார்க்க, இவரு என்னையே முறைத்து பார்த்துட்டு இருந்தார்.

எதுக்கு இவர் இப்படி பார்க்கிறார் என்று நானும் யோசனையோடு பார்க்க, ஏண்டி ஒரு மனுஷன் இருக்கானா?, இல்லையான்னு தேடவே மாட்டியா என்று கேட்டார்.

அதை கேட்டவுடன் எனக்கு மனசுல பட்டாம்பூச்சி பறக்குவது போல இருந்துச்சி. சரி கொஞ்ச நேரம் விளையாடலான்னு முடிவு பண்ணினேன்.

உடனே சுதாரிச்சிக்கிட்டு,ரொம்ப வீரப்பா, ரோட்டில் வரவங்க போறவங்க எல்லாரையும் நான் ஏன் தேடணும்னு சொல்ல, ம்ம் உன் கழுத்துல மூணு முடிச்சு போட போறவனை, நீ தேட மாட்டியான்னு சொல்லிட்டு போயிட்டாரு.

அதன் பிறகு ஒரு ஆறு மாசம் நல்லா தான் போனது.

ஓர் நாள் நான் ஸ்கூலுக்கு போயிட்டு இருக்கும் போது,இவரு அந்த வழியில நின்னுட்டு இருந்தாரு.

என்னன்னு கேட்க,உன் கிட்ட கொஞ்சம் நான் பேசி ஆகணும்.இன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாம். லீவு எடுத்துக்கனு சொல்ல, இதுவரை அவர் இப்படி என்கிட்ட பேசினதில்லை என்பதால், நானும் ஸ்கூலுக்கு போய் லீவ் சொல்லி விட்டு நம்ப வராகி அம்மன் கோயிலுக்கு போயிருந்தோம்.

சிறிது நிமிடங்கள் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவர் அமைதியாக வானத்தை பார்த்து உட்கார்ந்திருக்க,"எனக்கும் பொறுமை கடந்து போயிடுச்சு"

"இப்படி விட்டத்தை பார்த்து உட்கார்ந்து இருக்க தான் என்னை வர சொன்னீங்களா என கோபமாக நான் கேட்க,உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணுமென்று சொன்னார்"

"ம்ம் இங்க தானே இருக்கேன் சொல்லுங்கணு சொன்னேன்"

"இன்றைக்கு காலை பதினோரு மணிக்கும் கிளம்பும் கப்பலில் நான் இந்தியா போறேன்"

"திரும்ப எப்போ வர முடியுமென்று சரியா சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பா உனக்காக நான் வருவேன். அதுவரைக்கும் காத்துக்கிட்டு இருக்க முடியுமா? அப்படின்னு அவர் கேட்டதும், எனக்கு பயங்கர ஷாக் ஆனது"

"என்ன சொல்றீங்கன்னு நான் பதற, ஆமாம் நான் உடனே போய் ஆகணும். இதை மட்டும் தான் திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருந்தாரு"

"எப்படி உங்களை பாக்காம என்னால இருக்க முடியும்?,எப்ப வருவீங்கன்னு தெரியாமல் இப்படி சொன்னா என்ன அர்த்தம் ?.

இதற்கு நடுவுல, எங்க வீட்ல இப்பயே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமா தெரியாதா? அப்படின்னு கேட்டு எனக்கு அழுகை வந்துடுச்சு.

உன் நிலைமை எனக்கு புரியுது. அதைவிட என் நிலைமை இப்போதைக்கு உன் கிட்ட சொல்ல முடியாது.ஒன்னே ஒன்னு தான் சொல்ல முடியும். இப்போதைக்கு நான் போய் ஆகணும் அப்படின்னு எந்திரிச்சுட்டார்.

நிச்சயமாக அவர் இல்லாத வாழ்க்கையை என்னால வாழ முடியாது. எப்படியும் உனக்கும் மாமாவுக்கும் கல்யாணம் நடக்கும் போது, எனக்கு மாப்பிள்ளை பார்த்து விடுவாங்களென்பது எனக்கு தெரியும்.

ஓர் நாள் அத்தையும் அப்பாவும் பேசிட்டு இருந்தாங்க, அதை நான் கேட்டேன்.

அப்போ,இவர் கிட்ட ஒன்னு சொன்னேன்.சரி தாராளமாக போங்க. ஆனால் ஒன்னே ஒன்னு பண்ணிட்டு போங்களென்று நான் கேட்க, என்ன சொல்லு பண்ணுறேன்னு சொன்னார்.

உங்கள் கூட என்னையும் கையோடு கூட்டிட்டு போங்களென்று நான் சொல்ல, ஏய் என்ன விளையாடுறியா அப்படின்னு கோவப்பட்டார்.

நான் உயிரோட இருக்கணும்னு நினைச்சீங்களென்றால் என்னை கூப்பிட்டு போங்க. இல்லை நீங்க இப்படியே போங்கன்னு நான் சொல்லிட்டு, கோயிலில் கண்ணை மூடி உட்கார்ந்துகொண்டேன்.

என்னால உன்னை கூட்டிட்டு போக முடியாதுன்னு சொல்லிட்டு, அவரு போயிட்டாரு.

நான் அழுதுட்டு அங்கையே இருந்தேன். அவர் போய் ஒரு மணி நேரம் ஆகிட்டு. அப்பொழுது, கப்பலுக்கு நேரம் ஆகிட்டு வா என கூப்பிட்டும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, இவர் முறைச்சிட்டு நின்றார்"

"பிறகு அவரோட இந்தியாக்கு வந்துட்டேன். அங்க வந்து மறாவது நாள் இவர் என்னை திருச்சூருக்கு கூப்பிட்டு போய், அவங்க அப்பா அம்மா கிட்ட என்ன சொன்னாரென்று தெரியவில்லை"

" மறுநாளே எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தாங்க. உங்களையெல்லாம் நினைச்சி வருத்தம் தான்"

"ஒரு வாரம் போக இவ்வளவு பெரிய சொத்துக்காரர், எதுக்கு அங்க வந்து பேக்கரில வேலை பார்த்தீங்கள் என்பதை கேட்டேன்."

"அதுக்கு பதில் உனக்கு நாளைக்கு தெரியுமென்று சொல்லிட்டாருக்கா".

"என்னவா இருக்குமென்று நானும் யோசிக்க எந்த ஐடியாவும் கிடைக்கலை. சரி நாளைக்கே தெரிஞ்சிக்கலானு தூங்கிட்டேன்".

"வழக்கம் போல எந்திரிச்சி ப்ரஷ் ஆகிட்டு இவர் எங்கே காணுமென்று தேட, உள்ளே இருந்து வந்தவரை பார்த்து அதிர்ச்சி தான் எனக்கு"

" போலீஸ் யுனிபார்மில் வந்தார் கா. ஏன் நீங்க போலீஸ்னு சொல்லலைனு சண்டை போட்டேன்.கேஸ் விஷயமா வந்தேன், அதை எப்படி சொல்ல முடியுமென்று கேட்டார். ஏற்கெனவே இந்த போலீஸ்காரர்களால் தான் சர்வானந்த் அண்ணனும், அண்ணியும் இறந்தாங்க"

"அதில் இருந்து நம்ப வீட்டில் யாருக்கும் போலீஸ்காரவங்களே புடிக்காது. இந்த விஷயத்தை சொன்னால் நீங்க ஒத்துக்கமாட்டீங்களென்று தான் நான் மறைச்சிட்டேன்"

"அதும் இல்லாமல், இவருக்கு நாம யாரென்றும் தெரியாது. பணக்கார வீட்டு பொண்ணு என்று தெரிந்தால் இவர் ஏத்துக்காமல் போய்டுவார்னு நானும் சொல்லவில்லை கா"

"மறாவது வருஷம் வசுவும் பிறந்தாள். வருஷமும் ஓடியது. காலேஜ் படிக்க சென்னையில் சேர்த்து விட்டார்"

"மூன்றாவது வருஷம் புராஜக்ட் பண்ண நார்துக்கு போறேனு வசு சொல்ல, நானும் நம்பிட்டேன்"

அங்க போய் சில மாதத்தில் வேலையும் கிடைச்சிடுச்சினு சொன்னாள். இப்படியே ரெண்டு வருஷம் போனது.

"மூனாவது வருஷம் தான் வசு கலெக்டராகிட்டாளென்றும், பீகார்ல போஸ்டிங். உனக்கு தெரிஞ்சால் விடமாட்டாயென்று நாங்க சொல்லவில்லைனு இவர் சொன்னாருக்கா"

எனக்கு பயங்கர கோவம். சண்டை போட்டேன். அங்க இருந்து ஏழாவது மாதம் இங்கே ஆந்திராவில் டிரான்ஸ்பர் ஆகிட்டுனு, மைக்கேலோடு வந்தாள்.

அதன் பிறகு நான் கல்யாண பேச்சு எடுக்க, ஒத்துக்கவே இல்லை. எவ்வளவோ போராடி பார்த்துட்டேன்.

"வருஷமும் ஓட, ஒத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ண முடியாத நிலையை எண்ணி உள்ளுக்குள்ளே மறுகி போக, பிறகு ஒரு நாள் வசு ரூமிற்கு போகும் போது தான் அவள் கழுத்தில் தாலி இருப்பதை பார்த்தேன் கா"

"இதோ வருஷம் ஓடிடுச்சி. இன்றைக்கு தான் அந்த தாலிக்கு சொந்தகாரரை பற்றி தெரிஞ்சிது. அது விஷயமா பேச கோயம்புத்தூருக்கு வர சொல்லுறாருகா என்றவர், மைக்கேலை பற்றியும் சைலஜா பாட்டி கண்ணீரோடு சொல்லி முடித்தார்"

இனி...

"இதுவரை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நிமிடம் அங்கே அமைதி தான் நிலவியது"

"மாமா என்ன எதுவுமே சொல்லாம அமைதியா இருக்கீங்க என, கிரிஜா பாட்டி தனது கணவரை பார்த்து கேட்க, யோசிச்சிட்டு இருக்கேன் கிரி"

"எதையும் நேரில் போய் தீர விசாரித்து தெரிந்து கொள்வது நல்லது தான் மா.இது பிசினஸ் இல்லை, சட்டுனு முடிவெடுக்க"

"வாழ்க்கை பிரச்சினை"

"நிதானமாக தான் ஆராய்ந்து உண்மைய தெரிந்து கொள்ளணும். இந்த பிரச்சினையை இங்கையே விடுங்க. இப்போ வெளியே போகலாம். கண்ணனும்-தேவகியும் வந்தாச்சி போல, பேச்சு குரல் கேட்குது"

"பங்ஷன் நல்லா முடிஞ்சுதா கண்ணா என்க, முடிஞ்சுதுங்க மாமா என்றவர், பின்னர் கபிலனை பார்த்துட்டு வந்ததை பற்றி சொல்லும் போது டிவியை ஆன் பண்ண, அதில் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் நடந்த பாம் விபத்தை பற்றி தலைப்பு செய்தி ஓடியது"

"இரவு உணவை பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க, சிம்ஹன் தாத்தா தான் பொள்ளாச்சிக்கு போகப்போகும் விஷயத்தை பற்றி சொல்ல, ருத்ரன் யோசனையானான்"

"அப்போ சீனு கிட்ட சொல்லிடுறேன் மாமா.இங்கேயிருந்து போக எப்படியும் நாலு இல்லை அஞ்சு மணி நேரம் ஆகலாம்"

"நல்லவேளை பைபாஸ் வந்ததால் திருச்சிக்கே ஒன்னரைல இருந்து ரெண்டு மணி நேரத்திற்குள் போய் சேர்ந்திடலாம்.அங்க இருந்து கணக்கு பண்ணினால்,எப்படியும் நாலு மணி நேர பயணத்தில் நீங்க பொள்ளாச்சி போய்விடுவீங்க”

"சரி கண்ணா, நீ சொல்ற போலவே போகலாம். அப்போ டிரைவர் கிட்ட காலை 5 மணிக்குலாம் வர சொல்லிடுப்பா என்க, சரி மாமா என்றவர், அதே போல டிரைவர் சீனுவுக்கும் போன் பண்ணி விஷயத்தை சொன்னார்"

"பின்னர் அவரவர் அறைக்குள் சென்று படுத்து விட்டனர். அறைக்குள் நடந்து கொண்டிருந்த ருத்ரனுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை"

"அப்படி என்ன விஷயத்துக்கு இந்த சிங்கம், திடீர்னு பொள்ளாச்சிக்கு போக பிளான் போட்டு இருக்கிறார்,நமக்கு தெரிஞ்சு பொள்ளாச்சியில் யாருமே இல்லையே என்று யோசனையானான்"

"சில நிமிடங்கள் நடந்து கொண்டிருந்தவன், நாம இங்க யோசித்து மண்டைய உருட்டுவதற்கு அவர்களிடமே சென்று கேட்டு விடலாம் என்று முடிவு செய்தவன், கதவை திறந்து கொண்டு பக்கத்தில் அறையில் இருக்கும் தாத்தா பாட்டியின் அறையின் முன்பு போய் நின்று கதவை தட்ட, சில நொடியில் கிரிஜா பாட்டி கதவை திறந்தார்"

"கடந்த மூன்று மாதமாக பேரனிடம் எந்த வார்த்தையும் பேசுவதில்லை என்பதால், பாட்டி அமைதியாக நிற்க, உள்ளே வந்தவன் என்ன திடீர்னு பொள்ளாச்சிக்கு விசிட்?

"அங்க தான் நமக்கு தெரிஞ்சவங்கள் யாருமேயில்லையே என்று தாத்தாவைப் பார்த்து கேட்க, ஒரு முக்கியமான விஷயத்துக்காக உன் சின்ன பாட்டி சைலு கூட நாங்க போறோம்"

இந்த கையை வைத்துக்கொண்டு நீ அங்க வந்து என்ன பண்ண போறாய்? அதனால நீ இங்கையே இரு. நாங்க எப்படியும் நாளைக்கு நைட்டுக்குள்ள வந்து விடுவோம் என்று சொன்னார் சிம்ஹன் தாத்தா

"ஓஓஓ என்றவன், இவங்கள் இருக்கும் போது,நாளைக்கு நம்ப திட்டத்தை எப்படி செயல்படுத்தனு யோசனையா இருந்தேன்.

நல்லவேளை ஆண்டவா, நீயே இதுக்கு வழியை காட்டினாயே என, உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
471
சென்னை- சிம்ஹன் கெஸ்ட் ஹவுஸ்:

"என்ன காதலி போன ஃபீலிங்கில் மனம் உடைந்து போய் கடலையே பார்த்துட்டு இருக்கீங்களாயென்று ஆத்திரத்தோடு கணவரிடம் தேவி கேட்க,அந்த குரலில் திரும்பியவர்,எதுவும் பதில் சொல்லாமல்,மீண்டும் கடல் அலையை வெறித்து பார்க்க ஆரம்பித்தார்"

"தனது கணவரின் இந்த உதாசினத்தை கண்ட விஷாலா தேவிக்கு மேலும் ஆத்திரம் கூடியது. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க தனா?.

பொண்டாட்டிக்காரி நான் இங்கு கல்லு போல இருக்கிறேன்.அது தெரிந்து அந்த பக்கம் பார்த்தால் என்ன அர்த்தம்?

நானும் மூனு மாதமா எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன்,நீங்க ஒன்னும் வழிக்கு வர போல தெரியல. இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்.

யார் கூட கூத்தடிக்கிறதுக்காக இங்க வந்து தங்கி இருக்கீங்க?சொல்லுங்க என்று கேட்க, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவருக்கு இப்பொழுது தேவியின் மீது கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.

பல்லை கடித்துக் கொண்டே எழுந்து வாசலுக்கு வந்தவர்,அங்கு நின்ற விஷாலா தேவியை பளார் பளாரென்று மாறி மாறி அறைந்து கீழே தள்ளினார்.

ராஸ்கல் யார் கிட்ட என்ன வார்த்தை பேசுற?

"குப்பத்தில் கிடந்த பிச்சைக்காரி த்தூஊஊ"

"இன்னொரு வார்த்தை இப்படி பேசினே உசுரோட கொளுத்திடுவேன்.என்ன டீசண்டா இருக்கிறான் இவன் என்ன பண்ணிடுவானு நினைச்சுட்டியா?.

உடம்புல உசுரு இருக்காது சொல்லிட்டேன்.உன்கிட்ட பேச பிடிக்காமல் கம்முனு இருந்தா, என்னமோ உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்குற.

என்ன கிழிஞ்ச துணியும்,ஓட்ட தட்டில் கஞ்சி குடிச்சது எல்லாம் மறந்துட்டியோ?சொல்லு மறந்துட்டியா.

நாயாவது நன்றி உள்ள ஜீவன். நீ அதை விட கேடுகெட்ட பன்னி. வசந்தியோட வாழ்க்கையை, இத்தனை வருஷமா வாழ்ந்துட்டு இருக்கியே வெட்கமா இல்லை, சொல்லு உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா?

போனது போய் தொலையட்டும். எனக்கு ஒரு விஷயம் சொல்லு. வசந்திக்கு நான் எழுதுன லெட்டர்,உனக்கு எப்படி கிடைத்தது என்று கேட்க,முழுசும் நனைஞ்சாச்சு இதுக்கு மேல நமக்கு எதுக்கு முக்காடு என்று உணர்ந்த விசாலா தேவி,நான் தான் கொடுக்கவில்லை என்று சொன்னார்.

"புரியல,விஷயத்தை தெளிவா சொல்லு என தனா கேட்க,அந்த கடைக்காரர் வசந்தி கிட்ட தான் லெட்டர் கொடுக்க சொல்லி என் கையில் கொடுத்தார்"

"அந்த லெட்டரில் என்ன இருக்கும்னு நான் படித்து பார்த்தேன்.அதுல உங்க கையெழுத்து இருந்தது.எனக்கு ரொம்ப புடிச்சி போயிடுச்சி"

"நீங்க அதில் பீச்சுக்கு வர சொல்லி எழுதி இருந்தீங்க.நான் வசந்தி கிட்ட சொல்லலாம் என்று தான் நினைச்சுட்டு போனேன்.ஆனா மனசு வேண்டான்னு சொல்லுச்சு"

"அதன் பிறகு தான்,நீங்க சொன்ன கலர்ல புடவை கட்டிக்கிட்டு பீச்சுக்கு நான் வந்தது.நீங்களும் நான் தான் அந்த டிசைன் பண்ணியதென்று நம்பி ஏமாந்துட்டீங்க என்று சொன்னார்"

" ஓஓஓ மாஸ்டர் பிளான் போட்டு இருக்க. சூப்பர் வெரி குட் வெரி குட் அடுத்து என்ன பிளான் போட்ட?,சரி வசந்திக்கு எப்படி அவனை மாப்பிள்ளையா பார்த்து,பேசி முடித்தாய் என்க...

"டெக்ஸ்டைல் விஷயமா சூரத்திற்கு போயிட்டு வரும் போது,அங்க தமிழ் பேசிய பட்டேல் கூட அறிமுகம் கிடைத்தது.தங்கச்சி தங்கச்சி என்று சில உதவி எல்லாம் பண்ணினான்"

"அப்பதான் அவனுக்கு பொண்ணு வேணும்னு கேட்டுட்டு இருக்கும் போது வசந்தி ஞாபகம் வந்துச்சு.எனக்கு வசந்தி இங்க இருந்தா என்னைக்காவது ஒரு நாள் எல்லாம் உண்மையை தெரிஞ்சிடும்"

"அதனால் தான் அவ்வளவு தூரத்தில் அவனுக்கு கட்டி வச்சேன்.கட்டி வைக்கும் போது தெரியும் கொஞ்சம் குடிகாரன் தானென்று.ஆனால் கஞ்சா அடிக்கிறவன் என்பது கல்யாணம் முடிச்ச பிறகு தான் எனக்கு தெரிஞ்சிது"

"சரி எப்படியும் திருந்திவிடுவானென்று நினைச்சுட்டு,ரெண்டு பேருக்கும் கொஞ்சம் பணத்தை கொடுத்து அங்க அனுப்பி வச்சேன்"

அதன் பிறகு ஆறு மாசம் கழிச்சு நம்ப ரெண்டு பேரும் பீச்சுக்கு வரும் போது, வசந்தி தற்கொலை பண்ணிக்க போறதை அங்க பார்த்தேன்.

நானும் அவகிட்ட கேட்டேன் எதுவுமே சொல்லவே இல்ல.பிறகு தானே வசந்தியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போனோமே என்று சொல்ல,உன் சுயநலத்துக்காக எத்தனை பேர் வாழ்க்கையை கெடுத்து இருக்க தெரியுமா?

உன்னை பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு.தயவு செய்து இங்கிருந்து நீ போயிடு.உனக்கு என்ன பணம் தானே வேணும்.

உன் செலவுக்கான பணம் வந்துவிடும்.ஆனால்,சாகுற வரைக்கும் புருஷன் என்கிற அந்த உரிமைக்காக என்கிட்ட வராதே.

ஓஓ காட் நான் மறந்துட்டேன்.உனக்கு தான் பணம் போதுமே,அப்புறம் புருஷன் எதுக்கு தேவைப்படுவான் என்றவர், ஏய் முதல்ல இங்க இருந்து போயிடு.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என்னை கொலைக்காரனா ஆக்கிடுவாய்.என் பையனோட வாழ்க்கை பற்றி நான் முடிவு எடுக்க வேண்டும் என்க..

அய்யோ!!

என்ன ஆச்சு என்னோட பையனுக்கு? என்று தேவி பதறி கேட்க,இனியும் என் பையன் வாழ்க்கையில் தெரிந்தோ இல்லை தெரியாமலோ நீ தலையிட்டாயென்றால்,இந்த காச கூட கொடுக்க மாட்டேன்.

திரும்ப அந்த குப்பத்தில் தான் போய் நீ பிச்சை எடுத்துட்டு இருக்கணும் ஞாபகம் வைத்துக்கொள் என்று சொல்ல,ராணி போல இத்தனை வருஷம் வாழ்ந்த விஷாலா தேவிக்கு இந்த வாழ்க்கையை இழக்க சரிதம் மனம் வரலை.

"எதுவும் பேசாமல் வந்த போலவே காரில் ஏறி சென்று விட்டார்"

சதூர்வேதமங்கலம்:

"முதியவர்கள் மூவரும் தயாராகி ஹாலில் உட்கார்ந்திருக்க,டிரைவர் சீனுவும் அங்கு வந்து சேர்ந்தார்.பின்னர் தேவகி அனைவருக்கும் காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தார்"

"குடித்து முடித்து விட்டு,இருவரிடமும் சொல்லிக் கொண்டு, பொள்ளாச்சியை நோக்கி காரில் பயணமானார்கள்"

"தூங்கி எழுந்த ருத்ரன்,ரெஸ்ட் ரூமிற்கு சென்று குளித்து வெளியே வந்தவன்,தனது டிராலியை திறந்து, போட்டுக்க வேண்டிய டிரஸை எடுத்தான்"

"ஒரு கையால் தனது வேலைகளை ருத்ரனுக்கு கஷ்டமாக தான் இருந்தது"

"ஏண்டா,உனக்கு இந்த வேலை?,உன் கோவத்தை அந்த அப்பாவி பீங்கான் கப்பின் மேலயா காட்டுவது"

"பாறையை உடைக்கலாம்,ஏன் இரும்பு ராடை வளைக்கலாம்,அதை விட்டு இப்படி காமெடி பண்ணியிருக்கியே என்று மனசாட்சி சிரிக்க,இந்த இடியட் வேறு காலையிலேயே வந்து உசுர வாங்குதே என முணவி கொண்டே டீ ஷர்ட்- ட்ராக் பேண்டை போட்டுக் கொண்டவன்,செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்"

"ருத்ரனை பார்த்த தேவிகா,தம்பி டீ இல்லை காஃபி குடிக்கிறீங்களா என்று கேட்க,எனக்கு பிளாக் காஃபி வேண்டும் ஆன்டி என்றவன், அங்கிருந்த சோபாவில் போய் உட்கார, கண்ணனும் தனது அறையிலிருந்து அங்கு வந்தார்"

குட் மார்னிங் அங்கிள் என்க,மார்னிங் ருத்ரா என்றவாறு சோபாவில் உட்கார்ந்தவர்,அப்பொழுது தான் அவனின் கையை ஐயோ தம்பி என்ன ஆச்சு?எப்படி இந்த கட்டு என்க, சின்னதா அடிபட்டிடுச்சு அங்கிள் என்றான்"

"பார்த்து வேலை பண்ணுறதில்லையா என்றவர், தேவகி என குரல் கொடுக்க,இதோ வந்துட்டேனென்று வந்தவர், ருத்ரனிடம் கப்பை நீட்ட,வாங்கி குடித்தவன்,மூவரும் கிளம்பியாச்சா என்க, ஹம் பா"

"எனக்கு தெரிந்து இவ்வளவு நேரத்திற்கு,அவங்க திருச்சி போயிருக்கணுமென்றார்"

"பின்னர் பிசினஸ் பற்றி இருவரும் பேச ஆரம்பிக்க,நேரம் போனதே அவர்களுக்கு தெரியவில்லை"

"இருவரையும் சாப்பிட வாங்களென்று தேவகி வந்து கூப்பிட", அதுக்குள்ளேவா என கண்ணன் கேட்க, கொஞ்சம் மணி என்ன ஆகுதென்று பாருங்க?

"பாவம் ருத்ரா காதுல இருந்து எவ்வளவு ரத்தம் வருதென்க,ஏய் என்னடி சொல்லுற?,ரத்தம் வருதா என கண்ணன் பதற,ருத்ரனும்,தேவகியும் சத்தமாக சிரித்து விட்டனர்"

"அவர்கள் சிரிப்பை கண்ட பிறகு தான்,மனைவி தன்னை கேலி பண்ணியிருக்காள் என்பது புரிந்து கண்ணன் முறைக்க,சரி வாங்க என்றவாறு டைனிங் ஹாலிற்கு செல்ல,இருவரும் தேவகியின் பின்னே எழுந்து சென்றனர்"

"சாப்பிட்டு முடித்தவன்,அக்ரிமெண்ட் டாக்குமெண்ட்ஸ் மற்றும் லேப்டாப்பையும் எடுத்தவன், இருவரிடமும் சொல்லிக்கொண்டு ஆர்கலியின் வீட்டிற்கு சென்றான்"

"போகும் வழியில் சிலர் அவனை பார்த்து சிரிக்க,அவனும் தலையசைத்து சிரித்தவாறே செல்ல, மனமோ அங்கே பாட்டி இருப்பார்களே? எப்படி இதைப்பற்றி அவளிடம் சொல்லி கையெழுத்து வாங்குவது? என்று ஒரு பக்கம் யோசனையாகவும் இருந்தது"

"சரி எப்படியாவது சமாளிக்க வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டவன்,இரும்பு கேட்டை திறந்து உள்ளே போய் காலிங் பெல்லை அழுத்தினான்"

"ஆனால் அங்கிருக்கும் கதவு தான் திறந்தபாடில்லை"

"மீண்டும் மீண்டும் பெல்லை அழுத்த, அப்பொழுதும் கதவு திறக்காமல் போக, என்னாச்சி?,என பதற்றம் வர, அப்பொழுது தம்பி,தம்பியென கூப்பிடும் சத்தம் கேட்டு வாசல் பக்கம் பார்க்க,எதிர் வீட்டில் இருக்கும் பெரியாச்சி அம்மா தான் அங்கே வந்து கொண்டிருந்தார்"

"சொல்லுங்கம்மா என்று ருத்ரன் கேட்க,ஆரா பொண்ணும், பெரியம்மாவும் ஹாஸ்பிடலுக்கு போய் இருக்காங்கப்பா என்க, என்னாச்சு மா? என ருத்ரன் பதறினான்"

"ஒன்னும் இல்லைப்பா. எப்போதும் வழக்கமாக போகும் செக்கப் தான்.நேற்று போக வேண்டியது.கால் ரொம்ப வீக்கமா இருக்க,நடக்க கஷ்டமா இருக்குன்னு சொல்லுச்சாம்,அதனால தான் இன்றைக்கு போகலாணு, கருப்பாயியும்,பெரியம்மாவும் ஆராமா கூட,கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஆட்டோவில் போனாங்களென்றார்"

"அவர் சொன்னதைக் கேட்டவன் சரிங்கமா என்று சொல்லி விட்டு, அங்கிருந்த திண்ணையில் போய் உட்கார,வாப்பா,அங்க நம்ம வீட்டுல வந்து உட்காரு என்று பெரியாச்சி கூப்பிட,சிரித்துக்கொண்டே பரவாயில்லைங்கம்மா"

இங்கே காற்று நல்லாதான் இருக்கு என்று உட்கார்ந்து கொண்டான். குடிக்க எதாவது வேண்டுமா தம்பி என்க,ஒன்னும் வேண்டாம்மா.

இப்பொழுது தான் நான் சாப்பிட்டு வரேனென்று ருத்ரன் சொல்ல,சரி தம்பியென அவர் அங்கிருந்து சென்றவர்.

முன் பின் அறிமுகமில்லை.ஆனாலும் நம்மகிட்ட எவ்வளவு உரிமையா,அன்பா பேசுறாங்கள்.

இதெல்லாம் நம் வாழ்க்கையில் இதுவரை நடந்ததில்லையே என உள்ளுக்குள் சொல்லியவன் லேப்டாப்பை உயிர்பித்து மெயிலுக்குள் செல்ல, ஏகப்பட்ட மெயில்கள் வந்து குமிந்திருந்தது"

"முக்கியமானதை மட்டும் முதலில் படித்து பதில் மெயில் அனுப்பும் போது,ரஞ்ஜனிடமிருந்து கால் வந்தது"

"அட்டென் பண்ணியவன்,சராமரியாக திட்ட,டேய் கூல்டா கூல்டா என்க, வந்தேன் வாயை உடைச்சிடுவேனென்று கத்தினான்"

"டேய்"

காரணத்தை சொல்லிட்டு திட்டு எருமை.இப்படி மொட்டையா திட்டினால் நான் என்ன நினைக்க என்க,ஓஓஓ,என்றவாறு கால் கட் ஆன சில நொடியிலே வீடியோ கால் வர, அட்டென் பண்ணியவன்,ஏண்டா,நம்ப ஷோரும்ல வேலை பார்க்கும் நீனாவிற்கு கால் பண்ணினாலும் புண்ணியம் உண்டு.

எனக்கு ஏன் பக்கி வீடியோகால் என ருத்ரன் கேட்க,கையை காட்றா நாயே என்று ரஞ்ஜன் திட்டினான்.

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top