Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 467
- Thread Author
- #1
சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்:
"மிஸ்டர் வெற்றிவேல் நீங்களும் ஜானும்,ஃப்ளைட் உள்ளே போய் செக் பண்ணுங்க. உங்க கூட ரெண்டு பாம்ஸ் ஸ்குவாட் வருவார்கள் "
"இங்க உள்ளதை நாங்க பார்த்துக்கிறோமென்று அவனின் மேல் அதிகாரி இன்ஸ்டிரக்ஷன் கொடுக்க, எஸ் சார் என்று சொல்லி அவர்கள் உள்ளே சென்றனர்"
"அங்கிருந்த எல்லா ஃப்ளைட்டையும் சோதித்து விட்டார்கள். இன்னும் மீதம் இருந்தது இரண்டே இரண்டு ஃப்ளைட் தான்"
"இதில் ஏதோ ஒன்றில் தான் பாம் இருக்கிறது என்பது உறுதியாக இல்லை என்றாலும், சந்தேகம் வந்தது"
" ஜான் நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சு போகலாம் நீ அந்த ஃப்ளைட்டுக்கு போங்க. நான் இந்த ஃப்ளைட்டுக்கு போகிறேன் என்று சொல்ல, நானும் அதை தான் வெற்றி யோசித்தேன் என்று சொன்னான்"
" ஓகே கேர்ஃபுல் என்றவாறு இரண்டு ஃப்ளைட்டிலும் சோதனையிட, முதலில் ஜான் இருக்கும் ஃப்ளைட்டில் கேப்டன் சீட்டிற்கு கீழே இருக்கும் பாம் கண்டு பிடிக்கப்பட, அது வெடிக்க இன்னும் 5 மினிட்ஸ் இருப்பதாக டைமர் காட்டியது".
" கை தேர்ந்த பாம் ஸ்குவாட் என்பதால் அது எந்த வகையான பாம் என்பதை சில நொடியில் கண்டறிந்தவர், அதன் ஒயரை கட் பண்ண, டைமர் ஆப் ஆனது"
" இங்கே வெற்றியும் சோதனை பண்ண, அங்கே பேசஞ்சர்ஸ் உட்காரும் சீட்டிற்கு அடியில் பாம் இருப்பது தெரிந்தது"
"அதற்கான நேரம் இன்னும் இரண்டு நிமிடமே இருக்க, என்ன செய்வதென்று ஒரு நொடி இருவருக்கும் புரியவில்லை"
"சார் இதை கண்டிப்பாக டிஸ்குவாலிஃபை பண்ண முடியாது என்று அந்த பாம் ஸ்குவாட் சொல்ல, பொறுமையாக பாமை கழட்டி எடுத்தவன், சுற்றி இடத்தை பார்த்தான்"
"பின்னர் கீழே இறங்கி வேகமாக டைமரை பார்த்துக் கொண்டே ஓடியவன் தூரத்தில் தெரிந்த காலி இடத்தில், முடிந்த அளவு வேகமாக தூக்கி எறிந்து விட்டு ஓடி வர, கீழே விழுந்த பாம், சில நொடியில் வெடித்து சிதறியது"
"இந்த விஷயம் தான் நாடு முழுவதும் தலைப்பு செய்தியாக அனைத்து சேனலிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது"
பொள்ளாச்சி:
"ஒன்பது மாதங்களுக்கு பின்னர் தன்னவனை இன்று தான் ஜனனியும் பார்த்தாள்"
"இடைப்பட்ட நாளில் அன்பு-கீதா இருவருக்கும் நல்ல முறையில் திருமணம் முடிந்திருந்தது"
"தற்செயலாக டிவி சேனலை மாற்றும் பொழுது தான் இந்த செய்தியை கண்டு கதறினாள்"
வெற்றிக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும், எதாவது ஆகியிருந்தால் என்பதை நினைத்தே இந்த கண்ணீர்"
அவளை எப்படி சமாதானம் செய்வென்று புரியாமல் மற்றவர்களும் பரிதவித்து நிற்க, அப்பொழுது தான் வள்ளியம்மையின் நினைவு ஜனனிக்கு வர, வேகமாக எழுந்தவள், அப்பா அங்கே வள்ளியம்மா என்க, அட ஆமாம் மா"
கீதா வேற மாசமா இருக்கு. நீ போய்ட்டு பாரு, நான் கலாவை அனுப்புறேனென்று சொல்லிய ராக்கம்மா பாட்டி, கீதாவின் வீட்டிற்கு போய் விஷயத்தை சொல்ல, அவரும் பதறியபடி, இதோ போறேன் அத்தையென்று சென்றார்"
வேகமாக ஓட்டமும் நடையுமாக வந்த ஜனனி, பெரியம்மா பெரியம்மா என கூப்பிட்டுக்கொண்டே உள்ளே போய் பார்க்க அங்கே டிவி ஓடிக் கொண்டிருப்பதும், வள்ளியம்மை தரையில் மயங்கி கிடப்பதும் தெரிந்தது"
" ஐயோ பெரியம்மா என்று கதறி ஓடியவள் கிச்சனிற்கு சென்று ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துட்டு வந்து அவரின் முகத்தில் தெளிக்க, சிறிது நொடியில் கண்ணை திறந்த வள்ளி, அங்கிருந்த ஜனனியை பார்த்துவிட்டு, வெற்றி என்று அவளை அணைத்துக் கொண்டு அழுதார்"
"பெரியம்மா ஒன்னும் இல்லை,அவர் நல்லா இருக்காரு மா.உங்க மருமகனுக்கு ஒன்னும் இல்லைங்கம்மா என்றவளின் வார்த்தையை கேட்டவர்,நீ சொல்வது நிஜமா தானே என்க,ஆமாம் மா"
"நீங்கள் வேண்டுமானால் அவருக்கு ஃபோன் போட்டு பாருங்களென்று ஜனனி சொல்லும் போதே, வள்ளியின் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது"
"மனமோ தன்னவன் தான் என சொன்னாலும்,ஆனால் வேறு யாராவது இருந்தால் என்ன செய்வது, ஏமாந்துவிடுவோமே என தனக்குள் சொல்லியவள், டேபிளின் மேல் இருந்த போனை எடுத்து வந்து, வள்ளியிடம் நீட்டினாள்"
"அதை வாங்கியவர்,கவரை திறந்து டிஸ்பிளேவில் புகைப்படத்தோடு வந்த பெயரை பார்க்க, கண்ணா என்ற பெயர் வந்ததும் உடனே அட்டென் பண்ணியவர் கண்ணுஊஊ என்க, என்ன வள்ளி பண்ணுற என்றான், அந்த பக்கமிருந்து வெற்றி"
"கண்ணு கண்ணு என வள்ளி அழ, அட அடஅடடடடஆஆஆ.உன் கிட்ட எப்படியாப்பட்ட விஷயத்தை சொல்ல கால் பண்ணிருக்கேன், நீ என்னடா என்றால் ஒப்பாரி வைக்குறாயே"
"நான் நல்லா பேஷா இருக்கேன். டிவியை பார்த்து உன் கற்பனை குதிரை வேகமாக ஓடியிருக்குமென்று தெரிஞ்சி தான் உடனே உனக்கு ஃபோன் போட்டேன் என்றான்"
"மருமகனின் பேச்சில் இயல்பிற்கு திரும்பியவர்,என்ன விஷயம் கண்ணு?ம்ம் சொல்லு என ஆர்வமாய் கேட்க,அது வந்து வள்ளி,இன்னும் ரெண்டு நாளைக்குள் நம்ப வீட்டுக்கு எதிர்பாராத ஒருத்தவங்க வருவாங்க"
"அவங்களை அங்கையே புடிச்சி வைக்க வேண்டியது உன்னோட சாமார்த்தியம் சொல்லிட்டேன். என்னால் முடிஞ்சதை இங்கு நான் பண்ணிட்டேன் என்க.. "
"அட செந்தூராஆஆஆ என்னப்பா சோதனை,இப்படி தலையும் புரியாமல்,வாலும் புரியாமல் சொன்னா,இந்த மக்குக்கு என்ன கண்ணு எனக்கு விளங்கும்"
"என்னதென்று நீயே சொல்லுய்யா என்க,நோ வள்ளி நோ.அதை நேரில் பார்த்து நீயே தெரிந்துகொள் என்றவன்,மேலும் சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை கட் பண்ணினான்"
சதூர்வேதமங்கலம்:
"தங்கையின் அழுகை குறைந்திருப்பதை கண்ட கிரிஜா பாட்டி, சைலு இப்ப சொல்லு?,வசு வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது? என்று கேட்டார்"
"அக்கா-மாமா,உங்க கிட்ட சொல்லாத ஒரு விஷயம் இருக்கு என்று தயங்க,அப்படி என்ன தங்கமலை ரகசியம் சொல்லு பாப்பு?,என்ன விஷயம் அதுயென்றார் சிம்ஹன் தாத்தா"
"இவரு ரிட்டையர்டு ஐ பி எஸ் ஆபிசர் என்க,என்னாஆஆ என்று இப்பொழுது சிம்ஹன் தம்பதியினர் இருவரும் அதிர்ந்து போனார்கள்"
ஆமாக்கா இவர் போலீஸா இருக்கிறார் என்பது, எனக்கு அப்போ தெரியாது. இந்தியாவுக்கு வந்த பிறகு தான் உண்மை தெரியும் என்று சொல்ல, என்ன புதுசு புதுசா சொல்லுறடி?
அக்கா அதாவது,நான் ஸ்கூலிற்கு போய் வரும் போது தான் அங்க இருக்கும் பேக்கரியில் இவரை முதன் முதலாக பார்த்தேன்"
"ஒருநாள் ஸ்கூல்ல காம்படீஷன் இருக்குன்னு சொல்லிட்டு நான் லேட்டா வந்தேன் தெரியுமா?.உனக்கு அந்த நாள் ஞாபகம் இருக்கா?.
"நீ கூட கேட்டியே,ஏய் என்னடி போகும் போது ஒரு டிரஸ் போட்டு போனாய். இப்போ வரும் போது வேரு டிரஸ் போட்டு வந்துருக்கியே என்று,அன்று நடந்ததை தனது அக்காவிடம் ஞாபகப்படுத்தி கேட்க,அவரும் யோசித்துப் பார்த்தவர்,ஹம் ஆமா ஆமா அன்று உங்க ஸ்கூல்ல ஆண்டுவிழா அன்றைக்கு தானே நடந்தது என்றார் கிரிஜா பாட்டி"
"ஆமாம் கா அதேதான்.அன்றைக்கு பங்ஷன் முடிஞ்சி நான் வீட்டுக்கு வரும் போது கொஞ்சம் இருட்டிருச்சி".
"மழை வேற தூறல் போட,நான் ஆட்டோ எதாவது வருமாயென்று அந்த பேக்கரிக்கு எதிரில் உள்ள பஸ் ஸ்டாப்பில் கொஞ்சம் பயத்தோட நின்னுட்டு இருந்தேன் கா"
"கொஞ்ச நேரத்தில் ரெண்டு குடிகாரனுங்க அங்க வந்து,ஒரு மாதிரியா சுற்றி சுற்றி வந்து என்னை பார்த்தானுங்ககா"
"பேக்கரி லீவா இருக்க,அப்பொழுது அங்கு யாருமே இல்லை,அந்த நேரம் பார்த்து கரண்ட் கட்டாக,அவனுங்க ரெண்டு பேரும் என் புடவையை இழுத்து என அழுதவர், சொல்லுடி என்னாச்சி என்று பதறினார்"
"நான் கத்தி கதறி யாராவது காப்பாத்துங்களென்று வேகமாக கத்தும் போது இவர் தான் அந்த வழியா வந்து,அவனுங்கள் ரெண்டு பேரையும் நல்லா அடித்து போட்டார்"
"புடவை,கிழிஞ்சிபோக,யாராவது பாக்குறதுக்கு முன்னே என் கூட வாங்கயென்று அவர் வண்டியிலே என்னை கூப்பிட்டு போனவர், ஒரு வீட்டுக்கு முன்ன போய் நிறுத்த,அது தனி வீடா இருந்ததால் எனக்கு பயம்"
"நான் வராம நிற்க, பயப்படாதீங்க. நான் அந்த பேக்கரியில் வேலை பார்ப்பவன் தான்.இது எனக்கு ரொம்ப தெரிஞ்ச வீடு"
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நாளைக்கு வேண்டுமானால் விசாரிச்சிக்குங்க என்று சொல்லும் போது, கரண்ட் வந்துடுச்சி"
"அந்த வீட்டுக்குள்ளே நானும் போனேன். அங்கே ஒரு அக்காவும்,வயதான அம்மாவும் இருந்தாங்கள் கா"
"அவங்க வீட்டின் பின் போர்ஷனில் தான் இவர் தங்கி இருக்கிறாராம். அவங்க கிட்ட சொல்லி வேற ட்ரெஸ் வாங்கி கொடுத்தாரு"
"அதன் பிறகு மழை விட்டதும் அவரே ஆட்டோ வர வச்சு அதுல அனுப்பி வச்சாங்க"
"நானும் எதுவும் நடக்காத போல வீட்டுக்கு வந்தேன்.மழையில நனைந்தது,பிறகு நடந்த சம்பவத்தால் வந்த பயம் எல்லாம் சேர்ந்து எனக்கு ஒரு வாரம் காய்ச்சல் நான் ஸ்கூலும் போகலை"
"பிறகு நான் ஸ்கூல் போகும் போது தினமும் அந்த பேக்கரியில் பார்க்க,அவர் அப்படி ஒரு சம்பவம் அன்று நடக்காது போலவும்,என்னை தெரிந்த போலவும் கண்டுக்கவே இல்லை"
"இப்படியே ஒரு மாதம் போச்சு.ஒரு நாள் நானே போய் அவர்கிட்ட கேட்டேன் கா.என்னை தெரியலையா என்று?,அவர் கடையை சுற்றி பார்த்து விட்டு நல்லாவே தெரியும் என்க, பிறகு ஏன் என்கிட்ட நீங்கள் பேசவே இல்லையென்று நான் கேட்க,ஏன் அன்று இருட்டுல நடந்ததை எல்லாருக்கும் படம் போட்டு காட்டணுமான்னு கேட்டாருக்கா"
"அவர் கேட்ட கேள்வியில எனக்கு சிரிப்பு வந்ததும் நான் சிரிச்சிட்டேன், ஆனால் அவரோ என்னை கண்ணு மண்ணு தெரியாமல் திட்டி துரத்தி விட்டாரு"
"கொஞ்ச நாள் நானும் கண்டுக்காமல் போனேன்.ஆனால்,நடந்த உண்மை என்னவென்றால் தூரத்தில் வரும் போதே அவரை நான் பார்த்து விடுவதால்,நான் கவனிப்பது அவருக்கு கொஞ்சமும் தெரியாமல் போய்விட்டது.